Monday, June 16, 2014

ஜில் ஜில் கூல் கூல் - 1கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படத்திற்கான புரமோஷன் ஐடியாக்கள் வெகு ரசனையுடன் தொடர்கின்றன. முதலில் ஒரு சாங்க் டீசர் வெளியிட இருக்கிறார்கள். அந்த சாங் டீசருக்கே ஒரு டீசர் என வெகுவாக ஹைப்பை ஏற்றி விட்டு இருக்கிறார்கள். சி.வி குமார், பார்த்திபன், இயக்குனர் பாண்டிராஜ், சிபிராஜ், ஜி.வி. பிரகாஷ், சாரு நிவேதிதா, விஜய் மில்டன் என டாப் பிரபலங்களை பிடித்து, சாங்கை போட்டுக்காட்டி பைட்ஸ் வாங்கி இருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் கேபிள் சங்கரின் முன்னோட்ட டீசரும் பாடல் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.. சீக்கிரம் பாட்டை காட்டுங்க பாஸு..  

==========================================================================
வள்ளி திரைப்படத்தில் இடம் பெற்ற என்னுள்ளே என்னுள்ளே பாடல் எப்போதும் என் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் பாடல். ஆனால் சமீபத்தில் விஜி கனெக்ட் முகநூலில் இப்பாடலைப்பற்றி எழுதி இருந்த விதத்தைப் பார்த்தவுடன் இந்தப்பாடல் மேல் இன்னும் தீராக்காதல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. என்னவோ இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை கேட்டாயிற்று. ஸ்வர்ணலதாவின் மெஸ்மரிச குரலில் இன்னும் எத்தனை எத்தனை காலத்திற்குதான் இந்தப்பாடல் என்னை அடிமையாய் ஆக்கி வைத்திருக்கும் என்பதுதான் புரியவில்லை.

==========================================================================
Immortals of Meluha - மெலுஹாவின் அமர்ர்கள்

வெகு நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்து இந்த வாரத்தில் வாங்கி படித்துக்கொண்டிருக்கும் புத்தகம். ஏறக்குறைய முடித்தாகிவிட்டது. இன்னும் நூறு சொச்ச பக்கங்களே மிச்சம். படிக்கப்படிக்க உங்களால் மறக்கவே முடியாத ஒரு அனுபவத்தில் ஆழ்வீர்கள் என்பது மட்டும் நிச்சயம். கடவுளான சிவனை ஒரு கதாபாத்திரமாக்கி, அவரை சுற்றி ஆழ்ந்த கதைக்களனை அரணாய் அமைத்து, வெகு அட்டகாசமாய் நாவலை படைத்திருக்கிறார் அமிஷ். சிவன் சூர்யவம்சத்தினரின் அழைப்பிற்கு பின் காஷ்மீருக்கு பயணப்படுவதில் இருந்து தொடங்குகிறது பேரதிசய கதைக்களம். முத்தொகுதியில் சிவனை வாசித்தாயிற்று, அடுத்து நாகாஸ், வாயுஸ் என்று தேடலை ஆரம்பிக்கவேண்டும். Shuddi என்ற பெயரில் கரண் மல்ஹோத்ரா இந்த நாவலை தழுவி திரைப்படம் இயக்கி இருக்கிறார். ஆனால் இது நமக்கான கதை. நமக்கான கடவுள். அதனால் தமிழில் இதை திரைப்படமாக்க முயன்றால் ஒரு மிகப்பிரம்மாண்டமான ஒரு பேரனுபவம் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.y not Shankar?
  
==========================================================================

காதல் கார்னர்

==========================================================================
விஜய் டெலி அவார்ட்ஸ் புரோமோக்கள் எல்லாம் படு ஆர்வத்தை தூண்டி இருந்தன. ஆனால் புரோக்ராம் அந்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. சில நாமினேஷன்கள் எல்லாம் படு மொக்கையாக இருந்தன. எப்பவோ நடித்த காலகட்டத்து எபிசோட்/ நடிகர்களை எல்லாம் நாமினேஷனில் வைத்திருந்தது மிக ஏமாற்றமாக இருந்த்து. அதுவும் சந்தானத்தை எல்லாம் ஆட்டத்தில் கொண்டு வந்தது சந்தானம் காமெடியை விட படு கொடுமை. ஆனால் டிடி, கோபிநாத் இருவர் மட்டுமே நிகழ்ச்சியை முழுவதும் பார்க்க காரணமாய் இருந்தார்கள். ஒட்டுமொத்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவர் மட்டும்தான் எண்டர்டெயினர். அதனால்தான் ஒவ்வொரு இடைவேளையிலும் இவர்கள் இருவர் பேசுவதையே காட்டி காட்டி அமர வைத்தார்கள், என்னா மார்க்கெட்டிங் டா?? மற்ற நாமினேஷன்களை முன்னமே பைட்ஸில் காட்டி இருந்தால் எப்பவோ விடு ஜூட் தான். அதிலும் டிடி பேசியது கொஞ்சம் ஓவர் லென்த்தான். ஏம்ப்பா... எடிட்டர்ஸ் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாமோ? ஆனாலும் யூகி சேதுவின் கடைசி பேச்சு.. ஸோ ஸ்வீட்.
==========================================================================

Puzzle பையன்


==========================================================================
Aடாகூடம்
 


2 comments:

mathi sutha said...

தொட்டால் தொடரும் தலைப்புக்கு ஏற்றது போல நகர்கிறது...

விஜய் அவார்ட் சிரியல் என்பதால் நம்மளுக்கு அகாத பக்கம் ஆகவே முதலே வெளிநடப்பு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM

மணிகண்டவேல் said...

நன்றி சகோ...

இதையும் படியுங்கள்