Monday, July 12, 2010

ஷவர் ஒரு சந்தோஷ சாத்தான்

குளியலறைக்குள்
நுழைந்தபின்தான்
நியாபகம் வரும்
டவல் எடுக்க மறந்தது.

உனை அழைத்து கேட்க
வெட்கங்களுடனே
எடுத்துக்கொடுத்து
மின்னலாய் வெளியேறுவாய்.

என் இதழ்கள் உன் பெயரை

மெதுவாய் உச்சரிக்க,
தயங்கியபடியே உள்நுழைவாய்.


ஷவரின் நீர்துளி

உன்மீது படாதவாறு
எச்சரிக்கையுடன் ஒதுங்கி நிற்பாய்.

உன்னை அருகில்

இழுக்கும் வேலையை
கச்சிதமாக என் ஒரு கரம் செய்ய,


மறு கை ஷவரின் திறப்பானுக்கு
கட்டளையிடத்தொடங்கும்
மேலிருந்து நீர்த்துளி
பூவாய் பொழியத்தொடங்க,
பூவையின்ஆடைகள்
மொட்டவிழ்க்கத் தொடங்கும்.

உன் ஆடைகள் முழுவதும்
நீரால் சூழப்பட
நீயோ என்னால் சூழப்படுவாய்.

முழுக்க நனைந்தபின்

முக்காடு தேவையா என்று
நான் சூசகமாய் கேட்க,
முறைத்தவாறே திரும்பி நிற்பாய்.

விடுதலை என்றால்

எனக்கு மிகப்பிடிக்கும்.
அதை உன் அனுமதியின்றி
உன் ஆடைகளுக்கு கொடுப்பேன்.


உன்னை நோக்கி நான்
ஈர்க்கப்படுவதைப்போல நம்மை
நோக்கி நீர் ஈர்க்கப்படும்.

உலகிலேயே நம்
இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான்.

ஆடை தொந்தரவுகளின்றி
இருவரும் இதமாய்
அணைத்தபடி இருக்க,

நம்மிருவரையும் இன்னும்
நெருக்கமாய் இருக்க
வழி செய்தபடி
நம்மீது வழிந்தோடுகிறது
ஷவர் என்னும்
சந்தோஷ சாத்தானின்
நீர் தேவதைகள்.(இந்தக்கவிதை உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போடுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்)

52 comments:

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப அருமைங்க.

நேசமுடன் ஹாசிம் said...

அந்த நொடியை நினைக்க முடிந்தது உங்கள் அருமையான வரிகளில் பாராட்டுகள் தோழா

மின்சார கண்ணன் said...

ஐயோ எங்க வீட்டுல ஷவர் இல்லையே...
உடனடியா ஏற்பாடு பண்றேன்.

கவிப்ரியன் said...

//உலகிலேயே நம்
இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான். //


சான்ஸே இல்லை.. பின்னிட்டீங்க.. எக்ஸலண்ட் வரிகள்

கவிப்ரியன் said...

//விடுதலை என்றால்
எனக்கு மிகப்பிடிக்கும்.
அதை உன் அனுமதியின்றி
உன் ஆடைகளுக்கு கொடுப்பேன்//


அனுபவிச்சிருக்கீங்க.. ஒவ்வொரு வரிகள்லையும் ரொமான்ஸ் அருவியா பொங்கி வழியுது

ஆளவந்தான் said...

என்ன சொல்றதுன்னே தெரியலை.. அமர்க்களப்படுத்தி இருக்கீங்க. உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கிறேன். ப்ளீஸ் ஏத்துக்குங்க... "ரொமான்ஸ் கிங்"...

படிக்கும் போதே அந்த ரொமான்ஸை உணர முடியுது. தொடர்ந்து எழுதுங்க..

கவிதை காதலன் said...

//இராமசாமி கண்ணண் said... //
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

//நேசமுடன் ஹாசிம் said... //
நன்றி ஹாசிம். தொடர்ந்து படியுங்கள்...

//மின்சார கண்ணன் said... //
உடனே ஏற்பாடு பண்ணுங்க கண்ணன்

//கவிப்ரியன் said... //
மிக்க நன்றி கவிப்பிரியன்..

//ஆளவந்தான் said... //
மிக்க நன்றி ஆளவந்தான் சார். பட்டம் எல்லாம் வேண்டாம். கவிதைகளை படிச்சிட்டு தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள் அது போதும். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

தென்றல் said...

பார்த்து சார்.. ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது..

தென்றல் said...

இது அனுபவமா? கற்பனையா?
(கண்டிப்பா கற்பனைன்னுதான் சொல்லப்போறீங்க)

வார்த்தைகளைப்பார்த்தால் இது கற்பனைமாதிரி தெரியலையே..
ரொம்ப என்ஜாய் பண்ணி எழுதின மாதிரி இருக்கே...

