Wednesday, August 24, 2011

மங்காத்தா – ஒரு ஸ்பெஷல் பார்வை

க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் வெங்கட்பிரபு இயக்கி வெளிவரும் படம் மங்காத்தா. தொடர் தோல்விகளால் துவண்டு கொண்டிருக்கும் அஜீத்தின் சினிமா கேரியரை ஒரு ஸ்டெப் தூக்கி நிறுத்த செய்யும் முயற்சிதான் இந்தப்படம். எப்போதும் அஜீத் படத்தில் ஒன்மேன் ஷோவாகவே திரைக்கதை அமையும். (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திய ட்ரெண்ட். அதையெல்லாம் தூக்கி போடுங்கண்ணா) ஆனால் இந்தப்படத்தில் அஜீத் தற்போதைய சினிமாவின் நிலையை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆம், அர்ஜீன், பிரேம்ஜி, வைபவ், ஜெயப்பிரகாஷ், சோனா, புது அறிமுகங்கள் என பலர் அஜீத்திற்கு பக்கபலமாக நின்றிருக்கிறார்கள்.

மேலும் த்ரிஷா, ஆண்ட்ரியா, லக்ஷ்மி ராய், அஞ்சலி என நடிகைகள் பட்டாளமும் படத்தில் உண்டு. இது அஜீத்திற்கு ஐம்பதாவது படம் என்பதால் நிறைய காம்ப்ரமைஸ்களோடு அவர் நடித்திருக்கிறார். ஐம்பதாவது படத்தை வெற்றிப்படமாக கொடுத்துவிட வேண்டும் என்ற வெறி. அது நன்றாகவே ஒர்கவுட் ஆகி இருக்கும் என நம்பலாம். வெங்கட் பிரபு பொதுவாகவே ஜாலியான பேர்வழி. அதுவும் இத்தனை நட்சத்திர பட்டாளங்கள் கிடைத்துவிட, படத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறார் மனுஷன். இந்தப்படம் கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தைப்பற்றியது. சுமார் 500 கோடி பணத்தை கைப்பற்றுவதில் தொடங்கும் போராட்டமும் அதன் பின் விளைவுகளுமே கதை..

ஓஷன்ஸ் லெவன் படத்தில் இருந்தும் ஹிந்தி ஜென்னட் படத்தில் இருந்தும் இந்தக்கதை சுடப்பட்டுருக்கிறது என்ற தகவலும் படத்தைப்பற்றி வெகுவாக பேசப்பட்டுவருகிறது. ஆனால் மங்காத்தா டீம் இது ஜென்னட் படம் இல்லை என்பதை மட்டுமே மறுத்திருக்கிறார்கள். பார்க்கலாம் என்னதான் ஆகிறது என்று..

பாங்காக், மும்பை, சென்னை என பல இடங்களில் ஷூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது. பாடி மவுண்ட் கேமரா(Body Mount Camera) எனப்படும் முப்பது கிலோ எடையுள்ள ஒரு கேமராவை பயன்படுத்தி க்ளோசப் போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சக்தி சரவணன் ஒளிப்பதிவில் படத்தின் ரிச்னெஸ் இன்னும் ஒருபடி மேலே ஏறியிருக்கிறது. யுவனின் இசை பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. முக்கியமாக இளசுகளை குறிவைத்து தாக்கி இருக்கிறது. விளையாடு மங்காத்தா பாடல்தான் இப்போதைய ஹாட் கேக்.

நான் இதுவரை அஜீத் படங்களை தியேட்டரில் சென்று பார்த்ததில்லை. (வாலியைத்தவிர). ஆனால் இந்தப்பட்த்தின் மீது ஏனோ ஒரு அட்ராக்‌ஷன் இருக்கத்தான் செய்கிறது. நிச்சயம் பார்த்துவிடுவேன் என நினைக்கிறேன். ட்ரெய்லரே வெகு அசத்தலாய், ஆர்ப்பாட்டமாய் வந்திருக்கிறது.


அஜீத் படத்தில் ஸ்பெஷல் மேக்கப் எதுவுமின்றி, வெகு நேச்சுரலாகவே வருகிறார். அந்த லேசான நரைத்த வெள்ளைமுடியும் அவருக்கு அட்டகாசமான லுக்கையே தருகிறது. அஜித் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி விட்டார்..குறிப்பிடப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அஜீத் இந்தப்படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார். எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று அவரே இந்தப்பட்த்தில் பஞ்ச் அடித்திருக்கிறார். வாலி திரைப்படத்திற்கு பிறகு நெகட்டிவ் ரோல்.. இது போன்ற வித்தியாசமான கலர் கொண்ட கதாபாத்திரங்களைத்தான் ரசிகர்களும் எதிர்பார்க்கிறாங்க.. அசல், அட்டகாசம் போன்ற மொக்கை க்ளிஷேக்களை அல்ல.

அஜீத் இதை நன்றாக உணர்ந்து கொண்டார் போலும்.. (சூடு பட்டாதான்யா சில பேருக்கு தெரியுது. நம்ம விஜய் சுறா வேட்டைக்காரனில் கற்றுக்கொண்ட பாடத்தைப்போல) இந்த பவர்ஃபுல் எண்டர்டெயினரை அஜீத் சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்த படங்களை தேர்ந்தெடுப்பாரே ஆனால் அவரை அடித்துக்கொள்ள ஆள் இருக்காது. எப்போதும் அஜீத் படங்களுக்கு பிரமாதமான ஓப்பனிங் இருக்கும்.. அது இந்தப்படத்திற்கும் இருக்கத்தான் செய்யும். டிரெய்லரும் பாடல்களும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிக்கலும் வந்திருக்கிறது.

