Wednesday, December 29, 2010

காதல் கடிதம் - தொடர் பதிவு

என்னை தொடர் பதிவுக்கு அழைத்த தோழி இந்திராவுக்கு நன்றி. இந்திரா அவர்கள் எனக்கு கொடுத்த தலைப்பு ப்ரியமானவருக்கு காதல் கடிதம் எழுதவேண்டும் என்பது... ம்ம்ம்ம்.. சாக்லேட் சாப்பிட கூலியா... இதோ என் காதலுக்கு ஒரு கடிதம்ஹாய் செல்லக்குட்டி


வித்தியாசமாக உன்னை எப்படி அழைத்தாலும் அதன் முடிவில்
அச்சு வெல்லமாய் ஒட்டிக்கொண்டிருப்பது இந்தகுட்டிதானே.
மூச்சுவிடும் நேரத்தைவிட அதிகமாய் செலவிட்டது, உன்னை இந்தபெயர் சொல்லி கொஞ்சத்தானே (அப்பாடா.. செல்லப்பேர் சொல்லி மாட்டிக்கலை)**********************************************************
உனக்கு ஒரு கடிதம் எழுதிட அமரும் வேளையில் நான் வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடவில்லை. வார்த்தைகள் போதாமல்தான் திண்டாடிப்போனேன். இப்போது நீ என்னருகில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எப்போதும் உன் நினைவுகள் என்னருகில் இல்லாமல் இருக்கவே முடியாது. சின்ன சின்ன சில்மிஷங்கள் இன்னமும் நியாபகம் இருக்கிறது. இதைப்படிக்கும் வேளையில் நீ சிரித்துக்கொண்டிருப்பாய் என எனக்கு தெரியும். ஆனாலும் உன்னிடம் சொல்வதற்கு எனக்கு சில கோரிக்கைகள் இருக்கின்றன. நீயில்லாமல் நான் கூட இருந்துவிடுவேன். ஆனால் நீயின்றி தவிக்கும் சில ஜீவன்களை உனக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


நம்மைசுற்றி யார் யாரோ இருக்கோ, யாருமே அறியாவண்ணம் உன்னை தீண்டிக்கொண்டிருந்த என்விரல்கள் உன்னை கேட்கையில் நான் என்ன பதில் சொல்வேன்?

பைக் பயணத்தின் இடையே இயர்போனின் வழியே நம் இருவருக்கு மட்டுமே ஒலிக்கும் காதல் பாடல்கள் மீண்டும் எப்போது கிடைக்கும் என தவித்திருக்கும் என் செவிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

ஆயிரம் சுவைகள் சுவைத்தாலும் உன் இதழ் கொடுத்த சுவையை மறக்க முடியாமல் தவிக்கும் என் இதழ்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

முத்தம் என்பதின் அர்த்தம் என்ன என்பதை என் கன்னங்களுக்கு சொல்லிகொடுத்துவிட்டு போய்விட்டாய். மறுமுறையும் அந்த அர்த்தத்தை கேட்டு என்னை தொல்லைப்படுத்தும் கன்னங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

உன்னை மட்டுமே உண்டு பசியாறிய என் விழிகள் பட்டினியால் கிடக்கின்றதே, அந்த விழிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

உன் பின்னங்கழுத்தின் ஓரம் மணக்கும் அந்த வாசனையின்றி, சுவாசிக்கவே மறுக்கும் என் நாசிக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

விளையாட்டான கோபங்களிடையே உன் கரங்கள் செல்லமாய் என் முடியை பற்றி இழுக்குமே.. உன்விரல்களின் தீண்டலின்றி வறண்டுகிடக்கும் என் தலைமுடிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?உன் காதலின் நீட்சியான கட்டியணைப்பின் வெப்பமின்றி குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் என் தேகத்திற்கு நான் என்ன பதில் சொல்வேன்?


உன்னுடன் தண்டவாளங்களின் இடையே நடைபழகிய என் கால்கள் நீயில்லா பயணத்தை நேசிக்கவே மறுக்கின்றனவே அவைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

இரட்டை உறக்கம் சுமந்தே பழகிய என் தலையணை இன்று என்னை மட்டுமே சுமந்து தன்னை நொந்து கொள்கிறதே. அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?

மெல்லிய மோகத்தினிடையே நீ சொல்லும் ஐலவ்யூவின்றி என் ஐம்புலன்களும் வாடிக்கிடக்கிறதே அவைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

உன் ஸ்பரிசங்களினால் உயிர்பெறும் என் காதல் இன்று மரணித்தே கிடக்கிறதே. நீ உயிர்ப்பிக்க வருவாயா என்று தவமிருக்கிறதே. அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?


நீ கொடுக்கலாமா வேண்டாமா என்று தயங்குவதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. என் செல்போன் தான் உன் முத்த ரீஜார்ஜ் இன்றி செயலிழந்து போகிறது. அதற்காகவாவது ஒரு முறை ரீசார்ஜ் செய்துவிடு.


நீ எனக்கு எதுவும் சொல்லவேண்டாம். நீ இல்லாமல் நான் இருந்துவிடுவேன். இவைகளுக்கு மட்டும் பதில் சொல்.போதும். இப்போது நீ எதை யோசித்துக்கொண்டிருந்தாலும் நான் உன்னை மட்டுமே யாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் மறந்துவிடாதே. உன் விழியிருந்து விழலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் அந்த கண்ணீரை கொஞ்சம் அடக்கிவை. அவைகள் இந்தக்கடிதத்தை உன் கண்ணிலிருந்து மறைத்துவிடும்.


இப்படிக்கு

உன் நினைவுகளால் தினமும் இறந்து போனாலும்
உன் இதயத்தை சுமக்கவேண்டும் என்ற கடமையால்
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "மணி"தன்


உன்குறிப்பு : “N”aan “H”appyaga “I”LLai என்பதை உன் பெயரில் உள்ள எழுத்துக்களே உனக்கு உணர்த்தி விடும்133 comments:

கவிப்ரியன் said...

பின்குறிப்பு கேள்விபட்டிருக்கிறோம்.. இந்த உன்குறிப்பு வித்தியாசமாய் இருக்கிறது. வித்தியாசமான கற்பனை

vinu said...

உன்குறிப்பு : “N”aan “H”appyaga “I”LLai என்பதை உன் பெயரில் உள்ள எழுத்துக்களே உனக்கு உணர்த்தி விடும்


solla vendiyavangalukku message solliyaachu pola nadaththunga nadaththunga

கவிதை காதலன் said...

// கவிப்ரியன் said...
பின்குறிப்பு கேள்விபட்டிருக்கிறோம்.. இந்த உன்குறிப்பு வித்தியாசமாய் இருக்கிறது. வித்தியாசமான கற்பனை//


நன்றி கவிப்பிரியன்

கவிதை காதலன் said...

//vinu said...

solla vendiyavangalukku message solliyaachu pola nadaththunga nadaththunga//நோ...டா.. செல்லம்.. தப்பா நினைச்சிட்டீங்க போல

பிரியமுடன் ரமேஷ் said...

இதப்பார்ரா... தொடர்பதிவுங்கற பேர்ல யாருக்கோ லவ் லட்டர் அனுப்பிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. உன்குறிப்பு, எங்களுக்கெல்லாம் புரியாதுன்னாலும் மிக அருமை..

Anonymous said...

தொடர்பதிவு எழுதிட்டீங்களா???

இருங்க படிச்சிட்டு வரேன்.

Anonymous said...

