Friday, February 25, 2011

நியூட்டனின் 3ம் விதி


“அர்விந்த் இதுல ராஜ்தானி ட்ரெய்னுக்கு ரெண்டு டிக்கெட் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் ட்ரெயின் கிளம்புறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி ஸ்டேஷனுக்கு போனா போதும். இந்தா இதுல 20,000 பணம் இருக்கு. வெச்சிக்கோ.. வழியில எதாவது தேவைப்பட்டா வாங்கிக்க. நிஷாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ மச்சி.. நீங்க டெல்லி போன உடனே எனக்கு போன் பண்ணுங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் அங்கேயே எதாவது ஒரு வேலை ரெடி பண்றேன். ஒகே.. ஜாக்கிரதை மச்சான்... டேய்.. நிஷா அப்பாவை நான் கவனிச்சுக்குறேன். நீங்க கிளம்புங்க.”

நிஷாவும் அர்விந்தும் டெல்லிக்கு ஓடிப்போவதற்கு எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டு மனத்திருப்தியுடன் பைக்கை கிளப்பினான் ராம்.

பைக் சீறியது... 5 நிமிடத்தில் ஒரு தொலைபேசி பூத்தை அடைந்தான். உள்ளே நுழைந்து தொலைபேசியின் எண்களை மெதுவாய் டயல் செய்யத்தொடங்கினான்.

கர்சீஃப்பின் உதவியால் குரலை மாற்றியபடியே,

“ஹலோ.. மிஸ்டர் ராமசுப்பு... நான் யாருங்கிறது எல்லாம் உங்களுக்கு வேணாம். நான் சொல்ற விஷயத்தை மட்டும்கேளுங்க. உங்க பையனுக்கு நிச்சயம் பண்ண ஜட்ஜ், கிருஷ்ணமூர்த்தியோட ஒரே பொண்ணு நிஷா, இன்னைக்கு ராத்திரி ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ல அவ லவ்வரோட ஓடிப்போகப்போறா.. முடிஞ்சா உங்க குடும்ப மானத்தை காப்பாத்திக்குங்க..”

"டொக்" வேறெதுவும் சொல்லாமல் ரிஸீவரை துண்டித்தான்.

அடுத்தது.. இன்னும் இரண்டு மூன்று பேருக்கு கால் செய்தான். சந்தோஷத்துடன் வெளியே வந்து பைக்கை கிளப்பி, ஒரு தனியிடத்தில் நிறுத்தி, ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்கத் தொடங்கினான்..

இரண்டு மூன்று நீளமான சிகரெட் இழுப்புகளுக்கு பிறகு, மெல்ல தன் மனதுடன் பேச தொடங்கினான்.

நிஷா..4 வருஷமா உன் பின்னாடி சுத்தி வர்றேன். நான் உன் கண்ணுக்கு தெரியலை. ஆனா நேத்து வந்த அர்விந்த் உன் காதலனா ஆகிட்டானா? உன்னைவிட அந்தஸ்துல 5 மடங்கு பணக்காரன் நான். ஆனா நீ? என்னைவிட்டுட்டு அந்த அன்னக்காவடி அர்விந்த் பின்னால சுத்துற இல்ல.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு நான் உன்னை வாழ்த்தி பாட்டு பாட எல்லாம் மாட்டேன். என்ன அழ வெச்ச பாவத்துக்கு நீ மட்டும் அழுதா போதாதுடி.. உன் குடும்பமே அழணும்டி.. உங்க அப்பா அம்மா எல்லாரும் உன்னால தலை குனிஞ்சு நிக்கணும்..அதுதான் எனக்கு வேணும்...

ஒரு குரூரமான புன்னகையுடன் சிகரெட்டை தூக்கிப்போட்டு காலில் மிதித்து நசுக்கினான். அந்த சிக்ரெட் நிஷாவாய் தோன்றியது அவனுக்கு..

