Tuesday, January 25, 2011

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

உன் இதழ் வீட்டில்
வாடகைக்கு மட்டுமே
என்னை குடி அமர்த்துகிறாயே..
எப்போது அதை என்
நிரந்தர வசிப்பிடமாக்குவாய்?
பசித்தால்
எல்லாரும் கேட்பார்கள்
ஆனால் நான் கொடுக்கிறேன்
வித்தியாசமான பசிதான்
முத்தம்


அட்சயபாத்திரத்தில்
ஒருமுறை இட்டால்
வற்றாமல் வந்துகொண்டே
இருக்குமாமே..
நான் அட்சயபாத்திரமாகிறேன்.
ஒரே ஒரு முத்தமிடுமேலுதடு என்னை
வா என்கிறது
கீழுதடு என்னை
போ என்கிறது..
பேசாமல் இரண்டிற்கும்
இடையில் ஒளிந்து கொள்ளட்டுமா?என் முத்தங்களை
உன் விரல்களுக்குத்தான்
இடம் மாற்றுகிறேன்.
ஆனால் உன் விரல்கள்தான்
தங்களுக்கு அது பிடிக்கவில்லை என்று
உன் இதழ்களிடம் என்னை
அனுப்பிவைக்கின்றன

( இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் )


Wednesday, January 19, 2011

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டைஉன் வளர்ப்பு பிராணியை
நீ கொஞ்சும் போதெல்லாம்
அது என்ன நினைக்கும்?
உன் காதலனாக பிறக்கவில்லையே என
பிரம்மன் மீது கோபம் கொள்ளுமோ?


******************************
கட்டாயக்கல்வி என்றுதானே
அரசாங்கம் சட்டம் இயற்றியது.
நீ ஏன் கட்டாயக்காதல்
என்ற சட்டத்தை என்னுள்
அரங்கேற்றினாய்?


******************************
முத்தக்கடிதம் கொடுக்கவரும்
என் இதழ்காரனை
உன் இதழ்காரன்
அனுமதிப்பதே இல்லையாம்.
கொஞ்சம் கண்டித்துவை.


******************************
இரண்டாய் வெட்டிவிடத்தான்
தோன்றுகிறது.
உன்னை உரசி
இன்பம் அனுபவிக்கும்
சோப்பை காண்கையில்

******************************
உன்னை முதலில்
யார் சந்திப்பது என்று
என் விரல்களுக்கும்
இதழ்களுக்கும் நேற்று சண்டை..
என் இதழ்களை எப்படியாவது
ஜெயிக்க வைத்துவிடு(இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுபோட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்)

Monday, January 17, 2011

ஆடுகளம் - வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர்களை இரண்டுவகையாக பிரித்துவிடலாம். “வெற்றிக்காக கதை செய்பவர்கள்”. “செய்யும் கதையின் வழியாக வெற்றியை வர செய்பவர்கள்”. இதில் வெற்றி மாறன் இரண்டாவது வகையை சார்ந்தவர். “ஆடுகளம்” என்ன மாதிரியான களம்? தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சேவல் சண்டையை களமாக தேர்ந்தெடுத்து இருப்பதே ஒரு வித்தியாசமான திரைப்படம் பார்க்கப்போகிறோம் என்பதை உணர்த்துகிறது.

சேவல் சண்டையில் மதுரை தென்பரங்குன்றத்தை சார்ந்த பேட்டைக்காரர் அசைக்க முடியாத ஜாம்பவானாக விளங்குகிறார். அவரது சிஷ்யர் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சேவல் சண்டையில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக தனுஷ் நடந்து கொள்ள, தனுஷுக்கு அளவுக்கு மீறிய செல்வாக்கு கிடைக்கிறது. இது குருவான பேட்டைக்காரருக்கு தனுஷின் மீது சொல்ல முடியாத கோபத்தை ஏற்படுத்துகிறது. மெல்ல ஆரம்பிக்கும் அவரது அவமானம் கலந்த கோபம், தனுஷின் நண்பர்கள், காதலி, குடும்பம் என அத்தனையிலும் நுழைந்து தனுஷுக்கு படிப்படியான சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. பின் எப்படி இதிலிருந்து தனுஷ் மீண்டு வருகிறார் என்பது மீதிக்கதை. இந்த களேபரங்களுக்கு இடையில் தனுஷுக்கு ஆங்கிலோ இந்தியப்பெண்ணான தாப்ஸி மீது காதலும் ஏற்படுகிறது. அந்தக்காதலும் இந்த துரோகத்தால் எப்படி சிதைகிறது என்பது மற்றொரு கிளைக்கதை.

