Tuesday, November 30, 2010

நுரையீரலில் ஒரு லப்டப்

Love Images Upload Photos Funny PicsLove Images Free Pics Love PicturesFree Pics Free Image Hosting View PhotosFree Pics Free Image Hosting Photo SharingView Photos Love Pics Funny Picsஇந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.
Saturday, November 27, 2010

நந்தலாலா - விமர்சனம்

மிஷ்கின் மீது எனக்கு எப்பவும் ஒரு மரியாதை உண்டு. அவர் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமே இல்லை. பத்திரிக்கைகளில் எழுதக்கூடிய சினிமா கட்டுரைகளில் நான் எத்தனையோ முறை அஞ்சாதே திரைப்படத்தை சிலாகித்து குறிப்பிட்டு இருக்கிறேன். இதோ நான் மிகவும் ஆவலாய் எதிர்பார்த்த நந்தலாலா..


தன் தாயின் மீது அளப்பரிய பாசம் வைத்திருக்கும் ஒருவனும், தன் தாயின் மீது தீரா கோபம் கொண்ட ஒருவனும் தங்கள் தாயைத்தேடி போகிறார்கள். இறுதியில் பாசம் வைத்திருந்தவன் தாயின் மீது கோபத்தையும், கோபம் வைத்திருந்தவன் தாயின் மீது பாசத்தையும் சுமந்து கொண்டு, கூடவே தங்களுக்கு இன்னொரு தாயை சுமந்து கொண்டு வருவே கதை. கேட்கவே பிரமித்து போகிற ஒன்லைன். அதற்கு மிஷ்கின் கொடுத்திருக்கும் உயிர், கைகுலுக்கி பாராட்ட வேண்டியது.

பொதுவாக மிஷ்கினுக்கு ரிவர்ஸிபிள் கேரக்டரைசேஷன் என்றால் மிகப்பிடிக்கும் போல, ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறதோ, இறுதியில் அந்த கதாபாத்திரம் அதற்கு எதிர்திசையில் நோக்கி பயணிக்கும், அஞ்சாதேவில் இரண்டு நண்பர்கள். இதில் தாயை தேடும் இரண்டு குழந்தைகள்

ஒரு பயணத்தின் நடுவே பாஸ்கர்மணியாக வரும் மிஷ்கினும், அகியாக வரும் அஸ்வத்தும் சந்திக்கும் மனிதர்களே இந்த கதையின் திரைக்கதை பலம் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு ஆச்சர்யம்। இளநீர் திருடியதற்காக துரத்தும் தாத்தாவிற்கே இளநீர் வெட்டி கொடுப்பது, ஆங்கிலத்தில் பேசினால் அமைதியாகிவிடும் போலிஸ், தங்கள் சங்கடங்களை ஆங்கிலத்தில் பகிர்ந்துகொள்ளும் புதுமணத்தம்பதிகள், பீர்பாட்டிலோடு அலையும் இளைஞர்கள், ஜாதிகலவரத்தில் தன்னந்தனியாக ஒரு பெண்ணை கற்பழிக்க முயலும் மூவர் என மிஷ்கினின் பாத்திரப்படைப்புகள் எல்லாமே உயர்தரம்।

அகியின் தாயை மிஷ்கின் சந்தித்தவுடன் வசனமே இல்லாமல், டாப் ஆங்கிளில் காட்டப்படும் காட்சி இனி சினிமா மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெறும்। ஒரு வரி வசனம் கூட இல்லாமல், ஒட்டுமொத்த கதையையும் அங்கே கேமரா சொல்லும் போது பிரமிப்பு வராமல் இருக்க முடிவதில்லை. அந்தப்பெண்ணை ஓங்கி அறைகையில் தியேட்டர் கைதட்டில் ஆர்ப்பாரிக்கிறது.

இளையராஜானின் பாடல்கள் என் படத்திற்கு தடையாக இருக்கிறது என்று சொல்லி, சில பாடல்களை நிராகரித்த தைரியமும், தன் கதைக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் காட்டி இருக்கும் சிரத்தையும் ஹாட்ஸ் ஆஃப் சொல்ல வைக்கிறது. கம்பீரமான படைப்பாளி.

மிஷ்கின் பல இடங்களில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்। சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கோ என எண்ணத்தோன்றுகிறது। கருவிழியே பிதுங்கி வெளியே வரும் அளவிற்கு அவர் முறைத்துப்பார்ப்பது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.


இந்தக்காலத்தில் நீளமான ஷாட்கள் எல்லாம் வைத்தால் போரடிக்கும் என்ற சினிமா இயக்குனர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி இருக்கிறார் மிஷ்கின். மிகப்பெரும்பாலான ஷாட்கள் லென்த்தி ஷாட்கள், வைட் ஆங்கிள் ஷாட்கள், என ஒரு பாடமே நடத்தி இருக்கிறார் மிஷ்கின். அதுவும் ஆரம்பத்தில் நீரோடை காட்டப்படும் ஷாட்டும், அதற்கு பின்னணி இசையே இல்லாமல் இளையராஜா அமைதியாக இருப்பதும் மார்வலஸ். டோண்ட் மிஸ் தி டைட்டில்ஸ்.

எங்கெங்கு இசை வேண்டும் என்பதைவிட எங்கெங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதிலேய பின்னணி இசையின் வெற்றி இருக்கிறது என்று இளையராஜா சொல்வார். அது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்தப்படத்தை பார்க்கையில் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆரம்ப காட்சி டல்லாக போகும் போது, திடீரென ரேடியோ உடைக்கும் சப்தம் ஒரு நொடி சப்தநாடியையும் ஒடுக்கிவிடுகிறது. மிஷ்கின் தன் அம்மாவை பார்த்த அந்த நொடியில் ஒலிக்கும் இளையராஜாவின் குரலைக்கேட்டு கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. “நீ இவ்ளோ நேரம் விளையாடுனே, இதோ பார்டா என் ராஜ்ஜியத்தை” என்று சொல்லி இளையராஜா தன் பிரம்மாஸ்திரத்தை ஏவிவிடும் இடம் இதுதான். ராஜா ராஜாதான்.