கடிதம் முழுக்க காதலும் வலியும் கலந்திருப்பினும் என்னை மறுமுறை வாசிக்கச் செய்த வரிகள் இவை..


//நம்மைசுற்றி யார் யாரோ இருக்கோ, யாருமே அறியாவண்ணம் உன்னை தீண்டிக்கொண்டிருந்த என்விரல்கள் உன்னை கேட்கையில் நான் என்ன பதில் சொல்வேன்?//


//மெல்லிய மோகத்தினிடையே நீ சொல்லும் ஐலவ்யூவின்றி என் ஐம்புலன்களும் வாடிக்கிடக்கிறதே அவைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?//


//உன் ஸ்பரிசங்களினால் உயிர்பெறும் என் காதல் இன்று மரணித்தே கிடக்கிறதே. நீ உயிர்ப்பிக்க வருவாயா என்று தவமிருக்கிறதே. அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?//


//இப்போது நீ எதை யோசித்துக்கொண்டிருந்தாலும் நான் உன்னை மட்டுமே யாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் மறந்துவிடாதே.//


//உன் நினைவுகளால் தினமும் இறந்து போனாலும்
உன் இதயத்தை சுமக்கவேண்டும் என்ற கடமையால்
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் //

கவிதை காதலன் said...

// பிரியமுடன் ரமேஷ் said...
இதப்பார்ரா... தொடர்பதிவுங்கற பேர்ல யாருக்கோ லவ் லட்டர் அனுப்பிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. உன்குறிப்பு, எங்களுக்கெல்லாம் புரியாதுன்னாலும் மிக அருமை..//

நன்றி ரமேஷ்..

கவிதை காதலன் said...

இந்திரா.... சும்மா இருந்த என்னை இப்படி இழுத்துவிட்டுட்டீங்க..
என்னமோ போங்க..

மக்களே பார்த்துக்குங்க.. இந்த பாவத்துக்கு எல்லாம் ஆளாகவே மாட்டேன்

Mohan said...

அழகான காதல் கடிதம்.அதேபோல் 'உன் குறிப்பை' கடிதத்தில் மிக அழகாக உள் நுழைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.

Balaji saravana said...

நல்லாயிருக்கு மணி!
//உன்குறிப்பு //
சேர வேண்டிய செய்தி சேர்ந்திருக்கும் இந்நேரம் ;)

கோமாளி செல்வா said...

//முத்தம் என்பதின் அர்த்தம் என்ன என்பதை என் கன்னங்களுக்கு சொல்லிகொடுத்துவிட்டு போய்விட்டாய். மறுமுறையும் அந்த அர்த்தத்தை கேட்டு என்னை தொல்லைப்படுத்தும் கன்னங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?//

அட அட .. என்னமா பீல் பண்ணிஇருகீங்க ..?

கோமாளி செல்வா said...

//உன்னை மட்டுமே உண்டு பசியாறிய என் விழிகள் பட்டினியால் கிடக்கின்றதே, அந்த விழிகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?/

கவிதைங்க ..!!

கோமாளி செல்வா said...

//இரட்டை உறக்கம் சுமந்தே பழகிய என் தலையணை இன்று என்னை மட்டுமே சுமந்து தன்னை நொந்து கொள்கிறதே. அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?///

//நீ கொடுக்கலாமா வேண்டாமா என்று தயங்குவதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. என் செல்போன் தான் உன் முத்த ரீஜார்ஜ் இன்றி செயலிழந்து போகிறது. அதற்காகவாவது ஒரு முறை ரீசார்ஜ் செய்துவிடு.///

//உன் நினைவுகளால் தினமும் இறந்து போனாலும்
உன் இதயத்தை சுமக்கவேண்டும் என்ற கடமையால்
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "மணி"தன்/

இப்படி கலக்கியிருக்கீங்க ..!! அருமைங்க .. நானும் முயற்சிக்கிறேன் ..

கவிதை காதலன் said...

//Mohan said...
அழகான காதல் கடிதம்.அதேபோல் 'உன் குறிப்பை' கடிதத்தில் மிக அழகாக உள் நுழைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.//

நன்றி மோகன்..

கவிதை காதலன் said...

//Balaji saravana said...
நல்லாயிருக்கு மணி!
//உன்குறிப்பு //
சேர வேண்டிய செய்தி சேர்ந்திருக்கும் இந்நேரம் ;)//

நன்றி பாலாஜி.. ஆனா உன்குறிப்பு என்குறிப்பா மட்டும்தான் இருக்கு.. :(

கவிதை காதலன் said...

//கோமாளி செல்வா said...
இப்படி கலக்கியிருக்கீங்க ..!! அருமைங்க .. நானும் முயற்சிக்கிறேன் ..
அட அட .. என்னமா பீல் பண்ணிஇருகீங்க ..?//

நன்றி செல்வா... அடிக்கடி வாங்க.. உங்க ஃபேஸ்புக் களைகட்டுது..

Anonymous said...

//கவிதை காதலன் said...

இந்திரா.... சும்மா இருந்த என்னை இப்படி இழுத்துவிட்டுட்டீங்க..
என்னமோ போங்க..

மக்களே பார்த்துக்குங்க.. இந்த பாவத்துக்கு எல்லாம் ஆளாகவே மாட்டேன்.//


நான் மாட்டிவிட்டுட்டேன்.. ஒத்துக்குறேன். ஆனா இது தான் சாக்குனு யாருக்கு என்ன சொல்லனுமோ அத தெளிவா சொல்லிட்டீங்க..
ம்ம்ம் அதுனால நா உங்களுக்கு தொடர்பதிவுங்குற பேர்வ உதவிதான் பண்ணிருக்கேன்..
உண்மை தானே???

vinu said...

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா மலை மீது ஏறிவா மலிகைபூ கொண்டுவா நடுவீட்டில் வை நல்ல துதி...............
ஹி ஹி ஹி ஹி ஹி சும்மா ஒரு கவிதை நியாபகம் வந்துச்சு உங்க கடிதம் படித்ததும் நீங்க ஒன்னும் கோவிச்சுக்காதீங்க

vinu said...

இந்திரா said...
//கவிதை காதலன் said...

இந்திரா.... சும்மா இருந்த என்னை இப்படி இழுத்துவிட்டுட்டீங்க..
என்னமோ போங்க..

மக்களே பார்த்துக்குங்க.. இந்த பாவத்துக்கு எல்லாம் ஆளாகவே மாட்டேன்.//


நான் மாட்டிவிட்டுட்டேன்.. ஒத்துக்குறேன். ஆனா இது தான் சாக்குனு யாருக்கு என்ன சொல்லனுமோ அத தெளிவா சொல்லிட்டீங்க..
ம்ம்ம் அதுனால நா உங்களுக்கு தொடர்பதிவுங்குற பேர்வ உதவிதான் பண்ணிருக்கேன்..
உண்மை தானே???
வாங்க இந்திரா வாங்க நல்ல நல்ல வேலை எல்லாம் பண்ணிட்டு இர்ருகீங்க போல; உங்களை மாத்ரி நல்ல உள்ளம் யாருக்கு வரும்?
சத்தியமா உங்களை வாழ்த்திதான் பேசிட்டு இர்ருகேன் நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க ஹி ஹி ஹி ஹி

கவிதை காதலன் said...

//இந்திரா said...
நான் மாட்டிவிட்டுட்டேன்.. ஒத்துக்குறேன். ஆனா இது தான் சாக்குனு யாருக்கு என்ன சொல்லனுமோ அத தெளிவா சொல்லிட்டீங்க.. ம்ம்ம் அதுனால நா உங்களுக்கு தொடர்பதிவுங்குற பேர்வ உதவிதான் பண்ணிருக்கேன்.. உண்மை தானே???//


ஹி..ஹி..

