Thursday, January 13, 2011

இதழ்களுக்கு கேட்கவில்லை


தோளில் சாய்ந்து கொண்டு
தோழமை வெளிப்படுத்துவாய்.
நெஞ்சில் சாய்ந்து கொண்டு
நேசம் வெளிப்படுத்துவாய்.
இடம் பொருள் அறிந்து
நடத்தல் இதுதானோ?



Free Pics Love Pictures Photo Sharing


ஒருமுறை கூட உன்னிடமிருந்து
திட்டுவாங்காமல் வாங்கியதில்லை
முத்தங்களை...
ஆனாலும் அப்படி கொடுத்தால்தான்
இனிப்பேன் என்று அடம்பிடிக்கிறது
முத்தங்களும்....



Free Image Hosting Love Pictures Upload Photos


நீயும் செய்யவில்லை…
நானும் செய்யவில்லை…
நம்மைக்கொண்டு விளையாடிவிட்டு
நம்மையே பழிப்புகாட்டுகின்றன
சில்மிஷங்கள்



உன் இதழ்களுக்கு என்ன வேண்டும்?
இன்றாவது ஒழுங்காய்
என் இதழ்களிடம் சொல்ல சொல்..
அவைகளுக்கு உன் இதழ்கள்
சொல்வது சரியாய் கேட்பதே இல்லையாம்.



Upload Photos View Photos Love Pics

எப்போதும் என்னை
முறைத்துக்கொண்டே இருக்கும்
உன் ஆடைகளுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்?
அதை என்னிடம் விடு
நான் பார்த்துக்கொள்கிறேன் என
என்னை சமாதானம் செய்கின்றன
என்விரல்கள்



Love Images Love Pictures View Photos


இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்...



இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


82 comments:

தினேஷ்குமார் said...

நண்பரே காலையிலே அலைபாய விட்டுவிட்டீர்கள் என் மனதை தனிமையில் அருமை ...

இந்திரா said...

அனைத்துமே காதல் மழை பொழிகின்றன..

எனக்குப் ரொம்பவே பிடித்த வரிகள் இவை..

//உன் இதழ்களுக்கு என்ன வேண்டும்?
இன்றாவது ஒழுங்காய்
என் இதழ்களிடம் சொல்ல சொல்..
அவைகளுக்கு உன் இதழ்கள்
சொல்வது சரியாய் கேட்பதே இல்லையாம்.
//

இந்திரா said...

ஓட்டுப் போட்டாச்சு..
நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

பிரியமுடன் ரமேஷ் said...

கவிதை அருமை நண்பரே.. படங்கள் இல்லாமல் போட்டிருந்தால் இன்னும் ரசிக்க முடியும் என நினைக்கிறேன்.. எல்லாம் 18+ படமா இருக்கா.. அதைத்தான் முதல்ல ரசிக்க வேண்டி இருக்கு...

Mohan said...

Very Romantic!

Chitra said...

Early Valentine special! :-)

கவிதை காதலன் said...

//தினேஷ்குமார் said...
நண்பரே காலையிலே அலைபாய விட்டுவிட்டீர்கள் என் மனதை தனிமையில் அருமை ...//

நன்றி தினேஷ்..

கவிதை காதலன் said...

//இந்திரா said...
அனைத்துமே காதல் மழை பொழிகின்றன..//

மழையில நனைஞ்சீங்களா??

கவிதை காதலன் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
கவிதை அருமை நண்பரே.. படங்கள் இல்லாமல் போட்டிருந்தால் இன்னும் ரசிக்க முடியும் என நினைக்கிறேன்.. எல்லாம் 18+ படமா இருக்கா.. அதைத்தான் முதல்ல ரசிக்க வேண்டி இருக்கு//

அடக்கடவுளே.. இதுவே 18+ஆ?? இதை மட்டும் எங்க சிபி செந்தில்சார் கேட்டார்ன்னா அவர் மனசு என்ன பாடுபடும்?

யாதவன் said...

அதனை கவிதைகளும் அருமையாக உள்ளது தொடருங்கள் தல

கவிதை காதலன் said...

//Mohan said...
Very Romantic!//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மோகன்..

கவிதை காதலன் said...

//Chitra said...
Early Valentine special! :-)//

அப்படியும் வெச்சுக்கலாம் சித்ரா.. இருந்தாலும் காதலர் தினத்துக்கு இன்னும் ஸ்பெஷலா வரும்

THOPPITHOPPI said...

