Saturday, March 24, 2012

Donkey Punch ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்
***********************************
இந்தப்பதிவு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கானது.  பிடிக்காதவர்கள் இங்கேயே விலகிவிடலாம்.
***********************************
7 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஜாலியாக விடுமுறைய கழிக்கலாம் என்று கப்பலில் டூர் போகிறார்கள். ஆனால் போன இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மரணம் நிகழந்துவிட ஒவ்வொருவரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார்கள். ஒருவரை ஒருவர் அடித்து கொன்று இறந்து போகிறார்கள். இறுதியில் ஒரே ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார். அது யார்? ஏன் கொலை நடந்தது? எதற்காக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள் என்பது மீதி இண்ட்ரஸ்டிங் கதை.

லீசா, கிம், டம்மி என்று மூன்று பெண்களும் ப்ளூயி, ஜோஷ், ஸீன் ,மார்கஸ் என்ற நான்கு ஆண்களும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 7 பேரும் தங்கள் விடுமுறையை ஜாலியாக  கழிக்க, கடலில் ஒரு சிறிய கப்பலை எடுத்துக்கொண்டு டேட்டிங் போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஜாலியும், கிண்டலுமாக இவர்களின் பொழுது கப்பலில் கழிந்துகொண்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் பேச்சு செக்ஸ் நோக்கி திரும்புகிறது. ப்ளூயி “Donkey Punchஎனப்படும் பின்புற உறவு கொள்ளும் முறையைப்பற்றி ஜாலியாக விவரிக்கிறான். பின் அந்த டாபிக் மாறி, அனைவரும் தூங்க செல்லுகின்றன. 

மார்கஸ், கிம், லீசா, ப்ளூயி இவர்கள் நால்வரும் ஒரே அறையில் உறவு கொள்கின்றனர். தானும் லிசாவும் உறவு கொள்வதை கேமராவில் படம் பிடிக்கும்படி ப்ளூயி, ஜோஷிடம் கூறுகிறான். ஜோஷ் அதை படம் பிடித்துக்கொண்டிருக்கிறான். பின் ப்ளூயி, ஜோஷிடம் நீ சென்று லிசாவிடம் உறவு வைத்துக்கொள், நான் இப்போது கேமராவை ஹேண்டில் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறான். ஜோஷ், இப்போது Donkey Punch முறையை செயல்படுத்த துவங்குகிறான். ஒருகட்டத்தில் ஜோஷுக்கு வெறி அதிகமாகி, வேகமாக செயல்படும் போது அவள் கழுத்தைப்பிடித்து ஏடாகூடமாக திருப்ப,  லிசா அதிர்ச்சியில் இறந்துபோகிறாள்.
இப்போது அனைவருக்கும் அதிர்ச்சி. என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கும் போது, அவள் பிணத்தை கடலில் தூக்கி போட்டுவிடலாம் என்று ஆண்கள் சொல்ல, பெண்கள் அதற்கு மறுக்கிறார்கள்.  லிசாவின் பிணம் கடலில் துக்கி எறியப்படுகிறது. கிம்மும் டம்மியும் இவர்களது செயல் பிடிக்காமல் வெறுப்படைய துவங்குகிறார்கள். ஜோஷ் உறவு கொள்ளும் போது லிசா இறந்து போனதற்கு சாட்சியான டேப் ப்ளூயிடம் இருக்கிறது. அதை தூக்கியெறிய சொல்லுகிறார்கள். ப்ளூயி தூக்கியெறிவது போல் பாசாங்கு செய்கிறான். ஆனால் தூக்கியெறியவில்லை. பின் இவர்களுக்குள் ஏற்படும் வாக்குவாத்த்தில், இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கிம் மார்கஸை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறாள். ஜோஷ், தன்னுடைய டேப் ப்ளூயிடம் இருப்பதை தெரிந்து கொண்டு அவனை துன்புறுத்துகிறான். அவன் தன்னுடைய பெட்டின் அடியில் டேப்பை மறைத்து வைத்திருப்பதாக கூற, ஜோஷ் அங்கு விரைகிறான். ஆனால் அதற்குள் கிம் அந்த டேப்பை எடுத்து விடுகிறாள்.

