Monday, November 23, 2015

குமாரி 21 F – செம ஹாட் மச்சி



எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ஆர்யாசீரீஸ் வகை திரைப்படத்தினால் வந்தது அல்ல இந்த ஆர்வம். 100 % லவ் என்றொரு திரைப்படம். செம ஸ்க்ரீன் ப்ளே என்றால் அதுதான். அதுவும் ஏ ஸ்கொயர் பி ஸ்கொயர் என்றொரு பாட்டில் அத்தனை விதமான குறும்புகளை காட்டி இருப்பார். ஒரு ஹீரோவையும் ஹீரோயினையும் செம படிப்பாளியாக காட்டிய படம் அதுதான். எப்படிடா ஒருபாட்டிற்குள் இத்தனை விதமான ஸ்க்ரீன்ப்ளேவை காட்ட முடியும்? என்று யோசிக்க வைத்த பாடல் அது. சொல்லப்போனால் நான் ஈ திரைப்படத்தில் காட்டப்படும் ஈடா ஈடா பாடலுக்கு சற்றும் குறைவில்லாத மாண்டேஜஸ் கொண்ட பாடல் அது. இன்றளவும் மிகப்பிடித்த திரைப்படம்  100 % லவ்


அடுத்து நெனொக்கடினே எனறு மகேஷ்பாபுவுடன் கை கோர்த்தார். அது கலவையான கருத்துக்களை கொண்டிருந்தாலும், செம ஸ்டைலிஷான ஸ்க்ரீன் ப்ளே வகையை சார்ந்தது. எனக்கு ரொம்ப பிடித்த படம். அதிலிருந்து சுகுமார் என்றால் ரொம்ப பிடித்துவிட்டது. இதோ அடுத்து குமாரி 21 F என்ற பட்த்திற்கு கதை வசனம் எழுதி தயாரிக்கிறார் என்றவுடன் ஆர்வம் இன்னும் அதிகமாகிவிட்டது.



இன்று பி.வி.ஆரில் தியேட்டர் ஃபுல் என்றவுடன் நினைத்தேன்.. ஓ! இது ஏ சர்டிஃபிகேட் வாங்கி இருக்கிறது. அதான் இத்தனை கூட்டம் என்று...  படம் துவங்கியதில் இருந்து ஒரே ரகமாகத்தான் இருந்த்து. சும்மா சொல்லக்கூடாது அந்த சீன்ஸ் எல்லாம் கொச்சையாக இல்லாமல், அத்தனை ரசனையுடன் கையாளப்பட்டிருந்தது. சீப் ரொமாண்டிக் வகையறாவாக இல்லாமல், அத்தனை நேர்த்தியுடன் அந்த ரொமான்ஸ் சீன்ஸ் எல்லாம் ப்ரசண்ட் செய்யப்பட்டிருந்தது.

கதை என்று பார்த்தால் செம சிம்பிள்தான். எல்லோரிடமும் ரொம்பவும் தாரளமாக, டேக்கேராக பழகும் ஹீரோயினுக்கு, பார்த்த உடனே ஹீரோவிடம் காதல் வந்துவிடுகிறது. உடனே முத்தம், தன் உடம்பை தொட அனுமதிப்பது, என வெகு கேஷுவலாக எல்லாவற்றிற்கும் அனுமதி தருகிறார். முக்கியமான விஷயம் மட்டும் நடக்கவில்லை. இதை எல்லாம் பார்த்த ஹீரோவிற்கு, இவள் பல பேருடன் பழகியவள் என்று ஹீரோயின் மீது சந்தேகம் வந்துவிடுகிறது.  அவள் மோசமானவள், கேரக்டர் சரியில்லாதவள் என்று நண்பர்களும் உசுப்பேத்திவிடுகிறார்கள். போதாதா பிரச்சனை ஆரம்பிக்க??

ஒரு பிரிவு அவர்களுக்குள் வர, ஹீரோயினை வெறுப்பேற்ற ஹீரோ இன்னொரு பெண்ணுடன் சுற்ற ஆரம்பிக்க, இவர்கள் காதல் என்ன ஆனது? ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார்  என்பதுதான் க்ளைமேக்ஸ்..