ஸ்னிக்தா.... இப்படி ஒரு பர்ஃபாமெனஸை இந்தப்பெண்ணிடம் இருந்து நிச்சயமாய் எதிர்பார்க்க வில்லை. சுவற்றில் சாய்ந்தபடியே அவர் பேசுவதைவிட, தன் கஸ்டமர் போய்விட்டானே என்று புலம்புகையில் தான் டாப்கிளாஸ்.

இது தமிழ்சினிமாவின் பெருமைப்படத்தக்க ஒரு படம்தான்। ஆனாலும் மனதில் சில குறைகள். அஞ்சாதேவில் வெறும் கால்களை மட்டுமே காட்டி ஒரு காட்சி படமாக்கப்பட்டிருந்து, அது மிஷ்கினுக்கு பெரும் பாராட்டை தேடித்தந்தது. அந்த போதையில் பெரும்பாலான காட்சிகளுக்கு கால்களுக்கு மட்டுமே க்ளோஸப் வைத்திருக்கிறோரே என எண்ணத்தோன்றியது.

அடுத்து அந்த சிறுவனும் மிஷ்கினும் அடிக்கடி தலையை தொங்கப்போட்டுகொண்டு நிற்பதுகொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. அதுஏன் சினிமா குழந்தைகள் மட்டும் யதார்த்தத்தை மீறியதாகவே இருக்கிறார்கள் என்ற கோபம் இந்தபடத்திலும் லேசாக தலைதூக்குகிறது. ஃப்ரேமிற்குள் இருந்து ஆட்கள் அவுட் போன பின்பும் கேமரா ஸ்டெடியாக நிற்பது போன்ற காட்சிகள் திரும்ப திரும்ப காட்டுவது சற்றே சலிப்பையும் ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால் “எப்படியெல்லாம் ஷாட் வைத்திருக்கிறேன் பாருங்டா” என்று மிஷ்கின் சொல்லிகாட்டுவது போலே இருக்கிறது. கேமரா அற்புதமான ஒர்க் என்றாலும்., சில இடங்களில் வலிய கேமரா ஒர்கை ஆடியன்ஸுக்கு காட்டவேண்டும் என்ற நோக்கத்திலே செயல்பட்டிருப்பது போலே இருக்கிறது.

இதில் மிஷ்கின் மேல் மன்னிக்க முடியாத அளவிற்கு ஒரு கோபம் வருகிறது. மிஷ்கினின் அம்மா கதாபாத்திரத்திற்காக மொட்டை கூட அடித்துக்கொண்டு அழுக்கும், அசிங்கமுமாக அமர்ந்திருப்பது ரோகிணிதான் என்பது டைட்டில் பார்த்தால் மட்டுமே தெரியும். ஒரு மரவட்டைக்க்கு கூட க்ளோஸப் வைத்து ஆடியன்ஸுக்கு காட்டும் மிஷ்கின், ஏன் ரோகிணியை சரிவர எக்ஸ்போஸ் செய்யவில்லை. ஆயிரம் காரணம் சொன்னாலும் ரோகிணியின் பார்வையிலிருந்து பார்க்கையில் தான் அந்த வலி புரியும். “நான் எப்படிப்பட்ட பர்ஃபாமென்ஸ் செய்திருக்கிறேன் பார்” என்று நாளை ரோகிணி சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.


எல்லா கதாபாத்திரங்களும் மிஷ்கின் என்ற மிலிட்டரிமேனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியே நடக்கிறார்கள் என்ற பிம்பமும் நமக்கு எழாமலில்லை. ஐங்கரனின் பெருமைமிகுந்த படைப்பு இந்தப்படம். தேசியவிருதை குறிவைத்து மிஷ்கின் நந்தலாலா அம்பை எய்திருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. கிடைக்க வாழ்த்துக்கள் மிஷ்கின் சார்.
Thursday, November 18, 2010

நான் ஒரு காதல்காரன்


Upload Photos View Photos Funny Pics


Love Images Free Image Hosting Funny Pics


Love Images Love Pictures Funny Pics


Kiss Pictures Kiss Pics Funny Pics
Free Pics Upload Photos Love Pics


இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்

Tuesday, November 16, 2010

நீயில்லா தேசமிது


Free Image Hosting Upload Photos Love PicsLove Images View Photos Love Pics


Free Pics Free Image Hosting Funny Pics


Love Images Upload Photos Love Pics


Upload Photos Photo Sharing Funny Pics
இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

Monday, November 15, 2010

எங்கே போகிறார்கள் தயாரிப்பாளர்கள்?

ஒரு திரைப்படம் உருவாக இயக்குநர், கதாசிரியர், இசையமைப்பாளர், எடிட்டர், என எத்தனையோ பேர் காரணகர்த்தாவாக இருந்தாலும் இவர்கள் அனைவரையும் விட மிக முக்கியமான ஒருவர் இருக்கிறார்। அவர்தான் தயாரிப்பாளார். பூஜை போடுவதற்கு எலுமிச்சை பழம் வாங்குவதில் இருந்து, படம் முடிந்து பூசணிக்காய் உடைப்பது வரை அத்தனை செலவுகளுக்கும் அனைவரும் எதிர்நோக்கும் ATM இவர் ஒருவரே.

வெற்றியோ தோல்வியோ அதன் முழு விளைவுகளையும் எதிர்கொள்ளும் ஒரே நபர் இவர் மட்டுமே. எத்தனையோ வெற்றிப்படங்கள் கொடுத்தும், மறக்க முடியாத சில காவியங்கள் உருவாக காரணமாகவும் இருந்த சில தயாரிப்பாளர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. சினிமா என்னும் மாய கரத்தால் சிகரத்தில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட சில தயாரிப்பாளர்கள், அதே சினிமாவினால் அதளபாதாளத்தில் தள்ளப்பட்ட சில கதைகளை இங்கே பார்க்கலாம்
A।M.ரத்னம் : விஜயசாந்தியின் மேக்கப் மேனாக இருந்து, பின் படிப்படியாக உயர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் ஆனவர். தமிழ்சினிமாவின் மெகா மெகா ஹிட் படங்கள் அத்தனையும் இவரது தயாரிப்பில் உருவானவையே. இந்தியன், கில்லி, தூள், குஷி, 7g ரெயின்போ காலனி, ரன் என இவர் தயாரித்த அத்தனைப்படங்களும் வசூலில் புது சகாப்தத்தையே படைத்தது. ஒரு தயாரிப்பாளரால் இப்படியும் வெற்றிகளை குவிக்க முடியுமா என்று அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்திருந்த போதுதான் இவருக்கான சினிமா பாம்பு தன் பரமபத ஆட்டத்தை துவங்கியது. பாய்ஸ் (25 கோடி), எனக்கு 20 உனக்கு 18 (22 கோடி), நாயக் (ஹிந்தி- 25 கோடி), கேடி, பீமா என அத்தனைப்படங்களின் தோல்வியும் சினிமா குதிரையின் மேலிருந்து இவரை புறந்தள்ளியது ஆரம்ப காலத்தில் கதையின் மீது இருந்த இவரது கவனம் சிதறத்தொடங்கியதன் விளைவே இது.

