Thursday, March 22, 2012

ஃபேஷன் - இந்திப்படம் விமர்சனம்

ஃபேஷன் உலகில் வெற்றி பெற ஒரு பெண் எதையெல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது, பேஷன் என்கிற உலகம் எத்தனை கொடுமையானது என்பதை தெள்ளத்தெளிவாக செவிட்டில் அறைவது போல் சொன்ன படம் இது.

சண்டிகரின் ஒரு சிறிய பகுதியிலிருந்து மாடலிங்துறையில் பெரிய மாடலாக வர வேண்டும் என்ற ஆசையில் அப்பா, அம்மாவின் பேச்சை பொருட்படுத்தாமல் பாம்பே வருகிறாள் பிரியங்கா சோப்ரா (மேக்னா மாத்தூர்). அங்கே அவள் தனது சொந்தக்கார பெண்மணி வீட்டில் தங்குகிறாள். அவளுக்கு அங்கே இருக்கும் ஆடம்பரங்கள் புதிதாய் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் ஆடிஷனிலும் தோல்வியே பெறுகிறாள். அவளுக்கு அங்கே உதவி செய்ய ரோஹித் எங்கிற ஒரு கே டிசைனர் இருக்கிறான். இந்த ரோஹித்தான் வினய் கோஷ்லா என்கிற மிகப்பெரிய டிசைனரின் அஸிஸ்டெண்ட். ஒரு ஆடிஷன் செலக்‌ஷன் போகும் போது போது பிரியங்கா சோப்ராவிடம் அறிமுகம் ஆகிறான் அர்ஜன் (மானவ்). இவனும் மாடலிங் உலகில் ஜெயிக்க போராடிக்கொண்டு இருப்பவன்.

பிரியங்காவின் புகைப்படங்கள் படு லோக்கலாக இருக்கிறது என்று கூறி அவளை மிகப்பெரிய ஃபோட்டோகிராஃபரான கார்த்திக்கிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள் பிரியங்காவின் மாடலிங் தோழி கிறிஸ்டின். கார்த்திக், பிரியங்காவை வைத்து எடுக்கும் உள்ளாடைகளுக்கான விளம்பர புகைப்படங்கள் இந்தியாவில் வெளியாகாது என்று கூறித்தான் அனுமதி வாங்குகிறான். ஆனால் அந்த புகைப்படங்கள் ஒரு பத்திரிக்கையில் வெளியாக, பிரியங்கா தங்கி இருக்கும் வீட்டின் சொந்தக்காரப்பெண்மணி டென்ஷனாகிறார். அதனால் பிரியங்காவிற்கு வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை. தான் சந்தித்த மானவ்வின் அபார்ட்மெண்டையே இருவரும் பங்கிட்டுக்கொண்டு வாழ்கிறார்கள். பின், ராகுல் அரோரா என்கிற பெரிய டிசைனர் ஒருவரின் அறிமுகத்தால் பேஷன் உலகில் பத்தோடு பதினொன்றாக களம் இறங்குகிறாள் பிரியங்கா.

அங்கே ஷோ ஸ்டாப்பராக சிங்கமென உறுமிக்கொண்டு நிற்கிறான் கங்கனா ரெனாவத் (சோனாலி). ஷோ ஸ்டாப்பர் என்றால் அவள்தான் அந்த நிகழ்ச்சியின் ஹீரோயின். அவள் வைப்பதுதான் சட்டம். அந்த அளவிற்கு மற்றவர்களை மதிக்காத ஆட்டிட்டியூட் கொண்ட பெண்ணாக இருக்கிறாள் கங்கனா ரெனாவத். பேஷன் உலகில் நுழையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஷோ ஸ்டாப்பர் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்கும். பனாஷ் என்கிற மிகப்பெரிய பத்திரிக்கையின் மாடல்கள்தான் பேஷன் உலகில் வெற்றிக்கொடி கட்டுபவர்கள் கங்கனா, பனாஷ் பத்திரிக்கையின் பிராண்ட் மாடல் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பனாஷ் பத்திரிக்கைய நடத்துபவர் செரின்.

