
சேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு சேனல்கள் மிக அழகாக தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு விடுவார்கள். மக்களுக்கும் அடுத்தவர்கள் அடித்துக் கொள்வதை பார்ப்பதில் ஒரு அற்ப சந்தோஷம். (ஹி..ஹி..எனக்கும்தான்) சிம்பு-பிரித்விராஜ், சிம்ரன்-விஜய் ஆதிராஜ் என்று பல கூத்துக்களை நாம் கண்டு களித்திருக்கிறோம். அது ஒரிஜினல் நிகழ்ச்சிகளா இல்லை செட்டப்பா என்று இன்னும் பல விவாதங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் தாத்தா ஒருத்தர் இருக்கிறார். தெரியுமா? யாகவா முனிவரும் சிவசங்கரபாவும் ஒரு முறை தொலைக்காட்சியில் அடித்துக்கொண்டார்களே. அதைத்தான் சொன்னேன். இது போன்ற ஸ்க்ரீன் அடிதடிக்கெல்லாம் அதுதான் முன்னோடி..
சிம்புவின் படங்களை யூ டியூபில் அதிகம் பார்த்த்தைவிட, ”எனக்கு நடிக்க தெரியாதுய்யா” என்ற க்ளிப்பிங்கைத்தான் அதிகம் பேர் பார்த்திருப்பார்கள். இதையெல்லாம் ஒளிபரப்பித்தான் ஆக வேண்டுமா என்றால், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு இதில் ஒரு அட்வான்டேஜ் இருக்கிறது. சாதாரணமாக இந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு 3 பாயிண்ட் டி.ஆர்.பி இருக்கிறது என்றால், இது போன்ற சர்சைக்குரிய விஷயங்கள் வரும் போது டி,ஆர்,பி. தாராளமாக 5 பாயிண்டுகள் வரை உயரும். இது சேனலுக்கும் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டிக்கொடுக்கும். அதனால்தான் இது போன்ற சண்டைகளையும் சச்சரவுகளையும் ஊக்குவிக்கிறார்கள் சேனலுக்கும் நிகழ்ச்சி நடத்துபவர்கள். மக்களும் அந்த எபிசோடுக்கான புரோமோவை பார்த்த்தில் இருந்து அந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.
இதோ அது போல ஒரு எபிசோட்.
சமீபத்தில் இதே ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் போட்டியில் கலந்து கொண்ட ஒரு நபரின் நடனமாடும் திறமை பற்றி சில கருத்துக்களை கூற, அந்த நபரோ ரம்யாகிருஷ்ணனின் பேச்சில் டென்ஷனாகிவிட்டார். அவரும் ரம்யா கிருஷ்ணனும் மாறி மாறி சில கருத்துக்களை கூறிக்கொண்டே இருந்தனர். அந்த போட்டியாளர் யாருடைய கருத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அவர் நின்று கொண்டிருந்த விதமும், பேசிய டோனும் எல்லாருக்கும் நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும்.. அதிலும் அவர் “This is not my cup of Tea” என்று சொன்னது செம ஆட்டிட்டியூட்.. அவர் So என்று கேட்ட உடனே ரம்யாகிருஷ்ணன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். ஆனால் அடுத்த நொடியே அவர் டிவி என்பதை உணர்ந்து சுதாரித்துக்கொண்டார் ஆனால் கடைசிவரை அந்த போட்டியாளர் தன் முடிவிலேயே உறுதியாக இருந்தார். சில சமயங்களில் போரடிக்கும் அந்த நிகழ்ச்சி, இந்த எபிசோடில் கொஞ்சம் களைகட்டியது.. பாருங்கள்...
இந்தப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்
26 comments:
காலையில் பார்க்கிறேன் நண்பா. எல்லாம் டிஆர்பி தான் காரணம்.
t r b kkaakath thaan ellaame.. nalla pakirvu..vaalththukkal
அந்த நிர்மலை ஓங்கி அறையலாம் போல இருக்கு, ரம்யா டென்சனாகுனது தப்பே இல்ல.........!
அழகு ரம்யா .. கோவ ரம்யாவா மாறிட்டு
இன்று என் வலையில் ..
