Wednesday, March 24, 2010

சோஃபாவின் வழி ஒரு சொர்க்கம்சலனமின்றிதான் கடந்து
கொண்டிருக்கும் நம் பொழுதுகள்..
சோஃபாவில் அமர்ந்தபடியே
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கையில்..

மெதுவாய் ரிமோட் பட்டன் மாற்ற
எத்தனிக்கையில் மெல்லிய கோபம்
உனக்குள் மலரத்தொடங்கும்.

வெடுக்கென்று பிடுங்கி
உன் விருப்பம் ஆள்வாய்.
என் கையினில் சிக்காதவாறு
உனக்குள் சிறைப்படுத்துவாய்.

அதை தேடுவது போல் உனக்குள்
நுழையும் என் விரல்களுக்கு
அனுமதி மறுப்பாய்.

அமெரிக்கா போல் அத்துமீறி
ரிமோட் இருக்கும் இடம் தவிர்த்து
அத்தனை பகுதிகளிலும்
ஆராயும் என் விரல்கள்.

வேண்டாம் வேண்டாம் என்று
பொய்கோபம் கொண்டவாறே
விரல்களுக்கு வழிவிடுவாய்.

கிறக்கமான கிள்ளல்களும்,
வெளிப்படையான மறைப்புகளும்
நம் விளையாட்டை இன்னும்
சுவாரஸ்யப்படுத்தும்.

தேடவேண்டியதை மறந்து
வேறு எதையோ தேடுவதற்காக
உன்னை நோக்கி நெருங்க
அப்போது வைரமுத்து
நினைவிற்கெட்டினார்.

"தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்"
ஆம்.... தேடலின் முடிவு
ருசிக்கத்தான் செய்தது.

உன் விரல்கள்
ரிமோட்டை மறைக்கவில்லை.
நானும் அதை தேடவில்லை.
ஆனாலும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சோஃபாவின் வழி ஒரு சொர்க்கம்
சென்று கொண்டிருக்கிறேன்.
அசெளகர்யங்களிலும் சில
செளகர்யங்கள் இருக்கத்தான் செய்கிறது....

எனக்காக ஆரம்பித்த உங்கள் சண்டை
என்னை மறந்து நடந்து கொண்டிருக்கிறதே!
என்று குழப்பத்துடன் நம்மை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது
தொலைக்காட்சிkavithaikadhalan.blogspot.com
உங்களுக்கு இந்தக்கவிதை பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்களேன்

Thursday, March 18, 2010

கொஞ்சம் மழை.. நிறைய ரொமான்ஸ்..
இந்த மழையில் நீங்கள் நனைந்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.


Thursday, March 11, 2010

எங்கள் நண்பன் விஷ்ணுவின் பிறந்த நாள்

10.03.1984 கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாள். ஆம் அன்றுதான் எங்கள் விஷ்ணு இந்த உலகத்தில் வந்து பிறந்தநாள். இதுவரை எங்களோடு தன்னுடைய பிறந்த நாளை விஷ்ணு கொண்டாடியதில்லை என்பதால் எப்போதும் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு சரி (அந்த அளவுக்கு சார் இராணுவ வேலைகளில் பிஸி). ஆனால் இந்த வருடம் விஷ்ணு எங்களோடு இருப்பதால் சிறப்பாக கொண்டாடலாம் என்று முடிவெடுத்தோம்.

09.03.2010 அன்று வண்டலூர் சென்று விஷ்ணுவை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 11 ஐ தாண்டி இருந்தது. பிரதாப்பையும் பார்த்திபனையும் நேராக எங்கள் வீட்டிற்கு வர சொல்லிவிட்டோம். 11.30க்கு எல்லாம் இருவரும் வந்து விட்டார்கள். நால்வரும் மொட்டை மாடி சென்று கேக் (Black Forest), கூல்டிரிங்க்ஸ், சிப்ஸ், மிக்சர், என அனைத்தையும் மாடியில் செட் செய்து வைத்துவிட்டு 12 மணி நெருங்கும் வேளைக்காக காத்திருந்தோம்.

