Wednesday, September 25, 2013

6 மெழுகுவர்த்திகள்


                      
ஈரானிய சினிமா, ஜப்பான் சினிமா, கொரியன் சினிமா, என உலகளாவிய படங்களைப்பார்க்கும் போது ச்சே. நம் தமிழில் எப்போது இப்படி ஒரு படைப்பை காண நேரிடும் என்ற பேராவல் மனதில் எப்போதும் எழுந்துக்கொண்டே வரும். சத்தமே இல்லாமல் அப்படி ஒரு படைப்பை தமிழில் கொண்டு வந்து சேர்த்த இயக்குனர் துரைக்கு எப்படி ஒரு பாராட்டை தெரிவிப்பது என்றே தெரியவில்லை.

3 வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம் எத்தனை பிரச்சனைகளை சந்தித்திருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் தாங்கிக்கொண்டு பிடிவாதமாக ஒரு நல்ல படைப்பை கொடுத்திருப்பதற்கு கை வலிக்க வலிக்க இந்த குழுவினருக்கு கரகோஷம் எழுப்பலாம்


ஷாம், பூனம் கெளர் தம்பதிகளுக்கு ஒரே ஒரு செல்லப்பிள்ளை கெளதம். தன் மகனிம் 6வது பிறந்தநாளின் போது பீச்சில் அவனை தொலைக்கிறார்கள். பிறகு அந்த மகனைத்தேடி அலையும் ஒரு தந்தையின் கதைதான் இந்த 6 மெழுகுவர்த்திகள்.

மகனைத்தேடி அலையும் ஷாமின் பயணத்தில் நம் கண் முன்னே விரிவது எல்லாம் பயங்கரமான நிழலுலகம். ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு காட்சியும் நமது அடிவயிற்றில் அட்ரிலினை அதிகபட்சமாய் சுரக்க செய்துப்போகிறது. சமீப காலத்தில் இப்படி ஒரு வெறித்தனமான உழைப்பை கொட்டிய படத்தை பார்க்க முடிந்ததில்லை. 

இதுதான் கதை என்று முடிவான பிறகு, இயக்குனர் துரை செய்த மிக முக்கியமான காரியம் எழுத்தாளர் ஜெயமோகனை இந்த புராஜெக்டுக்குள் கொண்டுவந்ததுதான். மனுஷன் ஏற்கனவே வெறிபிடித்தமாதிரி உழைப்பவர். லட்டு மாதிரியான ஒரு களம் கிடைத்தால் சும்மா விடுவாரா? ஒவ்வொரு கதாபாத்திரமும், அதற்கான பின்புலத்தேர்வும், கேரக்டர் மாடுலேஷனும் வெகு நுணுக்கம் பிளஸ் பிரமிப்பானது. ஜெமோவைத்தவிர வேறு ஒருவரை இந்த எழுத்தாற்றலுக்குள் நினைத்துப்பார்க்கவே முடியாதது.

அனில் முரளி என்ற மலையாள நடிகர் திருநங்கை போன்றொரு கேரக்டரில் நடித்திருக்கிறார் பாருங்கள்... செமத்தியான நடிப்பு... இப்படி ஒரு பர்ஃபாமென்சை நீங்கள் ஸ்க்ரீனில் பார்க்கும் போது அவனை அடித்தே கொல்ல வேண்டும் என்றுதான் தோன்றும். அந்த மலையாளம் கலந்த ஸ்லாங், ராம் சார் நீங்க தப்பு பண்ணிட்டீங்க என்று உச்சரிக்கும் தொணி, தன்னை அடித்துவிட்ட ஷாமை அலையவிடும் கயமைத்தனம், நயவஞ்சக பேச்சு, நரித்தனமான பார்வை என மனதைவிட்டு அகலாத வெகு அட்டகாசமான கதாபாத்திரம். சொல்லப்போனால் இந்தப்படத்தில் டாப் ஸ்கோர் பெரும் நபர் இவர் ஒருவரே.. இவருக்கு அடுத்தபடிதான் ஷாமே..

ஷாமின் டெடிகேஷனும், உழைப்பும், அத்தனை சாதாரணமாக எழுதிவிடக்கூடியது இல்லை. ரோட்டோரத்திலும் அழுக்கிலும் புரண்டு, உடலை வருத்தி, முகத்தை வருத்தி, இந்தப்படத்திற்காகவே பிறந்தவர் போல அத்தனை சிரத்தை எடுத்து ஒரு தவம் போல ராமாக வாழ்ந்திருக்கிறார். தன் மகனை தேடப்போன இட்த்தில் ஒரு பெண் குழந்தையை காப்பாற்ற முடியாமல் பயந்து கதறுவதும் பின் அதே குழந்தைக்காக ஒரு பெரும் ரிஸ்க் எடுத்து தவிப்பதுமாக ஷாம் அற்புதமாக வாழ்ந்து கரைந்திருக்கிறார். விருதுகள் கொடுத்து கவுரவப்படுத்துவதுதான்  இந்த உழைப்பிற்கான பெரு மரியாதை.

டாக்ஸி டிரைவர் இறக்கும் தருவாயில் சொல்லும் உண்மையில் இருக்கும் வீரியம் எத்தனை வார்த்தைகள் கோர்த்தாலும் சொல்ல முடியாத்து. நிதானமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெரு முதலாளிகளின் பிண்ணனியில் இப்படி ஒரு இருள் சூழ் உலகமா என்று அதிர வைக்கிறது இந்தப்படைப்பு.

