Tuesday, November 9, 2010

மைனா - சில ஆச்சர்யங்கள்

நான் விமர்சனங்கள் எப்போதாகத்தான் எழுதுவேன். அதுவும் என்னை பாதித்திருந்தால் மட்டுமே. அப்படி ஒரு பாதிப்பு நேற்று ஏற்பட்டது. மைனா திரைப்படம் பார்த்ததன் விளைவுதான் அது.. டிவியில் டிரைலர் பார்க்கும் போதும் சரி.. பிரபலங்கள் அந்தப்படத்தைப்பற்றி பேசும் போதும் சரி.. ரொம்ப ஓவரா பேசறாங்களோ என்றுதான் நினைத்திருந்தேன், இந்தப்படத்தை பார்க்கும் வரை... ஆனால் அவர்கள் பேசியது நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

மைனாவின் ஒன்லைன் மிக சாதாரணமானது. ஒரு குற்றவாளியை பிடிக்க புறப்படும் ஒரு போலீஸ் அதிகாரி அந்த குற்றவாளிக்காகவே தான் குற்றவாளியாய் மாறுவது....

போலீஸ் அதிகாரியோடு கையில் விலங்கிட்டபடி நடந்து செல்லும் எத்தனையோ குற்றவாளிகளை நாம் கவனித்திருப்போம். ஆனால் அவர்களுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை.. ஒரு காதல்.. ஒரு எமாற்றம்.. என அத்தனையையும் கலந்து மறக்க முடியாத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆரம்பத்தில் இதுவும் இன்னொரு கிராமத்து படமோ என்ற அசுவாரஸ்யமாய் அமர்ந்திருக்கும் போது, தம்பி ராமையாவின் வருகைக்கு பின்னால் படம் டாப்கியரில் எகிறுகிறது. சொல்லப்போனால் படத்தின் தூண் இவர்தான். ஒவ்வொரு காட்சியிலும் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். அதுவும் புலியின் போட்டோவைப் பார்த்துவிட்டு இவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் வயிற்றுவலிக்கு உத்திரவாதம். படம் முழுவதும் ஹீரோவை சுற்றி சுற்றி வந்தாலும் ஹீரோ நம் மனதில் பதிய மறுக்கிறார்.ஆனால் ஹீரோயின்.. செம அழகு.. துளி கூட மேக்கப் இல்லாமல் வரும் அழகே தனி தான். ஹீரோயினுக்கு கேமரா மேன் ரசித்து ரசித்து கேமராகோணங்கள் அமைத்திருப்பார் போலும்.. ஒவ்வொரு குளோசப்பிலும் அவ்வளவு அழகாய் தெரிகிறாய். அவரது பருக்கள் கூட ரசனையாய்தான் இருக்கின்றன. ஹீரோயின் படிப்பதற்காக ஹீரோ ஒரு பாட்டிலில் மின்மினி பூச்சியை அடைத்துக்கொண்டு வந்து கொடுக்கும் காட்சியும், அந்த ஒரு நொடியில் ஹீரோயின் அவரை இழுத்து முத்தம் கொடுக்கும் காட்சியும் பரவசம்.. இப்படி ஒரு ஹீரோயினை கட்டிகொடுக்க மறுக்கும் கதாநாயகியின் அம்மாவை ஹீரோ அடிப்பதில் தப்பே இல்லை.

இதுவரை தமிழ்சினிமா யூனிட் போயிருக்காத லொக்கேஷன்களை எல்லாம் தேடிப்பிடித்து செல்லுலாய்டில் பதிவு செய்திருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். லொக்கேஷன்கள் விழிகளை விட்டு அகல மறுக்கின்றன. இந்தமாதிரி ஒரு கதைக்களத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்திகொடுப்பது இந்த லொக்கேஷன்கள்தான். கேமராமேன் இந்தப்படத்திற்கு முன் புகைப்படக்கலைஞராய் இருந்தவராம். ஃபோட்டோகிராஃபி டேஸ்ட் ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. குறிப்பாய் ஹீரோயினின் இமைகள் தொட்டாசிணுங்கியின் மீது படும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஷாட்.. மிக ரசித்த ஷாட் அது..