Arvind said...

தயங்கி தயங்கி போற அந்த புகைப்படம் அருமை.... அதைவிட ரெண்டாவது புகைப்படம் சூப்பரோ சூப்பர். ஷவர்ல இருந்து தண்ணீர் கொட்ற மாதிரி இருக்கிற அந்த புகைப்படம் எக்ஸலண்ட்... மனோஜ் பரமஹம்ஸாவோட ஒளிப்பதிவு பார்த்த மாதிரி புகைப்படம் அவ்ளோ அழகா இருக்கு. சொல்லப்போனா உங்க கவிதைகளோட அழகை இந்த புகைப்படங்கள்தான் உயர்த்திக்காட்டுது. நல்ல ரசனை உங்களுக்கு,,,,,

Arvind said...

//உலகிலேயே நம்
இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான்//


செமையான லைன்ஸ்....

ப்ரியமுடன் வசந்த் said...

romantic poem கிரேட்..

அபுஅஃப்ஸர் said...

நீண்ட நாள் கழித்து பின்னூட்டமிடுகிறேன். அருமை என்ற வார்த்தை தவிர வேறில்லை.

நம் இருவருக்கு மட்டுமே மழை பெய்யும் இடம் குளியலறை

அதிகம் ரசித்த வரி

Vishnu said...

சார் உங்களுக்கு டவல் குடுத்த தேவதை யாருன்னு சொல்லவே இல்ல...........................(கொஞ்ச நாளாவே நீங்க ரொமாண்டிக இருக்கீங்க )

Vishnu said...

தென்றல் .............
அவருக்குத்தான் டவல் குடுக்க ஆள் இருக்கே அப்பரம் எப்படி தென்றல் அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும்?

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
ஐயோ நான் படித்ததிலேயே மிக சிறந்த ரொமாண்டிக் கவிதைகள் இதுதாண்டா மச்சி.நீ தாண்டா உண்மையான கவிஞன்.நீ கவிதை காதலன் தான் மச்சி.கரெக்ட் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை கவிதைகளின் காதலன்.கவிதையும் உன்னை காதலிக்க போட்டி போடும் மச்சி.உன்னால மட்டும் எப்படி டா முடியுது.
//விடுதலை என்றால்
எனக்கு மிகப்பிடிக்கும்.
அதை உன் அனுமதியின்றி
உன் ஆடைகளுக்கு கொடுப்பேன்.//
என்ன வரிகள் டா மச்சி,போடா என்னால எதுவுமே எழுத முடியல.அப்படி இருக்கு.வார்த்தைகள் இல்ல இந்த வரிகள பத்தி எழுத.
//உலகிலேயே நம்
இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான்//
காதலில் மட்டுமே அனைத்தும் சாத்தியம்,பார்த்தாயா இருவருக்கு மட்டுமே பெய்யும் மழை.நான் மிகவும் ரசித்த வரிகள் டா மச்சி.
//நம்மிருவரையும் இன்னும்
நெருக்கமாய் இருக்க
வழி செய்தபடி
நம்மீது வழிந்தோடுகிறது
ஷவர் என்னும்
சந்தோஷ சாத்தானின்
நீர் தேவதைகள்.//
இதை எல்லாம் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.உன் இந்த கவிதைகள் என்னை அந்த மிக பொன்னான நாட்களுக்கு மீண்டும் அழைத்து செல்கிறது.நான் என்னதான் எழுதினாலும் இந்த கவிதைகளை புகழ வார்த்தைகள் இல்லை மச்சி.ஒரு சில விஷயங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.அது போல தான் உன் கவிதைகளை புகழ்வதும்.
வாழ்த்துக்கள் மச்சி.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ரசிக தீவிரவாதிகளுக்காக.எப்பவும் இதே மேரி பிரியாணியா போடுங்க தர்ம பிரபு.

வெறும்பய said...

//உலகிலேயே நம்
இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான். //

அந்த நொடியை நினைக்க முடிந்தது உங்கள் அருமையான வரிகளில் பாராட்டுகள் தோழா

கவிதை காதலன் said...

//தென்றல் said... //
தென்றல் இது கற்பனையா உண்மையா அப்படிங்கிறதை நான் உங்க யூகத்துக்கே விட்டுடறேன்.

//Arvind said... //
மிக்க நன்றி அர்விந்த்,

//ப்ரியமுடன் வசந்த் said... //
தேங்க்யூ வசந்த் சார்

//அபுஅஃப்ஸர் said... //
அடிக்கடி பின்னூட்டமிடுங்கள் அபுஅஃப்ஸர். உங்கள் கருத்துக்கள்தான் என்னை மேலும் எழுதவைக்கும்.

//வெறும்பய said... //
மிக்க நன்றி.. இதை அனுபவிச்சிருக்கீங்க போல

கவிதை காதலன் said...

