Thursday, April 22, 2010

அங்காடித் தெரு - இது விமர்சனமல்ல

இது படம் பற்றிய விமர்சனமல்ல.. இந்தப்படம் எனக்குள் ஏற்படுத்திய சில உணர்வுகளைப்பற்றி மட்டுமே நான் பேசப்போகிறேன். இந்தப் படத்தைப்பற்றி எனக்குத் தெரிந்தவரை எல்லாரும் அவரவர்கள் வலைத்தளத்தில் எழுதி முடித்துவிட்டார்கள். அதனால் இந்தப்படத்தைப்பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. ஒவ்வொரு முறை இந்தப்படத்தை பார்க்கும் போதும் ஏதோ ஒரு புது அனுபவம் மனதிற்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இதுவரை 10 முறை படத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் இந்தப்படம் மீதான என் காதல் குறையவில்லை. இன்னும் குறைந்தது 20 முறையாவது பார்ப்பேன். நானும் இதே துறையில் இருந்துக்கொண்டு இந்தப்படத்தைப்பற்றி எழுதவில்லை என்றால் என் மனசாட்சி என்னை சும்மா விடாது.

சமீபகாலத்தில் இந்த அளவிற்கு ஒரு படம் என்னை ஈர்த்ததில்லை. இந்தப்படத்தை பற்றி எதை சொல்வது எதைவிடுவது என்றே புரியவில்லை. "அங்காடித்தெரு" என்று துணிகள் மாட்டும் ஹேங்கரை எழுத்துக்களாக வடிவமைத்திருக்கும் ஸ்டைலில் இருந்தே டைரக்டரின் ராஜ்ஜியம் தொடங்கிவிடுகிறது. இரவு நேரத்தில் ஒரு அழகான ரொமாண்டிக் பாடலை ரசித்தபடியே மெதுவாய் அமர்ந்திருக்கும் பார்வையாளனை, ஒரு விபத்தின் வழியே அதிர்ச்சிக்குள்ளாக்கி, பின்னோக்கி கதையின் வழியே பயணிக்க வைத்திருப்பது வசந்தபாலன் டச். கதை கதைன்னு டீவிடி பார்த்து அலையும் இயக்குனர்களுக்கு "கதையை தேடி எங்கேயும் அலையாதீங்கடா, அது நம்ம கண்ணுக்கு எட்டுற தூரத்துலேயே இருக்கு"ன்னு வசந்த பாலன் செமத்தியான பாடம் நடத்தி இருக்கார். எத்தனையோ தடவை நாம் கடந்து போயிருக்கிற அந்த தெருவோட இன்னொரு முகத்தை பாருங்கடான்னு வசந்தபாலன் திறந்து காட்டி இருக்கும் பக்கங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

கோடி கோடியாய் புழங்கும் வணிக நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் தெருக்கோடி மனிதர்களின் வாழ்க்கையை இதற்கு முன் யாரும் இந்த அளவிற்கு துணிச்சலுடன் சொல்லியதில்லை. வசந்தபாலன் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். சாப்பாட்டு தட்டுக்கு கூட அடுத்தவன் சாப்பிடும் வரை காத்திருந்து தட்டு பெறும் அவல நிலை, ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் ஒவ்வொரு ரூபாய் அபராதம், வேலை பார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் என வசந்த பாலன் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் இதயத்திற்குள் இடியாய் இறங்குகின்றன.

மகேஷுக்கு அஞ்சலி மீது காதல் துளிர்க்கும் அந்தக்கணம் இதுவரை தமிழ்சினிமா பார்க்காதது. சுப்பர்வைசர் செய்த அத்துமீறலை அழுதவாறு சொல்லியபடியே கஸ்டமர்களை கவனிக்கும் அஞ்சலியின் நடிப்புக்கு கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மனதை உறைய வைத்த காட்சி இது. இதுவே மற்ற இயக்குனர்களாக இருந்தால் அஞ்சலி சொல்லும் அந்த விஷயத்தை "விளக்கமாக" காட்டி படத்தின் வியாபாரத்திற்கு அதை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் வசந்தபாலன் அதை வெறும் வசனத்திலே காண்பித்து பார்வையாளனை அதிர செய்கிறார். காதல் வயப்படும் முன் சூப்பர்வைஸரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொள்ளும் அஞ்சலி, மகேஷின் மீது காதல் வயப்பட்டபின் அதே சூப்பர்வைஸரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறுகையில் காதலின் முழு வலிமையை இங்கு சூசகமாக வசந்தபாலன் உணர்த்துவதை அதிசயிக்க முடிந்தது.