கேட்கும் போது சாதாரணமாக தோன்றும் இந்தக்கதைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.. செம்ம்ம்ம்ம்ம ட்ரீட்மெண்ட். அதிலும் இப்படி ஒரு ஹீரோயின்  கேரக்டரை டிசைன் செய்திருக்கும் விதம்... சான்ஸே இல்லை..

சமீபகாலத்தில்.. இல்லை. இல்லை.. இவ்வளவு போல்டான, செம ரொமாண்டிக்கான ஒரு ஹீரோயின் கேரக்டரை எனக்கு தெரிந்து பார்த்ததில்லை. மேலோட்டமாக பார்த்தால் ஐட்டம் மாதிரி போய்விடக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை, சுகுமார் வடித்திருக்கும் விதம், செம க்ளாஸ்.. அதுவும் அந்த பெண்ணிற்கான டயலாக்ஸ் எல்லாம்.. நச்.. நச்.. நச்.. மனுஷன் பேனாவில் 1000 வாட்ஸ் காதல் ரசத்தை ஊத்தி எழுதி இருப்பார் போலும்.. கை தட்டி, தட்டி கை வலிக்கிறது ப்ரோ..

---------------------------------
சும்மா சாம்பிளுக்கு சில டயலாக்ஸ் (சி.பி. செந்தில்குமார் மன்னிக்க)
---------------------------------
குமாரி           : டேய் என்கிட்ட 500 ரூ இருக்கு.. வர்றியா போலாம்?
சித்து               : ஹேய் என்னடி இது?
குமாரி           : ஆமா.. நீங்க பொண்ணுங்களை கூப்பிடலாம்..
                                நாங்க உங்களை கூப்பிடக்கூடாதா??
---------------------------------
குமாரி           : அன்னைக்கு 500 ரூபாய்க்கு கூப்பிட்டேன்னு கோவிச்சுக்காதே..இன்னைக்கு வர்றியா 2500 ரூபாய் இருக்கு??
---------------------------------
குமாரி             : டேய் இந்த ஹால்ஸ் போட்டுக்கோ.. அப்பத்தான் கிஸ் பண்ணும் போது ஸ்மெல் வராது.
சித்து               : என்னை யார் கிஸ் பண்ண போறா?
குமாரி           : இதோ நான் பண்றேன்.

என்று சொல்லி நச் என்று
ஒரு கிஸ் கொடுக்கிறார்..(உதட்டில்தான்).

குமாரி             பார்த்தியா ஸ்மெல் வருது இல்ல..அதான் ஹால்ஸ் போட்டுக்கோ’  என்று சொல்லி, ஹால்ஸ் போட்டுக்கொண்டு இன்னொரு கிஸ் கொடுக்கிறார்..

குமாரி :         ‘ஐயையோ எனக்கு ஸ்மெல் வருது இல்ல என்று சொல்லி தானும்  ஹால்ஸ் போட்டுக்கொண்டு இன்னொரு கிஸ் கொடுக்கிறார்.
---------------------------------
இன்னொரு நாள் ஹீரோ முத்தம் கொடுக்க வரும் போது, ஹால்ஸை போடப்போக, அவனை தடுத்து ஹீரோயின் சொல்லுவார். எனக்கு ஹால்ஸ் ஃப்ளேவர் வேணாம்.. உன்னோட ரியல் ஃப்ளேவர்தான் வேணும் என்று சொல்லி கிஸ்ஸுகிறார்
---------------------------------

என்னை இந்த ஃபோட்டோவுல இருக்கிறமாதிரி ட்ரஸ் இல்லாம பார்க்கணுமா? என்று கேட்டு கலைத்தன்மையுடன் டிரஸ் கலைகிறார். (ஹீரோவின் கையை கட்டிப்போட்டு, அவனுக்கு முன்னால் ஒரு கண்ணாடியை வைத்து, ஹீரோவுக்கு பின்னாடி போய் நின்றுக்கொண்டு டிரஸ்ஸை கழட்டுகிறார். அதுவும் பல்பை ஆன் பண்ணி, ஆஃப் பண்ணி)
---------------------------------