தனுஷ் என்ற மனிதனின் கேரியரில் இந்தப்படம் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய படமே. தனுஷின் உடல்மொழி அந்த கருப்பு என்ற கேரக்டருக்கு அச்சுஅசலாக பொருந்தி போகிறது. தாப்ஸி தன்னைத்தான் காதலிக்கிறேன் என்று கைகாட்டியவுடன் தனுஷ் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் டாப்கிளாஸ். அதே உற்சாகத்தோடு லுங்கியை தூக்கி மடித்துக்கொண்டு அவர் ஆடுகையில் தியேட்டரே உற்சாகத்தில் ஆடுகிறது. தன்னை ஏமாற்றிய குருவிடத்தில் தனுஷ் காட்டும் முகபாவங்கள் பிரமாதமானவை.. கதாநாயகிக்கு இந்தப்படத்தில் பெரிதாய் வேலையில்லை.. பார்ப்பதற்கு அழகான பொம்மை போலவே இருக்கிறார். அவ்வப்போது சிரிக்கிறார். தனுஷின் லோக்கிளாஸ் வாழ்க்கையைப்பார்த்து காதல் கொள்ளும் டிபிக்கல் தமிழ்சினிமா ஹீரோயின். சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

படத்தில் பாராட்டப்படவேண்டியவர் பேட்டைக்காரராக வரும் ஈழத்து எழுத்தாளர் ஜெயபால். இவர்தான் இந்த ஆடுகளத்தின் மையப்புள்ளி. ஒவ்வொரு சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களிலும் மனுஷன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். தனுஷின் வெற்றியைப் பார்த்து ஏற்படக்கூடிய மனரீதியான மாற்றங்களை மிகப்பிரமாதமாய் பிரதிபலித்திருக்கிறார். ஒரு காட்சியில் கோழியை பிடித்து அடித்தே கொல்லுவாரே.. பயங்கரம்.

சேவல் சண்டையில் தான் ஒரு ராஜா என்ற இறுமாப்பு, ஒரு சின்ன பையன் முன் தோற்று நிற்கிறோமே என்ற அவமானம், உச்சபட்சமாக மனைவியையே கூட சந்தேகப்பட்டு பேசும் காட்சி, இறுதியில் தனுஷின் பேச்சால் தலைகுனிந்து அவர் எடுக்கும் முடிவு என ஒவ்வொரு காட்சியிலும் பேட்டைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். இவருக்கு டப்பிங் கொடுத்திருக்கும் ராதாரவியையும் பாராட்டியே ஆகவேண்டும் ஒரு காட்சியில் கூட அது டப்பிங் என்பதே தெரியாத அளவிற்கு அந்த உருவத்துடன் குரல் அட்சரசுத்தமாய் பொருந்தி போகிறது.

கிஷோர் மீது வெற்றிமாறனுக்கு என்ன பிரியமோ, பொல்லாதவனைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் பல இடங்களில் கிஷோரை ஜொலிக்க வைத்திருக்கிறார். மிகச்சரியான கதாபாத்திரத்தேர்வுக்கு கிஷோர் ஒரு உதாரணம். பேட்டைக்காரர் ஏற்றிவிடும் போதெல்லாம் அந்த விஷயத்தை உள்வாங்குவதற்காக அவர் காட்டும் முகபாவனை க்ளாஸிக்ஒரு கதைக்கு திரைக்கதை என்பது மிக முக்கியம். அந்த திரைக்கதையின் உயிரான “டீட்டெய்ல்ட் வெர்ஷன்” எனப்படும் நுணுக்கமான கதாபாத்திர பின்புலத்தை பல இயக்குனர்கள் கையாள்வதில்லை. ஆனால் வெற்றிமாறன் இந்த திரைக்கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பல “டீட்டெய்ல்ட் வெர்ஷன்” அமைத்திருக்கிறார். இதுவரை தமிழ்சினிமா அவ்வளவாக தொட்டிராத சேவல் சண்டையை களப்படுத்தி இருப்பதே தமிழ்சினிமாவிற்கு புதிது.

