Thursday, March 22, 2012

ராகினி MMS ஹிந்தி சினிமா விமர்சனம்

இன்று இண்டர்நெட்டிலும், மொபைல் சாஃப்ட்வேர் செண்டர்களிலும் ஏராளமாக பரவிக்கிடக்கும் ஒரு விஷயம், தம்பதிகளின் அந்நியோன்யமான செக்ஸ் வீடியோக்கள். நடிகர் நடிகைகளின் வீடியோக்கள் தேவை என்ற ஆர்வம் மாறி, சாதாரணமான தம்பதிகளின் செக்ஸ் வீடியோக்கள் தேவை என்ற வீபரீதமான ஆர்வத்தால் இன்று பல தம்பதிகளின் பர்ஸ்னல் வீடியோக்கள் நெட்டில் தினம் தினம் உலா வந்த வண்ணம் உள்ளன. அதிலும் கணவனே மனைவியின் விருப்பத்தோடும், விருப்பம் இல்லாமலும் எடுக்கும் வீடியோக்களுக்கு அதிக கிராக்கி உண்டு. இதன் பின்னணியில் இருக்கும் பிஸினஸ் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியது.

அப்படி ஒரு செக்ஸ் வீடியோ எடுக்க முயற்சிக்கும் ஒரு காதலனுக்கும், அதை தெரிந்து கொண்ட காதலிக்கும் என்ன நடக்கிறது என்பதே கதை.

உதய் சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற ஆசை கொண்டவன். அவனை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்றால், அவன் தன்னுடைய காதலியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வீடியோவை கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் அவனை நடிகனாக்குவதாக பணக்கார புரோக்கர் ஒருவன் உதய்க்கு ஆசை காட்டுகிறான். உதய்யும் தன்னுடைய முகம் தெரியாதவாறு அந்த வீடியோவை எடுப்பதாக கூறி திட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறான். உதய் தன்னுடைய காதலியான ராகினியை அழைத்துக்கொண்டு தன்னந்தனியான ஒரு பங்களாவிற்கு டேட்டிங் போகிறான்.

அங்கே பல இடங்களில் வீடியோ கேமரா செட் செய்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாடியின் மேல் இருக்கும் ரூமில். உதய் தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு அந்த ரூமிற்கு வந்து ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கும் போது, ராகினியின் தோழி, அவளது காதலனை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். இது என்னடா சிவபூஜையில் கரடி? என்று உதய் டென்ஷன் ஆகிவிடுகிறான். ஒருவழியாக அவர்களை வெளியேற்றி விட்டு, பெட்ரூமுக்கு வருகிறார்கள்.

புதுவிதமாக ரொமான்ஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து, ராகினியை பெட்டில் படுக்க வைத்து அவள் கைகளை ஒரு சங்கிலியால் கட்டிலில் கட்டி வைக்கிறான். (ஏனெனில் இதுபோன்ற வீடியோக்களுக்கு மார்க்கெட்டில் ஏக கிராக்கி என்பதால்). பின் எல்லாவற்றையும் ரெடி செய்துவிட்டு ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கும் போது உதய்க்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது...

ஆம், அந்த வீட்டில் பேய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. அது உதய்யை ராகினியுடன் நெருங்கவிடாமல் தடுக்கிறது. அதிர்ந்துபோன உதய், என்னவென்று பயத்தில் தேடும்போது செட் செய்து வைத்திருக்கும் கேமரா ராகினியின் கண்களில் தென்பட்டு விடுகிறது. எதற்காக இப்படி எல்லாம் செய்தாய்?” என்று ராகினி உதய்யை திட்டுகிறாள். அவளால் கட்டிலைவிட்டுக்கூட நகரமுடியவில்லை ஏனென்றால் அவள் கைகள்தான் கட்டிலில் கட்டப்பட்டிருக்கிறதே. தன் கைகளை அவிழ்த்துவிடும்படி அவள் கெஞ்ச, உதய் சாவியை காணாமல் திகைக்கிறான். அந்த ரூமில் பேய் இருப்பது தெளிவாக தெரிந்துவிட, இருவரும் செய்வதறியாமல் திகைக்கிறார்கள். பின் என்ன ஆனது, உதய்யை பேய் என்ன செய்தது? ராகினி கைகளை எப்படி அவிழ்த்தாள்? பேயிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதெல்லாம் படத்தின் டென்ஷனுக்கு நிச்சயம் உத்தரவாதம்..

