Friday, June 3, 2011

இதழ்பெயர்ச்சி



நிச்சயமாய் தெரிகிறது உன்னுள்
தொலைந்துவிடுவேன் என..
தொலையாமல் இருக்க என்னவெல்லாம்
செய்ய வேண்டுமோ
அத்தனையையும் கவனமாக
நினைவில் கொள்கிறேன்..
செய்துவிடக்கூடாது என....

***********************************

ஒவ்வொரு செல்லிலும்
ஹை டெஸிபலில்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
சத்தமே இல்லாமல்
நீ சிந்திவிட்டு போன சிரிப்பு

***********************************

விரல்களை விலக்கி கொண்டே
விவரமாய் விலகிப்போகிறாய்..
பாவம் விழிகளில் சிக்கிக்கொண்டதை
அறியாமல்

***********************************

இடப்பெயர்ச்சி என்பதை நீயறிவாய்
இதழ்பெயர்ச்சி என்பதையும் நீயறிய
வேண்டும் என்பதே என் ஆசை..

***********************************

எதற்கு சாப்பாட்டில் மிச்சம் வைக்கிறாய் என்று
கோபித்துக்கொள்கிறாய்?
என்ன செய்வது
உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்.

***********************************

உன் இதழ்கள் சத்தமிட்டு பேசுவது
பிடிக்கவில்லை எனக்கு..
ஒரே ஒரு அனுமதி தருகிறேன்
வேண்டுமானால் முத்தமிட்டு பேசிக்கொள்..

***********************************






50 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை எனை நனைத்ததே

சி.பி.செந்தில்குமார் said...

>>உன் இதழ்கள் சத்தமிட்டு பேசுவது
பிடிக்கவில்லை எனக்கு..
ஒரே ஒரு அனுமதி தருகிறேன்
வேண்டுமானால் முத்தமிட்டு பேசிக்கொள்..


டாப் கிளாஸ் கவிதை

சி.பி.செந்தில்குமார் said...

>>
விரல்களை விலக்கி கொண்டே
விவரமாய் விலகிப்போகிறாய்..
பாவம் விழிகளில் சிக்கிக்கொண்டதை
அறியாமல்

நீங்க பாய் ஃபிரண்ட்ஸ்கூட பழகறப்ப நல்லவர்தான் . ஆனா .. ஹி ஹி

அதான் ஃபிகர் உஷார் ஆகிடுச்சு போல..

இந்திரா said...

ரொம்ப நாளைக்கப்புறம் வர்றீங்களே..

ரொம்ப பிஸி போல..

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

சீமான்கனி said...

//எதற்கு சாப்பாட்டில் மிச்சம் வைக்கிறாய் என்று
கோபித்துக்கொள்கிறாய்?
என்ன செய்வது
உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்.//

ஜிவ்வுன்னு இருக்கு...

ஆதலினால் காதல் செய்வீர்...

இந்திரா said...

//உன் இதழ்கள் சத்தமிட்டு பேசுவது
பிடிக்கவில்லை எனக்கு..
ஒரே ஒரு அனுமதி தருகிறேன்
வேண்டுமானால் முத்தமிட்டு பேசிக்கொள்..
//


அட அட..
அருமையோ அருமை.

சங்கவி said...

//விரல்களை விலக்கி கொண்டே
விவரமாய் விலகிப்போகிறாய்..
பாவம் விழிகளில் சிக்கிக்கொண்டதை
அறியாமல்//

ரசித்தேன் இவ்வரிகளை...

karthikkumar said...

உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்///
ithu sema machi..:)

vinu said...

he he he he...

orey thamaasu ponngaa...

aaaang appuram posttu pottathaa alert vanthuchchuuu posttu engeppaaa?


machi unakku vara vara kusumbu athigamaayiruchchuu....

avan avan ingey kaduppula irrukumbothuthaaan...

neeenga ithalpeyarchik kavithay poduveeenga....


unakku udambellaammachcham machchi

neee nadaththuuu nadaththuuu......

goyaala kayyula sikkuneyyyyyy....

கவிதை காதலன் said...

// சி.பி.செந்தில்குமார் said..
\முதல் மழை எனை நனைத்ததே//

நன்றி தலைவா...

