Saturday, May 5, 2012

வழக்கு எண் 18/9
ஒரு திரைப்படம் முடிந்ததும் ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து கைத்தட்டிய அதிசயம் இந்தப்படத்திற்கு நடந்தது. அது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் இல்லை. மிகப்பிரமாதமான டீம் ஒர்க் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அது இந்தப்படத்திற்கு நடந்திருக்கிறது. 

சரி வழக்கு எண் 18/9 என்ன கதை.

ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் ஒரு பிளாட்பார கடையில் வேலை செய்யும் இளைஞன், அதே பணக்கார வீட்டின் பெண்ணை காமத்தால் நெருங்கும் ஒரு பணக்கார இளைஞன்... இந்த இரண்டு முரணான காதல்களை கொண்டு ரசிகர்களை உணர்ச்சிப்பிழம்பாக்கி இருக்கிறார் இயக்குனர். 

வேலு பிளாட்பார கடையில் வேலை செய்யும் இளைஞன். அவன் அந்த ஏரியாவில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்யும் பெண்ணான  ஜோதியை காதலிக்கிறான். ஒரு நாள் அந்தப்பெண்ணின் முகத்தில் யாரோ ஒருவர் ஆசிட் ஊற்றிவிட, அதை செய்தது வேலுதான் என போலீஸ் அவனைப்பிடித்து செல்லுகிறார்கள். அப்போது ஜோதி வேலை செய்யும் வீட்டின் பெண்ணான ஆர்த்தி வந்து, ஆசிட் ஊற்றியது தன்னை காதலிப்பதாக ஏமாற்றிய தினேஷ்தான் என்று சொல்லுகிறாள். அப்பாவி வேலு என்ன ஆனான்? ஆர்த்தியை ஏமாற்றிய தினேஷ் எதற்கு ஜோதியின் மீது ஆசிட் ஊற்றினான்? ஆசிட் ஊற்றி வெந்துப்போன ஜோதி என்ன ஆனாள்? இவர்கள் வழக்கில் போலீஸ் எடுக்கும் முடிவு என்ன என்பதை தியேட்டரில் சென்று பாருங்கள்.

வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து பலவகைகளில் மேம்பட்டு ரசிகனின் ரசனையை உயர்த்த வந்திருக்கும் படம் இது. டீட்டெய்லிங் எனப்படும் கதாபாத்திர நுணுக்கங்களில் இயக்குனர் புகுந்து விளையாடி இருக்கிறார். அனாதையாய் வந்து சேரும் வேலுவிற்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் ரோஸி என்கிற விபச்சாரப்பெண், அவன் சாப்பிட துவங்கும் போது கை கழுவ சொல்லுவது,  ரோஸியைத்தேடி செல்லும் வேலுவை வரவேற்கும், பூட்டப்பட்டிருக்கும் ரோசியின் வீட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் ஜீஸஸ் சிலுவை டாலர், யார் கதவை தட்டினாலும் வியூ பைண்டர் வழியாக பார்த்துவிட்டுத்தான் கதவை திறக்க வேண்டும் என்று சொல்லும் பணக்கார பெண்மணி, முகமே காட்டாமல் சிபாரிசை காட்டும் அமைச்சர், என ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் உண்டான சின்ன சின்ன நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்துகிறது

அதே போல், முதல்பாதியில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிக்கும், இரண்டாவது பாதியில் கொடுக்கப்படும் லிங்க் எல்லாமே பர்ஃபெக்ட்  மேட்ச். திரைக்கதையை காதலித்து எழுதுபவரால் மட்டுமே இதுசாத்தியம்.

வேலுவாக நடித்திருக்கும் ஸ்ரீ, பார்த்த உடனே பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் முகம். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளாவின் முகம் அந்த கதாபாத்திரத்திற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசங்களை ஒரு சினிமா டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம் என்றாலும், அவரது பர்ஃபாமென்ஸ், ஒரு புத்தகம் போடும் அளவிற்கு இருக்கிறது,

ஆர்த்தியாக வரும் மனிஷா, இன்னொரு அசத்தல் கண்டுபிடிப்பு. முதல் இன்ஃபாக்சுவேஷன் வரும் உணர்வுகளை மெல்ல மெல்ல தன் முகத்தில் கொண்டுவருவதில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தினேஷின் மேல் கொள்ளும் மெல்லிய காம்ம் கலந்த காதல், நல்ல மொபைல் வைத்திருக்கிறான் என்ற ஒரு ஹைஃபை விஷயத்துக்காகவே அவன் மேல் ஒரு கிரேஸ் ஏற்படுவது இந்தக்கால காதலின் யதார்த்தம். என்னைப்பொறுத்தவரை இந்த இரண்டு ஹீரோயின்களை விட, ஆர்த்தியின் தோழியாக வரும் ஷ்வேதா... செம அழகு....சில காட்சிகளே வந்தாலும் இந்தப்பெண் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறாள்.