கே.டி. குஞ்சுமோன் : திரைப்படத்துறையில் இருபது வருடங்களுக்கு மேலாக மிகுந்த அனுபவம் கொண்டவர். ஜெண்டில்மேன, காதலன் என மெகா வெற்றிப்படங்களை கொடுத்து கோடிகளை குவித்தவர். வெள்ளிவிழாப்படங்கள், விருதுகள், என புகழின் உச்சத்திலேஇருந்தவர். திரைப்படங்களை பெரும் பொருட்செலவில் தயாரித்து தமிழ்சினிமாவில் அசைக்கமுடியாத தயாரிப்பாளராக இருந்தவர். பிரவின்காந்த் இயக்கத்தில் நாகார்ஜுனா, சுஷ்மிதாசென் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சுமார் 15 கோடி தயாரிப்பில் ரட்சகன் என்ற படத்தை தயாரித்தார். (90’களின் காலகட்டத்தில் இந்தத்தொகை மிகப்பெரிது). ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் இந்த “ரட்சகன்” குஞ்சுமோனை ரட்சிக்கவில்லை. மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

இதனை சரி செய்வதற்காகதன் மகன் "எபி"யை கதாநாயகனாக்கி "கோடீஸ்வரன்" என்ற பெயரில் மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தை துவக்கினார்। ஆனால் பணப்பற்றாக்குறை, முந்தைய படத்தின் தோல்வியின் விளைவு என இந்தப்படம் வெளிவராமலே போனது. குஞ்சுமோன் என்ற தயாரிப்பாளரை தமிழ்சினிமா மறந்தே போனது. ஆனால் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து மறுபடியும் காதலுக்கு மரணமில்லை என்ற படத்தின்மூலம் மறுபடியும் தமிழ்சினிமாவிற்குள் புதுப்பிரவேசம் செய்யவிருக்கிறார். பார்க்கலாம், தமிழ்சினிமாவின் மாயகரம் மறுபடி இவரை என்ன செய்யப்போகிறது என்று?

சேது கந்தசாமி : சேது என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். நடிகர் விக்ரமுக்கு புது வாழ்க்கையையே அமைத்துக்கொடுத்தவர். பாலா என்ற அற்புத கலைஞனை அடையாளம் காடியவர். அடுத்து இவர் என்ன செய்யப்போகிறார் என்று சினிமா உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் சரியான அனுபவமில்லாதவர்களுடன் இணைந்து திரைப்படம் எடுத்து காணாமல் போனார். ஒரு திரைப்படத்தின் வெற்றியை எப்படி பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று உணராததால் ஏற்பட்ட விளைவே இது.

Dr. உதயகீதா : அழகி என்றொரு திரைப்படத்தின் மூலம் அத்தனை பேரின் விழிகளிலும் ஈரம் கசிய செய்த தயாரிப்பாளர. தங்கர் பச்சானின் இன்னொரு முகத்தை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர். தமிழின் மிகச்சிறந்த அழகியலான திரைப்படத்தை தயாரித்தவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர். முதல் படம் கொடுத்த வெற்றியின் போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அடுத்து "அன்பு" என்று ஒரு படத்தை தயாரித்தார்.சரியான கதை, பொருத்தமான நடிகர் நடிகை இல்லாததால் தோல்வியை தழுவினார்.

சிவசக்தி பாண்டியன் : காதல் கோட்டை என்ற ட்ரண்ட் செட்டர் படத்தை கொடுத்தவர். அகத்தியன் இந்த படத்திற்காகத்தான் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார். காலமெல்லாம் காதல் வாழ்க, கண்ணெதிரே தோன்றினாள், வெற்றிக்கொடி கட்டு போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர். இவர் தயாரிக்கும் படம் என்றாலே குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர். வெற்றியின் மயக்கம் கதையின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை மறந்து போக செய்தது. அதன்பின் காதலே நிம்மதி, கனவே கலையாதே போன்ற அதரப்பழசான கதையம்சம் திரைப்படங்களை எடுக்கதொடங்கினார். வெற்றியின் பாதையில் இருந்து தோல்வியின் பாதை நோக்கி மிக வேகமாக நடக்க தொடங்கினார். தன்னைவிட்டு விலகிப்போவதை அறிந்த தமிழ் சினிமாவும் இவரை கண்டுகொள்ளவே இல்லை. ஒரு சாதாரண தியேட்டர் அதிபராக இருந்து பல வெற்றிப்படங்களை தயாரித்து, பின் வெற்றியின் மயக்கத்தால் காணாமல் போனவர்.

S.K.கிருஷ்ணகாந்த் : சில பேர் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படுவார்கள். அப்படி திடீரென பரபரப்பான வெற்றியால் பேசப்பட்டவர்தான் இந்தியன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் துவங்கிய தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த். தனுஷை கதாநாயகனாக வைத்து இவர் தயாரித்த திருடா திருடி திரைப்படம். வசூலில் சக்கை போடு போட்டது. நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வெற்றியை ருசித்த இவர், அடுத்து சிம்ம்புவை வைத்து மன்மதன் படத்தை தயாரித்தார். படம் வெற்றிப்படம் என்றாலும் இதன் இதன் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதம், கதாநாயகன் பஞ்சாயாத்து, என பணரீதியாக நொந்து போனார். மறுபடியும் தனுஷை கதாநாயகனாக்கி இவர் தயாரித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படமும் தோல்வியையே சந்தித்தது. அடுத்து சிவாஜியின் பேரன் துஷ்யந்தனை வைத்து இவர் தயாரித்த மச்சி திரைப்படமும் இவருக்கு தோல்வியையே அளித்தது. விவேக்கை கதாநாயகனாக வைத்து இவர் தயாரித்த சொல்லி அடிப்பேன் படமும் தயாரிப்பிலே கிடக்கிறது. பரபரப்பாக பேசப்பட்ட அதே நேரத்திலேயே பரவலான வீழ்ச்சியை சந்தித்தவர்.


