Friday, March 30, 2012

வெங்காயம் அசத்தலான சூப்பர் தமிழ் சினிமா


எப்படி இந்தப்படத்தை பார்க்காமல் தவறவிட்டேன்? இன்று மட்டும் பார்க்காமல் இருந்திருப்பேனே ஆனால் தமிழின் மிகச்சிறந்த ஒரு நல்ல திரைப்படத்தை தவறவிட்டிருப்பேன். ரீ ரிலீஸ் செய்த இயக்குனர் சேரனுக்கு நன்றி.

சரி வெங்காயம் என்ன கதை? எதற்காக இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா? இது நிச்சயம் பில்டப் இல்லை. திரைப்படம் பார்த்தபின் எழுந்த உணர்வுகள் தான் இவை. சரி திரைப்படத்திற்குள் நுழைவோம்.. வெங்காயம் என்ன கதை?

ஒரு கிராமத்தில் சில சாமியார்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கடத்தப்படுகிறார்கள் என்பதற்கான காரணத்தை போலீஸ் எஸ்.ஐ. தமிழ்மணி விசாரிக்க புறப்படுகிறார். எதற்காக அந்த சாமியார்கள் கடத்தப்பட்டார்கள், யார் இவர்களை கடத்தியது என்ற கேள்விக்கெல்லாம் முகத்தில் அடித்தாற் போல் பதில் சொல்லி இருக்கிறது க்ளைமேக்ஸ்

இது பகுத்தறிவை பற்றிப்பேசும் படம், மூடநம்பிக்கைக்களைப்பற்றி பேசும் படம் என்பதைத்தவிர்த்து பார்த்தால், இது அட்டகாசமான படம் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் பாதி பார்க்கும் வரை, என்னடா இவ்வளவு மொக்கையான படத்திற்கு வந்துவிட்டோமே என்று நினைக்க வைத்தது படம். ஆனால் இடைவேளைக்கு பின், இறுதிக்காட்சி முடிந்து இருக்கையை விட்டு எழும் போது தியேட்டரில் இருந்த அத்தனை பேரும் கைத்தட்டினார்கள். நான் வலிக்க வலிக்க கை தட்டினேன்.

எனக்கு கடவுள் பக்தி என்பது நிறையவே உண்டு. ஆனால் என்னைப் போன்ற ஆட்களுக்கே படம் அபரிமிதமாய் பிடித்திருந்தது. இயக்குனருக்கு நல்ல கேமராவோ, நல்ல எடிட்டிங்கோ, நல்ல கிராஃபிக்ஸோ, நல்ல அனுபவம் வாய்ந்த நடிகர் நடிகர்களோ, நல்ல அட்டகாசமான பாடல்களோ கிடைக்கவில்லை. ஆனாலும் படம் கடைசியில் கைத்தட்ட வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் காட்டும் காதல் காட்சிகளும், க்ளோசப் காட்சிகளும் சில காட்சிகளை கன்சீவ் செய்திருந்த விதமும் என்னடா இது இன்னொரு “லத்திகா, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோவம்” வகையறாவோ என்று நினைத்திருந்தேன். ஆனால் இடைவேளைக்கு பிறகு டேக் ஆஃப் எடுக்க ஆரம்பித்த படம், கடைசி வரை தன்னுடைய வேகத்தை நிறுத்தவே இல்லை.

சில நார்மல் வார்த்தைகளைக்கூட சென்சார் அமைப்பு இந்தப்பட்த்தில் கட் செய்திருக்கிறது. ஆனால் தேவிடியாப்பையா என்ற ஒரு வார்த்தையை கட் செய்யாமல் அப்படியே விட்டு இருக்கிறது. அப்படி என்றால் அந்த வார்த்தையின் வீரியம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பதிமூன்று வயதுப்பெண் அந்த வார்த்தையை உச்சரிக்கும் போது தியேட்டரே கைதட்டி ஓய்ந்த்து.

