Tuesday, March 27, 2012

ட்ராஃபிக் - மலையாளத் திரைப்படம் விமர்சனம்


தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன் - புஷ்பாஞ்சலி. இவர்களின் மூத்த மகன் ஹிதேந்திரன். ஒரு நாள் சாலை விபத்தில் ஹிதேந்திரன் தலையில் அடிபட, அவனால் செயல்பட முடியாமல் மூளைச்சாவு ஏற்பட்டது. உடனே அவனது பெற்றோர்கள் பெரும் தியாக மனதுடன் அவனது உறுப்புக்களை தானமாக கொடுக்க முன் வந்தனர்.  அப்போது பெங்களூரைச் சேர்ந்த அபிராமி என்ற 9 வயது சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தை தானமாக கொடுக்க முடிவெடுத்தனர். ஹிதேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்ததோ தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை.

அபிராமியோ டாக்டர் செரியனின் முகப்பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். ஹிதேந்திரனின் இதயத்தை எடுத்த உடன் அரைமணி நேரத்தில் அது பொருத்தப்பட வேண்டும். ஆனால் அரைமணி நேர இடைவெளியில் எப்படி தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேர் வரை கொண்டு செல்வது. இடையே ஏகப்பட்ட டிராஃபிக் ஜாம் இருக்குமே? போக்குவரத்து தடை ஏற்படுமே? என்று பலவாறாக யோசித்த மருத்துவர்கள் போலீஸ் துறைய நாடினார்கள். போலீஸார் டிராஃபிக்கை வெகுவாக் கட்டுப்படுத்தி, பத்து நிமிடத்திற்குள் ஹிதேந்திரனின் இதயம் மருத்துவமனையை அடையும்படி செய்தார்கள் மக்களும் இதற்கு பெருமளவில் உதவினார்கள். போலீஸாரை எல்லா மக்களும் வெகுவாக புகழ்ந்தார்கள்.

இந்த ஒரு அசாதாரணமான, மனதை நெகிழ வைத்த நிகழ்வைத்தான் மலையாளப்படமான டிராஃபிக்கில் கதைக்களனாக்கி இருந்தார்கள்செப்டம்பர் 16ந் தேதி... அன்றைய நாளில், மலையாள சினிமாவின் மிகப்பெரிய நடிகரான ஷங்கர் (ரஹ்மான்), தன்னுடைய புதுப்படத்தின் ரிலீஸுக்காக கிளம்பிக்கொண்டு இருக்கிறார். டிராஃபிக் கான்ஸ்டேபிள் சுதேவன் (ஸ்ரீனிவாசன்), லஞ்சம் வாங்கிய குற்றத்தில் இருந்து மீண்டு பணிக்கு திரும்புகிறார். டாக்டர் ஏபேல் (குஞ்சாகோபன்) தன்னுடைய திருமண நாளை ஒட்டி சந்தோஷத்தில் இருக்கிறார். ரைஹன் (வினீத் ஸ்ரீனிவாசன்) தன்னுடைய முதல் தொலைக்காட்சி வேலையில் சேருவதற்காக சந்தோஷத்துடன் கிளம்பிக்கொண்டிருக்கிறான். அவன் இண்டர்வியூ எடுக்க வேண்டியதே நடிகரான ரஹ்மானைத்தான்.

ஒரு சிக்னல் டிராஃபிக்கில் ரைஹன் தன்னுடைய பைக்கை வேகமாக கிளப்பும் போது ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் ரைஹனின் மூளை இறந்து விடுகிறது. மற்றொரு இடத்தில் நடிகரான ரஹ்மானின் பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒரு இதயம் தேவை. அப்பொழுதுதான் அவள் பிழைப்பாள் என்ற நிலை?

இங்கு ரைஹனுக்குத்தான் மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதே அவன் இதயத்தை கொடுக்கலாமே என்று டாக்டர்கள் ரைஹனின் பெற்றோர்களிடம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். பின் நிறைய வற்புறுத்தலுக்கு பிறகு இதயத்தை தர சம்மதிக்கிறார்கள். ஆனால் இப்போது இங்கே இன்னொரு பிரச்சனை.

