Thursday, March 11, 2010

எங்கள் நண்பன் விஷ்ணுவின் பிறந்த நாள்

10.03.1984 கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாள். ஆம் அன்றுதான் எங்கள் விஷ்ணு இந்த உலகத்தில் வந்து பிறந்தநாள். இதுவரை எங்களோடு தன்னுடைய பிறந்த நாளை விஷ்ணு கொண்டாடியதில்லை என்பதால் எப்போதும் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு சரி (அந்த அளவுக்கு சார் இராணுவ வேலைகளில் பிஸி). ஆனால் இந்த வருடம் விஷ்ணு எங்களோடு இருப்பதால் சிறப்பாக கொண்டாடலாம் என்று முடிவெடுத்தோம்.

09.03.2010 அன்று வண்டலூர் சென்று விஷ்ணுவை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 11 ஐ தாண்டி இருந்தது. பிரதாப்பையும் பார்த்திபனையும் நேராக எங்கள் வீட்டிற்கு வர சொல்லிவிட்டோம். 11.30க்கு எல்லாம் இருவரும் வந்து விட்டார்கள். நால்வரும் மொட்டை மாடி சென்று கேக் (Black Forest), கூல்டிரிங்க்ஸ், சிப்ஸ், மிக்சர், என அனைத்தையும் மாடியில் செட் செய்து வைத்துவிட்டு 12 மணி நெருங்கும் வேளைக்காக காத்திருந்தோம்.

10.03.2010 மணி 12ஐ தொட்டதும் மூவரும் வாழ்த்துக்களை தெரிவித்தபடி விஷ்ணுவை கேக் வெட்ட சொன்னோம். எல்லாம் சரியாக செய்தும் கேண்டில் வாங்க மறந்துவிட்டோம். அதனால் விட்டில் உள்ள மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து கேக் வெட்ட சொன்னோம்‌.
"ஹேப்பி பர்த் டே" என்று பாடல் பாடியபடியே விஷ்ணுவை கேக் வெட்ட சொன்னோம். கமாண்டோ வீரனும் வெற்றிகரமாக கேக்கை வெட்டி முடித்தான்


வெட்டிய கேக்கை முதலில் பார்த்திபனுக்கு ஊட்டினான். வாங்கிய அன்புக்கடனை திருப்பி செலுத்தும் விதமாக, பார்த்திபனும் கேக்கை எடுத்து விஷ்ணுவிற்கு ஊட்டினான்.


அடுத்ததாக பிரதாப்பிற்கு ஊட்டினான். பிரதாப்பும் வாழ்த்துக்களை தெரிவித்தபடி விஷ்ணுவிற்கு கேக்கை ஊட்டினான்.

இறுதியாக எனக்கும் கேக்கை ஊட்டினான். கேக்கின் ருசியை விட, நண்பனின் கரத்தால் சாப்பிடும்போது இன்னும் இனிப்பாக இருந்தது.

பார்த்திபனும் பிரதாப்பும் விஷ்ணுவுக்காக ஒரு ஸ்பெஷல் கிஃப்டை வாங்கி வந்து இருந்தார்கள். அது மட்டும் இன்றி ஒரு பெரிய சைஸ் க்ரீட்டிங் கார்டும் கொடுத்தார்கள்.

அடுத்த‌தா பிர‌தாப்பும் நானும் விஷ்ணுவுக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தோம். அது என்ன‌ங்கிற‌து ச‌ஸ்பென்ஸ்.

ஒரு வ‌ழியா கேக் வெட்டி முடிஞ்சாச்சு. கிஃப்ட் எல்லாம் கொடுத்த‌ச்சு. கேக்கை எல்லாம் விஷ்ணு முகத்துல பூசி ஒரே அட்டகாசம். பொதுவா கேக்கை நாமதான் சாப்பிடுவோம். ஆனா கேக்கே அன்னைக்கு விஷ்ணுவை சாப்பிட்டுச்சு. (முகத்துல கேக் பூசினதுக்கு என்ன ஒரு பில்டப்?) அப்புற‌மா என்ன‌ ப‌ண்ண‌லாமுன்னு யோசிச்சோம். கொண்டு வ‌ந்த‌ ஸ்னாக்ஸ் எல்லாம் அப்ப‌டியே ஒரு ஓர‌மா பாவ‌மா இருந்துச்சு. அப்ப‌டியே அது எல்லாத்துக்கும் ஆத‌ர‌வு கொடுத்தோம். நைட்டு ரொம்ப‌ லேட்டா ஆயிட்ட‌தால‌ ப‌ர்த்டேவை கொண்டாடி முடிச்சிட்டு, வீட்டுக்கு வ‌ந்து பிறந்தநாள் அதுவுமா சாமி படம் பார்த்தா நல்லதுன்னு சொன்னதால ப‌ட‌ம் போட்டு பார்த்துகிட்டு இருந்தோம். நாளை காலையில‌ ப‌ட‌த்துக்கு போற‌தா பிளான் ப‌ண்ணினோம்.


மறுநாள் காலையில‌ நானும் விஷ்ணுவும் ச‌ர்ச் போயிட்டு, பிள்ளையார் கோவில் போய் விஷ்ணு பேர்ல‌ அர்ச்ச‌னை ப‌ண்ணிட்டு தியேட்ட‌ருக்கு போயிட்டோம். விண்ணைத்தாண்டி வ‌ருவாயா பட‌ம்.. ஒரே ரொமான்டிக் ஃபீல்தான்.

எல்லாருக்கும் ஏதேதோ நியாப‌க‌ம். ப‌ட‌த்துல‌ ரொம்ப‌ ஒன்றிட்டோம். கெள‌த‌ம் மேன‌ன் ர‌ச‌னையான‌ ம‌னுச‌ன். க‌ல‌க்கிட்டாரு. த்ரிஷா வேற‌ கேர‌ளா பொண்ணா வ‌ர்ற‌தால‌, விஷ்ணுவை ரொம்ப ஓட்டிகிட்டு இருந்தோம். ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ட‌ம். Feel Good Movie.

ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌ம் பார்த்த‌ திருப்தியில‌ ச‌ந்தோஷ‌மா தியேட்ட‌ர்'ல‌ இருந்து கிள‌ம்பினோம்.