பல்சுவை வலைதளம் விருது
nalla pakirvu..
paaraaaddukkal..
http://sempakam.blogspot.com/
லொள்ளு தான் அந்தாளுக்கு
// பலே பிரபு said...
காலையில் பார்க்கிறேன் நண்பா. எல்லாம் டிஆர்பி தான் காரணம். //
நன்றி பிரபு..
Reality "Show" bites!!!
நிஜமாவே இது கவிதை காதலரோட வலைதளம் தானா? தினமும் பதிவுகள் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல???
பாராட்டுக்கள்.
கவிதை எங்கப்பா?
சீக்கிரம் எழுதுங்க பாஸூ..
கோவம் எல்லாருக்கும் வரும் .........அத அடக்குறவன் ஜெய்கிறான் முடியாதவன் தோற்கிறான் ............
இங்க ரம்யா ........கோவத்த அடகிட்டாங்க
கோவத்த மனுசனால அடக்க முடியும் ......நாம 5 அறிவு உள்ள மிருகம் இல்ல
நல்ல ஒரு விசயத்த குடுத்த கவிதைகாதலனுக்கு நன்றி .................
ஆனா அது உண்மையா இல்லையானு தான் தெரியல யேஏஏஏஏஏஏஏஎ ............
இது வெறும் ஏமாற்று நாடகமே ..
// Chitra said...
Reality "Show" bites!!! //
நன்றி சித்ரா..
// இந்திரா said...
நிஜமாவே இது கவிதை காதலரோட வலைதளம் தானா? தினமும் பதிவுகள் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல???
பாராட்டுக்கள்.//
நன்றி இந்திரா.. இப்ப கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேனா.. அதான் ஹி..ஹி..
//கவிதை எங்கப்பா?
சீக்கிரம் எழுதுங்க பாஸூ..//
சீக்கிரமே வரும் தோழி
// விஷ்ணு said...
கோவம் எல்லாருக்கும் வரும் ..அத அடக்குறவன் ஜெய்கிறான் முடியாதவன் தோற்கிறான்
இங்க ரம்யா ...கோவத்த அடகிட்டாங்க. கோவத்த மனுசனால அடக்க முடியும் ......நாம 5 அறிவு உள்ள மிருகம் இல்ல. நல்ல ஒரு விசயத்த குடுத்த கவிதைகாதலனுக்கு நன்றி ..........//
விஷ்ணு சார் நீங்க இவ்ளோ பெரிய கமெண்ட் கூட போடுவீங்களா? நம்பவே முடியலை சார்.. ரொம்ப தேங்க்ஸ்
// அரசன் said...
இது வெறும் ஏமாற்று நாடகமே ..//
நோ கமெண்ட்ஸ்..
கருத்துக்கு நன்றி அரசன்
இதுவும் ஒரு நாடகமோ?
ப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?
nalla pathivu nanbare
Nilarasigan
ரசித்தேன்.
ஹாய் மச்சி,
நிர்மல் செய்தது நிச்சயம் தவறு தான்.இது போன்ற மேடை கிடைகாமல் எவ்ளோ பேரு வெளியே வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இது அவருக்கு சுலபமாக கிடைத்துவிட்டதால் அவர் அதன் மதிப்பை உணரவில்லை என்பதே உண்மை.
மச்சி ஒன்னு மட்டும் நல்லா புரியுது டா.உனக்கும்,விஜய் டீவிக்கும் நல்ல ஒரு தொடர்பு இருக்கிறது.நிச்சயம் அந்த தொலைகாட்சிக்கு இது ஒரு நல்ல விளம்பரம்.எவ்ளோ அமொளண்ட் வந்துது விஜய் டீவில இருந்து.மச்சி ட்ரீட் எப்போ டா.நல்லா இருக்கு மச்சி.வாழ்த்துக்கள் டா.
எல்லாம் செட்டப்பு மாப்பு.
everthing setup to grow their rating... that's all.. please read my blog www.rishvan.com and leave your comments.
you lines are simply super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/
கவிதைகளைக் காதலிப்பவர் கொஞ்ச நாளா ஆளையே காணோம்.. யாராவது கண்டுபிடிச்சு குடுங்கப்பா....
அன்புள்ள தோழமைக்கு, உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html
Post a Comment