ஹீரோவின் மீது இன்ஸ்பெக்டருக்கும், வார்டனுக்கும் இருக்கும் கோபத்தின் டெம்ப்போ மாறுவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் அந்த விபத்து காட்சி டாப்கிளாஸ். அது ஜூராஸிக் பார்க் படத்தில் பார்த்ததாகவே இருந்தாலும், மிரட்சியை ஏற்படுத்துகிறது. எனக்கு தெரிந்து எந்திரன் படம் பார்க்கும் போது ஏற்பட்ட ஒட்டுமொத்த பிரமிப்பும், இந்த ஒரு விபத்துகாட்சியில் தெரிந்தது. இசை பெரிதாய் கவரவில்லை என்றாலும், படத்திற்கு அது உதவியாய் இருக்கிறது. மைனா.. மைனா பாடல் அட்டகாச மெலோடி.. மற்றபடி பாடல்கள் பெரிதாக கவரவில்லை..இயக்குனர் பிரபு சாலமன்.... லீ, கொக்கி, லாடம் என வித்தியாசமான களங்களில் தொடர்ந்து படம் எடுக்கும் இவரது ஆர்வம் மைனாவில் இன்னும் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறது. நுணுக்கமான கதாபாத்திரங்கள் அதற்கான பின்னணி என பக்காவான ஸ்கிரிப்ட் ஒர்க் இவரது பலம். அந்த இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு இவர் தேர்வு செய்திருக்கும் பெண், அட்டகாசம்.. நமக்கே ஒரு காட்சியில் அந்தப்பெண்ணை ஓங்கி அறைய வேண்டும் போல் இருக்கிறது.

மண்டை ஓடு மகாதேவனாக வரும் சிறுவன், ஹீரோவின் கையை அவிழ்த்துவிட சொல்லும் மலையாள ஹோட்டல் ஓனர், வைத்தியமும் பார்த்து மருந்துக்கும் பணம் கொடுக்கும் பல் வைத்தியர், ஹீரோயினின் அம்மா, ஹீரோவின் அப்பா என ஒவ்வொரு கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அப்படியே மனதில் உறைகிறார்கள். ஹீரோ ஜெயில் இருந்து தப்பித்தபின் ஒவ்வொரு போலீஸ் அதிகாரியும் புலம்புவது இதுவரை எந்த சினிமாவிலும் பார்த்திராத யதார்த்தம். அதே போல், திரும்பவும் ஹீரோவை ஜெயிலுக்கு அழைத்து வரும்போது அவர்கள் கோபப்பட்டு அவனை அடிக்க முயல்வது இன்னொரு ரியலிஸ்டிக் சீன்.

பொதுவாக விபத்து ஏற்படுவதற்கு என்னென்னவோ காரணம் சொல்வார்கள், ஆனால் விபத்து ஏற்படுவதற்கு ஒரு சின்ன கவனச்சிதறலே போதுமானது என்ற இயக்குனரின் சிந்தனை சபாஷ் போட வைக்கிறது. ஹீரோவை திரும்பவும் அழைத்துக்கொண்டு ஜெயிலுக்குள் செல்லும் காட்சியில் அநியாயத்துக்கு டெம்போ.. நமக்கே படபடப்பாய் வருகிறது. ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்ற பில்டப் கொடுத்து விட்டு அதை மொக்கையாக்காமல், கொடுத்த பில்டப்பைவிட ஏற்படும் விபரீதம் யாருமே எதிர்பாராதது.