டேப் கிடைக்காத ஆத்திரத்தில் ஜோஷ் ப்ளூயிவின் நெஞ்சியில் கத்தியால் குத்தி துடிக்க துடிக்க கொல்கிறான். டம்மியிடம் டேப் இருக்கலாமோ? என்கிற சந்தேகத்தில் ஜோஷ் அவளை துன்புறுத்த தொடங்குகிறான். அதற்குள் ஸீன் அங்கு வந்து இருவரையும் விலக்கி சமாதனப்படுத்துகிறான். ஆனால் தூரத்தில் இருந்து பார்த்து  இதை தவறாக புரிந்துகொண்ட கிம், ஒரு மோட்டார் இயந்திரத்தை (டைட்டிலில் நீங்கள் பார்க்கும் இயந்திரம்) கையில் வைத்துக்கொண்டு ஓடிவந்து ஸீன்ஐ சுக்குநூறாக கொலை செய்கிறாள். அப்போது டம்மி, ஐயோ, இவன் நமக்கு உதவி செய்ய வந்தவன். இவனைப்போய் கொன்று விட்டாயேஎன்று கூற, குற்ற உணர்ச்சியில் கிம், கப்பலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். 
இப்போது டம்மியும், ஜோஷும் இருவர் மட்டுமே. அந்த டேப் டம்மியிடம் இருக்கிறது. ஜோஷ் அந்த டேப்பை கைப்பற்றினானா? டம்மி அவனிடமிருந்து தப்பித்தாளா? அவர்கள் கப்பலிலிருந்து வெளியேறி என்ன செய்தார்கள் என்பதை மீதிப்படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

படம் துவங்கிய 45 நிமிடங்கள் நீங்கள் பொறுமையாக பார்த்துவிட்டால் நீங்கள் பொறுமைசலிதான். நம் பொறுமையை சோதிக்கும் வகையில் என்ன என்னவோ பேசியும் செய்தும் தொலைக்கிறார்கள். ஆனால் அந்த உறவு கொள்ளும் காட்சிக்கு பிறகு படம் சூடு பிடிக்கிறது. அது கடைசிவரை குறையாமல் நீடிக்கிறது.

ப்ளூயி படத்தின் ஆரம்பத்தில், இல்லாத ஒரு பொருளை வரவழைப்பது போல் ஒருமேஜிக் செய்கிறன் என்பது போல் ஒரு சீன் காட்டுவார்கள். அது எதற்கு என்று நினைத்தால் அதில் ஒரு சரியான டிவிஸ்ட் இருக்கிறது. டேப்பை தூக்கி போட சொல்லும் போது ப்ளூயி தூக்கி போடுவதாக மேஜிக் செய்துதான் டேப்பை ஒளித்து வைப்பான். சரியான ஸ்க்ரீன் ப்ளே..
அதே போல், லீசா முதல் காட்சியில் ஷேவ் செய்யும் போது, பிளேட் பட்டு ரத்தம் வருவது போன்று காட்டுவார்கள், ஏனெனில் அவள் இறக்க போகிறாள் என்பதற்கான குறியீடே..

ஒவ்வொருவரின் கதாபாத்திர குணாதிசயம், அவர்கள் எப்படி எல்லாம் கொலை செய்யப்படுவார்கள் என்பதற்கான சின்ன சின்ன குறியீடுகள் அவர்கள் வெகு சாதாரணமாக பேசிக்கொள்ளும் போதே வெளிப்பட்டுவிடும். இதுவும் நல்ல இயக்கத்துக்கான சான்றே.

Oliver Blackburn இயக்கத்தில் வெளிவந்த ஒரு டைம்பாஸ் த்ரில்லர். பொழுதுபோக்கு விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்..


17 comments:

விஷ்ணு said...

hmm nalla movie ..paarkathan porumai venum...

சே.குமார் said...

அருமையான விமர்சனம் நண்பரே...