பிரியங்காவின் மாடலிங்க் ஷோவை பார்க்கும் செரினுக்கு, அவள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. கங்கனா ஒரு கட்டத்தில் திமிரின் உச்சக்கட்டத்தில் நடந்துகொள்ள பனாஷ் நிறுவனத்திலிருந்து விரட்டி அடிக்கப்படுகிறாள். அவளுக்கு பதிலாக அங்கே செரினால் பிரியங்கா தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.

ஒரே நைட்டில் மிகப்பெரிய பேரும், புகழும் பிரியங்காவை வந்தடைகிறது. பத்தோடு பதினொன்றாக நின்ற பிரியங்கா இன்று ஷோ ஸ்டாப்பர். பேஷன் உலகில் ஷோ ஸ்டாப்பராக இருந்த கங்கனா பத்தோடு பதினொன்றாக ஆகிப்போகிறாள். அந்த வெறுப்பில் போதை மருந்து பழக்கத்திற்கும அடிமை ஆகிறாள். பார்ட்டி அது இது என்று பிரியங்கா நேரம் கழித்து வருவதால் மானவுக்கும் பிரியங்காவிற்கும் சண்டை வருகிறது. பிரியங்கா வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பிரியங்காவிற்கு ஒரு ஆடம்பர ஃப்ளாட்டையே தருகிறார் செரின். செரினின் அன்பால் அவரிடம் தன்னை இழக்கிறாள் பிரியங்கா. அதனால் கற்பமும் ஆகிறாள். செரின், குழந்தையை கலைத்துவிட சொல்கிறார். ஏனெனில் மாடலிங் பெண்கள் கர்ப்பமாக கூடாது என்பது காண்டிராக்ட். பணமும் புகழும் சேர, பிரியங்கா திமிரால் அகம்பாவம் பிடித்து நடக்கிறாள். புகழின் போதையால், ஒரு பார்ட்டியில் செரினின் மனைவியிடம், பிரியங்கா அவள் கணவனின் நடத்தையைப்பற்றி சொல்ல, செரின் கோபமடைகிறார். அதனால் பனாஷின் காண்டிராக்டில் இருந்து பிரியங்கா துரத்தப்படுகிறாள். அவளது மார்கெட் குறைகிறது. தண்ணியும், சிகரெட்டுமாக அவள் மாறுகிறாள்

ஒரு நாள் பேஷன் ஷோவில் கங்கனா நடந்து வருகையில் அவளது மார்புக்கச்சை அவிழந்து விழுகிறது. அரைநிர்வாணமான அவளை பத்திரிக்கைக்களும் டிவிக்களும் புகைப்படம் எடுத்துவிடுகின்றன. அதிர்ச்சியின் உச்சத்திற்கே போகும் கங்கணா செய்வதறியாமல் அவமானத்தால் டிரக்ஸ் ஊசி பழக்கத்திற்கும் அடிமை ஆகிறாள்.

மற்றொரு புறம் பனாஷ் பத்திரிக்கையிலிருந்து விரட்டப்பட்டு, செரினால் புறக்கணிக்கப்பட்டு பிரியங்கா வேதனை அடைகிறாள். அவள் அளவுக்கு அதிகமாக மது குடிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு பார்ட்டியில் தன் நிலை மறந்து நீக்ரோ ஒருவனை கட்டிப்பிடித்து கிஸ் அடிக்கிறாள். அவனும் இதுதான் சாக்கு என்று பிரியங்காவை வன்புணர்ச்சி செய்துவிடுகிறான். மறுநாள் காலை எழுந்திருக்கும் போதுதான் பிரியங்காவிற்கு சுய நினைவே வருகிறது. அப்போதுதான் தான் ஒருவனால் கற்பழிக்கப்பட்டிருப்பதே அறிகிறாள். அதிர்ச்சியும் அவமானமும் தாக்க, பேஷன் உலகின் கொடூரம் தாங்காமல் தந்தையிடமே ஓடிப்போகிறாள். அவளை நார்மல் நிலைக்கு திருப்ப தந்தை எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகவே, அவளது மாடலிங் லட்சியத்தையே மறுபடியும் செய்யுமாறு தந்தை சொல்கிறார். மீண்டும் பாம்பே வருகிறாள் பிரியங்கா.. இப்போது அவளது திமிர், அகங்காரம் எல்லாம் சுத்தமாக காணாமல் போயிருக்கிறது.