பொதுவாக இது போன்ற கதைகளில் ஹீரோ பழிவாங்ககிளம்புவார். ஆனால் இந்தப்படத்தில் அப்படி இல்லை.. ஏன் ஹீரோ பழிவாங்கவில்லை என்ற கேள்விக்கு படத்தின் முற்பகுதியிலேயே இயக்குனர் சூசகமாக பதில் சொல்லி இருப்பார். ஹீரோயினுக்கு காலில் ஆணி குத்தியவுடன், ஹீரோ ஒரு டயலாக் சொல்வார்.. "அப்பவே நான் செத்துட்டேன் சார்".

காலில் ஆணி குத்தியதுக்கே ஹீரோ சாவார் என்றால்.. ஹீரோயினின் இந்த நிலையைப்பார்த்து????? கிளைமாக்ஸை சுருக்கும் படி கமல்ஹாசன் சொன்னதாக ஒரு செய்தி.. ஆனால் இந்த கிளைமாக்ஸ் இல்லை என்றால் படமே இல்லை.. அந்த இன்ஸ்பெக்டர் எடுக்கும் முடிவுதான் படத்தையே தூக்கி நிறுத்துகிறது. மனிதநேயம் என்பது காப்பாற்றுவதில் மட்டும் இல்லை. அழிப்பதிலும் உண்டு என்று ஒரு மாறுபட்ட சிந்தனை கைத்தட்ட வைக்கிறது.

லவ் பண்ணுங்க சார்.. லைஃப் நல்லா இருக்கும்...


இந்தப்பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்..

36 comments:

dineshkumar said...

நல்ல விமர்சனம் நான் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிடுகிறேன் நண்பரே

டோரா said...

என்னை ரொம்ப பாதிச்சிருந்துச்சி இந்தப்படம். குறிப்பா சொல்லணும்ன்ன.. அந்த இன்ஸ்பெக்டரோட மனைவி கேரக்டர்

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல விமர்சனம் பார்த்துடறேன்..

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. So நீ சொல்லவதை போல் தான் நானும் நினைத்தேன்,ஆளாளுக்கு அதுவும் சாதித்த இயக்குனர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து படத்தை பற்றி புகழ்வதைப்பற்றி,என்ன டா இப்படி பில்ட் அப் விடுறாங்கனு.ஆனால் நீ நேற்று மெசேஜ் அனுப்பியதோடு மட்டும் இல்லாமல் நேரில் வந்து படத்தை பற்றி சொன்னதும்,படத்தை பார்த்து விட்டு வண்டியில் வரும் போது என்னை அறியாமல் 2 முறை accident செய்திருப்பேன் என்று சொன்னதும்,என்னை யோசிக்க வைத்து விட்டது.நீ அவ்வளவு சீக்கிரத்தில் எந்த படத்தையும் இவ்வளவு புகழ மாட்டாய்.அது எனக்கு நன்றாகவே தெரியும்.அது மட்டும் இல்லாமல் காலையில் mobile ரீ சார்ஜ் செய்வதற்காக கடைக்கு சென்றேன் அங்கு மைனா படத்தி பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது.படத்தை பற்றி ஆஹா ஒஹோ என்றும்,படம் நிச்சயம் பல விருதுகளை குவிக்கும் என்றும் பலர் பேசிக்கொண்டிருந்தனர்.படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகவும் அதிகமாகிவிட்டது.நிச்சயம் இன்னும் 2 நாட்களுக்குள் பார்த்து விடுகிறேன்.உன்னை இவ்வளவு பாதித்த படம் என்னையும் அதிகமாக பாதிக்கும் என்று நம்புகிறேன்.அருமையான விமர்சனம் மச்சி.உன் இந்த விமர்சனமே படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது.

nadhiya said...

