Monday, January 17, 2011

ஆடுகளம் - வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர்களை இரண்டுவகையாக பிரித்துவிடலாம். “வெற்றிக்காக கதை செய்பவர்கள்”. “செய்யும் கதையின் வழியாக வெற்றியை வர செய்பவர்கள்”. இதில் வெற்றி மாறன் இரண்டாவது வகையை சார்ந்தவர். “ஆடுகளம்” என்ன மாதிரியான களம்? தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சேவல் சண்டையை களமாக தேர்ந்தெடுத்து இருப்பதே ஒரு வித்தியாசமான திரைப்படம் பார்க்கப்போகிறோம் என்பதை உணர்த்துகிறது.

சேவல் சண்டையில் மதுரை தென்பரங்குன்றத்தை சார்ந்த பேட்டைக்காரர் அசைக்க முடியாத ஜாம்பவானாக விளங்குகிறார். அவரது சிஷ்யர் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சேவல் சண்டையில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக தனுஷ் நடந்து கொள்ள, தனுஷுக்கு அளவுக்கு மீறிய செல்வாக்கு கிடைக்கிறது. இது குருவான பேட்டைக்காரருக்கு தனுஷின் மீது சொல்ல முடியாத கோபத்தை ஏற்படுத்துகிறது. மெல்ல ஆரம்பிக்கும் அவரது அவமானம் கலந்த கோபம், தனுஷின் நண்பர்கள், காதலி, குடும்பம் என அத்தனையிலும் நுழைந்து தனுஷுக்கு படிப்படியான சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. பின் எப்படி இதிலிருந்து தனுஷ் மீண்டு வருகிறார் என்பது மீதிக்கதை. இந்த களேபரங்களுக்கு இடையில் தனுஷுக்கு ஆங்கிலோ இந்தியப்பெண்ணான தாப்ஸி மீது காதலும் ஏற்படுகிறது. அந்தக்காதலும் இந்த துரோகத்தால் எப்படி சிதைகிறது என்பது மற்றொரு கிளைக்கதை.

தனுஷ் என்ற மனிதனின் கேரியரில் இந்தப்படம் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய படமே. தனுஷின் உடல்மொழி அந்த கருப்பு என்ற கேரக்டருக்கு அச்சுஅசலாக பொருந்தி போகிறது. தாப்ஸி தன்னைத்தான் காதலிக்கிறேன் என்று கைகாட்டியவுடன் தனுஷ் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் டாப்கிளாஸ். அதே உற்சாகத்தோடு லுங்கியை தூக்கி மடித்துக்கொண்டு அவர் ஆடுகையில் தியேட்டரே உற்சாகத்தில் ஆடுகிறது. தன்னை ஏமாற்றிய குருவிடத்தில் தனுஷ் காட்டும் முகபாவங்கள் பிரமாதமானவை.. கதாநாயகிக்கு இந்தப்படத்தில் பெரிதாய் வேலையில்லை.. பார்ப்பதற்கு அழகான பொம்மை போலவே இருக்கிறார். அவ்வப்போது சிரிக்கிறார். தனுஷின் லோக்கிளாஸ் வாழ்க்கையைப்பார்த்து காதல் கொள்ளும் டிபிக்கல் தமிழ்சினிமா ஹீரோயின். சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

படத்தில் பாராட்டப்படவேண்டியவர் பேட்டைக்காரராக வரும் ஈழத்து எழுத்தாளர் ஜெயபால். இவர்தான் இந்த ஆடுகளத்தின் மையப்புள்ளி. ஒவ்வொரு சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களிலும் மனுஷன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். தனுஷின் வெற்றியைப் பார்த்து ஏற்படக்கூடிய மனரீதியான மாற்றங்களை மிகப்பிரமாதமாய் பிரதிபலித்திருக்கிறார். ஒரு காட்சியில் கோழியை பிடித்து அடித்தே கொல்லுவாரே.. பயங்கரம்.

சேவல் சண்டையில் தான் ஒரு ராஜா என்ற இறுமாப்பு, ஒரு சின்ன பையன் முன் தோற்று நிற்கிறோமே என்ற அவமானம், உச்சபட்சமாக மனைவியையே கூட சந்தேகப்பட்டு பேசும் காட்சி, இறுதியில் தனுஷின் பேச்சால் தலைகுனிந்து அவர் எடுக்கும் முடிவு என ஒவ்வொரு காட்சியிலும் பேட்டைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். இவருக்கு டப்பிங் கொடுத்திருக்கும் ராதாரவியையும் பாராட்டியே ஆகவேண்டும் ஒரு காட்சியில் கூட அது டப்பிங் என்பதே தெரியாத அளவிற்கு அந்த உருவத்துடன் குரல் அட்சரசுத்தமாய் பொருந்தி போகிறது.