இங்கு நாம் குறிப்பிட்டவர்கள் எல்லாம் சமீபகாலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து திடீரென புகழின் வெளிச்சத்திலிருந்து மறைந்து போனவர்கள். அந்த காலகட்டத்திலிருந்தே இது போன்ற பலரை நாம் பார்க்கலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் அலட்சியப்போக்கும், வெற்றியின் மயக்கமும் தான் முக்கியமானதாக இருக்கும்.

முதற்படம் தயாரிக்கும் போது, அதை வெற்றிப்படமாக்கிவிட வேண்டும் என்று இவர்களுக்கு இருக்கும் வேகமும், சுறுசுறுப்பும், ஒரு சில வெற்றிகளை ருசித்தவுடன் இவர்களிடம் காணாமல் போய்விடுகிறது. அடுத்தடுத்த படங்களின் வெற்றி, தாங்கள் கேட்கும் கதைகளின் ரசனையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி விடுகின்றன. அது எவ்வளவு சுமாரான கதையாக இருந்தாலும், தான்கதை கேட்டு தயாரித்துவிட்டால் அது மிகப்பெரும் வெற்றிபெற்றுவிடும் என்ற குருட்டு நம்பிக்கை இவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன.

முதல்படம் தயாரிக்கும் போது கதைக்கான தேடுதல், இயக்குனருக்கான தேடுதல், என இவர்களது அர்ப்பணிப்பு மிகவும் சிரத்தையாக இருக்கும். பின் மெல்ல மெல்ல வெற்றியின் அளவுகோல் கூடும் போது, கதையின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை ஸ்டார் இயக்குனர்களிடமும், உச்ச நடிகர்களிடமும் வைக்கிறார்கள். முடிவில் தோல்வியை சந்தித்து தமிழ்சினிமாவில் இருந்து வெளியே தள்ளப்படுகிறார்கள்.

இது எல்லாகால கட்டத்திற்கும் பொருந்தும். எல்லா நிலை தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும். இந்த நிலை மாற வேண்டும், தயாரிப்பாளர்கள் பெருக வேண்டும் என்றால் ஓரளவிற்காவது கதை ஞானம் இருக்க வேண்டும், இல்லையேல் கதைஞானம் உள்ளவர்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல கதைகள் கொண்டு வரும் படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும். இல்லையெனில் இப்போது உள்ள தயாரிப்பாளர்களையும் நாம் பின்னாளில் இது போன்ற ஒரு கட்டுரையில் தேடத்தான் வேண்டியிருக்கும்.

Friday, November 12, 2010

ஒரு காதல் இங்கே காதலிக்கிறது - கடைசி பாகம்

இந்தக்கதையின் முதல் பாகத்தை படிக்க..... இங்கே

அப்போ ரெண்டு பேரும் மேல இருக்காங்க.... கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணாலாமா?? என்று கண்ணடித்தபடியே அவன் அருகில் வந்து, மெதுவாக அவன் தோளின் மேல் தன் இரண்டு கைகளையும் பூமாலை போல் போட்டுக்கொண்டாள்.... அதிர்ச்சியில் ஜீவா தடுமாற ஆரம்பித்த போது...

"நிலா கையை எடு..வீட்ல அப்பா அம்மா ரெண்டு பேரும் இருக்காங்க" சட்டென்று அவள் கைகளை தோளிலிருந்து உதறி, நகர்ந்து கொண்டான் ஜீவா

"So What? இப்ப நான் தோள் மேல கை போட விடலைன்னா இன்னும் ஒன் வீக்குக்கு நீ என்னை பார்க்க முடியாது. ஓகேவா?"

"ஹேய் என்ன நிலா இது? வீட்ல அப்பா இருக்காருடி"

"அது உன் பிராப்ளம்... எனக்கு வேண்டியது உன் தோள் மேல கை போட்டுக்கணும்.. நான் இன்னும் 3 தான் எண்ணுவேன். அதுக்குள்ள ஓகே சொல்லலைன்னா நான் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். ஜீவாவிடமிருந்து பார்வையை நகர்த்தி வேவேறுபக்கம் திருப்பிக்கொண்டு எண்ண ஆரம்பித்தாள்.

1 "

"நிலா வேணாம்ப்பா"

2"

"நிலா ப்ளீஸ் டீ. அப்பா மேலே இருக்காருடி"

३" என்று முடிப்பதற்குள்ளாகவே

"சரி.... கிட்டவா" என்று தயக்கத்துடன் சொல்லிமுடித்தான்..

"ம்ம்ம்ம்.. அது.. "என்றபடியே நிலா ஜீவாவின் அருகில் வந்து, அவன் தோளின் மீது இரண்டு கைகளையும் போட்டுக்கொண்டாள். ஜீவா தர்மசங்கடமாய் சைடில் எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தான்.

"ஹேய்.. எப்பவும் இந்த மாதிரி விஷயத்துல நீதான் ரொம்ப ஆக்டிவ்வா இருப்பே। இப்ப என்ன? நடிக்கிறியா?"

"இல்லப்பா அப்பா வீட்ல இருக்காரு அதான்".. அதையும் நிலாவைப்பார்க்காமலே சொன்னான்.

இப்படி திரும்பு.. என்று அவன் கன்னங்களை பிடித்து தன்வசம் திருப்பினாள்। மெல்ல அவன் காதருகே தன் இதழ்களை கொண்டு வந்தாள். ஜீவாவின் இதயம் 92 முறை ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தது. அவன் காதருகே சென்று

"இந்த ஷார்ட்ஸ், பனியன்'ல நீ ரொம்ப செக்ஸியா இருக்கே" என்று மெதுவாய் கிசுகிசுத்தாள். ஜீவாவிற்கு சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் பயத்தில்

"ஹேய்.. பயமா இருக்குப்பா" என்றான்.

