Sunday, July 24, 2011

காஞ்சனா - பேயாட்டம்

பேய் என்ற வார்த்தையை கேட்டாலே பத்துகிலோ மீட்டர் ஓடி ஒளியும் ஒரு பயந்தாங்கொள்ளி மேல் பேய் வந்தால் என்ன ஆகும் என்ற ஒரு வரி கதைக்கு அசத்தலான திரை வடிவம் கொடுத்திருக்கிறார் லாரன்ஸ். கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் லாரன்ஸ். பொதுவாக பேய் கதைகளில் எப்பொழும் திரைக்கதை இறுக்கமாகவே நகரும். ஆனால் லாரன்ஸ் இந்த விதியை அநாயாசமாக மீறி இருக்கிறார். காட்சிக்கு காட்சி சிரிப்பும் திகிலும் சரிசமமாக கலந்து கொடுத்து விருந்து படைத்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது முனி பார்ட் ஒன்றை விட, காஞ்சனா கலக்கியெடுக்கிறாள்.

படத்தின் சரி எண்டர்டெயினர் என்றால் அது கோவை சரளாதான். இவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வசனத்திற்கும் அத்தனை அப்ளாஸ். அதுவும் சாமியாரிடம் ”இது ரொம்ப டிஃபிகல்ட்டா இருக்கு சாமி” என்று சொல்லுகையில் வெடிச்சிரிப்பு எழுகிறது.. பேய் இந்தியில் சம்ஜே என்று கேட்க, அதுக்கு இவர் சமஞ்சிட்டேன் என்று சொல்லுமிடத்தில் சிரிக்காதவர் யாருமே இருக்க முடியாது.. கோவைசரளாவிற்கு சரியான பக்கவாத்தியமாக சேர்ந்து சிரிக்க வைக்கிறார் தேவதர்ஷினியும்.. ஸ்ரீமன் பேய் வரும்போதெல்லாம் வாயை கோணியபடியே படுத்துக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் அக்மார்க் சிரிப்புக்கு உத்திரவாதம்.

லக்‌ஷ்மிராய்க்கு படத்தில் பெரிதாக் ஒன்றும் வேலை இல்லை.. வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், லாரன்ஸை முத்தமிடுகிறார். ஜஸ்ட் ஃபார் பிஸினஸ் வேல்யூ. அம்மணிக்கு அவ்வளவுதான் வேலை.. லாரன்ஸுக்கும் லக்‌ஷ்மிராய்க்கும் இடையே காதல் வருவதற்கு சொல்லப்பட்டிருக்கும் டெக்னிக்.. ஐயோ தாங்க முடியலைடா சாமி...
பாதிப்படத்திற்கு மேல் நம்மை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார். இவரா? இப்படி ஒரு கதாபாத்திரத்திலா? என்று நம்பவே முடியாமல் ஆச்சர்யத்தில் அதிர்ந்துதான் போகிறோம். அவர் பாடிலேங்குவேஜாகட்டும், மேனரிசமாகட்டும், வசன உச்சரிப்பாகட்டும் எல்லாமே கைத்தட்டலை அள்ளுகிறது.. கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் இது போன்ற சவாலான கதாபாத்திரத்திலும் கூட நான் நடிப்பேன் என்று சரத்குமார் புகுந்து விளையாடி இருப்பது ஆச்சர்யமளிக்கிறது, மூத்த நடிகர்களுக்கு கதாபாத்திர தேர்வுகளில் சரத் இந்தப்படத்தின் மூலம் ஒரு முன்னோடியாய் மாறி இருக்கிறார் வெல்டன் சரத்ஜி.. ஹாட்ஸ் ஆஃப்.. சரத்குமாரின் அந்த கதாபாத்திரத்தை சொல்வதை விட, திரையில் பார்ப்பதில்தான் அத்தனை சுவாரஸ்யம்.

தமனின் இசையில் பெரிதான கவரும்படி பாடல்கள் இல்லாவிடினும், கடைசிப்பாடலான கொடியவனின் கதையை முடிக்கபாடல் ஒட்டுமொத்த குறையையும் போக்கி விடுகிறது. அந்தப்பாடலுக்கான ஃபாஸ்ட் பீட்டும், லாரன்ஸின் ஆவேசமான நடன அமைப்பும், முகபாவனைகளும் ஒரு நிமிடம் நம்மை பயத்தின் ஹை டெம்ப்போவிற்கு அழைத்து செல்கிறது.. பிண்ணனி இசையில் தேவையற்ற பல இரைச்சல்கள் இருந்தாலும், தேவையான இடங்களில் நம்மை பயமுறுத்தவும் செய்திருக்கிறது..

இதுவரை ஆவிகள் கோவிலுக்குள் நுழையாது என்று காலம் காலமாக தமிழ்சினிமா கடைபிடித்து வரும் செண்டிமெண்டை லாரன்ஸ் ஒரு அழகான லாஜிக்கால் உடைத்து எறிந்திருக்கிறார். அது என்ன என்பது சஸ்பென்ஸ்..

எப்போதும் முதல் பார்ட் சூப்பராக இருந்தால் செகண்ட் பார்ட் சுமாராக இருக்கும். ஆனால் இங்கு முதல் பார்ட் சுமாராக இருக்க, செகண்ட் பார்ட் சூப்பராக வந்திருக்கிறது. ஆங்காங்கே பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கொடுத்த காசிற்கு திருப்தியான திகிலான படமாகவே அமைந்திருக்கிறது இப்படம்.

காஞ்சனா – கலக்கல்ன்னா


Tuesday, July 5, 2011

என் காதல் வீடு

Image UploadImage Search
Image Upload
Image Sharing
Free Image Hostingஇந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப் போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


இதையும் படியுங்கள்