Friday, October 22, 2010

கொஞ்சி கொஞ்சி கொன்று போ
இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்..

Friday, October 15, 2010

இன்னும் கொஞ்சம் தேடலாமே


எல்லாவற்றையும் விட
மேலோங்கியே இருக்கிறது
உன் ஸ்பரிசம்….
கொஞ்சம் தீண்டலும்
கொஞ்சம் சீண்டலும்
மெல்ல மெல்ல கொன்று தீர்க்கும்…
இனியும் இனியும்
இன்னும் இன்னும்
என்றபடியே வெட்கங்களை தகர்த்தெறிந்து
மெல்ல புதையும் அந்த நேரங்கள்….


நகக்குறியா, பற்குறியா என்ற
விவாதங்களிலேயே
கழியும் பொழுதுகள்.
சிற்சில சந்தர்ப்பங்களில்
ஆளுமை அடிமையாகவும்
அடிமை ஆளுமையாகவும் ஆக்கப்படும்.
வெப்பக்கடத்தி என்று
ஆடைகளை புறந்தள்ளி
இதயக்கடத்தியாய் செயல்படுவாய்.


எல்லாமே நானே செய்தும்
எல்லாமுமே நீயாய் இருக்கும்
அதிசயம் மட்டும் புரிவதே இல்லை...
என் செய்கையின்
ஒவ்வொரு வினையும்
உன்னை நோக்கியே இருக்கிறதே..
இதுதான் எனக்கு நீ செய்த செய்வினையோ??


தேடல்களும், தவிப்புகளும்
இன்னும் மிச்சமிருக்கின்றன.
வெளிச்சத்தில் தேடுவோர் மத்தியில்
இருளிளேயே தேடிக்கொண்டிருக்கிறேன்.
இந்த தேடலுக்கு
இருள்தான் சரியான துணை.
இன்னும் இன்னும்...
கிடைக்கவில்லை..
கிடைக்க செய்துவிடாதே..
இன்னும் கொஞ்சம் தேடலாமே....

(இந்தக்கவிதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்..)

Friday, October 8, 2010

மன்னிப்பாயா - ஒரு பரவசமான பாடல்

ரஹ்மானின் இசை எப்போதும் ஒரு பரவசத்தை கொடுக்கக்கூடியது. அதிலும் மென்சோக பாடல்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கண்ணீர் சுரப்பிகளில் ஊடுருவி சென்று கண்ணீரை வெளியே கொண்டுவராமல் விடாது. அத்தகைய மேஜிக் "பம்பாய்" திரைப்படத்தில் "உயிரே உயிரே" பாடலில் அமைந்தது. அதன் பின் "அலைபாயுதே " திரைப்படத்தில் "எவனோ ஒருவன் வாசிக்கிறான்" பாடலில் அமைந்தது (என்னுடைய டாப் மோஸ்ட் ஃபேவரைட் இந்தப்பாடல்தான்). அதற்கு அடுத்தபடியாக அந்த மேஜிக் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் அமைந்தது..


எஸ்.. அந்தப்பாடல்.. மன்னிப்பாயா....

எத்தனை முறை இந்தப்பாடலை கேட்டிருப்பேன். எத்தனை முறை கண்ணீரை துடைத்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஏதோ ஒரு இனம் புரியாதவலி இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு, மனதிற்கு பிடித்த ஒரு முகத்தை நியாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.


கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே
..

எந்த இசைக்கோர்வையுமின்றி ஸ்ரேயா கோஷலின் குரலில் இந்த வரிகள் ஒலிக்கையிலே என் உலகின் அத்தனை இயக்கங்களும் நிறுத்தப்பட்டு, இந்த பாடலுக்குள் புதையத்தொடங்குவேன். மெல்லிய இசையின் கரம் பிடித்து....

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா

என்று தொடங்கும் வரிகளில் நிச்சயம் மெஸ்மரிசம் ஆகாமல் இருக்க முடியாது. திடீரென ஆரம்பிக்கும் ரஹ்மானின் குரல் இன்னும் நம்மை அடிமையாக்கிப்போகும்.