கையில் மொபைல் வைத்திருப்பவர்தான் ஷ்வேதா
சின்னசாமியாக வரும் அந்த கூத்துக்கலைஞன் சிறுவன்.. இன்னொருமொரு பிரமாதமான கண்டுப்பிடிப்பு. பெண்ணாக வேஷமிட்டு ஆடிக்காட்டுவதும், வேலுவின் கூடவே பஞ்ச் அடித்தபடியே திரிவதும் என கிடைத்த இடங்களில் எல்லாம் சிக்ஸராக வெளுத்துக்கட்டுகிறான். அவனது கிராமத்து ஸ்லாங் ப்ளஸ் பாயிண்ட்..

தினேஷாக வரும் மிதுன், ஒரு பெண்ணை எப்படி மடக்கி பிராக்கெட் போட வேண்டும் என்ற இலக்கணத்தை மிக அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார். அவனைப்பார்த்தவுடன் ரசிக்கவும். அதே சமயத்தில் நமக்கு கோவத்தையும் ஒரு சேர ஏற்படுத்தும் படியான முகவெட்டு அந்தப்பையனுக்கு... முதல்காட்டியில் அவன் ஆர்த்தியிடம் கேட்கும் ஆசிட் சம்மந்தமான டவுட்தான் படத்தின் பின்பாதியில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது யாருமே எதிர்பாராத ஒன்று. பணகார பையன்கள் நண்பர்கள் வட்டாரத்தில் தங்களை பெருமைப்படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை செவிட்டில் அறையுமாறு சொல்லி இருக்கிறார்கள். தன்னுடைய மொபைலில் ஆர்த்தியின் நம்பரை ஐட்டம் என்று ஸ்டோர் செய்திருப்பது செம..

குமரவேலாக வரும் இன்ஸ்பெக்டர், ஆரம்பத்தில் நல்லவர் போலவே தோன்றினாலும் போகப்போக வில்லத்தனம் கலந்த்தாக மாறிவிடுகிறது இது ஒன்றும் சினிமாத்தனம் இல்ல, எல்லா போலீஸார்களும் இப்படித்தான் கேஸை க்ளோஸ் செய்கிறார்கள் என்பது உண்மைதான். (சமீபத்தில் பணத்திற்காக இப்படிப்பட்ட ஒரு மோசமான போலீஸாரை சந்தித்த அனுபவம் எனக்கும் உண்டு). ஆர்த்தி அவரிடம் சில உண்மைகளை சொல்லும் போது, அவர் வாய்ஸ் ரெக்கார்டிங் பட்டனை ஆன் செய்வது, தினேஷை தண்ணி குடிக்க வைத்து அவன் கைரேகையை எடுப்பது, மஃப்டியில் போய் வேலுவை அரெஸ்ட் செய்ய சொல்வது, வேலுவை காதலை சொல்லி பிரெய்ன் வாஷ் செய்வது, ஜெயலக்‌ஷ்மியை அவாய்ட் செய்ய ஸ்டேஷனில் நுழைந்த உடன் ஏகப்பட்ட கெடுபிடி செய்வது, இறுதியில் ஜெயலக்‌ஷ்மியிடன் வேறு சில காரியத்துக்காக பிட் போடுவது என மனிதர் கலக்கி இருக்கிறார். இவருக்கு ஏற்படும் முடிவில் ஒருசேர ஒட்டுமொத்த தியேட்டரும் கைத்தட்டியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தேவைதாண்டா உனக்கு....

ஷார்ப்பான வசனங்கள், டீட்டெய்லிங் திரைக்கதை, ஒவ்வொரு காட்சியையும் இணைத்திருக்கும் லிங்க், கதாபாத்திரத்திற்கான பின்புல மெனக்கெடல் என பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாலாஜி சக்திவேல். இரண்டு வருடம் கழித்து படம் கொடுத்தாலும், இன்னும் இருபது வருடம் கழித்தும் பேசும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். 

