Friday, November 12, 2010

ஒரு காதல் இங்கே காதலிக்கிறது - கடைசி பாகம்

இந்தக்கதையின் முதல் பாகத்தை படிக்க..... இங்கே

அப்போ ரெண்டு பேரும் மேல இருக்காங்க.... கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணாலாமா?? என்று கண்ணடித்தபடியே அவன் அருகில் வந்து, மெதுவாக அவன் தோளின் மேல் தன் இரண்டு கைகளையும் பூமாலை போல் போட்டுக்கொண்டாள்.... அதிர்ச்சியில் ஜீவா தடுமாற ஆரம்பித்த போது...

"நிலா கையை எடு..வீட்ல அப்பா அம்மா ரெண்டு பேரும் இருக்காங்க" சட்டென்று அவள் கைகளை தோளிலிருந்து உதறி, நகர்ந்து கொண்டான் ஜீவா

"So What? இப்ப நான் தோள் மேல கை போட விடலைன்னா இன்னும் ஒன் வீக்குக்கு நீ என்னை பார்க்க முடியாது. ஓகேவா?"

"ஹேய் என்ன நிலா இது? வீட்ல அப்பா இருக்காருடி"

"அது உன் பிராப்ளம்... எனக்கு வேண்டியது உன் தோள் மேல கை போட்டுக்கணும்.. நான் இன்னும் 3 தான் எண்ணுவேன். அதுக்குள்ள ஓகே சொல்லலைன்னா நான் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். ஜீவாவிடமிருந்து பார்வையை நகர்த்தி வேவேறுபக்கம் திருப்பிக்கொண்டு எண்ண ஆரம்பித்தாள்.

1 "

"நிலா வேணாம்ப்பா"

2"

"நிலா ப்ளீஸ் டீ. அப்பா மேலே இருக்காருடி"

३" என்று முடிப்பதற்குள்ளாகவே

"சரி.... கிட்டவா" என்று தயக்கத்துடன் சொல்லிமுடித்தான்..

"ம்ம்ம்ம்.. அது.. "என்றபடியே நிலா ஜீவாவின் அருகில் வந்து, அவன் தோளின் மீது இரண்டு கைகளையும் போட்டுக்கொண்டாள். ஜீவா தர்மசங்கடமாய் சைடில் எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தான்.

"ஹேய்.. எப்பவும் இந்த மாதிரி விஷயத்துல நீதான் ரொம்ப ஆக்டிவ்வா இருப்பே। இப்ப என்ன? நடிக்கிறியா?"

"இல்லப்பா அப்பா வீட்ல இருக்காரு அதான்".. அதையும் நிலாவைப்பார்க்காமலே சொன்னான்.

இப்படி திரும்பு.. என்று அவன் கன்னங்களை பிடித்து தன்வசம் திருப்பினாள்। மெல்ல அவன் காதருகே தன் இதழ்களை கொண்டு வந்தாள். ஜீவாவின் இதயம் 92 முறை ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தது. அவன் காதருகே சென்று

"இந்த ஷார்ட்ஸ், பனியன்'ல நீ ரொம்ப செக்ஸியா இருக்கே" என்று மெதுவாய் கிசுகிசுத்தாள். ஜீவாவிற்கு சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் பயத்தில்

"ஹேய்.. பயமா இருக்குப்பா" என்றான்.

"ச்சீய்ய்... நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்'டா"

"நான் அதை சொல்லலடி. அப்பா பத்தின பயத்தை சொன்னேன்"

ஓ.... அவன் பயத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருந்தாள்.

"நிலா..நீ கிளம்பு நாம வெளியில எங்கேயாவது மீட் பண்ணலாம்"

சரி..நான் கிளம்பனும்ன்னா.. நீ இன்னொன்னு செய்யணும்..

என்ன?

"ஒரு கிஸ் கொடுக்கணும். அதுவும் நீ கிஸ் கொடுக்கும் போது நான் பேச முடியாதபடி இருக்கணும்... "நிலா சொல்லி முடிக்கும் போதே...

"நோ" அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தான் ஜீவா பட்டென்று அவள் கைகளை உதறித்தள்ளினான்.

"நிலா என்ன விளையாடுறியா?

"ஹேய் அப்போ அன்னைக்கு எங்க வீட்ல வந்து நீ என்கிட்ட கிஸ் கேட்டப்போ எனக்கு இப்படித்தானே இருக்கும்?"