திரும்பவும் அவளுக்கு எப்படி பேஷன் உலகில் வாய்ப்பு கிடைத்த்து, அரை நிர்வாணமாக படம்பிடிக்கப்பட்ட கங்கனாவின் நிலை என்ன? கங்கனாவை பிரியங்கா எப்படி அரவணைத்தாள் போன்ற கேள்விகளுக்கு அதிர்ச்சியான இந்தப்படம் விடையளிக்கிறது..

மாடலிங் பெண்களின் மனநிலை, புகழுக்காக அவர்கள் தங்கள் கற்பை இழப்பது, வெறுப்பின் உச்சத்தில் சிகரெட், தண்ணி, போதை மருந்துக்கு அடிமை ஆவது என எல்லா ஏரியாவிலும் இயக்குனர் மிக நுணுக்கமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். பார்க்கும் போதே அதிர்ச்சியில் உறைய வேண்டி இருக்கிறது.

அதுவும் கங்கனாவின் மார்புக்கச்சை அவிழ்ந்து விழும் காட்சியும், பிரியங்கா நீக்ரோ ஒருவனால் கற்பிழந்து கிடக்கும் காட்சியும் அதிர்ச்சியின் உட்சபட்சம். கேக்களை நாம் கோவா திரைப்படத்தில் கண்டதற்கே சலித்துக்கொள்கிறோம். ஆனால் இந்தப்படத்தில் இரண்டு கே கேரக்டர்களை மிக இலகுவாக இயக்குனர் உலவ விட்டுள்ளார். பாம்பேவில் இது போன்ற நபர்கள் மிக சாதாரணம். அதை அசால்ட்டாக எந்தவித உறுத்தலும் இல்லாமல் நுழைத்துள்ளார் இயக்குனர்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் வெற்றிப்படமே.. ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த இந்த்திரைப்படம் பிரியாங்கா சோப்ராவுக்கும், கங்கனா ரெனாவத்திற்கும் தேசிய விருதை வாங்கித்தந்தது. கங்கனாவின் திமிர்பிடித்த ஆட்டிட்டியூடை இந்தப்படத்தில் வெகுவாக ரசிக்கலாம்.. என்னா ஸ்டைல்டா? இந்தப்பொண்ணை போயா தாம்தூம் பட்த்தில் அவ்வளவு மொக்கையாக உபயோகப்படுத்தினார்கள்?

செரினின் அலுவலகத்தில் ஹெட்டாக வரும் அனிஷா அசத்தல் ரகம். செரினின் ஒவ்வொரு கண் அசைவிற்கு ஏற்ப செயல்படும் இவரது கேரக்டரை நிச்சயம் எல்லாரும் எல்லா கார்ப்ரேட் அலுவலகத்திலும் கடந்து வந்திருப்பார்கள். கங்கனாவை வேண்டாம் என்று சொல்வதற்கும், பிரியங்காவை வேண்டாம் என்று சொல்வதற்கும் இவர் சொல்லும் காரணங்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் நிழலுருவத்தை நிஜமாக நடமாடவிடுவது போல் இருக்கும்.. செமத்தியான கேரக்டரைசேஷன்.