அஞ்சலி.... என்னவென்று சொல்வது இவரைப்பற்றி? மகேஷை மிரட்டுவதாகட்டும், மகேஷிடம் காதல் வயப்படுவதாகட்டும், அவனிடம் கோபம் கொண்டு திரிவதாகட்டும், சினேகா என்னை விட அழகா? என்று பெண்களுக்கே உரிய பொறாமையில் கேட்பதாகட்டும், கால்களை மிதித்துவிளையாடும் அழகாகட்டும், இவன் ஒருத்தன்கிட்டேயாவது மான ரோஷத்தோடு இருக்கேனேன்னு தன் இயலாமையை சொல்வதாகட்டும், பாத்ரூமுக்குள் மகேஷை ஒளித்துவைத்து தவிப்பதாகட்டும் என எல்லா காட்சிகளிலும் அஞ்சலி பிரமிப்பு ஏற்படுத்துகிறார். சொந்தக்குரலில் பேசியிருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. அஞ்சலி நீங்க மனசுக்குள்ள உட்கார்ந்து வெளிய போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. விஜய், அஜீத், போன்ற ஹீரோக்களே தயவு செஞ்சு இந்தப்பொண்ணை உங்களுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டுவிடாதீர்கள். இந்தப்பெண்ணையாவது "நடிக்க" விட்டு வையுங்கள்.

மகேஷ்…… கடந்த பத்து வருடங்களில் இது போன்ற ஒரு அட்டகாசமான அறிமுகம் யாருக்கும் கிடைத்திருக்காது. ஒரு சின்ன வெள்ளந்தி சிரிப்பு, கோபம், இயலாமை, வறுமை, அவமானம், வேலைக்காக பயந்து கதறுவது என ஒரு புதுமுகத்தால் சுமக்க முடியாத அளவிற்கு சுமந்திருக்கிறார். “மாப்பிள்ளைக்கு ஒரு லட்சம் கொடுக்குற அளவுக்கு உங்க அப்பனுக்கும் வசதி கிடையாது” என்று பாத்ரூமில் அஞ்சலியிடம் வெடித்து பேசுகையில் அப்ளாஸ் அள்ளுகிறார். மகேஷுக்கும் அஞச்லிக்கும் இடையில் இருக்கும் காதல் உணர்வு அவ்வளவு அழகு.. கெமிஸ்டரி கெமிஸ்டரி என்று சொல்வார்களே.. அது அநியாயத்திற்கு வேலை செய்திருக்கிறது இருவருக்கும் இடையில்.


பின்னால் இருந்து மெதுவாய் அழுதபடியே மகேஷை அஞ்சலி கட்டிப்பிடித்துக்கொள்ளும் அந்தக்காட்சி சூப்பர்ப்..மிக மிக உணர்வுபூர்வமானது. எத்தனையோ படத்துல எத்தனையோ பேர் கட்டி பிடிச்சு இருக்காங்க. ஆனா இவங்க ரெண்டு பேர் கட்டிப்பிடிக்கும் போது ஏற்படுற வெப்பத்தை நம்மாலும் உணர முடிகிறது. தமிழின் மிக முக்கிய காதல் காட்சிகளை வரிசைப்படுத்தினால் இந்த காட்சிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

ஜெயமோகன் சார்... இதுவரைக்கும் தமிழ்சினிமா உங்களை சரியா பயன்படுத்திக்காததுக்கு வெட்கப்படணும் சார். உடல் வளர்ச்சியில்லாத அந்த மனிதரது மனைவி பேசும் டயலாக், "விக்கத்தெரிஞ்சவன்தான் இங்க ஜெயிப்பான்", "யானை வாழற காட்டுலதாண்டா எறும்பும் வாழுது," வாவ்.. என்ன மாதிரியான பவர்புல் டயலாக்ஸ்... ஒரு எழுத்தாளனோட ஆளுமை என்னங்கிறதை ஆணி அடிச்சமாதிரி புரியவெச்சிருக்கீங்க சார்.

சுப்பர்வைஸராக வரும் இயக்குனர் வெங்கடேஷ்... என்ன ஒரு லாவகமான நடிப்பு? சோடா புட்டி கண்ணாடியை மீறி கண்களில் தெரியும் கோபமும், வார்த்தைகளில் தெறிக்கும் உக்கிரமும் நெஞ்சில் பதைபதைப்பை ஏற்படுத்துகிறார். ஒரு கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்ட இவருக்குள் இப்படி ஒரு கலைஞனா? அசத்திட்டீங்க சார்.


“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை”,. “உன் பேரை சொலும் போதே” என இரண்டு பாடல்களும் மிக அருமை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “கதைகளைப்பேசும் விழி அருகே” பாடல்தான். சூப்பர் ரொமாண்டிக் சாங். இரவு நேர சென்னை இவ்வளவு அழகா என்று இந்தப்பாடலில் வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மகேஷும், அஞலியும் செய்யும் சின்னச்சின்ன குறும்புகளும், அவர்களுக்கு இடையில் இருக்கும் அந்நியோன்யமும் என்னை மிகவும் ரசிக்க வைத்தது. இதுவரை இந்தப்பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.