இதயத்தை இங்கிருந்து மாற்றி எப்படி இன்னொரு இடத்திற்கு கொண்டு போது என்று பிரச்சனை. ஏனெனில் வழியில் அந்த அளவிற்கு டிராஃபிக் இருக்குமே என்று கவலை. டாக்டர் இதைப்பற்றி போலீஸ் கமிஷ்னரிடம் பேச, அவர் முதலில் இதற்கு மறுக்கிறார். பின் டாக்டரின் சைக்காலாஜிக்கல் பேச்சுக்கு பிறகு ஒப்புக்கொள்கிறார். பின் கமிஷ்னர் தன் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். கிட்டத்தட்ட வண்டியின் ஸ்பீடு 100ல் போனால்தான் இதயத்தை கொண்டு போக முடியும் என்பது நிலை.  சரி..  இவ்வளவு வேகத்தில் ரிஸ்க் எடுத்து யார் வண்டி ஓட்டுவது என்ற கேள்வி நிற்க, ஸ்ரீனிவாசன் “தான் ஓட்டுவதாக”  சொல்லி முன் வருகிறார்.

இந்த வண்டியில் டாக்டர் ஏபெல்லும் பயணிக்கிறார். ஏனெனில் அவருக்கு இந்த ஆபரேஷனில் பெரும் பங்கு உண்டு..
ஆம்புலன்ஸ் கிளம்புகிறது... ஒவ்வொரு சிக்னலாக இவர்களுக்கு வழிவிட்டு சரியான வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸில் இருக்கும் ஸ்ரீனிவாசனிடம் கமிஷ்னர்  ஸ்பீக்கரில் தொடர்ந்து தொடர்பு கொண்டே இருக்கிறார். திடீரென ஆம்புலன்ஸில் செட் பண்ணி இருக்கும் வாக்கிடாக்கியில் சிக்னல் கட் ஆகிறது. ஸ்ரீனிவாசனின் செல்லை தொடர்புகொண்டால் அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் போகிற வழியில் இருக்கும் எந்த சிக்னலிலும் அவர்கள் இன்னும் வந்து சேரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தி வருகிறது. இதற்கு மேல் இன்னொரு அதிர்ச்சியாக வண்டி கடத்தப்பட்டது என்ற செய்தியும் வருகிறது.

கொண்டு போன இதயம் என்ன ஆனது? ஆம்புலன்ஸை கடத்தியது யார்? எதற்காக இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வண்டியை கடத்த வேண்டும்? இப்படி ஒரு த்ரில்லிங்கான கேள்விகளால் நம்மை டென்ஷனின் உச்சத்திற்கே கொண்டு வந்துவிடுகிறார்கள். சரி.. அந்த இதயம் என்ன ஆனது என்று கேட்கிறீர்களா? படத்தில் பாருங்களேன்..

நம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை நாமே கூட மறந்துவிட்ட சூழ்நிலையில், மலையாள திரைத்துறையினர் அதை ஒரு சினிமாக மாற்றிகாட்டி இருக்கிறார்கள். (நமக்கு ஏன் இந்த ஐடியா வராம போச்சு?) இதன் இயக்குனர் ராஜேஷ்பிள்ளை சில நுணுக்கமான டெக்னிக்குகளை இந்தப்படத்தில் கையாண்டுள்ளார். சினிமாத்தனம் என்று பார்த்தால் ஒரு சிறிய குறுகலான வழி கொண்ட ஒரு ஏரியாவில் இந்த வண்டியால் இதே வேகத்தில் கிராஸ் செய்ய முடியாது என்றவுடன், சில டெக்னிக்குள் கையாள்வார்கள். அது பார்ப்பதற்கு துருத்திக்கொண்டு இருந்தாலும், உணர்வுகளின் படி அது சரியாகவே இருக்கும். நல்ல சினிமாட்டிக் திங்க்கிங்.

படத்தில் ரம்யா நபீசன் கணவனுக்கு துரோகம் செய்யும் கேரக்டரில் நடித்திருப்பார். சின்ன கேரக்டர்தான். ஆனாலும் நிறைவாக செய்திருப்பார்.  டாக்டர், கமிஷ்னரிடம் பேசும் சீன் க்ளாஸ். அவர் சொல்லும் ஒரு வார்த்தை கமிஷ்னரின் கல் மனதை ஒரு நிமிடம் அசைத்துப்பார்க்கிறது. அப்படி அந்த டாக்டர் என்ன சொன்னார்? அதாங்க படத்தின் நாதமே.. அதே வார்த்தையை கமிஷ்னர், முடியாது என்று சொல்லும் தன் சகாக்களிடம் சொல்லுவார். அவர்கள் அடுத்த நிமிடமே, இந்த வேலையை செய்யலாம் என்று சொல்லுவார்கள். அப்படி என்ன சொன்னார்கள்?