******************************************************
ஒவ்வொரு பிற‌ந்த‌ நாளின் போதும் விஷ்ணு டெல்லி, காஷ்மீர்'ன்னு ஏதேதோ ஊர்ல‌ மாட்டிக்குவான். அவ‌ன் ப‌ர்த்டேவை கொண்டாட‌னும்ன்னு ரொம்ப‌ நாளாவே ஏக்கம் மனசுக்குள்ள ஒரு ஓரத்துல இருந்துகிட்டே இருந்தது. ஆனால் இந்த வருடம் அந்த ஆசை நிறைவேறும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.கடவுளுக்கு நன்றிகள்.

கடந்த வருடம் விஷ்ணுவின் பிறந்த நாளுக்கு நான் ஒரு வாழ்த்துகூட சொல்ல வில்லை. நண்பன் ஒருவனின் வார்த்தையை நம்பி விஷ்ணுவை தவறாகவே நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் என் தோழி ஒருவர் அன்று சொன்னது எனக்கு இன்றும் பசுமையாய் நியாபகம் இருக்கிறது. "கண்டவங்க‌ சொல்றதை எல்லாம் போட்டு மனசை குழப்பிக்காதே. நட்புக்குள்ள சந்தேகத்தை மட்டும் வளர விடாதே. நிச்சயமா அடுத்த பர்த்டே விஷ்ணு உன் கூடத்தான் கொண்டாடுவான். நீ வேணா பாரு" அப்படின்னு சொன்னாங்க.அவங்க அன்னைக்கு ஏதோ என்னை சமாதானப்படுத்தறதுக்கு தான் சொல்றாங்கன்னு நினைச்சேன். நல்ல மனசோட சொன்னா அது எப்பவுமே நடக்கும்'ன்னு நான் நேத்துதான் புரிஞ்சுகிட்டேன்.

என்னுடைய நண்பர்கள் பார்த்தி, பிரதாப்.. லீவே போட முடியாத இருவரும், விஷ்ணு என்று சொன்னதும் லீவ் போட்டுவிட்டு எங்களுடன் வந்து இந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாட உதவினார்கள். இவர்கள் இருவரும் இல்லை என்றால், நிச்சயமாய் இவ்வளவு மகிழ்ச்சியாய் இந்த நாள் இருந்திருக்காது.

அடுத்து விஷ்ணு.. கடைசி வரை கேம்பஸிலிருந்து வர முடியாத சூழ்நிலை.. ஆனாலும் நண்பர்களுக்காக வர முயற்சி செய்து, பல இன்னல்களை கடந்து எங்களுடன் இந்த பிறந்த நாளை கொண்டாடிவிட்டு போயிருக்கிறான். இந்த பிறந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். இந்த பர்த்டே'ல விஷ்ணு எங்க மூணு பேருக்கும் கொடுத்த ட்ரீட்டை விட, ஹெல்மெட்டுக்கு ஒரு ட்ரீட் கொடுத்தான் பாருங்க... அதுதான் ஹைலைட்.

விஷ்ணு "Wish you very very very Happy Birthday" மச்சி..

110 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

உங்கள் நண்பருக்கு எனது சார்பாகவும் , பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்.

kishore said...

இனிய பிற‌ந்த நாள் வாழ்த்துகள் விஷ்னு.. நல்லா என்ஜாய் பண்ணிஙளா? உங்களை ஒரு வாட்டி பார்க்கணும். சாரி மணி.. ரொமப நாளா கமெண்ட் போட முடியலை. மன்னிச்சுக்குன்க

James said...

"Thousands of candles can be lit from a single candle, and the life of the candle will not be shortened. Happiness never decreases by being shared.”

Hi vishnu.. B'lated birthday wishes to you. you guys really fantastic.

nadhiya said...

ஹாய் விஷ்ணு.. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். லைஃப்ல நாம் தொலைக்குற பல விஷயங்கள்'ல ரொம்ப‌ முக்கியமானது நட்பு. வாழ்க்கையில‌ எது எதுக்கோ நேரம் ஒதுக்குற நம்மால, நம்முடைய நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியறது இல்லை. ட்ரெயினிங் கேம்பஸ்'ல இருந்து வெளிய வர்றது எவ்வளவு கஷ்டமான விஷயம்'ன்னு எனக்கு தெரியும். அங்க இருந்து சிரமப்பட்டு வந்து நண்பர்கள் கூட நேரம் செலவழிச்சு இருக்கீங்கன்னா அது எவ்ளோ பெரிய விஷயம். பார்த்திபன், பிரதாப் கூட லீவ் போட்டுட்டு உங்க கூட இருந்தாங்க'ன்றதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. லைஃப்ல எப்பவும் சந்தோஷமா இருங்க ஃப்ரண்ட்ஸ்.

என‌க்கு உங்ககிட்ட‌ கேக்ககுற‌துக்கு ரெண்டு கேள்விக‌ள் இருக்கு (ஐ மீன் விஷ்ணு கிட்ட‌)


1.பிரதாப்பும்,மணியும் உங்க‌ளுக்கு கொடுத்த‌ கிஃப்ட் என்ன‌?
2.ஹெல்மெட்டுக்கு நீங்க‌ கொடுத்த‌ ட்ரீட் என்ன‌?

nadhiya said...

கடைசி ஃபோட்டோ யாரு எடுத்தது? அழகா இருக்கு.. அதே மாதிரி கீழ இருந்து மூணாவது ஃபோட்டோவும் அழகா இருக்கு. அநேகமா அது Self timer 'ல எடுத்ததுன்னு நினைக்குறேன். யாராவது ஒருத்தர்கிட்ட கொடுத்து எடுக்க சொல்லி இருக்கலாம். Nice Image

தென்றல் said...

Wish you b'lated birthday wishes vishnu..

//த்ரிஷா வேற‌ கேர‌ளா பொண்ணா வ‌ர்ற‌தால‌, விஷ்ணுவை ரொம்ப ஓட்டிகிட்டு இருந்தோம். //

அட.. நீங்க கேரளா பொண்ணை வெச்சி விஷ்ணுவை இப்படி கலாய்க்கறீங்களா? நாங்க எங்க ஃப்ரெண்டை எப்படி கலாய்ச்சோம் தெரியுமா? அந்த ஹீரோ அசிஸ்டெண்ட் டைரக்டர். So... (ஐயையோ நான் எதையாவது உளறிட்டேனா? நதி சுனாமியா பொங்கிடாதேம்மா..)

கவிப்ரியன் said...