Anonymous said...

//vinu said...


வாங்க இந்திரா வாங்க நல்ல நல்ல வேலை எல்லாம் பண்ணிட்டு இர்ருகீங்க போல; உங்களை மாத்ரி நல்ல உள்ளம் யாருக்கு வரும்?
சத்தியமா உங்களை வாழ்த்திதான் பேசிட்டு இர்ருகேன் நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க ஹி ஹி ஹி ஹி//


அடுத்த தொடர்பதிவு அழைப்புல கண்டிப்பா உங்க பேர் தான் பட்டியல்ல முதலாவதா இருக்கும் வினு. அதுவும் கொஞ்சம் வில்லங்கமான பதிவா இருக்கலாம்.. அலர்ட்டா இருந்துக்கங்க..

கவிதை காதலன் said...

//vinu said...
வாங்க இந்திரா வாங்க நல்ல நல்ல வேலை எல்லாம் பண்ணிட்டு இர்ருகீங்க போல; உங்களை மாத்ரி நல்ல உள்ளம் யாருக்கு வரும்?
சத்தியமா உங்களை வாழ்த்திதான் பேசிட்டு இர்ருகேன் நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க ஹி ஹி ஹி ஹி//வினு... நீங்களே சொல்லுங்க.. இந்திரா தானே என்னை மாட்டிவிட்டுட்டாங்க.. ஒண்ணுமே தெரியாத சின்னப்பையனை இப்படி மாட்டிவிடுறது எல்லாம் நல்லாவா இருக்கு.. சொல்லுங்க?

கவிதை காதலன் said...

வினுக்கு அடுத்த ஆப்பா?? இந்திரா தயவுசெஞ்சி அந்த நல்ல காரியத்தை உடனே பண்ணுங்க..

வினு.. உங்களோட முதல் கமெண்ட்க்கு இந்த தண்டனைதான்

vinu said...

இந்திரா said...

அடுத்த தொடர்பதிவு அழைப்புல கண்டிப்பா உங்க பேர் தான் பட்டியல்ல முதலாவதா இருக்கும் வினு. அதுவும் கொஞ்சம் வில்லங்கமான பதிவா இருக்கலாம்.. அலர்ட்டா இருந்துக்கங்க..

மக்களே நீங்கதான் சாட்சி ஒருத்தன் உண்மையையும் நியாத்தையும் பேசுனா[நான் என்னை சொன்னேன்] இந்த நாட்டுல நடுகிற அநியாயத்தை பார்த்தீங்களா.....


இங்கு இந்திரா என்மீது தொடுத்துள்ள தனிமனித தாக்குதல்களையும் கொலைவெறி முற்சியையும் கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்

vinu said...

நண்பரே [mani] என்னோட கவிதையை பத்தி நீங்க இன்னும் ஒண்ணுமே சொல்லவே இல்லையே

கவிதை காதலன் said...

சொன்னது நீதானா? சொல்.. சொல்.. வினு நண்பா??

vinu said...

கவிதை காதலன் said...
சொன்னது நீதானா? சொல்.. சொல்.. வினு நண்பா??
என்னப்பா உனக்காக "நிலா நிலான்னு" என்னமா கஷ்டப்பட்டு ஒரு கவிதை எழுதி ச்சே ச்சே எழுதியா 'கவிதைய செதுக்கி' அனுப்பி இர்ருக்கிறேன் என்னை பார்த்து இப்புடி சொல்லிபிட்டியே நண்பா

கவிதை காதலன் said...

உங்க கவிதையை நான் அப்துல்கலாமுக்கு ஃபார்வேர்ட் பண்றேன் வினு..

சங்கவி said...

வித்தியாசமான கற்பனை....

vinu said...

கவிதை காதலன் said...
உங்க கவிதையை நான் அப்துல்கலாமுக்கு ஃபார்வேர்ட் பண்றேன் வினு..
நான் ஏற்கனவே செல்வி.இந்திரா அவர்களின் கொலைவெறி தாக்குதலை எதிர்த்து உங்க bloggai விட்டு வெளிநடப்பு செய்துவிட்டதால் உங்களின் இந்த கம்மேன்டிற்கு bathil அளிக்க இயலவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

தென்றல் said...

லெட்டர் எல்லாம் ஓகே.. அசத்தலாத்தான் இருக்கு..
அதென்ன உன்குறிப்பு? எங்க யாருக்கும் தெரியகூடாதுன்னா?
ஐயையோ எங்க யாருக்கும் தெரியலைப்பா...

தென்றல் said...

வினு.. எனக்கு தமிழே தெரியாதுன்னு சொல்றமாதிரி இல்ல இருக்கு...

சீமான்கனி said...

ஆஹா....அழகான கடிதம் இத படிச்சதும் அவங்க ஃப்ளைட் புடிச்சாவது வந்துருவாங்க...என்னாலயே இருக்க முடியல...வாழ்த்துகள்..ஜி...

Vishnu said...

ஹாய் செல்லக்குட்டி


வித்தியாசமாக உன்னை எப்படி அழைத்தாலும் அதன் முடிவில்
அச்சு வெல்லமாய் ஒட்டிக்கொண்டிருப்பது இந்தகுட்டிதானே.
மூச்சுவிடும் நேரத்தைவிட அதிகமாய் செலவிட்டது, உன்னை இந்தபெயர் சொல்லி கொஞ்சத்தானே (அப்பாடா.. செல்லப்பேர் சொல்லி மாட்டிக்கலை)

கலக்கலான காதல் கடிதம்...................

எனக்கு ரொன்ப புடிச்சிருக்கு.

Vishnu said...

ஓஓஓ சொல்ல
மறந்துட்டேன் உங்களுக்கு "எதுகை" "மோனை" கூட நல்லா வருது சார்..............

நா விச்சு டா மச்சி ...........

Vishnu said...

vinu said...
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா மலை மீது ஏறிவா மலிகைபூ கொண்டுவா நடுவீட்டில் வை நல்ல துதி...............
ஹி ஹி ஹி ஹி ஹி சும்மா ஒரு கவிதை நியாபகம் வந்துச்சு உங்க கடிதம் படித்ததும் நீங்க ஒன்னும் கோவிச்சுக்காதீங்க

யாரு சார் அந்த நிலா ? ரொன்ப அழக இருப்பாங்களா? பதிவு திருமணமா? ஏன் கனகாமொறம் வச்சா புடிக்காதா?

நட்புடன் விச்சு...

சி.பி.செந்தில்குமார் said...

super mani kalakkungka

சி.பி.செந்தில்குமார் said...

i think u offer somebody throudh yr blog. am i right?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா இருக்கு.

@ இந்திரா:

நண்பர் எழுதிய இந்த காதல் கடிதத்தை நான் எழுதியதாக எண்ணி எனக்கும் பாஸ் மார்க் போடவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படிக்கு போஸ்ட் படிக்காமல கமெண்ட் போடுவோர் சங்ககம்(தலைவி: இந்திரா) ஹிஹி

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா இருக்கு.

@ இந்திரா:

நண்பர் எழுதிய இந்த காதல் கடிதத்தை நான் எழுதியதாக எண்ணி எனக்கும் பாஸ் மார்க் போடவும்..//

போஸ்ட் படிக்காமலே கமெண்ட் போடுவோர் சங்கம்னு போடக் காணோம் ரமேஷ்???

