Sunday, June 26, 2011

சினிமா வியாபாரம் – புத்தக விமர்சனம்


தமிழ் இணைய உலகில் கேபிள் சங்கர் என்றால் தெரியாதவர்கள் எவருமில்லை. அந்த அளவிற்கு தன்னுடைய எழுத்துக்களால் ரசிகர்களை வசீகரித்தவர். வலைப்பூவில் சாதாரணமாக எழுதத்தொடங்கி இன்று அதுவே புத்தகம் வெளியிடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு சாதரணமானது இல்லை. கிழக்கு பதிப்பகம் இவர் வலைப்பூவில் எழுதிய சினிமா தொடர்பான செய்திகளை தொகுத்து வெளியிட்ட புத்தகமே “சினிமா வியாபாரம். புத்தகம் வெளிவந்த உடனே படித்துவிட்டேன். ஆனாலும் உடனே அதைப்பற்றி எழுத இயலாதவாறு வேலைப்பளு அதிகம். பல மாதங்கள் ஆனால் என்ன ஒரு படைப்பாளிக்கு செலுத்த வேண்டிய மரியாதை அதுதானே.

இனி புத்தகத்திலிருந்து...

எனக்கு தெரிந்து சினிமா தொடர்பாக டெக்னிக்கலாக பல விஷயங்களை படித்தது சுஜாதா எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில்தான். அதற்கு அடுத்தபடியாக “கேபிள் சங்கர் எழுதிய இந்த புத்தகம் சினிமா குறித்த டெக்னிக்கல் விஷயங்களில் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் இவர் இந்த நூலில் விவரித்திருப்பது மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும். கோலிவுட் சினிமாவில் தொடங்கும் இவரது சினிமா குறித்த பார்வை, மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே ஹாலிவுட் வரை செல்வது சிறப்பு. திரைத்துறையில் இவர் பெற்றிருக்கும் அனுபவம் இந்த புத்தகத்தில் ஒவ்வொரு வரியிலும் அட்சரம் பிசகாமல் தெரிகிறது.

திரைப்படம் என்பது சூதாட்டமாகவே இருந்தாலும் அதில் வெற்றி பெற என்னவெல்லாம் செய்யலாம், எப்படியெல்லாம் செய்தால் வெற்றி பெற முடியும் என்ற அனுபவத்தை கொடுக்கும் முதல் புத்தகம் இதுவாகவே இருக்கும். தமிழ் சினிமாவால் மறக்க முடியாத படமாக இருக்கும் சேதுவின் ரீலிஸ் சமயத்தில் இவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கும் இடம் சுவாரஸ்யமானது. ஆடியோ உரிமை, வீடியோ உரிமை தொடங்கி IPTV உரிமை வரை, எத்தனை வகை உரிமைகளை பணமாக்க முடியும் என்று படிக்கும் போதே ஆர்வம் மேலிடுகிறது. போகிற போக்கில் மாறன் பிரதர்ஸ், சன் டிவி, கலைஞர் டிவியின் சாட்டிலைட் உரிமைகள் பற்றி புட்டு புட்டு வைக்கிறார். (கேபிளின் கதையில் இன்னும் அப்பட்டமான உண்மைகள் இருக்கின்றன. அதை புத்தகமாய் படிக்கும் ஆவல் இப்போதே மேலிடுகிறது.)

இந்தி திரை உலகில் கடைப்பிடிக்கப்படும் பே பெர் வியூஎன்ற விதியின் கீழ் ஸ்லம்டாக் மில்லினியர் படம் வசூலித்ததை சொல்லி இருக்கிறார் பாருங்கள், தலை சுற்றிவிடும் நமக்கு, ஆம்.. வெறும் 25 ரூபாய்க்கு பின்னால் இப்படி ஒரு பிஸுனஸா என்று மயக்கம் போட்டு விழாத குறைதான். தற்போது உள்ள சினிமா வியாபாரம் குறித்து மட்டுமல்லாமல், கறுப்பு வெள்ளை காலத்தில் கூட எந்த அளவிற்கு சினிமாவின் வியாபாரம் செயல்பட்டது என்பதை இவர் விளக்கி இருப்பதில் ஆச்சர்யப்படாமலே இருக்க முடியாது.

