Wednesday, July 4, 2012

அம்புலி 3D இயக்குனர் ஹரீஷின் திருமணம்

ஓர் இரவு, அம்புலி ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு நல்ல இடத்தைப் பிடித்திருக்கும் இயக்குனர் திரு.ஹரீஷ் நாராயண் அவர்களுக்கு இன்று திருமண ரிசப்ஷன் நடைபெற்றது. அவரது ரிசப்ஷனுக்கு இன்று நானும் என் நண்பர்களும் சென்றுவிட்டு வந்தோம். இதோ அந்த சந்தோஷ வைபவம் உங்களுக்காக...இதுதான் திரு, ஹரீஷ் அவர்களின் திருமணம் நடக்கும் திருவல்லீஸ்வரர் மஹால். சென்னை பாடியில் உள்ள இந்த மண்டபத்திற்கு நானும் என் நண்பர்களும் சரியாக 8 மணிக்கு எல்லாம் சென்றுவிட்டோம். வழி தேடத்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. சிவசக்தி தியேட்டர் செல்லும் வழி என்று சொல்லி இருந்தால் இன்னனும் எளிதாக வந்திருப்போம்.  நல்ல பெரிய ரிச்சான திருமண மண்டபம். மண்டபத்தின் முகப்பிலேயே ஹரீஷ் நாராயண் வெட்ஸ் பூஜா என்ற போர்ட் வருபவர்களை அமைதியாக வரவேற்றுக்கொண்டிருந்தது.மண்டபத்திற்குள் நுழைந்த உடனே ஒரு பெண்மணி சாக்லேட், இனிப்பு எல்லாம் கொடுத்து வரவேற்றுக்கொண்டிருந்தார். துவக்கமே இனிமையாக இனிப்பாக அமைந்தது. மேலே பன்னீர் எல்லாம் தெளித்து அட்டகாசமாக வரவேற்றார்கள். ரிசப்ஷன் முடிந்து திரும்ப வரும் போது இதே இடத்தில் தாம்பூல பை வாங்கிக்கொள்ளும்படி டிசைன் செய்திருந்தார்கள்
அதற்கு பக்கத்துலையே பானிபூரி செட்டப்புடன் ஒரு ஹால் அமைத்திருந்தார்கள். வருபவர்கள்  எல்லாம் பானிபூரியை ஒரு கை பார்த்தார்கள்அதற்கு அடுத்து, தேங்காய்பூ, திராட்சை, அன்னாசிப்பழம், தர்பூசணி, என பல பழங்களின் கலவையாக சாலட் ஒன்றும் அருமையாக உண்பதற்கு கொடுத்தார்கள்.
இதையெல்லாம் மெதுவாக முடித்துக்கொண்டு மேலே படியேறி சென்றால், இன்ஸ்டண்ட்டாக அங்கேயே ஒரு ஜூஸ் வைண்டிங் மெஷின் வைத்து அனைவருக்கும் ப்ரஷ் ஜூஸ் கொடுத்து மண்டபத்திற்குள் வரவேற்றார்கள். என்னடா எதாவது சேட்டு கல்யாணத்துக்கு வந்துவிட்டோமோ என்று என்னும் அளவிற்கு நிறைய நார்த் மக்கள் இருந்தார்கள்.மெதுவாக கூட்டத்தை கவனித்தபடியே முன்னேறி சேர் தேடி அமர்ந்துகொண்டோம். நல்ல பாட்டுக்கச்சேரி. காச் மூச் என்று கத்தாமல் ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் பாடல்கள், ஹிந்தி பாடல்கள் என அருமையாக பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். இடையே ஒரு பெண் அந்தாக்‌ஷரி வேறு நடத்தினார். வந்திருந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்தே மக்களை தேர்ந்தெடுத்து பாட்டுப்பாட சொன்னார். நல்ல சுவாரஸ்யமாக இருந்தது.


மணமகன் ஹரீஷை நெருங்குவத்ற்கு நிறையப்பேர் காத்து இருந்தார்கள். அவருக்கு கொடுப்பதற்கான ஒரு கிஃப்டோடு லைனில் நானும் எனது நண்பனும் நின்றோம். மணமக்களுக்கு ஒரு கிஃப்டை கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். கை குலுக்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தோம். மணமக்கள் இருவரும் மிக அழகாக இருந்தார்கள். ஜோடிப்பொருத்தம் அருமையாக இருந்தது. ஹரீஷ் முகம் எப்போதுமே சிரித்தபடி இருக்கும். இன்று வெட்கத்துடனும், ஒருவித கூச்சத்துடனுமே சிரித்துக்கொண்டு இருந்தார். 


மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, கொஞ்ச நேரம் அங்கே அமர்ந்திருந்து விட்டு, சாப்பிட கிளம்பிவிட்டோம். மிக அழகாக, மிக சுத்தமாக அந்த உணவருந்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆச்சரியப்பட்டோம். இடியாப்பம், குருமா, பட்டர் நான், பன்னீர் பட்டர் மசாலா, கட்லெட் வித் சூப்ஸ்டிக், வெஜிடேபிள் பிரியாணி, ரசமலாய், ஸ்வீட், என இன்னும் பெயர் தெரியாத நார்த் இண்டியன் ஐட்டங்களும், நமது சாம்பார் சாதம், தயிர்சாதம், ரசம் சாதம், காரக்குழம்பு, வாட்டர் பாட்டில் என மிக அருமையான உணவுபரிமாறல் அங்கே நடந்தது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஐட்டங்களை பரிமாறி திக்குமுக்காட வைத்துவிட்டனர்.மிக திருப்தியான உணவு முடித்த பின் வெளியே வெற்றிலை பாக்கில் கிட்டத்தட்ட 8 வகைக்கும் மேற்பட்ட இனிப்புகளை கலந்து அருமையான ஸ்வீட் பீடாவும் அங்கே கொடுத்தார்கள்.இது போதாதென்று ஐஸ்க்ரீம் வேறு.  சாப்பிட சாப்பிட இனித்துக்கொண்டே இருந்தது. வந்திருந்த அனைவரும் நல்ல சாப்பாடு என மனம் நிறைய, வயிறு நிறைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டே சென்றார்கள். ஒரு திருமணத்தில் சாப்பாட்டில்தான் பெரும்பாலான பிரச்சனைகளும், மனக்கசப்புக்களும் ஏற்படும். ஆனால் திரு. ஹரீஷ்  நாரயண் அவர்களின் திருமண வைபவத்தில் சாப்பாடு ஒரு மனநிறைவான அம்சமாக விளங்கியது.  

திரைத்துறையில் எதாவது சாதித்த பிறகுதான் திருமணம் என்று நிறையப்பேர் சொல்லுவார்கள். ஆனால் விதி வசத்தாலோ, இல்லை கால சூழ்நிலைகளாலோ திடீரென திருமணம் நடந்துவிடும். ஆனால் திரு, ஹரீஷ் நாரயண் அவர்கள் சாதித்துக்காட்டிவிட்டுதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் ஹரீஷ்.. 

நூற்றாண்டு காலம் இனிமையாக, ஆனந்தமாக வாழுங்கள் ஹரீஷ் & பூஜா.. இனிய திருமண வாழ்த்துக்கள்..


அழகான இந்த ஜோடியை நீங்களும் வாழ்த்துங்களேன்..

6 comments:

LawrencE said...

Wish you a happy married life :)

Cable சங்கர் said...

நானும் வந்திருந்தேன் மணி.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ Cable சங்கர்..

ஆகா... உங்களை பார்க்கலையே தலைவா.. மிஸ் பண்ணிட்டேன்,..

விஷ்ணு said...

திரு.ஹரீஷ் நாராயண் மற்றும் பூஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ........

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் மச்சி,

செம marriage டா.வாய்ப்பே இல்லன்னு சொல்ற அளவுக்கு சூப்பரா நடத்திட்டாரு ஹரிஷ்.என்ன ஆடம்பரமான ஹால்,வாவ் சொல்ல வைக்கும் வரவேற்ப்பு,அருமையான அறுசுவை உணவு.சும்மா சொல்ல கூடாது டைனிங் ஹால்ல மட்டும் 23 வகையான உணவுகள்.அது போதாதுன்னு இன்னும் கீழ வந்தா அது வேற ஒரு பெரிய லிஸ்ட். முடியல.கல்யாணம்னு பண்ண அது ஹரிஷ் சார் பண்ணா மாரி தான் பண்ணனும்.ஒரு கல்யாணத்துல சாப்பாடு நல்லா இருந்தா தான் எல்லாருமே திருப்தியா மனசார மண மக்களை வாழ்த்துவாங்க அது உண்மையாவே ஹரிஷ் சாருக்கும்,அவருடைய மனைவி பூஜா அவங்களுக்கும் கண்டிப்பா 100% கிடச்சி இருக்கும். வாழ்த்துக்கள் Mr.Harish, & Mrs.Pooja Harish.

100 ஆண்டுகள் இந்த ஜோடி இணை பிரியாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஹரிஷ் சார் சாதிச்சிட்ட பிறகு கல்யாணம் பண்ணி எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய வழி காட்டி மாதிரி ஆய்டீங்க சார்.கலக்கிடீங்க.

மச்சி நீ கிரேட் டா நண்பரோட கல்யாண வரவேற்ப்ப ஒரு பதிவா போட்டு கலக்கிட்ட டா.சூப்பர் மச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவும் அருமை, திருமணமும் அருமை. மணமக்களுக்கு எனது வாழ்த்துகளும்....!

இதையும் படியுங்கள்