வாழ்த்துக்கள் விஷ்ணு.. ஹாஃப் செஞ்சுரி அடிச்சிட்டீங்க.. ஆமா வ‌ண்ட‌லூர்'ல‌ என்ன‌ ப‌ண்னிகிட்டு இருக்கிங்க‌? அங்கே Zoo தானே
இருக்கு?

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
விஷ்ணுவோட பிறந்தநாள எப்படி கொண்டடினோமோ அதை அப்படியே கண்முன்னாடி நிறுத்திட்டே டா உன்னோடைய இந்த வார்த்தைகளால் மற்றவர்களுக்கு.
நதியா,தென்றல்,சைவகொத்துபரோட்டா,கிஷோர்,கவிப்ரியன்,James ,இனி மேலும் வரப்போகும் எல்லோரும் இந்த சந்தோஷத்துல கலந்துக்கிட்ட கற்பனையை அவர்களுக்கு முழுசா கொடுதிருக்க,கொடுப்ப,அவங்களுக்கும் கிடைத்து இருக்கும்னு நா நம்புறேன்.என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத நாட்கள்ல இந்த நாளும் சேர்ந்துருச்சி.கவிதை காதலனே உங்களிடம் சில கேள்விகள்.
விஷ்ணு அம்மா செஞ்ச குலாப் ஜாமூன் ரொம்ப நல்ல இருந்துதே அதை ஏன் மச்சி சொல்லல?.நம்ம விஷ்ணுக்கு கேக் அபிஷேகம் பண்ணோமே அந்த Photos ஏன் போடல?நீ கொடுத்த Gift என்னன்னு யாருக்குமே சொல்லலையே ஏன்? இந்த சின்ன மூளைக்கு இதெல்லாம் தோனுச்சி அதான் கேட்டேன்.
மிஸ்.நதியா, நம்ம நல்லா இருக்கணும்,நம்ம நாடு நல்லா இருக்கணும்னு நமக்காக வாழும் எங்கள் உயிர் நண்பனுக்கு நாங்கள் செய்தது ரொம்பவே கம்மிதான்.அவனோட எவ்வளவோ வேலைகளுக்கு நடுவே எங்களுக்காக நேரம் ஒதுக்கினானே, வாய்ப்பே இல்ல.விஷ்ணு நீ கிரேட் டா மச்சி.
//பொதுவா கேக்கை நாமதான் சாப்பிடுவோம். ஆனா கேக்கே அன்னைக்கு விஷ்ணுவை சாப்பிட்டுச்சு.//
அடங்கப்பா இது உலகமாக பில்டப் டா சாமி.
Mr.கவிதை காதலனே,நாம விஷ்ணுவை ஓட்டினது இருக்கட்டும்,நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களை ஒட்டினோமே அதை பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லல?நான் உன்னிடம் ஒன்று கேட்டேன் உனக்கு நினைவு இருக்கா.ஆஸ்திரேலியா எப்படி இருக்கும்னு கேட்டேன் கடைசி வரைக்கும் நீ சொல்லவே இல்லையே.பரவாஇல்லை.ஒரு வேலை நீ எதிர்காலத்துலஆஸ்திரேலியா போகவேண்டி இருந்தா ( கண்டிப்பா இருக்கும் ) என்னையும் கூட்டி போடா.

விண்ணை தாண்டி வருவாயா படத்தை பற்றி மணி நிறைய சொல்லிட்டான்.அருமையான காதல் கதை.தயவுசெய்து தியேட்டரில் சென்று பாருங்கள்.சிம்புவுக்கு வாழ்நாள் படமாக இருந்தாலும் இருக்கும்.கௌதமுக்கு இன்னும் ஒரு மயில் கல்.ரஹ்மானுக்கு சொல்லவே தேவையில்லை.
என் உயிர் நண்பர்களே,நாம எல்லாரும் இப்படியே எப்பவும் இருக்கணும்.இதே போல விஷ்ணுவின் 100 வது பிறந்தநாளையும் இதே சந்தோஷத்துடன் கொண்டாடனும் இது தான் என்னோட பெரிய ஆசை.இதுக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிகுரேன்.நீங்களும் வேண்டிகோங்க டா ( மணி,விஷ்ணு,பிரதாப்).ஊடகத்திற்கு வரும் நண்பர்களே நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் நாங்கள் இப்படியே எப்பவும் இருக்கணும்னு.

seemangani said...

விஷ்ணுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்...

படம் உங்களையும் ஏதோ செய்து விட்டதா...அருமை..வாழ்த்துகள்....

அனுமாலிகா said...

ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. உங்க நட்பு ரொம்ப அழகா தெரியுது. விஷ்ணுவுக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

//கேக்கின் ருசியை விட, நண்பனின் கரத்தால் சாப்பிடும்போது இன்னும் இனிப்பாக இருந்தது.//

NICE Lines.. Hi vishnu, just hold my wishes too.. Happy birthday ya

sullaan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷ்ணு..ஆமா நான் கூட கேட்க‌ணும்ன்னு நினைச்சேன். கவிதை காதலா, விஷ்ணு மேல கேக் பூசின ஃபோட்டோஸ் எங்கே? முக்கியமானதே அது தானே...

R. Ramya said...

My hearty birthday wishes to you vishnu.

//ஹெல்மெட்டுக்கு ஒரு ட்ரீட் கொடுத்தான் பாருங்க... அதுதான் ஹைலைட்.//

எல்மெட்டுக்கு என்ன ட்ரீட் கொடுக்க முடியும்? மணி கொடுத்த கிஃப்ட் என்ன?
என்ன ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு?.. யாரவது கரெக்ட்டா சொல்லுங்கப்பா

archana said...

Hi Mani Convey my wishes to vishnu.. Happy birthday vishnu.. cool, Nadhiya came back after very long time. Aish asked some question, then sweet rascal also raised some issues. What happened nadhi? is that any reason behind your silence?

archana said...
This comment has been removed by the author.
தென்றல் said...

எங்க தானைத்தலைவியை யாராவது வம்புக்கு இழுத்தீங்கன்னா அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். விஷ்ணு கையில் இருக்கிற துப்பாக்கியை வாங்கி டொப்பு டொப்புனு எல்ல்லாரையும் சுட்டுடுவேன். ஆமா..

தேடிக்கிடைப்பதில்லை said...

