Friday, February 12, 2010

காதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்

விழிகளில் பொய்யையும்
விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு
திண்டாடுகிறது உன் காதல்..
சரி.. சரி.. வெட்கப்படாமல்
என்னை கட்டிக்கொள்


கண்ணைகட்டி விளையாடலாம் என்று
என் கண்களை மறைத்தாய்.
உலகம் மறைந்தது.
உன் காதல் முழுதாய் தெரிந்தது


பார்க்கும் போது பாதியாகவும்
திரும்பிக்கொண்டு முழுதாகவும்
காதலை கொடுக்கும் வித்தையை
நீ எப்போது கற்றாய்?



என் மீது சாய்ந்தபடி
ஏதேதோ நகைச்சுவை உதிர்த்தபடி
நீ சிரிக்கிறாய்.......
நான் சின்னாபின்னமாகிறேன்.


காமம் சுமந்து காதலிப்பவர்கள் மத்தியில்
நான் காதல் மட்டும் சுமந்தபடி
உன்னை காதலிக்கிறேன்.


நீ எங்கும் ஓடிவிட முடியாதபடி
என் காதலால் உன்னை
கட்டிவைத்திருக்கிறேன்.
ஆனால் சிக்கிக்கொண்டு
தவிப்பதென்னவோ நான்தான்.....


காதலர் தினத்திற்கு எல்லோரும்
காதலிப்பவர்களுக்குதான் பரிசுகள் கொடுப்பார்கள்.
ஒரு வித்தியாசமாய்
உன்னையும் என்னையும் இணைத்து
காதலர் தினத்திற்கே
நம்மை பரிசாக கொடுத்துவிடலாமே.


அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்



இந்தக்கவிதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள்.

28 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

முதலாவது மிக மிக அருமை கதாலரே.

நிலாப்பெண் said...

கவிதைகள் அட்டகாசம் .. அதுலையும் 5வது கவிதை எக்ஸலண்ட்.. ஹேய்.. 30,000 ஹிட்ஸ் கடந்திருக்கு.. வாழ்த்துக்கள் கவிதை காதலன்

பிரியமுடன்...வசந்த் said...

class...!

உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் வாழ்த்துகள்...!

கவிதை காதலன் said...

கருத்துக்களைப் பகிர்ந்துக்கொண்ட சைவகொத்துப்பரோட்டா, நிலாப்பெண், பிரியமுடன்...வசந்த், மூவருக்கும் என் மனமார்ந்தநன்றிகள்.. இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

மின்சார கண்ணன் said...

காதலிக்காதவனைக்கூட காதலிக்க வெச்சிடுவீங்க போல இருக்கே தல..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவித கவித .. மிகவும் அருமை .

இனிய காதலர் தின வாழ்த்துக்கள் .

தமிழ் உதயம் said...

கண்ணைகட்டி விளையாடலாம் என்று
என் கண்களை மறைத்தாய்.
உலகம் மறைந்தது.
உன் காதல் முழுதாய் தெரிந்தது////
அருமை நண்பரே.
காதலர் தின வாழ்த்துக்கள்.

thenammailakshmanan said...

//காமம் சுமந்து காதலிப்பவர்கள் மத்தியில்
நான் காதல் மட்டும் சுமந்தபடி
உன்னை காதலிக்கிறேன்.//

அருமையாய் இருக்கு கவிதைகளின் காதலன்

சி. கருணாகரசு said...

காதலர் தினத்திற்கு எல்லோரும்
காதலிப்பவர்களுக்குதான் பரிசுகள் கொடுப்பார்கள்.
ஒரு வித்தியாசமாய்
உன்னையும் என்னையும் இணைத்து
காதலர் தினத்திற்கே
நம்மை பரிசாக கொடுத்துவிடலாமே.//

மிக ரசித்தேன் .... பாராட்டுக்கள்.

கவிதை காதலன் said...

நன்றி மின்சார கண்ணன்..
ஸ்டார்ஜன் தொடர்ந்து படியுங்கள்..
தமிழ் உதயம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...


முதல் முறையாய் வருகை புரிந்திருக்கும் thenammailakshmanan, சி. கருணாகரசு இருவருக்கும் நன்றி

Madurai Saravanan said...

super . kaathal kathalikka thoondukirathu. photovudan kavithai nalla uththi.

அபுஅஃப்ஸர் said...

கடைசி கவிதை அருமை

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

படத்திற்காக கவிதையா.... கவிதைக்காக படமா? மிரமித்தேன்... மிகவும் ரசித்தேன்...

கவிதை காதலன் said...

மிக்க நன்றி மதுரை சரவணன்

அபு அப்ஸர் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

குடந்தை அன்புமணி என்ன சொல்றது.. இரண்டுக்காகவுமே கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது. உங்களுடைய பாராட்டுக்களுக்கு முன்னாடி இந்த மெனக்கெடல்கள் ஒரு பெரிய விஷயமே இல்லை.

கவிப்ரியன் said...