காதல் வரிகள் , புகைப்படங்களும் பொங்கி விட்டது(பொங்கல் சிறப்போ).

தஞ்சை.வாசன் said...

வரிகளுக்கு ஏற்ற படங்கள்... படங்களுக்கு ஏற்ற வரிகள்...

ஒன்றினை மறைத்து ஒன்றினை பார்த்தாலும் அருமையாய்...

எப்பொழுதும் போல் இந்த வருட முதல் கவிதைகளும் எல்லாமே அருமையாய்...

இனி வரபோகும் அனைத்தும் அருமையாய் அமையவும் வாழ்த்துகள் நண்பா...

Balaji saravana said...

செம ரொமான்ஸ் பாஸ்!
//நீயும் செய்யவில்லை…
நானும் செய்யவில்லை…
நம்மைக்கொண்டு விளையாடிவிட்டு
நம்மையே பழிப்புகாட்டுகின்றன
சில்மிஷங்கள் //

இது ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்! :)

BONIFACE said...

சூப்பர் தலைவா......

கவிதை காதலன் said...

//THOPPITHOPPI said...
காதல் வரிகள் , புகைப்படங்களும் பொங்கி விட்டது
(பொங்கல் சிறப்போ).
நன்றி நண்பரே.. ஆம்வே மேட்டர் கலக்கல்.. இப்போது நீங்கள் தொட்டிருக்கும் மேட்டரும் சூடுகிளப்ப போகிறது. வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன் said...
வரிகளுக்கு ஏற்ற படங்கள்... படங்களுக்கு ஏற்ற வரிகள்...
ஒன்றினை மறைத்து ஒன்றினை பார்த்தாலும் அருமையாய்...
எப்பொழுதும் போல் இந்த வருட முதல் கவிதைகளும் எல்லாமே அருமையாய்...
இனி வரபோகும் அனைத்தும் அருமையாய் அமையவும் வாழ்த்துகள் நண்பா//

நன்றி வாசன்.. உங்கள் பின்னூட்டமே கவிதையாய் இருக்கிறது..

கவிதை காதலன் said...

// Balaji saravana said...
செம ரொமான்ஸ் பாஸ்!
இது ரொம்ப பிடிச்சிருக்கு பாஸ்! :)//

நன்றி பாலாஜி.. இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டா? ஹி..ஹி.. ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்

கவிதை காதலன் said...

//BONIFACE said...
சூப்பர் தலைவா......//

என்னாச்சு பிரவீன்.. ரொம்ப நாளா ஆளைக்காணோம்?

ஜெ.ஜெ said...

இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்... ///

அருமை...

உங்களின் முந்தைய பதிவை படித்த மயக்கமே இன்னும் தீரவில்லை எனக்கு.. அதற்க்குள் மறுபடியும் இப்படியா??

ரொம்ப அழகா எழுதிருக்கீங்க தோழா :)

polurdhayanithi said...

//இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்...//
nalla suvai

சி. கருணாகரசு said...

காதல் அருவியா ஓடுதுங்க பாராட்டுக்கள்

உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...

//ஜெ.ஜெ said...
உங்களின் முந்தைய பதிவை படித்த மயக்கமே இன்னும் தீரவில்லை எனக்கு.. அதற்க்குள் மறுபடியும் இப்படியா??
ரொம்ப அழகா எழுதிருக்கீங்க தோழா :)//

நன்றி தோழி.. முதல்முறை வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்

கவிதை காதலன் said...

//polurdhayanithi said...

nalla suvai //

நன்றி நண்பரே.. தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

//சி. கருணாகரசு said...
காதல் அருவியா ஓடுதுங்க பாராட்டுக்கள்
உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா.. உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு said...

நண்பா!! கவிதை எப்பவும் போல மிக அருமை.. படங்கள் ம்ம்ம்...

பாரத்... பாரதி... said...

//இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...//
முழு கவிதைக்கும் உயிர் கொடுக்கும் வரிகள்..

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
நண்பா!! கவிதை எப்பவும் போல மிக அருமை.. படங்கள் ம்ம்ம்...//

நன்றி நண்பா.. பொங்கல் வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

//பாரத்... பாரதி... said...
முழு கவிதைக்கும் உயிர் கொடுக்கும் வரிகள்//

நன்றி பாரதி.... முதல்முறை வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள். உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்

கவிப்ரியன் said...