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படிக்கு போஸ்ட் படிக்காமல கமெண்ட் போடுவோர் சங்ககம்(தலைவி: இந்திரா) ஹிஹி//


சே.. எப்டி இப்டியெல்லாம்???

உங்க போஸ்ட் படிக்க மாட்டேங்குறத இப்படி நீங்க கவலையா வெளிப்படுத்திருக்க கூடாது. சரி சரி விடுங்க.. படிச்சிட்றேன்.

கவிதை காதலன் said...

//சங்கவி said...
வித்தியாசமான கற்பனை....//

நன்றி சதீஷ்..

கவிதை காதலன் said...

///தென்றல் said...
லெட்டர் எல்லாம் ஓகே.. அசத்தலாத்தான் இருக்கு..
அதென்ன உன்குறிப்பு? எங்க யாருக்கும் தெரியகூடாதுன்னா?
ஐயையோ எங்க யாருக்கும் தெரியலைப்பா...//

தென்றல்... வேணாம் சமாதானமா போய்டுவோம்

கவிதை காதலன் said...

//vinu said...
நான் ஏற்கனவே செல்வி.இந்திரா அவர்களின் கொலைவெறி தாக்குதலை எதிர்த்து உங்க bloggai விட்டு வெளிநடப்பு செய்துவிட்டதால் உங்களின் இந்த கம்மேன்டிற்கு bathil அளிக்க இயலவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்//

வினு நீங்க வெளிநடப்பு செஞ்சதால உங்க கவிதையை பேரரசுக்கும். டிஆருக்கும் பார்வேர்ட் பண்றேன்..

கவிதை காதலன் said...

//சீமான்கனி said...
ஆஹா....அழகான கடிதம் இத படிச்சதும் அவங்க ஃப்ளைட் புடிச்சாவது வந்துருவாங்க... என்னாலயே இருக்க முடியல...வாழ்த்துகள்..ஜி...//

ஆஹா வாங்க சார். நீங்க மட்டும்தான் சொல்லலையேன்னு பார்த்தேன்.. ஃப்ளைட் எல்லாம் இப்ப ரொம்ப பிஸி. அதான் அவங்க வரலை.. ஹி.ஹி,,

கவிதை காதலன் said...

//Vishnu said...

கலக்கலான காதல் கடிதம்.
எனக்கு ரொன்ப புடிச்சிருக்கு.//

புரிஞ்சிடுச்சோ??
ஒண்ணுமே புரியலையே..

//ஓஓஓ சொல்ல
மறந்துட்டேன் உங்களுக்கு "எதுகை" "மோனை" கூட நல்லா வருது சார்..//

ஐயையோ மாட்டினியேடா மணிகண்டா..

/நா விச்சு டா மச்சி .//

விச்சு.. நீ இருக்கவேண்டிய இடத்துலதான் இருக்கே..


இதுபுரியாதே.. இது புரியாதே. ஹை..

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
super mani kalakkungka
i think u offer somebody throudh yr blog. am i right?//


அச்சச்சோ அப்படியெல்லாம் தப்பா திங்க் பண்ண கூடாது..

கவிதை காதலன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... //

எவ்வளவோ பண்ணிட்டாங்க இந்திரா இதை பண்ண மாட்டாங்களா.. பாஸ் மார்க் போட்டுடுங்க இந்திரா..

@ இந்திரா..
ஆமா எனக்கு எவ்ளோ மார்க்'ன்னு சொல்லவே இல்லையே?

Silent said...

நான் குட உண்மையோன்னு நினைச்சென்.

//இரட்டை உறக்கம் சுமந்தே பழகிய என் தலையணை
மெல்லிய மோகத்தினிடையே நீ சொல்லும் ஐலவ்யூ //

இங்கதான் கொஞ்சம் இடிச்சுது.
அப்புறம்தான் புரிஞ்சுது இது கற்பனைன்னு

Silent said...

//என் காதல் இன்று மரணித்தே கிடக்கிறதே//

yes.. Agree

தென்றல் said...

//Silent said...
இங்கதான் கொஞ்சம் இடிச்சுது. //

அதான் இடிக்குதுன்னு தெரியுதுல்ல..
கொஞ்சம் தள்ளி நிக்கலாம் இல்லை..

தென்றல் said...

//Vishnu said...
கலக்கலான காதல் கடிதம்.
எனக்கு ரொன்ப புடிச்சிருக்கு.//

புடிக்க வேண்டியவங்களுக்கு புடிச்சுதான்னு தெரியலையே.. ஹி..ஹி..

தென்றல் said...

என்ன இன்னும் ஸ்வீட் ராஸ்கலை காணோம்? சும்மாவே அவர் பொங்குவாரு. இது காதல் கடிதம் வேற.. சுனாமியா ஆகாம இருந்தா சரி.. ஸ்வீட் ராஸ்கல் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்...

Silent said...

மன்னிக்கனும் தென்றல் நான் யாரொட விட்லையும் போய் இடிச்சுகிட்டு நிக்கலை.. என்னோட விட்லத்தன் அடுத்தவஙக் குடி இருக்காங்க

Silent said...

//Vishnu said...
ஏன் கனகாமொறம் வச்சா புடிக்காதா? //


கனகாம்பரம் அழகா இருக்காது இல்ல.. அதனால தான் யாருக்குமே பிடிக்க்காது.

polurdhayanithi said...

//நம்மைசுற்றி யார் யாரோ இருக்கோ, யாருமே அறியாவண்ணம் உன்னை தீண்டிக்கொண்டிருந்த என்விரல்கள் உன்னை கேட்கையில் நான் என்ன பதில் சொல்வேன்?//
nalla aakkam

Shwetha said...

//உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "மணி"தன்//
உங்களை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க..

அருமையான கடிதம். நீங்க ரெண்டு பேரும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு
சுவாரஸ்யமாத்தான் இருக்கு. நிறைய இடங்கள்'ல ரசிக்க வெச்சிருக்கீங்க. ஒவ்வொரு பாகமும் ஏக்கத்தில் தவிப்பதை மிக அழகான ரசனையோட வெளிப்படுத்தி இருக்கீங்க. காலையில நீங்க சொல்லும் போதே இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு நினைச்சேன். ஆனா இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை. அதுவும் செல்லப்பெயர் மேட்டர் நுணுக்கமான யோசனை. அந்த ஆங்கில எழுத்துக்களை நீங்க உபயோகப்படுத்தி இருக்கும் விதம் "சபாஷ்" சொல்ல வைக்கிறது..

உங்க மொபைல் ரீசார்ஜ் ஆனதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.. ஹி..ஹி..

கவிதை காதலன் said...

//polurdhayanithi said...
//நம்மைசுற்றி யார் யாரோ இருக்கோ, யாருமே அறியாவண்ணம் உன்னை தீண்டிக்கொண்டிருந்த என்விரல்கள் உன்னை கேட்கையில் நான் என்ன பதில் சொல்வேன்?//
nalla aakkam
//

நன்றி நண்பரே.. தொடர்ந்து வாருங்கள்

கவிதை காதலன் said...

வாங்க சைலண்ட்.. நல்லா இருக்கீங்களா?

கவிதை காதலன் said...

நன்றி ஷ்வேதா... மொபைல் மட்டுமா ரீசார்ஜ் ஆச்சு? ஹி.. ஹி..

ஆமினா said...

அடுத்தவங்க லெட்டரும் டைரியும் படிக்கிறதுன்னா அவ்வளவு இஷ்ட்டம் ;))

சூப்பரா இருந்துச்சு....

