Saturday, June 7, 2014

மஞ்சப்பை


ஒரு டீவி சீரியலுக்கான கன்டெண்டை சினிமாகவாக எடுக்க எப்படி யோசித்தார்கள் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை

கிராமத்தில் இருந்து தன் பேரன் விமலை பார்க்க சென்னை வருகிறார் தாத்தா ராஜ்கிரண். தாத்தாவின் இன்னொசென்ஸ் நடவடிக்கைகளால் பேரன் அனுபவிக்கும் சிக்கல்களை  இரண்டரை மணி நேர படமாஆஆஆஆக எடுத்து தள்ளி இருக்கிறார்கள். இதுதான் நடக்கபோகுது என்று பக்கத்து சீட்டிலிருக்கும் நபர் நொடிக்கொரு முறை கமெண்ட் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். உணர்வுபூர்வமாக நெகிழவைக்க வேண்டிய கதை, பலவீனமான திரைக்கதையால் நெளிய வைக்கிறது. நொண்டிக்குதிரையில் ரேஸ் போக ஆசைப்பட்டவன் கதையாய் ஆகிவிடுகிறது.

இயந்திரத்தனமாய் இயங்கிக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட்வாசிகள் ராஜ்கிரணால் அடுத்தவர்களை நேசிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறார்கள் என்ற மெஸேஜைக்கூட முழுமையாக சொல்லாமல் கோட்டை விட்டிருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒரு வயதான பாட்டியை ஹாஸ்பிட்டலில் விமல் சேர்த்து காப்பாற்றுகிறாராம். உடனே அந்தப்பாட்டி எவ்ளோ நல்ல பையன்ம்மா என்று ஹீரோயினிடம் கூறுகிறாராம். உடனே லஷ்மிமேன்னுக்கு லவ் வந்துவிடுகிறது... ஷ்ஷ்ஷ்யப்ப்பா.....உலக திரைப்படங்களில் இதுவரை வராத காட்சி.. ஐயா சாமிங்களா.. இதைத்தானய்யா 75 வருஷமா தமிழ்சினிமாவுல காட்டிட்டு இருக்கீங்க.. இப்படி ஒரு மொக்கையான காதல் காட்சிகளை எப்படி சீன் டிஸ்கஷனில் விவாதித்திருப்பார்கள் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே. நையாண்டி காதல் காட்சிகளை மிஞ்சிவிட்டது இந்தப்படத்தின் லவ் சீன்ஸ். இதுதான் குருவை மிஞ்சிய சிஷ்யனா? இல்லை, என் நையாண்டியையா கிண்டல் செஞ்சீங்க. இதோ வர்றான் பாருங்க என் சிஷ்யன் என்று சற்குணம் நவீன சபதம் எடுத்திருப்பார் போல.படம் அதிர மொக்கை என்று சொல்லிவிடுவதற்கெல்லாம் இல்லை. ராஜ்கிரண் என்ற மனிதரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் வெகு அட்டகாசம். அதுவும் அவருக்கான ஒரு பாடலில் அவரது வெள்ளந்தித்தனமான நடவடிக்கைகள் எல்லாம் குபீர் சிரிப்புக்கு உத்திரவாதம்.  ஆனால் ராஜ்கிரணுக்காக விமலின் ஏங்க ஏங்கங்கிற அரிவாள்மனை குரலையும், ரோபோட்டிக் நடிப்பையும் சகித்துக்கொள்ள வேண்டுமே என்பதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாடல் காட்சிகளில் விமலை விட கூட ஆடும் தினேஷ் மாஸ்டரின் அஸிஸ்டெண்டுகள் படு ஸ்மார்ட்டாக இருந்து விமலை அவுட் ஆஃப் போகஸ் ஆக்கிவிடுகிறார்கள். ப்புராஜெக்ட்என்று விமல் உச்சரிக்கையில் இவனாய்யா போலீஸு என்ற வடிவேல் ஜோக் உங்கள் மனதில் வராமல் இருந்தால் நீங்கள் பாக்கியவான்கள்