//நீங்க பாய் ஃபிரண்ட்ஸ்கூட பழகறப்ப நல்லவர்தான் . ஆனா .. ஹி ஹி
அதான் ஃபிகர் உஷார் ஆகிடுச்சு போல..//

அய்யய்யோ என்ன இப்படி ஒரு வார்த்தை சொல்லிடீங்க?
நான் சின்ன பையன்னு உங்களுக்கு தெரியாதா?

கவிதை காதலன் said...

// இந்திரா said...
ரொம்ப நாளைக்கப்புறம் வர்றீங்களே..
ரொம்ப பிஸி போல..
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்//

என்னங்க பண்றது இப்ப கொஞ்சம் வேலை அதான் கமென்ட் கூட பூட முடியறது இல்ல,, மன்னிச்சுக்குங்க நண்பர்களே

கவிதை காதலன் said...

// சீமான்கனி said...
ஜிவ்வுன்னு இருக்கு...

ஆதலினால் காதல் செய்வீர்//

நன்றி நண்பரே.... நீங்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி

கவிதை காதலன் said...

//சங்கவி said...
//விரல்களை விலக்கி கொண்டே
விவரமாய் விலகிப்போகிறாய்..
பாவம் விழிகளில் சிக்கிக்கொண்டதை
அறியாமல்//

ரசித்தேன் இவ்வரிகளை//

வருக வருக நண்பரே

கவிதை காதலன் said...

// karthikkumar said...
உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்///
ithu sema machi..:)//

தேங்க்ஸ் மச்சி

கவிதை காதலன் said...

// vinu said...
he he he he...//


Haaa.. Haaa.. Haaa.. Naangalum vanthutomla.... konjam busy machi.. athan.. thittaaatha...

சமுத்ரா said...

ஹ்ம்ம் கற்பனை நன்று!

குடந்தை அன்புமணி said...

கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை நண்பா... வாழ்த்துகள்.

தமிழரசி said...

எதற்கு சாப்பாட்டில் மிச்சம் வைக்கிறாய் என்று
கோபித்துக்கொள்கிறாய்?
என்ன செய்வது
உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்.


அடிக்கடி பசிக்குமே..சோ க்யூட் ஒன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிறிய இடைவெளிக்கப்புறம் வந்தாலும், பின்னிட்டீங்க மணி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விரல்களை விலக்கி கொண்டே
விவரமாய் விலகிப்போகிறாய்..
பாவம் விழிகளில் சிக்கிக்கொண்டதை
அறியாமல்/////////

அருமை அருமை.......!

மதி said...

//எதற்கு சாப்பாட்டில் மிச்சம் வைக்கிறாய் என்று
கோபித்துக்கொள்கிறாய்?
என்ன செய்வது
உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்.//

good one

கவிதை காதலன் said...

//சமுத்ரா said...
ஹ்ம்ம் கற்பனை நன்று//

நன்றி சமுத்ரா...

கவிதை காதலன் said...

//குடந்தை அன்புமணி said...
கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை நண்பா... வாழ்த்துகள்.//

மிக்க நன்றி நண்பரே.. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

//தமிழரசி said...
எதற்கு சாப்பாட்டில் மிச்சம் வைக்கிறாய் என்று
கோபித்துக்கொள்கிறாய்?
என்ன செய்வது
உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்.

அடிக்கடி பசிக்குமே..சோ க்யூட் ஒன்..//


நன்றி தமிழரசி.. நீங்க ஏன் இப்படி உண்மைய போட்டு உடைக்குறிங்க?

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சிறிய இடைவெளிக்கப்புறம் வந்தாலும், பின்னிட்டீங்க மணி....!//

நன்றி தலைவா... உங்க வருகைக்கு மிக்க மகிழ்ச்சி

கவிதை காதலன் said...

//மதி said...
//எதற்கு சாப்பாட்டில் மிச்சம் வைக்கிறாய் என்று
கோபித்துக்கொள்கிறாய்?
என்ன செய்வது
உன் இதழ்களில் பரிமாறிப்பாரேன்
ஒரு பருக்கையின்றி தின்று தீர்க்கிறேன்.//

good one//


நன்றி மதி.. அடிக்கடி வாருங்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மணி,

அனைத்தும் அருமை...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வரிகளை படிப்பதில், ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி...

