Thursday, August 25, 2011

டீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்
சேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு சேனல்கள் மிக அழகாக தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு விடுவார்கள். மக்களுக்கும் அடுத்தவர்கள் அடித்துக் கொள்வதை பார்ப்பதில் ஒரு அற்ப சந்தோஷம். (ஹி..ஹி..எனக்கும்தான்) சிம்பு-பிரித்விராஜ், சிம்ரன்-விஜய் ஆதிராஜ் என்று பல கூத்துக்களை நாம் கண்டு களித்திருக்கிறோம். அது ஒரிஜினல் நிகழ்ச்சிகளா இல்லை செட்டப்பா என்று இன்னும் பல விவாதங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் தாத்தா ஒருத்தர் இருக்கிறார். தெரியுமா? யாகவா முனிவரும் சிவசங்கரபாவும் ஒரு முறை தொலைக்காட்சியில் அடித்துக்கொண்டார்களே. அதைத்தான் சொன்னேன். இது போன்ற ஸ்க்ரீன் அடிதடிக்கெல்லாம் அதுதான் முன்னோடி..

சிம்புவின் படங்களை யூ டியூபில் அதிகம் பார்த்த்தைவிட, எனக்கு நடிக்க தெரியாதுய்யாஎன்ற க்ளிப்பிங்கைத்தான் அதிகம் பேர் பார்த்திருப்பார்கள். இதையெல்லாம் ஒளிபரப்பித்தான் ஆக வேண்டுமா என்றால், நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு இதில் ஒரு அட்வான்டேஜ் இருக்கிறது. சாதாரணமாக இந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்கு 3 பாயிண்ட் டி.ஆர்.பி இருக்கிறது என்றால், இது போன்ற சர்சைக்குரிய விஷயங்கள் வரும் போது டி,ஆர்,பி. தாராளமாக 5 பாயிண்டுகள் வரை உயரும். இது சேனலுக்கும் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டிக்கொடுக்கும். அதனால்தான் இது போன்ற சண்டைகளையும் சச்சரவுகளையும் ஊக்குவிக்கிறார்கள் சேனலுக்கும் நிகழ்ச்சி நடத்துபவர்கள். மக்களும் அந்த எபிசோடுக்கான புரோமோவை பார்த்த்தில் இருந்து அந்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.

இதோ அது போல ஒரு எபிசோட்.

சமீபத்தில் இதே ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணன் போட்டியில் கலந்து கொண்ட ஒரு நபரின் நடனமாடும் திறமை பற்றி சில கருத்துக்களை கூற, அந்த நபரோ ரம்யாகிருஷ்ணனின் பேச்சில் டென்ஷனாகிவிட்டார். அவரும் ரம்யா கிருஷ்ணனும் மாறி மாறி சில கருத்துக்களை கூறிக்கொண்டே இருந்தனர். அந்த போட்டியாளர் யாருடைய கருத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அவர் நின்று கொண்டிருந்த விதமும், பேசிய டோனும் எல்லாருக்கும் நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கும்.. அதிலும் அவர் “This is not my cup of Tea என்று சொன்னது செம ஆட்டிட்டியூட்.. அவர் So என்று கேட்ட உடனே ரம்யாகிருஷ்ணன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். ஆனால் அடுத்த நொடியே அவர் டிவி என்பதை உணர்ந்து சுதாரித்துக்கொண்டார் ஆனால் கடைசிவரை அந்த போட்டியாளர் தன் முடிவிலேயே உறுதியாக இருந்தார். சில சமயங்களில் போரடிக்கும் அந்த நிகழ்ச்சி, இந்த எபிசோடில் கொஞ்சம் களைகட்டியது.. பாருங்கள்...இந்தப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்Wednesday, August 24, 2011

கலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி


ஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ்ச்சியை வெகுவாக கலாய்த்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக டான்ஸ் மாஸ்டர் கலாவை அவர்கள் கலாய்த்ததைப் பார்த்து சிரித்து சிரித்து வயிற்றில் வலியே வந்துவிட்டது. அதிலும் அவர்கள் கலா மாஸ்டரின் மேனரிசமான அழ்ழ்ழ்ழ்ழகா பண்ணி இருக்கே”, கிழி கிழி கிழி கிழின்னு கிழிச்சுட்டே என்று சொல்லும் வார்த்தைகளை கலாய்த்ததை பார்த்தவர்கள் யாராலும் சிரிக்காமல் இருக்கவே முடியாது. நடன அமைப்பாளரை மேடைக்கு கூப்பிடுவதும், அவரை பேசவே விடாமல் கலா மாஸ்டரே பேசிக்கொண்டு இருப்பதும் அட்டகாசமான காமெடி.

பார்த்து ரசியுங்களேன்....
இந்தப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்மங்காத்தா – ஒரு ஸ்பெஷல் பார்வை

க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் வெங்கட்பிரபு இயக்கி வெளிவரும் படம் மங்காத்தா. தொடர் தோல்விகளால் துவண்டு கொண்டிருக்கும் அஜீத்தின் சினிமா கேரியரை ஒரு ஸ்டெப் தூக்கி நிறுத்த செய்யும் முயற்சிதான் இந்தப்படம். எப்போதும் அஜீத் படத்தில் ஒன்மேன் ஷோவாகவே திரைக்கதை அமையும். (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திய ட்ரெண்ட். அதையெல்லாம் தூக்கி போடுங்கண்ணா) ஆனால் இந்தப்படத்தில் அஜீத் தற்போதைய சினிமாவின் நிலையை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆம், அர்ஜீன், பிரேம்ஜி, வைபவ், ஜெயப்பிரகாஷ், சோனா, புது அறிமுகங்கள் என பலர் அஜீத்திற்கு பக்கபலமாக நின்றிருக்கிறார்கள்.

