Tuesday, April 10, 2012

குஸாரிஷ் இந்தி சினிமா விமர்சனம்


 
ஒரு நிகழ்வை யோசித்துப்பாருங்கள். உங்களுக்கு கழுத்துக்கு கிழே எந்த ஒரு பாகமும் இயங்காத நிலையில், ஒரு நாற்காலியிலோ அல்லது படுக்கையிலே மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? வாழ்க்கையே வெறுத்துப் போய்விடாதா? யெஸ்.. அப்படிப்பட்ட ஒருவனின் கதைதான் இந்த குஸாரிஷ்.  

மேஜிக் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் ஈதன் மஸ்கர்னெஸ் (ஹ்ரித்திக் ரோஷன்) அவனது ஷோக்கள் எல்லாம் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. ஹ்ரித்திக்கின் பேரையும் புகழையும் பார்த்து பொறாமைப்படும் அவன் நண்பன் யாசீர் சித்திக், ஹ்ரித்திக்கின் ஷோவை குலைக்க சதி செய்கிறான்.  அவனது சதி வலையால், ஹ்ரித்திக் ஷோ செய்யும் போது மேலிருந்து கீழே விழுகிறான். கீழே விழும் போது அவனது தலை நேராக தண்ணீர் தொட்டியின் அடிப்பாகத்தில் சென்று முட்டுகிறது. அவனது மூளையின் அத்தனை செயல்களும் ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது. அவனுக்கு டெட்ராப்ளேஜியா என்னும் நோய் எற்பட்டுவிடுகிறது. அதாவது தலை மட்டும்தான் அசையும்.. மற்ற உறுப்புகளை அவனால் அசைக்க முடியாது என்ற நிலைக்கு ஆட்பட்டுவிடுகிறான். அவனது வாழ்க்கை ஒரு வீல் சேரிலேயே முடங்கிப்போகிறது. 

12 வருடங்களாக அவன் இந்த மோசமான நிலைமையிலேயேதான் வாழ்கிறான். அவனை இந்த 12 ஆண்டுகளாக மிக கவனமாக பாதுகாத்து, சேவைகள் செய்யும் நர்ஸாக் சோஃபியா (ஐஸ்வர்யாராய்). அவனால் இயங்கமுடியாவிட்டாலும் அவன் சோர்ந்து போய்விடவில்லை. தன் வீட்டில் இருந்தபடியே ஒரு எஃப்.எம் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறான். ஸ்டேஜில் நிகழ்த்த முடியாத மேஜிக்கை, பலரின் வாழ்க்கையில் தன் மந்திர பேச்சால் நிகழ்த்துகிறான். தற்கொலைக்கு முயலும் நபரைக்கூட தன்னுடைய பேச்சால் மாற்றுகிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு இந்த வாழ்வு போரடிக்கிறது.

கழுத்துக்கு கீழே எந்த பாகமும் இயங்காத தன் வாழ்க்கையின் கொடூரத்தை எண்ணி, அரசாங்கத்திடம் கருணைக்கொலைக்கு விண்ணப்பிக்கிறான். அவனுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதா? அவன் தன் முடிவை மாற்றிக்கொண்டானா? அவனுக்கு 12 வருடங்களாக சேவை செய்துவந்த ஐஸ்வர்யா இவனது முடிவால் எப்படி அதிர்ச்சியுற்றாள்? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த கண்ணீர் காவியம் விடையளிக்கும்.


 
படத்தின் துவக்கத்தில் ஹ்ரித்திக்ரோஷனின் மூக்கில் ஒரு ஈ வந்து அமர்கிறது. ஆனால் அந்த ஈயைக்கூட அவனால் துரத்த முடியவில்லை. தன் தலையை லேசாக அசைத்தும், முகத்தை சுருக்கியும் என்னென்னவோ செய்தும் அவனால் அந்த ஈயை விரட்ட முடியவில்லை. ஏனெனில் அவனது கழுத்துக்கு கீழே எந்த பாகமும் வேலை செய்யாது. ஒருவித இரிட்டேட்டிங் மனநிலைக்கு பிறகு, அவன் அந்த ஈயை விரட்ட முடியாமல், அதனின் தொல்லையுடனே அமைதியாகிறான். ஹ்ரித்திக்ரோஷனின் நிலைமையை புரியவைக்க இதனைவிட ஒரு அருமையான காட்சி அமைக்கவே முடியாது. சிம்ப்ளி சூப்பர்ப்.