விஷ்ணு said...

supperbbbbbbbbbbb kavithai............

ani said...

cha pinitinga..........eppadi ippadi ellam thonuthu.....ethanala enga poitinga...........

ani said...

wow pinitinga...........eppadi ippadi ellam yosika mudiuthu..

ama ithana nal enga poitinga ..

சூன்யா said...

நல்ல கவிதைகள் தோழரே..!
கவிதை படும் பாட்டையும் படிங்க..

www.soonya007.blogspot.com

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதழ்பெயற்சி அருமையான ரசனை வாக்கியம்

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன்) said...
அன்புள்ள மணி,
அனைத்தும் அருமை...
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வரிகளை படிப்பதில், ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி...//

நன்றி வாசன். பிளாக் எழுத நேரம் கிடைக்கலை. அதான்.. வருகைக்கு மிக்க நன்றி நண்பா

கவிதை காதலன் said...

//விஷ்ணு said...
supperbbbbbbbbbbb kavithai//
மச்சான்..தேங்க்ஸ்டா

கவிதை காதலன் said...

// ani said...
cha pinitinga..........eppadi ippadi ellam thonuthu.....ethanala enga poitinga...........
ama ithana nal enga poitinga ..//

தேங்க்ஸ் அனிதா. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

// சூன்யா said...
நல்ல கவிதைகள் தோழரே..!
கவிதை படும் பாட்டையும் படிங்க..//

உங்க பேரே ரொம்ப வித்தியாசமா இருக்கு. மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
இதழ்பெயற்சி அருமையான ரசனை வாக்கியம்//
நீங்க வந்தா தான் என் பிளாக்குக்கே நல்ல நேரம் வந்த மாதிரி இருக்கு. மிக்க நன்றி தல

கலாநேசன் said...

வணக்கம் நண்பரே..உங்க கவிதைகள் ரொம்ப நல்லாருக்கு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா...உங்க வலைப்பூ பெயரை "கவிதைக் காதலன்" ன்னு மாற்றுங்கள்.

மதுரை சரவணன் said...

கவ்தைக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கிறேன்...

கவிதை காதலன் said...

// கலாநேசன் said...வணக்கம் நண்பரே..உங்க கவிதைகள் ரொம்ப நல்லாருக்கு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா...உங்க வலைப்பூ பெயரை "கவிதைக் காதலன்" ன்னு மாற்றுங்கள்.//

நன்றி நண்பரே.. ஆரம்பத்துல சும்மா விளையாட்டுக்கு வெச்சது. அதனால்தான் இலக்கணப் பிழை எல்லாம் பார்க்கல.

கவிதை காதலன் said...

// மதுரை சரவணன் said...
கவ்தைக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கிறேன்//

மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து படியுங்கள்

விஷ்ணு said...

ஆமா சார் ............. நீங்க சினிமாவுக்கு எழுதின பாட்டு வெளிவந்துருக்கே அத பத்தி ஒண்ணுமே சொல்லலையே........

சும்மா சொல்ல கூடாது சார் .............. சாங் கலக்கலா இருக்கு

காவ்யா said...

வணக்கம் நண்பரே..
வலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச இம்சை.

என் ப்ளாக்குக்கு வந்து ஆதரவும் அட்வைசும் குடுக்கணும்னு கேட்டுக்குறேன்.

Krishnakumar Aadhavan said...

நண்பரே ,

கவிதைகள் காதலுக்கு மட்டும் விதிவிலக்கானதை மாற்றுங்கள் ...

வாழ்த்துகள்...

அன்புடன் மலிக்கா said...

காதலுக்கே உள்ள கவிதை. ஆகவே இது கவிதைக்காத[ல]லின் காதல் மொழிபெயர்ச்சி.. மிக அருமை..

Nandhu said...

hmmmmm arumai kalakkunga !!!

vinu said...

47

vinu said...

48

vinu said...

49

vinu said...

50

இதையும் படியுங்கள்