Wednesday, November 10, 2010

ஒரு காதல் இங்கே காதலிக்கிறது"டேய்... இப்பத்தண்ணி வருதா பாரு..."

"இல்லப்பா.... நீங்க அந்த லெஃப்ட் சைட்'ல இருக்கிற குழாய்க்கு வர்ற கனெக்ஷனை செக் பண்ணி பாருங்க..."

சரிடா..

அப்பா சண்முகம் மொட்டை மாடியின் மேலே அடைப்பட்டிருக்கும் குழாயை சரி செய்தபடி இருக்க.. வீட்டின் உள்ளே இருந்தபடியே அப்பாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லியபடியே கீழே உள்ள குழாயை சரி செய்துக்கொண்டிருந்தான் ஜீவா. பக்கத்தில் மேலிருந்து கீழாக ஒரு நீண்ட பைப் தொங்கிக்கொடிருந்தது..

"சாந்தி ஒரு கப் காஃபி கொண்டு வா.. "
என்று அவர் மேலிருந்து குரல் கொடுக்க..

"இருங்க.. துணி காய வைக்கணும்.. வரும் போது கொண்டு வர்றேன் "என்று அம்மா கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.

அம்மா கிச்சனிலிருந்து ஒரு கையில் காபி டம்ளரையும், மறு கையில் துணி பக்கெட்டையும் சுமந்து கொண்டு ஹாலின் வெளிப்புறம் உள்ள படிக்கெட்டில் ஏறப்போனாள். ஜீவா குழாயை பிடித்தபடி, டிவியின் மீது கவனத்தை வைத்துக்கொண்டிருந்தான். டிவியில் மாதவன் ஷாலினியோடு காதல் சடுகுடு ஆடிக்கொண்டிருந்தார். மெலிதாய் புன்னகைத்தவாறே தன் காதல் நினைவுகளில் மெல்ல மூழ்கிக்கொண்டிருந்த ஜீவாவை, அம்மாவின் குரல் கலைத்து போட்டது

"டேய்.. டீவியே பார்த்துக்கிட்டு இருக்காதே.. நான் துணி காயப்போட்டுட்டு அப்பாவுக்கு காஃபி கொடுத்திட்டு வந்திடறேன். அவரை கத்த வைக்காம, அவர் சொல்ற மாதிரி குழாயை அட்ஜெஸ்ட் பண்ணு.சரியா..??"

அம்மாவை முறைத்துப்பார்த்தபடியே தலையாட்டிவிட்டு மறுபடியும் டிவியில் புதைந்தான்.. காலிங்பெல் தன் குரலின் பலத்தை காட்டியது..

"சே.. ஒரு நல்ல மூடான பாட்டு பார்க்கும் போதுதான் யாராவது வந்து தொலைவாங்க... இருங்க வர்றேன்" என்று குரல் கொடுத்தபடியே, பைப்பை கீழே போட்டுவிட்டு ஜீவா வாயிற்கதவை நோக்கி போனான்.

வாயிற்கதவை திறந்த அந்த நொடியில் சற்றே மூர்ச்சையாகித்தான் போனான் . வெளியே தேவதையாய் நின்றிருந்தாள் நிலானிகா.. வெளிர் பச்சைநிற சுடிதாரில் நெட் துப்பட்டாவுடன் கண்களில் டயனமைட் வீச்சை சுமந்தபடி புன்முறுவலித்தாள். தேவதைகள் பச்சை டிரஸ்'ஸில் கூட வருவார்கள் என்று அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.

ஆண்ட்டி இல்லையா? சற்றே தயக்கத்துடன் கேட்டாள்.

"இருக்காங்க" ஜீவா சற்றே தடுமாறினான்.

வெறும் மைக்ரோ மேன் பனியனும் ஷார்ட்ஷுமாய் ஒரு பெண்ணில் முன்னால் நிற்கிறோமே என்ற கூச்சத்தில் நெளிந்தபடியே தயங்கினான்.

