Monday, August 22, 2011

ஃபைனல் டெஸ்டினேஷன் 5 விமர்சனம்

ஃபைனல் டெஸ்டினேஷன் திரைப்படத்தின் ஐந்தாம் பாகம் சமீபத்தில் வெளியானது. உலகெங்கிலும் இருக்கும் ஹாரர் பட ரசிகர்களுக்கு இந்தப்படத்தைப்பற்றிய அறிமுகமே தேவை இருக்காது. ஆனாலும் படத்தைப்பற்றி கேள்விப்படாத சிலருக்காக ஒரு சின்ன இண்ட்ரோ..

பொதுவாக நாம் யாரை ஏமாற்றினாலும் தப்பித்துவிடலாம். ஆனால் மரணத்தை ஏமாற்றினால்? அது நிச்சயம் நம்மை எந்த வகையிலாவது வந்து அடைந்தே தீரும் என்ற ஒன்லைனை பேஸிக்காக கொண்டதுதான் இந்தப்படம். விதி என்ற ஒரு விஷயம் நிச்சயம் இருக்கிறது என்று நம்புபவரா நீங்கள்.. அப்படியென்றால் உங்கள் எல்லாருக்கும் இந்தப்படம் செம விருந்து வைக்க காத்திருக்கிறது.

எத்தனையோ 3டி திரைப்படம் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இந்தப்படம் ஒரு மிரட்டு மிரட்டிவிட்டது.. தியேட்டரில் நிறையப்பேர் அலறி கண்ணாடியை கழட்டினார்கள். இன்னும் சிலரோ எங்கே கண்ணாடியை கழட்டினால் மானம் போய்விடுமோ என்று கண்களை இறுக்க மூடிக்கொண்டார்கள். அட டெக்னாலஜி மிரட்டுதுப்பா..

ஹீரோ சாம், அவனடு க்ளோஸ் ப்ரண்ட் பீட்டர், பீட்டரின் கேர்ள் ஃப்ரண்ட் கேண்டிஸ், இன்னொரு தோழி ஒலிவியா, மோலி, நதென், ஐஸக் மற்றும் அவர்களது பாஸ் டெனிஸ், அனைவரும் ஒரு பஸ்ஸில் வேலைக்காக சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த பஸ் கட்டுமானப் பணிகளிக்காக பாலத்தின் மீது நிற்கிறது. அப்போது நம் ஹீரோ சாமுக்கு ஒரு கனவு வருகிறது. அதில் அந்தப்பாலம் உடைவது போலவும் தன் நண்பர்கள் ஒவ்வொருவராக கொடூரமாக இறப்பது போலவும் அவனுக்கு தோன்றுகிறது. உடனே அவன் தான் கண்ட கனவை பஸ்ஸில் உள்ள அனைவரிடமும் சொல்ல, அவர்கள் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு இறங்க மறுக்கின்றனர். ஆனால் மேலே நான் குறிப்பிட்ட நபர்கள் (சாமின் நண்பர்கள்) மட்டும் சாமின் பேச்சைக்கேட்டு இறங்கிவிடுகின்றனர். இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பாலம் உடைய ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கிய நபர்கள் மட்டும் உயிர்பிழைக்கின்றனர்
விதியின் படி அவர்கள் அனைவரும் அந்த விபத்தில் இறந்து போக வேண்டும். ஆனால் அவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள், ஆனாலும் அவர்களை சேர வேண்டிய மரணம் அவர்களை தேடி தேடி வந்து பழிவாங்குகிறது.. இதுதான் ஃபைனல் டெஸ்டினேஷனின் டெம்ப்ளேட் கதைக்களன்.. ஒவ்வொரு பார்ட்டிலும் இதுதான் கதை என்று தெரிந்தாலும் ஒவ்வொரு நொடியும் திக் திக் என்று பார்க்க வைக்கிறார்களே அதுதான் இந்தப்படத்தின் வெற்றிக்கு காரணம்.

பாலம் உடைவது போலவும், அதில் ஒவ்வொருவரும் எப்படி இறக்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் முதுகுத்தண்டை சில்லிடவைக்கிறது. என்ன ஒரு சிஜி ஒர்க்.. அபாரம். சாதாரணமாக பார்த்தாலே நாடி நரம்புகள் எல்லாம் பயத்தில் புடைத்துக்கொள்ளும். இதில் 3டி வேறயா? நரம்புகள் வெடிக்கவில்லை. அவ்வளவுதான். மேலிருந்து தண்ணீரை நோக்கி கிழே விழும் பெண் கப்பலின் கூரான இரும்பு கம்பியில் குத்தி இறந்து போகும் காட்சியில் அந்தக்கம்பி நம் கண்ணிலும் குத்திவிடுமோ என்று பயந்துகொண்டே இருந்தேன்..