"ஆனா அன்னைக்கு நீ எனக்கு கிஸ் கொடுக்கவே இல்லையே"

"அதை எப்படி வாங்கிக்கணுன்னு உனக்கு தெரியலை"

"சரி... மத்ததை நாம நேர்ல பேசிக்கலாம். நீ இப்போ கிளம்பு"

"நீ இப்போ கிஸ் கொடுத்தேன்னா ஈவ்னிங் எங்கேயாவது போகலாம்.. இல்லைன்னா என் மொபைல் ரிப்பேர் ஆயிடும். என் வண்டி பஞ்சர் ஆயிடும். அப்பா கூடத்தான் காலேஜ் வர முடியும். நாளைக்கே எனக்கு செமஸ்டர் ஆரம்பிச்சிடும். நான் ரொம்ப சீரியஸா பார்லர் கூட போகாம படிக்க ஆரம்பிச்சிடுவேன் என்ன ஓகேவா?

"நிலா This is Too much "

"லவ் பண்ற பொண்ணுக்கு கிஸ் கொடுக்கிறது டூ மச்சா? நீ இப்படி சொல்றதுதான் டூ மச்."

"நான் தானேடி உன்னை எப்பவும் கிஸ் கேட்டு தொல்லை பண்ணுவேன். இப்ப என்னடி புதுசா?"

"ஜீவாவுக்கு ஒரு காலம் வந்தா, நிலாவுக்கும் ஒரு காலம் வரும்"

"ஹேய்,, என்னை பழிவாங்குறியா?"

"அப்படித்தான் வெச்சுக்கோயேன். இப்ப நீ கொடுக்க போறியா இல்லையா.. நான் இப்போ என் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ண போறேன்" என்று மொபைலை கையில் எடுத்து அவனை பயம் காட்டத்தொடங்கினாள்.

"வேணாம்டி.. இரு... "

என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அவள் இதழ்களை நெருங்க ஆரம்பித்தான்.ஒரு ஊசி நுழையும் அளவிற்கு மட்டும்தான் இரண்டு இதழ்களுக்கு இடையில் இடைவெளி।ஜீவா நெருங்க ஆரம்பித்த போது...


"ஒருவெட்கம் வருதே வருதே.. சிறு அச்சம் தருதே.. "

நிலாவின் மொபைல் டோன் பாடத்தொடங்கியது.. ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டான் ஜீவா..

"ஹேய்.. எங்க அம்மா.." என்று கூக்குரலிட்டாள். படக்கென தன் தோளில் இருந்த அவள் கையை தட்டிவிட்டான் ஜீவா.

"இப்ப யாரைக்கேட்டு என் கையை எடுத்த ? இப்ப நீ கிட்ட வரலைன்னா நான் ஃபோனே அட்டெண்ட் பண்ண மாட்டேன். எங்க அம்மா உங்க வீட்டுக்கே வந்திடுவாங்க பரவாயில்லையா?"

"நிலா ஏண்டி இப்படி படுத்தறே?" என்று அருகில் வந்தவன் அவள் கையை மறுபடியும் எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டான். அவன் அருகில் வந்தவள்.. ஃபோனை ஆன் செய்து.. "இதோம்மா.. வந்திடறேன். ஆண்ட்டி மேல இருக்காங்க.. ஜீவா தர மாட்டேங்கிறான்மா.." என்றவுடன்..

ஜீவாவிற்கு தூக்கிவாரி போட்டது.. "இல்லைம்மா அவனுக்கு பாத்திரம் எங்க இருக்குன்னு தெரியலையாம். அதனாலதான் எடுத்துதர மாட்டேங்கிறான். நான் ஆண்ட்டிவந்த உடனே வாங்கிட்டு வந்திடறேன்" என்றாள். அப்போதுதான் ஜீவாவிற்கு மூச்சு வந்தது.. சற்றே இளைப்பாறினான். ஃபோனை துண்டித்துவிட்டு "ம்ம்ம்.. சீக்கிரம் கொடு" என்றாள்.

"ஹேய்.. நீ விடவே மாட்டியாடி? அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா"

"உன்னோட கிஸ் எனக்கு பிடிச்சா போதும். உங்க அப்பாவுக்கு பிடிக்கணும்ன்னு அவசியம் இல்லை"

"நிலா" ஒரு நிமிடம் டென்ஷனானான். சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு "நிலா நீ மொதல்ல கிளம்பு."