படததின் தொடக்கம் முதலே, உதய் ஒரு ஹேண்டி கேமராவை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் ஷூட் செய்வது போல காட்டுவது உதய் என்ன செய்யப்போகிறான் என்பதை அப்பட்டமாக காட்டிவிடுகிறது. உதய்யாக நடித்திருக்கும் ராஜ்குமார் யாதவ் பின்னிபெடலெடுத்திருக்கிறார். ராகினியை செட் செய்து ரூமுக்கு கூட்டி வரும் காட்சிகளில் அநியாயத்திற்கு காமம் கண்களில் கொப்பளிக்கிறது. ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் ராகினியின் தோழியும் அவள் காதலனும் அங்கு வந்துவிட, உதய் செம டென்ஷன் ஆவது நமக்கெல்லாம் சிரிப்பு.. எல்லாவற்றையும் வீராவேசமாக செய்துவிட்டு பேய்க்கு பயந்து நடுங்கும் காட்சியில் உதய் கலக்கி இருக்கிறார்.

ராகினியாக நடிக்கும் கைனஸ் மோட்டிவாலா சரியான அழகுப்பெண். உதய்யுடன் ரொமான்ஸ், இப்படி ஒரு செக்ஸ்வீடியோ எடுக்கத்தான் தன் காதலன் தன்னை கூட்டி வந்திருக்கிறான் என்பதை தெரிந்த உடன் ஏற்படும் கோவம், கைகளை அவிழ்க்கமுடியாமல் திணறுவது என நடிப்பில் கலக்கி இருக்கிறார்.

அதைவிட செம காமெடி, ராகினியின் தோழியும் அவள் காதலுனும் மூட் ஏற்பட்டு அதே கேமரா இருக்கும் ரூமுக்கு சென்று ரொமான்ஸை ஆரம்பிப்பார்கள். இவர்கள் வந்ததில் செம டென்ஷனில் இருக்கும் உதய், அவர்கள் மேலே எதற்காக போனார்கள் என்பதை தெரிந்து கொண்ட உடன் செம சந்தோஷமாகிறான். ஏனெனில் கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? என்ற கணக்கில் இன்னொரு வீடியோவும் சிக்கப்போகிறதே என்ற ஆர்வம்.

ஆனால் மேலே போனவர்கள் நிலை? ஹா... ஹா.. வேண்டாம் நீங்களே படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் சார்பில் ஏக்தாகபூர் தயாரிப்பில் வெளிவந்தபடம். வெறும் இரண்டு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்டி பத்துக்கோடிக்கும் மேல் வசூலை அள்ளியபடம். எழுதி இயக்கி இருப்பவர் பவன் கிருபாள்னி. ரொமான்டிக்கையும் ஹாரர்ஐயும் இணைத்து ஒரு செம த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ம்ம்ம்.. தமிழில் இப்படி எல்லாம் ஒரு படம்... நிச்சயம் வாய்ப்பு இல்லை... எங்க ஊர் சென்ஸார்ன்னா சும்மாவா?

8 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விமர்சனம். படத்தை பத்தி இப்போதான் கேள்விப்படுறேன். ஆனா உங்க விமர்சனத்தை பார்த்தா படம் செமயா இருக்கும் போல...... பார்த்துடலாம்.

கவிதை காதலன் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி -
பாருங்க தலைவா செமையா இருக்கும்..

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் கவிதை காதலன்.

செம படம் பா.எதிர் பார்க்கவே இல்ல இது ஒரு பேய் படம்னு.போஸ்டர் பார்த்தா ஏதோ ஏட கூட படமொன்னு நினைக்க தோனுச்சி.பட் நினச்சி கூட பார்க்க முடியாத அளவுக்கு நல்ல த்ரில்லிங்.ரொம்ப நல்ல படம்.ராகினியும்,உதய்யும் அருமையான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்கள்.செம த்ரில்லர் அண்ட் வெரி ரொமாண்டிக் இப்படி சேர்த்து கலவையா கொடுக்குறது ஹிந்தியில் மட்டுமே சாத்தியம்.வசூலில் அள்ளியதில் ஆச்சர்யமில்லை. செம சூப்பர் விமர்சனம்.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

கவிதை காதலன் said...

@ ஸ்வீட் ராஸ்கல்
நன்றி மச்சி..

பிரதாப் said...

மச்சி நல்ல விமர்சனம் டா... அதுவே படம் பார்க்க தூண்டும்... என்னை
விட்டுட்டு பார்த்திட்டீங்களா...நான் பார்துட்டு சொல்றேன்....

கவிதை காதலன் said...

@ பிரதாப்

மொதல்ல நீ வேலைய விட்டுட்டு வா.. அப்புறம் எங்க கூட சேர்ந்து பாக்கலாம். ஹி.ஹி..

விஷ்ணு said...

nalla mirattal .....

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ விஷ்ணு

நன்றி மச்சி.. உனக்கு படம் ரொம்ப பிடிச்சுது போல..

இதையும் படியுங்கள்