Monday, August 8, 2011

ஒரு அட்டகாசமான பாடல்


களவாணி என்ற டீசண்டான வெற்றிப் படத்தையை கொடுத்த இயக்குனர் சற்குணத்தின் அடுத்தப் படமான ”வாகை சூடவா” மீது ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அதுவும் தற்போது வழக்கத்திலேயே இல்லாத 60 வகை உணவு வகைகளை அவர் படத்தில் படைத்திருக்கிறார், அட்டகாசமான பீரியட் ஃபிலிம் என்ற பல தகவல்களை கேட்டதில் இருந்தே படத்தின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் படத்தின் போஸ்டர் டிசைன்களை கூட வெகு நேர்த்தியாக கொடுத்திருந்தார்கள். இதனாலேயே படத்தின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டு பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். வெகு சாதாரணமாக பாடல்கள் இயங்கிக்கொண்டிருந்தன, சடாரென ஒரு பாடல்..

ஆளை கிறங்கடிக்கும் குரலில் ஒரு பெண் ”போறானே.. போறானே...” என்று பாட ஆரம்பித்தார். மெல்ல அந்தக்குரலில் மயங்கி கண்மூடி கேட்டுக்கொண்டு இருந்தேன். அட.. அட.. என்ன ஒரு லாவகம் அந்தக்குரலில்... அடித்துப்பிடித்து யாருடா இந்தக்குரல் என்று தேடிப்பிடித்துப்பார்த்தால், அட நம்ம நேஹா பாசின்.. (சத்தம் போடாதே படத்தில் பேசுகிறேன் பேசுகிறேன் என்று கொஞ்சியவர். விவா க்ருப்ஸ் கேர்ள்ஸ்’ல் ஒருவர்.) ”பேஷன்’ திரைப்படத்தில் ”குச் காஸ்” பாடலும் இவரின் அசத்தலான பாடல்களில் ஒன்று.. ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண்ணின் குரலை வெகு அசாத்தியமாக ஒரு கிராமிய பாடலில் புது இசையமைப்பாளர் ஜிப்ரான் புகுத்தி இருக்கிறார். அது கேட்பதற்கு சுகமாகவே இருக்கிறது. ”போறானே போறானே” என்று நேஹா ஆரம்பிக்கையில் நாமும் கூடவே போய்விடுகிறோம்.

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

மிக எளிதான தாளக்கட்டுக் கொண்ட பல்லவி.. அதற்குள் அழகாக பொருந்திப் போகின்றன கார்த்தி நேத்தாவின் வரிகள்.


பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

முதல் சரணத்திலேயே வெகுவாக நம்மை ரசிக்க வைக்கிறார்கள் பாடலாசிரியரும், இசையமைப்பாளாரும், நேஹாவும்.. இதயத்தை இரவல் கேட்பவர்களுக்கு மத்தியில் இந்த கிராமத்து சிறுக்கி ஈரக்குலையை இரவல் கேட்கிறாள். அதுவும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.. ஆணின் வாசத்தை டீத்தூளுடம் ஒப்பிடும் ரசனையும் புதுசுதான்.

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட
உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்

