Friday, October 12, 2012

Frozen (ஃப்ரோஸன்) – கடுங்குளிரில் ஒர் பேராபத்து


ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு நொடியும் திகிலுடன், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரிதவிப்புடன் ரசிக்க வைத்த திரைப்படம் இது. மிகச்சாதாரண ஒன் லைனக்கொண்டு அசாதாரணமாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்த இந்த திரைப்படத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

டான், ஜோ என்ற இரண்டு ஆண் நண்பர்களும் பார்க்கர் என்ற பெண்ணும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் மேற்குப்பகுதியிலுள்ள பனி மலையில் பொழுதை கழிக்க விரைகிறார்கள். அந்த இடம் கடும் குளிரானது. அங்கு பனிக்கட்டிகளே எல்லா இடங்களையும் ஆக்ரமித்திருக்கிறது. அந்த இடத்தில் பனிச்சிகரங்களுக்கு இடையே செல்லக்கூடிய விஞ்ச் ஒன்று அமைத்திருக்கிறார்கள். அதுதான் அந்த இடத்தின் சிறந்த பொழுதுபோக்கு. ஒரு நாள் சாயந்திரவேளையில் அந்த ரோப் காரை இயக்குவதை நிறுத்தும் வேளையில், நண்பர்கள் மூவரும் அந்த ஆபரேட்டரிடம் லஞ்சம் கொடுத்து இன்னும் கொஞ்சம் நேரம் இயக்கும்படி சொல்லி அந்த விஞ்சில் ஏறிக்கொள்கிறார்கள். எல்லாரும் அந்த விஞ்சில் இருந்து இறங்கிவிட, இவர்கள் மூவர் மட்டும் அதில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

ஜாலியாக பனிகளை ரசித்துக்கொண்டே வரும் நேரத்தில், அந்தரத்தில் அவர்கள் செல்லும் விஞ்ச் நிற்கிறது. எல்லா விளக்குகளும் அணைக்கப்படுகின்றன. வேறொரு ஆபரேட்டர் ஷிப்ட் மாறும் வேளையில், தவறுதலாக அந்த விஞ்சை நிறுத்தி விடுகிறார். வேறு யாருமே இல்லாத அந்த மலையில், இரவில், கடும் குளிரில் அவர்கள் மூவர் மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டும் அல்லாமல் இன்னும் 4 நாட்கள் கழித்துத்தான் வேலைக்கு ஆட்கள் வருவார்கள். அதுவரை இந்த மலைப்பயணத்திற்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆபத்தான சூழ்நிலையில் நண்பர்கள் மூவரும் மாட்டிக்கொள்கிறார்கள்.


நேரம் ஆக, ஆக, கடும் குளிர் வீச ஆரம்பிக்கிறது. அந்த விஞ்ச்சிலேயே குளிரில் நடுங்க ஆரம்பிக்கிறார்கள். எதாவது செய்து தப்பிக்க வேண்டும் என்ற நினைப்பில் டான் கீழே குதித்து. நடந்து சென்று யாரையாவது உதவிக்கு கூட்டி வருகிறேன் என்று கூறுகிறான். டான் கீழே குதிக்கும் போதுதான் அந்த பயங்கரம் புரிகிறது. அதாவது காலுக்கு கீழே ஐஸ் குவியலாக இல்லாமல், உறைந்து ஐஸ்கட்டியாக இருக்கிறது என்று.

கீழே குதித்த டான் நேரே அந்த ஐஸ்கட்டியின் மீது காலை வைக்க, கால் ஒரு விறைப்பான பாறையின் மீது மோதியதைப்போல் உடைகிறது. கால் எலும்புகள் சதையை கிழித்துக்கொண்டு வெளியே தொங்குகின்றன. மேலே இருக்கும் இரண்டு நண்பர்களும் அதிர்ந்து போகிறார்கள். இதைவிட பேராபத்தாக கீழே குதித்த டானை சுற்றி பனி ஓநாய்கள் சூழ்கின்றன. டானை ஒவ்வொரு ஒநாயாக கொன்று, குத்தி கிழிக்கின்றன. இத்தனைக்கும் இவன்தான் மேலே அமர்ந்திருக்கும் பார்க்கரின் காதலன். காதலியின் கண் முன்னே காதலனை ஓநாய்கள் கொன்று தின்கின்றன. பெரும் குரலெடுத்து கதறி அழுவதைத்தவிர அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
உதவிக்கு யாருமே இல்லாமல், கடும்குளிரில், கீழே ஓநாய்கள் சுற்றி திரிய அந்த நண்பர்களின் கதி என்ன என்பதை நமக்கு வெட வெடத்துப்போகும்படி சொல்லி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதுபோன்ற டூ ஆர் டை கதைக்களன்கள் நிறைய வந்திருந்தாலும் இந்த திரைப்படம் நமக்குள் ஒரு ஆர்வத்தையும், டென்ஷனையும் விதைத்துக்கொண்டே போகிறது. எப்படிடா இவர்கள் தப்பிக்க போகிறார்கள் என்ற டென்ஷனை நமக்குள்ளும் ஏற்றிவிட்டு ஜாலியாக போக்குகாட்டுகிறது திரைக்கதை.