பிறக்கும் போது அழும் மனிதன், இறக்கும் போது தன்னை சுற்றி இருப்பவர்களை அழ வைக்க வேண்டும். அதுதான் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம். உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் இருக்கிறது, நல்ல நட்புகளால்.. நல்ல நண்பர்கள், நல்ல புத்தகத்தை போல.. நட்பை எப்போதும் தொடருங்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா..

தேடிக்கிடைப்பதில்லை said...
This comment has been removed by the author.
ச்சும்மா said...

நான் கேட்ட வரையில பசங்க எல்லாருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல படம். உங்கள் நண்பருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

என் நண்பனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த சைவகொத்துப்பரோட்டா,கிஷோர், ஜேம்ஸ், நதியா, ஐஷ்வர்யா, கவிப்ரியன், பார்த்திபன், சீமான் கனி, அனுமாலிகா, Anonymous, சுள்ளான், ரம்யா, அர்ச்சனா, தேடிக்கிடைப்பதில்லை, ச்சும்மா, என அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

கவிதை காதலன் said...

To ஸ்வீட் ராஸ்கல்,
மச்சி நிறைய ஃபோட்டோ போட முடியாத சூழ்நிலை. அதனாலதான். அப்புறம் ஆஸ்திரேலியான்னு சொன்னியே.. அது எங்க இருக்கு?

To சுள்ளான்,
அந்த‌ ஃபோட்டோ ப‌ப்ளிக்கா போட‌ வேண்டாம்'ன்னுதான் போட‌லை.

To ர‌ம்யா,
தேங்க்ஸ்.. எல்லாரும் அது என்ன‌ ஹெல்மெட்டுக்கு கொடுத்த‌ ட்ரீட்'ன்னு எல்லாரும் கேட்டாங்க‌.. அதுதான் ச‌ஸ்பென்ஸ்..

To அர்ச்ச‌னா,
அர்ச்சனா, நீங்க‌ என்ன‌ கேட்டாலும் அவ‌ங்க‌ ப‌தில் சொல்ல‌ மாட்டாங்க‌.

To தென்ற‌ல்,
தென்றல், உங்க‌ கூட போட்டி போட்டு பேச‌ற‌ அள‌வுக்கு திற‌மை என்கிட்ட இல்லை.

Jhansi said...

Hi.. Vishnu.. நதியா உங்களைப்பத்தி நிறைய சொல்லி இருக்காங்க. இதுதான் பர்ஸ்ட் டைம் பார்க்குறேன். உங்களுக்கு என்னுடய Birthday Wishes.. Enjoy Friends

Anuvandhi said...

Hi vishnu, A birthday is just the first day of another 365-day journey around the sun. Enjoy the trip

You know you are getting old when the candles cost more than the cake. you guys made change in this becoz you lighted only one candle. Funny..

I hope your birthday was all that you hoped for.. Wishing you a belated birthday my friend...

ஸ்வீட் ராஸ்கல் said...

ஆஸ்திரேலியா எங்க இருக்குனு கேக்குறானே,ஐயோ எனக்கு தலை சுத்துது.போரபோக்கபாத்தா ஆஸ்திரேலியா,ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்குனு சொன்னாலும் சொல்லுவான் போல இருக்கே.அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி.Miss.தென்றல் இதெயெல்லாம் கேக்க மாட்டிங்களா.

Anuvandhi said...
This comment has been removed by the author.
Anuvandhi said...
This comment has been removed by the author.
ஸ்வீட் ராஸ்கல் said...

Mr.Vishnu உங்களுக்காக வரும் கமெண்ட் எல்லாத்தையும் பார்க்கும் போது நீங்க ஒரு AUNTY HERO வா இருபீங்களோனு எனக்கு சந்தேகமா இருக்கு.
என்ன மணி,பிரதாப் நான் சொல்றது Correctta.

KaunHaiJoSapnoMeinAaya said...

i can't understand your language. but i can felt what you wrote in this..

har khusi khusi mange aapse,jindagi jinda dili mange aapse,ujala ho mukaddar me aapke itna,ki chand bhi roshni mange aapse...

Dua karte hai hum sar jhuka k, aap apni manzil ko paye.
agar aapki rahon mein kabhi andhra aaye, to Roshni k liye khuda humko jalaye

* Happy Birth Day Friend *

Megna said...

ஹாய் ப்ரண்ட்ஸ்.. இதுதான் எனுடைய முத்ல தமிழ்ச் கமெண்ட். தப்ப் இறுந்தால் மன்னிசிடுஙக.. Mr. Vishnu, My belated birth wishes to you.

கவிதை காதலன் said...

முதல் முறை வருகை புரிந்திருக்கும் ஜான்ஸி, மேக்னா, அனுவந்தி, உங்களுக்கு என் நன்றிகள். தொடர்ந்து படியுங்கள்..

மொழி புரியவில்லை என்றாலும், தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பருக்கும் என் நன்றி.

I should say thanks to Mr.KaunHaiJoSapnoMeinAaya.. Thank you very much for your comment.

மின்சார கண்ணன் said...

விஷ்ணு தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். I wish you a great wonderful birthday. பிறந்த நாளை என்னதான் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளோட கொண்டாடினாலும், நன்பர்களோட கொண்டாடுற அந்த சந்தோஷமே தனிதான். இல்லையா? விஷ்ணு இந்த பிறந்தநாளை நீங்க Enjoy பண்ணீங்களா?

மின்சார கண்ணன் said...

//மொட்டை மாடி சென்று கேக் (Black Forest), கூல்டிரிங்க்ஸ், சிப்ஸ், மிக்சர், என அனைத்தையும் மாடியில் செட் செய்து //

சைடு டிஷஷ் எல்லாத்தையும் சொல்லிட்டீங்க. முக்கியமான ஒரு குவாட்டரை சாரி சாரி மேட்டரை சொல்லவே இல்லையே?

ஆளவந்தான் said...

இப்பவே நல்லா என்ஜாய் பண்ணிக்குங்க ஃப்ரண்ட்ஸ்.. கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் கிடைக்காது. ஃப்ரெண்டு கூட வெளியே போய் பர்த்டே கொண்டாடப்போரேன்னு சொன்னா, உங்க பொண்டாட்டி உங்களை வீட்டுக்கு உள்ள சேர்க்க மாட்டா.. முடிஞ்ச வரைக்கும் இப்பவே அனுபவிச்சுடுங்க.. நாளைக்கு இதெல்லாம் நினைச்சு மட்டும்தான் பார்க்க முடியும்..