கிஷோர் மீது வெற்றிமாறனுக்கு என்ன பிரியமோ, பொல்லாதவனைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் பல இடங்களில் கிஷோரை ஜொலிக்க வைத்திருக்கிறார். மிகச்சரியான கதாபாத்திரத்தேர்வுக்கு கிஷோர் ஒரு உதாரணம். பேட்டைக்காரர் ஏற்றிவிடும் போதெல்லாம் அந்த விஷயத்தை உள்வாங்குவதற்காக அவர் காட்டும் முகபாவனை க்ளாஸிக்ஒரு கதைக்கு திரைக்கதை என்பது மிக முக்கியம். அந்த திரைக்கதையின் உயிரான “டீட்டெய்ல்ட் வெர்ஷன்” எனப்படும் நுணுக்கமான கதாபாத்திர பின்புலத்தை பல இயக்குனர்கள் கையாள்வதில்லை. ஆனால் வெற்றிமாறன் இந்த திரைக்கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பல “டீட்டெய்ல்ட் வெர்ஷன்” அமைத்திருக்கிறார். இதுவரை தமிழ்சினிமா அவ்வளவாக தொட்டிராத சேவல் சண்டையை களப்படுத்தி இருப்பதே தமிழ்சினிமாவிற்கு புதிது.

அந்த சேவல் சண்டையின் பின்னணி, சேவலை எப்படி போட்டிக்கு தயார் செய்து, அடிபட்ட சேவலுக்கு எப்படி முதலுதவி செய்வது, சேவலின் ரத்தத்தை எப்படி உறிஞ்சி எடுப்பது, இந்தப் போட்டிக்காக வெளிநாடுகளில் இருந்து கூட இருந்து சேவலை எப்படி வரவழைக்கிறார்கள் என்ற மிக நுணுக்கமான விவரங்களை சுவாரஸ்யமாய் நுழைத்ததில் வெற்றிமாறன் ஜொலித்திருக்கிறார். வெற்றி பெற்ற சேவலை திருடிக்கொண்டு போய் இன்னொரு கோழியிடம் இணை சேரவிட்டால் தன் வம்ச சேவல் இன்னொரு வீட்டில் வளருமே என்பதற்காக கோழியின் சினையையே அறுத்து எடுப்பது, தன்னுடைய சேவலை விற்க நேரிடும் போது அதன் காலை கழுவிவிட்டு கொடுப்பது, ஏன் என்றால் தன் வீட்டின் மண் அந்த சேவலின கால் வழியாக கூட போய்விடக்கூடாது என்பது போன்ற பல இடங்களில் வெற்றிமாறனின் ஸ்க்ரிப்ட் நாலேட்ஜ் பிரமிக்க வைக்கிறது.

பேட்டைககாரர் போலீஸ் ஸ்டேஷனில் குரல் உயர்த்தி பேசிய சில வினாடிகளில் ஒரு போலீஸ்காரர் அந்த ரூமிலிருந்து கையை முறுக்கிவிட்டுக்கொண்டே வருவதை காண்பித்து, உள்ளே என்ன நடந்தது என்பதை காட்டாமலேயே பார்வையாளனுக்கு புரியவைத்திருக்கும் காட்சி ரசனை நுணுக்கம். ஹீரோயினின் பாட்டி, தனுஷின் அம்மா, பேட்டைககாரரின் மனைவி தனுஷின் நண்பன் என ஒவ்வொரு கதாபாத்திர பின்னணியும் அத்தனை உண்மையாய் போலித்தனங்கள் இல்லாமல் இருக்கிறது. அந்த இடைவேளைக்காட்சியில் வெற்றிமாறனின் முழு உழைப்பும் தெரிகிறது.