(((நீ எங்கும் ஓடிவிட முடியாதபடி
என் காதலால் உன்னை
கட்டிவைத்திருக்கிறேன்.
ஆனால் சிக்கிக்கொண்டு
தவிப்பதென்னவோ நான்தான்.....))))


ரொம்பத்தான் மாட்டிக்கிட்டு தவிக்கிறீங்க போல. ஆனாலும் அது ஆனந்த அவஸ்தை தானே!

கமலேஷ் said...

கவிதை அதனையும் மிக அழகாக இருக்கிறது...காதலர் தின வாழ்த்துக்கள்...

anto said...

//என் மீது சாய்ந்தபடி
ஏதேதோ நகைச்சுவை உதிர்த்தபடி
நீ சிரிக்கிறாய்.......
நான் சின்னாபின்னமாகிறேன்//

காதலை காதலிக்கும் அழகான வரிகள்... வாழ்த்துக்கள் காதலா!

Madurai Saravanan said...

ukngal kavithai ellaame kathalar thina parisukal thaan. vaalththukkal.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//காதலர் தினத்திற்கு எல்லோரும்
காதலிப்பவர்களுக்குதான் பரிசுகள் கொடுப்பார்கள்.
ஒரு வித்தியாசமாய்
உன்னையும் என்னையும் இணைத்து
காதலர் தினத்திற்கே
நம்மை பரிசாக கொடுத்துவிடலாமே.//

அற்புதம், அருமை!

ஸ்வீட் ராஸ்கல் said...

Hai மச்சி,
கவிதைகள் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு டா, இந்த படங்களை போல.வார்த்தைகள் இல்ல மச்சி சொல்ல.
இதுல எந்த கவிதை டா அவங்களுக்கு ( உன் காதலிக்கு ).

//காதலர் தினத்திற்கு எல்லோரும்
காதலிப்பவர்களுக்குதான் பரிசுகள் கொடுப்பார்கள்.
ஒரு வித்தியாசமாய்
உன்னையும் என்னையும் இணைத்து
காதலர் தினத்திற்கே
நம்மை பரிசாக கொடுத்துவிடலாமே.//

அற்புதமான வரிகள் மச்சி.இந்த மாதிரி கவிதைகள் கொடுத்தாலே போதும் பரிசுகளே தேவை இல்லை.செலவு ரொம்ப மிச்சம்.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுது என்னை போன்ற உன் ரசிக தீவிரவாதிகளுக்காக.
காதலர் தின வாழ்த்துக்கள் மச்சி உனக்கும் அவங்களுக்கும் மற்றும் நம் அனைத்து நண்பர்களுக்கும்.

Indhu said...

Hai kadhala..
i love ur kavithai pa
they are really excellent.
nan daily morning system open paninadhum first pakuradhu unga varigal dhan.

நீ எங்கும் ஓடிவிட முடியாதபடி
என் காதலால் உன்னை
கட்டிவைத்திருக்கிறேன்.
ஆனால் சிக்கிக்கொண்டு
தவிப்பதென்னவோ நான்தான்.....

amazing wordings pa.

enaku neenga oru help pananum.
i want to open a blog like u.
(unga alavuku eludha mudilanalum konjam try panalamnu iruken)
enaku unga advice venum
plz give me ur email ID.
and plzzzzzz send ur mail to my ID
indhuchl@gmail.com

i am eagerly waiting for ur mail.
take care

Indhira

Indhu said...

neenga pictures ellam epdi collect panringa??
its really wonderful

கவிதை காதலன் said...

ஸ்வீட் ராஸ்கல்.. மச்சி நீ ரொம்ப அனுபவிச்சு கமெண்ட் போடுறடா. தேங்க்ஸ்டா..

கவிதை காதலன் said...

ஹாய் இந்து. இதுதான் நீங்க போடுற முதல் கமெண்டு'ன்னு நினைக்குறேன்.
உங்க கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள். பிளாக் எழுதறது நல்ல விஷயம் தானே.என்னோட மெயில் ஐடி என்னோட புரொஃபைல்ல இருக்கு.
உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

anto வின் கருத்துக்கு மிக்க நன்றி
மதுரை சரவணன் மீண்டும் வருக...
பெயர் சொல்ல விருப்பமில்லாதவரே... உங்க அடையாளமே வித்தியாசமா இருக்கு. நன்றி

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

அனைத்து கவிதைகளும் அருமை . காலம் கடந்து மறுமொழி இடுவதற்கு வருந்த வேண்டாம் .இந்த பதிவு மட்டுமே பழமை . ஆனால் இதில் சொல்லப் பட்டுள்ள காதல் என்றும் புதுமைதான் . வாழ்த்துக்கள்

Bala said...

//பார்க்கும் போது பாதியாகவும்
திரும்பிக்கொண்டு முழுதாகவும்
காதலை கொடுக்கும் வித்தையை
நீ எப்போது கற்றாய்//

வரிகளும் , பிணைக்கும் படமும் மிக கச்சிதம்... அருமை...

Gowri said...

paarkum podhu paathiyagavum thirumbikondu muludhagavum kodukkum kadhalai nee eppodhu kattrai...nice lines na Happy Valentinesday...

இதையும் படியுங்கள்