சினிமாவில் ஈமெயில் மூலமாக செய்யப்படும் வியாபாரம், கேண்டின், பார்க்கிங் முதலியவற்றில் எந்த அளவிற்கு பணம் பண்ணுகிறார்கள் என்பதை கேட்கும் போதே எவ்வளவு டிட்டெய்லிங் கலெக்ட் செய்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது. மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு உள்ள உரிமைகள் குறித்து இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.. அதைக்கூட தெளிவாக விளக்கி இருக்கிறார். கோலிவுட், பாலிவுட் மட்டுமல்லாது, பேரமவுண்ட் பிக்சர்ஸ், கொலம்பியா, டிஸ்னி, போன்ற ஹாலிவுட் கம்பெனிகளின் படம் தயாரிக்கும் முறையும், எத்தகைய லாபம் கொழிக்கும் பிசினஸை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதையும் மிக தெளிவாக பட்டியலிட்டி இருக்கிறார்.

ஒரு திரைப்படத்திற்கு கட்டுக்கதைகள் கூட எந்த அளவிற்கு லாபம் ஈட்டித்தரும் என்பதை இவர் விவரிக்ககையில் நம்பாமல் இருக்க முடிவதில்லை. அதிலும் அவர்களே ஒரு டம்மி வெப்சைட் உருவாக்கி, அதில் படம் சம்மந்தமான தகவல்களை ஒரு வருடத்திற்கு முன்பே புகுத்தி... அடேங்கப்பா.. எத்தனை எத்தனை விதமான புரொமோஷன்கள்... ஒப்பந்த முறையில் ஒரு தியேட்டரில் படத்தை எத்தனை வகையில் திரையிடலாம் என்று நமக்கு தெரியாத பல தகவல்களுக்காக நிறைய உழைத்திருகிறார். ரீடெயில், ராயல்ட்டி ரீட்டெயில், ரெண்ட்டால், போன்ற கேள்விப்பட்டே இருக்காத வியாபார முறைகளையும் தெளிவாக பட்டியலிடுகிறார்.
புத்தகத்தின் சுவாரஸ்யங்களில் சில

1.”சுப்ரமணியபுரம் படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடலை நாம் எத்தனையோ முறை கேட்டிருப்போம். ஆனால் இந்தப்பாடல் டிஜிட்டல் டவுண்லோடில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறது என்ற செய்தி வாய்பிளக்க வைக்கிறது. (இதுவே படத்தின் பட்ஜெட்டை வசூல் செய்து விடுகிறதே)

2. “உயிரிலே கலந்தது திரைப்படத்தின் விநியோக முறையில் இவர் பட்ட பாட்டை கேளுங்கள். நமக்கே மூச்சுமுட்டி விடும். சே, இப்படியெல்லாம் கூட அவஸ்தை பட முடியுமா? என்று மலைக்க வைக்கும் மாயவலைகளைப்பற்றி அக்குவேறாக அலசியிருக்கிறார்.

3. கலெக்ஷன் ரிப்போர்ட்டில் ரெப்ரஸெண்டேட்டிவ்கள் செய்யும் தகிடுதத்தம், அதில் அவர்கள் மாட்டிக்கொள்வது என தில்லுமுல்லு ஏரியாக்களும் உண்டு.

4. “கில்லி படத்தின் வெற்றி மதுர திரைப்படத்தின் இயக்குனருக்கு எந்த வகையில் பூஸ்ட்ப்பாக அமைந்தது என்ற கதையும் சுவாரஸ்யமே.

5. வெறும் 40 லட்ச ரூபாய் செலவில் வெளியான சிலந்தி பப்ளிசிட்டி ஸ்டண்டுகளால் ஒரு கோடி வரை சம்பாதித்த கதையையும் படித்து பாருங்களேன்..

6. எழுத்தாளரின் நண்பர் மின்னலே திரைப்படத்தின் மூலம் 10 லட்சத்தில் இருந்து 17 லட்சம் வரை எப்படி சம்பாதித்தார் என்ற டீட்டெயிலிங்கை, படித்தால் மட்டுமே புரியும், சினிமாவின் மாயக்கணக்குள் அவ்வளவு எளிதானது அல்ல என்பது..

சினிமாவின் வியாபார தந்திரங்கள் புரிந்தால் மட்டுமே ஒருவன் வெற்றியாளனாக இருக்க முடியும் என்பதை பட்டவர்த்தனமாக தனது அனுபவத்தின் மூலம் விளக்கி இருக்கிறார் கேபிள் சங்கர். ஒரு வெற்றிகரமான திரைப்படம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அத்தனை பேரின் அலுவலகத்திலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது.