//எப்போதும் என்னை
முறைத்துக்கொண்டே இருக்கும்
உன் ஆடைகளுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்?
அதை என்னிடம் விடு
நான் பார்த்துக்கொள்கிறேன் என
என்னை சமாதானம் செய்கின்றன
என்விரல்கள் //

மனுஷனாய்யா நீயெல்லாம்? கவிதை ராட்சஷா... அடிக்கடி தண்டனைகுடுத்து இருப்பியோ?

கவிப்ரியன் said...

//உன் இதழ்களுக்கு என்ன வேண்டும்?
இன்றாவது ஒழுங்காய்
என் இதழ்களிடம் சொல்ல சொல்..
அவைகளுக்கு உன் இதழ்கள்
சொல்வது சரியாய் கேட்பதே இல்லையாம். //

ஆமா.. ஆமா எப்படி கேட்கும்?

வினோ said...

கவிதையை காதலிக்க வைக்கிறீங்களே கவிதை காதலன்.. :)

வெறும்பய said...

காதலால் நிரப்பியிருக்கிரீர்கள்...

விஷ்ணு said...

எப்போதும் என்னை
முறைத்துக்கொண்டே இருக்கும்
உன் ஆடைகளுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்?

அப்படி என்ன சார் பிரச்சனை உங்களுக்கும் அந்த ஆடைகளுக்கும்?
இல்ல எப்பவும் நீங்க "டிரஸ்" மேல ஒரு கண்ணாவே இருக்கீங்க என்னமோ போங்க........
நா எதாவது தப்பா கேட்டுடேனா?

விஷ்ணு said...

கவிதை காதலனுக்கு...............

என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்...

bhuvi said...

Hi Sir,

Kavithai super. sema romantic lines.... ungaluku oru chinna pattam

"KAVITHAIKU NEE KATHALAN"

keep rocking.... :-)

கக்கு - மாணிக்கம் said...

அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html

vinu said...

ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.

machi unnoda kavithaiyileayea inththa varithaaan suuuuuuuuuuuuuuuuuuuuuuuuper appu;


apuram second stillllum

he he he he

vinu said...

ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.

machi unnoda kavithaiyileayea inththa varithaaan suuuuuuuuuuuuuuuuuuuuuuuuper appu;


apuram second stillllum

he he he he

கவிதை காதலன் said...

//கவிப்ரியன் said... மனுஷனாய்யா நீயெல்லாம்? கவிதை ராட்சஷா... அடிக்கடி தண்டனைகுடுத்து இருப்பியோ?//


நீங்க பாராட்டுறீங்களா இல்லை திட்டுறீங்களான்னே புரியலையே...

//ஆமா.. ஆமா எப்படி கேட்கும்?//

ஹி..ஹி.. அது என்னமோ கேட்கவே மாட்டேங்குதுங்க..

கவிதை காதலன் said...

//வினோ said...
கவிதையை காதலிக்க வைக்கிறீங்களே கவிதை காதலன்.. :)//

நன்றி வினோ.. பொங்கல் வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
காதலால் நிரப்பியிருக்கிரீர்கள்...//

நன்றி நண்பரே...

கவிதை காதலன் said...

//விஷ்ணு said...
அப்படி என்ன சார் பிரச்சனை உங்களுக்கும் அந்த ஆடைகளுக்கும்? இல்ல எப்பவும் நீங்க "டிரஸ்" மேல ஒரு கண்ணாவே இருக்கீங்க என்னமோ போங்க........
ச்சே.. ச்சே.. எனக்கும் ஆடைகளுக்கும் எந்த பிரச்சனையும் வந்திடக்கூடாதுன்னு தான் நான் அவைகளை ஓரமா எடுத்து வெச்சிடுறேன்.. ஹி.ஹி..


//நா எதாவது தப்பா கேட்டுடேனா?//

தப்பாவா..அட..நீங்க என்னைக்காவது தப்பா கேட்டு இருக்கீங்களா? ஏடாகூடமாத்தான் கேட்டு இருக்கீங்க..

கவிதை காதலன் said...

//bhuvi said...
Hi Sir, Kavithai super. sema romantic lines.... ungaluku oru chinna pattam"KAVITHAIKU NEE KATHALAN"keep rocking....//\

புவி.. ஏன் இந்த கொலைவெறி.. தோழிகளை எல்லாம் கேட்டதா சொல்லுங்க..

கவிதை காதலன் said...