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா.. செம

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் மச்சி...
நல்ல விமர்சனம் டா.நல்ல படம் போல.பார்கணும்.பாதி தான் பார்க்க வாய்ப்பு கிடச்சிது.ம்ம்ம்ம் நானும் பிரதாப்பும் ஒரு நாள் உக்கார்ந்து பார்க்கணும்.பார்த்துட்டு உன் கிட்ட சொல்றேன்.பட் நல்ல விமர்சனம் இது.பார்க்க தூண்டுது.மிஸ் பண்ணிட்டேன்.டான்க்கி பஞ்ச்.சூப்பர் அண்ட் பெர்பெக்ட் டைட்டில்.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுது.

குறிப்பு:
நீங்கள் பார்த்த சில மலையாள திரை படங்களை பற்றி எழுதுங்களேன்.என்னை போன்ற உங்களின் நிறைய ரசிகர்கள் அதை படித்தால்,நிச்சயம் அந்த படங்களை பார்ப்பார்கள்.அப்படி பட்ட நல்ல படங்களை எல்லோரும் பார்க்க வேண்டும்.பார்ப்பார்கள் என்ற ஆசையில் சொன்னேன்.எதிர்பார்கிறேன்.

மாலதி said...

அருமையான விமர்சனம்

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//விஷ்ணு said...

hmm nalla movie ..paarkathan porumai venum...//

மச்சி நீ அந்த 45 நிமிஷம் பார்த்தியா? ஹி..ஹி..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//சே.குமார் said...

அருமையான விமர்சனம் நண்பரே...//

நன்றி குமார்... தொடர்ந்து படியுங்கள்.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// சி.பி.செந்தில்குமார் said...
ஆஹா.. செம //

நன்றி தல...

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

@ ஸ்வீட் ராஸ்கல் said...
ஓகே.. மச்சி.. நன்றி..
இனிமே நல்ல நல்ல படங்கள் வரும்..

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//மாலதி said...
அருமையான விமர்சனம்//

நன்றி தோழி..

ஹேமா said...

விமர்சனம் அசத்தலா இருக்கு !

இந்திரா said...

ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வரேன்.. டெம்ப்ளேட் ஏன் மாத்திட்டீங்க??? அப்புறம் மணி சார்.. கவிதைகள் என்னாச்சு???

பாரத்... பாரதி... said...

சுவாரஸ்யமான உங்களின் விமர்சன பார்வைக்கு சல்யூட்.

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

ஹேமா said...
விமர்சனம் அசத்தலா இருக்கு !//

நன்றி தோழி

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

//இந்திரா said...
ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வரேன்.. டெம்ப்ளேட் ஏன் மாத்திட்டீங்க??? அப்புறம் மணி சார்.. கவிதைகள் என்னாச்சு???//

ஏன் அடிக்கடி வந்தா போலீஸ் பிடிக்குமா மேடம்? உங்க கமெண்ட் எனக்கு ரொம்ப முக்கியம்.. so, அடிக்கடி வாங்க.. பழைய டெம்ப்ளேட் நிறைய பேருக்கு ஓபன் ஆகறதுல பிராப்ளம்ன்னு சொன்னாங்க.. அதான் மாத்திட்டேன்.. அதுமட்டும் இல்லாம, ஒரு மாற்றம் வேணும்ன்னு தான்.... கவிதைகள் எழுதணும்ன்ன ஃபோட்டோஷாப் வேணும்.. என் சிஸ்டம்ல அது கரெப்ட் ஆகிடுச்சி.. ஹி..ஹி.. அத ரெடி பண்ணின அப்புறம்தான்...

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

// பாரத்... பாரதி... said...
சுவாரஸ்யமான உங்களின் விமர்சன பார்வைக்கு சல்யூட்.//

நன்றி தல

Anonymous said...

ரசிச்சு எழுதியிருக்கீங்க...உருப்படாத படம் என்ற கவலையே இல்லாமல்...

முதல் வருகை..மறுபடி வருவேன் கண்டிப்பாக...

இதையும் படியுங்கள்