எப்பவோ ரிலீசுக்கு தயார் ஆகியும் இவ்ளோ தாமதமாகத்தான் இந்த படத்தை வெளியிட முடிந்திருக்கிறது. ஒரு நல்ல படைப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதில்லை. அதை சினிமாவில் இருப்பவர்களே ஆதரிப்பதில்லை என்பதுதான் உண்மை. இல்லையென்றால் விநியோகஸ்தர்கள் எப்போதே இந்தப்படத்தை வாங்கி இருப்பார்களே? ரசிகர்கள் இந்தப்படத்திற்கு கொடுத்திருக்கும் ஆதரவைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. ரசிகர்கள் கொடுக்கும் இது போன்ற அங்கீகாரம்தான் ஒரு இயக்குனரை மீண்டும் மீண்டும் இது போன்ற அற்புத படைப்புகளை நோக்கி பயணிக்க வைக்கும். ஒரு நல்ல கலைஞன், நல்ல படைப்பு என்றுமே தோற்காது என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.


இந்தப்படத்தில் குறைகளே இல்லையா என்றால்... இருக்கிறது... அது எல்லாம் எங்கேயோ மூலையில் இருக்கிறது. குறைகளை சுட்டிக்காட்டி இந்த படத்தின் தரத்தை சிதைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும். நம்மால் இந்த படைப்பாளிகளுக்கு கொடுக்க முடிந்தது கைத்தட்டல்தான். அந்த கைத்தட்டல்தான் இது போன்று நல்ல படம் எடுக்கும் படைப்பாளிகளுக்கான உற்சாக மருந்து.

அதை குறைகளை சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் போட்டுக்கிழிக்க நான் விரும்பவில்லை.


49 comments:

Ramesh said...

இது விமர்சனமல்ல...அதற்க்கும் மேல். 10 முறை பார்த்ததின் பாதிப்பு நன்றாக தெரிந்தது.

ஸ்ரீராம். said...

விமர்சனமில்லைதான்....ரசனைப் பகிர்வு...!

சேட்டைக்காரன் said...

மிக மிக நுணுக்கமான ஆய்வு போலிருக்கிறது பதிவு. பாராட்டுக்கள்

seemangani said...

அருமை பகிர்வு நண்பரே...நான் ஏழு முறை பார்த்து விட்டேன் நீங்கள் உணர்ந்த அத்தனையும் நானும் உணர்ந்து... சொல்ல போனால் அதிலிருந்து இன்னும் மீளவில்லை...அவர்களை மிக அருகில் இருந்து பார்த்தவன் என்பதாலோ என்னவோ...நன்றி...

திருவாரூரிலிருந்து சரவணன் said...

//இந்தப்படத்தில் குறைகளே இல்லையா என்றால்... இருக்கிறது... அது எல்லாம் எங்கேயோ மூலையில் இருக்கிறது. குறைகளை சுட்டிக்காட்டி இந்த படத்தின் தரத்தை சிதைப்பதில் எனக்கு விருப்பமில்லை. இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும். நம்மால் இந்த படைப்பாளிகளுக்கு கொடுக்க முடிந்தது கைத்தட்டல்தான். அந்த கைத்தட்டல்தான் இது போன்று நல்ல படம் எடுக்கும் படைப்பாளிகளுக்கான உற்சாக மருந்து.

அதை குறைகளை சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் போட்டுக்கிழிக்க நான் விரும்பவில்லை.//

இதை நான் ரொம்ப பெருமையோட பாராட்டுறேன். பல மசாலா படங்களில் எங்கோ ஒரு மூலையில் கூட நல்ல விஷயங்கள் இருப்பதில்லை. ஆனால் அதைப் பற்றி இங்கே யாரும் கேள்வி கேட்பதில்லை.

குப்பைத் தொட்டி அசிங்கமாக இருப்பதை யாரும் தப்பு சொல்ல மாட்டார்கள். வெள்ளை சட்டையில் மிகச் சிறிய கரை இருந்தால்தான் அது அனைவரின் கண்களையும் உறுத்தும். இந்த வகையில் அங்காடித்தெரு குழுவினர் மேன் மக்கள்தான்.

கமர்ஷியல் சினிமா கூட்டத்துக்குள் மூச்சுத் திணறி இவ்வளவு சமரசங்கள் குறைவாக யதார்த்தம் அதிகமாக இப்படத்தை எடுத்ததற்கு வசந்தபாலனையும் தயாரிப்பாளர்களையும் பாராட்ட வேண்டும். இங்கே நல்ல சினிமாவுக்கு ரசிகர்களோ திருட்டு டி.வி.டியோ எதிரி இல்லை. சினிமாக்காரர்கள்தான் எதிரி.

http://ilaiyabharatham.blogspot.com/2010/04/blog-post_13.html

Vishnu said...

சூப்பர் படம் (பாடம்) சார் ........
ஆனா நீங்க, அந்த பாத்ரூம் சுத்தம் செஞ்சி வேலைபாக்குரரே அவர சொல்லவே இல்ல ?
குழந்தை குள்ளமா இருக்குறதுக்கு அந்த பெண் சொல்லுற பதில்..... உண்மையாவே சூப்பர்.........

