Wednesday, March 24, 2010

சோஃபாவின் வழி ஒரு சொர்க்கம்சலனமின்றிதான் கடந்து
கொண்டிருக்கும் நம் பொழுதுகள்..
சோஃபாவில் அமர்ந்தபடியே
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கையில்..

மெதுவாய் ரிமோட் பட்டன் மாற்ற
எத்தனிக்கையில் மெல்லிய கோபம்
உனக்குள் மலரத்தொடங்கும்.

வெடுக்கென்று பிடுங்கி
உன் விருப்பம் ஆள்வாய்.
என் கையினில் சிக்காதவாறு
உனக்குள் சிறைப்படுத்துவாய்.

அதை தேடுவது போல் உனக்குள்
நுழையும் என் விரல்களுக்கு
அனுமதி மறுப்பாய்.

அமெரிக்கா போல் அத்துமீறி
ரிமோட் இருக்கும் இடம் தவிர்த்து
அத்தனை பகுதிகளிலும்
ஆராயும் என் விரல்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று
பொய்கோபம் கொண்டவாறே
விரல்களுக்கு வழிவிடுவாய்.

கிறக்கமான கிள்ளல்களும்,
வெளிப்படையான மறைப்புகளும்
நம் விளையாட்டை இன்னும்
சுவாரஸ்யப்படுத்தும்.

தேடவேண்டியதை மறந்து
வேறு எதையோ தேடுவதற்காக
உன்னை நோக்கி நெருங்க
அப்போது வைரமுத்து
நினைவிற்கெட்டினார்.

"தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்"
ஆம்.... தேடலின் முடிவு
ருசிக்கத்தான் செய்தது.

உன் விரல்கள்
ரிமோட்டை மறைக்கவில்லை.
நானும் அதை தேடவில்லை.
ஆனாலும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சோஃபாவின் வழி ஒரு சொர்க்கம்
சென்று கொண்டிருக்கிறேன்.
அசெளகர்யங்களிலும் சில
செளகர்யங்கள் இருக்கத்தான் செய்கிறது....

எனக்காக ஆரம்பித்த உங்கள் சண்டை
என்னை மறந்து நடந்து கொண்டிருக்கிறதே!
என்று குழப்பத்துடன் நம்மை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
தொலைக்காட்சிkavithaikadhalan.blogspot.com
உங்களுக்கு இந்தக்கவிதை பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்களேன்

36 comments:

Chitra said...

:-)

பாலா said...

ada

மின்சார கண்ணன் said...

கடைசியில கடைச்சுதா இல்லையா? ஐ மீன் நான் ரிமோட்டை கேட்டேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!!! ரொமான்ஸ் மழையே பொழிந்து விட்டது.

yuva said...

//தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்//

எப்படி எல்லாம் மேட்ச் பண்றாங்கப்பா????

Anonymous said...

//அசெளகர்யங்களிலும் சில
செளகர்யங்கள் இருக்கத்தான் செய்கிறது....//

காதலர் பயங்கர ரொமான்ஸ் மூட்'ல இருந்திருக்காரு போல

தென்றல் said...

இந்த மாதிரி நேரத்துல உங்களுக்கு வைரமுத்து எல்லாம் நியாபகத்துக்கு வர்றாரா?

இராமசாமி கண்ணண் said...

கலக்கல்.

seemangani said...

//அமெரிக்கா போல் அத்துமீறி
ரிமோட் இருக்கும் இடம் தவிர்த்து
அத்தனை பகுதிகளிலும்
ஆராயும் என் விரல்கள்.//

அட...
உங்கள் கவிதையை இரண்டு மூன்று முறை படிக்க சொல்லி அடம்பிடிக்கிறது மனது...என்ன செய்ய??
அழகு ...

Madurai Saravanan said...

தேடலில் இவ்வளவு விசயமிருக்கிறதா?அருமை. ரிமோட்டல்லாவா இயக்கி இருக்கிறது. வாழ்த்துக்கள்

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

தொலைக்காட்சியில் சொர்கத்தை பார்க்கலாம்... தொலைக்காட்சிக்கே சோபாவின் வழியே சொர்க்கத்தை காட்டியிருக்கீன்றீர்கள்...