ஸ்ரீனிவாசன் ஏன் லஞ்சம் வாங்கினார்? என்பதற்கான காரணம் மிகச்சிறியது. ஆனாலும் அதற்காக அவர்படும் அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல.. இதை ஒரு பெரிய கதையாக காட்டாமல் ஜஸ்ட் லைக்தட் ஒரு பாட்டில் காட்டிவிட்டு போவது நல்ல திரைக்கதை. அவரை உதாசீனம் செய்யும் மகளே, கடைசியில் அவரை பெருமையாகப் பார்ப்பது க்ளாஸ்.

உனரோ மிழியழகே என்று சின்மயி ஒரு பாடல் பாடி இருக்கிறார் கேட்டுப்பாருங்கள். சொக்கிப்போவீர்கள். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப்பெற்ற திரைப்படம். விரைவில் இந்தப்படம் தமிழிலும் வரப்போகிறது. தமிழில் இந்த போலீஸ் கமிஷ்னர் கேரக்டரை சரத்குமார் செய்யப்போவதாக சொல்கிறார்கள். கமல்ஹாசனே நடிக்க ஆசைப்பட்ட படம் இது. அப்படி என்றால் படத்தின் குவாலிட்டியை யோசித்துக்கொள்ளுங்கள். மொத்தத்தில் நல்ல சினிமாவை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத சினிமா இது.

என்னுடைய ஒரு suggestion :

எனக்கு படம் பார்க்கும் போது ஒரு ஐடியா தோன்றியது. ஸ்ரீனிவாசனுக்கு வேலை போனதற்கு காரணம் ஒரு டிவி ரிப்போர்ட்டர். அவள்தான் இவர் லஞ்சம் வாங்கும் போது மீடியாவில் கிழிகிழி என்று கிழித்தவள். என்னுடைய ஐடியா என்னவென்றால், நடிகரான ரஹ்மானின் மகள் டீவியில் பார்ட்டைம் காம்பியராக வேலை செய்து, அவளால் இவருக்கு வேலை போனமாதிரி காட்டி இருந்தால் இன்னும் டெப்த்தாக இருந்திருக்கும். யாரால் தனக்கு வேலை போனதோ, அதே பெண்ணுக்காக இன்று உயிரை பணயம் வைத்து ஸ்ரீனிவாசன் வண்டி ஓட்டுகிறார் என்ற ஒன்லைன் இருந்திருந்தால் படம் இன்னும் உணர்வு பூர்வமாக இருந்திருக்கும்


23 comments:

Kovai Neram said...

அருமை..பார்த்து விடுகிறேன்...

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//Kovai Neram said...
அருமை..பார்த்து விடுகிறேன்...//
நன்றி.. பாருங்கள் நண்பரே

ப.செல்வக்குமார் said...

விமர்சனம் ரொம்ப நல்லா இருக்குங்க. நல்ல படம்தான் போல :))

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// ப.செல்வக்குமார் said...
விமர்சனம் ரொம்ப நல்லா இருக்குங்க. நல்ல படம்தான் போல :))//

நல்ல படம்தான் பாஸு.... பாருங்க

vinu said...

appudeengalaaaaaa?????

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//vinu said...
appudeengalaaaaaa?????//

vaaya puthu maappillai...

Anonymous said...

எனக்கு மலைஎத்தும் முன்பே போன்ற படங்கள் தான் பிடிக்கும்...விமர்சனம் நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்...

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// ரெவெரி said...

எனக்கு மலைஎத்தும் முன்பே போன்ற படங்கள் தான் பிடிக்கும்...விமர்சனம் நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்.. //

நன்றி ரெவெரி.. எனக்கு ஆதாமிண்டே மகன் அபு மாதிரி படங்கள்தான் பிடிக்கிறது

விஷ்ணு said...

padam nalla irukku sir, atha vita unga suggestion, semaiya irukku ...directer touch theriyuthu....

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// விஷ்ணு said...

padam nalla irukku sir, atha vita unga suggestion, semaiya irukku ...directer touch theriyuthu....//