ஹ்ரித்திக்கை படுக்க வைத்துவிட்டு அனைவரும் சென்றுவிட்ட பின், ஒரு மழைநாளில் வீட்டின் மேற்கூரையில் இருந்து மழை, ஒவ்வொரு சொட்டாக ஹ்ரித்திக்கின் நடு நெற்றியில் விழுகிறது. லேசாய் பெய்யும் மழை ஒரு கட்டத்தில் பேய் மழையாக உருவெடுக்கிறது. தலையை ஆட்டுவதைத்தவிர வேறெதையும் செய்ய முடியாத ஹ்ரித்திக் அந்த மழைத்துளிகளுடன் போராடும் காட்சி, கல் மனதையும் கரைய வைக்கும்.. என்ன சீன்’.... ச்சே... சான்ஸே இல்ல... பின்னணி இசை நம் மனதை உலுக்கி எடுத்துவிடும்.. 

ஈதனாக ஹ்ரித்திக் ரோஷன், தன்னுடைய இயலாமையை எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டு அதை மெல்லிய புன்னகையால் புறந்தள்ளியபடியே பேசும் நடிப்பு வொண்டர்ஃபுல். ஹ்ரித்திக்கிற்கு தேசியவிருது கிடைத்திருக்க வேண்டிய படம்.. ஜஸ்ட் மிஸ்.. எப்பப்பார்த்தாலும் தன்னுடைய ஜிம் பாடியை காட்டிக்கொண்டு, துள்ளலான நடனத்துடன் வலம் வரும் ஹ்ரித்திகா இது? சத்தியமாய் நம்ப முடியாது. எப்படி இந்தமாதிரி ஒரு கதாபாத்திரத்தை ஹ்ரித்திக்கிற்கு கொடுக்க முடிந்தது? அமேஸிங். தன்னுடைய வாழ்நாளில் ஹ்ரித்திக்கிற்கு இது ஒரு மைல்கல் படம். கடைசி காட்சியில் தன் நண்பர்கள் முன்னிலையில் ஹ்ரித்திக் நிகழ்த்தும் சில நிமிட பேச்சு, கேட்டும் போதே நிச்சயம் கண்ணீர் வந்துவிடும்.சோஃபியாவாக ஐஸ்வர்யாராய் பச்சன், நர்ஸ்க்கு சேவை என்பது செயலில்தான் இருக்க வேண்டுமே தவிர, பேச்சில் இருக்கக்கூடாது என்ற கேரக்டர் உடையவர். முணுக் முணுக்கென்ற கோவமும். வெடுக் வெடுக்கென்ற பார்வையுமாய் ஐஸ் உருக வைத்துவிடுவார். 12 ஆண்டுகளாக தான் சேவை செய்த ஒருவன், தன்னிடம் ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் கருணைக்கொலைக்கு விண்ணப்பித்துவிட்டான் என்றவுடன், ஒரு தாயின் மனநிலையில் ஐஸ்வர்யா பதறும் காட்சி. சூப்பர்ப்.

கருணைக்கொலை என்ற உடனே நிராகரித்து விட்ட ஜட்ஜ்க்கு, தன்னுடைய நிலைமைய ஒரு மேஜிக் மூலம் ஹ்ரித்திக் புரிவைக்கும் காட்சியில் என்னை மீறி கைத்தட்டினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஹ்ரித்திக்கிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையில் காதல் நுழைந்து வெளியேறும் தருணம் வார்த்தையால் சொல்லி புரியவைக்க முடியாது. தன்னுடைய காதலனுக்கு தான் செய்யும் சேவையில் மரணமும் ஒன்று என்பதை ஐஸ் சொல்லும் காட்சிகளுக்கு எல்லாம் வசனம் தேவையில்லை.. கவிதைகள்தான் தேவை.
ஒரு மெழுகுவர்த்தியின் தீபத்தை மட்டும் தனியாக பிரித்தெடுத்து மேஜிக் செய்யும் காட்சியில் எல்லாம் சிஜி அட்ராக்‌ஷன் ரகம். பந்தை வைத்துக்கொண்டு ஹ்ரித்திக் ஆடும் ஒரு நடனம் ப்ரில்லியண்ட் கோரியோகிராப்.