சீம்பாலு வாசனை, அடைகாக்கும் கோழியின் தவிப்பு, இரண்டாம் முறையாக வயசுக்கு வருதல் போன்ற சில அட போட வைக்கும் வர்ணனைகளுக்கு வாக்கப்பட்டு இருக்கிறது இந்தப்பாடல். நேஹாவின் குரலிலேயே கிறங்கிவிட்டதால் ரஞ்சித் மீது பெரிதாக ஈர்ப்பு வரவில்லை.. (சாரி நண்பா) 30 சதவீதம் ஆண் தன்மை கூடிய ஒரு குரல் நேஹாவிடம் இருப்பது இந்தப்பாடலுக்கு ஒரு கிக்கை கொடுக்கிறது. எனக்கு ஏனோ நேஹாவின் குரலை கேட்கையில் Yulia Savicheva’ வின் நியாபகம் வருவதை தடுக்கவே முடிவதில்லை.. கடந்த ஒரு வாரமாக இந்தப்பாடல்தான் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எந்த இடத்திலும் உறுத்தாத இசை, பாடலுக்கு இன்னும் பிளஸ்..இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவராம். பெர்க்யூஷன் டீட்டெய்ல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நிச்சயம் பெரிய இடத்தை அடையலாம். இந்தப்பாடலை எடுக்கும் விதத்தில் எடுத்தால், நிச்சயமாய் விஷுவலாய் கலக்கலாம். பார்க்கலாம் படத்தில் எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று.. அந்திப்பொழுதுகளில், மிக லேசாக வெளிச்சம் படரும் அதிகாலையில், மெல்லிய மழைச்சாரல்களில் என்று பலவித கற்பனைகளில் இந்தப்பாடல் எனக்குள் ஒரு ஹைக்கூவாக விரிந்துக்கொண்டே இருக்கிறது.. (ஏமாத்திப்புடாதீங்க மக்கா).. ”பூ” திரைப்படத்தில் வரும் ”ஆவாரம்பூ” பாடலின் அழகியல் போலவே இந்தப்பாடலும் இருப்பதாக எனக்குப்படுகிறது. ஒரு அழகான அனுபவத்தை கொடுக்கும் இந்தப்பாடலை கேட்டுப்பார்த்து சொல்லுங்கள்.


50 comments:

Chitra said...

lovely song....

சி.பி.செந்தில்குமார் said...

வாகை சூடிடும்

பிரதாப் said...

machi nice song da...chanceye illa

uDanz said...

please add your blog in http://udanz.com. and voting widget

பிரதாப் said...

மச்சி நல்ல பாட்டு...

கவிதை காதலன் said...

//Chitra said...

lovely song....//

நன்றி சித்ரா மேடம்

இந்திரா said...

பாடல் வரிகள் பிரமாதம் தான்.

குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள
“ரெண்டாம் முறையா குத்த வச்சேன்..
சீம்பாலு வாசம் போல..”
வரிகள் மீண்டும் படிக்கத் தூண்டின..

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
வாகை சூடிடும்//

நன்றி தலைவா

கவிதை காதலன் said...

//பிரதாப் said...
machi nice song da...chanceye illa
மச்சி நல்ல பாட்டு...//

தேங்க்ஸ் மச்சி.. உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்குறேன்..

கவிதை காதலன் said...

//இந்திரா said...
பாடல் வரிகள் பிரமாதம் தான்.
குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்..சீம்பாலு வாசம் போல..”வரிகள் மீண்டும் படிக்கத் தூண்டின..//

நன்றி இந்திரா...

பிரதாப் said...

ஆமாம் மச்சி. டீ துள் மேட்டர் சூப்பர் மச்சி....

கவி அழகன் said...

அசத்துது

கவிதை காதலன் said...

//பிரதாப் said...
ஆமாம் மச்சி. டீ துள் மேட்டர் சூப்பர் மச்சி....
//

என்ன மச்சி திரும்ப திரும்ப பாட்ட கேட்டுகிட்டு இருக்க போல

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பாடல் எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது... ரசித்து மகிழ்ந்தேன்

எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி...

'பரிவை' சே.குமார் said...

எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்... அருமையான பாடல்.

கவிதை காதலன் said...

//கவி அழகன் said...
அசத்துது
//

நன்றி நண்பா

கவிதை காதலன் said...

// Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...பாடல் எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது... ரசித்து மகிழ்ந்தேன்
எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி...//


நன்றி வாசன்.

கவிதை காதலன் said...

// 'பரிவை' சே.குமார் said...
எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்... அருமையான பாடல் //


மிக்க நன்றி நண்பா.. தொடர்ந்து படியுங்கள்

க.பாலாசி said...

நன்றிங்க பகிர்வுக்கு.. இன்னும் பாடல் கேட்கல.. கேட்கறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

வெற்றி வாகை சூடும்....!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாடல் விமர்சனம் அருமை, பாட்டு இன்னும் கேட்கலை, கேட்டுப்பார்க்கிறேன்!