மகேஷ் முத்துசுவாமி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.. எங்களுக்கு எல்லாம் ட்ரீட் கிடையாதா?

நிலாப்பெண் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷ்ணு.. எங்களுக்கு எல்லாம் எந்த ஹோட்டல்ல ட்ரீட் கொடுக்க போறீங்க?

BONIFACE said...

நல்ல நண்பர் பட்டாளம் அமைவது கஷ்டம் ,உங்களுக்கு அமைதிருகிறது....நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஜில் ஜில் ஜிகர்தண்டா said...

நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்குறேன். Happy Birthday Friend

தாஜ்மஹால் said...

ஃபர்ஸ்ட் டைம் உங்க பிளாக்குக்கு வர்றேன். இனி தொடர்ந்து வருவேன்.. என்னுடைய வாழ்த்துக்களும் உங்க நண்பருக்கு இருக்கட்டுமே.. wish you Happu birthday

தாஜ்மஹால் said...

உங்க கவிதைகள் எல்லாமும் ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள் :))))))))))))))))))

Vishnu said...

கொத்து பொரட்டா சார் ……… உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சார்..............

Vishnu said...

கிஷோர் சார் உங்க வாழ்த்துக்கு என்னுடைய நன்றி சார்.........என்ன நேர்ல பார்கனும என்ன கொடும சார்.
தாஜ்மஹால வெளிய இருந்து பார்த்தா நல்லா அழகா இருக்கும் ஆனா உள்ள வெறும் சமாதிதான்.......
அந்தமாதிரித்தான் நானும். நா ரொன்ப அசிங்கமா தான் இருப்பேன்....... அப்படின்னு பீட்டர் எல்லாம் விடமாட்டேன் சார்...
ஜஸ்ட் ஒரு டீ வாங்கி தருவேன்னு சொல்லுங்க சார் அடுத்த ஒரு மணிநேரத்துல நா உங்கமுன்னடி வந்து நிப்பேன் சார்.......

Vishnu said...
This comment has been removed by the author.
pratap said...

இதோ வந்துட்டேன் ................

pratap said...

"எல்லா புகழும் இறைவனுக்கே" என்று
சொல்லுவாங்க,
ஆனா எங்களை பொறுத்த வரை
"எல்லா புகழும் மணிக்கே"
ஏன்னா 2008 வருடம் வரைக்கும்
என்னுடைய பிறந்தநாள் கொண்டாட எனக்கு
டைம் இல்ல.ஏன்னா வேலை,நேரம் எதுவுமே அமையாது . ஆனா மணி எல்லாருக்கும் call
பண்ணி ஒன்று சேர்த்தது தான் பெரிய விஷயம்.
நான் இப்ப ரெண்டாவது முறையா ரொம்ப
சந்தோசமா இருக்கேன்.
நாங்க நால்வரும் வாழ்க்கை முழுவதும் இப்படியே இருப்போம்னு சொல்லல ,
இருக்கிறவரைக்கும் இதே போல இருக்க கடவுளை வேண்டிக்கிறன்.
அப்புறம் ஒரு விஷயம்,எங்கள் நட்பினை வாழ்த்தின அணைத்து நெஞ்சங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றி.

pratap said...

நாங்க படம் பார்த்தோம் இல்ல
அது ஒரு கொடுமை,படம் எல்லா நல்லாத்தான் இருந்தது.
ஆனா எல்லோருக்கும் ஒரு பீலிங்.
எனக்கு என் காதலியோட வரலைன்னு,
பார்த்திக்கு எந்த காதலியோடையும் வரலைன்னு,
விஷ்ணுவுக்கு கேரளாவுடன் வரலைன்னு,
மணிக்கு .....................
அதான் எல்லுருக்கும் தெரியுமே.
இப்படி இருந்தது.

Vishnu said...

ஜேம்ஸ் சார் …………….உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சார்

Vishnu said...

இல்ல தென்றல் இப்போ வரைக்கும் நீ சரியாதான் பேசுற........ம்ம்ம்ம் கண்டினு கண்டினு.....................

Vishnu said...

கவிபிரியன் சார் உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சார்...............

வண்டலூர்ல என்ன? பன்னிகிட்டு இருக்கிங்கனு கேட்டிங்க இல்ல?

அது ஒரு பெரிய மேட்டரு சார்................(தயவு சென்சி படிங்க-------கஸ்ட்டபட்டு டைப் பன்னி இருக்கிறேன்)

totta toingg

நாங்க டில்லி ல இருந்தோம்.... அப்போ ஒரு நல்ல மனுசன் எங்க NSG யை பார்த்துட்டு நாலு சிட்டிலயும் NSG COMMANDO
வேனும்னு சொன்னதுனல MUMBAI, KOLKATTA, HYDRABAD & CHENNAIனு பிரிச்சி கொடுத்தாங்க......

முதல்ல இருக்க மூனு பார்டியும் பக்கவா செட்டில் ஆயிட்டான்க............

சென்னை:-

சென்னைல உள்ள LAND MINISTRUKU என்கள பத்தி சறியா தெரியாது.....

எங்கள யாருனு கேட்டான்?

அதுக்கு நாங்க BLACK CAT COMMANDO னு பெருமைய சொன்னோம். ஒ கருப்பு புனையா.
அப்படினு நினைச்சிக்கிட்டு எங்கள ZOO கு அனுப்பிட்டான்.

அதுவும் இல்லம நீங்க எல்லாம் சகுனம் பாபிங்கலாமே....... அதுனால கருப்பு புனை எல்லாம் குருக்கால போககூடாதுனு
உங்க ஊறு நாட்டாமை எங்கள ஊர வுட்டு ஒதிக்கி வச்சிடாருங் கோ....

Vishnu said...

நதியா...
லாஸ்ட் போட்டோ நல்லா இருக்குனு சொன்னியே
அது யாரா பாத்து சொன்னே............
இல்ல போட்டோ எடுத்தவன சொன்னியா இல்ல அதுல உள்ள ஸ்டில்லா சொன்னியானு கேடேன்...(ஐயோ நா தப்பா எதுவும் உளறலேயே)

தென்றல் said...

விஷ்ணு.. ஃபோட்டோ நல்லா இருக்குன்னா என்ன அர்த்தம்? ஃபோட்டோவுல இருக்கிறவங்களும் அழகா இருக்காங்கன்னுதானே அர்த்தம்.. அந்த ஃபோட்டோவுல ரெண்டு பேரு இருக்கீங்க.. ரெண்டு பேர்ல அவங்க யாரை சொல்றாங்க??