இந்தப்படத்தை எழுதி இயக்கியவர் சஞ்சய்லீலா பன்சாலி. என்னுடைய ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர். இவரின் பிளாக் திரைப்படம் பற்றி எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பிளாக் திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு வரலாறு.. அது ஒரு தனிப்பதிவாக வரும். பொதுவாக பன்சாலி நோய்களை மையமாக வைத்தே சம்பாதிக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இருந்தால் என்ன?

சில நோய்களை அறிமுகப்படுத்தும் போதுதானே, அந்த நோயாளிகள் படும் கஷ்டங்கள் நமக்கு புரியும். அவர்கள் வாழ்வு குறித்த ஒரு விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும். இதை பன்சாலி மாதிரி ஆட்கள் செய்யும் போது குறை சொல்வதை விட, தட்டிக்கொடுத்தால் இன்னும் பல நல்ல படங்கள் வரும். ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக்குவித்த இந்தப்படம் என்னுடைய ஃபேவரைட் திரைப்பட லிஸ்டில் அமைந்துவிட்டது..

ஒரு அருமையான சினிமாவை, எந்த வித கமர்ஷியல் காம்ப்ரமைஸ்களும் இல்லாமல் படமாக்கி இருப்பார்கள். சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.


18 comments:

Vairai Sathish said...

விமர்சணம் அருமை

மோகன் குமார் said...

ரொம்ப ரொம்ப அருமையாக எழுதி உள்ளீர்கள். சில காட்சிகளை விளக்கிய விதம் ரொம்ப தெளிவு.

அவசியம் ஆங்கில சப் டைட்டில்களுடன் இந்த படம் பார்த்து விட்டு நானும் இதன் விமர்சனம் எழுதுவேன். ஒரு நல்ல படம் பார்க்கவும், அது பற்றி நல்ல பதிவு எழுதவும் காரணமான உங்களுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான விமர்சனம் பாஸ். இது போன்ற படங்களை அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றி!

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// Vairai Sathish said...
விமர்சணம் அருமை //

நன்றி வைரை சதீஷ்... தொடர்ந்து படியுங்கள்.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// மோகன் குமார் said...

ரொம்ப ரொம்ப அருமையாக எழுதி உள்ளீர்கள். சில காட்சிகளை விளக்கிய விதம் ரொம்ப தெளிவு.
அவசியம் ஆங்கில சப் டைட்டில்களுடன் இந்த படம் பார்த்து விட்டு நானும் இதன் விமர்சனம் எழுதுவேன். ஒரு நல்ல படம் பார்க்கவும், அது பற்றி நல்ல பதிவு எழுதவும் காரணமான உங்களுக்கு நன்றி //

கண்டிப்பா பாருங்க மோகன்... மிக நல்ல படம்...

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான விமர்சனம் பாஸ். இது போன்ற படங்களை அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றி!//

நன்றி தலை.. அடிக்கடி வாங்க...

விஷ்ணு said...

நல்ல படம்..... நல்ல விமர்சனம் ....

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// விஷ்ணு said...
நல்ல படம்..... நல்ல விமர்சனம் //

நன்றி விஷ்ணு...

"ராஜா" said...

படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனமும் படத்தின் உள்ளடக்கமும் ... அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி

ஹாலிவுட்ரசிகன் said...

படம் ஏற்கனவே பார்த்தாச்சு. நல்ல படம். அருமையான நடிப்பு. நீங்க சொன்னது போல அந்த மழைத்துளி விழும்போது இயலாமையில் காட்டும் எக்ஸ்ப்ரஷன்ஸ் சூப்பர். நான் விரும்பி ரசித்த ஹிந்தி சினிமாக்களில் இதுவும் ஒன்று.

விமர்சனத்திற்கு நன்றி.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//"ராஜா" said...
படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனமும் படத்தின் உள்ளடக்கமும் ... அறிமுகபடுத்தியதர்க்கு நன்றி //

நன்றி ராஜா... நேரமிருந்தால் பாருங்கள்.. அருமையான படம்

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//ஹாலிவுட்ரசிகன் said...