க்ளவுட் நைன் மூவிஸின் முந்தைய படங்களான வ – குவாட்டர் கட்டிங்கும், அழகர்சாமியின் குதிரையும் சரியாக போகாத சூழ்நிலையில் விநியோகஸ்தர்கள் இந்தப்படத்திற்கு சில சிக்கல்களை முன் வைத்திருக்கிறார்கள். அதைக்கூட சமாளித்துவிடலாம். சென்ற முறை ஆட்சி செய்தவர்களின் படங்களுக்கு இப்போது என்ன சிக்கல் நேருகிறது அனைவருக்குமே தெரியும். அதே சிக்கல்தான் இப்போது தயாநிதி அழகிரிக்கும் நேருகிறது. இதையெல்லாம் மீறி படத்துக்கு இருக்கும் ஒரே பூஸ்ட் அஜீத், அஜீத், அஜீத்.

வாஙக் சார்.. வந்து சீக்கிரம் ஆட்டத்தை ஆரம்பியுங்க.. நாங்களும் ஒரு கை போடுறோம்..

விளையாடு மங்காத்தா...
11 comments:

பிரதாப் said...

மச்சி ரொம்ப நன்றிடா.... தலை பத்தி எழுதுனதுக்கு..
தலை இந்த படத்துல கலக்குவாரு பாரடா(எல்லா படத்துக்கும் இதை தான் சொல்றோம்)
கடவுளே காப்பாத்து...

இந்திரா said...

படமே வரலை.. அதுக்குள்ள விமர்சனமா??

ரொம்பவே எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலானவை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில்லை. பார்க்கலாம்.
மங்காத்தா விதிவிலக்கா என்று.

தமிழ்வாசி - Prakash said...

இந்திரா said...
படமே வரலை.. அதுக்குள்ள விமர்சனமா??

ரொம்பவே எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலானவை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில்லை. பார்க்கலாம்.
மங்காத்தா விதிவிலக்கா என்று>>>>

அப்படியெல்லாம் சொல்லப்படாது சகோ

தமிழ்வாசி - Prakash said...

நின்னு ஆடும் மங்காத்தா...

கவிதை காதலன் said...

பிரதாப் said..
மச்சி ரொம்ப நன்றிடா.... தலை பத்தி எழுதுனதுக்கு..
தலை இந்த படத்துல கலக்குவாரு பாரடா(எல்லா படத்துக்கும் இதை தான் சொல்றோம்)
கடவுளே காப்பாத்து...

டிரைலரே அருமையா இருக்கு மச்சி படமும் நல்ல வரும் போல

கவிதை காதலன் said...

// இந்திரா said...

படமே வரலை.. அதுக்குள்ள விமர்சனமா??
ரொம்பவே எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலானவை அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில்லை. பார்க்கலாம்.
மங்காத்தா விதிவிலக்கா என்று.//

இது விமர்சனம் அல்ல இந்திரா. ஒரு முன்னோட்டம்தான்... ஹி..ஹி

கவிதை காதலன் said...

//தமிழ்வாசி - Prakash said..

நின்னு ஆடும் மங்காத்தா..//

ஆடினா சந்தோசம் தானே

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நாங்களும் தலக்கு வெயிட் பண்றோம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்!

மைந்தன் சிவா said...

மங்காத்தா விளையாட வாழ்த்துக்கள்!

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹாய் மச்சி,
படம் வருவதற்க்கு முன்பாகவே விமர்சனமா,ம்ம்ம்ம்ம் குட்.படத்த பத்தின எதிர்பார்ப்பு எனக்கும் பயங்கரமா இருக்கு.அதுவும் அஜித் நெகடிவ் ரோல் வேர பண்ணியிருக்காரு.இதுவே படத்த பார்க்க தூண்டும் மிகப்பெரிய ப்ளஸ்.அஜித்தின் கெட்டப் வாய்ப்பே இல்ல,செம சூப்பரா இருக்கு.ட்ரெய்லர் மிரட்டுது.பாட்டு எல்லமே செமயா இருக்கு.அதுவும் மங்காத்தா டா பாட்டு fast பீட் ஓஹோ.அந்த மங்காத்தா தீம் musicகும் சூப்பர்.ட்ரெய்லரின் கடைசியில் அஜித் "நானும் எவ்ளோ நாளைக்கு தான் நல்லவனாவே நடிக்குரதுன்னு" சொல்றது சூப்பர் டா.படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்,ஆசையும் ரொம்பவே அதிகமாய்டுச்சி.செம கூட்டணி.படம் கண்டிப்பா ஹிட்.படதிற்க்கு எந்த தடையும் இருக்காது என்பது என்னுடய கருத்து.ஏன்னா தல அம்மாவோட அன்பை பெற்றவர்.இது தலயின் 50வது படம் வேறு.தலைக்கு மிகவும் முக்கியமான படம்.அதனால் தான் எந்த தடையும் இருக்கதுன்னு சொன்னேன்.மற்றுமொறு நல்ல பதிவு மசி.வாழ்த்துக்கள் டா.தொடர்ந்து எழுது...

இதையும் படியுங்கள்