ஒரு மனத்திருப்தியுடன் பைக்கை ஸ்டார்ட் செய்த போது அவன் மொபைல் சிணுங்கியது..

“ஹலோ “

“டேய் ராம்.. அம்மா பேசறேண்டா”’ அம்மா அழத்தொடங்கினாள்

சொல்லும்மா? ஏன் அழுவுறே?

“டேய் உன் தங்கச்சி அந்த அன்னக்காவடி பையன் சுந்தரோட ஓடிப்போயிட்டாளாம்டா.. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வ்நது ஹாஸ்பிட்டலல் சேர்த்திருக்கோம்டா....”


*******************************

56 comments:

மைந்தன் சிவா said...

வடை

மைந்தன் சிவா said...

என்ன பாஸ் இப்பிடி ஷாக் கதை சொல்றீங்க?

மைந்தன் சிவா said...

ஓடிப்போக வேண்டாம்ன்னு சொல்றீங்க?
அப்ப சரி பாஸ்..


நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_25.html

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை டூ கதை...?!!!

சங்கவி said...

Nice Story...

♔ம.தி.சுதா♔ said...

/////“டேய் உன் தங்கச்சி அந்த அன்னக்காவடி பையன் சுந்தரோட ஓடிப்போயிட்டாளாம்டா.. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வ்நது ஹாஸ்பிட்டலல் சேர்த்திருக்கோம்டா....”////

அடடா....

கலக்கல் தான் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

கவிதை காதலன் said...

// மைந்தன் சிவா said...
என்ன பாஸ் இப்பிடி ஷாக் கதை சொல்றீங்க?
ஓடிப்போக வேண்டாம்ன்னு சொல்றீங்க?
அப்ப சரி பாஸ்..//

கதை பிடிச்சிருந்ததா பாஸ்?

கவிதை காதலன் said...

// சி.பி.செந்தில்குமார் said...
கவிதை டூ கதை...?!!!//

அப்பப்போ எழுதறததுதான் தல,, இப்பத்தான் கேப் விழுந்துடுச்சி

கவிதை காதலன் said...

// சங்கவி said...
Nice Story//

நன்றி நண்பா...

கவிதை காதலன் said...

//ம.தி.சுதா said...
அடடா....
கலக்கல் தான் சகோதரம்...//

நன்றி சுதாகர்

தமிழ் உதயம் said...

தன் வினை தன்னை சுடும்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

உள்ளேன் ஐயா..!

vinu said...

enna kodumai sir ithuuuuuuuu

வினோ said...

இப்போ கதையா? நீங்க நடத்துங்க...

Chitra said...

"தன் வினை, தன்னை சுடும்" - என்பதை விளக்கும் கதை. :-)

ஜெ.ஜெ said...

ஓடி போனா நிஜமாவே அப்பாக்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா??

ஜெ.ஜெ said...

இதையே சொல்லி சொல்லி பயமுறுதுறாங்கபா...

கவிதை காதலன் said...

//தமிழ் உதயம் said...
தன் வினை தன்னை சுடும்.//
கண்டிப்பா.. அது இல்லாம போய்டுமா?

கவிதை காதலன் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
உள்ளேன் ஐயா..!//

கதையைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே

கவிதை காதலன் said...

// vinu said...
enna kodumai sir ithuuuuuuuu//

இதுல எதை மச்சி கொடுமைங்கிற? கதையவா?

கவிதை காதலன் said...

// வினோ said...
இப்போ கதையா? நீங்க நடத்துங்க...//

என்னங்க பண்றது இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேனா. அதான்

கவிதை காதலன் said...

// Chitra said...
"தன் வினை, தன்னை சுடும்" - என்பதை விளக்கும் கதை. :-)//

அட.. கதையோட நாட்'ஐ கண்டுபிடிச்சிட்டீங்களே.. ஹி..ஹி..

கவிதை காதலன் said...