Vishnu said...

நேர்த்து நதியாவோட பர்த்டே
சோ
என்னுடைய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....
அப்போ நீங்க ??????

தென்றல் said...

விஷ்ணு சார்.. உங்க பர்த்டே, பிரதாப் பர்த்டே பத்தி எழுதின மணி சார் ஏன் நதியா பத்தி எழுதலை ?

தென்றல் said...

மிக அருமையான படம். நான் கண் கலங்கி பார்த்த படம். வசந்த பாலன் ஹாட்ஸ் ஆஃப்... உண்மையிலேயே அந்த குள்ளமானவரின் மனைவி பேசும் இடம் அருமை.

Vishnu said...

போங்க தென்றல் ........
மணி அவனோட சொந்த பொறந்தனாலே போடல?
அப்பறம் எப்படி அவனோட? ம்ம்ம்ம்......

தென்றல் said...

அப்போ ரெண்டுத்துக்கும் ஏதோ லிங்க் இருக்கு போல.. ஐ மீன் இரண்டு பொறந்த நாளுக்கும்...

Chitra said...

நம்மால் இந்த படைப்பாளிகளுக்கு கொடுக்க முடிந்தது கைத்தட்டல்தான். அந்த கைத்தட்டல்தான் இது போன்று நல்ல படம் எடுக்கும் படைப்பாளிகளுக்கான உற்சாக மருந்து.

அதை குறைகளை சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் போட்டுக்கிழிக்க நான் விரும்பவில்லை.

.....ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து உள்வாங்கி எழுதி இருப்பது தெரிகிறது.

Vishnu said...

அவனோட ப்ளோக்ல போடுவான்னு சொல்லவந்தேன்.....

இளமுருகன் said...

