Wednesday, December 30, 2009

நடிகைகளின் இரட்டை வேடங்கள்

நம் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கரில் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், என அத்தனை முன்னணி நடிகர்களும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் கதாநாயகிகளுக்கு இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. மிகவும் சொற்ப அளவிலே கதாநாயகிகளுக்கு அத்தகைய வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன.

பொதுவாக நடிகர்கள் அனைவரும் எதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து விடுவார்கள். அதை எல்லா நடிகர்களுமே விரும்புவார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் கூட, இயக்குநர்களிடம் வற்புறுத்தியாவது ஏதாவது ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவிடுவார்கள். ஆனால் நடிகைகள்? யோசித்து பார்த்தால் கேள்விக்குறிதான் மிஞ்சும். எந்த நடிகையும் இரட்டைவேட கதாபாத்திரத்தை வற்புறுத்துவது இல்லை. அவர்கள் வற்புறுத்துவதற்கான வியாபார சூழ்நிலையும் அவர்களுக்கு அமைவதில்லை. இந்த முட்டுக்கட்டை நிலைகளை தாண்டியும் சில நடிகைகள் இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். சில இயக்குநர்கள் அப்படிப்பட்ட கதைகளை அமைத்து இருக்கிறார்கள். இது கதாநாயகர்களுக்கான உலகம். அவர்களை சார்ந்துதான் வியாபாரம் என்று சுட்டிக்காட்டப்படும் தமிழ்சினிமாவில், அத்தகைய சில தடைகளை தாண்டி சில நாயகிகளுக்கு இரட்டைவேடத்தில் நடிக்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் அவ்வாறு இரட்டை வேடத்தில் நடித்த சில கதாநாயகிகளை பற்றி பார்க்கலாம்.

அந்தகால கட்டம் என்று எடுத்துக்கொண்டால் 1960 - 1970’களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் "பக்த குசேலா" என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையான “டி.ஏ.மதுரம்” “பைத்தியக்காரன்” என்ற திரைப்படத்தில் இரட்டைவேடத்தில் நடித்திருக்கிறார்.

1970-1980 இந்தகாலகட்டத்தில் நடித்த சில நடிகைகளுக்கும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோர்களுக்காக இரட்டைவேட கதாபாத்திரங்கள் படைக்கும் வேளையிலும், நடிகைகளுக்காகவும் சில இரட்டைவேட கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன அவற்றில் குறிப்பாக கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சரோஜா தேவி “கலங்கரை விளக்கம்” திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நடிகர் திலகம் என்று சிவாஜியை குறிப்பிடுவதைப் போல், நடிகைகளில் நடிகையர் திலகம் என்று அழைக்கப்படுபவரான சாவித்திரி அவர்களும் “காத்திருந்த கண்கள்” படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார்.

நூற்றுக்கணக்கான திரைப்படத்தில் நடித்து, நடிப்பில் பல உச்சங்களை தொட்ட அற்புத நடிகையான புன்னகை அரசி கே.ஆர். விஜயாவுக்கும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "இதயக் கமலம்" திரைப்படத்தில் இரண்டு விதமான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், தன்னுடைய திரைப்படங்களில் பெண்ணியம் சார்ந்த விஷயங்களை அதிகம் கையாளும் இயக்குனர் சிகரம் பாலசந்தரின் “காவியத்தலைவி” திரைப்படத்தில் நடிகை செளகார் ஜானகி இரண்டுவேடங்களில் நடித்து அமர்க்களப்படுத்தி இருப்பார்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும், திரைப்பட நடிகையுமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களும் “யார் நீ, லட்சுமி, விஜயா, அடிமைப்பெண்” ஆகிய திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். வாணிஸ்ரீ அவர்கள் “வாணி ராணி”, “இருளும் ஒளியும்” போன்ற திரைப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