நான் நினைச்சிட்டே இருந்தேன் நீங்க இந்தப்படத்தைப்பத்தி எழுதுவீங்கன்னு..... நான் இந்தப்படத்தை ஒரு மாசத்துக்கு முன்னாடியே ப்ரிவியூ ஷோ பார்த்திட்டேன்.. என்னோட எல்லா ஃப்ரெண்ட்ஸுக்கும் இந்த படத்தை பார்க்க சொல்லி நான் அப்பவே ரெகமெண்ட் பண்ணேன். ரொம்ப ரொம்ப ரொம்ப உணர்வு பூர்வமான படம். அதுவும் க்ளைமேக்ஸ் சான்ஸே இல்லை.. அவங்களோட மரணத்தை விட, அந்த இன்ஸ்பெக்டர் எடுக்கும் முடிவு இன்னும் உலுக்கிடுச்சி. விபத்து காட்சி ஜுராஸிக் பார்க் படத்தை நியாபகப்படுத்தினாலும்..தமிழ்ல இப்படி ஒரு காட்சி எடுக்க பெரிய தைரியம் வேணும். இந்தப்படத்துல உழைச்ச எல்லாருக்கும் வேலை செய்யும் போது ரொம்ப பெரிய அலுப்பா இருந்திருக்கும். ஆனா இப்போ இந்தப்படத்திற்கு கிடைக்கக்கூடிய மரியாதைகள், அவங்கபட்ட எல்லா கஷ்டத்தையும் மாற்றி இருக்கும். நல்ல சினிமாவை ரசிகர்கள் எப்பவும் கைவிட மாட்டாங்க அப்படிங்கிறதுக்கு இந்த படம் ஒரு உதாரணம். பிரபு சாலமன் தமிழ்ல ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பிடிச்சிருக்கார். மிக அழகான விமர்சனம்.

nadhiya said...
This comment has been removed by the author.
nadhiya said...

லைட்டிங்கே இல்லாம இவ்ளோ அழகா அவுட்டோர் ஷாட்ஸ் எடுக்க முடியுமா? பிரமிக்க வெச்சிருக்கார் கேமராமேன். தொட்டாச்சிணுங்கியும் அந்த பெண்ணோட இமையும் சந்திக்கிற அந்த ஷாட் ஹைக்கூ.. ரொம்ப சாதரணமா ஆரம்பிக்கிற கதை, போகப்போக நம்மையும் ஹீரோ ஹீரோயினை சுமந்துட்டு போற மாதிரி நம்மையும் தூக்கி சுமந்திட்டு போயிடுது.. இன்ஸ்பெக்டரை காப்பற்றினதுக்கு அப்புறம் அவர் கையெடுத்து கும்பிடுற காட்சி ரொம்ப பிரமாதமா இருந்துச்சி.. அதுக்கு அப்புறம் முகமே தெரியாத செந்தாமரை கேரக்டரை அம்மான்னு கூப்பிட்டதுக்கு அப்புறம் அந்த வார்டனுடைய எக்ஸ்பிரஷன்ஸ்.. அமேஸிங் பர்ஃபாமென்ஸ்... அங்காடித்தெருவுக்கு அப்புறம் ஒரு திருப்தியான படம். பாடல்கள்'ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

கவிதை காதலன் said...

//dineshkumar said...
நல்ல விமர்சனம் நான் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிடுகிறேன் நண்பரே//

பாருங்க தினேஷ்.. ரொம்ப அருமையான படம்..

கவிதை காதலன் said...

//டோரா said...
என்னை ரொம்ப பாதிச்சிருந்துச்சி இந்தப்படம். குறிப்பா சொல்லணும்ன்ன.. அந்த இன்ஸ்பெக்டரோட மனைவி கேரக்டர்//
கரெக்ட்.. அந்த கேரக்டர்தான் படத்தோட உயிரே...

கவிதை காதலன் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
நல்ல விமர்சனம் பார்த்துடறேன்..//
மிஸ் பண்ணாம பாருங்க ரமேஷ்..

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //

மச்சி ரொம்ப நாள் கழிச்சி கமெண்ட் போட்டு இருக்க.. ஸ்வீட் ராஸ்கல் ஏன் கமெண்ட் போடலைன்னு நிறைய பேரு கேட்டுட்டே இருந்தாங்க.. கண்டிப்பா பாரு மச்சி.. உனக்கு ரொம்ப பிடிக்கும்.

கவிதை காதலன் said...