//கக்கு - மாணிக்கம் said...
அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.//

கக்கு சார்.. தங்களோட டாக்டர் பட்டத்துக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//vinu said...
ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.
machi unnoda kavithaiyileayea inththa varithaaan suuuuuuuuuuuuuuuuuuuuuuuuper appu;
apuram second stillllum
he he he he//

வாங்க சார்.. இப்பத்தான் நேரம் கிடைச்சுதா உங்களுக்கு? என்னதான்யா அது ரகசியம்? ஏன்ப்பா இப்படி மண்டைகாய வைக்குற.. மொக்கையா எதாவது சொன்னா, மொகரைய உடச்சிடுறதா நாங்க பிளான் போட்டுருக்கோம்

vinu said...

மொக்கையா எதாவது சொன்னா, மொகரைய உடச்சிடுறதா நாங்க பிளான் போட்டுருக்கோம்

ennathu naangalaaa; ethini peruppaaa; poi olungaa ennoda postin labellai padimaa; ragasiyam puriyum;

ayo ayo innumaa nammalai intha ulagam nambuuuuuthu

vinu said...

yow kaalaila 2oclock veedu vanthu sernthathu ipo thoongi ellunthathum unkkuthaan muthal comment pottean athukkea thitturiyeaa;


ithu enakku venum venum veum nalla venum

vinu said...

50

vinu said...

eppudi correctaa vanththathum 50 adichommilea;

sari sari kadaikku poi kaaygari vaangittu varanum oru 15 mins break appppaaala vanthu ummai kummurean varttttaaaaaaaaaaaa

தோழி பிரஷா said...

கவிதை அருமை.
பொங்கல் வாழ்த்துக்கள் சகோ...

vinu said...

yow yow innumaa unnaala kandu piddikka mudiyalaaa

vinu said...

secret revealed poi check pannika machi unkku oru gifttum irruku eduththu talayil vachchukkoooooooooo

கவிதை காதலன் said...

//vinu said...
yow kaalaila 2oclock veedu vanthu sernthathu ipo thoongi ellunthathum unkkuthaan muthal comment pottean athukkea thitturiyeaa;
//

வாய்யா நல்லவனே.. விடியற்காலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்தேன்னா அப்படி என்ன வேலை பார்க்குறே? ஓ.. நான் ஃபோன்ல சொன்னேனே அந்த வேலை கன்ஃபார்ம் ஆயிடுச்சா? வாழ்த்துக்கள் வினோத்.. ஐயையோ. அது என்ன வேலைன்னு கேட்காதீங்கப்பா எனக்கு வெட்கமா இருக்கு...

vinu said...

வாய்யா நல்லவனே.. விடியற்காலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்தேன்னா அப்படி என்ன வேலை பார்க்குறே? ஓ.. நான் ஃபோன்ல சொன்னேனே அந்த வேலை கன்ஃபார்ம் ஆயிடுச்சா? வாழ்த்துக்கள் வினோத்.. ஐயையோ. அது என்ன வேலைன்னு கேட்காதீங்கப்பா எனக்கு வெட்கமா இருக்கு...


adappaavi nee ellaaam kalyaanam panni..............


onnum solla varlay chummaa ullalaangaatiku; appuram thangachchi ISD ls mail anuppi thittuvaanga enakku ithu theavaiyaaaaaaaaaaa.


interview clear aayudichunnuthaan ninaikurean still waiting for result;

neaththu eve 4manikku from bangalore innaiku early morning 3 thaan voodu vantheann;


appuram naan kuduththu irruntha gift unnoda thalaiku correctaa fit aachhcaaa illaty sollu aduththa postla innoru gift anuppurean

கவிதை காதலன் said...

வினோத் கொடுத்ததுதான் கொடுத்த, நீ த்லையில மாட்டி இருந்ததையே கொடுத்திட்டியேப்பா.. வேற ஒண்ணு புதுசா என் சைஸுக்கு அனுப்பிவையுப்பா..

கவிதை காதலன் said...

//தோழி பிரஷா said...
கவிதை அருமை.
பொங்கல் வாழ்த்துக்கள் சகோ...//

நன்றி தோழி.. உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்

vinu said...

machchi tholi oruththanga unnai sagonnu koopittu iirukkaanga; naan unnai machchinnu koopittutu irruken. appo antha tholi enakku enna murai.............


nee konjam detaillu sollean#konjam doubttu

கவிதை காதலன் said...

//vinu said... //

நாங்க எங்க அண்ணனைக்கூட மச்சின்னுதான் கூப்பிடுவோம். ஹி..ஹி..