ஆந்திராவில் அந்த கறிக்கடை பின்னணியில் இயங்கும் அந்த வியாபார உலகமும், அந்த மக்களும் 100 சதவீதம் ரியாலிட்டி. எப்படி இப்படி ஒரு ஏரியாவிற்குள் படம் பிடிக்க முடிந்த்து. அது செட்டா? இல்லை நிஜமான இடமே என்ற ஆச்சர்யம் இன்னமும் எழுந்துக்கொண்டே இருக்கிறது. அந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி கூடங்களும், அதன் கவிச்சி நாற்றமும், நமக்கே ஒரு அசூசையை ஏற்படுத்தினாலும் அந்த தளமும் அங்கே நடக்கும் காட்சி படிமங்களும் இந்திய திரை உலகிற்கே புதிது. இதுவரை ஸ்க்ரீனில் யாரும் காட்சிப்படுத்தாதது. தடையறத்தாக்கவில் இப்படி ஒரு தளம் காட்டப்பட்டது, ஆனால் இந்தப்படத்தில் காட்சிப்படுத்தியதைப்போல் அத்தனை ராவாக யாராலும் படம் பிடிக்கப்பட்டதில்லை.

அந்த க்ளைமேக்ஸ்... சத்தியமாக என்னால் இருக்கையில் இருந்தே எழ முடியவில்லை. அந்த துக்கமும் வலியும் அப்படியே ஈட்டியென நெஞ்சில் இன்னமும் கூர் வலியை பாய்ச்சிக்கொண்டே இருக்கிறது. எங்கடா இருக்கீங்க நாய்களா? எதுக்குடா சின்ன குழந்தைங்களை வெச்சி இப்படி ஒரு பிழைப்பு உங்களுக்கு? அவர்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும் என்ற வெறித்தனமான கோவமும் மனதில் ஏற்படுத்துவதுதான் இந்தக்குழுவினரின் வெற்றி.

இயக்குனர் துரை.... காலம் கடந்தாலும் கவலையில்லை, காசில்லையென்றாலும் கவலையில்லை.. கண்ணியமான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்ற விடா முயற்சியிலையே 3 வருடங்களை கடந்திருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் டைரக்டர் சார்.மலபார் பீடி ஒன்றை வைத்தே ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கும் அந்த திரைக்கதை நுணுக்கத்திற்கு சபாஷ். தியேட்டரில் இந்தக்காட்சிக்கு கைதட்டல் அடங்கவே ஒரு நிமிடம் ஆனது.
தந்தை பாசம் என்ற சொல்லை வைத்து தங்க மீன்கள் கொடுக்கத்தவறிய அனுபவத்தை இந்த 6 மெழுகுவர்த்திகள் அட்டகாசமாக கொடுத்திருக்கிறது.

அபத்தமான காமெடி கண்றாவிகளுக்கு மத்தியில் அற்புதமான ஒரு குறிஞ்சிப்பூவைப்போல மலர்ந்திருக்கிறது இந்த 6 மெழுகுவர்த்திகள். இதை கையில் எடுத்து உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டியது நம் கடமை. இல்லை இதையும் ஆரண்ய காண்டம் போல் வணிக ரீதியிலான வெற்றியடைய வைக்க வில்லையென்றால் நிச்சயம் வரலாறு நம்மை மன்னிக்கவே மன்னிக்காது.


7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனம் ஓக்கே , குட் , படமும் பிரமாதம் தான் , ஆனால் இது 6 புல்லட்ஸ் சின் சாயல்னு சிலர் சொல்ராங்க , நான் இன்னும்6 புல்லட்ஸ் பார்க்கலை

சி.பி.செந்தில்குமார் said...

>>>மலபார் பீடி ஒன்றை வைத்தே ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கும் அந்த திரைக்கதை நுணுக்கத்திற்கு சபாஷ்.

இது நான் கவனிக்கலையே? தனி மெயிலில் நேரம் இருக்கும்போது விவாதிக்கவும்

மணிகண்டவேல் said...

// சி.பி.செந்தில்குமார் said...//

வெகுநாள் கழித்து போஸ்ட் போட்டு இருந்தாலும் முதல் கமெண்ட் இட்ட எங்கள் அண்ணனுக்கு மிக்க நன்றிகள்...

RK.KALYAN said...

very very good super movie... congrats MR. V.A. DURAI AND SHYAM ..TAMIL PAdNGAL NIRAIVAI KODUKKA ARAMBITHU VITTATHU.PADAM PARKAVENDUM ENDRA ENNATHAI VITHAITHU IRUKKIRATHU.. NANDRI..

ஜீவன்சுப்பு said...

GOOD REVIEW...!

மணிகண்டவேல் said...

// RK.KALYAN said...

very very good super movie... congrats MR. V.A. DURAI AND SHYAM ..TAMIL PAdNGAL NIRAIVAI KODUKKA ARAMBITHU VITTATHU.PADAM PARKAVENDUM ENDRA ENNATHAI VITHAITHU IRUKKIRATHU.. NANDRI..//

நன்றி நண்பரே

மணிகண்டவேல் said...

// ஜீவன்சுப்பு said...

GOOD REVIEW...!//

நன்றி நண்பா...

இதையும் படியுங்கள்