Wednesday, June 11, 2014

How old are you - ஹெள ஓல்ட் ஆர் யூ? விமர்சனம்மலையாள சினிமா எங்கோ எங்கோ உயரப்போய்க்கொண்டு இருக்கிறதுக்கு என்பதற்கு சாட்சியமாய் வந்திருக்கும் இன்னொரு படம்தான் இந்த ஹெள ஓல்ட் ஆர் யூ?

உன் வயது என்ன? இந்தக்கேள்வியைத்தான் படத்தின் ஹீரோயின் மஞ்சுவாரியார் முதலில் தயக்கத்துடன் எதிர்கொள்கிறார். பின் இறுதியிலும் அதே கேள்வியைத்தான் அவர் எதிர்கொள்கிறார். ஆனால் இந்த இரண்டு பதில்களுக்கான இடைவெளியில் அவர் என்னவாக ஆகிறார் என்பதுதான் ஹைலைட் பட்டாசு திரைக்கதை.
14 வருடங்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் ஒரு சூப்பர் டூப்பர் ஹீரோயினுக்காக உருகி உருகி உருவாக்கப்பட்ட கதை. அது எள்ளளவும் மஞ்சுவாரியரையும் சரி, நம்மையும் சரி ஏமாற்ற வில்லை.

பதின்மவயது பெண்ணின் தாயாக, 36 வயதுடைய பெண்மணியாக அறிமுகம் ஆகிறார் மஞ்சுவாரியார். அவரது கணவராக குஞ்சாகோபோபன். கணாவனும் மகளும் மட்டும்தான் உலகம் என்று வீட்டையே கட்டிக்கொண்டு வாழும் மஞ்சுவாரியார். கணவருக்கும் மகளுக்கும் ஐயர்லாண்ட் போக வேண்டும் என்பது கனவு. வெளியுலகத்தை பற்றி அறியாத, தனக்கு தொழில் ரீதியாக அட்வைஸ் கொடுக்க முடியாத பத்தாம்பசலித்தனமான மனைவியை குத்திக்கொண்டே இருக்கும் கணவனுக்கும், மற்ற அம்மாக்களைப்போல் இல்லாமல் தனக்கென்று கனவுகளே இல்லாமல் பத்தோடு பதினொன்றாக இருக்கும் அம்மாவை மதிக்கத்தெரியாத மகளுக்கும், இடையே மாட்டிதவிக்கும் மஞ்சுவாரியாருக்கு சில பல காரணங்களால் விசா மறுக்கப்பட, மஞ்சுவாரியாரை தனியே விட்டுவிட்டு அப்பாவும் மகளும் ஐயர்லேண்டு பறக்கிறார்கள்.

தன் சிறகுகள் அனைத்தும் பிய்த்து உதறப்பட்டது போல் தனிமையில் உழல்கிறாள் நாயகி, பின் எதனால், எதற்காக அந்த மகளும் தந்தையுமே நாயகியை தேடி வருகிறார்கள்? அப்படி அவள் என்ன செய்தாள்? மகளால் அவமானப்படுத்தப்பட்ட அம்மாவே, எப்படி அந்த மகளுக்கு ரோல் மாடல் ஆகிறாள் என்பதெல்லாம் செல்லுலாய்ட் கவிதைகள்.ஒரு கதை யாரை நோக்கி உருவாக்கப்படுகிறது, அது எதற்காக செயல்படுகிறது, எப்படி ஒரு கேரக்டரைசேஷனை உருவகப்படுத்துவது என்ற அத்தனை நுணுக்கங்களுக்கும் திரைக்கதையில் விடை இருக்கிறது. பாபி சஞ்சய் என்ற இரட்டையர்களின் மகுடத்தில் இதோ இன்னொரு மயிலிறது. ஏற்கனவே இவர்களின் டிராஃபிக், மும்பை போலீஸ் என்ற திரைக்கதை நுணுக்கங்களைப்பார்த்து பிரமித்து போனவன் நான். அதிலும் மும்பை போலீஸ் என்ற படத்தை பாருங்கள், ஆச்சர்யத்தில் பிரமித்து போவீர்கள்.