தப்பித்தவறி தொங்கிக்கொண்டிருக்கும் நபரின் முகத்தில் ஹை டெம்ப்ரேச்சரில் உருகிக்கொண்டிருக்கும் தார் உருகி ஊத்தும் காட்சி அலற வைத்தது.. அந்த ஜிம்னாஸ்டிக் சீன் சான்ஸே இல்லை.. ஸ்குரு கழண்டு விழ, கரண்ட் நீரில் பாஸ் ஆக, மேலே ஃபேன் ஓபனாக இருக்க.. என்ன என்ன நடக்குமோ என்று நினைக்கிறோமோ அது எதுவும் நடப்பதில்லை.. அதற்கு மாறாக வேறொன்று எதிர்பாராமல் நடக்கிறது. அந்த பெண் முதுகு கால் எலும்பு எல்லாம் உடைந்து கீழே விழுவது ஐய்யோ..

கண் டெஸ்டுக்காக போகும் பெண்ணின் கண்ணில் லேசர் அதிக அளவில் பாய்ந்து அவள் கிழே விழும் காட்சி பயங்கரம் என்றால், அடுத்த நொடியே அவள் கண் மட்டும் தனியே விழுந்து கிடக்க, அதையும் ஒரு வண்டி ஏறி நசுக்க... அதுதான் அதிபயங்கரம்... எனக்கு ஒன்று மட்டும்தான் டவுட்.. பைனல் டெஸ்டினேஷன் திரைக்கதையாளர்களுக்கு கண்ணின் மீது மட்டும் என்ன அத்தனை கோபம் என்று தெரியவில்லை.. எல்லாப்படங்களிலும் கண் மட்டும் அநியாயத்துக்கு சின்னா பின்னாமாகிறது.

மற்றொருவன் கிளுகிளுப்பாக இருக்க வேண்டும் என்று மஸாஜ் கிளப்புக்கு செல்லுகிறான். அங்கே உட்ம்பெங்கும் அவனுக்கு ஊசிகுத்தி வைத்திருக்க, அப்படியே அவன் கீழே விழ, உடலெங்கும் ஊசிக்குத்தி அவன் அலற.. அம்மாஆஅ.. முடியலை..திடுக் திடுக் என்று ஏற்படும் மரணங்கள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.


இதில் இன்னொரு லாஜிக், தனக்கு ஏற்படும் மரணத்தை அடுத்தவனுக்கு நாமே ஏற்படுத்திவிட்டல் அவனது ஆயுள் தனக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒருவன் நடக்க, பாவம் கடைசியில் அதுவும் விதியின் விளையாட்டு என்று தெரிகையில் என்ன சொல்வது? விதியை கூட ஏமாத்துவீங்களாடா? என்றுதான் கேட்க முடிகிறது... இரண்டு மூன்று முத்தக்காட்சிகள் இருக்கிறது..ஆனால் அது எதுவும் உங்களுக்கு நிச்சயம் கிளுகிளுப்பை ஏற்படுத்தாது.. ஹா.. ஹா..

"Dust in the wind" பாடல், கையில் ரத்தம் வருவது, என ஓவ்வொரு நிகழ்வுக்கும் முன்னால் காட்டப்படும் சிம்பல் வார்னிங் என எல்லாமே அட்டகாசமான திரைக்க்தை உத்திக்கு சான்று.. கலக்கிட்டீங்க தலைவா. ஃபைனல் டெஸ்டினேஷனின் ஒவ்வொரு பார்ட்டும் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இது மட்டும் என்ன விதிவிலக்கா? இது இன்னும் ஒருபடி மேலே இருக்கிறது. 3டி கொடுத்த விளைவு. இன்னொருவாட்டி பார்க்கணும்.. ஹி.ஹி..

கடைசியில் இன்னொரு ட்விஸ்டும் வைத்திருக்கிறார்கள்.. சாமும், மோலியும் ஃபிளைட்டில் போகும் போது அவனுக்கு அந்த ப்ளைட்டும் விபத்துக்கு உள்ளாவது போல் கனவு வருகிறது.. ஆகா... அடுத்த ஆட்டம் ஆரம்பமாகிடுச்சு டோய்.... நொடிக்கு நொடி விறுவிறுப்பும், இதயத்துடிப்பை எகிற வைக்கும் காட்சியமைப்பும், பயத்தை இன்னும் பத்து இஞ்ச் கூட்டும் விதமான பின்னணி இசையும், ஒவ்வொரு கொலையையும் நாமே அனுபவிப்பது போன்ற ஒளிப்பதிவும் பட்த்திற்கு பெரும் பலம்.

படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலில் இருந்து ஆரம்பிக்கும் 3டி அட்டகாசம் கடைசிகாட்சி வரை நம்மை பிரமிப்பின் உச்சிக்கு அழைத்து செல்கிறது. நம் கண்ணுக்கு அருகே குத்துவது போல நிற்கும் இரும்புக்கம்பி, கடைசியில் தெறித்து நம் மீது விழும் மனித கை, என எல்லாமே அக்மார்க் அதிர்ச்சி ரகம். தயவு செய்து படத்தை 3டி யில் பாருங்கள். பயப்படுங்கள்.

17 comments:

விஷ்ணு said...

yes..............supperb movie

விஷ்ணு said...

ஒரு இடத்துல .............
என் இதய துடிப்பும் அதிகமா தான் இருந்தது......................
"சீகராம்தான் சாகடிங்கலேண்டா " அப்படின்னு சொல்ல வச்சுது ...............

கவி அழகன் said...

தரமான விமர்சனம் படம் பார்க்கக தூண்டுகின்றது

வாக்குகளும் போட்டாச்சு

படத்தையும் பார்த்துடுவம்

இந்திரா said...

ஓட்டு போட்டாச்சு.

இப்ப பின்னூட்டம்..

நான் இன்னும் இந்த பாகம் பார்க்கவில்லை. உங்க விமர்சனமே பயமுறுத்துகிறது.

என்ன திடீருனு மங்களா, ஃபைனல் டெஸ்டிநேசன்“னு டெரர் படங்களோட விமர்சனங்கள்ல இறங்கிட்டீங்க?

எப்பவாவது தானே விமர்சனம் எழுதுவீங்க?? சார் ரொம்ம்ப ஃப்ரீயோ?

கவிதை காதலனோட டச்சிங் கவிதைகள் எங்கப்பா???
சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.

பிரதாப் said...

மச்சி உன் விமர்சனமே படத்தை பார்க்க துண்டும்.நல்ல பண்றடா

vinu said...

ithoda muthal part paaththa vudaney mudivu pannunen......

machi vinu mulichukkadaa yaaro namakku seyvinai vaikkuraanga.... alerttaa irrunthukkanumnu....

appaalikkaa intha padaththoda aduth aduththa episode varumbothu ellaam Trailor pakkam kooda thalai vachup padukkurathu illey....

he he he naanga ellaam romba romba saaaaaaaaaaaaaaft pasanga paa [ada nisamaathaan sollurom nambungappaaa]

"என் ராஜபாட்டை"- ராஜா said...

படம் பார்த்தேன் மிகவும் அருமை

மாலதி said...

விமர்சனமே படத்தை பார்க்க துண்டும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படிக்கறதுக்கே பயமா இருக்கே?

ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி செம விமர்சனம் டா.படம் பார்த்த feel அப்படியே உன் இந்த விமர்சனத்தில் துளி கூட குறையாமல் இருக்கு.பிடி ஒரு பொக்கே. வாய்ப்பே இல்ல டா.நீ சொன்னா மாரி எத்தனையோ 3D படம் பார்த்திருக்கிறேன்,ஆனால் இது போல் நிச்சயம் பயந்ததில்லை.ஈரக்கொளையே நடுங்கிடுச்சி.கண்ணாடியையும் கழட்ட முடியல.ஏன்னு உனக்கே தெரியும்.படத்தில் அந்த முதல் காட்சியிலேயே (அந்த பாலம் உடையும் காட்சி) நம் இதயத்துடிப்பு எகிறி விடுகிறது.அந்த சீனுக்கே காசு கொடுத்துவிட்டு வந்துடலாம்.அந்த அளவுக்கு அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் ஒவ்வொருவரும் சாகும் விதம் நம்மை எச்சில் விழுங்கவைக்கிறது.அது கனவு என்று நினைத்தாலும்,அடுத்தடுத்து ஒவ்வொருவராக மிகக்கொடுமையாக சாவது திகிலின் உச்சத்திற்க்கே கொண்டுசெல்கிறது.மரணம் எப்படியெல்லம் துரத்தி துரத்தி கொடுமையாக கொல்கிறது.
கதை இது தான் என்று சொல்லிவிட்டு,அதை இவ்வளவு சுவாரஸ்யமாக எடுத்த இயக்குனரை எவ்வளவு பாரட்டினாலும் தகும்.நிச்சயமாவே அவர் ஒரு ஜீனியஸ் தான்.நீ சொன்ன அந்த ஒவ்வொரு காட்சியும் என்னையும் மிகவும் அலரவைத்தது.குறிப்பாக அந்த பெண் பாலதில் இருந்து விழுந்து அந்த கம்பி குத்தி ரத்தம் பொங்கி வருவது,பீட்டரின் பின் மண்டையில் குத்தும் அந்த கம்பி கண்,தாடை,வாய் என்று முன் பக்கமாக துளைத்துக் கொண்டுவரும் காட்சி,இப்படி பல காட்சிகள் என்னை கலங்க்கடித்து விட்டது.அந்த ஒலிவியா கண் டெஸ்ட்க்கு போய் அங்கு அவள் இறந்து போகும் காட்சி என்னை ரொம்ப ரொம்ப ரொம்ப அலரவைச்சிடுச்சி.நானும் கண் டெஸ்ட் பண்ண போகலாம்னு இருந்தேன் சத்தியமா இன்னும் கொஞ்ச நாளைக்கு போக மாட்டேன்.இதே கண்ணாடியோடவே இன்னும் கொஞ்ச நாள் ஓட்டிடுரேன்.இந்த படத்தோட பாதிப்பு எப்போ குறையுதோ அப்போ போய் டெஸ்ட் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன்.அந்த அளவுக்கு கொடூரமா இருக்கு அந்த சீன்.ஜிம்னாஸ்டிக் சீன்,நினைப்பதற்க்கு நேர் மாறாக நடப்பது நம்மை மிகவும் பயப்பட வைக்கிறது.
அந்த மசாஜ் செண்டர் காட்சி சற்று சிரிக்க வைத்தாலும்,அடுத்த கணமே அவன் சாவு நம்மை உடம்பை சிலிர்க்கவைக்கிறது.அந்த அந்த மசாஜ் சென்டரில் அவன் உடம்பில் குத்தும் ஊசி நம் கண் முன் வந்து செல்வது நம் கண்ணையே பதம் பார்ப்பது போல் உள்ளது.கடைசி காட்சியில் அவன் உடம்பு சிதறி கை துண்டாக நம் கண் முன்னே வந்து செல்வது அப்பப்பா பயங்கரத்தின் உச்சம்.அப்பாடா படம் முடிந்து விட்டது என்று நினைத்தால் மற்ற 4 பார்ட்களிலும் எடுக்கபட்ட கொடுமையான சாவுகளை 3Dல் காண்பித்து இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்கள்.முதல் காட்சியில் அந்த WB உடைந்து சிதரும் காட்சி 3Dல் மிக அற்புதமாய் செய்திருக்கிறார்கள்.பின்னனி இசையும்,காட்சியமைப்பும்,ஒளிப்பதிவும் படத்தை தாங்குகின்ற பெரும் தூண்கள்.படம் நிச்சயம் உலக அளவில் சக்கை போடு போடும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்க மச்சி,வாழ்த்துக்கள் டா.கலக்கிட்ட.தொடர்ந்து எழுது...

பிரதாப் said...

மச்சி இந்த படத்தோட பெரிய பலமே அடுத்து என்ன நடக்குதுன்னு யாராலையும் நினைக்கமுடியாது.அதுதான் அந்த இயக்குனரின் பலம்.

பிரதாப் said...

பார்த்தி வேணாம் நான் அழுதுடுவேன்.முடியல ...

இந்திரா said...

//ஸ்வீட் ராஸ்கல் said...//


பதிவா போட வேண்டியதை மறந்துட்டு பின்னூட்டமா போட்டுட்டீங்களோ????
இவ்ளோ தானா? இல்ல இன்னும் இருக்கா????

ஸ்வீட் ராஸ்கல் said...

Prathap said...
//பார்த்தி வேணாம் நான் அழுதுடுவேன்.முடியல ...//
மச்சி என்ன டா இப்படி சொல்லிட்ட,நீ அழுதாலும் நா விடமாட்டேன் டா.Because நீ என் நண்பேண்டா...

ஸ்வீட் ராஸ்கல் said...

இந்திரா said...
//பதிவா போட வேண்டியதை மறந்துட்டு பின்னூட்டமா போட்டுட்டீங்களோ????
இவ்ளோ தானா? இல்ல இன்னும் இருக்கா????//

என்ன இந்திரா அக்கா இப்படி சொல்லிடீங்க,என்னோட ஸ்டைல் இது தான்னு உங்களுக்கு தான் தெரியுமே அக்கா.ஏதோ என்னால முடிஞ்சது.கொஞ்சம் கம்மியா எழுதிட்டேன் இல்ல.ஓகே அக்கா அடுத்த முறை பாருங்க.

Kannan said...

அருமையான விமர்சனம்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Dhileep said...

அருமையான விமர்சனம்.. நானும் இப்போ தான் படம் பார்த்துட்டு வர்றேன்.. படம் செம மிரட்டல்..
கிளைமாக்ஸ்ல வர்ற சீன் இந்த படத்தோட ஹீரோவுக்கு வர்ற கனவு இல்லை..
முதல் பார்ட்டோட முதல் சீன்.. :)

இந்த பார்ட்டோட எல்லாத்தையும் லிங்க் பண்ணிட்டாங்க.. so இதோட இந்த series ஓவர்.. :(

இதையும் படியுங்கள்