மனோரமா எத்தனையோ திரைப்படங்களில் இரட்டைவேடத்தில் நடித்திருந்தாலும் “பத்து மாத பந்தம்” திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை சச்சு அவர்களும் "சொர்க்கம்" திரைப்படத்தில் ஐந்து விதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகை தேவிகா “வானம்பாடி, நெஞ்சம் மறப்பதில்லை” போன்ற திரைப்படங்களில் இரட்டைவேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை சுமித்ரா அவர்களுக்கும் “கடவுள் அமைத்த மேடை” திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1980 - 1990 காலகட்டத்தில் என்று பார்த்தால், நடிகை ஸ்ரீதேவியும் “வணக்கத்திற்குரிய காதலியே” திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அம்பிகா “தங்கமடி தங்கம், பேய்வீடு” ஆகிய திரைப்படத்திலும், நடிகை ராதா “சின்னப்பதாஸ்” படத்திலும் இரட்டைவேட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழ்சினிமாவையே தன்னுடைய கவர்ச்சியால் கலங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் இருந்தால்தான் திரைப்படத்தை வாங்குவோம் என்று விநியோகஸ்தர்கள் அடம்பிடித்த காலகட்டமும் உண்டு. அத்தகைய சில்க்ஸ்மிதா "சில்க், சில்க், சில்க்" என்ற திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அற்புதமான நடனமும், நடிப்பும் ஒருங்கே அமைந்த நடிகை பானுப்பிரியா. பானுப்பிரியாவுக்கும் “காவியத்தலைவன்” திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களுக்கான திரைப்பட ஆயுள் என்பது மிகக்குறைவாகவே இருக்கிறது. அதிலும் இரட்டைவேடத்தில் நடிப்பது என்பது மிகவும் அரிய வாய்ப்பாகவே இருக்கிறது. இந்த கால கட்டத்திலும் சில நடிகைகளுக்கு அத்தகைய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தொண்ணூறுகளின் பிற்பகுதியிலும், இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பங்களிலிருந்தும் நடிகைகளுக்கான இரட்டைவேட கதாபாத்திரங்கள் குறையத்தொடங்கின. முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் (ஐஸ்வர்யா பச்சன்) தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அத்தகைய வாய்ப்பை பெற்றார். இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய “இருவர்” திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயை இரட்டைவேடத்தில் நடிக்க வைத்தார். "நாடோடி மன்னன்" திரைப்படத்தில் இரட்டைவேடத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகை மீனாவுக்கும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து "மாயாபஜார் 1995" என்ற திரைப்படத்தில் நடிகை ஊர்வசியும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அட்டகாசப்படுத்தி இருப்பார். கவர்ச்சி பதுமையாக பயன்படுத்தப்பட்ட நடிகை மும்தாஜுக்கும் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாக்லேட் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மும்தாஜ் நடித்திருப்பார்.

கதாநாயகி இரட்டைவேடத்தில் நடிப்பதால் திரைக்கதையில் மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்தபடம் "பாண்டவர் பூமி". ஆம். இந்த திரைப்படத்தில் நடிகை ஷமீதாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்திருப்பார் இயக்குனர் சேரன். அதைத்தொடர்ந்து நடிகை ஸ்நேகாவுக்கும் அத்தகைய வாய்ப்பு இயக்குநர் கரு.பழனியப்பன் மூலமாக பார்த்திபன் கனவு திரைப்படத்தில் கிடைத்தது. நடிகை ஸ்நேகா மிக அழகாக இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். துறுதுறு நடிகை ஜோதிகாவும் இரட்டைவேட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "குஞ்சுகூனன்" திரைப்படத்தை தமிழில் தயாரித்தார்கள். அதுதான் பேரழகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் மாடர்ன் பெண்ணாகவும், கண் தெரியாத பெண்ணாகவும், இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தூள் கிளப்பி இருப்பார் நடிகை ஜோதிகா.

தற்போதைய கால கட்டத்தில் ஒரு கதாநாயகிக்கு இரட்டை வேடங்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிது. நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி பொம்மைகளாக மட்டுமே பார்க்கும் பார்வையிலிருந்து படைப்பாளிகள் சற்று விலகினால் மட்டுமே நடிகைகளுக்கு இரட்டை வேடங்கள் உருவாகும். கதாநாயகர்களுக்கு மட்டுமே கதை உருவாக்கும் சூழல்களிலிருந்து எப்பொழுதாவதுதான் நாம் வெளியே வருகிறோம். இந்த நிலை மாறி கதைகளுக்காக மட்டுமே நடிகர் நடிகைகள் என்ற சூழ்நிலை உருவாகும் பட்சத்தில், நடிகைகளுக்கான இரட்டை வேடங்கள் கொண்ட திரைப்படங்களும் அதிகம் வரும்.