குறிப்பாக ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். மஞ்சுவின் மகள் பிரைம் மினிஸ்டரிம் ஒரு கேள்வி கேட்கிறாள். அந்த கேள்வியை கேட்டது மஞ்சுவாரியார். ஆனால் அது என்ன கேள்வி, எப்போது கேட்டோம் என்று மஞ்சுவாரியருக்கே தெரியாது. ஆனால அந்தக்கேள்வியால்தான் பிரதமரே அதிர்ந்து, மஞ்சுவாரியரை பார்க்க வரச்சொல்லுவார். அது என்னக்கேள்வியாக இருக்கும்? என்று நம்மை யோசிக்க செய்து, அதை எப்போது சொல்லுவார்கள் என நம்மை டென்ஷன்படுத்தி அந்தப்புதிரை அவிழ்க்கும் இடம் செம.. செம... இதுதான் படத்தின் போக்கை வேறு ஒரு திசையில் திருப்பிவிடும். கதையை உருகி உருகி செதுக்குபவர்களுக்குத்தான் இதெல்லாம் சாத்தியப்படும்நிஜ வாழ்வில் கணவரின் விவாகரத்து, மீடியாக்களின் மன உளைச்சல் என அவஸ்தையில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் ம்ஞ்சுவாரியருக்கு இந்தப்படம் ஒரு ஷாக்கிங் சர்ப்ரைஸ். அந்த கவிதை பேசும் கண்களும், கிறுக்குப்பிடிக்க வைக்கும் தெற்றுப்பல்லும், இன்னொசென்ஸ் நடிப்பும் நம்மை மெஸ்மரிசம் செய்யும் என்பது மட்டும் உறுதி. இந்தக்கதைக்கு நூற்றுக்கு இருநூறு சதவீதம் பொருந்தக்கூடியவர் இவர் மட்டுமே. அதிலும் பிரைம் மினிஸ்டர் இவரை சந்திக்க வேண்டும் என்றவுடன் அதற்காக இவர் செய்யும் பில்டப்புகள் எல்லாம் வயிற்றை புண்ணாக்கும் சிரிப்பு வகையறாக்கள்.

பிரைம் மினிஸ்டரை பார்க்க போகிறார் என்றவுடன் அவருக்கு கிடைக்கும் மரியாதைகளுக்கான தெனாவட்டு நடிப்பும், அங்கே போய் பயத்தில் மயங்கி விழுந்தவுடன் அவருக்கு கிடைக்கும் எளனப்பேச்சுக்களுக்கான ரியாக்‌ஷன்களும் என பின்னி பெடலெடுத்திருக்கிறார் மஞ்சுவாரியர்.

சொல்லப்போனால் இது இங்கிலீஷ் விங்கிலீஷின் தூரத்து சொந்தக்கார்ர்தான் இந்தக்கதை. ஆனால் அப்படி எதுவும் நினைக்க விடாமல் நம்மை கதைக்குள்ளேயே இருத்தி வைத்து இருப்பதுதான் இந்தப்படத்தின் வெற்றி.

க்ளைமேக்ஸில் ஒவ்வொரு செலிபிரட்டியாக காட்டிக்கொண்டு வந்து இறுதியில் வெற்று ஃப்ரேமை காட்டி, ஒரு வாசகம் போடுகிறார்கள் பாருங்கள். ஒட்டுமொத்த தியேட்டரே கைதட்டிய நிமிடம் அது. திரையில் பார்க்கும் போதுதான் அது என்ன என்பது உங்களுக்கு புரியும். இயக்குனர் ரோஷன் ஆஸ்ட்ரூஸின் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு. அது மும்பை போலீஸ் திரைப்படத்தின் மீதான ஆச்சர்யத்தில் உண்டானது. அந்த மதிப்பு இன்னும் ஒருபடி மேலே உயரும்படிதான் இந்தப்படத்தை கொடுத்திருக்கிறார்.

ஆர்கானிக் காய்கறிகளின் அற்புதங்களையும், எப்படி காய்கறிகளில் கெமிக்கல் கலக்கப்படுகிறது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் நாமெல்லாம் எப்படிப்பட்ட உணவுகளை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது. அது சரி, நம்மூர் கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறத்தை சென்று பாருங்கள். எத்தனை கெமிக்கல்கள், எத்தனை கார்பைடு கற்கள், எத்தனை எத்திலின்களை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியும். நம்மில் ஏன் இது போன்ற கதைக்களன்களை கையாளாமல் இன்னும் க்ளிஷேக்களை தொங்கிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.

