Friday, October 15, 2010

இன்னும் கொஞ்சம் தேடலாமே


எல்லாவற்றையும் விட
மேலோங்கியே இருக்கிறது
உன் ஸ்பரிசம்….
கொஞ்சம் தீண்டலும்
கொஞ்சம் சீண்டலும்
மெல்ல மெல்ல கொன்று தீர்க்கும்…
இனியும் இனியும்
இன்னும் இன்னும்
என்றபடியே வெட்கங்களை தகர்த்தெறிந்து
மெல்ல புதையும் அந்த நேரங்கள்….


நகக்குறியா, பற்குறியா என்ற
விவாதங்களிலேயே
கழியும் பொழுதுகள்.
சிற்சில சந்தர்ப்பங்களில்
ஆளுமை அடிமையாகவும்
அடிமை ஆளுமையாகவும் ஆக்கப்படும்.
வெப்பக்கடத்தி என்று
ஆடைகளை புறந்தள்ளி
இதயக்கடத்தியாய் செயல்படுவாய்.


எல்லாமே நானே செய்தும்
எல்லாமுமே நீயாய் இருக்கும்
அதிசயம் மட்டும் புரிவதே இல்லை...
என் செய்கையின்
ஒவ்வொரு வினையும்
உன்னை நோக்கியே இருக்கிறதே..
இதுதான் எனக்கு நீ செய்த செய்வினையோ??


தேடல்களும், தவிப்புகளும்
இன்னும் மிச்சமிருக்கின்றன.
வெளிச்சத்தில் தேடுவோர் மத்தியில்
இருளிளேயே தேடிக்கொண்டிருக்கிறேன்.
இந்த தேடலுக்கு
இருள்தான் சரியான துணை.
இன்னும் இன்னும்...
கிடைக்கவில்லை..
கிடைக்க செய்துவிடாதே..
இன்னும் கொஞ்சம் தேடலாமே....

(இந்தக்கவிதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..)

13 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

"செய்வினை" நல்லா இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

நகக்குறியா, பற்குறியா என்ற
விவாதங்களிலேயே
கழியும் பொழுதுகள்//

சூப்பர் மச்சி!

வெப்பக்கடத்தி என்று
ஆடைகளை புறந்தள்ளி
இதயக்கடத்தியாய் செயல்படுவாய்.

ச்சோ ஸ்வீட்

என் செய்கையின்
ஒவ்வொரு வினையும்
உன்னை நோக்கியே இருக்கிறதே..
இதுதான் எனக்கு நீ செய்த செய்வினையோ??//

க்ளாசிக் இதான் உங்ககிட்ட எதிர் பார்த்தது...

இந்திரா said...

அலுவலகத்துல அசால்ட்டா உங்க பதிவ ஓபன் பண்ணிட்டேன்..
படத்தைப் பாத்ததுமே பகீர்னு ஆயிடுச்சு..
வெளிப்படையா வாசிக்க முடியுதா ஒன்னா?? பயந்து பயந்து படிக்க வேண்டியிருக்கு.
நல்ல வேளை பக்கத்துல யாருமில்லை..
ஏம்பா உங்களுக்கு இந்த கொலைவெறி???

Mohan said...

மிகவும் நன்றாக இருக்கிறது!

கவிதை காதலன் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
"செய்வினை" நல்லா இருக்கு.//

நன்றி தலைவா.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?

கவிதை காதலன் said...

//ப்ரியமுடன் வசந்த் said...
நகக்குறியா, பற்குறியா என்ற
விவாதங்களிலேயே
கழியும் பொழுதுகள்//

சூப்பர் மச்சி!

வெப்பக்கடத்தி என்று
ஆடைகளை புறந்தள்ளி
இதயக்கடத்தியாய் செயல்படுவாய்.

ச்சோ ஸ்வீட்

என் செய்கையின்
ஒவ்வொரு வினையும்
உன்னை நோக்கியே இருக்கிறதே..
இதுதான் எனக்கு நீ செய்த செய்வினையோ??//

க்ளாசிக் இதான் உங்ககிட்ட எதிர் பார்த்தது...//

உங்க பெயரை போலவே உங்க கமெண்டும் ரொம்ப க்யூட்.. நன்றி

வசந்த். அடிக்கடி வாங்க..

கவிதை காதலன் said...

//இந்திரா said...
அலுவலகத்துல அசால்ட்டா உங்க பதிவ ஓபன் பண்ணிட்டேன்..
படத்தைப் பாத்ததுமே பகீர்னு ஆயிடுச்சு..
வெளிப்படையா வாசிக்க முடியுதா ஒன்னா?? பயந்து பயந்து படிக்க வேண்டியிருக்கு.
நல்ல வேளை பக்கத்துல யாருமில்லை..
ஏம்பா உங்களுக்கு இந்த கொலைவெறி???//

அவ்வவவவளளவுவுவு மோசமாவா இருக்கு???????? என்னங்க பண்றது வயசு அப்படி...

கவிதை காதலன் said...

//Mohan said...
மிகவும் நன்றாக இருக்கிறது!//

நன்றி மோகன்..

கவிப்ரியன் said...

//எல்லாமே நானே செய்தும்
எல்லாமுமே நீயாய் இருக்கும்
அதிசயம் மட்டும் புரிவதே இல்லை...//

சூப்பர்ப்ப்ப்ப்ப்... கலக்கிட்டீங்க நண்பா

கவிப்ரியன் said...

பொதுவா தேடணும்'ன்ன வெளிச்சத்துலதான் தேடுவாங்க. ஆனா நீங்க இருட்டுல தேடறீங்க. ஆமா.. ஆமா.. நீங்க தேடுற பொருளுக்கு இருட்டுதான் சரியான நேரம்.. ஹி..ஹி...ஹி...

தென்றல் said...

கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா கேட்டாத்தானே??

அதான் விஷ்ணு சடுபுட்டுன்னு கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டாரா??

தென்றல் said...

//சிற்சில சந்தர்ப்பங்களில்
ஆளுமை அடிமையாகவும்
அடிமை ஆளுமையாகவும் ஆக்கப்படும்/


ஆனாலும் ரொம்பத்தான்யா உங்களுக்கு குசும்பு.....

Riyas said...

கவிதை நனறாகவேயிருக்கிறது.. அந்தபடம்தான் என்னமோ செய்கிறது..

சொல்லவேண்டியதை நளினமாக சொன்னது அழகு..

இதையும் படியுங்கள்