படம் ஏற்கனவே பார்த்தாச்சு. நல்ல படம். அருமையான நடிப்பு. நீங்க சொன்னது போல அந்த மழைத்துளி விழும்போது இயலாமையில் காட்டும் எக்ஸ்ப்ரஷன்ஸ் சூப்பர். நான் விரும்பி ரசித்த ஹிந்தி சினிமாக்களில் இதுவும் ஒன்று.
விமர்சனத்திற்கு நன்றி. //

நன்றி ஹாலிவுட் ரசிகன்... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் மச்சி,

சூப்பர் படம் சூப்பர் விமர்சனம்.ஆனால் ஒரு சின்ன சந்தேகம்,சந்தேகம் என்று சொல்வதை விட ஆதங்கம் என்று கூட சொல்லலாம். ஏன் இப்படி பட்ட படங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன.ப்ளாக் படத்தையும் சேர்த்துதான் சொல்றேன்.தமிழ் சினிமா ரசிகர்கள் இதை ரசிக்க மாட்டார்கள் என்று முடிவே கட்டிவிட்டார்களா.ஏன் நாம எல்லாரும் படத்த ரசிச்சிட்டு விட்டுடாம இப்படி படத்த பத்தி எழுதி,பேசிட்டு இருக்கோமே இது மாதிரி எத்தனை பேரு ரசிச்சி இருப்பாங்க.இது வெற்றி இல்லையா.இப்படி பட்ட படங்கள் நிச்சயம் தமிழ் சினிமாவிலும் வர வேண்டும்.

நல்ல விமர்சனம் மச்சி.சூப்பரா எழுத்து இருக்க,படம் பார்க்காதவர்கள் நிச்சயம் CD வாங்கி பார்ப்பார்கள் உன் இந்த பதிவை படித்த பிறகு.ஹ்ரித்திக் ரோஷன் வாழ்ந்திருக்கிறார்.ஏன் அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது சந்தேகமாகவே இருக்கிறது.யாராவது எதாவது உள் குத்து செய்திருப்பார்களோ என்று.அப்படி ஒரு நடிப்பு.ஒரு படத்தை பார்த்தே ஹ்ரித்திக் ரோஷனின் ரசிகனாகிவிட்டேன்.வாய்ப்பே இல்லை.ஐஸ் நிஜமாகவே நடிக்கவில்லை,கதப்பதிரமகவே வாழ்ந்திருக்கிறார்.இப்படி ஒரு நடிப்பை அவரால் மட்டுமே தர முடியும்.Hats off ஐஸ்.சஞ்சய்லீலா பன்சாலி இப்படி ஒரு படைப்பலை இருப்பது ப்ளாக் படம் வரும் வரை எனக்கு தெரியவே தெரியாது.இந்தியாவின் தலை சிறந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர்.மொத்தத்தில் நான் பார்த்த மிக சிறந்த ஹிந்தி சினிமாக்களில் இதுவும் ஒன்று.

வாழ்த்துக்கள் மச்சி.கலக்கிட்ட டா.தொடர்ந்து எழுது.

ஹேமா said...

நல்ல படத்துக்கான பார்க்கத்தூண்டும் ஒரு விமர்சனம்.நன்றி உங்களுக்கு !

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ஸ்வீட் ராஸ்கல்...
நன்றி மச்சி.. தொடர்ந்து படித்து, இது போல் ஆதரவு கொடுக்கவும்..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//ஹேமா said...

நல்ல படத்துக்கான பார்க்கத்தூண்டும் ஒரு விமர்சனம்.நன்றி உங்களுக்கு //

நன்றி ஹேமா.. தொடர்ந்து படியுங்கள்

சிவகுமாரன் said...

இப்படியெல்லாம் படங்கள் வருகிறதா ? ஆச்சர்யமாக இருக்கிறது. இது போன்ற அவஸ்தையில் 10 வருடங்கள் கழித்த ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். இறைவன் படைப்பில் கொடூரங்கள் அவை.
நல்ல பகிர்வு. நன்றி.
தங்களின் படம் எப்போது?

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ சிவகுமாரன்...
நன்றி நண்பா,, இது போன்ற படங்கள் எல்லாம் அப்போதைய ரசிகர்களால் கொண்டாடப்படுவதை விட, காலத்தால் கொண்டாடப்படும்.. மிக்க நன்றி

இதையும் படியுங்கள்