Wednesday, November 18, 2015

அனார்கலி - 2015 மலையாளத் திரைப்பட விமர்சனம்


இந்த வருடம் சுக்ர திசை சுழட்டி அடிக்கக் கூடிய ஆட்களில் முக்கியமானவர் ப்ரித்விராஜ். பின்னே தொடர்ச்சியாக 5 வெற்றிகள் என்றால் சும்மாவா? இவிடே, என்னு நிண்டே மொய்தீன், அமர் அக்பர் அந்தோணியைத் தொடர்ந்து, இதோ அனார்கலியும் இன்னொரு பம்பர் ஹிட். இந்த வரிசையில் டபுள் பேரல் மட்டும் ஒரு திருஷ்டிப்பொட்டு.

சரி அனார்கலிக்கு வருவோம்..

என்ன கதை இது?


அனார்கலின்னு பேர் வெச்சிட்டு, ஆக்‌ஷன் ப்ளாக் கதையையா எடுத்துவிட முடியும்? அக்மார்க் 100 பர்செண்ட் தித்திக்கும் காதல் கதைதான். ஆனால் அப்படி சாதாரணமாக, பத்தோடு பதினொன்றாக ஒதுக்கிவிட முடியாத ஒரு ட்ரீட்மெண்ட் படத்தில் இருக்கிறது. யெஸ் அதுதான் ப்ரித்விராஜ்கான கேரக்டர் பேக்ரவுண்ட். அதுதான் இந்தப் படத்தில் ஸ்பெஷல்.

ப்ரித்விராஜ் ஒரு நேவி ஆஃபீசராக படத்தில் வருகிறார். நேவி என்றால் சும்மா ஒப்புக்கு நேவி க்ரவுண்டை காட்டிவிட்டு, அடுத்த காட்சிக்கு தாவி விடுவதல்ல.. அவரது வேலை, அவர்களது தங்குமிடம், உணவு விடுதி, ட்ரெய்னிங் ஏரியா, அவர்களது வே ஆஃப் ஸ்லாங், ஒர்க் பர்மிட்டரி, இன் டிசிப்ளினிங் பனிஷ்மெண்ட், அவர்களது என்கொயரி ஸ்கொயர், ஹை ஆஃபீசர்ஸ் டிகினிட்டி பேரல் லெவல், அவர்களது செஷன்ஸ் அவுட்டர் நெட், இப்படி அத்தனை விஷயங்களையும் அப்படியே அச்சு அசலாக கண்முன்னே நிறுத்தி இருக்கிறார்கள். இதுதான் இந்தப்படத்தின் ஆகச்சிறந்த நம்பகத்தன்மை. இதற்காக எத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டும்? எத்தனை பர்மிஷன்ஸ் வாங்கி இருக்க வேண்டும்? ஹாட்ஸ் ஆஃப் டூ டைரக்டர் சச்சி.

கதையை விட்டுட்டு எங்கேயோ போயிட்டோம் போல. சரி கதைக்கு வருவோம்.


இண்டியன் நேவியில் பணி புரிந்துகொண்டிருக்கும் ப்ரித்விராஜ், அவரது உயரதிகாரி மகளான நதிராவை காதலிக்கிறார். இருவரும் உதட்டு முத்தம் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு காதலில் திளைத்திருக்கிறார்கள். இதை கண்டு கொண்ட நதிராவின் அப்பா, ப்ரித்விக்கும் அவரது நண்பரான பிஜுமேனனுக்கும், பனிஷ்மெண்ட் கொடுத்து பணியிலிருந்து டீ புரொமோட் செய்து வெளியே அனுப்புகிறார். ஆனாலும் இவர்கள் காதல் வெகு உறுதியாக நிற்கிறது. தங்கள் காதல் வெகு ஆழமானது என்று நதிரா தன் அப்பாவிடம் மல்லுக்கு நிற்க, 5 வருடம் கழித்தும் உன் காதல் இப்படியே இருக்குமா என்று கேட்க, ஐந்து வருடங்கள் கழித்து சந்திப்பதாக ப்ரித்வியும் நதிராவும் ஒப்பந்தம் செய்துக்கொண்டு பிரிகிறார்கள். ஐந்து வருடங்கள் கழித்து இவர்கள் மறுபடியும் சேர்ந்தார்களா? நதிராவின் அப்பாவின் சூழ்ச்சி வென்றதா? என்பதெல்லாம் மீதிக்கதை.

