Saturday, November 27, 2010

நந்தலாலா - விமர்சனம்

மிஷ்கின் மீது எனக்கு எப்பவும் ஒரு மரியாதை உண்டு. அவர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லை. பத்திரிக்கைகளில் எழுதக்கூடிய சினிமா கட்டுரைகளில் நான் எத்தனையோ முறை அஞ்சாதே திரைப்படத்தை சிலாகித்து குறிப்பிட்டு இருக்கிறேன். இதோ நான் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்த நந்தலாலா..


தன் தாயின் மீது அளப்பரிய பாசம் வைத்திருக்கும் ஒருவனும், தன் தாயின் மீது தீரா கோபம் கொண்ட ஒருவனும் தங்கள் தாயைத்தேடி போகிறார்கள். இறுதியில் பாசம் வைத்திருந்தவன் தாயின் மீது கோபத்தையும், கோபம் வைத்திருந்தவன் தாயின் மீது பாசத்தையும் சுமந்து கொண்டு, கூடவே தங்களுக்கு இன்னொரு தாயை சுமந்து கொண்டு வருவே கதை. கேட்கவே பிரமித்து போகிற ஒன்லைன். அதற்கு மிஷ்கின் கொடுத்திருக்கும் உயிர், கைகுலுக்கி பாராட்ட வேண்டியது.

பொதுவாக மிஷ்கினுக்கு ரிவர்ஸிபிள் கேரக்டரைசேஷன் என்றால் மிகப்பிடிக்கும் போல, ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறதோ, இறுதியில் அந்த கதாபாத்திரம் அதற்கு எதிர்திசையில் நோக்கி பயணிக்கும், அஞ்சாதேவில் இரண்டு நண்பர்கள். இதில் தாயை தேடும் இரண்டு குழந்தைகள்

ஒரு பயணத்தின் நடுவே பாஸ்கர்மணியாக வரும் மிஷ்கினும், அகியாக வரும் அஸ்வத்தும் சந்திக்கும் மனிதர்களே இந்த கதையின் திரைக்கதை பலம் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு ஆச்சர்யம்। இளநீர் திருடியதற்காக துரத்தும் தாத்தாவிற்கே இளநீர் வெட்டி கொடுப்பது, ஆங்கிலத்தில் பேசினால் அமைதியாகிவிடும் போலிஸ், தங்கள் சங்கடங்களை ஆங்கிலத்தில் பகிர்ந்துகொள்ளும் புதுமணத்தம்பதிகள், பீர்பாட்டிலோடு அலையும் இளைஞர்கள், ஜாதிகலவரத்தில் தன்னந்தனியாக ஒரு பெண்ணை கற்பழிக்க முயலும் மூவர் என மிஷ்கினின் பாத்திரப்படைப்புகள் எல்லாமே உயர்தரம்।

அகியின் தாயை மிஷ்கின் சந்தித்தவுடன் வசனமே இல்லாமல், டாப் ஆங்கிளில் காட்டப்படும் காட்சி இனி சினிமா மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெறும்। ஒரு வரி வசனம் கூட இல்லாமல், ஒட்டுமொத்த கதையையும் அங்கே கேமரா சொல்லும் போது பிரமிப்பு வராமல் இருக்க முடிவதில்லை. அந்தப்பெண்ணை ஓங்கி அறைகையில் தியேட்டர் கைதட்டில் ஆர்ப்பாரிக்கிறது.

இளையராஜானின் பாடல்கள் என் படத்திற்கு தடையாக இருக்கிறது என்று சொல்லி, சில பாடல்களை நிராகரித்த தைரியமும், தன் கதைக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் காட்டி இருக்கும் சிரத்தையும் ஹாட்ஸ் ஆஃப் சொல்ல வைக்கிறது. கம்பீரமான படைப்பாளி.

மிஷ்கின் பல இடங்களில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்। சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கோ என எண்ணத்தோன்றுகிறது। கருவிழியே பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு அவர் முறைத்துப்பார்ப்பது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.