Vishnu said...

தென்றல் உன் கண்ணுல ஒரு கொலைவெறி தெரிது............

ஆமா ஸ்வீட் ராஸ்கல் ஒரு bad வார்த்தை சொன்னாரே .........
அத பத்தி ஒன்னுமே சொல்லல.........(உங்களை எல்லாம் ஆண்டின்னு சொன்னது)

மச்சி..... தென்றல மட்டும் தானே பாத்தே...... இப்போ புயலையும் பாப்பே...........

Vishnu said...

Seemangani....உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

R Ramy.......உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

Archana......உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

Jhansi.......உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

Megna..... Thankyou for your wishing

Vishnu said...

Boniface....உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

அனுமாலிகா ........உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

தேடிகிடைப்பதில்லை....உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

ச்சும்மா..........உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

மின்சார கண்ணன்..........உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

மகேஷ் முத்துசுவாமி.........உங்கள் வாழ்த்துக்கு நன்றி

Vishnu said...

நிலா பெண்............உங்கள் வாழ்த்துக்கு நன்றி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷ்ணு.. நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !

Anonymous said...

//கேக்கின் ருசியை விட, நண்பனின் கரத்தால் சாப்பிடும்போது இன்னும் இனிப்பாக இருந்தது.//

நட்பின் அடையாள வார்த்தைகள்..

விஷ்ணுவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.

தென்றல் said...

விஷ்ணு.. எல்லாருக்கும் நன்றி சொன்னீங்க.. பதிலும் சொன்னீங்க.. ஆனா நதியா கேட்ட ரெண்டு கேள்விக்கு நீங்க பதிலே சொல்லலையே.. ஏன்?(மாட்டிவிட்டுட்டேனா??)

தென்றல் said...

எங்களை எல்லாம் ஆண்ட்டின்னு ஒரு சின்னப்பையன் சொல்லி இருந்தா ஃபீல் பண்ணலாம்.. அதை ஸ்வீட் ராஸ்கல்ன்னு பேரு வெச்சிகிட்டு இருக்கிற ஒரு வயசானவரு சொன்னா நாம அதை நினைச்சு வருத்தப்பட முடியுமா? பாவம் இந்த வயசுல அவரால பேச மட்டும்தான் முடியும்..

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi தென்றல்,
புயல் வரும்னு ரொம்ப நாள் எதிர் பார்த்தேன்.அப்போ கொஞ்சம் முன் ஏற்பாடா கூட இருந்தேன்.அப்போ எல்லாம் வரல.இப்போ திடீர்னு வந்து கொஞ்சம் அதிக சேதத்தை ஏற்படுத்திடுச்சி பரவாஇல்ல.மன்னிக்கவும் தென்றல் நான் உங்களை எல்லாம் சொல்லல.பொதுவா சொன்னேன்.இந்த ராணுவ வீரன் உங்களை உசுப்பேத்தி விட்டுட்டான்.அவன நம்பாதீங்க.முக்கியமான ஒன்னு.நா இன்னும் யூத் தாங்க நம்புங்க.சொல்ல போன எங்க டீம்லேயே நான் தான் சின்ன பையன் தெரியுமாங்க.

Mr.ராணுவ வீரன் அவர்களே இது உங்களுக்கு,
அடியேய் உன்ன எது சொன்னாலும் 2 பேரு சண்டைக்கு வந்துடுறாங்க.நீ யாருன்னு எங்களுக்கு தெரியும் நாங்க யாருன்னு உனக்கு தெரியும்.வேணாண்டா இது.உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.

தென்றல் said...

//நா இன்னும் யூத் தாங்க நம்புங்க.//

ஹேய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. இவரும் யூத்துதான்.. யூத்துதான்... யூத்துதான்..

தென்றல் said...

ஸ்வீட் ராஸ்கல். ரெண்டு பேருன்னு சொன்னீங்களே.. யார் அந்த ரெண்டு பேரு? ஒருவேளை நதியா வேலைவெட்டி இல்லாம இருக்கா அப்படிங்கிறதை குத்தி காட்றீங்களா?

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi தென்றல்,
முதல்ல என்னை யூத்ன்னு ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி.அய்யய்யோ சாமி இந்த விளையாட்டுக்கு நா வரல.நான் ஒரு புள்ளி தன வெய்குரேன்.நீங்க எல்லாரும் சேர்ந்து ரோடு போட்டு,அதுல Bridge கட்டி,வண்டியேல்லாம் விட்டுடுரீன்களே ஏன் இப்படி.என்னை பார்த்தா பாவமா இல்லையா.நதியா இவங்க சொல்ரதஎல்லாம் தயவு செஞ்சி நம்பாதீங்க.இதுக்கெல்லாம் நான் காரணமே இல்ல.புயல்லுகு பின் அமைதின்னு சொல்லுவாங்க,ஆனா இந்த புயல் ஓயவே மாட்டேங்குதே.என்னை சுத்தி ஒரு பெரிய சதிவேலையே நடக்குது.நதியா இப்பவும் சொல்றேன் இதுக்கெல்லாம் நான் காரணமே இல்ல.அவங்க சொல்ல நினைகுரதஎல்லாம் என் மூலமா சொல்லிடுறாங்க.

ஸ்வீட் ராஸ்கல் said...
This comment has been removed by the author.
தென்றல் said...

எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேணும்.. ஐ மீன் புள்ளி வேணும்.. நீங்க தான் அதை வெச்சேன்னு ஒத்துக்கிட்டீங்க. உங்களைப்பார்த்த எனக்கு ரொம்ப பெருமையா
இருக்கு.. ஒரு தப்பை ஒத்துக்குறதுக்கும் ஒரு பெருந்தனமை வேணும்.. நீங்க ரொம்ப பெருந்தனமையானவர்.

ஆனாலும் என் மனசு கேட்கலை....

தென்றல் said...

ஏதோ கெட்ட வார்த்தையில திட்டிட்டுதானே அந்த கமெண்டை டெலிட் பண்ணிட்டீங்க..

கவிதை காதலன் said...

ஆண்டின்னு சொன்னதுக்க மத்தவங்க யாரும் ஃபீல் பண்ணவே இல்லை.. உங்களுக்கு ஏன தென்றல் இவ்ளோ கொலை வெறி?

ஸ்வீட் ராஸ்கல் said...