அதுவும் பார்க்கர் என்ற அந்தப்பெண் இரவில் தன் கையை இரும்புக்கம்பியின் மீது பிடித்துக்கொண்டு தூங்கிவிடுவார். காலையில் விடிந்ததும் அந்தக்கை இரும்புடன் சேர்த்து குளிரில் இறுகி இருக்கும். அதை பிய்த்து எடுப்பதற்குள் அவர்படும் பாடு அப்ப்ப்ப்பா.... நமக்கே வியர்க்கிறது.

பக்கதில் இருப்பவனுக்கு தெரியாமல் பேண்டுடன் சேர்த்து யூரின் போகும் காட்சியில் பார்க்கர் ஒருவித அசிங்கமான குற்ற உணர்ச்சியுடன் ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாருங்கள். க்ளாஸ்...
ஆடம் க்ரீன்தான் எழுதி இயக்கி இருக்கிறார். பார்க்கும் ரசிகனுக்கு இவர்கள் அனுபவிக்கும் அந்த கஷ்டத்தை டிரான்ஸ்பர் செய்த விதத்தில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். கேமராமேனின் பங்கு எத்தகையது என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். கடும்குளிரின் அதே உணர்வை நமக்கும் கொடுப்பதில் கேமராவின் டோனும் மூட் ஆஃப் லைட்டிங்கும் பெரும்பங்கு வகித்திருக்கிறது.

இப்படி ஒரு குளிரில், அந்தரத்தில், கீழே ஓநாய்கள் சுற்றித்திரிய இத்தனை பேராபத்துக்களுடன் நாம் மாட்டிக்கொண்டால்??? ஐயோ நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இந்த எண்ணத்தை விதைத்த விதத்தில் இந்தப்படம் ஜெயித்திருக்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய சினிமா...

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் படம் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்துகிறது... மிக்க நன்றி...

Anbu said...

Super Review Anna.. please send me dvd anna

மணிகண்டவேல் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
விமர்சனம் படம் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்துகிறது... மிக்க நன்றி...//

நன்றி தனபாலன்.. தொடர்ந்து படியுங்கள்

மணிகண்டவேல் said...

//
Anbu said...
Super Review Anna.. please send me dvd anna //

நன்றி அன்பு... டிவிடி தானே.. கொடுத்துட்டா போச்சு....

விஷ்ணு said...

Nice Movie

Suresh Kumar said...

Very nice review

மணிகண்டவேல் said...

// விஷ்ணு said...
Nice Movie //

நன்றி விஷ்ணு

மணிகண்டவேல் said...

//Suresh Kumar said...
Very nice review //

நன்றி சுரேஷ் குமார்...

மணிகண்டவேல் said...

விஷ்ணு சார்.. நீங்க படம் பார்க்கும் போது அந்த கால் உடையுற சீனுக்கு பயந்ததை நான் சொல்லவே இல்லை.. பார்த்தீங்களா?

ஹாலிவுட்ரசிகன் said...

ஹார்ட் டிஸ்கில் ரொம்ப நாளாக் கிடக்கு... சீக்கிரம் பார்த்திடலாம்.

மணிகண்டவேல் said...

//
ஹாலிவுட்ரசிகன் said...
ஹார்ட் டிஸ்கில் ரொம்ப நாளாக் கிடக்கு... சீக்கிரம் பார்த்திடலாம்.//
பார்த்திடுங்க.. செமையா இருக்கும்..

vinu said...

machchi naanum presenttuuuuuuu

மணிகண்டவேல் said...

// vinu said...
machchi naanum presenttuuuuuuu //

vaayaa.. naappu... epdi iruka?

இந்திரா said...

படம் வெளிவந்து நீண்டநாட்களுக்குப்பின்னான விமர்சனம்.. இருப்பினும் கவிதைக்காதலனின் பாணி கலக்கல் தான்.
நானும் படம் பார்த்திருக்கிறேன். ஒரே இடத்தில், ஒரே சூழ்நிலையில், ஒருசில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு காட்சிகளை மாறி மாறிக் காட்டுவதில் சலிப்புத்தட்டாமல் படமெடுப்பது ஆங்கிலப்படங்களில் ஸ்வாரஸ்யமான விஷயம் தான். (தமிழ்ல இதுமாதிரி எடுத்தா பாக்க மாட்டாங்க.. நமக்கு ரெண்டு குத்துப்பாட்டு, ரெண்டு சண்டை, ரெண்டு பன்ச் டைலாக் வேணும்ல..)

இரண்டாவது ஆணும் ஓநாயால் கொல்லப்பட்டபோது, தவழ்ந்துகொண்டே வரும் கதாநாயகி, அந்த ஓநாய்களின் மத்தியில் அமைதியாக, பயத்துடன் தவழ்ந்து தாண்டிச் செல்வது அருமையா காட்டியிருப்பாங்க.
திகில் குறையாத திரைப்படம்.

பதிவிற்கு வாழ்த்துக்கள் மணி சார்.

மணிகண்டவேல் said...

@ இந்திரா...

அடடே.. இந்திரா படம் பார்த்துட்டீங்களா..

Suresh Kumar said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !

என் ராஜபாட்டை : ராஜா said...

அருமையான எழுத்து நடை பாஸ் உங்களுக்கு ...

மாற்றுப்பார்வை said...

அருமை

இரவின் புன்னகை said...

நேரம் கிடைக்கும் போது படம் பாரத்துடனும்... வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

இதையும் படியுங்கள்