நல்லா இருக்கு சார்
அனுபவிச்சு எழுதி இருக்கீங்க

இளமுருகன்
நைஜீரியா

Vishnu said...
This comment has been removed by the author.
ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி சூப்பர் டா.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
அதகளப்படுத்தியிருக்க டா.நான் படத்தை பற்றி போட்ட ப்ளோக்யை எல்லாம் தூக்கி சாப்பிட்ட டா மச்சி.வார்த்தைகள் இல்ல சொல்றதுக்கு.நா கூட 10 தடவை பாத்துட்டேன் மச்சி.இன்னக்கி தான் 10 தடவை உனக்கு தான் தெரியுமே.இன்னும் 40 தடவை பாக்கி இருக்கு மச்சி.//சாப்பாட்டு தட்டுக்கு கூட அடுத்தவன் சாப்பிடும் வரை காத்திருந்து தட்டு பெறும் அவல நிலை, ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் ஒவ்வொரு ரூபாய் அபராதம், வேலை பார்க்கும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் என வசந்த பாலன் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் இதயத்திற்குள் இடியாய் இறங்குகின்றன.//
இவை அனைத்தும் உண்மை என்று சரவணா ஸ்டோர்சில் வேலை செய்யும் என் நண்பர்கள் சில பேர் சொல்லி கேட்டேன் இடி உண்மையாகவே இறங்கியது.
//சுப்பர்வைசர் செய்த அத்துமீறலை அழுதவாறு சொல்லியபடியே கஸ்டமர்களை கவனிக்கும் அஞ்சலியின் நடிப்புக்கு கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மனதை உறைய வைத்த காட்சி இது.
நீ சொல்வது 100 /100 உண்மையே மச்சி.இன்றைய நம் சினிமா அப்படிப்பட்ட கேடுகெட்ட வியாபாரத்தை தானே எதிபார்கிறது.ஆனால் வசந்தபாலன் சார் போல் ஒரு சிலரால் அது நடக்காமல் காப்பாற்றப்பட்டு வருவது கொஞ்சம் சந்தோஷப்படவைக்கிறது.
அஞ்சலி - இவரை பற்றி நீ சொன்ன அனைத்தும் உண்மை மச்சி.
இவங்க இப்படி நடிச்சதும் இல்ல.இவங்கள இப்படி அழகா யாரும் காமிச்சதும் இல்ல.எனக்கு கனி பைத்தியம் பிடிச்சிருச்சி மச்சி.என் mobileலின் அனைத்து இமேஜ் பக்கங்களையும் இவரே நிரப்பிவிட்டார்.சொல்ல போன அவங்களோட தீவிர ரசிகனாயிடேன் (தீவிரவாதியாயிடேன்).வார்த்தைகள் இல்ல இவங்க நடிப்ப பத்தி சொல்ல.
//விஜய், அஜீத், இந்தப்பெண்ணையாவது "நடிக்க" விட்டு வையுங்கள்.//
நூத்துல ஒரு வார்த்தை மச்சி.ஆனா இவங்க விட்டு வெய்க்க மாட்டங்களே.அப்படி வீட்டு வெச்சிட்டாங்கான, தமிழ் சினிமாவுக்கு அவங்க செஞ்ச பெரிய நல்ல காரியம் இதுவாதான் இருக்கும்.
மகேஷ் - இவரை பற்றி நீ சொன்ன அனைத்தும் அப்படியே முழுக்க முழுக்க உண்மையான வார்த்தைகள்.இவருக்கு மிகப்பெரிய எதிகாலம் இருக்கு மச்சி.இப்படி ஒரு அறிமுகம் இன்றைய பல முன்னனி ஹீரோக்களுக்கு கூட கிடைக்கவில்லை.கிடைத்த வாய்ப்புகளை அஞ்சலியுடன் போட்டி போட்டு வாழ்ந்திருக்கிறார்.இதற்க்கு நாமும்,மகேஷும், வசந்தபாலன் சார்க்குதான் நன்றியும்,அப்ளாஸ் கொடுக்கணும்.எல்லோரையும் தேர்வு செய்தது அவர் தானே.
//பின்னால் இருந்து மெதுவாய் அழுதபடியே மகேஷை அஞ்சலி கட்டிப்பிடித்துக்கொள்ளும் அந்தக்காட்சி//இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட மிகச்சிறந்த கொச்சைபடுத்தப்படாத மிக அரிதான காதல் காட்சிகளில் இதுவும் ஒன்று.என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை ஏற்படுத்திய காட்சி.நானே என் காதலியுடன் சேர்ந்த மாதிரி ஒரு சந்தோஷம் எனக்கு.நீ போட்ட இந்த போட்டோ என்னை ரொம்பவே கவர்ந்துருச்சி.நானும் ப்ளாக் போட்டேன்,பலருடைய ப்லோகையும் படித்தேன்.எல்லாவற்றையும் விட நீ போட்ட இந்த போட்டோ தான் மிகச்சிறந்த No - 1போட்டோ.
ஜெயமோகன் சார்,வெங்கடேஷ் சார்,விஜய் அந்தோனி சார்,ரிச்சர்ட் சார் எல்லாரப்பத்தியும் அவங்க பங்களிப்பை பத்தியும் அற்புதமா எழுதி அமர்களபடுதிட்ட மச்சி.
என்னிடம் பணம் இருந்தால் நிச்சயம் நான் இந்த படத்தை எப்போதோ ரிலீஸ் செய்து 1000 நாளாவது ஓட்டுவேன்.மச்சி நம் ரசிகர்கள் நிச்சயம் நல்ல படைப்புகளை கைவிடுவதில்லை.மீண்டும் நிரூபித்து விட்டார்கள்.
குறைகள் இருந்தாலும் அவற்றை சுட்டிக்காட்டாமல் விட்டதற்கு மிக்க நன்றி மச்சி.அதற்கு நீ சொன்ன காரணம் கைத்தட்ட வைக்கிறது உனக்காக.
Note - வெகு விரைவில் உலகம் அறியப்போகும் மிகச்சிறந்த 10 இயக்குனர்களில் ஒருவரே.Mr.மணி உங்களைதான் சொல்றேன்,யாரையும் தேடவேண்டாம்.உங்களுடைய முதல் படைப்பை இந்த அழகான குழுவை வைத்து எடுத்தால் நான் மிகவும் சந்தொஷபடுவேன்.என்னுடைய மிகப்பெரிய விண்ணப்பமும் கூட இது.
ரொம்பவே அருமையா எழுதியிருக்க மச்சி.எத எத யார்,யார் செய்யணுமோ அத,அத அவங்க அவங்க செஞ்சாதான் அது அழகா இருக்கும்.நா எழுதுனதைவிட 1000 மடங்கு சூப்பரா இருக்கு மச்சி.வாழ்த்துக்கள் டா.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் படைப்பை எப்போதும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் கொக்குகளுக்காக ( மீனை எதிபார்த்து ஒரு காலை தூக்கி தவமிருந்து காத்திருக்கும் கொக்கைபோல)

Riyas said...

அருமையான பதிவு, எனக்கு இன்னும் இந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உங்கள் பதிவு படம் பார்த்த உணர்வைத்தந்தது. பெண் ஆபாசத்தையும் வன்முறையையும் மட்டுமே காட்டினால்தான் படம் வெற்றி பெரும் என்ற கீழ்த்தர என்னம் கொண்ட தமிழ் இயக்குனர்களுக்கு செருப்பால் அடித்தது போலிருந்தது,,,உங்கள் பதிவு..

ரியாஸ்

Riyas said...

அருமையான பதிவு, எனக்கு இன்னும் இந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உங்கள் பதிவு படம் பார்த்த உணர்வைத்தந்தது. பெண் ஆபாசத்தையும் வன்முறையையும் மட்டுமே காட்டினால்தான் படம் வெற்றி பெரும் என்ற கீழ்த்தர என்னம் கொண்ட தமிழ் இயக்குனர்களுக்கு செருப்பால் அடித்தது போலிருந்தது,,,உங்கள் பதிவு..