கதாநாயகன் அலெக்ஸாண்டர், கதாநாயகி பவினா இருவரும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் சொல்வதற்கில்லை. மொக்கை திரைப்படத்திற்கான நடிகர்கள் போலவே இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை படத்துடன் ஒன்ற வைத்த்ருக்கிறார் இயக்குனர்கூத்தாடியாக வரும் எஸ். எம். மாணிக்கம் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தன்னுடைய மகனுக்காக ரோட்டில் அவர் கெஞ்சுவதும் தன்னுடைய பிழைப்பை அங்கெயே அரங்கேற்றி காட்டுவதுமாக அசத்தி இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்படும் முடிவு பாவம்.... எத்தனையோ படங்கள் நடித்தவரைப்போல இவரது எக்ஸ்பிரஷன்ல அபாரம். இவர் இயக்குனரின் அப்பாவாமே.. அட...

நமக்கே அந்த சாமியார்களைப்பார்த்தால் கொல்ல வேண்டும் என்று ஆத்திரம் வருகிறது. அதுவும் அந்த சிறுவனை நரபலி கொடுக்கும் சாமியாரை தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் என்ற அளவிற்க்கு ஆத்திரம் வருகிறது. சத்யராஜ் ஒரே ஒரு பாடலுக்கு வருகிறார். அந்த சிறுவர்களின் வாழ்க்கையில் சில பகுத்தறிவு விதைகளை விதைத்து விட்டு போகிறார். பிறகு நடப்பது எல்லாம் விதைத்த விதைகளின் போராட்டங்கள்.


படத்தின் ஹைலைட்டே அந்த மூதாட்டிதான். தன் பேரன் இறந்துவிட்டான் என்றவுடன் பைத்தியம் பிடித்து அலையும் அந்த மூதாட்டிதான் படத்தின் ஹைலைட். இறுதிக்காட்சியில் அந்த பாட்டி சொல்லும் டயலாக்கிற்கு கைத்தட்டாதவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நானே என் செலவில் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். சரியான ஸ்க்ரீன் ப்ளே Knock’ற்கு அந்த இடம் ஒரு உதாரணம்.

ஒரு திரைப்படம் பார்த்தால் அது நம்மை சிரிக்க வைக்க வேண்டும். இல்லை, அழ வைக்க வேண்டும். இல்லை, ஆத்திரம் கொள்ள வைக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல சினிமாவுக்கான உதாரணம். இந்தப்படம் பார்த்து முடித்து எழும்போது ஏதோ ஒரு வகையான ஃபீலீங்கை நமக்குள் விதைத்துப் போயிருப்பார்கள், அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றி.

சங்ககிரி ராச்குமார், இவர்தான் படத்தின் இயக்குனர். படம் பார்க்கும் போதே தெரிந்து விடுகிறது, எவ்வளவு மோசமான பட்ஜெட் நிலைமை என்பது. இருந்தாலும் அத்தனையும் மிறி ஒரு நல்ல பட்த்தை விடாப்பிடியாக கொடுக்க முயற்சித்ததற்கு நிச்சயம் பாராட்டுக்களை சொல்லியே ஆக வேண்டும். பட்ஜெட் குறை, டெக்னீஷியன் குறைபாடு, நடிகர் நடிகை சம்பளம் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போதே இப்படி ஒரு அருமையான படத்தை கொடுக்க முடியும் என்றால், இன்னும் இது எல்லாம் சரியாக அமைந்துவிட்டால்? தமிழ்சினிமாவின் ஒரு நம்பிக்கை இயக்குனர் வரிசையில் சங்ககிரி ராச்குமார் நிச்சயம் இடம்பிடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரே படத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு.