கில்லி, சென்னை 28 போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களில் அந்த விளையாட்டு ஆக்ரோஷமாக க்ளைமேக்ஸில்தான் வெளிப்படும். ஆனால் அந்த அளவுகோலை இடைவேளையிலேயே உடைத்துவிட்டு, அதற்கு இணையான மற்றொரு திசையில் படம் நகர்வது வெற்றிமாறனின் புத்திசாலித்தனமான திரைக்கதைக்கு உதாரணம். ஆனால் முதல் பாதியில் இருந்த அந்த வேகத்தை இரண்டாம் பாதியிலும் எதிர்பார்க்கும் ரசிகனை கொஞ்சம் ஏமாற்றியும் இருக்கிறார் வெற்றிமாறன்.

அந்த ஏமாற்றம் ஏன் ஏற்படுகிறது என்றால் ஒரு காட்சியில் பந்தயத்தில் தோற்றுப்போய் மொட்டை அடிக்கப்பட்டு மீசை மழிக்கப்படும் நபர் ஏதோ பழிவாங்கப்போகிறார் என்ற எண்ணத்தை தோற்றுவித்து பின் அதை கதைக்குள்ளேயே கொண்டுவர மாட்டார் வெற்றிமாறன். அதற்கான காரணத்தை பேட்டைக்காரர் அவர் மனைவியிடம் “தன்னால் தோற்கடிக்கப்பட்டவர் அதையெல்லாம் மறந்து இன்று மில் வைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்துவருவதாக” குறிப்பிடுவார். அபப்டியென்றால் இந்த போலீஸ்காரரும் அந்த அவமானத்தால் அமைதியாகத்தான் வாழ்வார் என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சி இது..

அதே போல் ஒரு காட்சியில் தனுஷ் கிஷோரிடம், “நாளைக்கு நானும் உன்னிடம் இதே போல் தயவுதாட்சண்யம் பார்க்காம பேசுவேன்” என்று சொல்லுவார்। உடனே ரசிகர்கள் பின்னால் வரும் காட்சியில் கிஷோர் தனுஷிடம் தோற்று நிற்பார். தனுஷ் அப்போது இதே போல் பேசுவார் என்று நினைப்பார்கள். ஆனால் அந்த எண்ணத்தையும் ஜஸ்ட் லைக் தட் வெற்றி மாறன் தட்டிவிட்டு போகிறார். இப்படி எதிர்ப்பார்ப்பதை எல்லாம் நிறைவேற்றவில்லை என்பதால் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் படம் போரடிப்பதாக நினைக்கலாம்.

அந்த சேவல் சண்டை கிராஃபிக்ஸ் என்றாலும் அதை கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு மேட்ச் செய்திருப்பதில் கேமராமேன் வெற்றி பெற்றிருக்கிறார். “யாத்தே யாத்தே” பாடலும், “ஒத்தை சொல்லால” பாடலிலும் ரசிகர்களை துள்ளாட்டம் போடவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ். ஒலிப்பதிவில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். நேட்டிவிட்டியுடன் பேசுவது பல சமயங்களில் புரியாமலேயே போகிறது. தமிழ்சினிமாவில் வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது, அயன், எந்திரனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸின் உண்மையான வெற்றி இந்தப்படமே..

ஆடுகளம் - அமர்க்களம்

55 comments:

சி.பி.செந்தில்குமார் said...

1ST CUT

சி.பி.செந்தில்குமார் said...

WAIT, READ AND THEN COME

சி.பி.செந்தில்குமார் said...

<>>>>>>தாப்ஸி தன்னைத்தான் காதலிக்கிறேன் என்று கைகாட்டியவுடன் தனுஷ் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் டாப்கிளாஸ். அதே உற்சாகத்தோடு லுங்கியை தூக்கி மடித்துக்கொண்டு அவர் ஆடுகையில் தியேட்டரே உற்சாகத்தில் ஆடுகிறது. தன்னை ஏமாற்றிய குருவிடத்தில் தனுஷ் காட்டும் முகபாவங்கள் பிரமாதமானவை..

S 100*% TRUE

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
கில்லி, சென்னை 28 போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களில் அந்த விளையாட்டு ஆக்ரோஷமாக க்ளைமேக்ஸில்தான் வெளிப்படும். ஆனால் அந்த அளவுகோலை இடைவேளையிலேயே உடைத்துவிட்டு, அதற்கு இணையான மற்றொரு திசையில் படம் நகர்வது வெற்றிமாறனின் புத்திசாலித்தனமான திரைக்கதைக்கு உதாரணம்.


S S U R OBSOLUTELY CORRECT

சி.பி.செந்தில்குமார் said...