ரியாஸ்

ஹேமா said...

நான் இன்னும் பார்க்கவில்லை.
இணையத்தில்தான் பார்க்க எனக்கு வசதி.நல்ல கொப்பி வரவில்லை.
காத்திருக்கிறேன்.நீங்கள் படம் பற்றிய சொல்லியிருக்கும் விதமே படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.நன்றி.

கவிதை காதலன் said...

//Ramesh said... //
நன்றி ரமேஷ் பத்து முறை மட்டுமல்ல. அதற்கு மேலேயும் பார்க்கலாம்.

//ஸ்ரீராம். said... //
மிக்க நன்றி ஸ்ரீராம்

//சேட்டைக்காரன் said... //
என்னை விட வசந்த பாலன் மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். நன்றி

சேட்டைக்காரன்

//seemangani said... //
மிக்க நன்றி சீமான் கனி அவர்களே, உண்மையிலேயே இந்தப்படம் போட்டு தாக்கிவிட்டது.

//திருவாரூரிலிருந்து சரவணன் said... //
உங்களது எல்லா கருத்துக்களுக்கும் நான் அப்படியே உடன்படுகிறேன். அங்காடித்தெரு பற்றிய உங்கள் பதிவும் ரசனையுடன் இருந்தது.

கவிதை காதலன் said...

//Vishnu said... //
விஷ்ணு சார்.. உங்க கமெண்ட் சூப்பர். கட்டண கழிப்பிடத்தை சுத்தம் செய்யறவரைப்பற்றி எல்லோரும் சொல்லிட்டதாலதான் நான் அதைப்பற்றி பெருசா சொல்லலை. பத்து தடவை பார்த்துட்டேன்னு சொன்னதும் படம் புரியலையான்னு கேட்டுடுவீங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன்...

கவிதை காதலன் said...

//தென்றல் said... //
தென்றல் நீங்களா இது? இதயம் இருக்கிற எல்லாரையும் இந்தப் படம் கண்டிப்பா பாதிக்கும்

//Chitra said... //
மிக்க நன்றி சித்ரா... உங்களுக்கு இந்தப்படம் பிடித்து இருந்ததா?

//இளமுருகன் said... //
கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி இளமுருகன்

//Riyas said... //
கண்டிப்பா படத்தை பாருங்கள் ரியாஸ். இவ்ளோ அழகியலான படத்தை மிஸ் பண்ணவே கூடாது.

//ஹேமா said... //
கண்டிப்பா பார்த்தே தீர வேண்டிய படம் இது. எப்படியாவது பார்த்துவிடுங்கள் ஹேமா

கவிதை காதலன் said...

//ஸ்வீட் ராஸ்கல் said... //

ஸ்வீட் ராஸ்கல் பத்தி உங்க எல்லோருக்கும் நான் ஒரு விஷயம் சொல்லிக்க ஆசைப்படுறேன். இந்த படத்துக்கு அஃபிஷியலா ஒரு PRO தேவையே இல்லை. இவர் ஒருத்தரே போதும். சொந்த செலவுல ஊர்ல இருக்கிற எல்லோருக்கும் டிக்கெட் வாங்கிக்கொடுத்து படம் பார்க்க வைக்கிறாரு. காலையில இருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் இந்தப்படத்தைப்பத்தி எல்லோருகிட்டேயும் பேசிப்பேசி எல்லோரையும் கிறுக்குபிடிக்க வைக்கிறாரு. அவரோட ஆபிஸ்ல, வீட்டுல, மொபைல்ல, எல்லாத்துலேயும் அங்காடித்தெரு பாட்டுக்கள்தான் எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கும்.விட்டா அஞ்சலிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணிடுவார் போல. இந்தப்படம் பார்த்ததுல இருந்து ஜெயமோகம் பைத்தியம் பிடிச்சு, அவரோட புத்தகங்களா தேடித்தேடி வாங்கி குவிக்கிறாரு.. ஒரு திரைப்படம் ஒரு மனிதனுக்குள்ள இந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுத்த முடியுமா? சான்சே இல்லை.. வசந்தபாலன் யூ ஆர் ரியலி கிரேட். தங்கள் உள்ளப்பூர்வமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி பார்த்திபன்..

nadhiya said...

