Friday, January 22, 2010

கன்னங்களோடு பேசிவிட்டு போ



உன் இதழ்கள்
என் காதுகளோடு பேசுவதை விட,
என் கன்னங்களோடு பேசுவதுதான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அடிக்கடி வந்து என் கன்னங்களோடு
பேசிவிட்டு போ



காதல் என்ற கைவிலங்கால்
உன்னில் என்னை பூட்டிக்கொண்டு
சாவியை தொலைத்துவிடு





என்னை கொஞ்சும் போது
உன்னிலிருந்து வெளிப்படும் காதலைவிட,
என்னை திட்டும் போது
உன்னிலிருந்து வெளிப்படும்
காதலே மிக அழகு

உன்னுடன் இருக்கும் இன்பத்தை விட
உனக்காக காத்திருக்கும்
இன்பம் மிகப்பெரியது.




21 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

ரசனையான வரிகள்......

Sangkavi said...

கவிதையும், படமும் அழகு...

அண்ணாமலையான் said...

நல்ல இனிமையான எழுத்து... வாழ்த்துக்கள்...

வெற்றி said...

அழகான வரிகள் :))

கவிதை காதலன் said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஆரூரன் விசுவநாதன், சங்கவி, அண்ணாமலையான், வெற்றி, அவர்களுக்கு மிக்க நன்றிகள்

R. Ramya said...

Chooooooo Chweeeeeeeeeeeet da

பிரியமுடன்...வசந்த் said...

கவிதைகள் ரகளை மாமு... காதல்போலவே...

தென்றல் said...

//அடிக்கடி வந்து என் கன்னங்களோடு
பேசிவிட்டு போ//

அட.. அட.. அட..
என்னமா யோசிச்சிருக்கீங்க..
முத்தம் அப்படிங்கிறதை
நேரடியா கேட்காம "கன்னத்தோடு பேசிவிட்டு போ"ன்னு சொல்ற அந்த
ஈகோ கலந்த வார்த்தை அட்டகாசம்.

"அவங்க" அடிக்கடி பேசுவாங்களோ?

மின்சார கண்ணன் said...

கொள்ளை அழகு.. படங்களும், கவிதையும்...

உங்கள் ரசனை என்னை அசர வைக்கிறது. Keep it up

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மச்சி,
என்னமா எழுதுற டா.போடா.அதுவும் இந்த வரிகள் வாய்ப்பே இல்ல டா!இப்படி கூட காதலிகிட்ட நசூக்க முத்தம் கேக்க முடியும்னு இப்போ தான் மச்சி தோணுது.

//உன் இதழ்கள்
என் காதுகளோடு பேசுவதை விட,
என் கன்னங்களோடு பேசுவதுதான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அடிக்கடி வந்து என் கன்னங்களோடு
பேசிவிட்டு போ//

இப்படி கேட்டா நிச்சயம் காதலி முத்தம் கொடுக்காம இருப்பாங்களா?.இந்த மாரி சொல்லி எத்தனை முத்தம் வாங்கி இருக்க மச்சி? கணக்கே இல்ல போலிருக்கு.ஓகே ஓகே Anyway super கவிதைகள் டா மச்சி.அந்த Kissing Picture சூப்பர்.அருமையான Romance.வாழ்த்துக்கள் மச்சி.தொடர்ந்து எழுது டா என்னை போன்ற உன் தீவிர ரசிகர்களுக்காக.

ஆளவந்தான் said...
This comment has been removed by the author.
ஆளவந்தான் said...

//உன் இதழ்கள்
என் காதுகளோடு பேசுவதை விட,
என் கன்னங்களோடு பேசுவதுதான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அடிக்கடி வந்து என் கன்னங்களோடு
பேசிவிட்டு போ//

இந்தக்கவிதையில முத்தம் அப்படிங்கிற வார்த்தை கூட எந்த இடத்துலேயும் வெளிப்படலை. ஆனா
இந்தக்கவிதை முழுவதும் முத்தம் மட்டுமே வியாபித்திருக்கிறது. சூப்பர். அருமையான கவிதை. கவிதைக்காதலனோட
கவிதைகளுக்கு பின்னாடி யார் இருந்தாலும் அவங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

கவிதை காதலன் said...

பிரியமுடன் வசந்த், ரம்யா, மின்சார கண்ணன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தென்றல் நீங்க வந்தாலே புயல் காற்ற கிளப்பி விட்டுடறீங்க.
ஸ்வீட் ராஸ்கல் நான் இன்னும் சின்னப்பையன்தான். நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் இன்னும் போகலை.

Vishnu said...

mr. alavanthan ronba thanks.......

vijay said...

மிகவும் அருமையான கவிதைகள் நண்பரே . வாழ்த்துக்கள்

Anonymous said...

i appreciate the way of expressing your feel. wonderful.

pratap said...

'என்னை கொஞ்சும் போது
உன்னிலிருந்து வெளிப்படும் காதலைவிட,
என்னை திட்டும் போது
உன்னிலிருந்து வெளிப்படும்
காதலே மிக அழகு'

மச்சான் கலக்கிட்ட டா.........
இப்பவும் நீ மணின்னு நிருபிச்சிட்ட.
மச்சான் நான் ரொம்ப திட்டு வாங்கி
இருக்கேன்

pratap said...

முத்தத்தை பத்தி யார்யாரோ
பேசுறிங்க என்னை கேக்கமடீன்களா.
என்ன சின்ன புள்ள தனமா இருக்கு.

pratap said...

இங்க யாரோ சின்ன பயைனமே
அவங்கள பசங்க பார்ட்-2 க்கு நடிக்க
கூப்ட்டாங்க.

pratap said...

ஆளவந்தான் மணி குண்டா
இருக்கிறத தானே சொல்லுரிங்க.
மச்சான் உன்னை கலாய்கிரங்க.

Ananthi said...

superrrrrrrr.. very nice.. :)

இதையும் படியுங்கள்