அந்த சேவல் சண்டையின் பின்னணி, சேவலை எப்படி போட்டிக்கு தயார் செய்து, அடிபட்ட சேவலுக்கு எப்படி முதலுதவி செய்வது, சேவலின் ரத்தத்தை எப்படி உறிஞ்சி எடுப்பது, இந்தப் போட்டிக்காக வெளிநாடுகளில் இருந்து கூட இருந்து சேவலை எப்படி வரவழைக்கிறார்கள் என்ற மிக நுணுக்கமான விவரங்களை சுவாரஸ்யமாய் நுழைத்ததில் வெற்றிமாறன் ஜொலித்திருக்கிறார். வெற்றி பெற்ற சேவலை திருடிக்கொண்டு போய் இன்னொரு கோழியிடம் இணை சேரவிட்டால் தன் வம்ச சேவல் இன்னொரு வீட்டில் வளருமே என்பதற்காக கோழியின் சினையையே அறுத்து எடுப்பது, தன்னுடைய சேவலை விற்க நேரிடும் போது அதன் காலை கழுவிவிட்டு கொடுப்பது, ஏன் என்றால் தன் வீட்டின் மண் அந்த சேவலின கால் வழியாக கூட போய்விடக்கூடாது என்பது போன்ற பல இடங்களில் வெற்றிமாறனின் ஸ்க்ரிப்ட் நாலேட்ஜ் பிரமிக்க வைக்கிறது.

பேட்டைககாரர் போலீஸ் ஸ்டேஷனில் குரல் உயர்த்தி பேசிய சில வினாடிகளில் ஒரு போலீஸ்காரர் அந்த ரூமிலிருந்து கையை முறுக்கிவிட்டுக்கொண்டே வருவதை காண்பித்து, உள்ளே என்ன நடந்தது என்பதை காட்டாமலேயே பார்வையாளனுக்கு புரியவைத்திருக்கும் காட்சி ரசனை நுணுக்கம். ஹீரோயினின் பாட்டி, தனுஷின் அம்மா, பேட்டைககாரரின் மனைவி தனுஷின் நண்பன் என ஒவ்வொரு கதாபாத்திர பின்னணியும் அத்தனை உண்மையாய் போலித்தனங்கள் இல்லாமல் இருக்கிறது. அந்த இடைவேளைக்காட்சியில் வெற்றிமாறனின் முழு உழைப்பும் தெரிகிறது.

கில்லி, சென்னை 28 போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களில் அந்த விளையாட்டு ஆக்ரோஷமாக க்ளைமேக்ஸில்தான் வெளிப்படும். ஆனால் அந்த அளவுகோலை இடைவேளையிலேயே உடைத்துவிட்டு, அதற்கு இணையான மற்றொரு திசையில் படம் நகர்வது வெற்றிமாறனின் புத்திசாலித்தனமான திரைக்கதைக்கு உதாரணம். ஆனால் முதல் பாதியில் இருந்த அந்த வேகத்தை இரண்டாம் பாதியிலும் எதிர்பார்க்கும் ரசிகனை கொஞ்சம் ஏமாற்றியும் இருக்கிறார் வெற்றிமாறன்.

அந்த ஏமாற்றம் ஏன் ஏற்படுகிறது என்றால் ஒரு காட்சியில் பந்தயத்தில் தோற்றுப்போய் மொட்டை அடிக்கப்பட்டு மீசை மழிக்கப்படும் நபர் ஏதோ பழிவாங்கப்போகிறார் என்ற எண்ணத்தை தோற்றுவித்து பின் அதை கதைக்குள்ளேயே கொண்டுவர மாட்டார் வெற்றிமாறன். அதற்கான காரணத்தை பேட்டைக்காரர் அவர் மனைவியிடம் “தன்னால் தோற்கடிக்கப்பட்டவர் அதையெல்லாம் மறந்து இன்று மில் வைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்துவருவதாக” குறிப்பிடுவார். அபப்டியென்றால் இந்த போலீஸ்காரரும் அந்த அவமானத்தால் அமைதியாகத்தான் வாழ்வார் என்பதை சொல்லாமல் சொல்லும் காட்சி இது..