அங்காடித்தெரு - தமிழின் மிக அற்புதமான படம். இப்படி ஒரு Genre'ல் ஒரு திரைப்படம் இதுவரை தமிழில் வந்ததில்லை. இப்படி ஒரு கதைக்களத்தை யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். அந்த தெருவிற்குள் சாதரணமாக நடப்பதே மிக கடினமாக விஷயம். அங்கு கேமராவை வைத்து, யாரும் கேமராவை பார்த்து விடாதபடி மெனக்கெட்டு ஷூட் செய்திருக்கும் அந்த உழைப்பிற்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கதாநாயகிகளை வெறும் கவர்ச்சி பொம்மைகளாக பார்க்கும் இயக்குனர்கள் மத்தியில் இப்படி ஒரு கதாநாயகியை திரையில் படைத்து வியக்க வைத்திருக்கிறார். அஞ்சலி தமிழ்சினிமாவில் மறக்க முடியாத நாயகிகள் வரிசையில் இந்த ஒரே படத்தில் இடம் பிடித்துவிட்டார். ஜெயமோகனை எல்லோரும் சிலாகித்து பேசுகிறார்கள். உண்மைதான். ஆனால் அவரது புத்தகங்களை படித்தவர்களுக்கு இதெல்லாம் சாதரணம் என்பது போல் தோன்றும். ஆனாலும் இந்தப்படத்தில் ஜெயமோகனின் வசனங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அரசனைப்போல் கம்பீரமாக வீற்றிருக்கின்றன. கை வலிக்க வலிக்க கை குலுக்கி பாராட்டப்பட வேண்டியர் இயக்குனர் வசந்தபாலன்.


மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இதே போல் பல அழகான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் கவிதை காதலன்.

Vishnu said...

hai .....ஸ்வீட் ராஸ்கல்
ஒரு நிமிஷம் லேட்டவந்தா ஒரு ரூபாய் கட்டவும்.......
இந்த மேட்டர் உங்களை ரொன்ப பாதிசிருக்கும்!
எனக்கு தெரியும் சார் .....
ஏன்னா?
அந்த மாதிரி rule உங்க ஆபீஸ்ல வச்சா உங்களுக்கு மாசத்துக்கே ஒரு ரூபா தானே கிடைக்கும்.........
கரெக்டா ?

Vishnu said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஒரு கலைஞனுக்கு இதை விட யாராலும் உற்சாகம் தர முடியாது. ஒருவனது குறைகளை சுட்டிக்காட்டி கூறுவதை விட அதில் உள்ள நல்ல விசயங்களை ஆராய்ந்து பாராட்டுவது பெரிய விஷயம். யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது உங்கள் பதிவு.
எனக்கு இந்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் உங்கள் பதிவு அந்த எண்ணத்தை எனக்குள் ஆழமாக தூண்டுகிறது. மேலும் இது போன்ற நல்ல பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...

//nadhiya said... //
மிக்க நன்றி நதியா உங்களுடைய கமெண்டே மினி விமர்சனமாக இருந்தது.

//எனது கிறுக்கல்கள் said... //
தயவு செய்து இந்தப்படத்தை பாருங்கள். ஒரு புது அனுபவத்தை நீங்களும் உணர்வீர்கள்.

விஷ்ணு சார்..பாவம் அவரு... விட்டுடுங்க..

வியா (Viyaa) said...

நிங்கள் கூறியது யாவும் உண்மையே நண்பரே.. நானும் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன்..உண்மையில் மிக அருமையான படம்,வார்த்தைகளால் சொல்ல இயலாது.இந்த படத்தை பற்றி நிங்களும் மிக அருமையாகவும் இனிமையாகவும் எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

ஸ்வீட் ராஸ்கல் said...

Mr.கமாண்டோ விஷ்ணு,
No டா செல்லம்,என்னோட லீலைகளையெல்லாம் இப்படி வெளிப்படையா சொல்லி என்ன பெருமைபடுத்தாதே. எனக்கு Publiciti பிடிக்காது.ஒன்னு மட்டும் சொல்றேன்,நாங்கெல்லாம் நேரம் பார்க்காம உழைத்து எங்க கம்பெனிய முன்னேத்துரவங்க.

ரசிகன்! said...

kandippaa idhu vimarsanam illa nu sonneenga...

but still...

ennaiya porutha varaikkum...
vimarsanam naa idhu dhan ... 100% idhu dhaan sir vimarsanam... romba rasichan...unarvupoorvamaa rasichan... mudhal muraiyaa oru vimarsanam ivlo aazhamaa azhagaa padikkaran...

padam paarthan... romba unarchi vasappattan..

ippo idhae padikka nerndhadhu... apdiye ezhundhu ninnnu... ungalukku kai thattanum pola irukku...

am jus loving this post.. .jus jus jus loving this post....

hats off sir...

Cheers,
Durai

கவிதை காதலன் said...

ஒரு விஷயத்தை நாம ரசிக்க ஆரம்பிச்சிட்டோம்ன்னா நம்மளை அறியாம அதன் மேல் ஒரு அதீத ஈடுபாடு வந்திடும். இந்த படம் மீதான் உணர்வுகளும் அப்படித்தான். கருத்துக்களுக்கு மிக்க நன்றி வியா..

ரசிகன் முதன் முறையாக வருகை புரிந்திருக்கிறீர்கள். படம் உங்களையும் மிகவும் பாதித்திருக்கிறது போல. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

pratap said...