"ஆண்ட்டி" என்று ஜீவாவை உள்ளே தள்ளிக்கொண்டு நேராய் கிச்சன் நோக்கி போனாள்.

"எங்கே ஆண்ட்டியை காணேம்?

"அம்மா மேல அப்பாவுக்கு காஃபி கொடுக்க போயிருக்காங்க.. "என்று ஒருவித பதட்டத்துடனே சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துக்கொண்டே சொன்னான்..

ஜீவா சொன்ன அடுத்த நொடி நிலானிகா மெல்ல நடந்து ஹாலை கடந்து சென்று மேலே எட்டிப்பார்த்தாள். என்ன செய்கிறாள் என்று ஜீவா தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து வேகமாக நடந்து ஜீவாவின் அருகில் வந்தாள்.

"அப்போ ரெண்டு பேரும் மேல இருக்காங்க.

"ம்.. " அவளைப்பார்க்காமலே ஹாலை எட்டிப்பார்த்தபடி பதில் சொன்னான் ஜீவா...

ரெண்டு பேரும் மேலே இருக்காங்களா?? என்று அவன் அருகில் வந்து "அப்போ கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணலாமா? என்று கண்ணடித்தபடியே.... மெதுவாக அவன் தோளின் மேல் தன் இரண்டு கைகளையும் பூமாலை போல் போட்டுக்கொண்டாள்....

அதிர்ச்சியில் ஜீவா தடுமாற ஆரம்பித்த போது...


தொடரும்.......


இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்
22 comments:

கவிப்ரியன் said...

ஏன்ய்யா.. இந்த மாதிரி டென்ஷனாக்குறீங்க.. சீக்கிரம் கண்டினியூ பண்ணுங்க...

கவிப்ரியன் said...

//தேவதைகள் பச்சை டிரஸ்'ஸில் கூட வருவார்கள் என்று அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.//


அனுபவிச்ச மாதிரியே எழுதி இருக்கீங்களே

வெறும்பய said...

இப்படியெல்லாம் பக்காவா சொல்லிட்டு தொடரும் போட்டுட்டீங்களே.. சீக்கிரம் அடுத்த பாகத்த போடுங்க...

bhuvi said...
This comment has been removed by the author.
bhuvi said...

story semaiya iruku sikaram continue pannunga.

enna mathiri neraiya per wait pannuvanga.
but sir innum neenga alaipayuthe filma vidala

super..........

bhuvi said...

story semaiya iruku sikaram continue pannunga.

enna mathiri neraiya per wait pannuvanga.
but sir innum neenga alaipayuthe filma vidala

super..........

bhuvi said...
This comment has been removed by the author.
ப்ரியமுடன் வசந்த் said...

லவ்லி தொடக்கம் !

Chitra said...

தலைப்பே கவிதை போல இருக்கிறது. அருமை. தொடருங்கள்.

சிவா said...

எந்த இடத்தில தொடரும் போடுறதுன்னு இல்லை.... ஹ்ம்ம்.... அடுத்த பதிவு எங்கே??? எப்போ>>

Balaji saravana said...

//அதிர்ச்சியில் ஜீவா தடுமாற ஆரம்பித்த போது//
ஜீவாவுக்கு அதிர்ச்சி.. எங்களுக்கு எதிர்பார்ப்பு.. :)
வெய்டிங் பாஸ்!

கவிதை காதலன் said...

//கவிப்ரியன் said...
ஏன்ய்யா.. இந்த மாதிரி டென்ஷனாக்குறீங்க.. சீக்கிரம் கண்டினியூ பண்ணுங்க...
//தேவதைகள் பச்சை டிரஸ்'ஸில் கூட வருவார்கள் என்று அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.//
அனுபவிச்ச மாதிரியே எழுதி இருக்கீங்களே//

இதுல கொஞ்சம் என் அனுபவமும் இருக்கு கவிப்பிரியன். ஆனா அது வேற மாதிரி..