விஷ்ணு சார்.. டவல் கொடுத்தது வேற.. ஷவர் வேற... உங்களுக்கு தெரியாதா??? நான் சொல்லிடட்டுமா???

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said...
உன் இந்த கவிதைகள் என்னை அந்த மிக பொன்னான நாட்களுக்கு மீண்டும் அழைத்து செல்கிறது//

பார்த்தி ரொம்ப நனைஞ்சிருக்க போல... உங்க வீட்டுலதான் ஷவர் இல்லையே.. அப்போ எங்கே?????? ம்ம்ம்ம்ம்.. கெட்ட பையன்டா நீ..

பிரதிபலிப்பான் said...

//விடுதலை என்றால்
எனக்கு மிகப்பிடிக்கும்.
அதை உன் அனுமதியின்றி
உன் ஆடைகளுக்கு கொடுப்பேன்//

ரொம்ப அருமையா இருந்தது.

வாழ்த்துக்கள் இன்னும் இது போன்றொரு கவிதை வடிக்க.

ஸ்வீட் ராஸ்கல் said...

ஷவர் எங்க வீட்ல தானே இல்ல.

ஸ்வீட் ராஸ்கல் said...

நா ரொம்ப நல்ல பையன் கவிதை காதலன் சார்.உங்களுக்கு தெரியாதது இல்லையே.

Anonymous said...

ஏண்டா டேய்.. கவிதைனு சொல்லி கண்றாவியா எழுதுறியா நீ... இருடா உன்ன கூகுள்-ல Abuse பண்றேன்...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நடைமுறைகளை மிக்கவும் ரசித்து
எதார்த்தமாக எழுதியக் கவிதை வரிகள் அருமை . பகிர்வுக்கு நன்றி

சி. கருணாகரசு said...

நல்ல துணிச்சலோடு எழுதியிருக்கிங்க ....
பாத்து வழுக்காம இருந்தா சரித்தான்.
கவிதை அருமை.

கவிதை காதலன் said...

// பிரதிபலிப்பான் said... //
மிக்க நன்றி பிரதிபலிப்பான்..

// பனித்துளி சங்கர்..said... //
மிக்க நன்றி சங்கர்.

//Anonymous said... //
அது ஏன் திட்டும் போது முகம்தெரியாதவரா வந்து திட்டுறீங்க?? உங்களுக்கு முகம் இல்லையா? இல்லை பேர் இல்லையா? தைரியமா திட்டுங்க.. நீங்க சொல்லலைன்னாலும் பரவாயில்லை... நீங்க எந்த ஐபி அட்ரஸ்ல இருந்து கமெண்ட் போட்டு இருக்கீங்கன்னு ஏதோ என் சிற்றறிவுக்கு தெரியும்.

Anonymous said...

எந்த விதமான தலைப்புகளிலும் தயங்காமல் கவிதை எழுதுவது பெரிதல்ல. அதை அடுத்தவர்கள் படிக்கும் விதமாக பிரசுரிப்பது தான் முக்கியம்.
அது உங்களால் முடிகிறது. பாராட்டுக்கள்.
எல்லைகளை தாண்டிவிடாமல் வார்த்தைகள் அமைந்திருப்பது சிறப்பாக உள்ளது. சொல்ல வரும் கருத்துக்களை சுருக்கமாக அதிலும் தெளிவாக சொல்லி இருப்பது அருமை. கவிதை என்றாலே கலக்கும் உங்களுக்கு காதல் கவிதைகள் அதிலும் romantic கவிதைகள் சிறப்பாக கை கொடுக்கின்றன. மீண்டும் கலக்க ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்.

ஆண்டாள்மகன் said...

நல்லா இருக்கு

கவிதை காதலன் said...

நன்றி தோழி.. ஒரு நண்பர் நான் வரையறை மீறி எழுதி இருப்பதாக கோபப்பட்டார். "விடைகொடு எங்கள் நாடே" என்று எழுதிய வைரமுத்துதான் "எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்" என்றும் எழுதினார். அதற்காக அந்தபாட்டை வைத்து வைரமுத்து அவர்களை எடைபோட முடியுமா? அது கவிஞனுக்கு கொடுக்கப்பட்ட சூழல். அந்த சூழலிலும் அவரால் இயங்க முடிந்தது. இந்த கவிதையின் களம் அப்படிப்பட்ட ஒரு தளம்தான். நான் இதில் எந்தவிதமான எல்லைக்
கோட்டையும் மீறவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் என் தோழர்கள் முக்கியமாக தோழிகள் பலரும் இதைப்படித்துவிட்டு ரசித்தார்கள். தங்களின் கருத்தை இந்த இடத்தில் நான் மிக முக்கியமானதாக க்ருதுகிறேன். நன்றி தோழி..