"ச்சீய்ய்... நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்'டா"

"நான் அதை சொல்லலடி. அப்பா பத்தின பயத்தை சொன்னேன்"

ஓ.... அவன் பயத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருந்தாள்.

"நிலா..நீ கிளம்பு நாம வெளியில எங்கேயாவது மீட் பண்ணலாம்"

சரி..நான் கிளம்பனும்ன்னா.. நீ இன்னொன்னு செய்யணும்..

என்ன?

"ஒரு கிஸ் கொடுக்கணும். அதுவும் நீ கிஸ் கொடுக்கும் போது நான் பேச முடியாதபடி இருக்கணும்... "நிலா சொல்லி முடிக்கும் போதே...

"நோ" அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தான் ஜீவா பட்டென்று அவள் கைகளை உதறித்தள்ளினான்.

"நிலா என்ன விளையாடுறியா?

"ஹேய் அப்போ அன்னைக்கு எங்க வீட்ல வந்து நீ என்கிட்ட கிஸ் கேட்டப்போ எனக்கு இப்படித்தானே இருக்கும்?"

"ஆனா அன்னைக்கு நீ எனக்கு கிஸ் கொடுக்கவே இல்லையே"

"அதை எப்படி வாங்கிக்கணுன்னு உனக்கு தெரியலை"

"சரி... மத்ததை நாம நேர்ல பேசிக்கலாம். நீ இப்போ கிளம்பு"

"நீ இப்போ கிஸ் கொடுத்தேன்னா ஈவ்னிங் எங்கேயாவது போகலாம்.. இல்லைன்னா என் மொபைல் ரிப்பேர் ஆயிடும். என் வண்டி பஞ்சர் ஆயிடும். அப்பா கூடத்தான் காலேஜ் வர முடியும். நாளைக்கே எனக்கு செமஸ்டர் ஆரம்பிச்சிடும். நான் ரொம்ப சீரியஸா பார்லர் கூட போகாம படிக்க ஆரம்பிச்சிடுவேன் என்ன ஓகேவா?

"நிலா This is Too much "

"லவ் பண்ற பொண்ணுக்கு கிஸ் கொடுக்கிறது டூ மச்சா? நீ இப்படி சொல்றதுதான் டூ மச்."

"நான் தானேடி உன்னை எப்பவும் கிஸ் கேட்டு தொல்லை பண்ணுவேன். இப்ப என்னடி புதுசா?"

"ஜீவாவுக்கு ஒரு காலம் வந்தா, நிலாவுக்கும் ஒரு காலம் வரும்"

"ஹேய்,, என்னை பழிவாங்குறியா?"

"அப்படித்தான் வெச்சுக்கோயேன். இப்ப நீ கொடுக்க போறியா இல்லையா.. நான் இப்போ என் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ண போறேன்" என்று மொபைலை கையில் எடுத்து அவனை பயம் காட்டத்தொடங்கினாள்.

"வேணாம்டி.. இரு... "

என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அவள் இதழ்களை நெருங்க ஆரம்பித்தான்.ஒரு ஊசி நுழையும் அளவிற்கு மட்டும்தான் இரண்டு இதழ்களுக்கு இடையில் இடைவெளி।ஜீவா நெருங்க ஆரம்பித்த போது...


"ஒருவெட்கம் வருதே வருதே.. சிறு அச்சம் தருதே.. "

நிலாவின் மொபைல் டோன் பாடத்தொடங்கியது.. ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டான் ஜீவா..

"ஹேய்.. எங்க அம்மா.." என்று கூக்குரலிட்டாள். படக்கென தன் தோளில் இருந்த அவள் கையை தட்டிவிட்டான் ஜீவா.

"இப்ப யாரைக்கேட்டு என் கையை எடுத்த ? இப்ப நீ கிட்ட வரலைன்னா நான் ஃபோனே அட்டெண்ட் பண்ண மாட்டேன். எங்க அம்மா உங்க வீட்டுக்கே வந்திடுவாங்க பரவாயில்லையா?"

"நிலா ஏண்டி இப்படி படுத்தறே?" என்று அருகில் வந்தவன் அவள் கையை மறுபடியும் எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டான். அவன் அருகில் வந்தவள்.. ஃபோனை ஆன் செய்து.. "இதோம்மா.. வந்திடறேன். ஆண்ட்டி மேல இருக்காங்க.. ஜீவா தர மாட்டேங்கிறான்மா.." என்றவுடன்..

ஜீவாவிற்கு தூக்கிவாரி போட்டது.. "இல்லைம்மா அவனுக்கு பாத்திரம் எங்க இருக்குன்னு தெரியலையாம். அதனாலதான் எடுத்துதர மாட்டேங்கிறான். நான் ஆண்ட்டிவந்த உடனே வாங்கிட்டு வந்திடறேன்" என்றாள். அப்போதுதான் ஜீவாவிற்கு மூச்சு வந்தது.. சற்றே இளைப்பாறினான். ஃபோனை துண்டித்துவிட்டு "ம்ம்ம்.. சீக்கிரம் கொடு" என்றாள்.

"ஹேய்.. நீ விடவே மாட்டியாடி? அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா"

"உன்னோட கிஸ் எனக்கு பிடிச்சா போதும். உங்க அப்பாவுக்கு பிடிக்கணும்ன்னு அவசியம் இல்லை"

"நிலா" ஒரு நிமிடம் டென்ஷனானான். சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு "நிலா நீ மொதல்ல கிளம்பு."

"முடியாது.. என்னை எந்த அளவுக்கு நீ கிஸ் கேட்டு தொல்லை பண்ணுவ. இப்ப உனக்கு தெரிய வேணாம்.. ம்ம்.. சீக்கிரம்"

ஜீவா அவள் குறும்பை ரசித்தாலும் உள்ளுக்குள் பயத்தை சுமந்தபடியே மெதுவாய் அவள் இதழ்களை நெருங்க ஆரம்பித்தான். அவள் இதழ்களின் ஓரத்தில் ஒரு சின்ன தூசி ஒட்டி இருப்பதை கவனித்தவன், அவள் இதழ்களின் மீது தன் விரல்களால் அதை தள்ளிவிட்டு, இரண்டு விரல்களால் அவள் இதழ்களை பிடித்தான். இதழ்களை பிடித்தபடியே அவள் முகத்தருகே நெருங்கினான்.