>>>தமிழ்சினிமாவில் வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது,

S . MANI LIKE YR POSTS.. HA HA

GREAT JOB, KEEP IT UP

யாதவன் said...

Supper analyze

♠ ராஜு ♠ said...

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்..

கவிதை காதலன் said...

போஸ்ட் போட்ட உடனே கமெண்ட்ல கலக்கிய செந்தில்சாருக்கு நன்றிகள்

கவிதை காதலன் said...

// யாதவன் said...
Supper analyze//

நன்றி யாதவன்

கவிதை காதலன் said...

//ராஜு ♠ said...
நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்..//

நன்றி ராஜு.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?

vinu said...

machchi innaiku morning show try panninean "house full"


so paaka mudiyalai; lets see in few days.

Samudra said...

good one

vinu said...

machchi catch me in local number; now i'm at home only; athuthaan cut pannunean

கவிதை காதலன் said...

//Samudra said...
good one//

நன்றி சமுத்ரா அவர்களே..

கவிதை காதலன் said...

//vinu said...
machchi innaiku morning show try panninean "house full"
so paaka mudiyalai; lets see in few days.//

ஹவுஸ்புல் படத்துக்கு உன்னை யாருப்பா போக சொன்னது? ஆடுகளம் போக வேண்டியது தானே..

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
நிஜமான விமர்சனம் இது தான் டா.உன் இந்த விமர்சனமே நிச்சயம் பல பேரை படம் பார்க்க தூண்டும்.பாரம்பரிய கலைகள் பல இடங்களில் அழிந்து விட்ட காலத்தில் அதை சினிமாவிலாவது காட்டிய வெற்றி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.பொல்லாதவன் படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படத்தை மிகவும் எதிர் பார்த்த ரசிகர்களில் நானும் ஒருவன்.தன்னுடைய அடுத்த படத்தை பற்றி எதிர் பார்க்க வைப்பது எல்லோராலும் முடிவதில்லை.ஆனால் வெற்றி மாறன் சொல்வதொடு நிற்காமல் செய்தும் காட்டியிருக்கிறார்.வெற்றி மாறனை மட்டும் அல்ல அவரது டீம் ( வேல்ராஜ், G.V , கிஷோர்,எழுத்தாளர் ஜெயபால்,தனுஷ்,கிஷோர்.T.E,ஜாக்கி,ராம்போ ராஜ்குமார்,டான்ஸ் மாஸ்டர் தினேஷ்) இன்னும் படத்தில் பணியாற்றிய அனைவரையும் உங்கள் இந்த ப்ளாக் வழியாக விசிலடித்து கைதட்டி பாரட்டிக்கொள்கிரேன்.இந்த வருடத்தின் முதல் படமே தனுஷ்க்கு வெற்றி படமாக அமைந்திருப்பது நல்ல விஷயம்.தொடர்ந்து 2 தோல்விகளையும் தடம் தெரியாமல் அடித்து நொறுக்கி பேயாட்டம் ஆடியிருக்கிறார் இந்த ஆடுகளத்தில் தனுஷ்.கருப்பு கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்,இது தனுஷின் 39 வது படம்.பல பேர் 50 படங்கள் நடித்தும் இப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யாமல் நானும் நடிக்கிறேன் என்று நடித்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பார்த்து கற்றுக்கொண்டால் சரி.

கிஷோர்,எழுத்தாளர் ஜெயபால் பாராட்டப்படவேண்டிய,தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள்.தனுஷின் சினிமா வரலாற்றில் இது மிக முக்கியமான,மறக்க முடியாத படம்.படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.அடுத்து என்ன நடக்க போகிறது என்று நாம் ஒன்றை நினைக்க அதை பொய்யாக்கி எதிர்பாராததை காண்பிப்பது தான் வெற்றி மாறனின் வெற்றி ரகசியம்.என்னை பொறுத்த வரை படத்தில் எந்த குறையும் நான் பார்க்கவில்லை.நான் எதிர்பார்த்ததை விட படம் மிகவும் பிரமாதம்.கிளைமாக்ஸ் சரியான மிக பொருத்தமான ஒரு காட்சி.படம் பார்க்காதவர்கள் சீக்கிரம் Theatre சென்று பாருங்கள்.திருட்டு VCD இல் பார்த்து படத்தை பற்றி தப்பு தப்பாக சொல்லாதீர்கள்.
மச்சி வழக்கம் போல ஒரு சிறப்பான பதிவு டா. கலக்கிட்ட.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ரசிகர்களுக்காக.