சாமியார்களை கடத்தும் அந்த சிறுவர் சிறுமியும், க்ளைமேக்ஸில் அவர்கள் பேசும் வசனமும்தான் படத்தை தாங்கிப்பிடித்து நிற்க வைக்கும் தூண்கள். இந்த பட்ஜெட்டிலேயே, ஒரு காரை ஆக்ஸிடெண்டில் மாட்டியபடி இருக்கும் காட்சியை கம்போஸ் செய்திருக்கும் விதம் ”அட” போட வைக்கும் திறமை. லைட்டா ”மைனா”வை நியாபகப்படுத்தினாலும், இது வேற விதம்

நல்ல பப்ளிசிட்டி இருந்திருந்தால் நிச்சயம் இந்தப்படம் பல்வேறு நிலைகளை கடந்திருக்கும். நல்ல வெற்றியும் பெற்றிருக்கும். ஆனால் ப்ப்ளிசிட்டிக்கு ஆகும் செலவில் இந்த இயக்குனர் இன்னும் இரண்டு படம் எடுத்திருப்பர். முரணான உண்மை. ஒருவரை ஒருவர் காலைவாரிவிடும் பச்சோந்திகள் நிறைய இருக்கும் திரைத்துறையில், திறமை வாய்ந்த ஒருவரை கைதூக்கி விடும் நோக்கில் எப்படியாவது இந்தப்படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் சேரன் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் தான்.

ஹாட்ஸ் ஆஃப் சேரன்.

ஹாட்ஸ் ஆஃப் சங்ககிரி ராச்குமார்


உங்களது அடுத்த திரைப்படத்தை வெகுவாக எதிர்பார்க்கிறேன்..


24 comments:

Anonymous said...

நல்ல படம்...நல்ல கூட்டணி...இன்னும் பிரபலமாக்கியிருக்கலாமோ...

ஹேமா said...

வியஜ் தொலைக்காட்சியில் சேரன் கலந்துகொண்ட இந்தப்பட நிகழ்வொன்றைப் பார்த்தேன்.நல்ல படமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது !

ஆரூர் மூனா செந்தில் said...

அருமையான விமர்சனம் மணிகண்டவேல், எனக்குள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள்.

Arif .A said...

விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக இப்படத்தை பார்க்க போகிறேன்

sathish krish said...

அருமையான விமர்சணம்....

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம விமர்சனம் பாஸ்....!

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// Blogger ரெவெரி said...
நல்ல படம்...நல்ல கூட்டணி...இன்னும் பிரபலமாக்கியிருக்கலாமோ...///
கண்டிப்பா.. பிரபலப்படுத்தி இருந்தா இன்னும் நன்றாய் ஓடியிருக்கும்...

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//ஹேமா said...

வியஜ் தொலைக்காட்சியில் சேரன் கலந்துகொண்ட இந்தப்பட நிகழ்வொன்றைப் பார்த்தேன்.நல்ல படமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது !//

நிச்சயமாய் நல்ல படம்தான் தோழி

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//ஆரூர் மூனா செந்தில் said...

அருமையான விமர்சனம் மணிகண்டவேல், எனக்குள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டீர்கள் //

நல்ல படம்.. கண்டிப்பா பாருங்கள் செந்தில்

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//Arif .A said...

விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக இப்படத்தை பார்க்க போகிறேன் //

அட.. அப்படி இல்லைங்க.. உண்மையிலேயே படம் ரசிக்க வைத்தது

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// sathish krish said...

அருமையான விமர்சணம்....
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க /

நன்றி சதீஷ்.. வந்துட்டா போச்சு..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

செம விமர்சனம் பாஸ்....!//

நன்றி தலைவா..

விஷ்ணு said...

"Nalla movie parthen machi".... appatinu solla kutiya movie la ithuvum onnu sir ....

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//
விஷ்ணு said...
"Nalla movie parthen machi".... appatinu solla kutiya movie la ithuvum onnu sir ....//

ஆமாம் மச்சி... ரொம்ப நல்ல படம்

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் கவிதை காதலன் சார்.

உண்மையிலேயே தமிழ் சினிமா மார்தட்டி கொண்டு கர்வமாக நிற்கும் அளவுக்கு ஒரு படம் இந்த வெங்காயம்.படத்த பத்தி நினச்சிட்டு போன அத்தனை விஷயங்களும் இறுதியில் படம் முடிந்து வெளியில் வரும் போது தவிடு பொடி ஆய்டுச்சி.நிச்சயம் எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும்.தயவு செஞ்சி இந்த படத்த 100 நாள் ஓட்டனும்.என்ன என்ன படமோ 100 நாள் 200 நாள் ஓடுது.இந்த படம் நிச்சயமா ஓடனும்.எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்.

