Wednesday, March 21, 2012

கழுகு விமர்சனம்


மரணம் என்ற ஒன்றே பாதிக்காத ஒருவன், எப்படி மரணத்தால் பாதிக்கப்பட்டு மரணத்தை விரும்பி தழுவுகிறான் என்ற ரிஸ்க்கான ஒன்லைனை இறக்கையாக கொண்டு அட்டகாசமாக திரையில் பறக்கிறது இந்த கழுகு...

மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களை மேலே தூக்கி வரும் தொழில் செய்பவர்கள் கிருஷ்ணா, கருணாஸ், தம்பி ராமையா. பிந்துமாதவின் தங்கை இதுபோல் தற்கொலை செய்துகொள்ள, அவளை தூக்கிவரும் கிருஷ்ணாவின் மீது பிந்துவிற்கு காதல் அரும்புகிறது. இருவருக்கும் இடையே பூக்கும் அந்த காதல் ஏகப்பட்ட தடைகளை கடந்து திருமணத்தில் முடிகிறது. அந்த ஊரில் டீத்தூள் கடத்தி தொழில் செய்யும் ஜெயப்பிரகாஷின் வாழ்வில் கிருஷ்ணா குறுக்கிட, ரத்தமும் அலறலுமாக நொறுக்கப்படுகிறது கிருஷ்ணாவின் வாழ்வு... முடிவு என்ன என்பது தியேட்டரில் பாருங்கள்...

இதுவரை திரையில் யாரும் தொடாத கதைக்களம். தற்கொலை செய்து கொள்பவர்களை தூக்கிவரும் தொழிலை கதாநாயகன் செய்வது பல புதிய காட்சிகளுக்கு துவக்கமாகவே இருக்கிறது. அதிலும் முதல் இருபது நிமிடங்கள் அட்டகாசம். ஆனால் பிணம் தூக்கிவருதலில் இன்னும் டீட்டெய்லிங் கோர்த்திருந்தால் அந்த இருபது நிமிடங்கள் தமிழ்சினிமாவில் மறக்கமுடியாத காட்சிகளாக நின்றிருக்கும்.

கிருஷ்ணா தன்னுடைய ஸ்க்ரீன் ப்ரசென்ஸை வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய காட்சிகளில் அவரது நடிப்பை மீறி ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே தெரிகிறது. அந்த உதட்டுசாயம் தேவையே இல்லாதது. தன் நண்பர்களை பிணக்கோலத்தில் பார்த்து உறையும் காட்சியில் நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.

பிந்துமாதவிக்கு அட்டகாசமான எஸ்பிரஸிவ் கண்கள். அந்த கண்களே ஆயிரம் உணர்வுகளை வெளிக்கொணர்கிறது. அதிலும் கிருஷ்ணாவைத்தேடி மருத்துவமனைக்கு ஓடி வரும் காட்சியும், கருணாஸின் மனைவியை கட்டிப்பிடித்து அழும் காட்சியும் பிந்துமாதவிக்கு இனி விசிட்டிங்கார்டுகளாக அமையும்.. இன்னும் அழுத்தமான ரோல்கள் கிடைத்தால் பின்னுவார். இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல் கணங்களை பிந்து தன்னுடைய காந்தகண்களாலே வெளிப்படுத்திப்போவது அழகு

கருணாஸ் வழக்கமான போதைதர்மங்களை உதித்திருக்கிறார், தம்பி ராமையா தனக்கு தேசியவிருது கிடைத்ததற்கு சரியான காரணம்தான் என்பதை இந்தப் படத்தில் நிருபித்திருக்கிறார். தம்பிராமையா படத்திற்கு சரியான பில்லர். திருட்டுக்கோட்டை வைத்துக்கொண்டு அவர் அல்லல்படுவது சரியான காமெடி.

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், பாதகத்தி கண்ணுப்பட்டு பாடல்கள் நாங்கள் யுவனின் வாரிசுகள் என்று புன்னகைக்கின்றன. பின்னணி இசையில் யுவன் ஜீவனை தொலைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். யுவனிடம் முணுமுணுக்க வைக்கும் பாடல்களாக வாங்கி இருந்தால், படம் இன்னும் ரேஞ்ச் எகிறி இருக்கும்.


ஒளிப்பதிவாளர் சத்யா மலைச்சிகர காட்சிகளில் அதிக சிரத்தையுடன் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். நிறைய இடங்களில் பளீச்.. சில இடங்களில் ப்ச்.... ஆங்காங்கே ரசிக்க வைக்கும் வசனங்கள், புன்முறுவல் பூக்க வைக்கும் காட்சிகள் என சுவாரஸ்யப்படுத்தி இருந்தாலும் தமிழ்சினிமாவின் சில க்ளிஷே காட்சிகளில் சிக்கி அல்லாடித்தான் போகிறது கழுகின் பாதை. எந்தவகையிலும் சகிக்கவே முடியாத ஹீரோவின் மீது ஹீரோயினுக்கு காதல் வருவது, வில்லன் நிச்சயம் கடத்தல் செய்வது, அடியாட்களை வைத்து கொலை செய்வது, போன்ற க்ளிஷேக்கள் திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு சேதாரம் விளைவிக்கத்தான் செய்கின்றன.