கேனான் 7 டி கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். இது ஒரு பிரமாதமான முயற்சி. இனிவரும் காலத்தில் நிறையப்பேர் இதுபோல் பல முயற்சிகளை செய்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. முதல்பாதி முக்கால்வாசி ஸ்க்ரீனும், இரண்டாம் பாதியில் அதைவிட இன்னும் கொஞ்சம் அதிக அளவில் வைட் செயதிருக்கிறார்கள். இது போல டெக்னிக்கலாக இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். ஆனாலும் எந்தக்குறையும் யோசிக்கவிடாமல் படம் நம்மை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.

வாத்தியக்கருவிகளே இல்லாமல், வெறும் குரல்களை வைத்தே பாடல்களை கம்போஸ் செய்திருப்பது பாராட்டுக்குரிய முயற்சி, (பட்ஜெட் குறைப்பு?)

தமிழ்சினிமா தன்னுடைய வழக்கமான க்ளிஷே ஆடையை தூக்கியெறிந்து வருகிறது என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். தியேட்டரில் சென்று பாருங்கள் ஒரு வித்தியாசமான அனுபவம் உங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது...


39 comments:

மோகன் குமார் said...

மிக ரசித்து எழுதி உள்ளீர்கள். அருமை

இன்று பார்க்க போகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாலாஜி சக்திவேல் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இயக்குனர்களில் ஒருவர் என்று நிரூபித்துவிட்டார்.

மதுமதி said...

விமர்சனத்தை அழகாக எழுதியுள்ளீர்கள்..சிறப்பு.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பணத்துக்காக எடுக்காமல் மக்கள் மனத்தை தொட படம் எடுக்கும் சிலரில் பாலாஜி முதலாமானவர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

கண்டபடி E-Mail அனுப்பி தொல்லை செய்பவர்களை தடுப்பது எப்படி ?

சி.பி.செந்தில்குமார் said...

>>என்னைப்பொறுத்தவரை இந்த இரண்டு ஹீரோயின்களை விட, ஆர்த்தியின் தோழியாக வரும் ஷ்வேதா... செம அழகு....சில காட்சிகளே வந்தாலும் இந்தப்பெண் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறாள்.

ஹி ஹி ஹி சேம் பிளட்

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//மோகன் குமார் said...
மிக ரசித்து எழுதி உள்ளீர்கள். அருமை
இன்று பார்க்க போகிறேன்//

நன்றி மோகன் குமார். கட்டாயம் பாருங்கள்..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாலாஜி சக்திவேல் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இயக்குனர்களில் ஒருவர் என்று நிரூபித்துவிட்டார். //

நன்றி தலைவா.. படம் எப்படி இருந்துச்சின்னு சொல்லவே இல்லையே..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// மதுமதி said...
விமர்சனத்தை அழகாக எழுதியுள்ளீர்கள்..சிறப்பு.//

நன்றி மதுமதி.. தொடர்ந்து படியுங்கள்..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
பணத்துக்காக எடுக்காமல் மக்கள் மனத்தை தொட படம் எடுக்கும் சிலரில் பாலாஜி முதலாமானவர் //

உண்மைதான் நண்பா... மிக்க நன்றி

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// சி.பி.செந்தில்குமார் said...

>>என்னைப்பொறுத்தவரை இந்த இரண்டு ஹீரோயின்களை விட, ஆர்த்தியின் தோழியாக வரும் ஷ்வேதா... செம அழகு....சில காட்சிகளே வந்தாலும் இந்தப்பெண் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறாள்.

ஹி ஹி ஹி சேம் பிளட்//

ஹி..ஹி.. அதே தானுங்கோ..

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் மச்சி,
சினிமா உலகமே திடீர் என்று திரும்பி பார்த்து ஆச்சர்யபடும் படியான படங்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வருகின்றன.அப்படி ரொம்ப நாளைக்கு பிறகு சினிமா உலகமே திரும்பி பார்த்து சல்யூட் அடிக்க வைத்து வரலாறு படைத்திருக்கும் படம் தான் இந்த வழக்கு எண் 18/9.என்ன படம் மச்சி வாய்ப்பே இல்ல டா.இப்படியும் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு நானே கேள்வி கேட்டு கொண்டேன் படம் முடிந்து வெளியில் வரும் போது.தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டதா வேண்டிய படம்.நிச்சயம் கொண்டாடும்.எத்தனை நாள் ஆய்டுச்சி இப்படி ஒரு படம் பார்த்து.தமிழ் சினிமா சிகரத்த நோக்கி இல்ல வானத்தை நோக்கி போயிட்டு இருக்குன்னு மட்டும் நல்லாவே தெரியுது.