நான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்ட கமெண்ட்ஸ்ல ஒரு சில படங்கள் ஹிந்தியில் மட்டுமே சாத்தியம் என்று சொன்னேன்.அது போல் தான் இந்த மாதிரியான படங்கள் தமிழில் மட்டுமே சாத்தியம்.சங்ககிரி ராஜ்குமார் தமிழ் சினிமாவின் சிற்பி.அவருக்கு நிச்சயம் பெரிய எதிர்காலம் இருக்கு.பட்ஜெட் இல்லாமலே இப்படி என்றால் இன்னும் பட்ஜெட்டும் நல்ல நல்ல நடிகர்களும் கொடுத்தால் நிச்சயம் தமிழ் சினிமாவை இன்னொருமுறை இந்தியா முழுக்க அறிய செய்வார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.எஸ். எம். மாணிக்கம் சார் தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு நல்ல நடிகன் கிடைதிருகிறார்.ரொம்ப ரொம்ப சந்தோஷம்.அந்த 4 சிறுவர்கள் தான் படத்தின் உண்மையான ஹீரோஸ்.கலக்கி இருகாங்க.இனிமேல் நிறைய தமிழ் படங்களில் இவர்களை பார்க்கலாம்.அதிலும் அந்த பெண்.அப்பா இந்த சின்ன வயசுல இப்படி ஒரு நடிப்பா.வாய்ப்பே இல்ல.

இந்த படத்தை பற்றி நீங்க விமர்சனம் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மச்சி.கலக்கிட்ட.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது.

ராஜி said...

உங்க விமர்சனத்தை பார்த்ததும் எனக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது. பகிர்வுக்கு நன்றி

இந்திரா said...

என்னது.. இந்தப் படத்தோட பேர் வெங்காயமா??? இத்தனை நாள் “காயம்“னு நெனச்சுகிட்டு இருந்தேன்.. அவ்வ்வ்வ்..

இந்திரா said...

//ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் கவிதை காதலன் சார்//


ஸ்வீட் ராஸ்கல் சார்... என்ன மரியாதையெல்லாம் பலமா இருக்கு???
உங்க வழக்கமான டச் இல்லையே...
“ஹாய் மச்சி“னு தானே ஆரம்பிப்பீங்க..
என்னாச்சுப்பா??

ஸ்வீட் ராஸ்கல் said...

//இந்திராSaid...

ஸ்வீட் ராஸ்கல் சார்... என்ன மரியாதையெல்லாம் பலமா இருக்கு???
உங்க வழக்கமான டச் இல்லையே...
“ஹாய் மச்சி“னு தானே ஆரம்பிப்பீங்க..
என்னாச்சுப்பா??//

ஹாய் இந்திரா அக்கா,
எப்படி இருக்கீங்க.விஷயத்துக்கு வரேன். சும்மா தான் அக்கா சார் அப்படின்னு கூப்பிட்டு பார்த்தேன்.விடுங்க அடுத்த பதிவுல வழக்கம் போல வந்துடுறேன்.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ ஸ்வீட் ராஸ்கல்....
நன்றி நண்பரே... உங்கள் கருத்து எப்பவுமே டாப் தான்... வருகைக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// ராஜி said...
உங்க விமர்சனத்தை பார்த்ததும் எனக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது. பகிர்வுக்கு நன்றி //

நன்றி ராஜி.. கண்டிப்பா பாருங்க.. நல்ல படம்

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// இந்திரா said...//
ஆமா இந்திரா மேடம்... முதல் ரிலீஸ்ல இந்தப்படத்துக்கு வெங்காயம்ன்னு தான் பேரு வெச்சாங்க.. ஆனா நியூமராலஜிபடி காயம்ன்னு மாத்திட்டாங்களோ என்னவோ? ஹி.. ஹி..

சிவகுமாரன் said...

விமர்சனம் - படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. நன்றி

Armstrong Vijay said...

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். உங்கள் விமர்சனத்தை என் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.

இதையும் படியுங்கள்