‘சரி உன் ஷர்டை கழட்டு என்று சொல்லும் போது,
‘ஐயையோ நான் ஜிம்முக்கு எல்லாம் போறதில்லை என்று ஹீரோ பம்ம,
அப்ப நான் மட்டும் என்ன ஜிம் போயிட்டு வந்தா டிரஸ் கழட்டுனேன்
என்று மறுபடியும் வெளுத்து வாங்குகிறார்.
---------------------------------

ஹீரோ, ஹீரோயினை வெறுப்பேற்ற, தான் இன்னொரு பெண்ணுடன் இன்றிரவு தங்கப்போவதாக சொல்ல, அப்போது குமாரி செய்யும் வேலைகள் எல்லாம் அக்மார்க் ஏ ரகம்.. (அதை இங்கு சொல்ல முடியாது, படத்தைப்பார்த்து தெரிஞ்சுக்கோங்க மக்கா)
---------------------------------
ப்ப்பாபாஆஆஆஆ என்னா சீன் டா..
இது வெறும் சாம்பிள்தான் .
படத்தில் டஜன் கணக்கில் ரொமான்ஸ் பொங்கி வழிகிறது.




சத்தியமாக இப்படி ஒரு ஹீரோயின் கேரக்டரை வடிவமைக்கவே முடியாது. ஹாட்ஸ் ஆஃப் சுகுமார்...

ஹீரோ ஹீரோயினை சந்தேப்பட்டால் என்ன நடக்கும்? ஆ, ஊ என்று ஹீரோயின் கத்தி கூச்சல் போடுவார். என்னைப்போய் சந்தேகப்பட்டியா? இனிமேல் என் மூஞ்சிலேயே முழிக்காதே போ என்று கத்துவதாகத்தானே பார்த்திருக்கிறோம். அப்படியெல்லாம் எதுவுமே செய்யாமல், ஏன் ஒருவார்த்தைக்கூட ஹீரோவை எதிர்த்துப்பேசாமல், சிரித்துவிட்டு போகும் அழகுக்காகவே இந்த குமாரியை இன்னும் எத்தனை நேரம் வேண்டுமானாலும் கொஞ்சிக்கொண்டே இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை சுகுமாரின் லைஃப் டைம் பெஸ்ட் கேரக்டரை சேஷனாக இந்த குமாரிதான் இருப்பார். ஹீரோ எல்லாம் அடுத்ததுக்கும் அடுத்த லெவல்தான்.
ஹீரோ ஃப்ரண்ட்ஸ், அப்பா, அம்மா தாத்தா, போலீஸ், கொள்ளை என அத்தனை அம்சங்களையும் கடந்து நிற்பது குமாரி மட்டும்தான்.

குமாரியாக நடித்திருக்கும் ஹீபா பட்டேல் நமக்கு ஏற்கனவே பழக்கமானவர்தான். திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில், அந்த முஸ்லீம் பெரியவரின் மகளாக ஷுக்ரியா சொல்லிக்கொண்டு வருவாரே.. அவர்தான் இந்த குமாரி.. அந்தப் படத்தில் அப்படி இழுத்துப்போர்த்திக்கொண்டு வந்தவரா இவர்? என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. பின்னே ப்டம் முழுக்க ஒரு சின்ன ஜீன்ஸ் ஜட்டிதான் அவருக்கு காஸ்டியூமே.. சும்மா சொல்ல்க்கூடாது.. பிரிச்சு மேய்ஞ்சிருக்காங்கய்யா...