நீச்சல் பயிற்றுவிக்கும்  நேவி ஆஃபீசராக லட்சத்தீவுக்கு பணி மாறுதலாகி, ப்ரித்விராஜ் வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஏதற்காக அவர் இங்கு வந்தார்?, யாரை தேடுகிறார்? அவருக்கு யார் யாரெல்லாம் உதவுகிறார்கள்? என்று பின்னோக்கியும் முன்னோக்கியும் நான் லீனியரில் கதை நகர்கிறது.

படத்தில் கை வலிக்க வலிக்க கைகுலுக்கி பாராட்டப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ்.. ப்ப்ப்ப்ப்பாஆஆஆ என்ன ஒரு கேமரா ஒர்க்! அப்படியே லட்சத்தீவின் அழகை ப்ரேம் பை ப்ரேம் அள்ளி எடுத்து வந்திருக்கிறார். ஹெலிகேம் ஷாட்ஸ் எல்லாம் அடிப்பொளி... அப்படியே விஷுவல்ஸில் மிரட்டி இருக்கிறார்கள். ஒன்று இரண்டு இல்ல, படத்தில் நிறைய ஹெலிகேம் ஷாட்ஸ் இருக்கிறது. அத்தனையும் அசத்தல் ரகம். அந்த விஷுவல்ஸுக்காவது இந்தப்படத்தை தியேட்டரில் பார்த்துவிடுங்கள்.


ப்ரித்விராஜைப்பற்றி எல்லாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. மனுஷன் டெடிக்கேஷன் என்ற வார்த்தைக்காகவே பிறந்திருப்பார் போல. அப்படி ஒரு பர்ஃபாமென்ஸ். நதிராவாக, இந்தக்கதையின் அனார்கலியாக ப்ரியல் கோர் நடித்திருக்கிறார். என்னைக்கேட்டால் இந்தப் பெண்ணிற்கு பதில் வேறு யாராவது நடித்திருந்தால், இன்னும்  இந்தப் படத்தின் தாக்கம் அதிகமாகி இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இவரை விட, டாக்டராக வரும் மியாஜார்ஜ் செம அழகாக இருக்கிறார். இப்படி ஒரு அழகிதான் நிச்சயம் அனார்கலியாக இருக்க முடியும். இவரின் முன், ப்ரியல் கோர் சற்று ரேங்க் கம்மியாகத்தான் இருக்கிறார். அது ஒன்றுதான் பெரிய மைனஸ்.


படம் முடிந்த பிறகும் மியாஜார்ஜ்தான் நம் மனதில் நிற்பார். ஏனெனில் அவருக்கான அப்படி ஒரு சீன் இருக்கிறது. செம்ம பர்ஃபாமென்ஸ். மருத்துவ பரிசோதனைக்காக ப்ரித்விராஜை, ஹெலிகாப்டரில் ஏற்றுவதற்கு இவர் கையெழுத்து போடும் வேளையில், நதிராவின் அப்பா ஏற்பாடு செய்த அதிகாரிகள் அதை தடுக்க முற்படுவார்கள். அப்போது செம டென்ஷனுடன் மியா ஜார்ஜ் கத்தும் காட்சி ஹைலைட் ஆஃப் தி மூவி. 
'காத்திருத்தலே காதல்' என்ற டேக் லைனுடன் தான் என்னு நிண்டே மொய்தீனும், அனார்கலியும் ரிலீஸ் ஆகி இருக்கிறது.. ஆனால் எத்தனை எத்தனை வித்தியாசங்கள், எத்தனை டிரான்ஸ்மிஷன்ஸ், எத்தனை நுணுக்கமான காட்சியமைப்புகள் என மலையாள சினிமாக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான திரைக்கதையில் புகுந்து விளையாடிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

என்னுநிண்டே மொய்தீன், அனார்கலி, அமர் அக்பர் அந்தோணி என ஒரே நடிகரின் 3 படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதே ஆச்சர்யமான விஷயம். அதுவும் 3 படங்களும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது இன்னும் ஆச்சர்யமான விஷயம். ப்ரித்விராஜ் மாதிரியான ஒரு டெடிக்கேட்ட்ட் ஆர்டிஸ்ட்க்கு, நல்ல் கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகருக்கு, இப்படியான வெற்றிகள்தான் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருக்கும். வாழ்த்துக்கள் ப்ரித்விராஜ்.


அமர்களமான விஷுவல்ஸுடன், அழகியலாக ஒரு படம் பார்க்க விரும்புவர்களுக்கு அனார்கலி ஒரு அழகிய சர்ப்ரைஸ்.. பார்த்து ரசிக்கலாம்.

No comments:

இதையும் படியுங்கள்