பாலாஜி சார் என்ன மனுஷன் பா.இன்னக்கி இருக்குற 85% இயக்குனர்கள் அவர் கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.ஒரு நாள் பாலாஜி சார் அவங்களுக்கு கிளாஸ் எடுத்தா கூட நல்லா தான் இருக்கும்.ஒரு பேட்டியில் சமுத்திர கனி சார், பாலாஜி சார கட்டி பிடிச்சி,முத்தம் கொடுத்து,ஐ லவ் யு ன்னு சொன்னாரு.நானும் ஒரு தடவை அவரை அப்படி பண்ணனும்.இதை விட அவரை எப்படி பாரட்டுரதுன்னு தெரியல.2 வருஷம் என்ன இன்னும் கூட டைம் எடுத்துக்கலாம் அடுத்த படமும் இப்படி தமிழ் சினிமா உள்ள வரை மறக்க முடியாத படத்த தரதுக்காக.என் மனதுக்கு பிடித்த ஒரு சில இயக்குனர்கள் பட்டியலில் பாலாஜி சாரும் இடம் பிடிச்சிடாரு.நிச்சயம் விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கி குவிக்கும் இந்த வழக்கு எண்.

வேலு,இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம்.வாழ்ந்து இருக்கிறார்.பல பேருக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைத்தும் வீணடித்து விடுகிறார்கள் அப்படி ஏதும் செய்யாமல் இருந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார்.எனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் ஆர்த்தி தான்.நல்லா அழகு.அவங்க முகத்தில் கட்டுற எல்ல பாவனைகளும் அவ்வளவு அழகு.நல்லா தேர்வு.அந்த சின்னபையன் சின்ன சாமி அப்பாடா இந்த வயசுல இப்படி ஒரு நடிப்பா.வியக்க வைக்குறாரு.வில்லனாக வரும் அந்த பையன்.இன்னொரு ஹீரோயின் ஜோதி.இன்ஸ்பெக்டர்,அந்த விபச்சாரம் செய்யும் பெண்,ஜோதியின் அம்மா,ஆர்த்தியின் அம்மா இன்னும் படத்தில் நடித்த அனைவரும் வாழ்ந்து இருக்கிறார்கள்.

அந்த விபசாரம் செய்யும் பெண் வேலுவிடம் காசு வாங்கி கொண்டு திரும்பி நடந்து செல்லும் போது அவர் குடியையும்,அந்த விபசார தொழிலையும் விட்டு விட்டார் என்பதற்கு கட்டும் சிம்பாலிக் சூப்பர்.இன்னும் நிறைய இடங்கள் இருக்கிறது இப்படி சொல்லி கொண்டே போக.

விஜய் மில்டன் படத்தின் முக்கியமான தூண்.கலக்கி இருகாரு.ஸ்டில் கேமராவ வெச்சி இப்படி சூப்பரா பின்னி இருக்காறு.பிரசன்னா ஐவரும் பக்காவா தன்னோட வேலைய செஞ்சி இருகாரு.இருவருக்குமே விருது நிச்சயம்.2 பாடல் தான் என்றாலும் மனசுல நிக்குது.

கடைசி அரை மணி நேரம் கண்கலங்கி தான் போய்டேன்.படம் முடிந்ததும் ஒட்டு மொத்த தேட்டரே சொல்லி வெச்ச மாரி எந்திரிச்சி நின்னு கைதட்டி நான் பார்த்தது இது இரண்டாவது தடவை.

கலக்கிட்ட மச்சி.நீ எத்தனையோ விமர்சனம் எழுதி இருந்த கூட இது எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ மாதிரி தான்.எண் மனசுல நா என்னவெல்லாம் நினச்சி இருந்தேனோ அதை எல்லாம் அப்படியே எழுதி இருக்க.வாழ்த்துக்கள் மச்சி.தொடர்ந்து எழுது டா இந்த மாரி விமர்சனங்கள தான் உன் கிட்ட நான் மட்டும் இல்ல எல்லாருமே எதிர் பாக்குறோம்.என்ன நண்பர்களே நான் சொல்றது சரி தானே?...

Sridhar Srinivasan said...