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
இந்த முறை கவிதைகளை விட படங்கள் ம்ம்ம்மம்மம்ம்ம்ம்...இருந்தும் கவிதைகள் அனைத்தும் கலக்கல்.குறிப்பாக
//ஒருமுறை கூட உன்னிடமிருந்து
திட்டுவாங்காமல் வாங்கியதில்லை
முத்தங்களை...
ஆனாலும் அப்படி கொடுத்தால்தான்
இனிப்பேன் என்று அடம்பிடிக்கிறது
முத்தங்களும்.... //
இந்த கவிதை.அந்த திட்டுக்கு பிறகு கிடைக்கும் தவிர்க்க முடியாத,திகட்டாத,விலைமதிப்பில்லாத Gift மச்சி,இப்படி எத்தனை kiss வாங்கி இறுக்குற மச்சி?...

//உன் இதழ்களுக்கு என்ன வேண்டும்?
இன்றாவது ஒழுங்காய்
என் இதழ்களிடம் சொல்ல சொல்..
அவைகளுக்கு உன் இதழ்கள்
சொல்வது சரியாய் கேட்பதே இல்லையாம்.//
Wow சூப்பர் மச்சி, எத்தனை முறை சொன்னாலும்,எப்படி சொன்னாலும் எப்போதுமே புரியாது.அப்படி ஒரு நடிப்பு!.எப்படி நடிக்குது பாரு மச்சி,உன்ன மாதிரியே...

//எப்போதும் என்னை
முறைத்துக்கொண்டே இருக்கும்
உன் ஆடைகளுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்?
அதை என்னிடம் விடு
நான் பார்த்துக்கொள்கிறேன் என
என்னை சமாதானம் செய்கின்றன
என்விரல்கள்//
செம romance மச்சி,இதுக்கு மேல இந்த கவிதைக்கு எதுவும் சொல்லமுடியவில்லை மச்சி...

//இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்... //
1st Class மச்சி,நிஜத்தை விட நினைவுக்கு தான் சுகம் அதிகம் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறாய்.நினைத்து நினைத்து சிரித்துக்கொள்ளும் அந்த சுகம் இருக்கிறதே,நம்மை பைத்தியக்காரன் என்று கூட நினைத்துக்கொள்வார்கள் நம்மை பார்ப்பவர்கள்.எனக்கும் கூட அப்படி நடந்திருக்கிறது, உனக்கு மச்சி...

எப்போதும் போலவே மிக மிக அருமையான பதிவு மச்சி.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுது.என்னை போன்ற உன் ரசிகர்களுக்காக...

ஜெ.ஜெ said...

பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..

pratap said...

மச்சி செம ரோமன்ஸ் டா........
முத்தம்பத்தி மட்டும் எப்போவுமே சூப்பரா கலக்குவ
இப்போவும் சூப்பரா இருக்கு .
நாளுக்குநாள் நீ மெருகேறி இருக்குகே மச்சி....
சூப்பர் டா.... i லவ் யு டா.......

pratap said...

மச்சி... என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இங்கு உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //


அதானே பார்த்தான்.... ஸ்வீட் ராஸ்கல் கமெண்ட் வராம பதிவு முழுமையடையாதே.. மிக்க நன்றி மச்சி.. தொடர்ந்து படி.. என் கவிதையில அனுபவம் தெரியுதோ இல்லையோ..உன் கமெண்ட்டுல அனுபவம் பப்ளிக்கா தெரியுது.. ஹி..ஹி..

கவிதை காதலன் said...

//pratap said... //

என்ன பிரதாப் சார். பதிவு போட்ட அடுத்த நாளே கமெண்ட் போட்டுட்டீங்க.. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு போங்க...

என்னதான் இருந்தாலும் முத்தத்துல நீங்க எங்க எல்லாரையும் விட சீனியர்..

vinu said...

கவிதை காதலன் said...
//pratap said... //

என்ன பிரதாப் சார். பதிவு போட்ட அடுத்த நாளே கமெண்ட் போட்டுட்டீங்க.. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு போங்க...

என்னதான் இருந்தாலும் முத்தத்துல நீங்க எங்க எல்லாரையும் விட சீனியர்..



ean avaru antha [muththa] course padiththa collegeil thaan neeyum padichchiyaa machchi;


illaey seniornnu koopittu irrukirathaaaalay keattan paaaa;


[ithil our ul kuththum illay endru thaalmayodu terivikkirean ha he he]

கவிதை காதலன் said...

அந்த காலேஜ்ல நாங்க எல்லாம் ஜூனியர்ஸ்தான், ஆனா மிஸ்டர் விஷ்ணுதான் அந்த காலேஜ்'க்கே பிரின்ஸிபல்.. அது தெரியுமா வினோ?