கவிதை காதலன் said...

//ஆண்டாள்மகன் said//
மிக்க நன்றி நண்பரே... முதல் முறை வருகை புரிந்திருக்கிறீர்கள். தொடர்ந்து படியுங்கள். நீங்கள் ராணுவத்தில் இருக்கிறீர்களா?

தென்றல் said...

சார்.. நான் ஒரு பெண். எனக்கு இந்தக்கவிதை மீது ரசிப்புத்தன்மைதான் இருக்கிறது. தவறாக எதுவும் தோன்றவில்லை. ஏன், நம் தோழிகள் நதியா, ப்ரியங்கா, அஸ்வினி கூட மிகவும் ரசனையாய் இருக்கிறது என்றுதான் கூறினார். என் அப்பா கூட இந்தக்கவிதையை படித்தார். இந்திரா அவர்களும் ரசனையுடன் தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஒரு விஷயத்தை எப்படி பார்க்கிறோம் என்ற கண்ணோட்டத்தில்தான் கலை அடங்கி இருக்கிறது. ஓவியக்கல்லுரியயில் ஆடையின்றி இருக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் பார்ப்பதற்கும், ஓவியர்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு அது கலை. மற்றவர்களுக்கு அது ஆபாசம். ஏதோ பொறாமையினால் திட்டுவதற்கு கூட சொந்த முகம் இல்லாமல் அனானியாக வந்து திட்டுபவர்களின் பேச்சுக்களை கருத்தில்கொண்டு உங்கள் படைப்புகளைப்பற்றி நீங்களே சுயவிமர்சனம் செய்துகொள்ளாதீர்கள்.

Vishnu said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ...................... ஒரு தென்றல் புயலாகி வருதே.............

Vishnu said...

"நல்ல இருக்கு" இதுக்கும் ராணுவத்துக்கும் என்ன சார் சம்பந்தம் ?

Jey said...

கொஞ்சம் மீறினாலும், ஆபாசமாகிவிடுகிற , விஷ்யம், அழகாக அற்புதமாக எழுதியிருக்கிரீர்கள்.
பொருத்தமான படங்கள்.:)

கவிதை காதலன் said...

மிக்க நன்றி ஜே... தொடர்ந்து படியுங்கள்....

கவிதை காதலன் said...

தென்றல் உங்கள் கருத்துக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்

Karthick Chidambaram said...

அருமைங்க .... அகப்பாடல்.

Karthick Chidambaram said...

அருமைங்க .... அகப்பாடல்.

மங்குனி அமைச்சர் said...

nice one

Ananthi said...

Nice kavithai..

Anonymous said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.

திவ்யாஹரி said...

ரொம்ப ரசிச்சி எழுதுறிங்க கவிதை காதலன்.. nice one..

Bala said...

அருமையான வரிகள்... ஷவரில் நனைந்த அனுபவம்... அருமை..

சே.குமார் said...

அருமையான கவிதை காதலுடன்.

சி.பி.செந்தில்குமார் said...

தபு சங்கரின் வரிகளின் தாக்கம் தெரிந்தாலும் உங்கள் கவிதை தனித்து தெரிகிறது,அதற்கான் லே அவுட்டும் சூப்பர்.திரைத்துறைக்கு முயற்சி பண்ணுங்க

SUREஷ் (பழனியிலிருந்து) said...

"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

// கவிதை காதலன் said...

அனைவருக்கும் உபயோகப்படும் விஷயம்//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.

ரமணிசுபி said...

மணி சார் ,
ஒன்னு நீங்க வேணும்னே டவல் ல மறக்கறீங்க. இல்ல, அவங்க உங்க வீட்டுல இருக்குற எல்லா டவலையும் எங்கேயோ போய் ஒளிச்சு வச்சுடறாங்க. எல்லாம் ஷவர் பண்ற வேலை.ஷவர்கே இவ்ளோ ரொமான்டிக் கவிதைநா , வீட்டுக்குள்ள அருவி வந்தா, எல்லாரும் கற்பனை பண்ணிக்கொங்க. எப்பிடியோ தினமும் குளிச்சா சரி. ஓகே ஓகே என்ஜாய்.

இளைய கவி said...

//உன் ஆடைகள் முழுவதும்
நீரால் சூழப்பட
நீயோ என்னால் சூழப்படுவாய்.//

ரொம்ப அருமையான வரிகள் தல ! அருமை அருமை

இளைய கவி said...

l

Anonymous said...

உலகிலேயே நம்
இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான்.-- awesome words.... reading again and again... lovely :)

பிரியமுடன் பிரபு said...

உலகிலேயே நம்
இருவருக்கு மட்டுமே
மழை பெய்யும் இடம்
நம் குளியலறைதான்.

/////////
MMMMM


MMMM NICE

இதையும் படியுங்கள்