எப்படி அது நா என்ன சொன்னாலும்,அதுல இருந்தே வார்த்தய எடுத்து என்ன கோர்த்து விட முடியுது.நா என்ன சொல்றதுன்னு தெரியல.காலைல யார் முகத்துல முழிச்சேன்னு என்னக்கே தெரியல.உங்க ஒருத்தர் கிட்ட பேசியே சமாளிக்க முடியல.இதுல அவங்கள வேற ஏங்க இழுத்துவிடுறீங்க.வேணா வலிக்குதுஅழுதுடுவேன்.
ஜடை பின்ன ஆரம்பிச்சிடீங்க,இனி பொட்டு வெச்சி பூ வெக்காம போக மாட்டீங்க.செய்ங்க உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ செய்ங்க.

தென்றல் said...

கவிதை காதலன் சார் நான் ஆண்ட்டி இல்லை.. அதனால எனக்கு கோவம் வருது.. மத்தவங்களுக்கு கோவம் வரலைன்னா.. ஒரு வேளை அவங்க எல்லாம் ஸ்வீட் ராஸ்கல் சொன்ன மாதிரி..

ஸ்வீட் ராஸ்கல் said...

அப்பாடா காப்பாத்திட்ட,காப்பாத்திட்ட,காப்பாத்திட்டமச்சி.ஆபத்துல உதவுறவன் தான் உண்மையான நண்பன்.இப்போ இன்னா பண்ணுவீங்க.

தென்றல் said...

//உங்க ஒருத்தர் கிட்ட பேசியே சமாளிக்க முடியல.இதுல அவங்கள வேற ஏங்க இழுத்துவிடுறீங்க//

அப்போ நதியாவை நீங்க வாயாடி, யாருக்குமே அடங்க மாட்டா,,திமிர் பிடிச்சவன்னு சொல்ல வர்றீங்களா?

ஸ்வீட் ராஸ்கல் said...

அடப்பாவி காப்பாதிட்டன்னு பார்த்தா,இன்னும் எல்லாரையும் கூடி வந்து விட்டுட்டு போய்டுவ போல இருக்கே.கோர்த்து விட்டுட்டு போய்ட்டியே டா.இன்னும் யார் யாரெல்லாம் வரபோறாங்களோ தெரியலையே.

ஆளவந்தான் said...

தென்றலுக்கு இன்னைக்கு நிம்மதியா தூக்கம் வரும் போல இருக்கே.. பாவம் அந்த சின்ன பையன்.. விட்டுடுங்க தென்றல்...

ஸ்வீட் ராஸ்கல் said...

ஏங்க தென்றல் என்ன பார்த்தா கொஞ்சம் கூட பாவமா தெரியலையா.ஏற்கனவே எங்க நண்பர்கள்ல ஒருத்தர் அவங்க கிட்ட மாட்டி சின்னா பின்னமான அந்த கதையை நானும் படிச்சேன்.இப்போ என்ன வேற ஏங்க அந்த லிஸ்ட்ல சேர்த்து விடுறீங்க.நா அவங்கள பத்தி ஒண்ணுமே சொல்லலையே.என் மேல ஏன் இந்த கொலை வெறி.நீங்க நதியாவ எப்படியாவது அழைச்சிட்டு வரனும்னு நினைக்குறீங்க.நல்ல விஷயம் தான்.அது இப்படி ஒரு சூழ்நிலைலய நடக்கணும்.அதுக்கு நான் தான் கிடைச்சேனா.

தென்றல் said...

அப்போ உங்க நண்பர் சின்னா பின்னமானதுக்கு காரணம் நதியாதானா? சே.. நான் கூட அந்த பொண்ணை என்னமோன்னு நினைச்சேன். நீங்க சொல்றதை பார்த்தாதான் உண்மையே தெரியுது..

kishore said...

ஸ்வீட் ராஸ்கல்.. நதியாவுக்கு யாரையும் சின்னாபின்னமாக்கி பழக்கம் இல்லை. எல்லாரையும் வாழ வெச்சுதான் பழக்கம்.

ஸ்வீட் ராஸ்கல் said...

ஏங்க அவன் தப்பா ஏதோ சொன்னான்.அந்த தப்ப அவங்க திருத்தி சொன்னங்க.அதை ஏங்க இவ்ளோ பில்டப் பண்ணி சொல்றீங்க.எனக்கு நேரம் சரி இல்லன்னு நேத்து அம்மா சொன்னங்க.அது இப்போதான் புரியுது.

kishore said...
This comment has been removed by the author.
R. Ramya said...

ஸ்வீட் ராஸ்கலுக்கு கூட புரியுது.. அவங்க எத்தனை பேரை சின்னாபின்னமாக்கி இருக்காங்கன்றது..
புரிய வேண்டியவங்களுக்குத்தான் புரியலை

ஸ்வீட் ராஸ்கல் said...

Mr .Kishore
நோ டா செல்லம்.

ஸ்வீட் ராஸ்கல் said...
This comment has been removed by the author.
R. Ramya said...

எல்லாமே தெஇஞ்சிட்டதால அவங்க ஒண்ணும் புத்திசாலி இல்லை. பணமும், அழகு, படிப்பு இருந்திட்டா உலகத்திலேய நாம தான் புத்திசாலின்னு சில பேரு நினைச்சுகிட்டு இருக்காங்க.. இது எப்பத்தான் மாறுமோ..

ஸ்வீட் ராஸ்கல் said...

Mr .Kishore
நா அவங்கள பத்தி ஒண்ணுமே தப்பா சொல்லலையே.ஏன் பா இப்படி நீயும் உசுப்பேத்தி விடுறது நல்லவா இருக்கு.

R. Ramya said...

சின்சியரா இருக்கிறவங்களைவிட பணம் காசு இருக்கிறவங்களைத்தான் எல்லாருக்கும் பிடிக்குது.
அவங்க சொல்றதைத்தான் உலகம் நம்புது.

ஸ்வீட் ராஸ்கல் said...

யாருங்க அது.ரம்யாவா வாங்க.அடடா ஊரு ஒன்னுகூடிட்டானுகப்பா.இனி நம்மள காப்பாத்த கடவுள் தான் வரணும்.

kishore said...

நான் ஒண்ணும் உசுப்பேத்தலை சார். நதியா அவங்களைப்பத்தி தப்பா பேசவேணாம்'ன்னுதான் சொன்னேன். தென்றாலுக்கும் சரி.. ரம்யாவுக்கும் சரி.. இதையேத்தான் சொல்றேன்.