கவிதை காதலன் said...

//வெறும்பய said...
இப்படியெல்லாம் பக்காவா சொல்லிட்டு தொடரும் போட்டுட்டீங்களே.. சீக்கிரம் அடுத்த பாகத்த போடுங்க...//

நன்றி நண்பரே.. சீக்கிரம் அடுத்த பதிவு..

கவிதை காதலன் said...

//bhuvi said...
story semaiya iruku sikaram continue pannunga.
enna mathiri neraiya per wait pannuvanga.
but sir innum neenga alaipayuthe filma vidala
super..........//

ஹாய் புவி.. எப்படி இருக்கீங்க? கதை சீக்கிரம் வரும்.. அலைபாயுதே' படத்தை மறக்க முடியுமா??

கவிதை காதலன் said...

//ப்ரியமுடன் வசந்த் said...
லவ்லி தொடக்கம் !//
நன்றி வசந்த்..

கவிதை காதலன் said...

//சிவா said...
எந்த இடத்தில தொடரும் போடுறதுன்னு இல்லை.... ஹ்ம்ம்.... அடுத்த பதிவு எங்கே??? எப்போ>>//

அடுத்த பதிவு நாளைக்கு கண்டிப்பா வரும் சிவா.. வருகைக்கு மிக்க நன்றி

கவிதை காதலன் said...

//Balaji saravana said...
//அதிர்ச்சியில் ஜீவா தடுமாற ஆரம்பித்த போது//
ஜீவாவுக்கு அதிர்ச்சி.. எங்களுக்கு எதிர்பார்ப்பு.. :)
வெய்டிங் பாஸ்!//

ஹாய் பாலாஜி.. மிக்க நன்றி கருத்துக்கு. ஜீவாவை விட நீங்க ரொம்ப அதிர்ச்சி அடைஞ்சிட்டீங்க போல..

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
ஏன்டா இது நியாயமா?.தொடரும் போட உனக்கு வேற இடம் கிடைகல.சரி அடுத்த பதிவு எப்போ சீக்கிரம் எழுது.ஆமா ஒரு சந்தேகம், இது உண்மை கதையோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு,அந்த பையன் ஜீவா, நீயா இருக்குமோனு எனக்கு சந்தேகம்.ஏன்னா அந்த பையன் பாக்குற படம் அலைபாயுதே,நிலானிகா உன்னுடைய புனை பெயர்.அது தான்.என்னமோ போடா.

sullaan said...

hey... Ithellam too much pa. Thodarum poda ungalukku vera idame kidaikkalaiyaa.. Pls continue the story.....

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
Hi மச்சி,
ஏன்டா இது நியாயமா?.தொடரும் போட உனக்கு வேற இடம் கிடைகல.சரி அடுத்த பதிவு எப்போ சீக்கிரம் எழுது.ஆமா ஒரு சந்தேகம், இது உண்மை கதையோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு,அந்த பையன் ஜீவா, நீயா இருக்குமோனு எனக்கு சந்தேகம்.ஏன்னா அந்த பையன் பாக்குற படம் அலைபாயுதே,நிலானிகா உன்னுடைய புனை பெயர்.அது தான்.என்னமோ போடா//


பார்த்தி, ஜீவா மேலயும் உனக்கு டவுட், நிலானிகா மேலையும் உனக்கு டவுட்.. யாராவது ஒருத்தர் மேல டவுட் படு மச்சி...

கவிதை காதலன் said...

//sullaan said...
hey... Ithellam too much pa. Thodarum poda ungalukku vera idame kidaikkalaiyaa.. Pls continue the story.....//


சுள்ளான் சார் கதை தொடருகிறது

பதிவுலகில் பாபு said...

செம ரொமான்ஸா இருக்குங்க..

நிஜமாவே நடந்தமாதிரி தெரியுதே..:-))

அடுத்தப் பாகத்தைப் போய் படிக்கறேன்..

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..

இதையும் படியுங்கள்