சினிமா வியாபாரம் - மூவி என்சைக்ளோபீடியா


எழுத்தாளரை தொடர்பு கொள்ள

sankara4@gmail.com

கேபிள் சங்கர்


16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாசகன்

சி.பி.செந்தில்குமார் said...

vவிமர்சனமே புக் வாங்க தூண்டுதே.. ஓக்கே டன்

கவி அழகன் said...

சுவாரசியமான விமர்சனம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏற்கனவே இந்த புத்தகத்தை அறிவேன், விமர்சனங்களும் படித்திருக்கிறேன், இருந்தாலும் உங்கள் விமர்சனத்தை படித்தவுடன், புத்தகத்தை வாங்குவது என்று முடிவு செய்துவிட்டேன்! அருமையான விமர்சனம்!

படிக்காதீங்க.. (இந்திரா) said...

பதிவர்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் இந்த வலையுலகத்தில், உங்கள் பதிவு பாராட்டுதலுக்குரியது.
வாழ்த்துக்கள்.
புத்தகம் பற்றிய தகவலுக்கு நன்றி.

சே.குமார் said...

சுவாரசியமான விமர்சனம்.

விக்கியுலகம் said...

அருமையான விமர்சனம்

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
முதல் வாசகன்
விமர்சனமே புக் வாங்க தூண்டுதே.. ஓக்கே டன்//

மிக்க நன்றி தலைவா..

கவிதை காதலன் said...

//கவி அழகன் said...
சுவாரசியமான விமர்சனம்//

நன்றி நண்பரே.. மிக அருமையான புத்தகம். ஒருமுறை வாங்கி படியுங்கள்

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏற்கனவே இந்த புத்தகத்தை அறிவேன், விமர்சனங்களும் படித்திருக்கிறேன், இருந்தாலும் உங்கள் விமர்சனத்தை படித்தவுடன், புத்தகத்தை வாங்குவது என்று முடிவு செய்துவிட்டேன்! அருமையான விமர்சனம்!//

அண்ணே.. வாங்கிப்படியுங்க.. உபயோகமான புத்தகம்

கவிதை காதலன் said...

//சே.குமார் said...
சுவாரசியமான விமர்சனம்.//

நன்றி நண்பா

கவிதை காதலன் said...

//விக்கியுலகம் said...
அருமையான விமர்சனம்//

நன்றிட் தோழரே..

shortfilmindia.com said...

நன்றி கவிதைகாதலன் மணிகண்டா.. :)

எம் அப்துல் காதர் said...

நீங்கள் இயல்பாய் எழுதிய விமர்சனத்தின் எழுத்து நடை அந்த புத்தகத்தை படிக்கும்/வாங்கும்
ஆவலை தூண்டுதே!!

ஸ்வீட் ராஸ்கல் said...

முதல்ல மன்னிச்சிடு மச்சி,இப்படி ஒரு புத்தகம் உன் கிட்ட இருந்தும்,அதை பல நாள் உன் shelfல் பார்த்தும்,படிக்காமல் விட்டதற்க்கு.இந்த புத்தகத்தை பற்றி நீ சில முறை சொல்லும் போது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை.ஆனால் இப்பொது உன் இந்த பதிவை படித்த பிறகு எப்படியாவது படிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது...
இப்படி ஒரு புத்தகத்தை எழுதிய சங்கர் சாரை எவ்வளவு பாராடினாலும் தகும்.இதை தேர்ந்தெடுத்து விமர்சனம் எழுதின பாரு சூப்பர் டா மச்சி...

//சினிமாவின் வியாபார தந்திரங்கள் புரிந்தால் மட்டுமே ஒருவன் வெற்றியாளனாக இருக்க முடியும் என்பதை பட்டவர்த்தனமாக தனது அனுபவத்தின் மூலம் விளக்கி இருக்கிறார் கேபிள் சங்கர்.//
இந்த புதகத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த ஒரு வரியே போதும்.Hats of to u shakar sir...

//ஒரு வெற்றிகரமான திரைப்படம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அத்தனை பேரின் அலுவலகத்திலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது//
உன்னிடமும் இந்த புத்தகம் இருக்கும் காரணம் இப்போது புரிகிறது.கவலை படாத மச்சி,வானம் வசப்படும்,கனவு மெய்ப்படும்.
சினிமா விமர்சனம் மட்டும் அல்ல புத்தக விமர்சனமும் மிக மிக மிக நன்றாக எழுதுற கலக்கிட்ட மச்சி,சூப்பர் டா,வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுது...

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

இதையும் படியுங்கள்