நன்றி விஷ்ணு சார்... தொடர்ந்து படியுங்கள்

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் கவிதை காதலன் சார்.
ரொம்ப நாளா நீங்க போடுவீங்க போடுவீங்க அப்படின்னு எதிர் பார்த்த ஒரு படம்.நீங்க போட்டா நிச்சயம் நிறைய பேரு இந்த படத்த பார்ப்பாங்க.அப்படி எதிர் பார்த்த ஒரு படத்தை பற்றி போட்டு அசத்தி இருக்கீங்க.வெரி ஹாப்பி,தேங்க்ஸ்.ஒன் லைன் ஸ்டோரி இத வெச்சி கிட்டு இயக்குனர் அதகளபடுத்தி இருகாரு.நான் பார்த்த மிக சிறந்த வேற்று மொழி படங்களில் ட்ராபிக் படமும் ஒன்று.சூப்பர் படம் அப்படின்னு தைரியமா சொல்லலாம்.மலையாளத்தில் இப்படி ஒரு படமா என்று ஆச்சர்ய பட்டு தன போனேன்.சுதேவன் உண்மையாகவே மிக சிறந்த நடிகர்.கலக்கி இருக்கிறார்.இயக்குனர் ராஜேஷ்பிள்ளை என்ன மனுஷன் பா.இந்த படத்தை இவ்வளவு தைரியமாய் எடுத்து,அதை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்ததற்கு எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது.படத்தில் நடித்த அனைவரும் செம சூப்பரா நடிச்சி இருகாங்க.மொத்தத்தில் தமிழ் சினிமா செய்ய வேண்டிய ஒரு அற்புதமான காவியத்தை மலையாள சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கிறது.பார்ப்போம் நம்ம ஆளுங்களும் சாதாரணமாணவங்க கிடையாதே.தமிழில் எப்படி இருக்கும் என்று ஆவலாக இருக்கிறது.

கலக்கி இருக்க மச்சி.என்ன விமர்சனம் டா.படம் பார்த்த பீல் அப்படியே இருக்கு.வாய்ப்பே இல்ல.இன்னும் தொடர்ந்து எழுது.உன்னிடம் இருந்து இன்னும் பல படங்களை எதிர் பார்கிறேன்.நான் மட்டும் இல்லை.அனைத்து வலைதள நண்பர்களும்.வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு சம்பவத்தை வைத்து இவ்ளோ அருமையா படம் பண்ணி இருக்காங்களே, இதுதான் கிரியேட்டிவிட்டி. நம்ம மக்கள் இந்த மாதிரி முயற்சிகள் ஏனோ செய்யறதே இல்ல, ஒரே காதல், இல்ல வெட்டுக்குத்து... !

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ஸ்வீட் ராஸ்கல்..

நன்றி நண்பரே.. உங்களின் ஆதரவு என்றும் வேண்டும்.. தொடர்க...

மாலதி said...

விமர்சனம் ரொம்பஅருமை..

ஹேமா said...

யூ ட்யூப்ல் இருக்கிறது.இன்றே பார்க்கவேணும்போல இருக்கு உங்கள் விமர்சனம்.நன்றி !

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// மாலதி said...

விமர்சனம் ரொம்பஅருமை..//

நன்றி மாலதி. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//ஹேமா said...
யூ ட்யூப்ல் இருக்கிறது.இன்றே பார்க்கவேணும்போல இருக்கு உங்கள் விமர்சனம்.நன்றி !//

கண்டிப்பா பாருங்க ஹேமா.. மிக்க நன்றி..

பாரத்... பாரதி... said...

தெளிவான விமர்சனம்.. நன்றிகளும், பாராட்டுகளும்..

பாரத்... பாரதி... said...

பாருங்க.. நம்ம ஆளுகளுக்கு கூட அந்த சம்பவத்தை படமாக்கணும்னு தோணலை..

இந்திரா said...

உங்களோட யோசனை நல்லாயிருக்கு..

அது சரிஈஈஈஈ... விமர்சனத்துக்குனே உங்க தளத்தை ஒதுக்கிட்டீங்களோ????

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// பாரத்... பாரதி... said...
தெளிவான விமர்சனம்.. நன்றிகளும், பாராட்டுகளும்..பாருங்க.. நம்ம ஆளுகளுக்கு கூட அந்த சம்பவத்தை படமாக்கணும்னு தோணலை..//

உண்மைதான் நண்பரே.. நம்ம ஆட்களுக்கு தோணாத விஷயம் அவர்களுக்கு தோணி இருக்கு.. அதைவிட காமெடி.. அவர்களிடமிருந்து ரீமேக் உரிமையை நாம் வாங்கி இந்தப்படத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறோம்.. ஹி..ஹி..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//இந்திரா said...
உங்களோட யோசனை நல்லாயிருக்கு..
அது சரிஈஈஈஈ... விமர்சனத்துக்குனே உங்க தளத்தை ஒதுக்கிட்டீங்களோ????//

நன்றி இந்திரா.. விமர்சனம் எனக்கு ரொம்ப புடிக்கும்.. சரி கொஞ்ச நாள் செய்யலாமேன்னுதான்..

Kumaran said...

நல்ல மலையாள படமாக தெரிகிறது..தங்களது விமர்சனம் மிக்க நன்று..அருமை..பார்க்கிறேன்.நன்றி.

இதையும் படியுங்கள்