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை பாத்துர வேண்டியதுதான்.....

Chitra said...

very good review.

சிவகுமாரன் said...

ரசிக்கத்தக்க ஆக்கபூர்வமான விமர்சனம். நான் வருடத்தற்கு ஓரிரண்டு படம் தான் பார்ப்பேன், எந்திரன் பார்த்தது. ஆடுகளம் பார்க்க தூண்டியது உங்கள் விமர்சனம்.

பதிவுலகில் பாபு said...

நல்ல விரிவான விமர்சனம்.. படம் பார்க்கனும்..

shortfilmindia.com said...

good review

cablesankar

அன்புடன் மலிக்கா said...

நல்லா விமர்சனம் செய்திருக்கீங்க அருமை..

sakthistudycentre-கருன் said...

----தாப்ஸி தன்னைத்தான் காதலிக்கிறேன் என்று கைகாட்டியவுடன் தனுஷ் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் டாப்கிளாஸ். அதே உற்சாகத்தோடு லுங்கியை தூக்கி மடித்துக்கொண்டு அவர் ஆடுகையில் தியேட்டரே உற்சாகத்தில் ஆடுகிறது. தன்னை ஏமாற்றிய குருவிடத்தில் தனுஷ் காட்டும் முகபாவங்கள் பிரமாதமானவை---ஒரு நல்ல நடிகர் உருவாகிகொண்டிருக்கிறார்.

கவிதை காதலன் said...

// ஸ்வீட் ராஸ்கல் said... //
நன்றி ஸ்வீட் ராஸ்கல்.. நீங்க எப்போ பிளாக் எழுதுவீங்க?

கவிதை காதலன் said...

//MANO நாஞ்சில் மனோ said...
படத்தை பாத்துர வேண்டியதுதான்//
கண்டிப்பா பாருங்க மனோ..

கவிதை காதலன் said...

// Chitra said...
very good review.//
நன்றி சித்ரா.. படம் பார்த்திட்டீங்களா?

கவிதை காதலன் said...

//சிவகுமாரன் said...
ரசிக்கத்தக்க ஆக்கபூர்வமான விமர்சனம். நான் வருடத்தற்கு ஓரிரண்டு படம் தான் பார்ப்பேன், எந்திரன் பார்த்தது. ஆடுகளம் பார்க்க தூண்டியது உங்கள் விமர்சனம்.//

நன்றி சிவக்குமார்.. மிஸ் பண்ணாதீங்க..

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
நல்ல விரிவான விமர்சனம்.. படம் பார்க்கனும்..//

நன்றி பாபு.. கட்டாயம் பாருங்க

கவிதை காதலன் said...

//shortfilmindia.com said...
good review
cablesankar//

தலைவரே.. உங்கள் வருகை மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.. நன்றி

கவிதை காதலன் said...

//அன்புடன் மலிக்கா said...
நல்லா விமர்சனம் செய்திருக்கீங்க அருமை..//

நன்றி தோழி...

கவிதை காதலன் said...

// sakthistudycentre-கருன் said...
ஒரு நல்ல நடிகர் உருவாகிகொண்டிருக்கிறார்//

நிச்சயமாக, தனுஷுக்குள் ஒரு அற்புதமான நடிகர் ஒளிந்து கொண்டிருக்கிறார். அதை வெளியில் கொண்டுவருவது வெற்றிமாறன் போன்ற ஒரு சில இயக்குனர்கள்தான்

ஆதவா said...

படத்தை நன்கு அவதானித்திருக்கிறீர்கள். மிகச்சிறப்பான படத்திற்கு மிகச்சிறப்பான விமர்சனம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுவராசியமான விமர்சனம்....! கொஞ்ச நாளா இந்தப் பக்கமே வரமுடியல (ஹி..ஹி.. மறந்துட்டேன், வேற ஒண்ணுமில்ல!) போயி மிஸ்ஸாகுன எல்லா போஸ்ட்டையும் படிச்சுட்டு வர்ரேன் பாஸ்!

கவிதை காதலன் said...