ஹாய்.. நதியா என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் ? ரொம்ப நுணுக்கமா ரசிச்சிருக்கீங்க போல.. ஒரு ரசனையான படம் வெற்றி பெரும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

nadhiya said...

நீங்க எல்லாரையும் பத்தி சொன்னீங்க. இந்தப்படம் இவ்ளோ தூரம் பேசப்படுறதுக்கு ரெண்டு பேர் முக்கிய காரணம்.. அவங்களைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே.. யெஸ்.. கல்பாத்தி அகோரம், ரெட் ஜெயண்ட் உதயநிதியும் தான்.. அவங்க ரெண்டு பேரோட சப்போர்ட் இந்தப்படத்துக்கு ரொம்ப முக்கியமானது..

கோவை ஆவி said...

உங்க விமர்சனம் படிச்சதுக்கு அப்புறம் படம் பாக்கனும்கிற ஆவல் அதிகமாயிடுச்சு!!

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனம் டாப்.இதன் மூலம் பதிவுலக சினிமா விமர்சகர்களுக்கு சவால் விட்டிருக்கீறார் கவிதைக்காதலன்,கபர்தார்

(ஹி ஹி ஏதோ நம்மாலானது)

அன்பரசன் said...

நல்ல விமர்சனம்..
நான் இன்னும் பார்க்கவில்லை..

Naisvyn lucas said...

Dear Friends,

I have seen this movie couple of days back after seeing reviews of Kamal and other directors.
Photography and selection & acting of actors ( all the characters)is really good.But overall, this movie is a copy of Paruthiveeran and BGM is not good. Screenplay is also not good as some of the shots were put into the movie purposeful to move the movie forward and climax is sothappal. Movie is ok ( one time watch) if there was no Paruthiveeran earlier.

Dhosai said...

ellam ok. neenga love panurengala..?

THOPPITHOPPI said...

நல்ல விமர்சனம்.

Chitra said...

மனிதநேயம் என்பது காப்பாற்றுவதில் மட்டும் இல்லை. அழிப்பதிலும் உண்டு என்று ஒரு மாறுபட்ட சிந்தனை கைத்தட்ட வைக்கிறது.


..... interesting thought!

...... good review!

சிவா said...

நல்ல விமர்சனம்! நல்ல ரசனை உங்களுக்கு

கவிதை காதலன் said...

//nadhiya said...
நீங்க எல்லாரையும் பத்தி சொன்னீங்க. இந்தப்படம் இவ்ளோ தூரம் பேசப்படுறதுக்கு ரெண்டு பேர் முக்கிய காரணம்.. அவங்களைப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே.. யெஸ்.. கல்பாத்தி அகோரம், ரெட் ஜெயண்ட் உதயநிதியும் தான்.. அவங்க ரெண்டு பேரோட சப்போர்ட் இந்தப்படத்துக்கு ரொம்ப முக்கியமானது //


ஆமாம் நதியா நான் அவங்களை குறிப்பிட மறந்திட்டேன். மன்னிக்கவும்..

கவிதை காதலன் said...

//கோவை ஆவி said...
உங்க விமர்சனம் படிச்சதுக்கு அப்புறம் படம் பாக்கனும்கிற ஆவல் அதிகமாயிடுச்சு!!//

கண்டிப்பா பாருங்க. நல்ல படம்..

கவிதை காதலன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
விமர்சனம் டாப்.இதன் மூலம் பதிவுலக சினிமா விமர்சகர்களுக்கு சவால் விட்டிருக்கீறார் கவிதைக்காதலன்,கபர்தார்
(ஹி ஹி ஏதோ நம்மாலானது)//


செந்தில் சார் ஏன் இந்த கொலைவெறி??

கவிதை காதலன் said...

//அன்பரசன் said...
நல்ல விமர்சனம்..
நான் இன்னும் பார்க்கவில்லை..//

நல்ல படம் அன்பரசன்.. மிஸ் பண்ணாதீங்க..

கவிதை காதலன் said...