10.03.2010 மணி 12ஐ தொட்டதும் மூவரும் வாழ்த்துக்களை தெரிவித்தபடி விஷ்ணுவை கேக் வெட்ட சொன்னோம். எல்லாம் சரியாக செய்தும் கேண்டில் வாங்க மறந்துவிட்டோம். அதனால் விட்டில் உள்ள மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து கேக் வெட்ட சொன்னோம்‌.
"ஹேப்பி பர்த் டே" என்று பாடல் பாடியபடியே விஷ்ணுவை கேக் வெட்ட சொன்னோம். கமாண்டோ வீரனும் வெற்றிகரமாக கேக்கை வெட்டி முடித்தான்


வெட்டிய கேக்கை முதலில் பார்த்திபனுக்கு ஊட்டினான். வாங்கிய அன்புக்கடனை திருப்பி செலுத்தும் விதமாக, பார்த்திபனும் கேக்கை எடுத்து விஷ்ணுவிற்கு ஊட்டினான்.


அடுத்ததாக பிரதாப்பிற்கு ஊட்டினான். பிரதாப்பும் வாழ்த்துக்களை தெரிவித்தபடி விஷ்ணுவிற்கு கேக்கை ஊட்டினான்.

இறுதியாக எனக்கும் கேக்கை ஊட்டினான். கேக்கின் ருசியை விட, நண்பனின் கரத்தால் சாப்பிடும்போது இன்னும் இனிப்பாக இருந்தது.

பார்த்திபனும் பிரதாப்பும் விஷ்ணுவுக்காக ஒரு ஸ்பெஷல் கிஃப்டை வாங்கி வந்து இருந்தார்கள். அது மட்டும் இன்றி ஒரு பெரிய சைஸ் க்ரீட்டிங் கார்டும் கொடுத்தார்கள்.

அடுத்த‌தா பிர‌தாப்பும் நானும் விஷ்ணுவுக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தோம். அது என்ன‌ங்கிற‌து ச‌ஸ்பென்ஸ்.

ஒரு வ‌ழியா கேக் வெட்டி முடிஞ்சாச்சு. கிஃப்ட் எல்லாம் கொடுத்த‌ச்சு. கேக்கை எல்லாம் விஷ்ணு முகத்துல பூசி ஒரே அட்டகாசம். பொதுவா கேக்கை நாமதான் சாப்பிடுவோம். ஆனா கேக்கே அன்னைக்கு விஷ்ணுவை சாப்பிட்டுச்சு. (முகத்துல கேக் பூசினதுக்கு என்ன ஒரு பில்டப்?) அப்புற‌மா என்ன‌ ப‌ண்ண‌லாமுன்னு யோசிச்சோம். கொண்டு வ‌ந்த‌ ஸ்னாக்ஸ் எல்லாம் அப்ப‌டியே ஒரு ஓர‌மா பாவ‌மா இருந்துச்சு. அப்ப‌டியே அது எல்லாத்துக்கும் ஆத‌ர‌வு கொடுத்தோம். நைட்டு ரொம்ப‌ லேட்டா ஆயிட்ட‌தால‌ ப‌ர்த்டேவை கொண்டாடி முடிச்சிட்டு, வீட்டுக்கு வ‌ந்து பிறந்தநாள் அதுவுமா சாமி படம் பார்த்தா நல்லதுன்னு சொன்னதால ப‌ட‌ம் போட்டு பார்த்துகிட்டு இருந்தோம். நாளை காலையில‌ ப‌ட‌த்துக்கு போற‌தா பிளான் ப‌ண்ணினோம்.


மறுநாள் காலையில‌ நானும் விஷ்ணுவும் ச‌ர்ச் போயிட்டு, பிள்ளையார் கோவில் போய் விஷ்ணு பேர்ல‌ அர்ச்ச‌னை ப‌ண்ணிட்டு தியேட்ட‌ருக்கு போயிட்டோம். விண்ணைத்தாண்டி வ‌ருவாயா பட‌ம்.. ஒரே ரொமான்டிக் ஃபீல்தான்.