"முடியாது.. என்னை எந்த அளவுக்கு நீ கிஸ் கேட்டு தொல்லை பண்ணுவ. இப்ப உனக்கு தெரிய வேணாம்.. ம்ம்.. சீக்கிரம்"

ஜீவா அவள் குறும்பை ரசித்தாலும் உள்ளுக்குள் பயத்தை சுமந்தபடியே மெதுவாய் அவள் இதழ்களை நெருங்க ஆரம்பித்தான். அவள் இதழ்களின் ஓரத்தில் ஒரு சின்ன தூசி ஒட்டி இருப்பதை கவனித்தவன், அவள் இதழ்களின் மீது தன் விரல்களால் அதை தள்ளிவிட்டு, இரண்டு விரல்களால் அவள் இதழ்களை பிடித்தான். இதழ்களை பிடித்தபடியே அவள் முகத்தருகே நெருங்கினான்.

"ஜீவா ஒழுங்கா பிடிச்சிருக்கியா?? அப்பாவின் குரல் கேட்டதும் நிலை தடுமாறித்தான் போனான்.

"அப்பா???" என்று புரியாமல் குழம்பினான்.

பைப்பை ஒழுங்கா பிடிச்சிருக்கியாடா?

பிடி.. பிடிச்... பிடிச்சிக்கிட்டிருக்கேன்பா.. என்று வார்த்தைகளை தடுமாறி ஒப்பித்தான்.

"அப்படியே பிடிச்சிகிட்டு இரு.. நான் இங்க க்ளீன் பண்ணிட்டு டேப்பை ஆன் பண்றேன்"என்று மேலிருந்து குரலை மட்டும் கீழே அனுப்பினார். ஜீவா சற்று பெருமூச்சு விட்டு, அவளிடமிருந்து நகர்ந்து நின்று கொண்டான்.

" நிலா நீ போ.. எனக்கு பயமா இருக்கு.. அப்பாவுக்கு இந்த மாதிரி விளையாட்டு எல்லாம் பிடிக்காது..."அவன் பதட்டத்தை ரசித்தபடியே சிரிப்பை அடக்கிக்கொண்டு,

"அப்போ என்னை ஒருவாரம் பார்க்காம, பேசாம இருக்க முடிவு பண்ணிட்டே"

"நிலா ஏண்டி சாகடிக்கிறே" சாயந்திரம் ஒரு முத்தம் என்ன. ஆயிரம் முத்தம் கூட கொடுக்கிறேன்ப்பா.."

"எனக்கு ஆயிரம் முத்தம் எல்லாம் வேணாம். ஒரே ஒரு முத்தம் வேணும். அதுவும் இப்பவே வேணும். நீ வேற எதுவும் பேசவேண்டாம். நான் எதையும் கேட்க மாட்டேன்" என்று காதுகளை மூடிகொண்டாள்.

"ராட்சசி.. இரு.. உன்னை அப்புறம் கவனிச்சுக்குறேன்." என்று படிக்கெட்டின் பக்கம் போகத்தொடங்கினான்.

"எங்கடா போற"

"இருடி... அம்மா துணிக்காய போட்டுட்டாங்காளான்னு எட்டி பார்த்திட்டு.. அவங்க கீழ வர்ற எவ்ளே நேரம் ஆகும்னு கெஸ் பண்ணிட்டு வந்து தர்றேன்" சொல்லிவிட்டு படிக்கெட்டின் மேல் ஏறத்தொடங்கினான்..அவன் பதட்டத்தை ரசித்தபடியே லேசாய் சிரிக்க ஆரம்பித்தாள்.

மாடியின் ஓரே தலையை மட்டும் மெதுவாய் நீட்டியபடி எட்டிப்பார்த்தான்.

சாந்தி.. ப்ளீஸ் சாந்தி.. என்று அப்பா அம்மாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

"என்னங்க இது பையன் இருக்கிறான் வீட்ல.. இந்த வயசுல போய் விடுங்க"

"சாந்தி... அவன் கீழ தானே இருக்கான்... ஜீவா நீ ஒழுங்கா பிடிச்சிட்டு இரு..." என்று அப்பா கீழே குரல் கொடுத்தார். "பாத்தியா பையன் கீழேத்தான் இருக்கான்"

ஜீவா மெதுவாய் சிரித்தபடியே படிக்கெட்டில் இறங்கத்தொடங்கினான்.....


********************************************************
இந்தப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள்। உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

41 comments:

Balaji saravana said...