//Naisvyn lucas said... //


நைஸ்வின் சார்... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.. உங்களைப்பொருத்தவரைக்கும் இந்தப்படம் பருத்திவீரனை நியாபகப்படுத்தி இருக்கலாம். ஆனால் மைனாவில் இருக்கும் ஒரு காட்சி அப்படியே பருத்திவீரனில் இருக்கிறது என்று ஒரு காட்சியையாவது குறிப்பிட முடியுமா? உங்களுக்கு கிளைமேக்ஸ் பிடிக்கவில்லை போலும். ஆனால் எனக்கு க்ளைமேக்ஸ் தான் கைதட்டவைத்தது. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்..

கவிதை காதலன் said...

//Dhosai said...
ellam ok. neenga love panurengala..?//

லவ் பண்ணாம இதெல்லாம் எப்படி சாத்தியம் சார்?

கவிதை காதலன் said...

//THOPPITHOPPI said...
நல்ல விமர்சனம்.//

மிக்க நன்றி.

கவிதை காதலன் said...

//Chitra said...
மனிதநேயம் என்பது காப்பாற்றுவதில் மட்டும் இல்லை. அழிப்பதிலும் உண்டு என்று ஒரு மாறுபட்ட சிந்தனை கைத்தட்ட வைக்கிறது.
..... interesting thought!
...... good review!//

சித்ரா மேடம். முதல்முறை பெரிய கமெண்ட் போட்டிருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சி..

கவிதை காதலன் said...

//சிவா said...
நல்ல விமர்சனம்! நல்ல ரசனை உங்களுக்கு//

நன்றி சிவா.. படம் பார்த்திட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விமர்சனம் அருமை! ரசனையாக இருக்கிறது!
நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெகு ரசனையான ப்ளாக் சார், வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்துக்கள் வசீகரமாக உள்ளன!

கவிதை காதலன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வெகு ரசனையான ப்ளாக் சார், வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்துக்கள் வசீகரமாக உள்ளன!//

மிக்க நன்றி சார்.. தொடர்ந்து படியுங்கள்.. அடிக்கடி உங்களை எதிர்பார்க்கிறேன்.. உங்க பிளாக்ல எப்போ கமெண்ட் போடலாம்னு பார்த்தாலும் 100 கமெண்ட், 150 கமெண்ட்'ன்னு இருந்தா நாங்க எல்லாம் என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவிதை காதலன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வெகு ரசனையான ப்ளாக் சார், வாழ்த்துக்கள்! உங்கள் எழுத்துக்கள் வசீகரமாக உள்ளன!//

மிக்க நன்றி சார்.. தொடர்ந்து படியுங்கள்.. அடிக்கடி உங்களை எதிர்பார்க்கிறேன்.. உங்க பிளாக்ல எப்போ கமெண்ட் போடலாம்னு பார்த்தாலும் 100 கமெண்ட், 150 கமெண்ட்'ன்னு இருந்தா நாங்க எல்லாம் என்ன பண்றது?///

இன்னிக்குக் காலையில இருந்து உங்க ப்ளாக்குல தான் இருக்கிறேன். இனி அடிக்கடி வருவேன்.

என்னது 100, 150 கமென்ட்டுங்ளா? அத விடுங்க சார், நம்ம பயபுள்ளைக அப்பிடித்தான்! ஒரு ஆட்டம் ஆடித்தான் அடடங்க்குவாய்ங்க, நீங்க பயப்படாம வந்து போங்க சார்!

மாதேவி said...

நல்ல விமர்சனம்.படம் பார்க்கிறேன்.

சராசரி மனிதன் said...

விமர்சனம் அருமை! படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது !

நீங்கள் எவ்விதமாய் மைனா படத்தை ரசித்தீர்களோ அவ்விதமாக உங்கள் விமர்சனத்தை நான் ரசித்தேன் !


முடிந்தால் என் வ‌லைப்பூவை எட்டிப் பாருங்கள்!

http://saraasarimanithan.blogspot.com/

இதையும் படியுங்கள்