"ஜீவா ஒழுங்கா பிடிச்சிருக்கியா?? அப்பாவின் குரல் கேட்டதும் நிலை தடுமாறித்தான் போனான்.

"அப்பா???" என்று புரியாமல் குழம்பினான்.

பைப்பை ஒழுங்கா பிடிச்சிருக்கியாடா?

பிடி.. பிடிச்... பிடிச்சிக்கிட்டிருக்கேன்பா.. என்று வார்த்தைகளை தடுமாறி ஒப்பித்தான்.

"அப்படியே பிடிச்சிகிட்டு இரு.. நான் இங்க க்ளீன் பண்ணிட்டு டேப்பை ஆன் பண்றேன்"என்று மேலிருந்து குரலை மட்டும் கீழே அனுப்பினார். ஜீவா சற்று பெருமூச்சு விட்டு, அவளிடமிருந்து நகர்ந்து நின்று கொண்டான்.

" நிலா நீ போ.. எனக்கு பயமா இருக்கு.. அப்பாவுக்கு இந்த மாதிரி விளையாட்டு எல்லாம் பிடிக்காது..."அவன் பதட்டத்தை ரசித்தபடியே சிரிப்பை அடக்கிக்கொண்டு,

"அப்போ என்னை ஒருவாரம் பார்க்காம, பேசாம இருக்க முடிவு பண்ணிட்டே"

"நிலா ஏண்டி சாகடிக்கிறே" சாயந்திரம் ஒரு முத்தம் என்ன. ஆயிரம் முத்தம் கூட கொடுக்கிறேன்ப்பா.."

"எனக்கு ஆயிரம் முத்தம் எல்லாம் வேணாம். ஒரே ஒரு முத்தம் வேணும். அதுவும் இப்பவே வேணும். நீ வேற எதுவும் பேசவேண்டாம். நான் எதையும் கேட்க மாட்டேன்" என்று காதுகளை மூடிகொண்டாள்.

"ராட்சசி.. இரு.. உன்னை அப்புறம் கவனிச்சுக்குறேன்." என்று படிக்கெட்டின் பக்கம் போகத்தொடங்கினான்.

"எங்கடா போற"

"இருடி... அம்மா துணிக்காய போட்டுட்டாங்காளான்னு எட்டி பார்த்திட்டு.. அவங்க கீழ வர்ற எவ்ளே நேரம் ஆகும்னு கெஸ் பண்ணிட்டு வந்து தர்றேன்" சொல்லிவிட்டு படிக்கெட்டின் மேல் ஏறத்தொடங்கினான்..அவன் பதட்டத்தை ரசித்தபடியே லேசாய் சிரிக்க ஆரம்பித்தாள்.

மாடியின் ஓரே தலையை மட்டும் மெதுவாய் நீட்டியபடி எட்டிப்பார்த்தான்.

சாந்தி.. ப்ளீஸ் சாந்தி.. என்று அப்பா அம்மாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

"என்னங்க இது பையன் இருக்கிறான் வீட்ல.. இந்த வயசுல போய் விடுங்க"

"சாந்தி... அவன் கீழ தானே இருக்கான்... ஜீவா நீ ஒழுங்கா பிடிச்சிட்டு இரு..." என்று அப்பா கீழே குரல் கொடுத்தார். "பாத்தியா பையன் கீழேத்தான் இருக்கான்"

ஜீவா மெதுவாய் சிரித்தபடியே படிக்கெட்டில் இறங்கத்தொடங்கினான்.....


********************************************************
இந்தப்பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் ஒரு ஓட்டுப்போட்டுவிட்டு செல்லுங்கள்। உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

Wednesday, November 10, 2010

ஒரு காதல் இங்கே காதலிக்கிறது"டேய்... இப்பத்தண்ணி வருதா பாரு..."

"இல்லப்பா.... நீங்க அந்த லெஃப்ட் சைட்'ல இருக்கிற குழாய்க்கு வர்ற கனெக்ஷனை செக் பண்ணி பாருங்க..."

சரிடா..

அப்பா சண்முகம் மொட்டை மாடியின் மேலே அடைப்பட்டிருக்கும் குழாயை சரி செய்தபடி இருக்க.. வீட்டின் உள்ளே இருந்தபடியே அப்பாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லியபடியே கீழே உள்ள குழாயை சரி செய்துக்கொண்டிருந்தான் ஜீவா. பக்கத்தில் மேலிருந்து கீழாக ஒரு நீண்ட பைப் தொங்கிக்கொடிருந்தது..

"சாந்தி ஒரு கப் காஃபி கொண்டு வா.. "
என்று அவர் மேலிருந்து குரல் கொடுக்க..

"இருங்க.. துணி காய வைக்கணும்.. வரும் போது கொண்டு வர்றேன் "என்று அம்மா கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.

அம்மா கிச்சனிலிருந்து ஒரு கையில் காபி டம்ளரையும், மறு கையில் துணி பக்கெட்டையும் சுமந்து கொண்டு ஹாலின் வெளிப்புறம் உள்ள படிக்கெட்டில் ஏறப்போனாள். ஜீவா குழாயை பிடித்தபடி, டிவியின் மீது கவனத்தை வைத்துக்கொண்டிருந்தான். டிவியில் மாதவன் ஷாலினியோடு காதல் சடுகுடு ஆடிக்கொண்டிருந்தார். மெலிதாய் புன்னகைத்தவாறே தன் காதல் நினைவுகளில் மெல்ல மூழ்கிக்கொண்டிருந்த ஜீவாவை, அம்மாவின் குரல் கலைத்து போட்டது

"டேய்.. டீவியே பார்த்துக்கிட்டு இருக்காதே.. நான் துணி காயப்போட்டுட்டு அப்பாவுக்கு காஃபி கொடுத்திட்டு வந்திடறேன். அவரை கத்த வைக்காம, அவர் சொல்ற மாதிரி குழாயை அட்ஜெஸ்ட் பண்ணு.சரியா..??"