கடைசி வரைக்கும் அந்த பதட்டம் இருந்துகிட்டே இருந்துச்சு..
சூப்பர் பாஸ்! :)

THOPPITHOPPI said...

Nice telling

கவிப்ரியன் said...

//நீ இப்போ கிஸ் கொடுத்தேன்னா ஈவ்னிங் எங்கேயாவது போகலாம்.. இல்லைன்னா என் மொபைல் ரிப்பேர் ஆயிடும். என் வண்டி பஞ்சர் ஆயிடும். அப்பா கூடத்தான் காலேஜ் வர முடியும். நாளைக்கே எனக்கு செமஸ்டர் ஆரம்பிச்சிடும். நான் ரொம்ப சீரியஸா பார்லர் கூட போகாம படிக்க ஆரம்பிச்சிடுவேன் என்ன ஓகேவா?//


ஹேய்.. சான்ஸே இல்லை.. மிரட்றதுல ஒரு புதுமையா இருக்கு.. வித்தியாசமா எழுதறீங்க.. சூப்பர் ரொமாண்டிக் கதை....

கவிப்ரியன் said...

வசனங்கள் எல்லாம் ரொம்ப லைவ்'ஆ இருக்கு........

Anonymous said...

அழகான ரொமான்ஸ்.

கொஞ்சம் கூட பதட்டம் குறையாமல் கடைசி வரைக்கும் தொடர்ந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
இறுதியில் ஜீவா போலவே நானும் சிரித்து விட்டேன்.
வாழ்த்துக்கள்.

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. சூப்பர் சூப்பர்..

ரொம்ப ரசிச்சு படிச்சேன்..

படிக்கறவங்களுக்கு சேர்த்து பதற்றத்தைக் கொண்டு வந்திருக்கீங்க.. கிரேட்..

பிரியமுடன் ரமேஷ் said...

பயங்கரமான நேரேட்டிங் ஸ்டைல்.. சூப்பர்.. கலக்கிட்டீங்க.. ரொமான்ஸ் கதையைக் கூட.. கடைசி வரைக்கும் எதிர்பார்ப்போடவே ஒவ்வொரு வரியையும் படிக்க வைக்கறீங்க.. ரொம்ப நேச்சுரலாவும் இருந்தது.. அசத்தல்...

வெறும்பய said...

கடைசி வரைக்கும் செமையா கொண்டுபோயிருக்கீங்க.... அருமையா இருக்கு... என்ன ஒரு திரில்லு... ம்ம்ம்ம் நடத்துங்க...

தென்றல் said...

/"ஒருவெட்கம் வருதே வருதே.. சிறு அச்சம் தருதே.. "//


பாட்டோட ரிங்டோனை கவனிச்சீங்களா??? நான் எதையுமே வெளிப்படையா சொல்லலைப்பா....

தென்றல் said...

//ஹேய்.. நீ விடவே மாட்டியாடி? அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா"

"உன்னோட கிஸ் எனக்கு பிடிச்சா போதும். உங்க அப்பாவுக்கு பிடிக்கணும்ன்னு அவசியம் இல்லை"//

பின்றீங்க.. ரொம்ப ரசிச்ச டயலாக்....

bhuvi said...

super romance story feel panna vachutinga sir..............

hmmm experience oh.........

எப்பூடி.. said...

முதல்ப்பகுதியையும் படித்தேன், விறுவிறுப்பாகவும் பதட்டமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னங்க இது ரொமான்ஸ வெச்சிக்கிட்டு இந்த மெரட்டு மெரட்டியிருக்கிங்க? முத்தம் கொடுப்பாங்களா இல்லியான்னு ரொம்ப தவிச்சுப்போயிட்டேன்!

அன்பரசன் said...

nice story

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்பவே சுவாரஸ்யமா இருந்துச்சு பாஸ் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரைக்கும் உதட்டில் சிறு புன்னகை வந்தது...அது ரொமாண்டிக் உரையாடல்களை காட்சியாக கொண்டுவந்ததால்

சூப்பர் பாஸ்!

கவிதை காதலன் said...

//Balaji saravana said...
கடைசி வரைக்கும் அந்த பதட்டம் இருந்துகிட்டே இருந்துச்சு..
சூப்பர் பாஸ்! :)//

நன்றி பாலாஜி..

கவிதை காதலன் said...