அதே போல் ஒரு காட்சியில் தனுஷ் கிஷோரிடம், “நாளைக்கு நானும் உன்னிடம் இதே போல் தயவுதாட்சண்யம் பார்க்காம பேசுவேன்” என்று சொல்லுவார்। உடனே ரசிகர்கள் பின்னால் வரும் காட்சியில் கிஷோர் தனுஷிடம் தோற்று நிற்பார். தனுஷ் அப்போது இதே போல் பேசுவார் என்று நினைப்பார்கள். ஆனால் அந்த எண்ணத்தையும் ஜஸ்ட் லைக் தட் வெற்றி மாறன் தட்டிவிட்டு போகிறார். இப்படி எதிர்ப்பார்ப்பதை எல்லாம் நிறைவேற்றவில்லை என்பதால் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் படம் போரடிப்பதாக நினைக்கலாம்.

அந்த சேவல் சண்டை கிராஃபிக்ஸ் என்றாலும் அதை கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு மேட்ச் செய்திருப்பதில் கேமராமேன் வெற்றி பெற்றிருக்கிறார். “யாத்தே யாத்தே” பாடலும், “ஒத்தை சொல்லால” பாடலிலும் ரசிகர்களை துள்ளாட்டம் போடவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ். ஒலிப்பதிவில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். நேட்டிவிட்டியுடன் பேசுவது பல சமயங்களில் புரியாமலேயே போகிறது. தமிழ்சினிமாவில் வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது, அயன், எந்திரனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸின் உண்மையான வெற்றி இந்தப்படமே..

ஆடுகளம் - அமர்க்களம்

Thursday, January 13, 2011

இதழ்களுக்கு கேட்கவில்லை


தோளில் சாய்ந்து கொண்டு
தோழமை வெளிப்படுத்துவாய்.
நெஞ்சில் சாய்ந்து கொண்டு
நேசம் வெளிப்படுத்துவாய்.
இடம் பொருள் அறிந்து
நடத்தல் இதுதானோ?Free Pics Love Pictures Photo Sharing


ஒருமுறை கூட உன்னிடமிருந்து
திட்டுவாங்காமல் வாங்கியதில்லை
முத்தங்களை...
ஆனாலும் அப்படி கொடுத்தால்தான்
இனிப்பேன் என்று அடம்பிடிக்கிறது
முத்தங்களும்....Free Image Hosting Love Pictures Upload Photos


நீயும் செய்யவில்லை…
நானும் செய்யவில்லை…
நம்மைக்கொண்டு விளையாடிவிட்டு
நம்மையே பழிப்புகாட்டுகின்றன
சில்மிஷங்கள்உன் இதழ்களுக்கு என்ன வேண்டும்?
இன்றாவது ஒழுங்காய்
என் இதழ்களிடம் சொல்ல சொல்..
அவைகளுக்கு உன் இதழ்கள்
சொல்வது சரியாய் கேட்பதே இல்லையாம்.Upload Photos View Photos Love Pics

எப்போதும் என்னை
முறைத்துக்கொண்டே இருக்கும்
உன் ஆடைகளுக்கு
என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்?
அதை என்னிடம் விடு
நான் பார்த்துக்கொள்கிறேன் என
என்னை சமாதானம் செய்கின்றன
என்விரல்கள்Love Images Love Pictures View Photos


இல்லாதபோதும்
இருப்பதாய் நினைத்துக்கொண்டே
சிரிக்கத்தூண்டுகின்றன...
அருகில் இருக்கையில்
நீ செய்த அத்தனை
செல்ல குறும்புகளும்...இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


இதையும் படியுங்கள்