கவிதை காதலன் said...

//க.பாலாசி said...
நன்றிங்க பகிர்வுக்கு.. இன்னும் பாடல் கேட்கல.. கேட்கறேன்..//

நன்றி பாலாஜி.. கேட்டுப்பாருங்க..

கவிதை காதலன் said...

//MANO நாஞ்சில் மனோ said...
வெற்றி வாகை சூடும்....!!!//

நன்றி மனோ சார்...

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாடல் விமர்சனம் அருமை, பாட்டு இன்னும் கேட்கலை, கேட்டுப்பார்க்கிறேன்!//

கேட்டுப்பாருங்க தலைவா.. சூப்பரா இருக்கும்..

விஷ்ணு said...

nice song.......

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
செம பாட்டு டா.சூப்பர் டா.வாய்ப்பே இல்ல.ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.நேஹா பாசின் - என்ன ஒரு வாய்ஸ் மச்சி இவங்களுக்கு.பேசுகிறேன்,பேசுகிறேன் பாட்டு ரொம்ப நல்ல பாட்டு தான்.But இவங்க இந்த பாட்டுல தான் என்ன ரொம்ப அட்ராக்ட் பண்ணிடாங்க.இந்த பாட்டு முழுசாவே எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு,but ஒரு சில வரிகளை நேஹா பாசின் ரொம்பவே ரசிக்கும்படி பாடி அசத்தியிருக்காங்க.அந்த வரிகள் எனக்கு ரொம்பவே பிடிச்சசிருக்கு.அந்த வரிகள்,பாடல் தொடங்கும் போது மெல்லிய இசையோடு வரும்
//போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல//

//ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளூ வாசம் கொண்ட மோசக்காரா//

//அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு//

கடைசியில் போறானே போறானே என்று இழுக்கும் அந்த இடம்,நான் சொன்ன இந்த வரிகளை எல்லாம் head phone போட்டு அமைதியாக கேட்டு பாருங்கள்,அப்போது புரியும் உங்ளுக்கும்.இப்படி ஒரு சில இடங்களில் சொக்க வைத்துவிடுகிறார் நேஹா பாசின்.
இவருடைய தீவிர ரசிகனாகிவிட்டேன்,ஆம் இந்த ஒரு பாடலே போதும் இவரை எப்போதும் பிடிக்க.பாட்டு முழுசாவே நல்லா note பண்ணா தெரியும்,ஏத்த,இறக்கம் எல்லாமே ஒரே equalலா இந்த பாட்ட இரண்டு பேருமே அவ்ளோ அழகா பாடியிருப்பாங்க.ஒரு மார்டன் பெண்ணை இப்படி ஒரு அற்புதமான கிராமத்து பாடலை பாடவைத்ததற்க்கு இசையமப்பாளர் ஜிப்ரானை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ரஞ்சித்தும் நன்றாகத் தான் பாடியிருக்கிறார்.தடால்,புடால் என்று இசையமைக்காமல் அழகாக மயிலிறகால் வருடும் மெல்லிய இசையை கொடுத்திருக்கிறார்.சர சர பாடலும் சின்மயி குரலில் மனதை வருடுகிறது.பாடல்கள் அனைத்துமே நன்றாகத்தான் இருக்கிறது.நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் ஜிப்ரான்.

பாடலாசிரியரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.கார்த்தி நேத்தா,இன்னொரு நல்ல பாடலாசிரியர் தமிழுக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.அரைச்ச மாவையே அரைக்காமல்,புது புது வரிகளை சேர்த்து அசத்தியிருக்கிறார்.காத்துல தூத்தல் போறது எவ்வளவு அழகு,பொந்துகுள்ள நிறைஞ்சி இருக்குற புகை,இவற்றின் அழகு பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்.ஈரக்கொலையை இரவல் கேட்பது,ஆணின் வாசனையை டீ தூளுடன் ஒப்பிடுவது,சீம்பாலின் வாசனையுடன் அவனின் சிரிப்பை ஒப்பிடுவது,அடைக்காக்கும் கோழியின் தவிப்பு,அவள் கைபட்ட மண்ணை காயத்துக்கு மருந்தாக பூசுவது.இப்படி அனைத்து வரிகளும் ஆஹா,ஓஹோ,அழகோ,அழகு.
நிச்சயம் இந்த பாடல் இந்த வருடத்தின் டாப் 10 வரிசையில் வரும்.எனக்கும் இந்த பாடல் விஷுவலாய் எப்படி இருக்கும் என்று ரொம்ப ஆவலாய் இருக்கிறது.நிச்சயம் இயக்குனர் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்.என் மனம் கவர்ந்த பாடல்களின் வரிசையில் இப்பாடலும் சேர்ந்துவிட்டது.
வாழ்த்துக்கள் மச்சி.ஒரு பாடலை பற்றி எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறாய்.ஒரு நல்ல படைப்பாளியால் மட்டுமே நல்ல விஷயஙளை தேடி தேடி பிடிக்க முடியும்.அந்த விஷயத்தில் நீ ஒரு நல்ல படைப்பாளி மச்சி.தொடர்ந்து எழுது டா...

ஹேமா said...

அழகான பாடல்.ஸ்வீட் ராஸ்கலின் முழுதான் பின்னூட்டமும் இன்னும் பாடலை ரசிக்க வைக்கிறது !

ஸ்வீட் ராஸ்கல் said...

நன்றி ஹேமா அவர்களே...கவிதைகாதலன் எவ்வளவு அழகாக இந்த பாடலை நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் பாருங்கள்.இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கூட இந்த பாடலை இப்படி இவ்வளவு அழகாக அறிமுகம் செய்திருக்கமாட்டார்கள்.

பிரதாப் said...

போதுமடா அவங்க பாராட்டிட்டாங்க.
இனிமேல் தயவுசெஞ்சி இவ்வளவு
பெரிய கமெண்ட் போடதே pls ..

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் ஓட்டு போட வந்தேன்

விஷ்ணு said...

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ..................... இங்க விமர்சனம் எழுதினது ........MR . கவிதை காதலன?

இல்ல MR . ஸ்வீட் ராஸ்கல?

பலே பிரபு said...

முதல் முறை சரியாக கவனிக்கவில்லை இப்போ கேட்கிறேன். (சர சர பாட்டும் அருமையா இருக்கு)

நேகா பாசின் கவிதை குண்டர்ல "இதுவரை நான்" என்ற பாடலையும் பின்னி எடுத்துருப்பார்

ஸ்வீட் ராஸ்கல் said...

Mr.பிரதாப் யாரும் என்னை பாராட்ட வேண்டும் என்று நான் எதையும் செய்யவில்லை.அந்த எண்ணமும் எனக்கு இல்லை. உங்காளால் இந்த பாடலை பற்றி எழுத முடிந்ததா?,என்னால் முடிந்ததா?இல்லை எவ்வளோ பேரு ப்ளாக் எழுதுறாங்க அவங்களால முடிந்ததா?.யாருக்கும் அதை பற்றி தோன்றாத போது நம் நண்பன் அதை பற்றி இவ்வளவு அழகாக எழுதி இருக்கிறான்.அவனுக்கு நம்மால பெருசா எதையும் கொடுக்க முடியாது.பாராட்டுங்க சார்,வாய் விட்டு பாராட்டுங்க.ஊரரிய பாரட்டுங்க.பாராட்டுரதுல என்ன சின்னது,பெருசு.அவன் எழுதுனதுக்கு equalலா நான் அவன பாராட்டலயேன்னு கஷ்டமா இருக்கு.அவன் எவ்ளோ டைம் எடுத்துட்டு இருப்பான் இந்த ப்ளாக் எழுத,கொஞ்சம் யோசிச்சி பாருங்க சார்,அதுக்கு முன்னாடி நான் எழுதுனது பெருசாவே தெரியாது.முடிஞ்சா நீங்களும் பெருசா எழுதி பாராட்டுங்க சார்.நான் இந்த விஷயதுல நிச்சயம் என்னை மாதிக்க மாடேன்.இனியும் இதை விட பெருசா கூட கமெண்ட் போடுவேன்.கவிதை காதலனே சொன்னாலும் நிறுத்த மாட்டேன்.கொய்யால இதுக்கு மேல ஏதாவது பேசுன மண்டய உடச்சி மாவிளக்கு வெச்சிடுவேன்.Becareful...