//இரண்டு ஹீரோயின்களை விட, ஆர்த்தியின் தோழியாக வரும் ஷ்வேதா... செம அழகு....சில காட்சிகளே வந்தாலும் இந்தப்பெண் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கிறாள்.// இதை டிரெய்லரிலேயே கவனித்தேன். ஷ்வேதாவையும் கூடிய விரைவில் கதாநாயகியாகப் பார்க்கலாம்! நாளை படம் பார்க்கப் போகின்றேன். பெயரிலும், டிரைய்லரிலுமே வித்தியாசம் தெரிந்தது. கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத படம் என்று!

விஷ்ணு said...

நீங்க பிஸியா இருக்கிற நேரத்துல கூட இந்த படத்துக்காக விமர்சனம் எழுதிருகிங்க... அதுக்கே நெறிய பாரட்டுனும் உங்கள ....
ஒரு படத்துல ஒவ்வொரு காட்சியும் தேவை இல்லாம இருக்க கூடாதுன்னு சொல்லுறதுக்கும் ...அதே மாதிரி ஒவ்வொரு சீன்ல வரும் பொருளும் சம்பந்தமில்லாமல் நா வைக்கல அப்படின்னு சொல்ல கூடிய ஒரு படம்...
எனக்கு அந்த சின்ன பையன் நடிச்சது ரொன்ப புடிச்சுது, அதுவும் அவன் தாவணி போட்டு ஆடுற டான்ஸ் உண்மைலேயே நா அதிகமாவே ரசிச்சேன் ....
ஸ்வேதா போட்டோ உங்களுக்கு எப்படி கிடச்சுது ? நா தேடிபார்த்தேன் கிடைகல அவங்க போட்டோ ..அந்த படத்துல அவங்கதான் அழகா இருபாங்க ..

சே. குமார் said...

தமிழ்சினிமா தன்னுடைய வழக்கமான க்ளிஷே ஆடையை தூக்கியெறிந்து வருகிறது என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம்.

நல்ல விமர்சனம்...

பார்க்க வேண்டிய படம்.

சே. குமார் said...

தமிழ்சினிமா தன்னுடைய வழக்கமான க்ளிஷே ஆடையை தூக்கியெறிந்து வருகிறது என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம்.

நல்ல விமர்சனம்...

பார்க்க வேண்டிய படம்.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ ஸ்வீட் ராஸ்கல் said...
நன்றி நண்பா,, உன்னுடைய கமெண்ட்டே ஒரு பதிவு அளவிற்கு இருக்கிறது.. நைஸ்..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ Sridhar Srinivasan
கண்டிப்பா ஷ்வேதா ஹீரோயின் ஆனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல..ஹி,.ஹி.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ விஷ்ணு...

உங்களது நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பா... தொடர்ந்து படியுங்கள். ஷ்வேதா ஃபோட்டோ செம அழகா இருக்கு இல்ல.. ஹி..ஹி..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ சே. குமார்...

உண்மைதான் நண்பா,, மிக்க நன்றி..

ஹாலிவுட்ரசிகன் said...

படத்திற்கு பாராட்டு மேல் பாராட்டா குவியுது. சீக்கிரம் பார்க்க முயற்சிக்கிறேன்.

அழகான விமர்சனம். நன்றி.

jenosh jeyam said...

உண்மையாவா சொல்றீங்க? கேனான் 7 டி கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்???

ஸ்ரீராம். said...

இது மாதிரிப் படங்களையும் பொழுது போக்கு லிஸ்ட்டில் சேர்த்து விட்டு மக்கள் மறந்து விடுவார்கள்! பாடம் எதாவது கற்றுக் கொள்வார்கள் என்கிறீர்கள்...?

Nisha Prince said...

ungal vimarsanatthai paditha piragu enakkum padam paarka vendum pol ullathu.

ஆரூர் மூனா செந்தில் said...

உண்மையில் அருமையான விமர்சனம். என்ன நான் தான் எப்பொழுதும் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் விமர்சனம் எழுதுவேன், வேலைப் பளு காரணமாக தற்போது முதல் காட்சிக்கு செல்ல முடிவதில்லை.

சூப்பர் மணிகண்டவேல்.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// ஹாலிவுட்ரசிகன் said...
படத்திற்கு பாராட்டு மேல் பாராட்டா குவியுது. சீக்கிரம் பார்க்க முயற்சிக்கிறேன்.
அழகான விமர்சனம். நன்றி. //

பாருங்க நண்பா.. அருமையான படம்

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//jenosh jeyam said...