இந்தக்காலத்தில் நீளமான ஷாட்கள் எல்லாம் வைத்தால் போரடிக்கும் என்ற சினிமா இயக்குனர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி இருக்கிறார் மிஷ்கின். மிகப்பெரும்பாலான ஷாட்கள் லென்த்தி ஷாட்கள், வைட் ஆங்கிள் ஷாட்கள், என ஒரு பாடமே நடத்தி இருக்கிறார் மிஷ்கின். அதுவும் ஆரம்பத்தில் நீரோடை காட்டப்படும் ஷாட்டும், அதற்கு பின்னணி இசையே இல்லாமல் இளையராஜா அமைதியாக இருப்பதும் மார்வலஸ். டோண்ட் மிஸ் தி டைட்டில்ஸ்.

எங்கெங்கு இசை வேண்டும் என்பதைவிட எங்கெங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதிலேய பின்னணி இசையின் வெற்றி இருக்கிறது என்று இளையராஜா சொல்வார். அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்தப்படத்தை பார்க்கையில் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆரம்ப காட்சி டல்லாக போகும் போது, திடீரென ரேடியோ உடைக்கும் சப்தம் ஒரு நொடி சப்தநாடியையும் ஒடுக்கிவிடுகிறது. மிஷ்கின் தன் அம்மாவை பார்த்த அந்த நொடியில் ஒலிக்கும் இளையராஜாவின் குரலைக்கேட்டு கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. “நீ இவ்ளோ நேரம் விளையாடுனே, இதோ பார்டா என் ராஜ்ஜியத்தை” என்று சொல்லி இளையராஜா தன் பிரம்மாஸ்திரத்தை ஏவிவிடும் இடம் இதுதான். ராஜா ராஜாதான்.

ஸ்னிக்தா.... இப்படி ஒரு பர்ஃபாமெனஸை இந்தப்பெண்ணிடம் இருந்து நிச்சயமாய் எதிர்பார்க்க வில்லை. சுவற்றில் சாய்ந்தபடியே அவர் பேசுவதைவிட, தன் கஸ்டமர் போய்விட்டானே என்று புலம்புகையில் தான் டாப்கிளாஸ்.

இது தமிழ்சினிமாவின் பெருமைப்படத்தக்க ஒரு படம்தான்। ஆனாலும் மனதில் சில குறைகள். அஞ்சாதேவில் வெறும் கால்களை மட்டுமே காட்டி ஒரு காட்சி படமாக்கப்பட்டிருந்து, அது மிஷ்கினுக்கு பெரும் பாராட்டை தேடித்தந்தது. அந்த போதையில் பெரும்பாலான காட்சிகளுக்கு கால்களுக்கு மட்டுமே க்ளோஸப் வைத்திருக்கிறோரே என எண்ணத்தோன்றியது.

அடுத்து அந்த சிறுவனும் மிஷ்கினும் அடிக்கடி தலையை தொங்கப்போட்டுகொண்டு நிற்பதுகொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. அதுஏன் சினிமா குழந்தைகள் மட்டும் யதார்த்தத்தை மீறியதாகவே இருக்கிறார்கள் என்ற கோபம் இந்தபடத்திலும் லேசாக தலைதூக்குகிறது. ஃப்ரேமிற்குள் இருந்து ஆட்கள் அவுட் போன பின்பும் கேமரா ஸ்டெடியாக நிற்பது போன்ற காட்சிகள் திரும்ப திரும்ப காட்டுவது சற்றே சலிப்பையும் ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால் “எப்படியெல்லாம் ஷாட் வைத்திருக்கிறேன் பாருங்டா” என்று மிஷ்கின் சொல்லிகாட்டுவது போலே இருக்கிறது. கேமரா அற்புதமான ஒர்க் என்றாலும்., சில இடங்களில் வலிய கேமரா ஒர்கை ஆடியன்ஸுக்கு காட்டவேண்டும் என்ற நோக்கத்திலே செயல்பட்டிருப்பது போலே இருக்கிறது.

இதில் மிஷ்கின் மேல் மன்னிக்க முடியாத அளவிற்கு ஒரு கோபம் வருகிறது. மிஷ்கினின் அம்மா கதாபாத்திரத்திற்காக மொட்டை கூட அடித்துக்கொண்டு அழுக்கும், அசிங்கமுமாக அமர்ந்திருப்பது ரோகிணிதான் என்பது டைட்டில் பார்த்தால் மட்டுமே தெரியும். ஒரு மரவட்டைக்க்கு கூட க்ளோஸப் வைத்து ஆடியன்ஸுக்கு காட்டும் மிஷ்கின், ஏன் ரோகிணியை சரிவர எக்ஸ்போஸ் செய்யவில்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும் ரோகிணியின் பார்வையிலிருந்து பார்க்கையில் தான் அந்த வலி புரியும். “நான் எப்படிப்பட்ட பர்ஃபாமென்ஸ் செய்திருக்கிறேன் பார்” என்று நாளை ரோகிணி சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.