// ஜெ.ஜெ said...
ஓடி போனா நிஜமாவே அப்பாக்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா??இதையே சொல்லி சொல்லி பயமுறுதுறாங்கபா...//

உங்க கவலை உங்களுக்கு.. என்ன பண்றது.. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலீங்

பாட்டு ரசிகன் said...

நானும் வந்துட்டேன்..

பாட்டு ரசிகன் said...

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

MANO நாஞ்சில் மனோ said...

நடக்கட்டும் நடக்கட்டும்....

கோமாளி செல்வா said...

சின்ன சிறுகதை .. நச்சுனு சொல்லிட்டீங்க .. அது சரி ஏன் எல்லா அண்ணன்கள் பண்ணுறத தப்புக்கு தங்கச்சிகள ஓடிப்போக வைக்குறீங்க ? ஹி ஹி

அமைதிச்சாரல் said...

'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்'ங்கற குறள்தான் ஞாபகம் வருது..

கவிதை காதலன் said...

//பாட்டு ரசிகன் said...
நானும் வந்துட்டேன்..//

வாங்க.. வாங்க... வந்ததுக்கு வந்தனம்

கவிதை காதலன் said...

//MANO நாஞ்சில் மனோ said...
நடக்கட்டும் நடக்கட்டும்....//

தப்பா எதுவும் நடக்கலையே.. ஹி..ஹி..

கவிதை காதலன் said...

//கோமாளி செல்வா said...
சின்ன சிறுகதை .. நச்சுனு சொல்லிட்டீங்க .. அது சரி ஏன் எல்லா அண்ணன்கள் பண்ணுறத தப்புக்கு தங்கச்சிகள ஓடிப்போக வைக்குறீங்க ? ஹி ஹி//

பயபுள்ள என்னமா யோசிக்குதுப்பா?

கவிதை காதலன் said...

//அமைதிச்சாரல் said...
'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்'ங்கற குறள்தான் ஞாபகம் வருது..//

வரணும் இல்ல... ஹி..ஹி..

அந்நியன் 2 said...

எல்லோருமே..ஓடிப் போயிட்டாள்..ஓடிப் போயிட்டாள்னுதான் கதையிலே எழுதுகிறிர்கள் ஆனால் அவள் என்ன சுந்தரோடு ஓடியா போயிருப்பாள் ?

கிடையவே கிடையாது கொஞ்சம் பதட்டத்துடன் ஆட்டோவிலேயோ அல்லது பேருந்துகளிலேயோ போயிருப்பாள்.

அழகான ஒரு எடுத்துக் காட்டு சார்,இதுக்குப் பேருதான் மூன்றாம் விதியோ ?

இந்த மூன்றாம் விதியைப் பற்றி ரஜினி கூட பிள்ளைகளுடன் ஒரு பாட்டுப் பாடுவார். ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் போனானாம் கூட.....

என்று பாட்டிலியே கதையை சொல்லி முடித்து விடுவார்,அந்த படம்தான் நினைவுக்கு வந்தது உங்கள் கதையைப் படித்து விட்டு.

நன்றி சார்.

சென்னை பித்தன் said...

ராமும் எங்கேயாவது ஓடிப் போக வேண்டியதுதான்!
முடிவு நல்லாருக்கு!

கவிதை காதலன் said...

//எல்லோருமே..ஓடிப் போயிட்டாள்..ஓடிப் போயிட்டாள்னுதான் கதையிலே எழுதுகிறிர்கள் ஆனால் அவள் என்ன சுந்தரோடு ஓடியா போயிருப்பாள் ?
கிடையவே கிடையாது கொஞ்சம் பதட்டத்துடன் ஆட்டோவிலேயோ அல்லது பேருந்துகளிலேயோ போயிருப்பாள்.//


அதுக்காக காதலனுடன் வீட்டை விட்டு சென்ற பெண்ணை பதட்டத்துடன் தேடும் தாய், தன் மகனிடம், "உன் தங்கச்சி சுந்தரோடு ஆட்டோவில் போய்விட்டாள்" என்று சொல்ல மாட்டாள்.. கோவத்திலும், அவமானத்திலும், இயலாமையிலும் ஒரு தாய் உபயோப்படுத்தும் வார்த்தை இதுவே. மிக்க நன்றி நண்பரே

கவிதை காதலன் said...