உங்க ப்ரோபைலை பார்த்தேன்... எனக்கு பிடிச்ச அதே பனா பாட்டும், படமும் உங்க விருப்ப பட்டியலில்.... பாக்கவே சன்தோஷமா இருந்துச்சு

Vishnu said...

Silent said...
மன்னிக்கனும் தென்றல் நான் யாரொட விட்லையும் போய் இடிச்சுகிட்டு நிக்கலை.. என்னோட விட்லத்தன் அடுத்தவஙக் குடி இருக்காங்க

எவ்வளவு சார் வாடகை?

Vishnu said...

Silent said...


//Vishnu said...
ஏன் கனகாமொறம் வச்சா புடிக்காதா? //


கனகாம்பரம் அழகா இருக்காது இல்ல.. அதனால தான் யாருக்குமே பிடிக்க்காது.


நீங்க வேற எனக்கு ரொன்ப புடிக்கும்........... அதுனாலத்தான் அது வாடிட கூடாதுன்னு நினைக்குறேன், ஆனா இயற்கை என்ன விட அதிக சக்தி வாய்ந்தது.

எப்பூடி.. said...

//முத்தம் என்பதின் அர்த்தம் என்ன என்பதை என் கன்னங்களுக்கு சொல்லிகொடுத்துவிட்டு போய்விட்டாய். மறுமுறையும் அந்த அர்த்தத்தை கேட்டு என்னை தொல்லைப்படுத்தும் கன்னங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?//

"அதுதான் ஒருக்கா சொல்லியாச்சில்லே, மறுபடியும் எதுக்கு தொல்லை பண்ணிறாய்" எண்டு கன்னத்தில ஓங்கி ரெண்டு அப்பு அப்புங்க, எல்லாம் சரியா போகும் :-))

//நீ உயிர்ப்பிக்க வருவாயா என்று தவமிருக்கிறதே. அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்?//

"இந்த பாழாய் போன பூமியில் உய்ர்த்து என்ன செய்யப்போறாய்? பேசாமல் அப்படியே குத்துயிரும் கொலையுயிருமா கிட " அப்டின்னு ஏதாவது ரிப்ளை வந்தா மறக்காம சொல்லுங்க சார் :-))

ம்ம்ம்ம் அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க.

சசிகுமார் said...

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

pratap said...

மச்சி சூப்பர்டா...
i லவ் யு டா....

ம.தி.சுதா said...

கிறங்கடிக்க வைக்கிறது...
அருமையாக உள்ளது...

தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்

pratap said...

மச்சி ரொம்ப feel பன்னி

எழுதி எல்லோரையும் feeeeel ......பண்ண வைசிட்டடா....

'முத்தம் என்பதின் அர்த்தம் என்ன என்பதை என் கன்னங்களுக்கு சொல்லிகொடுத்துவிட்டு போய்விட்டாய். மறுமுறையும் அந்த அர்த்தத்தை கேட்டு என்னை தொல்லைப்படுத்தும் கன்னங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?'


மச்சி அவ்வளவு ஆழமா லவ் பண்றவங்க அசிங்கமா கன்னத்திலா

முத்தம் தருவாங்க போடா மச்சி.

'உன் பின்னங்கழுத்தின் ஓரம் மணக்கும் அந்த வாசனையின்றி, சுவாசிக்கவே மறுக்கும் என் நாசிக்கு நான் என்ன பதில் சொல்வேன்?'

அதுக்குத்தான் அவங்க வண்டில பின்னாடி ஒக்கர்ந்துனு போகதனு சொன்னே.

ஆனா மச்சி கடைசில வைச்சியே ஒரு டச் 'மணி'தன் சான்ஸ் இல்லே மச்சி.

பார்த்துக்குங்க எல்லோரும் 'மணி'தன் இங்கதான் இருக்காரு

vinu said...

enna nadakkuthu ingeaaa

கவிதை காதலன் said...

//ஆமினா said...
அடுத்தவங்க லெட்டரும் டைரியும் படிக்கிறதுன்னா அவ்வளவு இஷ்ட்டம் ;))
சூப்பரா இருந்துச்சு....
உங்க ப்ரோபைலை பார்த்தேன்... எனக்கு பிடிச்ச அதே பனா பாட்டும், படமும் உங்க விருப்ப பட்டியலில்.... பாக்கவே சன்தோஷமா இருந்துச்சு//

நன்றி ஆமினா... ஃபனா எனக்கு ரொம்ப பிடிச்சபடம். அந்தப்படத்தைபத்தி எழுதணும்ன்னு நினைச்சிகிட்டே இருக்கேன்.. அந்தப்படத்தை எனக்கு அறிமுகம் செய்த விஷ்ணுவுக்கு என் நன்றிகள். எவ்வளவு அருமையான படத்தை மிஸ் பண்ணி இருப்பேன்

கவிதை காதலன் said...

//Vishnu said...
நீங்க வேற எனக்கு ரொன்ப புடிக்கும்........... அதுனாலத்தான் அது வாடிட கூடாதுன்னு நினைக்குறேன், ஆனா இயற்கை என்ன விட அதிக சக்தி வாய்ந்தது//


மச்சி.. சூப்பர்டா

கவிதை காதலன் said...

//எப்பூடி.. said...
"அதுதான் ஒருக்கா சொல்லியாச்சில்லே, மறுபடியும் எதுக்கு தொல்லை பண்ணிறாய்" எண்டு கன்னத்தில ஓங்கி ரெண்டு அப்பு அப்புங்க, எல்லாம் சரியா போகும் :-))
ஏங்க.. ஏன் இந்த கொலைவெறி.. நானே எதோ சைட்ல ரெண்டு பிட்டு விட்டு, அப்ளிகேஷன் போட்டு இருக்கேன்.. அதுக்கு இப்படி வேட்டு வெச்சா என்ன பண்றது?


//"இந்த பாழாய் போன பூமியில் உய்ர்த்து என்ன செய்யப்போறாய்? பேசாமல் அப்படியே குத்துயிரும் கொலையுயிருமா கிட " அப்டின்னு ஏதாவது ரிப்ளை வந்தா மறக்காம சொல்லுங்க சார் //

நீங்க ஒருத்தர் போதும் போல இருக்கே, வக்கீலே இல்லாம டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவீங்க போல..

கவிதை காதலன் said...

//சசிகுமார் said...
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்//

நன்றி சசிக்குமார்.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

//ம.தி.சுதா said...
கிறங்கடிக்க வைக்கிறது...
அருமையாக உள்ளது...
தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே.. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடர்ந்து படியுங்கள்

கவிதை காதலன் said...

//pratap said...
மச்சி ரொம்ப feel பன்னி எழுதி எல்லோரையும் feeeeel ......பண்ண வைசிட்டடா....
தேங்க்யூ மச்சி..

//மச்சி அவ்வளவு ஆழமா லவ் பண்றவங்க அசிங்கமா கன்னத்திலா
முத்தம் தருவாங்க போடா மச்சி.//

//ஆயிரம் சுவைகள் சுவைத்தாலும் உன் இதழ் கொடுத்த சுவையை மறக்க முடியாமல் தவிக்கும் என் இதழ்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?//

பிரதாப்.. நீ சொல்ற இடத்துத்துலதான் ஏற்கனவே வாங்கியாச்சே.. ஹி.. ஹி.. எங்களுக்கு எப்பவாவதுதான் அந்த இடத்துல கிடைக்குது.. உனக்குத்தான் டெய்லியும்... ஹி..ஹி..