எல்லா கதாபாத்திரங்களும் மிஷ்கின் என்ற மிலிட்டரிமேனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியே நடக்கிறார்கள் என்ற பிம்பமும் நமக்கு எழாமலில்லை. ஐங்கரனின் பெருமைமிகுந்த படைப்பு இந்தப்படம். தேசியவிருதை குறிவைத்து மிஷ்கின் நந்தலாலா அம்பை எய்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. கிடைக்க வாழ்த்துக்கள் மிஷ்கின் சார்.
31 comments:

ஆமினா said...

நடுநிலைமையான விமர்சனம்!!

சூப்பர் வாழ்த்துக்கள்

ஜீ... said...

Nice review! :))

Vishnu said...

அந்தப்பெண்ணை ஓங்கி அறைகையில் தியேட்டர் கைதட்டில் ஆர்ப்பாரிக்கிறது.

அடுத்தவன் துன்பத்துலத்தான் இந்தியாவுல பலபேரு சந்தோசமா இருக்கான்கையா.........இருக்காங்க.

chandru / RVC said...

// ஃப்ரேமிற்குள் இருந்து ஆட்கள் அவுட் போன பின்பும் கேமரா ஸ்டெடியாக நிற்பது போன்ற காட்சிகள் திரும்ப திரும்ப காட்டுவது சற்றே சலிப்பையும் ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால் “எப்படியெல்லாம் ஷாட் வைத்திருக்கிறேன் பாருங்டா” என்று மிஷ்கின் சொல்லிகாட்டுவது போலே இருக்கிறது.//
இதை இப்படி ஒற்றையாய் அணுகுவது தவறு என்று தோன்றுகிறது. அந்தக் களத்தில் அந்தக் கணத்தில் பாத்திரங்கள் அந்த இடத்தில் உலவுகின்றனர். அவர்கள் சென்ற பின்பும் அந்த களம் அப்படியேதான் இருக்கிறது. ... மேலதிகப் புரிதல்களை உங்கள் அனுமானத்துக்கு இயக்குனர் விட்டுவிடுகிறார். ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் வரும் பூக்களில் இருந்து தொடங்கும் காட்சிகள், கள்ளிச் செடியில் இருந்து தொடங்கும் காட்சி, அனைவரும் உறங்கும்போது மலைப்பாம்பு ஊர்ந்து செல்வது என படம் முழுக்க நிறைய குறியீடுகள். இவையனைத்தும் பார்வையாளனின் உணர்வுகளுக்கும், அனுமானத்திற்குமே விடப்படுகின்றன். மிஷ்கின் எதையும் நிறுவ முயலவில்லை... அன்பைத் தவிர வேறெதையும்.

Chitra said...

உங்கள் விமர்சனத்தில், எல்லா பார்வையில் இருந்தும் அலசி இருப்பது தெரிகிறது.
Good review. :-)

வெறும்பய said...

நடுநிலைமையான விமர்சனம்!!

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விமர்சனம்,மிஷ்கினின் ரசிகனக இருந்தும் பிளச் மைனசை பட்டியல் போட்டது பாராட்டத்தக்கது,உங்கள் விமர்சனம் மிக கவனைக்கத்தக்கது,நான் இன்னும் படம் பாக்கல

அனாதைக்காதலன் said...

hats of to you mani ! You seem to be such a great lover of true art. Which even i used to be so . Watever u ve written above was perfectly wryt! Continue writing . And happy to see a tru documentary cinema lover. Have a nice day .. wishes

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அதுஏன் சினிமா குழந்தைகள் மட்டும் யதார்த்தத்தை மீறியதாகவே இருக்கிறார்கள் என்ற கோபம் இந்தபடத்திலும் லேசாக தலைதூக்குகிறது.//
உன்மைதான்

கவிதை காதலன் said...