//சென்னை பித்தன் said...
ராமும் எங்கேயாவது ஓடிப் போக வேண்டியதுதான்!
முடிவு நல்லாருக்கு//

ஏன்? ஏன் இந்த முடிவு....?

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசில வந்த சுந்தர் பெயர்தான் இடிக்குது பாஸ்!! வேற பேர் யூஸ் பண்ணிருக்கலாமோ?

கவிதை காதலன் said...

ஏன் வசந்த்.. சுந்தர்'ங்கிற பேர் ஏன் பிடிக்கலை உங்களுக்கு?

சீமான்கனி said...

கவிதைல காதல் பேசிட்டு கதைல காதல கதற விட்டுடீங்களே பாஸ்...சும்மா... ட்விஸ்ட் தூள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அன்னக்காவடிக்கு அன்னக்காவடிதான் பதிலடி........!

ரஹீம் கஸாலி said...

நல்ல முடிவு நண்பா...
நம்ம கடையில் இன்று தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.... அது இதுதானோ?

விதி யாரையும் விடுவதில்லை....

கவிதை காதலன் said...

//சீமான்கனி said...
கவிதைல காதல் பேசிட்டு கதைல காதல கதற விட்டுடீங்களே பாஸ்...சும்மா... ட்விஸ்ட் தூள்...//

நன்றி தலைவா..

கவிதை காதலன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அன்னக்காவடிக்கு அன்னக்காவடிதான் பதிலடி........!//

ஹி..ஹி. ஏதோ நம்மால முடிஞ்சது தல..

கவிதை காதலன் said...

//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.... அது இதுதானோ?
விதி யாரையும் விடுவதில்லை....//

அது என்னமோ உண்மைதானே வாசன்

கவிதை காதலன் said...

//ரஹீம் கஸாலி said...
நல்ல முடிவு நண்பா...//

நன்றி நண்பா...

விஷ்ணு said...

ooru peruna athu delhi, train peruna athu Rajathani, mutiyala varatum ingaa kaala odaikuren

கவிதை காதலன் said...

//விஷ்ணு said...
ooru peruna athu delhi, train peruna athu Rajathani, mutiyala varatum ingaa kaala odaikuren//


மச்சி யாரோட காலைன்னு சொல்லவே இல்ல

பாரத்... பாரதி... said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கோம்..
நேரமிருப்பின் இந்த பதிவை பார்க்க வாங்க...
http://bharathbharathi.blogspot.com/2011/02/blog-post_28.html.

nandhini said...

Newton's 3rd law ku super explanation ponga sema !!!!!

nandhini said...

Newton's 3rd law ku super explanation ponga sema !!!

Anonymous said...

சுருக்கமாக இருந்தாலும் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகப் புரிய வைத்திருப்பது பாராட்டுக்குரியது..

பாடலாசிரியரே.. “உயிரைத் தொலைத்தேன்“ நாங்க எப்ப கேக்குறது???

பதிவுலகில் பாபு said...

நல்ல கருத்துள்ள கதைதாங்க.. நல்லாயிருக்கு..

நேசமுடன் ஹாசிம் said...

வினைவிதைப்பவன் வினை அறுப்பான் என்ற பழமொழி ஞாபகத்திற்கு வந்தது அருமையான கரு வாழ்த்துகள்

மன்னிக்கவும் உங்களின் comments bar
மிகவும் சிறிதாக இருக்கிறது மாற்றிடுங்கள்

எங்க வீட்டுக்கும் வந்து போங்க சார் அப்பப்ப
நன்றி நண்பரே

Part Time Jobs said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

சிவகுமாரன் said...

அருமையா கதை சொல்றீங்க

இதையும் படியுங்கள்