மஞ்சுவாரியருக்கு நம்பிக்கை அளிக்கும் தோழியாக வரும் கனிகா இன்னொரு  ஸ்வீட் சர்ப்ரைஸ். இவரால்தான் மஞ்சுவுக்கு வாழ்வின் இன்னொரு கதவு திறக்கிறது. முதன் முதலில் மினிஸ்டர் முன்னால் பேச போகும் நொடியில், கையில் வைத்திருக்கும் காய்கறிகளை தவறவிடுவார் மஞ்சு. அத்தனை கூட்டமும் ஒரு நொடி ஸ்தம்பித்து போகும். எங்கே பிரைம் மினிஸ்டரை காண சென்ற போது சொதப்பியதைப்போல் இப்போதும் சொதப்பி விடுவாரோ என்று நாம் பதட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் போது, அதை எடுத்து வைக்கும் நபர்களிடம் மஞ்சுவாரியர், தேங்க்ஸ், மறக்காக கைய கழுவிட்டு போங்க, அந்த காய்கறிகள்ல இருக்கிற கெமிக்கல் உங்க உடம்பை பாதிக்கும்என்று தொடங்குவாரே ஒரு ஸ்பீச்... நானெல்லாம் வலிக்க கைதட்டினேன். வெகு நாள் கழித்து, இப்படி ஒரு மார்வலஸ் சீன் பார்க்க முடிந்த்து.

நல்ல சினிமா பார்க்கவேண்டும், கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே வெளியாகி இருக்கிறது இந்த ஹெள ஓல்ட் ஆர் யூ? தவற விடக்கூடாத ஒரு பரவச அனுபவம் இந்த்த்திரைப்படம்
குறிப்பு : ஒரு வேளை இந்தத்திரைப்படம் ரீமேக்கப்பட நேர்ந்தால் ஜோதிகா இதற்கு மிகச்சரியான தேர்வாக இருப்பார். 

6 comments:

பிரியமுடன் ரமேஷ் said...

ப்ப்பா... கண்டிப்பா பார்த்தே ஆகனும்னு நினைக்கற அளவு விமர்சனம் பன்னிருக்கீங்க ... சூப்பர் பாத்துடுவோம் ....

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு சினிமா விமர்சனம் எப்படி சஸ்பென்ஸ் உடன் எழுதப்பட வேண்டும் என்பதற்கான மைல் கல் விமர்சனம் இது . சபாஷ்

மணிகண்டவேல் said...

// பிரியமுடன் ரமேஷ் said...
ப்ப்பா... கண்டிப்பா பார்த்தே ஆகனும்னு நினைக்கற அளவு விமர்சனம் பன்னிருக்கீங்க ... சூப்பர் பாத்துடுவோம் ....//

நன்றி ரமேஷ் ஜி.. கண்டிப்பா பாருங்க..

மணிகண்டவேல் said...

// சி.பி.செந்தில்குமார் said...

ஒரு சினிமா விமர்சனம் எப்படி சஸ்பென்ஸ் உடன் எழுதப்பட வேண்டும் என்பதற்கான மைல் கல் விமர்சனம் இது . சபாஷ் //

நன்றி செந்தில் ஜி... இப்படி ஒரு தரமான பாராட்டு தங்களிடம் இருந்து கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

Baby ஆனந்தன் said...

// ஒரு வேளை இந்தத்திரைப்படம் ரீமேக்கப்பட நேர்ந்தால் ஜோதிகா இதற்கு மிகச்சரியான தேர்வாக இருப்பார். //

100%

மணிகண்டவேல் said...

//Blogger Baby ஆனந்தன் said...

// ஒரு வேளை இந்தத்திரைப்படம் ரீமேக்கப்பட நேர்ந்தால் ஜோதிகா இதற்கு மிகச்சரியான தேர்வாக இருப்பார். //

100%//

நன்றி ஆனந்தன்

இதையும் படியுங்கள்