முதல்ல நான் நதியாவுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சொல்லிடுறன்.
என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் நதியா.

pratap said...

இந்த படம் யாரை பாதிச்சதோ
இல்லையோ தெரியல,
ஆனா என்னை அதிகமாக
பாதிச்சது.ஏன்னா நானும்
அந்த retail ல தான் இருக்கேன்.
யாரோ வசதியாக வாழ்வதற்கு
நாங்க ரொம்ப கஷ்டபடுறோம்.
இப்படியும் பசங்க கஷ்டபடுறத
எடுத்த இயக்குனருக்கு ரொம்ப நன்றி.

pratap said...

பார்த்தி ஒன்னுமட்டும் தெரிசுக்கோ
கம்பொனி மட்டும்தான் உயரும்.

pratap said...

பார்த்தி பரவல மாசம் ஒரு ருபாய்
சம்பாதிப்பான்.ஆனா விஷ்ணு உனக்கு அதுகூட
வராது.மிலிட்டரி ல கட் அடிச்சது நீ மட்டும் தான் மச்சி

தென்றல் said...

எங்க ஹீரோ விஷ்ணு கட் அடிச்சாலும் கடமையில கரெக்ட்டா இருப்பாரு..
அவர் ஒரு கறுப்பு காந்தி...

Vishnu said...

mr . பிரதாப் சார்.......
நாட்டுக்கா உழைக்கும் போது சம்பளத்தை எல்லாம் பாக்க கூடாது புரியுதா?

thalaivan said...

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமை . நேர்த்தியான எழுத்து நடை

vignesh said...

really touching film and touching words......these r the tonics to creator.. first i should appreciate the commentator.....i agree all your comments sir..these kind of films induce me to do these kind of films...really this is a inspirations to all asst. directors and who are willing to make film.....

Aravindan said...

அழகிய விமர்சனம். வாழ்த்துகள். :)

Aravindan said...

அழகிய விமர்சனம். வாழ்த்துகள். :)

கவிதை காதலன் said...

//pratap said... //
பிரதாப் சார் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

//பனித்துளி சங்கர் said... //
பனித்துளி சங்கர் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

//vignesh said... //
மிக்க நன்றி விக்னேஷ்.. தொடர்ந்து படியுங்கள்

//Aravindan said... //
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அரவிந்தன்

சரண் said...

ஆஹா... அட்டகாசமான விமர்சனம்...
எம்மனசுல தோணுனத முக்காவாசி அப்படியே எழுதியிருகீங்க..

இப்பத்தாங்க படம் பாத்தேன்.. இந்த மாசம் ஊருக்கு வந்ததும் திரையரங்குக்குப் போய் கண்டிப்பா பாக்கோணும்..

இந்தப் படத்துக்கு கிடைச்சுருக்கற ஆதரவு ரொம்மப் ரொம்மப சந்தோஷமா இருக்குங்க..

நானும் படம் பாத்ததுல இருந்து அஞ்சலிக் கிருக்குப்பிடிச்சுப் போய்தான் திரியிறேன்.. அந்தப் பொண்ணு இதே மாதிரி நிறய நல்லப் படங்கள்ல நடிக்கணும் எவனும் நாரடிச்சுரக்கூடாத்துன்னு நெனக்கிறப்பத் தூக்கமே வரமாட்டேங்குது..

வசந்தபாலன்.. தமிழ் சினிமாவின் எப்போதோ ஒரு முறை வீசும் வசந்தம்..நம்ம மாதிரி ரசிகர்களுகேலாம் கொண்டாட்டம்..

ivingobi said...

Nanbare... migavum rasikka vaithu vitteergal padathai mattumalla ungalin pathivaiyum.... ivvalavu naerthiyaaga oru thiraippadam patri yaarum sonnathaaga enakku ninaivillai... aenendraal thiraip padathail ulla kuraigalai patri kooruvathuthaan vimarsanam enkira nilaiyai undaakki vittaargal.... athanai neengal thagarthuvitteergal..... neengalum miga viraivil pherum pugazhum pera manathaara vaazhthukiren.... vaazhthuakkaludan ivingobi www.vrfriendz.com

எவனோ ஒருவன் said...

மிக அருமையான பதிவு. என்னை மிகவும் கவர்ந்த காவியம்.. ஒரே நாளில் இரண்டு முறை நான் பார்த்த ஒரே திரைப்படம் 'அங்காடித் தெரு' மட்டுமே

Anand said...

பல திரைப்படங்களில் மொக்கையான காரணங்களுக்காக வரும் காதலை எல்லாம் சுபமாய் முடிக்கும் போது!!! அருமையான இந்தக் காதலையும் சுபமாய் முடித்து இருந்தால் மனத்திற்கு இதமாய் இருந்திருக்கும்...

கஷ்டப்படுபவர் வாழ்க்கை என்றுமே அப்படித்தான் இருக்க வேண்டுமா???

இதையும் படியுங்கள்