குடித்துவிட்டு ஒரு மாடலிங் பெண் போலீஸில் மாட்டியது, ராம்ப்வாக்கில் ஆடை அவிழ்ந்து விழுந்த பெண், என நிஜவாழ்வில் நடந்த பல சம்பவங்களை தைரியமாக படத்தில் அமைத்திருக்கிறார் இயக்குனர்.

பத்தோடு பதினொன்றாக இருக்கும் போது, பிரியங்காவின் ஆடையை கேலி செய்து, ஷோவைவிட்டு வெளியேற சொன்ன வினய் கோஷ்லாவை, பிரியங்கா பின்னாளில் பெரிய மாடலாக ஆனவுடன் பழிவாங்கும் விதம்.. செம சீன்.

வெளியிலிருந்து பார்த்தால் ஆடம்பரமாய் அழகாய் ஜொலிக்கும் மாடலிங் துறையின் அசிங்கங்களை, அவமானங்களை, துன்பங்களை, பார்ட்டி இரவுகளை அட்சரசுத்தமாய் அலசி இருக்கிறது இந்தப்படம். இதன் இயக்குனர் மதுர்பண்டார்கரை எவ்வளவு கைலுக்கி வேண்டுமானலும் பாராட்டலாம். தமிழில் இது போன்ற முயற்சிகள் சாத்தியமா? நினைக்கவே மலைப்பாக இருக்கிறது... என்னைப்பொறுத்தவரை தமிழில் இந்தப்படத்தை ரீமேக் செய்தால் பிரியங்கா கேரக்டருக்கு அனுஷ்காவும், கங்கனா கேரக்டருக்கு அமலா பாலும் சரியான சாய்ஸ்.

ஒரு நல்ல ஹிந்திப்பட்த்தை பார்க்க வேண்டும் என்பவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத படம் இது, ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக்குவித்த இந்தப்படத்தை நிச்சயம் ஒருமுறை பாருங்கள்.

13 comments:

Philosophy Prabhakaran said...

பதிவு நல்லா இருக்கு... இந்தப்படம் வந்து சில வருடங்கள் ஆச்சே... ஏன் இவ்வளவு லேட்...

vinu said...

மச்சி Philosophy Prabhakaran இது அப்போ எழுதுனதுதான்.... அன்னிக்கு நைட்டு அண்ணன் கொஞ்சம் பிசி இப்போதான் தெளிஞ்சு இருக்கு அதுதான் இப்போ பப்ப்ளிஷ் போஸ்ட் அப்புடீன்குற பட்டனை தட்டி இறுகுராறு!!!! நான் சொல்லுறது கரெக்ட்டுதானே மச்சி மணி?

கவிதை காதலன் said...

//Philosophy Prabhakaran said...
பதிவு நல்லா இருக்கு... இந்தப்படம் வந்து சில வருடங்கள் ஆச்சே... ஏன் இவ்வளவு லேட்...//

எல்லாரும் க்ளாஸிக் மூவிஸ் பத்தி எழுதறாங்களே.. நாமளும் எழுதலாம்ன்னுதான்..

கவிதை காதலன் said...

//vinu said...
மச்சி Philosophy Prabhakaran இது அப்போ எழுதுனதுதான்.... அன்னிக்கு நைட்டு அண்ணன் கொஞ்சம் பிசி இப்போதான் தெளிஞ்சு இருக்கு அதுதான் இப்போ பப்ப்ளிஷ் போஸ்ட் அப்புடீன்குற பட்டனை தட்டி இறுகுராறு!!!! நான் சொல்லுறது கரெக்ட்டுதானே மச்சி மணி //

அப்படி இல்ல புதுமாப்பிள்ளை சார்.... நெட்ல இந்தப்படத்துக்கு எல்லாம் தமிழ்ல விமர்சனமே இல்ல... அதனாலதான் நாமளாவது இது போல விமர்சனமே இல்லாத படங்களுக்கு எழுதுவோம்ன்னு தான். இனிமேல் நிறைய படங்கள் வரும்... ஜாக்கிரதை... ஹி..ஹி.. வரலாறு மிக முக்கியம் மச்சி

vinu said...