ஆமினா said...
நடுநிலைமையான விமர்சனம்!!
சூப்பர் வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே..

கவிதை காதலன் said...

// ஜீ... said...
Nice review! :))//

முதன் முறை கருத்துரை வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//Vishnu said...
அந்தப்பெண்ணை ஓங்கி அறைகையில் தியேட்டர் கைதட்டில் ஆர்ப்பாரிக்கிறது.
அடுத்தவன் துன்பத்துலத்தான் இந்தியாவுல பலபேரு சந்தோசமா இருக்கான்கையா.........இருக்காங்க//

விஷ்ணு சார்.. இவ்ளோ சீக்கிரம் உங்க கமெண்ட் எதிர்பார்க்கவே இல்லை. அது ஒண்ணும் இல்ல சார்.. அந்த பெண்ணை அடிக்கும் போது தியேட்டர்ல ஒரு க்ளாப்ஸ் வரும் பாருங்க.. அது சந்தோஷத்துல வர்றது இல்ல.. கோபத்துல வர்றது..

panasai said...

பார்க்கலாம்னு சொல்றீங்க...

கவிதை காதலன் said...

//chandru / RVC said... //
முதன் முறை கருத்துரை வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. எனக்கும்
மிஷ்கினின் காட்சி குறியீடுகளில் மிகுந்த ஆர்வமுண்டு. நீங்கள் சொன்ன எல்லாக்காட்சிகளையும் நானும் ரசித்தேன். ஆனாலும் அந்த ஸ்டெடி ஃப்ரேம் காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது, ஒரு அதிபுத்திசாலித்தனத்தை திணிப்பது போலவே இருக்கிறது. ஆனாலும் இது ஒரு புத்திசாலித்தனமான மேக்கிங் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லை.

//மிஷ்கின் எதையும் நிறுவ முயலவில்லை... அன்பைத் தவிர வேறெதையும்.//

உண்மைதான். அதுவும் அந்த பெண், டிராக்டர் ஓட்டிவரும் காட்சியில் பொங்கி வழிகிறது அன்பு.. முதன் முறையாக ஷாட் வழி கதை சொல்லும் பாணியை துவக்கி வைத்திருக்கிறார் மிஷ்கின்.

கவிதை காதலன் said...

//Chitra said...
உங்கள் விமர்சனத்தில், எல்லா பார்வையில் இருந்தும் அலசி இருப்பது தெரிகிறது.
Good review. :-)//

நன்றி சித்ரா.. படம் பார்த்திட்டீங்களா?

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
நடுநிலைமையான விமர்சனம்!!//

மிக்க நன்றி தோழா

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
நல்ல விமர்சனம்,மிஷ்கினின் ரசிகனக இருந்தும் பிளச் மைனசை பட்டியல் போட்டது பாராட்டத்தக்கது,உங்கள் விமர்சனம் மிக கவனைக்கத்தக்கது,நான் இன்னும் படம் பாக்கல
//


தலைவா... கண்டிப்பா பாருங்க..

கவிதை காதலன் said...

//அனாதைக்காதலன் said...
hats of to you mani ! You seem to be such a great lover of true art. Which even i used to be so . Watever u ve written above was perfectly wryt! Continue writing . And happy to see a tru documentary cinema lover. Have a nice day .. wishes//

நன்றி நண்பரே.. முதல்முறை உங்களது வருகையால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்து வாருங்கள்

கவிதை காதலன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதுஏன் சினிமா குழந்தைகள் மட்டும் யதார்த்தத்தை மீறியதாகவே இருக்கிறார்கள் என்ற கோபம் இந்தபடத்திலும் லேசாக தலைதூக்குகிறது.//
உன்மைதான்//

ஆரம்பத்திலே இருந்தே உறுத்திக்கொண்டே இருந்த விஷயம் அது மட்டும்தான் சார்...

MadhuRaj said...

திரை விமர்சனத்தைக் கூட ஒரு கவிதையாக, இவ்வளவு அழகாக, எந்த எழுத்தாவது அதிகமாக இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்பதாக பதிவு செய்திருக்கிறீர்கள். மனம் அழகானவர்கள் தான் கனமான விசயத்தைக் கூட மிக இலகுவாகக் கையாள முடியும், உங்களுக்கு வாய்த்திருக்கிறது. விமர்சனத்தைப் படித்து படத்தை பார்க்க விரும்பியதைவிட உங்கள் விமர்சனத்தில் லயித்து இதை எழுதுகிறேன். நன்றி.