சொர்க்கத்தை நாங்களும் எங்கள் வீட்டில் தேட ஆயத்தமாய்...

Anonymous said...

சிறந்த ஒரு சில வரிகளை சுட்டிக்காட்டி என்னுடைய கருத்துக்களை எழுத விரும்பினேன்.. மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்தேன்.. ஒரு சில வரிகள் என்றல்ல.. முழுவதுமே மிகச்சிறப்பான வரிகளாய்த் தோன்றியது..
இயல்பாக இருவருக்குள் நடக்கும் ஊடலைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா என்று வியக்க வைத்தன உங்கள் எழுத்துக்கள்.. கவிதைக்கு ஏற்ற பொருத்தமான புகைப்படம்..
வாழ்த்துக்கள்.

கவிதை காதலன் said...

//சித்ரா//
மிக்க நன்றி

//பாலா//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

//சைவகொத்துப்பரோட்டா//
பார்த்து சார்.. ஜலதோஷம் பிடிச்சிடப்போகுது.;

//மின்சார கண்ணன்//
கிடைக்கவே இல்லைங்க.. ஐமீன் நானும் ரிமோடைத்தான் சொன்னேன்.

//யுவா//
என்னங்க பண்றது..மேட்ச் பண்ணாத்தானே வாழ்க்கை மேட்சா இருக்கும்.

கவிதை காதலன் said...

//Anonymous said... //
அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைங்க..

//தென்றல்//
ஏதோ நியாபகத்துல வந்திட்டாரு.. விட்டுடுங்க..

///இராமசாமி கண்ணண் said... //
மிக்க நன்றி சார்

//seemangani said... //
உங்கள் கருத்து என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. நன்றி

//மதுரை சரவணன்//
உண்மைதாங்க. இயங்கறது என்னமோ நாமதான். ஆனா இயக்கறது வேற எதுவோதான்.

//தஞ்சை.ஸ்ரீ.வாசன் said... //
தேடுங்க.. தேடுங்க.. கிடைக்கும் வரை தேடுங்க..


//எனது கிறுக்கல்கள்//
மிக்க நன்றி.. தொடர்ந்து படியுங்கள். உங்கள் பின்னூட்டம் மிகவும் உற்சாகப்படுத்துகிறது

My days(Gops) said...

நச்சினு ஒரு கவிதை :) .. ரிமோட் கண்டோரல் வாழ்க :)

ஸ்ரீராம். said...

ம்..க.கூம்... May I come in..? தேடி முடிச்சாச்சா?

என் நடை பாதையில்(ராம்) said...

தேடும் போது எந்த சேனல் பாதிடுருந்தீங்க.....?

கவிதை காதலன் said...

//கோபி//
மிக்க நன்றி

//ஸ்ரீராம்//
தாராளமா வரலாம் ஸ்ரீராம். தேடி முடிச்சாச்சு.

//என் நடை பாதையில்(ராம்) //
அடடா... அதை மறந்துட்டேனே..

Mohan said...

ஊடல் போலவே,கவிதையும் அழகாக இருந்தது!

Vishnu said...

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாலா சார்,,,,,நானும் ஒரு சோபா வாங்கமே விடமாட்டேன் .........

கவிதை காதலன் said...

//மோஹன்//
மிக்க நன்றி

கவிதை காதலன் said...

விஷ்ணு சார்... ஏணியே என்னைக்காவது படிக்கெட்டுல ஏற ஆசப்படலாமா? (உங்களுக்கு இது புரியும்'ன்னு நினைக்குறேன்)

Vishnu said...

சார்.......
அப்போ "Escalator "

கவிதை காதலன் said...

உதாரணத்துக்கு சொல்றதுல அர்த்தம் தேடக்கூடாது விஷ்ணு சார். உங்களுக்கு சோபா தேவையா அப்படிங்கிறதுதான் அந்த பதிலோட அர்த்தம். இப்போ சொல்லுங்க.