//THOPPITHOPPI said...
Nice telling//
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//கவிப்ரியன் said...
ஹேய்.. சான்ஸே இல்லை.. மிரட்றதுல ஒரு புதுமையா
இருக்கு.. வித்தியாசமா எழுதறீங்க.. சூப்பர் ரொமாண்டிக் கதை....//

நன்றி கார்த்திக்.. இதுக்கே இபப்டின்னா இன்னும் விதவிதமான மிரட்டல்கள் இருக்கு...

கவிதை காதலன் said...

//இந்திரா said...
அழகான ரொமான்ஸ்.

கொஞ்சம் கூட பதட்டம் குறையாமல் கடைசி வரைக்கும்

தொடர்ந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
இறுதியில் ஜீவா போலவே நானும் சிரித்து விட்டேன்.
வாழ்த்துக்கள்.//

வாருங்கள் இந்திரா.. சமீபத்தில்தான் உங்களுடைய காதல் பற்றிய காட்டமான பதிவை படித்திருந்தேன். நீங்களே சிரித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//பதிவுலகில் பாபு said...
ஹா ஹா ஹா.. சூப்பர் சூப்பர்..
ரொம்ப ரசிச்சு படிச்சேன்..
படிக்கறவங்களுக்கு சேர்த்து பதற்றத்தைக் கொண்டு
வந்திருக்கீங்க.. கிரேட்..//


மிக்க நன்றி பாபு.. தொடர்ந்து வருகை தாருங்கள்

கவிதை காதலன் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
பயங்கரமான நேரேட்டிங் ஸ்டைல்.. சூப்பர்.. கலக்கிட்டீங்க.. ரொமான்ஸ் கதையைக் கூட.. கடைசி வரைக்கும்
எதிர்பார்ப்போடவே ஒவ்வொரு வரியையும் படிக்க வைக்கறீங்க.. ரொம்ப நேச்சுரலாவும் இருந்தது.. அசத்தல்...//

நான் யாராவது திட்ட போறீங்கன்னு நினைச்சேன். பட் படிச்ச எல்லாருக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்றதை கேட்கும் போது சந்தோஷமா இருக்கு.

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
கடைசி வரைக்கும் செமையா கொண்டுபோயிருக்கீங்க.... அருமையா இருக்கு... என்ன ஒரு திரில்லு... ம்ம்ம்ம் நடத்துங்க...//

காதல்ல இருக்கிற த்ரில் ஆக்ஷன்ல கூட அவ்ளோ வராது சார்.
நன்றி....

கவிதை காதலன் said...

//தென்றல் said...
/"ஒருவெட்கம் வருதே வருதே.. சிறு அச்சம் தருதே.. "//
பாட்டோட ரிங்டோனை கவனிச்சீங்களா??? நான் எதையுமே
வெளிப்படையா சொல்லலைப்பா....//

ஐஸ்.. ஏன்ப்பா இந்த மாதிரி வெடியை கொளுத்தி போடுற?

//பின்றீங்க.. ரொம்ப ரசிச்ச டயலாக்....//

உனக்கேத்த டயலாக்கைத்தான் உனக்கு பிடிச்சிருக்கு.

கவிதை காதலன் said...

//bhuvi said...
super romance story feel panna vachutinga sir..............
hmmm experience oh...//

நன்றி புவி.. வேலையெல்லாம் எப்படி போகுது?

கவிதை காதலன் said...

//எப்பூடி.. said...
முதல்ப்பகுதியையும் படித்தேன், விறுவிறுப்பாகவும் பதட்டமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.//

நன்றி நண்பரே...

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னங்க இது ரொமான்ஸ வெச்சிக்கிட்டு இந்த மெரட்டு

மெரட்டியிருக்கிங்க? முத்தம் கொடுப்பாங்களா இல்லியான்னு
ரொம்ப தவிச்சுப்போயிட்டேன்!//

தலைவரே.. வாங்க.. வாங்க.. நீங்க வந்தாத்தான் இடமே களை கட்டுது.. ஆமா... எந்த இடத்தில சிரிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே.

கவிதை காதலன் said...

//அன்பரசன் said...
nice story//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அன்பரசன்....

கவிதை காதலன் said...

//ப்ரியமுடன் வசந்த் said...
ரொம்பவே சுவாரஸ்யமா இருந்துச்சு பாஸ் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரைக்கும் உதட்டில் சிறு புன்னகை வந்தது...அது ரொமாண்டிக் உரையாடல்களை காட்சியாக கொண்டுவந்ததால்
சூப்பர் பாஸ்!//


நன்றி வசந்த்....