அம்மாவை முறைத்துப்பார்த்தபடியே தலையாட்டிவிட்டு மறுபடியும் டிவியில் புதைந்தான்.. காலிங்பெல் தன் குரலின் பலத்தை காட்டியது..

"சே.. ஒரு நல்ல மூடான பாட்டு பார்க்கும் போதுதான் யாராவது வந்து தொலைவாங்க... இருங்க வர்றேன்" என்று குரல் கொடுத்தபடியே, பைப்பை கீழே போட்டுவிட்டு ஜீவா வாயிற்கதவை நோக்கி போனான்.

வாயிற்கதவை திறந்த அந்த நொடியில் சற்றே மூர்ச்சையாகித்தான் போனான் . வெளியே தேவதையாய் நின்றிருந்தாள் நிலானிகா.. வெளிர் பச்சைநிற சுடிதாரில் நெட் துப்பட்டாவுடன் கண்களில் டயனமைட் வீச்சை சுமந்தபடி புன்முறுவலித்தாள். தேவதைகள் பச்சை டிரஸ்'ஸில் கூட வருவார்கள் என்று அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.

ஆண்ட்டி இல்லையா? சற்றே தயக்கத்துடன் கேட்டாள்.

"இருக்காங்க" ஜீவா சற்றே தடுமாறினான்.

வெறும் மைக்ரோ மேன் பனியனும் ஷார்ட்ஷுமாய் ஒரு பெண்ணில் முன்னால் நிற்கிறோமே என்ற கூச்சத்தில் நெளிந்தபடியே தயங்கினான்.

"ஆண்ட்டி" என்று ஜீவாவை உள்ளே தள்ளிக்கொண்டு நேராய் கிச்சன் நோக்கி போனாள்.

"எங்கே ஆண்ட்டியை காணேம்?

"அம்மா மேல அப்பாவுக்கு காஃபி கொடுக்க போயிருக்காங்க.. "என்று ஒருவித பதட்டத்துடனே சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துக்கொண்டே சொன்னான்..

ஜீவா சொன்ன அடுத்த நொடி நிலானிகா மெல்ல நடந்து ஹாலை கடந்து சென்று மேலே எட்டிப்பார்த்தாள். என்ன செய்கிறாள் என்று ஜீவா தயக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து வேகமாக நடந்து ஜீவாவின் அருகில் வந்தாள்.

"அப்போ ரெண்டு பேரும் மேல இருக்காங்க.

"ம்.. " அவளைப்பார்க்காமலே ஹாலை எட்டிப்பார்த்தபடி பதில் சொன்னான் ஜீவா...

ரெண்டு பேரும் மேலே இருக்காங்களா?? என்று அவன் அருகில் வந்து "அப்போ கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணலாமா? என்று கண்ணடித்தபடியே.... மெதுவாக அவன் தோளின் மேல் தன் இரண்டு கைகளையும் பூமாலை போல் போட்டுக்கொண்டாள்....

அதிர்ச்சியில் ஜீவா தடுமாற ஆரம்பித்த போது...


தொடரும்.......


இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்
Tuesday, November 9, 2010

மைனா - சில ஆச்சர்யங்கள்

நான் விமர்சனங்கள் எப்போதாகத்தான் எழுதுவேன். அதுவும் என்னை பாதித்திருந்தால் மட்டுமே. அப்படி ஒரு பாதிப்பு நேற்று ஏற்பட்டது. மைனா திரைப்படம் பார்த்ததன் விளைவுதான் அது.. டிவியில் டிரைலர் பார்க்கும் போதும் சரி.. பிரபலங்கள் அந்தப்படத்தைப்பற்றி பேசும் போதும் சரி.. ரொம்ப ஓவரா பேசறாங்களோ என்றுதான் நினைத்திருந்தேன், இந்தப்படத்தை பார்க்கும் வரை... ஆனால் அவர்கள் பேசியது நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

மைனாவின் ஒன்லைன் மிக சாதாரணமானது. ஒரு குற்றவாளியை பிடிக்க புறப்படும் ஒரு போலீஸ் அதிகாரி அந்த குற்றவாளிக்காகவே தான் குற்றவாளியாய் மாறுவது....

போலீஸ் அதிகாரியோடு கையில் விலங்கிட்டபடி நடந்து செல்லும் எத்தனையோ குற்றவாளிகளை நாம் கவனித்திருப்போம். ஆனால் அவர்களுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை.. ஒரு காதல்.. ஒரு எமாற்றம்.. என அத்தனையையும் கலந்து மறக்க முடியாத ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஆரம்பத்தில் இதுவும் இன்னொரு கிராமத்து படமோ என்ற அசுவாரஸ்யமாய் அமர்ந்திருக்கும் போது, தம்பி ராமையாவின் வருகைக்கு பின்னால் படம் டாப்கியரில் எகிறுகிறது. சொல்லப்போனால் படத்தின் தூண் இவர்தான். ஒவ்வொரு காட்சியிலும் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். அதுவும் புலியின் போட்டோவைப் பார்த்துவிட்டு இவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் வயிற்றுவலிக்கு உத்திரவாதம். படம் முழுவதும் ஹீரோவை சுற்றி சுற்றி வந்தாலும் ஹீரோ நம் மனதில் பதிய மறுக்கிறார்.ஆனால் ஹீரோயின்.. செம அழகு.. துளி கூட மேக்கப் இல்லாமல் வரும் அழகே தனி தான். ஹீரோயினுக்கு கேமரா மேன் ரசித்து ரசித்து கேமராகோணங்கள் அமைத்திருப்பார் போலும்.. ஒவ்வொரு குளோசப்பிலும் அவ்வளவு அழகாய் தெரிகிறாய். அவரது பருக்கள் கூட ரசனையாய்தான் இருக்கின்றன. ஹீரோயின் படிப்பதற்காக ஹீரோ ஒரு பாட்டிலில் மின்மினி பூச்சியை அடைத்துக்கொண்டு வந்து கொடுக்கும் காட்சியும், அந்த ஒரு நொடியில் ஹீரோயின் அவரை இழுத்து முத்தம் கொடுக்கும் காட்சியும் பரவசம்.. இப்படி ஒரு ஹீரோயினை கட்டிகொடுக்க மறுக்கும் கதாநாயகியின் அம்மாவை ஹீரோ அடிப்பதில் தப்பே இல்லை.