திவ்யாஹரி said...

:))

திவ்யாஹரி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..

கலா said...

கவிதைக் காதலரே!
என்ன அனுபவ வரிகளா!?
இதைப் படித்துவிட்டு....
பாடம் எடுக்கப் போகிறார்கள்
சிலர்.....

ம்மம்ம....ம்ம்ம்ம்.... கவிதை வழக்க
நடப்பு நன்றி

pratap said...

மச்சி superda ..... நல்லா இருக்குடா.
நீ ஒரு வைரமுத்து னு நினைச்சேன்
ஆனா s j சூர்யா மாதிரி கூட எழுதுற ..

pratap said...

விஷ்ணு மச்சி.....
ஷோபா வேணும்னா சங்கம் theatre
போய் படம் பாரு.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
கமெண்ட் லேட்டா போடுறதுக்கு மன்னிக்கவும்.கொஞ்சம் வொர்க் அதான் லேட்.சரி மேட்டர்க்கு வருவோம்.

இந்த முறை கவிதைகளில் ஒரு நல்ல ஊடல் தெரியுது டா.
//அமெரிக்கா போல் அத்துமீறி
ரிமோட் இருக்கும் இடம் தவிர்த்து
அத்தனை பகுதிகளிலும்
ஆராயும் என் விரல்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று
பொய்கோபம் கொண்டவாறே
விரல்களுக்கு வழிவிடுவாய்.//
இந்த HIDE & SEAK விளையாட்டு ரொம்பவே சூப்பரா இருக்கும்.அவள்,அவன் விரல்களுக்கு வழிவிடும் அந்த சம்மதம் தரும் சுகம் இருக்கிறதே சொல்ல வார்த்தைகள் இல்லை.
//தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்//
இந்த தேடல் தான் பல ஊடல்களுக்கு காரணமாய் இருககிறது என்று வைரமுத்துவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.இந்த தேடலுக்கு முடிவேயில்லை.தேடலுக்கு முடிவு இல்லை என்றால் வாழ்கை என்றுமே ருசியாகத்தான் இருக்கும்.மச்சி சொல்லபோனா எல்லா வரிகளுமே ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.எல்லாத்தையும் போட முடியாது.ஏற்கனவே நான் போடுற கமெண்ட் ரொம்ப பெரிசா இருக்குனு ஒரு சிலர் கலாய்கிறாங்க.So சிலவரிகளை மட்டுமே போட்டு இருக்கேன்.but எனக்கு எல்லா வரிகளுமே ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் படைப்பின் பாசக்கிளிகளுக்கு...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நிசப்தத்தில் ஓங்கி ஒலிக்கிறது உங்களின் உணர்வுகள்.
அருமையான கவிதை வாழ்த்துக்கள் !

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கு விருது கொடுத்து
உள்ளேன், பெற்று கொள்ளவும், நன்றி.

கவிதை காதலன் said...

விருது கொடுத்து பாராட்டிய திவ்யா ஹரி, மற்றும் சைவ கொத்து பரோட்டா இருவருக்கும் மிக்க நன்றி..

கவிதை காதலன் said...

//தங்களின் வருகைக்கு மிக்க நன்றி கலா..//

//பிரதாப் சார்.. எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு.. தலையே வெடிச்சிடும் போல இருக்கு//


//ஸ்வீட் ராஸ்கல் உங்க கமெண்ட் என்னை கலங்க வைக்குது. மிக்க நன்றி.//

/மிக்க நன்றி பனித்துளி சங்கர்//

Bala said...

//எனக்காக ஆரம்பித்த உங்கள் சண்டை
என்னை மறந்து நடந்து கொண்டிருக்கிறதே!
என்று குழப்பத்துடன் நம்மை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
தொலைக்காட்சி //

தொலைக்காட்சியின் பார்வையில் கவிதையை முடித்தது மிக அருமை

மா.குருபரன் said...

நல்லா இருக்கு நண்பரே... நல்லா ரசிச்சிருக்கிறீங்க...

இதையும் படியுங்கள்