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
கதையின் முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி செம ஸ்பீட்,செம த்ரில்.ரொமான்ஸ் கதையை வச்சி த்ரில்லிங்ல கலக்கி இருக்க மச்சி.Hats of டா.ஜீவாவின் இதயம் 92 முறை ஓவர்டைம் செய்ததோ இல்லையோ என்னுடையது எகிறி விட்டது.நான் வேற ஏதோ நினைக்க,யாருமே யூகிக்க முடியாத ஒரு முடிவு மச்சி.யார் யாரோ உனக்கு என்ன என்னமோ விருது தராங்க.என்னை
பொருத்தவரைக்கும் நீயும் ஒரு இயக்குனர் இமயம் தான் மச்சி.டேய் மச்சி ஒரு சின்ன request டா.நீ நாளைய இயக்குனர்களுக்கு Try பண்ணு ப்ளீஸ் டா.உன்னுடைய திறமை வீண் போக கூடாது.என்னை போன்ற உன்னுடைய தீவிர ரசிகர்களுக்காவது செய் டா.இந்த முறையும் எப்பவும் போல கலக்கி இருக்க மச்சி.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது.

நிலாப்பெண் said...

வாவ் அருமையான கதை.. ரொம்ப ரசிச்சேன்.. ஸ்வீட் ராஸ்கல் சொன்ன மாதிரி ஏன் நீங்க நாளைய இயக்குனர் ஷோவுல பங்கெடுத்துக்க கூடாது.. இவ்ளோ அழகான நேரேட்டிங் ஸ்டைல் இருக்குல்ல..அதை ஏன் வேஸ்ட் பண்றீங்க...

Vishnu said...

கவிதை காதலன் சார் கலக்குறிங்க...............
கதைல கடைசில வர்ற மேட்டர் (மொட்ட மாடி காதல் ) தவிர..... மத்த எல்லாமே எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு............
என்னமோ போங்க...

Vishnu said...

ஐ யோ .... சொல்ல மறந்துட்டேன் அதே ரிங் டோன் " ஒரு வெட்கம் வருதே வருதே ........."

Vishnu said...
This comment has been removed by the author.
தென்றல் said...

maattiniyeeda manikanda.........

தென்றல் said...

vishnu..... Ungallukkum theriyuma?

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said..///

ஸ்வீட் ராஸ்கல்....டேய்..இதெல்லாம் கொஞ்சம் டூ மச் டா...

கவிதை காதலன் said...

//நிலாப்பெண் said...

வாவ் அருமையான கதை.. ரொம்ப ரசிச்சேன்.. ஸ்வீட் ராஸ்கல் சொன்ன மாதிரி ஏன் நீங்க நாளைய இயக்குனர் ஷோவுல பங்கெடுத்துக்க கூடாது.. இவ்ளோ அழகான நேரேட்டிங் ஸ்டைல் இருக்குல்ல..அதை ஏன் வேஸ்ட் பண்றீங்க...

தேங்க்யூ நிலாப்பெண்... ஆமா ஏன் இப்ப எல்லாம் நீங்க அதிகமா கமெண்ட்'ஏ போடுறது இல்லை?

கவிதை காதலன் said...

// Vishnu said...
கவிதை காதலன் சார் கலக்குறிங்க...
கதைல கடைசில வர்ற மேட்டர் (மொட்ட மாடி காதல்)தவிர.மத்த எல்லாமே எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு.என்னமோ போங்க... //


டேய். என்னை பார்த்தா அப்படியா இருக்கு..நான் நல்ல பையண்டா..
//ஐயோ. சொல்ல மறந்துட்டேன் அதே ரிங் டோன் " ஒரு வெட்கம் வருதே வருதே"//

நானே மாட்டிக்குறேனே...எப்படியெல்லாம் திங்க் பண்றாங்கப்பா...

கவிதை காதலன் said...

//தென்றல் said...
maattiniyeeda manikanda.........//

ஆமா..மாட்டிக்கிட்டேன்.. இனிமேல் பாருங்க...........

கவிதை காதலன் said...

தென்றல் said...
vishnu..... Ungallukkum theriyuma?

அவனுக்கா தெரியாது....காத்து போகமுடியாத இடத்துல கூட கமாண்டோ போவானாம்...

Gowri said...

Sema Romantic Story But Idha Endha Move La Irundhu copy adichenga?

இதையும் படியுங்கள்