ஸ்வீட் ராஸ்கல் said...

நான் தப்பா சொல்லவே இல்லையே.சொல்ல போன,நா அவங்க மேல எவ்ளோ மரியாதை வெச்சி இருக்கேன்னு அவங்களுக்கு தெரியும்.அவங்க எவ்ளோ விஷயத்துல எனக்கு முன்னுதாரனமா இருக்காங்கன்னு அவங்களுக்கு தெரியும்.

ஸ்வீட் ராஸ்கல் said...

நதியா தயவுசெஞ்சி நீங்க வாங்க.இல்லனா இவங்க யாரும் என்னை விட மட்டங்க போல இருக்கு.ப்ளீஸ் ஒருதடவை வாங்க எனக்காக வாங்க.வந்து இவங்க எல்லாருக்கும் சொல்லுங்க.

nadhiya said...

ஃப்ரண்ட்ஸ் என்ன நடக்குது இங்கே? யாருக்கும் நாம இப்படித்தான்னு சொல்லி புரிய வெக்க முடியாது.

"உன் தரப்பு விளக்கத்தை நீ யாரிடமும் சொல்லாதே.. உன் நண்பனுக்கு உன் விளக்கங்கள் தேவையில்லை. ஏனெனில் அவன் உன் மீது நம்பிக்கை உடையவன். நீ உன்னை விளக்கி சொல்லித்தான் உன்னைப்பற்றி அவனுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் விரோதிக்கும் சரி நீ எதையும் புரிய வைக்க வேண்டியதில்லை. ஏனெனில் நீ என்ன சொன்னாலும் அவன் உன்னை நம்ப போவதில்லை. "

அதனால யார் வேணா என்ன வேணும்'னாலும் சொல்லிட்டு போகட்டும்.. நான் என்ன சொல்ல வந்தேன்னா... இந்த பதிவு நம்முடைய நண்பன் விஷ்ணுவோட பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றியது. அதனால
பர்ஸ்னலான விஷயங்களை தவிர்த்து, விஷ்ணுவுக்கு வாழ்த்துக்கள் சொன்னா மட்டும் போதுமே... ப்ளீஸ் ஃப்ரண்ட்ஸ்

தென்றல் said...

ஸ்வீட் ராஸ்கல்... நான் ஏதோ விளையாடிகிட்டு இருந்தேன். Don't be Emotional.. Cool..

கவிதை காதலன் said...

மச்சான்... கிரேட்'டா....உனக்கு நூறாவது கமெண்ட்'ல விஷ் பண்ணுவேன்னு நினைச்சே பார்க்கலைடா.. (என்னுடைய கமெண்ட்தான் நூறாவது கமெண்ட்) Vishnu.. wish u very very very very Belated Happy Birthday Wishes மச்சி

nadhiya said...

இன்னும் நான் கேட்ட ரெண்டு கேள்விக்கு விஷ்ணு பதிலே சொல்லலை.. ஏன் விஷ்ணு?

Vishnu said...

போங்க நதியா எனக்கு வெட்கமா இருக்கு................

Vishnu said...

ஐயோ...... வேணா வேணான்னு சொன்னேனே கேட்டியா இப்போ பாரு.......
யாரு யாரு எல்லாம் உன்ன யூஸ் பன்னிகிட்டங்க ...
தென்றல் ஒரு பக்கம் அவங்க மனசுல உள்ளதெல்லாம் கொட்றாங்க .........
ரம்யா ஒரு பக்கம் சந்துல சிந்து பாடுராங்க.....
நண்பர்களே சண்டை போடாலாம் தப்பு இல்லை. ஆனா அத பெருசா எடுத்துக்க கூடாது ஓகே..............
நா தென்றலோட நண்பன் அதனால யாரா இருந்தாலும் கொஞ்சம் அமைதியா போய்டுங்க அதான் நாமா எல்லாருக்கும் நல்துப்பா, என்ன புயிதா...

pratap said...

மச்சான் எனக்கு புயில ....

pratap said...
This comment has been removed by the author.
pratap said...

சின்சியர இருக்குற யாரும்
நேசிச்சவங்கள தப்ப நினைக்க
மாட்டங்க.திட்ரவங்க யாரும்
சின்சியர இருக்க மாட்டங்க.

pratap said...

பணம் ,அழகு அதையும் மீறி
நிறைய இருக்கு.
தென்றல் விளையாடி மூச்சி
வாங்குதா?

ஸ்வீட் ராஸ்கல் said...

Hiநதியா,
நான் கூப்பிட்டவுடன் வந்து என்னை காப்பற்றியதர்க்கு நான் நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன்.அது உங்க கடமைன்னு எனக்கு தெரியும்.இருந்தாலும் ரொம்ப நாள் கழிச்சி வந்ததுக்கு எங்கள் அனைவரின் சார்பாக ஒரு மிகப்பெரிய Welcome.லேட்டா வந்தாலும் ஒரு சூப்பர் உண்மையை சொல்லி அசத்திட்டிங்க.சொல்ல போன இது 2 நண்பர்களுக்குள்ள நடந்த ஒரு கருத்து பரிமாற்றம் தான்.அது கொஞ்சம் ஓவரா ஆய்டுச்சி.இல்லையா தென்றல்.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi தென்றல்,
உங்க கூட நான் இது வரை பேசினது கிடையாது.பார்த்தது கிடையாது.பட் இது ஒரு நல்ல கருத்து பரிமாற்றம்.நா Emotion ஆகல.சும்மா உங்க கூட விளையாடிட்டு இருந்தேன்.இது கூட ஒரு நல்ல நட்பு தொடங்குறதுக்கு காரணமா இருந்திருக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.உங்க நட்பு கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோஷபடுறேன்.

ஸ்வீட் ராஸ்கல் said...

//சின்சியர இருக்குற யாரும்
நேசிச்சவங்கள தப்ப நினைக்க
மாட்டங்க//
ரொம்ப ரொம்ப கரெக்ட்டா சொல்லிட்ட மச்சி.நூற்றுக்கு நூறு உண்மை டா.

nadhiya said...

விஷ்ணு வெட்கப்படுற அளவுக்கு என்ன நடந்தது? அந்த கிஃப்ட்'ல ஏதாவது ஏடாகூடமா இருந்ததா?

இதையும் படியுங்கள்