மேலும் த்ரிஷா, ஆண்ட்ரியா, லக்ஷ்மி ராய், அஞ்சலி என நடிகைகள் பட்டாளமும் படத்தில் உண்டு. இது அஜீத்திற்கு ஐம்பதாவது படம் என்பதால் நிறைய காம்ப்ரமைஸ்களோடு அவர் நடித்திருக்கிறார். ஐம்பதாவது படத்தை வெற்றிப்படமாக கொடுத்துவிட வேண்டும் என்ற வெறி. அது நன்றாகவே ஒர்கவுட் ஆகி இருக்கும் என நம்பலாம். வெங்கட் பிரபு பொதுவாகவே ஜாலியான பேர்வழி. அதுவும் இத்தனை நட்சத்திர பட்டாளங்கள் கிடைத்துவிட, படத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறார் மனுஷன். இந்தப்படம் கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தைப்பற்றியது. சுமார் 500 கோடி பணத்தை கைப்பற்றுவதில் தொடங்கும் போராட்டமும் அதன் பின் விளைவுகளுமே கதை..

ஓஷன்ஸ் லெவன் படத்தில் இருந்தும் ஹிந்தி ஜென்னட் படத்தில் இருந்தும் இந்தக்கதை சுடப்பட்டுருக்கிறது என்ற தகவலும் படத்தைப்பற்றி வெகுவாக பேசப்பட்டுவருகிறது. ஆனால் மங்காத்தா டீம் இது ஜென்னட் படம் இல்லை என்பதை மட்டுமே மறுத்திருக்கிறார்கள். பார்க்கலாம் என்னதான் ஆகிறது என்று..

பாங்காக், மும்பை, சென்னை என பல இடங்களில் ஷூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது. பாடி மவுண்ட் கேமரா(Body Mount Camera) எனப்படும் முப்பது கிலோ எடையுள்ள ஒரு கேமராவை பயன்படுத்தி க்ளோசப் போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. சக்தி சரவணன் ஒளிப்பதிவில் படத்தின் ரிச்னெஸ் இன்னும் ஒருபடி மேலே ஏறியிருக்கிறது. யுவனின் இசை பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. முக்கியமாக இளசுகளை குறிவைத்து தாக்கி இருக்கிறது. விளையாடு மங்காத்தா பாடல்தான் இப்போதைய ஹாட் கேக்.

நான் இதுவரை அஜீத் படங்களை தியேட்டரில் சென்று பார்த்ததில்லை. (வாலியைத்தவிர). ஆனால் இந்தப்பட்த்தின் மீது ஏனோ ஒரு அட்ராக்‌ஷன் இருக்கத்தான் செய்கிறது. நிச்சயம் பார்த்துவிடுவேன் என நினைக்கிறேன். ட்ரெய்லரே வெகு அசத்தலாய், ஆர்ப்பாட்டமாய் வந்திருக்கிறது.


அஜீத் படத்தில் ஸ்பெஷல் மேக்கப் எதுவுமின்றி, வெகு நேச்சுரலாகவே வருகிறார். அந்த லேசான நரைத்த வெள்ளைமுடியும் அவருக்கு அட்டகாசமான லுக்கையே தருகிறது. அஜித் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி விட்டார்..குறிப்பிடப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அஜீத் இந்தப்படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார். எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று அவரே இந்தப்பட்த்தில் பஞ்ச் அடித்திருக்கிறார். வாலி திரைப்படத்திற்கு பிறகு நெகட்டிவ் ரோல்.. இது போன்ற வித்தியாசமான கலர் கொண்ட கதாபாத்திரங்களைத்தான் ரசிகர்களும் எதிர்பார்க்கிறாங்க.. அசல், அட்டகாசம் போன்ற மொக்கை க்ளிஷேக்களை அல்ல.

அஜீத் இதை நன்றாக உணர்ந்து கொண்டார் போலும்.. (சூடு பட்டாதான்யா சில பேருக்கு தெரியுது. நம்ம விஜய் சுறா வேட்டைக்காரனில் கற்றுக்கொண்ட பாடத்தைப்போல) இந்த பவர்ஃபுல் எண்டர்டெயினரை அஜீத் சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்த படங்களை தேர்ந்தெடுப்பாரே ஆனால் அவரை அடித்துக்கொள்ள ஆள் இருக்காது. எப்போதும் அஜீத் படங்களுக்கு பிரமாதமான ஓப்பனிங் இருக்கும்.. அது இந்தப்படத்திற்கும் இருக்கத்தான் செய்யும். டிரெய்லரும் பாடல்களும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிக்கலும் வந்திருக்கிறது.

க்ளவுட் நைன் மூவிஸின் முந்தைய படங்களான வ – குவாட்டர் கட்டிங்கும், அழகர்சாமியின் குதிரையும் சரியாக போகாத சூழ்நிலையில் விநியோகஸ்தர்கள் இந்தப்படத்திற்கு சில சிக்கல்களை முன் வைத்திருக்கிறார்கள். அதைக்கூட சமாளித்துவிடலாம். சென்ற முறை ஆட்சி செய்தவர்களின் படங்களுக்கு இப்போது என்ன சிக்கல் நேருகிறது அனைவருக்குமே தெரியும். அதே சிக்கல்தான் இப்போது தயாநிதி அழகிரிக்கும் நேருகிறது. இதையெல்லாம் மீறி படத்துக்கு இருக்கும் ஒரே பூஸ்ட் அஜீத், அஜீத், அஜீத்.

வாஙக் சார்.. வந்து சீக்கிரம் ஆட்டத்தை ஆரம்பியுங்க.. நாங்களும் ஒரு கை போடுறோம்..

விளையாடு மங்காத்தா...
இதையும் படியுங்கள்