எந்திரன் மாதிரியான ஒரு ஹை பட்ஜெட் பட்த்துக்கு ஒர்க் பண்ணின ரத்னவேலுதான் இந்த சின்னப்பட்ஜெட் படத்துக்கும் கேமராமேன்ங்கிறது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். கிரிஸ்டல் க்ளியர்ன்னு சொல்லுவாங்களே... அப்படி இருக்கு ஒளிப்பதிவின் தரம். ஹைக்ளாஸ் க்வாலிட்டி.

இசை தேவிஸ்ரீ பிரசாத்தான்னு ஒரு பயத்தோடயே போனேன். சும்மா சொல்லக்கூடாது தேவி பின்னி பெடலெடுத்திருக்காரு. அதிலையும் லவ் செய்யாலா வத்தான்னு ஒரு பாட்டு இருக்கு.. ஆசம்..ஆசம்.. இனி ரிப்பீட் மோட்ல இந்தப்பாட்டுத்தான் ஓடப்போகுது. பி.ஜி.எம் எல்லாம் சும்மா பட்டைய கிளப்புது. லவ் மூடுக்கு ஏத்த ரோஜாப்பூ மாதிரி அத்தனை மேட்சிங்கான பின்னணி இசை. வெல்டன் ராக்ஸ்டார்.

படத்தில் மிக முக்கியமான டிவிஸ்ட் ஒன்று இருக்கிறது. அதை ரிவீல்ட் பண்ண நான் விரும்பவில்லை.. இருந்தாலும் லைட்டா சொல்றேன். ஹீரோயினியின் ரத்தம் தோய்ந்த புடவையை எடுத்துக் கொண்டு போய், ஹீரோ துவைத்து மறுபடியும் ஹீரோயினுக்கு அணிவிக்கும் சீன் ஒன்று இருக்கிறது. அப்படியே கண்கலங்கி போகும்படியான சீக்குவென்ஸ் அது. தியேட்டரில் விசில் சப்தம் காதை கிழித்தது. எழுதிவைத்துக்கொள்ளுங்கள், காதலர்களால் மட்டும் இந்தப்படம் ஓடோ ஓடென்று ஓடி வசூலை குவிக்கப்போகிறது.

வெறும் காதல், கவர்ச்சி, உணர்ச்சியை தூண்டும் செக்ஸுவல் சீன்ஸ் என்று மட்டும் இருந்திருந்தால் த்ரிஷா இல்லைன்னா நயன்தாராபட்த்துடன் ஒப்பிட்டு இருக்கலாம். ஆனால் இது அத்தனையும் மீறி, படம் முடியும் போது மனதை பிசையும் ஒரு காதலின் வலியை உணர வைத்து அனுப்புகிறார்களே, அதுதான் இந்தக்கதையின் வெற்றி.. அதுவும் கடைசியில் ஹீரோ கொடுக்கும் தண்டனை, செம மாஸ்... தெறிச்சிடுச்சி தியேட்டரே.. பெரிய ஹீரோக்கள் யாராவது நடிச்சிருந்தா கலெக்‌ஷன் அள்ளி இருக்கும்.

சென்னை மாதிரி ஒரு தியேட்டர்லயே, இறுதிக்காட்சி முடிந்த உடனே ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி கொண்டாடின படமா இது இருக்குதுன்னா, ஆந்திராவில் கேட்கவா வேண்டும்.

படம் முடிஞ்ச அடுத்த நொடியே ஒவ்வொருத்தரும் வாட்ஸப்புல படம் செம.. செம.. வாட்ச் இட்ன்னு மெஸேஜ் பண்ணதை நானே பார்த்தேன். என்னோட வாட்ஸ் அப் ப்ரொஃபைல் பிக்சரும், ஸ்டேட்டஸ்ஸும் இந்தப்படம் பத்தினதுதான்...

கண்டிப்பா பாருங்க.. டைட்டிலில் இருந்தே சுகுமாரின் க்ரியேட்டிவிட்டி தொடங்கிவிடும். ஒரு ஏ ரேட்டட் மூவியை எப்படி காதலோட பரிமாறணும்ன்னு கத்துக்கலாம். வொர்த் வாட்ச்.. 



No comments:

இதையும் படியுங்கள்