//அதுக்குத்தான் அவங்க வண்டில பின்னாடி ஒக்கர்ந்துனு போகதனு சொன்னே.//
ஐயோ ஐயோ.. நான் என்ன சொல்றதுன்னே புரியலைப்பா..

தேங்க்யூ மச்சான்.. வருஷத்தோட கடைசி நாள்லையாவது ஒரு கமெண்ட் கொடுத்தியே.. அவ்ளோ பிஸி போல..

கவிதை காதலன் said...

வினோத்.. வாங்க வாங்க.. பொண்ணு பார்க்கிற பிஸியா.. கமெண்டையே காணோம்

vinu said...

கவிதை காதலன் said...
வினோத்.. வாங்க வாங்க.. பொண்ணு பார்க்கிற பிஸியா.. கமெண்டையே காணோம்no machi konjam work mail annuppa vendi irrunthathu; innaikkum offf aaa ungalukku

vinu said...

அப்பால நம்ம ஊட்டுக்கு வந்து கலாய்ச்சுட்டு போய் இர்ருகிராபுல என்ன தையிரியம் உங்களுக்கு

vinu said...

உங்க வூட்டு நிலா சொவுகியமா

pratap said...

மச்சி இப்ப கூட நான் ரொம்ப பிசி.
tea குடிக்கிறிய machi

pratap said...

',பிரதாப்.. நீ சொல்ற இடத்துத்துலதான் ஏற்கனவே வாங்கியாச்சே.. ஹி.. ஹி.. எங்களுக்கு எப்பவாவதுதான் அந்த இடத்துல கிடைக்குது.. உனக்குத்தான் டெய்லியும்... ஹி..ஹி...'

கம்பெனி ரகசியத்தை வெளிய சொல்லாத மச்சி..

மச்சி துபைலருந்து call வருது

'ஹலோ my brother markwalk இருக்காரா'

கவிதை காதலன் said...

வினோத் நம்ம வூட்ல அல்லாரும் சவுக்கியம். விஷ்ணு உங்ககிட்ட என்னமோ கேட்டாரே.. பதிலே காணோம்?

கவிதை காதலன் said...

//pratap said... //
மச்சி உங்க ஆளுதான் இங்கே இருக்காங்களே அப்புறம் எப்படி உனக்கு துபாய்ல இருந்து கால் வரும்.. ஹி..ஹி.. உன் மொபைல்ல மிஸ்டு கால், ரிசீவ்ட் கால், டயல்டு கால், எல்லாமே அது மட்டும் தானே..

கவிதை காதலன் said...

//pratap said...
கம்பெனி ரகசியத்தை வெளிய சொல்லாத மச்சி..//

இல்ல மச்சி.. நீ டெய்லியும் சந்தோஷமா ஃபோன்ல பேசுற இல்ல அதை சொன்னேன். நான் என்ன சத்தம் இல்லாம நித்தம் ஒரு யுத்தம் நடத்தி புத்தம் புதுசா கிடைச்ச கிஃப்ட பத்தியா சொன்னேன்..

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
கலக்கிட்ட டா,இது தான் டா உண்மையான காதல் கடிதம்.எந்த வரிய சொல்லறது எல்லாமே சூப்பர் டா கொன்னுட்ட மச்சி.
//மெல்லிய மோகத்தினிடையே நீ சொல்லும் ஐலவ்யூவின்றி என் ஐம்புலன்களும் வாடிக்கிடக்கிறதே அவைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?//

//உன் நினைவுகளால் தினமும் இறந்து போனாலும்
உன் இதயத்தை சுமக்கவேண்டும் என்ற கடமையால்
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் //

//ஆயிரம் சுவைகள் சுவைத்தாலும் உன் இதழ் கொடுத்த சுவையை மறக்க முடியாமல் தவிக்கும் என் இதழ்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?//

குறிப்பா இந்த வரிகள் என்னை என்ன என்னமோ பண்ணிருச்சி.
சொல்ல வேண்டியத சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லாம சொல்லிட்ட மச்சி.அவங்கள பிரிஞ்சி இருக்குறத இவ்ளோ அழகா ஒரு காதல் கடிதத்துல சொல்லிட்டியே மச்சி. ISD call வந்துருச்சா,இந்நேரம் வந்து இருக்குமே,இல்ல Flight பிடிச்சி நேராவே வந்துட்டாங்களா,பேர வேற சொல்லிட்ட கலக்குற மச்சி,எப்போ ட்ரீட்.

இப்படி வித்யாசமா வித்யாசமா எழுது மச்சி,எப்பவும் போல கலக்கிட்ட,வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ரசிகர்களுக்காக...

தென்றல் நா பொங்க மாட்டேன்,யாரு பொங்குவாங்கன்னு தான் உங்களுக்கு,நம்ம விஷ்ணுவுக்கு,எப்பவாவது வர பிரதாப்க்கு, ஏன் நம்ம எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்,உண்மையின் உறைவிடம்,அமைதியின் அடைக்கலம்,நல்லவர் வல்லவர் நாளும் தெரிஞ்சவர் நம்ம Silent சாருக்கு கூட தெரியுமே.நா வேற சொல்லனுமா என்ன.

Silent சார் கனகாம்பரம் யாருக்கும் பிடிக்காது அப்படின்னு நீங்களாவே எப்படி முடிவு செஞ்சிடலாம்.யாருக்கும் பிடிக்காம தான் அந்த பூ கொஞ்ச நாளைக்கு முன்னாடி Per Kg 2000/Rs வித்துதா,அப்படி வித்தும் யாரும் வாங்காம தான் போய்டாங்களா.இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கீங்களே,என்னமோ போங்க.மச்சி விஷ்ணு நீ சொன்னது 1000% உண்மை உண்மை உண்மை.நண்பேண்டா...

ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி இந்த கடிதம் உண்மையாவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு டா. I LOVE YOU டா மச்சி,umma umma umma umma ummmmmmmmmmmmaaaaaa...

நிலாப்பெண் said...

அருமையான கடிதம். ரொம்ப ரசிக்க வெச்சிடுச்சி.. எனக்கே இப்படி இருக்குன்னா..... அவங்களுக்கு எப்படி இருக்கும்?? ம்ம்ம்.. அனுபவியுங்க.,...

நிலாப்பெண் said...

காதலையும் அதற்குள் இருக்கும் ஊடலின் சந்தோஷத்தையும், வலியையும் ரொம்ப அழகா வெளிப்படுத்தி இருந்தது சூப்பர்ப்..

//மெல்லிய மோகத்தினிடையே நீ சொல்லும் ஐலவ்யூவின்றி என் ஐம்புலன்களும் வாடிக்கிடக்கிறதே அவைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?
//

க்ளாஸிக் லைன்ஸ்

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //

மச்சான் நான் எழுதி கலக்குறேனோ இல்லையோ நீ கமெண்ட் போட்டே கலக்குற போ..

கவிதை காதலன் said...

//நிலாப்பெண் said...
அருமையான கடிதம். ரொம்ப ரசிக்க வெச்சிடுச்சி.. எனக்கே இப்படி இருக்குன்னா..... அவங்களுக்கு எப்படி இருக்கும்?? ம்ம்ம்.. அனுபவியுங்க.,...//

அவங்க ரொம்ப பில்டப் பண்ணிக்குறாங்க..
என்னைப்பார்த்தா பாவமா தெரியலை போல

Anonymous said...

//ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி இந்த கடிதம் உண்மையாவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு டா. I LOVE YOU டா மச்சி,umma umma umma umma ummmmmmmmmmmmaaaaaa...//


அட.. என்னங்க நடக்குது இங்க???
ஸ்வீட் ராஸ்கல்ங்குறது உங்க நண்பரா???
எனக்கென்னமோ டவுட்டா இருக்கே..

Ravi kumar Karunanithi said...

//இப்போது நீ எதை யோசித்துக்கொண்டிருந்தாலும் நான் உன்னை மட்டுமே யாசித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் மறந்துவிடாதே.//
i like this..

Ravi kumar Karunanithi said...

என்னை யாரும் தேட வேண்டாம்.

ஏனென்றால் நான் லவ் பண்ண போகிறேன்.

தென்றல் said...

//இந்திரா said...
//ஸ்வீட் ராஸ்கல் said...
மச்சி இந்த கடிதம் உண்மையாவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு டா. I LOVE YOU டா மச்சி,umma umma umma umma ummmmmmmmmmmmaaaaaa...//
அட.. என்னங்க நடக்குது இங்க???
ஸ்வீட் ராஸ்கல்ங்குறது உங்க நண்பரா???
எனக்கென்னமோ டவுட்டா இருக்கே..//

ஸ்வீட் ராஸ்கல், நான் தான் சொன்னேன் இல்ல.. உணர்ச்சிவசப்படாதீங்கன்னு.. இப்ப பாருங்க.. நீங்கதான் அந்த NHI அப்படின்னு இந்திராவுக்கு சந்தேகம் வந்திடுச்சி.. என்ன கொடுமை ஸ்வீட்ராஸ்கல் இது?

தென்றல் said...

இருந்தாலும் ஸ்வீட் ராஸ்கலுக்கு இப்படி எல்லாம் சோதனை வரக்கூடாது..


சித்தாரக்கள்ளி விறகொடிக்க போனாளாம்.
கத்தாழை முள்ளு கொத்தோட கொத்துச்சாம்.
அந்த கதையா இல்ல ஆகிப்போச்சு..

கவிதை காதலன் said...

//இந்திரா said...
அட.. என்னங்க நடக்குது இங்க???
ஸ்வீட் ராஸ்கல்ங்குறது உங்க நண்பரா???
எனக்கென்னமோ டவுட்டா இருக்கே..//

இந்திரா டவுட்டே படாதீங்க..
அவன் என் நண்பன்தான்.. நண்பன்தான்... நண்பன்தான்...
அவன் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுவான்.. அதான்..
முடியலை மச்சி...

கவிதை காதலன் said...

// Ravi kumar Karunanithi said...
i like this..என்னை யாரும் தேட வேண்டாம்.
ஏனென்றால் நான் லவ் பண்ண போகிறேன்.//

ரவிக்குமார் சார் மிக்க நன்றி..
ஜாலியா லவ் பண்ணுங்க..
என்னா......


"லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்"

கவிதை காதலன் said...

நூறை தாண்டிடுச்சி இல்லை..
விஷ்ணு கமெண்ட்டே போட மாட்டானே..

கவிதை காதலன் said...

ஸ்வீட் ராஸ்கல்.... நான் இந்த பஞ்சாயத்துக்கே வரலை.. நீயே இந்திராகிட்ட சொல்லிடுப்பா நீ யாருண்ணு.. என்னால முடியலை..

கவிதை காதலன் said...

//சித்தாரக்கள்ளி விறகொடிக்க போனாளாம்.
கத்தாழை முள்ளு கொத்தோட கொத்துச்சாம். //


தென்றல் நான் எல்லாத்தையும் தாங்கிக்குவேன்..ஆனா நீங்க சொன்னீங்க பாரு ஒரு பழமொழி.. சத்தியமா தாங்க முடியலைப்பா...

தென்றல் said...

இந்திரா நீங்க இன்னொரு மேட்டரை மறந்திட்டீங்க.. நான் எடுத்துக்குடுக்குறேன்..

//pratap said...
மச்சி சூப்பர்டா...
i லவ் யு டா....//

ஐலவ்யூ சொல்லி இருக்காரே.. இவரு யாருன்னு கேட்கவே இல்லையே.. அப்பாடா......... ஏதோ நம்மால முடிஞ்சுது

தென்றல் said...

//நான் என்ன சத்தம் இல்லாம நித்தம் ஒரு யுத்தம் நடத்தி புத்தம் புதுசா கிடைச்ச கிஃப்ட பத்தியா சொன்னேன்..//

ஐயோ, கவிதைக்காதலன் என் டயலாக்கை திருட்டிட்டாருங்கோஓஓஓஓஓஓ

தென்றல் said...

//கவிதை காதலன் said... தென்றல் நான் எல்லாத்தையும் தாங்கிக்குவேன்..ஆனா நீங்க சொன்னீங்க பாரு ஒரு பழமொழி.. சத்தியமா தாங்க முடியலைப்பா...//


ஆமா சார் நாங்க சொன்னா எல்லாம் உங்களுக்கு நக்கலாத்தான் தெரியும்.. ISD பண்ணி சொன்னாத்தான் உங்களுக்கு பில்டப்பா தெரியுமே? என்னங்க பண்றது நாங்க எல்லாம் லோக்கல் தாங்க

sullaan said...

அருமையான கடிதம் வரிக்கு வரி ரொமான்ஸ் மழை பொழிந்திருக்கிறது.. யார் அந்த NHI? தயவுசெஞ்சி எனக்கு சொல்லுங்க.. பிளாக்ல சொல்லலைன்னா கூட எனக்கு மெயிலாவது பண்ணுங்க ப்ளீஸ்.. இதான் என் மெயில் ஐடி..

sullaansunil@gmail.com

தென்றல் said...

ஐயோ எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு
தலையே வெடிச்சிடும் போல இருக்கு

சுள்ளானுக்கு பதில் சொல்லலைன்னா
எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு

தென்றல் said...

சுள்ளான்...... நீங்க கடல், அருவி, நதி, குளம், குட்டை எதுல தேடினாலும் அந்த விடை கிடைக்காது.. ஆனா இந்த கமெண்ட்ல அது உங்களுக்கு கிடைக்கும்..

ஐயோ ஐயோ.. நான் ரெண்டு நாளைக்கு என் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ண போறேன்.

ரஹீம் கஸாலி said...

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Vishnu said...

என் இனிய தமிழ் மக்களே......... உங்கள் பாசத்திற்குறிய விஷ்ணு இதோ இந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன் சந்திக்கிறேன்!!!!!

"என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" - ஜெய் ஹிந்த்

pratap said...

மச்சி உன் கமெண்டொ புத்தியை காட்டிட்டியே. இந்தா போனா போகட்டும் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

pratap said...

//ஆமா சார் நாங்க சொன்னா எல்லாம் உங்களுக்கு நக்கலாத்தான் தெரியும்.. ISD பண்ணி சொன்னாத்தான் உங்களுக்கு பில்டப்பா தெரியுமே? என்னங்க பண்றது நாங்க எல்லாம் லோக்கல் தாங்க/


யாரோ லோக்கலாமே.. அவங்க எல்லாம் ஐஎஸ்டிக்கு மாறாம இருக்க மாட்டாங்க..

pratap said...

//தென்றல் said...
இந்திரா நீங்க இன்னொரு மேட்டரை மறந்திட்டீங்க.. நான் எடுத்துக்குடுக்குறேன்..