எல்லாருக்கும் ஏதேதோ நியாப‌க‌ம். ப‌ட‌த்துல‌ ரொம்ப‌ ஒன்றிட்டோம். கெள‌த‌ம் மேன‌ன் ர‌ச‌னையான‌ ம‌னுச‌ன். க‌ல‌க்கிட்டாரு. த்ரிஷா வேற‌ கேர‌ளா பொண்ணா வ‌ர்ற‌தால‌, விஷ்ணுவை ரொம்ப ஓட்டிகிட்டு இருந்தோம். ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ட‌ம். Feel Good Movie.

ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌ம் பார்த்த‌ திருப்தியில‌ ச‌ந்தோஷ‌மா தியேட்ட‌ர்'ல‌ இருந்து கிள‌ம்பினோம்.

******************************************************
ஒவ்வொரு பிற‌ந்த‌ நாளின் போதும் விஷ்ணு டெல்லி, காஷ்மீர்'ன்னு ஏதேதோ ஊர்ல‌ மாட்டிக்குவான். அவ‌ன் ப‌ர்த்டேவை கொண்டாட‌னும்ன்னு ரொம்ப‌ நாளாவே ஏக்கம் மனசுக்குள்ள ஒரு ஓரத்துல இருந்துகிட்டே இருந்தது. ஆனால் இந்த வருடம் அந்த ஆசை நிறைவேறும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.கடவுளுக்கு நன்றிகள்.

கடந்த வருடம் விஷ்ணுவின் பிறந்த நாளுக்கு நான் ஒரு வாழ்த்துகூட சொல்ல வில்லை. நண்பன் ஒருவனின் வார்த்தையை நம்பி விஷ்ணுவை தவறாகவே நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் என் தோழி ஒருவர் அன்று சொன்னது எனக்கு இன்றும் பசுமையாய் நியாபகம் இருக்கிறது. "கண்டவங்க‌ சொல்றதை எல்லாம் போட்டு மனசை குழப்பிக்காதே. நட்புக்குள்ள சந்தேகத்தை மட்டும் வளர விடாதே. நிச்சயமா அடுத்த பர்த்டே விஷ்ணு உன் கூடத்தான் கொண்டாடுவான். நீ வேணா பாரு" அப்படின்னு சொன்னாங்க.அவங்க அன்னைக்கு ஏதோ என்னை சமாதானப்படுத்தறதுக்கு தான் சொல்றாங்கன்னு நினைச்சேன். நல்ல மனசோட சொன்னா அது எப்பவுமே நடக்கும்'ன்னு நான் நேத்துதான் புரிஞ்சுகிட்டேன்.

என்னுடைய நண்பர்கள் பார்த்தி, பிரதாப்.. லீவே போட முடியாத இருவரும், விஷ்ணு என்று சொன்னதும் லீவ் போட்டுவிட்டு எங்களுடன் வந்து இந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாட உதவினார்கள். இவர்கள் இருவரும் இல்லை என்றால், நிச்சயமாய் இவ்வளவு மகிழ்ச்சியாய் இந்த நாள் இருந்திருக்காது.

அடுத்து விஷ்ணு.. கடைசி வரை கேம்பஸிலிருந்து வர முடியாத சூழ்நிலை.. ஆனாலும் நண்பர்களுக்காக வர முயற்சி செய்து, பல இன்னல்களை கடந்து எங்களுடன் இந்த பிறந்த நாளை கொண்டாடிவிட்டு போயிருக்கிறான். இந்த பிறந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். இந்த பர்த்டே'ல விஷ்ணு எங்க மூணு பேருக்கும் கொடுத்த ட்ரீட்டை விட, ஹெல்மெட்டுக்கு ஒரு ட்ரீட் கொடுத்தான் பாருங்க... அதுதான் ஹைலைட்.

விஷ்ணு "Wish you very very very Happy Birthday" மச்சி..

இதையும் படியுங்கள்