இதுவரை தமிழ்சினிமா யூனிட் போயிருக்காத லொக்கேஷன்களை எல்லாம் தேடிப்பிடித்து செல்லுலாய்டில் பதிவு செய்திருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். லொக்கேஷன்கள் விழிகளை விட்டு அகல மறுக்கின்றன. இந்தமாதிரி ஒரு கதைக்களத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்திகொடுப்பது இந்த லொக்கேஷன்கள்தான். கேமராமேன் இந்தப்படத்திற்கு முன் புகைப்படக்கலைஞராய் இருந்தவராம். ஃபோட்டோகிராஃபி டேஸ்ட் ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. குறிப்பாய் ஹீரோயினின் இமைகள் தொட்டாசிணுங்கியின் மீது படும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஷாட்.. மிக ரசித்த ஷாட் அது..

ஹீரோவின் மீது இன்ஸ்பெக்டருக்கும், வார்டனுக்கும் இருக்கும் கோபத்தின் டெம்ப்போ மாறுவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் அந்த விபத்து காட்சி டாப்கிளாஸ். அது ஜூராஸிக் பார்க் படத்தில் பார்த்ததாகவே இருந்தாலும், மிரட்சியை ஏற்படுத்துகிறது. எனக்கு தெரிந்து எந்திரன் படம் பார்க்கும் போது ஏற்பட்ட ஒட்டுமொத்த பிரமிப்பும், இந்த ஒரு விபத்துகாட்சியில் தெரிந்தது. இசை பெரிதாய் கவரவில்லை என்றாலும், படத்திற்கு அது உதவியாய் இருக்கிறது. மைனா.. மைனா பாடல் அட்டகாச மெலோடி.. மற்றபடி பாடல்கள் பெரிதாக கவரவில்லை..இயக்குனர் பிரபு சாலமன்.... லீ, கொக்கி, லாடம் என வித்தியாசமான களங்களில் தொடர்ந்து படம் எடுக்கும் இவரது ஆர்வம் மைனாவில் இன்னும் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறது. நுணுக்கமான கதாபாத்திரங்கள் அதற்கான பின்னணி என பக்காவான ஸ்கிரிப்ட் ஒர்க் இவரது பலம். அந்த இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு இவர் தேர்வு செய்திருக்கும் பெண், அட்டகாசம்.. நமக்கே ஒரு காட்சியில் அந்தப்பெண்ணை ஓங்கி அறைய வேண்டும் போல் இருக்கிறது.

மண்டை ஓடு மகாதேவனாக வரும் சிறுவன், ஹீரோவின் கையை அவிழ்த்துவிட சொல்லும் மலையாள ஹோட்டல் ஓனர், வைத்தியமும் பார்த்து மருந்துக்கும் பணம் கொடுக்கும் பல் வைத்தியர், ஹீரோயினின் அம்மா, ஹீரோவின் அப்பா என ஒவ்வொரு கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் அப்படியே மனதில் உறைகிறார்கள். ஹீரோ ஜெயில் இருந்து தப்பித்தபின் ஒவ்வொரு போலீஸ் அதிகாரியும் புலம்புவது இதுவரை எந்த சினிமாவிலும் பார்த்திராத யதார்த்தம். அதே போல், திரும்பவும் ஹீரோவை ஜெயிலுக்கு அழைத்து வரும்போது அவர்கள் கோபப்பட்டு அவனை அடிக்க முயல்வது இன்னொரு ரியலிஸ்டிக் சீன்.

பொதுவாக விபத்து ஏற்படுவதற்கு என்னென்னவோ காரணம் சொல்வார்கள், ஆனால் விபத்து ஏற்படுவதற்கு ஒரு சின்ன கவனச்சிதறலே போதுமானது என்ற இயக்குனரின் சிந்தனை சபாஷ் போட வைக்கிறது. ஹீரோவை திரும்பவும் அழைத்துக்கொண்டு ஜெயிலுக்குள் செல்லும் காட்சியில் அநியாயத்துக்கு டெம்போ.. நமக்கே படபடப்பாய் வருகிறது. ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்ற பில்டப் கொடுத்து விட்டு அதை மொக்கையாக்காமல், கொடுத்த பில்டப்பைவிட ஏற்படும் விபரீதம் யாருமே எதிர்பாராதது.

பொதுவாக இது போன்ற கதைகளில் ஹீரோ பழிவாங்ககிளம்புவார். ஆனால் இந்தப்படத்தில் அப்படி இல்லை.. ஏன் ஹீரோ பழிவாங்கவில்லை என்ற கேள்விக்கு படத்தின் முற்பகுதியிலேயே இயக்குனர் சூசகமாக பதில் சொல்லி இருப்பார். ஹீரோயினுக்கு காலில் ஆணி குத்தியவுடன், ஹீரோ ஒரு டயலாக் சொல்வார்.. "அப்பவே நான் செத்துட்டேன் சார்".

காலில் ஆணி குத்தியதுக்கே ஹீரோ சாவார் என்றால்.. ஹீரோயினின் இந்த நிலையைப்பார்த்து????? கிளைமாக்ஸை சுருக்கும் படி கமல்ஹாசன் சொன்னதாக ஒரு செய்தி.. ஆனால் இந்த கிளைமாக்ஸ் இல்லை என்றால் படமே இல்லை.. அந்த இன்ஸ்பெக்டர் எடுக்கும் முடிவுதான் படத்தையே தூக்கி நிறுத்துகிறது. மனிதநேயம் என்பது காப்பாற்றுவதில் மட்டும் இல்லை. அழிப்பதிலும் உண்டு என்று ஒரு மாறுபட்ட சிந்தனை கைத்தட்ட வைக்கிறது.

லவ் பண்ணுங்க சார்.. லைஃப் நல்லா இருக்கும்...


இந்தப்பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்..

Monday, November 8, 2010

அசடு வழியும் கலைஇந்தக் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்இதையும் படியுங்கள்