ஸ்வீட் ராஸ்கல் said...

சந்தேகமே வேண்டாம் கமாண்டோ (விஷ்ணு) சார்,கவிதை காதலன் தான் விமர்சனம் எழுதுனது.நான் அவரை பாராட்ட தான் சின்னதா ஒரு கமெண்ட் போட்டேன் அவ்ளோ தான்.கவலை படாதீங்க சார் அடுத்த தடவை இத விட பெருசா போடுரேன்.

பிரதாப் said...

l love you மச்சி தண்ணி குடி,இல்ல சோடா தரவா?
உம்மா..............................

பிரதாப் said...

இதுவே சின்னதாம்... விச்சு முடியல மச்சி......

ஸ்வீட் ராஸ்கல் said...

@ பிரதாப்,
அதெல்லாம் வேணா மச்சி.ஒரு குவேட்டர் சொல்லேன்.

கவிதை காதலன் said...

//விஷ்ணு said...
nice song.......//

நன்றி விஷ்ணு..

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...//
மச்சி இவ்ளோ டீட்டெய்லா கமெண்ட் கொடுக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப உற்சாகமாவும் இருக்கு..மிக்க நன்றி மச்சி

கவிதை காதலன் said...

//ஹேமா said...
அழகான பாடல்.ஸ்வீட் ராஸ்கலின் முழுதான் பின்னூட்டமும் இன்னும் பாடலை ரசிக்க வைக்கிறது !//

நன்றி ஹேமா..

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்மணம் ஓட்டு போட வந்தேன் //

ஆஹா.. நன்றி தலைவா..

கவிதை காதலன் said...

//பலே பிரபு said...
முதல் முறை சரியாக கவனிக்கவில்லை இப்போ கேட்கிறேன். (சர சர பாட்டும் அருமையா இருக்கு)
நேகா பாசின் கவிதை குண்டர்ல "இதுவரை நான்" என்ற பாடலையும் பின்னி எடுத்துருப்பார் //

நன்றி பிரபு.. ரெண்டுமே அருமையான பாடல்தான்..

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
பிரதாப் said...//
நண்பர்களுக்குள் சச்சரவு இருக்கலாம்.. சண்டை இருக்க கூடாது

நைட்டு திருவிளையாடல் படம் பார்த்தியான்னு யாரும் கேட்கக்கூடாது

பாரத்... பாரதி... said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தல் தங்கள் பதிவுகள் பற்றிப் பகிர்ந்துள்ளேன்.

நேரமிருந்தால் வருகை தரளாமே..

http://blogintamil.blogspot.com/2011/08/3.html

இந்திரா said...

மன்னிக்கவும்.

உங்கள் பதிவுகளுக்கான வலைச்சரத்தின் சரியான முகவரி..

http://blogintamil.blogspot.com/2011/08/3_17.html

Priya said...

Lovely song....
உங்க கவிதைகள் அனைத்தும் மிக அழகாக ரசனையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

கவிதை காதலன் said...

// இந்திரா said...
இன்றைய வலைச்சரத்தல் தங்கள் பதிவுகள் பற்றிப் பகிர்ந்துள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரளாமே //

மிக்க நன்றி இந்திரா.. இதோ வந்துட்டே இருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

கவிதை காதலன் said...

//Priya said...
Lovely song....
உங்க கவிதைகள் அனைத்தும் மிக அழகாக ரசனையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி ப்ரியா... தொடர்ந்து படியுங்கள்..

இதையும் படியுங்கள்