உண்மையாவா சொல்றீங்க? கேனான் 7 டி கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்???//

ஆமாங்க.. உண்மைதான்.. படத்தை பார்த்தால் நம்பவே முடியவில்லை. குவாலிட்டி அள்ளுகிறது

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//ஸ்ரீராம். said...
இது மாதிரிப் படங்களையும் பொழுது போக்கு லிஸ்ட்டில் சேர்த்து விட்டு மக்கள் மறந்து விடுவார்கள்! பாடம் எதாவது கற்றுக் கொள்வார்கள் என்கிறீர்கள் //

யாராவது ஒருத்தருக்கு ஒரு மனமாற்றம் வந்தாலே போதும்.. அதுவே பெரிய வெற்றிதான்..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//Nisha Prince said...

ungal vimarsanatthai paditha piragu enakkum padam paarka vendum pol ullathu.//

நல்ல படம்.... கண்டிப்பா பாருங்க..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//ஆரூர் மூனா செந்தில் said...
உண்மையில் அருமையான விமர்சனம். என்ன நான் தான் எப்பொழுதும் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் விமர்சனம் எழுதுவேன், வேலைப் பளு காரணமாக தற்போது முதல் காட்சிக்கு செல்ல முடிவதில்லை.
சூப்பர் மணிகண்டவேல்.//


நிறையப்படங்கள் விமர்சனத்தை முதல் முதலில் உங்கள் தளத்தில்தான் படித்திருக்கிறேன்..அந்த வேகத்தை விட்டுவிடாதீர்கள்.. தொடருங்கள் நண்பரே,, மிக்க நன்றி

இந்திரா said...

விமர்சனம் வழக்கமான மணி சார் டச்..
அந்தந்த துறையில் இருப்பவர்களால் கண்டறிப்படும் தனிப்பட்ட நுணுக்கங்கள் உங்கள் விமர்சனத்தில் பளிச்சிடுகின்றன.
பாராட்டுக்கள்.

இந்திரா said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
எந்ன விமர்சனங்களையும் படிக்காமல் நேரடியாகப் படம் பார்க்க வேண்டும் என்றிருந்தேன். தங்களுடைய எழுத்துக்களின் ரசிகை என்ற முறையில் அதை என்னால் கடைபிடிக்க முடியவில்லை. (ஆர்வக்கோளாறு)

இந்திரா said...

நடு நடுவே இந்தப் பக்கம் வரஇயலவில்லை. அதனால் உங்கள் டிஸ்ப்ளே போட்டோவைப் பார்த்தபோது சிபிசெந்தில் சாருடையதோ என்று நினைத்துவிட்டேன். (ஹிஹி)
ஆளே மாறிப்போய்ட்டீங்களே.. நாட்களின் நகர்தல்களாலோ???

இந்திரா said...

அப்புறம் ஸ்வீட் ராஸ்கல் சார்.. நலமா? உங்களோட ஹாய் மச்சி“னு ஆரம்பிக்கும் பின்னூட்டமே தனி மகிழ்ச்சி தான்.
நண்பர் மணிக்கு உங்களுடைய பாராட்டுக்கள் ப்ரமாதம் போங்க..
:-)

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ இந்திரா

ஆஹா... இந்திரா மேடம் கலாய்ச்சிட்டீங்க பார்த்தீங்களா? ஓகே ஒகே.. புரஃபைல் இமேஜ் மாத்திடுறேன்.. உங்களுடைய பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.. அடிக்கடி நம்ம ஏரியா பக்கமும் தலை காட்டுங்க மேடம்..

சிவகுமாரன் said...

உங்கள் விமர்சனமும் , ஸ்வீட் ராஸ்கலின் பின்னூட்டமும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விட்டன. பகிர்வுக்கு நன்றி

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ சிவகுமாரன் said...
மிக்க நன்றி நண்பரே.. கண்டிப்பாக படம் பாருங்கள்..

Tamilraja k said...

கவிதைக் காதலன் அவர்களே முதல் நாளே படம் பார்த்தாயிற்று. படம் விமர்சனம் என்ன சொல்வது அருமை.
இருப்பினும் நான் உங்கள் வலைப்பூவில் தேடுவது கவிதைகளை... உங்கள் கவிதைகளுக்கும் விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெள் தெரிகிறதே
ஏன் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டீர்களா நண்பா...?

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.

இதையும் படியுங்கள்