இயக்குனர் சத்யசிவா, தன்னுடைய முதல்படத்திலேயே கவனிக்க வைத்திருக்கிறார். தற்கொலை செய்துகொள்பவர்களின் கைகளில் ஏன் இலைகள் சிக்கி இருக்கின்றன என்ற விளக்கம் அட போட வைக்கிறது என்றால், அதே விளக்கத்திற்கு இறுதிகாட்சியில் ஒரு ஷாட் வைத்து அடடே போட வைக்கிறார் இயக்குனர். தமிழ்சினிமாவில் சத்யசிவா கவனிக்கத்தகுந்த நபராகவே தென்படுகிறார். பாடல்களில் பிந்துவிற்கும், கிருஷ்ணாவிற்கும் இடையே ஏற்படும் காதல் பரிமாற்றங்களும், அதற்கான மாண்டேஜ்களை யோசித்த விதத்துலையும் இயக்குனர் ரசிக்க வைக்கிறார். அழுத்தமான கதையும், அதன் பின்புலம், நல்ல நடிகர் தேர்வும் இயக்குனரின் பலம் என்றால் திரைக்கதை என்ற ஜீவனுக்கு இன்னும் கொஞ்சம் உணவு பரிமாறி இருந்தால் கழுகு இன்னும் உயரே பறந்திருக்கும்..

தியேட்டர் விசிட் : ஸ்கைவாக் - பி.வி.ஆர்.

9 comments:

பிரதாப் said...

மச்சி உண்மையாகவே படம் நல்ல இருக்கு.... அதுவும் தம்பி ராமையா சூப்பரா பண்ணி இருக்கு.இதுவரை பார்க்காத கருணாஸ்,ரொம்ப கலக்கிஇருக்கார்.heroin கூட அழகுடன் சேர்ந்த நடிப்பை வெளி படுத்தி இருக்கார்.கிருஷ்ணா நல்லா பண்ணி இருக்காரு.எல்லதைவிட் உன் விமர்சனம் சூப்பர் மச்சி

அனுமாலிகா said...

என்ன மணிசார்.. ரொம்ப நாள ஆள கானோம்? விமர்சனம் சூப்பர்

கவிதை காதலன் said...

//Blogger பிரதாப் said...

மச்சி உண்மையாகவே படம் நல்ல இருக்கு.... அதுவும் தம்பி ராமையா சூப்பரா பண்ணி இருக்கு.இதுவரை பார்க்காத கருணாஸ்,ரொம்ப கலக்கிஇருக்கார்.heroin கூட அழகுடன் சேர்ந்த நடிப்பை வெளி படுத்தி இருக்கார்.கிருஷ்ணா நல்லா பண்ணி இருக்காரு.எல்லதைவிட் உன் விமர்சனம் சூப்பர் மச்சி//

நன்றி பிரதாப்

கவிதை காதலன் said...

//அனுமாலிகா said...
என்ன மணிசார்.. ரொம்ப நாள ஆள கானோம்? விமர்சனம் சூப்பர்?/

நன்றி அனு.. இனிமே அடிக்கடி வருவேன்..

நிலாமதி said...

விமர்சனம் சூப்பர்

ஸ்வீட் ராஸ்கல் said...

ரொம்ப நல்ல விமர்சனம் கவிதை காதலன் சார்...

படம் உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு.எல்லோரும் அவரவர் கதாபாத்திரதிர்க்கு உயிர் கொடுத்து நடித்திருகிறார்கள்.கிருஷ்ணாவுக்கு அவர் கேரியரில் சொல்லிகொள்ளும் படியான படம்.கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.பிந்து ரொம்பவே அழகா தெரியுறாங்க.நல்லா நடிச்சி இருகாங்க.நல்ல எதிர்காலம் இருக்கு. தம்பிராமையா வாழ்ந்திருக்கிறார்,கருணாஸ் நெடுநாட்களுக்கு பிறகு நடித்திருக்கிறார்,

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாட்டு ரொம்ப நல்ல இருக்கு.அந்த பட்டுள்ள தம்பிராமையா ஆட்டம் சூப்பர்.பாதகத்தி கண்ணுபட்டு பாட்டு மனசுக்குள்ள என்னமோ பண்ணுது.யுவன் கிட்ட இருந்து இன்னும் வாங்கி இருக்கலாம்.ஒளிபதிவாளர் சத்யா உண்மையான ஹீரோ.கலக்கி இருகாரு.இயக்குனர் சத்ய சிவா முதல் படமா என்று ஆச்சர்ய பட வைத்திருக்கிறார்.நல்ல எதிர்காலம் இருக்கிறது.நல்ல கதைகளம்,நல்ல முயற்சி அதற்கே எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் சத்ய சிவாவை.ஜெய பிரகாஷை இன்னும் உபயோக படுத்தி இருக்கலாம்.

சூப்பர் விமர்சனம் மச்சி.படம் பார்க்க தூண்டும் பதிப்பு.தொடர்ந்து வா.கேப் விடாதே...

கவிதை காதலன் said...

@ஸ்வீட் ராஸ்கல்
நன்றி மச்சி.. தொடர்ந்து படி.. இனி தொடர்ந்து எழுதுவேன்

விஷ்ணு said...

supperb movie....nalla comments

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ விஷ்ணு

நன்றி நண்பரே

இதையும் படியுங்கள்