பதிவுலகில் பாபு said...

Very Good Review.. :-)

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
நல்ல ஒரு விமர்சனம் டா.மீண்டும் விமர்சனம் எழுத ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.மைனாவிற்கு பிறகு விமர்சனம் எழுதி இருக்கிறாய்.எல்லா படங்களையும் விமர்சனம் செய்யாமல்,நல்ல நல்ல படங்களாக தேர்வு செய்து விமர்சனம் செய்கிறாய்.GOOD.KEEP IT UP மச்சி.மிஷ்கின் எப்போதுமே ஒரு நல்ல படைப்பாளி தான்.அதை எப்போதே அவர் நிரூபித்து விட்டார்.ஆனாலும் ஆனானப்பட்ட மணிரத்னம் (ராவணன்) சாரே சில நேரங்களில் தவறு செய்யும் போது,மிஷ்கின் மட்டும் என்ன விதிவிலக்கா?.எந்த ஒரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் பார்பதால் நமக்கு சலிப்பு தான் ஏற்படும்,அந்த தவறை தான் மிஷ்கினும் செய்துவிட்டார்.அங்கங்கு சில குறைகள் இருந்தாலும்,படம் ரசிக்கும் படி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள்.அவர் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உழைத்திருக்கும் உழைப்புக்காகவாவது அவரை பாராட்டியே ஆக வேண்டும்.மிஷ்கின் சார் தன் அடுத்த படைப்பான ''யுத்தம் செய்'' படத்தை நிச்சயம் ஒரு காவியமாக தருவார் என்று அவருடைய சராசரி ரசிகனாக நம்புகிறேன்.நெடு நாள் கழித்து எங்கள் இளையராஜாவின் பாடல்களை கேட்கும் வரம் கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு.அதுவும் அந்த அம்மா பாட்டு கேட்கும் போதே அழ விட்டு விட்டது.இன்னும் அதை விஷுவலாக பார்த்தால்?.ராஜ சார் எப்பவுமே இசை ராஜா தான்.நான் இன்னும் படம் பார்க்கவில்லை.சீக்கிரமாக பார்கிறேன்.எப்போது போல ஒரு நல்ல படைப்பு மச்சி.கலக்கிட்ட வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது.

Suresh said...

http://arumbavur.blogspot.com/2010/11/blog-post_26.html கிகுஜிரோ
படத்தை பற்றிய அதிகாரபூர்வ இணையதளம் பார்க்க இதை அழுத்தவும் வீடியோ மற்றும் படம் பற்றிய விவரம் போன்றவைகள் உள்ளன

கிகுஜிரோ (ஒரிஜினல் நந்தலாலா ) இணைய தளம் செல்ல இங்கே அழுத்தவும்

rajvel said...

நடுநிலைமையான விமர்சனம்!

இரவு வானம் said...

நன்றாக எழுதி உள்ளீர்கள் நண்பரே

கவிதை காதலன் said...

//MadhuRaj said... //

நன்றி நண்பரே.. தங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது,,

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
Very Good Review.. :-)//

நன்றி பாபு..

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //

மச்சி.. படம் பாருடா.. அந்த் அம்மா சாங்ல கண்டிப்பா நீ அழுதுடுவே.. உன் கமெண்ட் எப்பவும் போல கலக்கல்

கவிதை காதலன் said...

//Suresh said... //

சுரேஷ் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.நான் கிஜிகுரோ பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு சின்ன மனவருத்தம்தான். மிஷ்கின் நன்றி என்று அந்த இயக்குனரின் பெயரைப்போட்டிருக்கலாம்.

கவிதை காதலன் said...

//rajvel said...
நடுநிலைமையான விமர்சனம்!//

நன்றி ராஜ்வேல் அவர்களே.. தொடர்ந்து வாருங்கள்

கவிதை காதலன் said...

//இரவு வானம் said...
நன்றாக எழுதி உள்ளீர்கள் நண்பரே//

மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தொடர்ந்து படியுங்கள்

இதையும் படியுங்கள்