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

இந்த மாதிரி சூழ்நிலைகளில் ரஹ்மானின் குரல் அந்தப்பாடலின் வலியை எவ்வளவு அழகாக பிரதிபலிக்கிறது!. ஸ்ரேயா கோஷலின் குரலில் நான் அதிகம் பாதிக்கப்பட்டது "நினைத்து நினைத்து பார்த்தேன்" பாடலில் தான். அதன் பின் இதோ இந்தப்பாடல்.. என்ன ஒரு லாவகமான குரல்வளம், மெல்லிய வளைவுகள், அந்த மென்சோகத்தை த்ரிஷாவின் இதயத்திலிருந்து நம் இதயத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யும் அந்த அற்புதத்தை ஸ்ரேயாகோஷல் மிக எளிதாக நிகழ்த்தி இருப்பார்.

வாவ்... இந்தப்பாடலில் எல்லா வரிகளும் மிகப்பொருத்தமாக அமைந்திருந்தாலும் என்னை மிகவும் உலுக்கிய வரிகள் என்ன தெரியுமா??

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்


சத்தியமாய் சொல்கிறேன். காதலின் வலியை இவ்வளவு எளிமையாய், வலிமையாய் சொல்ல முடியாது. விழிகளின் ஓரம் திரண்டிருக்கும் கண்ணீர் இந்த வரிகள் ஒலிக்கையில், அந்த சோகத்தை தாங்க இயலாமல் விழிகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும். இந்த வரியை மட்டும் ஃபார்வேர்ட் செய்து கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும். ஆம்.. அனைவரும் தூங்கிவிட்டபின் யாருக்கும் தெரியாமல் வெளிவரும் கண்ணீருக்கு ஆறுதல் கொடுப்பது தலையணை மட்டும் தானே.. எனக்கு என் தலையணை பலமுறை ஆறுதல் அளித்திருக்கிறது. தாமரை உங்கள் பேனாவை ஒருமுறை கொடுங்கள், ஒரே ஒரு முறை முத்தமிட்டு திருப்பி தருகிறேன்.

ஏக்கம், சோகம், கண்ணீர், என பல கலவையாக, பல உணர்வுக்கோர்வையாக ஒருநாள் சிரித்தேன். ஒருநாள் வெறுத்தேன் என எழுதப்பட்டிருக்கும்.. ஆனால் இந்தப்பாடல் கேட்கையில் நானே ஒவ்வொருநாளும் நனைந்து கொண்டிருக்கிறேன், கண்ணீர் மழையில்..

வாய்விட்டு கதறி அழவைப்பதில்லை இந்தப்பாடல்.. ஆனால் இந்தப்பாடல் கேட்கையில் உங்கள் கன்னங்களோடு உங்கள் கண்ணீர் ஹாய் சொல்லும். பாடல் முடிவில் அந்த சந்திப்பை உங்கள் விரல்கள் தடுத்து நிறுத்தும். ரஹ்மான் நீங்கதான் என்னை கொல்லாமல் கொல்றீங்க... கெளதம் மேனன், ரஹ்மான், தாமரை என மூவரின் ரசனையும் ஒருங்கே சங்கமிக்கும் பாடல். இந்தப்பாடலை விஷுவலாய் பார்ப்பதைவிட, ஆடியோவாய் கேட்பதில்தான் அற்புதம் ஒளிந்திருக்கிறது.

இருள் சூழ்ந்திருக்கும் நேரம், ஒரு தனியறையில், விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு எந்த தொல்லைகளும் இல்லாமல் கண்களை மூடியபடி இந்தப்பாடலை கேட்கையில் ஏதோ ஒரு வலி உங்களைத்தாக்கும். உங்கள் மனதுக்கு பிடித்தவர் முகத்தை இதயத்தின் உள்ளே எவ்வளவு ஆழத்தில் புதைத்து வைத்திருந்தாலும், அதை வெளியே கொண்டுவரும் ஆற்றல் இந்தப்பாடலுக்கு உண்டு. அதுதான் இந்தப்பாடலின் வெற்றி.

Wednesday, October 6, 2010

இதழ்கள் கேட்கும் நேரம்

இந்தக் கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

இதையும் படியுங்கள்