////இது போல விமர்சனமே இல்லாத படங்களுக்கு எழுதுவோம்ன்னு தான். இனிமேல் நிறைய படங்கள் வரும்... ஜாக்கிரதை...////
ஓடுங்க ஓடுங்க அது நம்மளை நோக்கிதான் வருது எல்லோரும் ஒடுங்க ஒடுங்க

கவிப்ரியன் said...

அருமையான திரைப்படம்.. எனக்கு பிடித்த ஹிந்தி திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

bandhu said...

எனக்கு பிடித்த படம். இந்த படத்தை எடுக்க மது பண்டார்கர் எவ்வளவு ஹோம் வொர்க் செய்துள்ளார் என்று நினைத்து மலைத்துப்போனேன்! ஆர்தர் ஹெய்லி புத்தகம் போல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த விமர்ச்னமும் நல்லாருக்கு, எந்த திடீர்னு ஹிந்தில இறங்கிட்டீங்க? நல்ல வேளை பிரபா சொன்னாரு, இல்லேன்னா புதுப்படம்னே நெனச்சிருப்பேன்.....

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் கவிதை காதலன் சார்,
ரொம்ப ரொம்ப சூப்பரான படம்,சூப்பரோ சூப்பரான விமர்சனம்.தமிழ் படம் மட்டும் இல்லாமல் ஹிந்தி படம் மற்றும் எல்லா மொழி படங்களை பற்றியும் எழுதுதி நல்ல ஒரு விமர்சகனாகவும்,சினிமா காரராகவும் பிரதிபலிகுறீங்க வாழ்த்துக்கள்.

நான் பார்த்த மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.1st கிளாஸ்.இப்படியும் கூட படம் பண்ண முடியுமா?.அப்பா அதுவும் சினிமா துறையில் இருந்து கொண்டே.இயக்குனர் மதுர்பண்டார்கர் இயக்குனர் இமயம் என்று பட்டமே கொடுக்கலாம்.எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அப்படி ஒரு திரைகதை.அற்புதம்.பிரியங்கா,கங்கனா இருவரு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.இவர்களையா நம்ம ஆளுங்க இப்படி யூஸ் பண்ணி இருக்காங்கன்னு நினைக்கும் போது கோவம் தான் வருது...இருவருக்கும் தேசிய விருது கிடைக்காமல் இருந்திருந்தால் நிச்சம் கவலை பட்டு இருப்பேன்.

நல்ல விமர்சனம்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது மச்சி....

கவிதை காதலன் said...

@கவிப்ரியன் said...
நன்றி கவிப்பிரியன்

@bandhu
நன்றி நண்பரே

@ பன்னிக்குட்டி ராம்சாமி
உலகத்திரைப்படங்கள் எழுதுறவங்க எல்லாம் புதுப்படத்தைப்பத்தியா எழுதுறாங்க? ஹி..ஹி.. நமக்கு நம்மளோட மொழிப்படம் உலகப்படம். அதை எப்போ எழுதினா என்ன?

கவிதை காதலன் said...

@ஸ்வீட் ராஸ்கல்
நன்றி மச்சி.. தொடர்ந்து படி.. இனி தொடர்ந்து எழுதுவேன்

விஷ்ணு said...

bannar chance aakura mater semaiya irukkum sir...

neenga hindhi movie paarthutu ivalvu ezhuthuringana great....

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ விஷ்ணு

ஏதோ உங்க புண்ணியத்தால கொஞ்சம் கொஞ்சம் இந்தி புரியுது.. ஹி..ஹி.. பேனர் மேட்டர் உண்மையிலேயே கலக்கலான ஸ்க்ரீன்ப்ளே தான்

இதையும் படியுங்கள்