//pratap said...
மச்சி சூப்பர்டா...
i லவ் யு டா....//

ஐலவ்யூ சொல்லி இருக்காரே.. இவரு யாருன்னு கேட்கவே இல்லையே.. அப்பாடா......... ஏதோ நம்மால முடிஞ்சுது//
நான் ஒரு செம ஃபிகரு.. போதுமா?? "மணி" யை என்னை எத்தனை வாட்டி பிரபோஸ் பண்ணி இருக்கேன் தெரியுமா? என்கிட்ட கால்ல விழுந்து கெஞ்சினான். ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். போதுமா தென்றல்??? எப்பூடீ.....

கவிதை காதலன் said...

இங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Happy New year 2011...

லைஃபை என்ஜாய் பண்ணுங்க......

கவிதை காதலன் said...

//sullaan said...
அருமையான கடிதம் வரிக்கு வரி ரொமான்ஸ் மழை பொழிந்திருக்கிறது.. யார் அந்த NHI? தயவுசெஞ்சி எனக்கு சொல்லுங்க.. பிளாக்ல சொல்லலைன்னா கூட எனக்கு மெயிலாவது பண்ணுங்க ப்ளீஸ்.. இதான் என் மெயில் ஐடி..
sullaansunil@gmail.com//

சுள்ளான்.... நாம தனியா பேசிக்கலாம்.. ஹி.. ஹி..

கவிதை காதலன் said...

//pratap said...
நான் ஒரு செம ஃபிகரு.. போதுமா?? "மணி" யை என்னை எத்தனை வாட்டி பிரபோஸ் பண்ணி இருக்கேன் தெரியுமா? என்கிட்ட கால்ல விழுந்து கெஞ்சினான். ஆனா நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். போதுமா தென்றல்??? எப்பூடீ.....//

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கிறது...
நல்ல மனசு மச்சி.... நீ தப்பா திங்க பண்ணாத..

ஸ்வீட் ராஸ்கல் said...

//இந்திரா said...
அட.. என்னங்க நடக்குது இங்க???
ஸ்வீட் ராஸ்கல்ங்குறது உங்க நண்பரா???
எனக்கென்னமோ டவுட்டா இருக்கே...

மிஸ் இந்திரா நான் கவிதை காதலனோட படைப்புகளின் பெரிய தீவிரவாதி,அதன் வெளிப்பாடு தான் இது.மற்றபடி நான் கடல் தாண்டி எல்லாம் இல்ல, அந்த NHI யும் இல்ல.
எல்லாருக்கும் ஒரு க்ளூ அந்த NHI Google Transliteration ல போட்டு பாருங்க அவங்க பேரு தெரியும்...

என்ன தென்றல் ஓகே வா. நாங்க எல்லாம் யாரு.நம்ம எல்லாம் யாரு.

vinu said...

hpy new year call panni irrunthean busynnu vanthuchu

ப்ரியமுடன் வசந்த் said...

உன் குறிப்பு,

மணிதன் எல்லாம் ரசித்தேன் மணி ரசனையான கடிதம் கல்க்குங்க..

நீ :)

தஞ்சை.வாசன் said...

கடிதம் மிகவும் அருமையாய்... உள்ளத்தில் உள்ளதை அழகாக எழுத்துகளில் உயிர்வூட்டி சிறக்க்க செய்துள்ளீர்கள்... வாழ்த்துகள்...

ஏதாவது பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி வளர நினைக்கும் உங்கள் எண்ணம் இவ்வாண்டில் விருச்சம் பெற வாழ்த்துகிறேன்...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

ஸ்வீட் ராஸ்கல் said...

//தென்றல் said...

இருந்தாலும் ஸ்வீட் ராஸ்கலுக்கு இப்படி எல்லாம் சோதனை வரக்கூடாது..


சித்தாரக்கள்ளி விறகொடிக்க போனாளாம்.
கத்தாழை முள்ளு கொத்தோட கொத்துச்சாம்.
அந்த கதையா இல்ல ஆகிப்போச்சு..//

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா... என்னமா எழுதி இருக்கீங்க... மெசேஜ் கிடைக்க வேண்டியவங்களுக்கு கிடைச்சிருக்கும்...
அதிலும், அந்த உன்குறிப்பு... செம....ஐடியா...!!

காதல் கடிதத்தில்
காதலிக்குக் கருத்து சொல்லி
காதலின் ஆழத்தையும்
எடுத்துச் சொல்லி...
கவர்ந்த விதம்....அருமை...

வாழ்த்துக்கள்.. :-))

வருணன் said...

உங்களுக்கு கவிதைகள் பிரியமென்று நினைக்கிறேன். எனது வலைப்பூவிற்கு நேரமிருப்பின் வாருங்கள்.

ஜெ.ஜெ said...

ஆஹா... என்ன ஒரு அருமையான காதல் கடிதம்...

மிகவும் ரசித்தேன்..

கவிதை காதலன் said...

ஸ்வீட் ராஸ்கலை யாரும் நம்பாதீங்க..


//vinu said...
hpy new year call panni irrunthean busynnu vanthuchu//

ஆமா வினோ.. கொஞ்சம் ஒர்க்.. தப்பா எடுத்துக்காதீங்க..

கவிதை காதலன் said...

//ப்ரியமுடன் வசந்த் said...
உன் குறிப்பு,
மணிதன் எல்லாம் ரசித்தேன் மணி ரசனையான கடிதம் கல்க்குங்க..
நீ :)//

நன்றி வசந்த். ஆமா ஏன் கமெண்ட் மாடரேஷன் போட்டு வெச்சிருக்கீங்க?

கவிதை காதலன் said...

//தஞ்சை.வாசன் said...
கடிதம் மிகவும் அருமையாய்... உள்ளத்தில் உள்ளதை அழகாக எழுத்துகளில் உயிர்வூட்டி சிறக்க்க செய்துள்ளீர்கள்... வாழ்த்துகள்...//
ஏதாவது பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி வளர நினைக்கும் உங்கள் எண்ணம் இவ்வாண்டில் விருச்சம் பெற வாழ்த்துகிறேன்...
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி வாசன்.. இப்ப எல்லாம் ஃபேஸ் புக்ல உங்களை அடிக்கடி பார்க்க முடியறது இல்லையே ஏன்?

கவிதை காதலன் said...

//Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
அடடா... என்னமா எழுதி இருக்கீங்க... மெசேஜ் கிடைக்க வேண்டியவங்களுக்கு கிடைச்சிருக்கும்...அதிலும், அந்த உன்குறிப்பு... செம....ஐடியா...!!//

நன்றி ஆனந்தி.. ஹி.ஹி... எதோ நம்மால முடிஞ்சது..

கவிதை காதலன் said...

//வருணன் said...
உங்களுக்கு கவிதைகள் பிரியமென்று நினைக்கிறேன். எனது வலைப்பூவிற்கு நேரமிருப்பின் வாருங்கள்//
நன்றி வருணன். கண்டிப்பாக தங்கள் தளத்திற்கு வருகிறேன்

கவிதை காதலன் said...

ஜெ.ஜெ said...
ஆஹா... என்ன ஒரு அருமையான காதல் கடிதம்...
மிகவும் ரசித்தேன்..

நன்றி ஜெ.ஜெ. (ஆஹா.. பேரே கதிகலங்க வைக்குதே..)

பதிவுலகில் பாபு said...

ம்ம்ம்ம்.. கவிதைக் காதலரைக் கடிதம் எழுதச் சொன்னால்.. கேக்கவா வேனும்.. சூப்பர்..

vinu said...

http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html


ennai paathithathu ungalidam pagirgiren;

vinu said...

http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html


ennai paathithathu ungalidam pagirgiren;

இதையும் படியுங்கள்