மாணவன் said...

அனைத்து கவிதைகளுமே சூப்பர்

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

vinu said...

கவிதை காதலன் said...
அந்த காலேஜ்ல நாங்க எல்லாம் ஜூனியர்ஸ்தான், ஆனா மிஸ்டர் விஷ்ணுதான் அந்த காலேஜ்'க்கே பிரின்ஸிபல்.. அது தெரியுமா வினோ?


antha collegil namakkkum oru seat book pannu machchi; blockil kidaichchaa kooda paravaayillay;

aththuthaan pricipalyea friendaa vachchu irrukiyallamaaa;


please please nammkum oru seat machchi..........

விஷ்ணு said...

மச்சி "முத்தம்"னா என்னது ? வீட்டுக்கு முன்னாடி இருக்குமே அதுவா?

ப்ரியமுடன் வசந்த் said...

//விஷ்ணு said...
மச்சி "முத்தம்"னா என்னது ? வீட்டுக்கு முன்னாடி இருக்குமே அதுவா?//

மச்சி வேணாம் அப்றம் எதாவது சொல்லிடுவேன் நல்லபுள்ளயாட்டமே நடிக்கிறாய்ங்கய்யா ஆவ்வ்

'முத்தப்'பொங்கல் வாழ்த்துகள் மணி

தஞ்சை.வாசன் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

"குறட்டை " புலி said...

ஆகா... வெகு அருமை;
காதலில் ஒரு புதுமைக்கவிதை
ஒரு
கவிஞன்
புறப்பட்டு விட்டான்...
புயல்
வரும் திசையில்...

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் கவிதைகள், கண்ணைக்கவரும் படங்கள்.. பின்னீட்டீங்க தல...

ஒருமுறை கூட உன்னிடமிருந்து
திட்டுவாங்காமல் வாங்கியதில்லை
முத்தங்களை...

சூப்பர் லைன்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ungkaLukku உங்களுக்கு சினி ஃபீல்டில் சான்ஸ் நிச்சயம் உண்டு

சி.பி.செந்தில்குமார் said...

திறமைசாலிகளின் மீது பிரமிப்பு வருவது சகஜம்.அதே திறமைசாலி நமக்கு நண்பராக இருந்தால் பெருமிதம் வரும்..உங்களைப்பார்த்தா எனக்கு பெருமையா இருக்கு. கவிதைக்காதலன் நண்பேண்டா அப்படின்னு சொல்லுவோம் இல்ல..?

Shwetha said...

மிக அருமையான கவிதைகள். கவித்துவம் என்பது புரியாமல் எழுதுவது அல்ல. மனதை ரசிக்க செய்யும் அனைத்துமே நல்ல கவிதைகள் தான். அந்த வகையில் உங்களது எல்லா கவிதையும் மனதை அள்ளுகிறது. ஒவ்வொரு கவிதையும் படித்த உடன் மெதுவாக சிரிக்க வேண்டி இருக்கிறது. படிக்கும் எல்லாருக்கும் அவர்கள் சார்ந்த காதலையும் அந்த ரசனையான நினைவுகளையும் மீண்டும் ஒருமுறை நியாபகப்படுத்திப் போகும் அந்த மேஜிக்கை உங்கள் கவிதை நிகழ்த்தி போகிறது. உங்களுக்கும் உங்கள் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Shwetha said...

//விஷ்ணு said...
மச்சி "முத்தம்"னா என்னது ? வீட்டுக்கு முன்னாடி இருக்குமே அதுவா?//


அடடே.. 2011'ல் நான் கேட்ட மிகப்பெரிய ஜோக் இதுதான்.

Shwetha said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது போல் நிச்சயமாய் உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும்.... என் வாழ்த்துக்களும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காதல் வழிந்தோடுகிறது.... வரிகளில் வார்த்தைகளாய்.......!

மதி said...

//இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்..//

//நீயும் செய்யவில்லை…
நானும் செய்யவில்லை…
நம்மைக்கொண்டு விளையாடிவிட்டு
நம்மையே பழிப்புகாட்டுகின்றன
சில்மிஷங்கள்//

அட்டகாசமான கவிதைகள் .. அற்புதமான அன்னியோன்யம்.. வாழ்த்துகள்... நேரம் கிடைத்தால் இங்கும் வந்து காதல் வாசித்து செல்லுங்கள் தோழரே .. www.sunshinesignatures.blogspot.com

இதையும் படியுங்கள்