ஏன் இந்தப்படத்தில் கேமரா குவாலிட்டி இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புரியவில்லை. அதுவும் விமலிடம் பணத்தி திருப்பி கொடுக்கும் காட்சியில் லக்ஷ்மிமேனனுக்கு ஒரு குளோசப் வைத்திருக்கிறார் பாருங்கள்.. சத்தியமா முடியலை...
லக்ஷ்மிமேனனுக்கு தாத்தாவின் மேல் இருக்கும் வெறுப்பை அவரது போலீஸ் அப்பா மாற்றுவது போல் ஒரு காட்சி வைத்திருக்கலாம். அதே போல் குடித்துவிட்டு வரும் விமலை லக்ஷ்மிமேனன் வண்டியில் கொண்டுவருவதை பார்க்கும் போலீஸ் அப்பா, ராஜ்கிரணிடம் எனக்கு பொண்ணு வளர்க்க சொல்லிக்கொடுத்தீங்களே, உங்க பேரனை ஏன் தண்ணி அடிக்கிற மாதிரி வளர்த்திருக்கீங்க? என்று கேள்வி கேட்பதாகவோ இருந்திருக்கலாம். இல்லை, தண்ணி அடிச்சிட்டு சுத்துற உன்னை நம்பி என் பொண்ணை கொடுக்க மாட்டேன். ஆனா உங்க தாத்தாவின் வளர்ப்பு மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. என் பொண்ணை கொடுக்கிறதா இருந்தா உங்க தாத்தா மேல இருக்கிற மதிப்புக்காகத்தான் கொடுக்கிறேன் என்று லக்‌ஷ்மிமேன்ன் அப்பா சொல்வது போல் ஒரு காட்சி இருந்திருந்தால் அசத்தலாய் இருந்திருக்கும். லக்ஷ்மிமேன்னுக்கும் தாத்தாவின் ஒர்த் புரிந்தமாதிரி இருந்திருக்கும். அத்தனை பெரிய நபரை லக்ஷ்மிமேன்னில் காலில் விழ வைப்பது எல்லாம் டூமச்.
லிங்குசாமி தன் பேட்டியில், தானும் தன் குடும்பமும் இந்தப்படத்தைப்பார்க்கும் போது கடைசியில் குமுறி குமுறி அழுததாக குறிப்பிட்டார்.. உண்மைதான் இந்தப்படத்தை வாங்கியபின் அதுதான் நடந்திருக்கும்.

பத்து இருபது வருடங்களுக்கு முன் வந்திருந்தால் இந்தப்படத்தை நம் அப்பாமார்கள் கொண்டாடி தீர்த்திருப்பார்கள். How old are you? என்ற மலையாள திரைப்படம் இப்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த குழுவினருக்கு தயவு செய்து அந்த திரைப்படத்தை யாராவது பரிந்துரைத்து போட்டுக்காட்டுங்கள்.. சமகால திரைத்துறை எந்த திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று புரியட்டும். ஒரு தாத்தா பேரனின் அன்பை தலைமுறைகள் படத்தில் ஓவியமாக படமாக்கி இருப்பார்கள்.ஆனால் இங்கு அதை வைத்து சீரியசாக சொல்வதா, காதல்படமாக சொல்வதா என்ற தடுமாற்றத்திலேயே இயக்குனர் கோட்டை விட்டு இருக்கிறார்.  இயக்குனர் பாராட்டு பெறும் இடம் என்றால், அந்த அமெரிக்க அதிகாரி பேசும் இடம்தான். உண்மையிலேயே நல்ல டுவிஸ்ட்.. ஆனால் இந்த புத்திசாலித்தனத்தை படம் முழுக்க பயன்படுத்தி இருந்தால் ஒரு நல்ல ஃபீல் குட் அனுபவம் கிடைத்திருக்கும். ஆனால் பலவீனமான திரைக்கதையால் ஒரு பரவச அனுபவத்தை ஜஸ்ட் லைக் தட் தவறி இருக்கிறார்கள். ராகவன் பெட்டர் லக் நெக்ஸ் டைம்...
 

No comments:

இதையும் படியுங்கள்