//ஆதவா said...
படத்தை நன்கு அவதானித்திருக்கிறீர்கள். மிகச்சிறப்பான படத்திற்கு மிகச்சிறப்பான விமர்சனம்.//

நன்றி ஆதவா.. தொடர்ந்து வாருங்கள்

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சுவராசியமான விமர்சனம்....! கொஞ்ச நாளா இந்தப் பக்கமே வரமுடியல (ஹி..ஹி.. மறந்துட்டேன், வேற ஒண்ணுமில்ல!) போயி மிஸ்ஸாகுன எல்லா போஸ்ட்டையும் படிச்சுட்டு வர்ரேன் பாஸ்!//

தலைவா நீங்க வந்தாத்தான் பிளாக் களைகட்டுது.. அடிக்கடி வாங்க

மாணவன் said...

விமர்சனம் அருமையா எழுதியிருக்கீங்க நண்பரே

படம் இந்தவாரம் பார்க்கலான்னு இருக்கேன்....

பகிர்வுக்கு நன்றி நண்பரே

ஆயிஷா said...

விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க.

கவிதை காதலன் said...

//மாணவன் said...
விமர்சனம் அருமையா எழுதியிருக்கீங்க நண்பரே
படம் இந்தவாரம் பார்க்கலான்னு இருக்கேன்....
பகிர்வுக்கு நன்றி நண்பரே//

நன்றி நண்பரே.. கண்டிப்பா பாருங்க..

கவிதை காதலன் said...

//ஆயிஷா said...
விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க.//


நன்றி தோழி

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் விமர்சனம். மிக்க நன்றி.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_18.html

தம்பி கூர்மதியன் said...

ரசிகர் அனைவரின் கருத்து முன்நிற்கிறது... இரண்டாம் பாதி மெதுவாக போகிறது என பலர் சொன்னாலும் அது படத்தின் தண்மையை குறைக்கவில்லை, பொங்கல் ரிலீசில் ஆடுகளம் பெஸ்ட் என்கிறார்கள்.. நானும் ஏற்கிறேன்.. நடுநிலையான விமர்சனத்துக்கு நன்றி...

கவிதை காதலன் said...

//வெங்கட் நாகராஜ் said...
நல்லதோர் விமர்சனம். மிக்க நன்றி.//

நன்றி நண்பரே..

கவிதை காதலன் said...

//தம்பி கூர்மதியன் said...
நடுநிலையான விமர்சனத்துக்கு நன்றி...//

நன்றி நண்பரே.. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

கனாக்காதலன் said...

படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

ஜீ... said...

வெற்றிமாறனின் ஸ்டைல், டீட்டெயிலிங்க் (ஒரு உலக சினிமா போல்) பொல்லாதவனில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! இன்னும் நான் ஆடுகளம் பார்க்கவில்லை. இன்று பார்ப்பதாக இருந்து தவறிவிட்டது! ஆவலாயுள்ளேன்!

ஜீ... said...

உங்கள் விமர்சனம் அருமை!

goma said...

நல்லாவே விமரிசனம் பண்ணீட்டீங்க...

தோழி பிரஷா said...

நல்ல விரிவான விமர்சனம்..

விக்கி உலகம் said...

ரொம்ப டீப்பா போய் எழுதி இருக்கீங்க.

அருமையான அலசல் சூப்பர்

கவிதை காதலன் said...

//கனாக்காதலன் said...
படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.//

நன்றி காதலரே

கவிதை காதலன் said...

// ஜீ... said...
வெற்றிமாறனின் ஸ்டைல், டீட்டெயிலிங்க் (ஒரு உலக சினிமா போல்) பொல்லாதவனில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! இன்னும் நான் ஆடுகளம் பார்க்கவில்லை. இன்று பார்ப்பதாக இருந்து தவறிவிட்டது! ஆவலாயுள்ளேன்!//

கண்டிப்பாய் பாருங்கள் ஜீ.. உங்களுக்கு பிடிக்கும்

கவிதை காதலன் said...

//goma said...
நல்லாவே விமரிசனம் பண்ணீட்டீங்க...//

நன்றி தோழி. வருகைக்கும் கருத்துக்கும்

கவிதை காதலன் said...

//தோழி பிரஷா said...
நல்ல விரிவான விமர்சனம்..//

நன்றி தோழி.. படம் பார்த்திட்டீங்களா?

கவிதை காதலன் said...

// விக்கி உலகம் said...
ரொம்ப டீப்பா போய் எழுதி இருக்கீங்க.
அருமையான அலசல் சூப்பர்//

தலைவா நீங்க வந்தது ரொம்ப மகிழ்ச்சி..

Bala Ganesan said...

super view like tis i never read it.......appadi enna than sir antha police stationla nadakum .

இதையும் படியுங்கள்