மேலும், சில நடிகைகளும் நல்ல கதையம்சம் கொண்ட கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும், படம் முழுவதும் கவர்ச்சியின்றி நடிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை சில நடிகைகள் ஏற்பதில்லை. சில பரிசாட்சயத்துவமான முயற்சிகளுக்கு நடிகைகளது ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. எதற்காக வீண் சிரமம் எடுக்க வேண்டும்? கொடுக்கும் பணத்திற்கு இரண்டு வேடத்தில் நடித்து கஷ்டபடவேண்டுமா? என்று கதாநாயகிகள் யோசிக்கிறார்களா? இல்லை ஒரு கதாபாத்திரத்திற்கே நடிகையிடம் நடிப்பை வாங்குவது பெரும்பாடாக இருக்கிறது, இதில் இரண்டு கதாபாத்திரங்கள் கொடுத்து எப்படி சமாளிப்பது? என்று படைப்பாளிகள் யோசிக்கிறார்களா என்பது புரியாத புதிர்தான்.


இதனாலயே இயக்குநர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரட்டைவேட கதாபாத்திரங்கள் அமைக்க தயங்குகின்றனர். எந்தவிதமான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் மனப்பக்குவம் நடிகைகளுக்கு வரும் பட்சத்தில், நடிகைகளுக்கு உண்டான இரட்டைவேட திரைப்படங்களும் இனி வரும் காலத்திலும் சாத்தியமே.

30 comments:

சென்ஷி said...

நல்ல விரிவான ஆராய்ய்ச்சி... :)

எனக்குத் தெரிஞ்சு ஒரு படத்தை மாத்திரம் விட்டுருக்கீங்க. பார்த்த ஞாபகம் இல்லையோன்னு ஒரு படத்துலயும் நாயகி ரெண்டு வேடம். ஹீரோ ஆனந்த் பாபு, ராஜீவ். நாயகி பேரு தெரியலை :(

Sangkavi said...

நல்ல தொகுப்பு.........

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

டோரா said...

பொதுவாக இரட்டை வேடம் என்றால் கதாநாயகனைப் பற்றித்தான் பதிவார்கள். ஆனால்
தாங்கள் வித்தியாசமாக நாயகிகளின் இரட்டை வேடம் பற்றி எழுதி இருந்தது மிகவும் அருமை.

♠ ராஜு ♠ said...

நல்ல அலசல்.

tiger said...

nalla seithi

கவிதை காதலன் said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சென்ஷி,சங்கவி டோரா, ராஜு, டைகர் அனைவருக்கும் மிக்க நன்றி

கவிதை காதலன் said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

nadhiya said...

இந்த பதிவை படிக்கும்போது, இந்த விஷயங்களை எழுதுறதுக்காக ரொம்ப Home work பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது. Nice

nadhiya said...

இங்கு வருகை தரும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கவிதை காதலன், மற்றும் அவரது நண்பர்கள் எப்படி புத்தாண்டை கொண்டாடினீங்கன்னு சொல்லவே இல்லையே..
(இராணுவ ரகசியம்?)

Vishnu said...

நல்ல இருக்கு மச்சி.......

ஐஸ்வர்யா போடவே சொன்னேன்...........

Vishnu said...

போ நதியா ........

குர்குரே-வும், ஃப்பேன்டாவும் குடுத்து ஏமாத்திட்டாங்க.........

Vishnu said...

ஆமா கொஞ்சநாளா உங்க நண்பர்கள் எல்லோரையும் பிலாக்ல காணா?
என்ன மேட்டர் மாம்?

nadhiya said...

அப்போ நியூ இயர் அன்னைக்கு பயங்கரமா என்ஜாய் பண்ணீங்க போல இருக்கு... பிரதாப் சார் நீங்க எப்படி?

nadhiya said...

விஷ்ணு சார்.. உங்களுக்காவது பரவாயில்லை.. கூல்டிரிங்ஸும், சிப்ஸும் குடுத்தாரு உங்க ஃபிரண்டு... ஆனா எனக்கு எனக்கு என்ன குடுத்தாரு தெரியுமா?

தென்றல் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்ம்.... சொல்லு நதி.. ம்ம்ம்ம்ம்ம்ம்.... ரொம்ப ஆர்வமா இருக்கேன்

nadhiya said...

அல்வா குடுத்தாருன்னு சொல்ல வந்தேன்...

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi Mani,
நல்ல பதிவு மச்சி, ரொம்ப Hard work பண்ணி இருக்கேன்னு நல்லாவே தெரியுது.very good.keep going.

கவிதை காதலன் said...

மிக்க நன்றி பார்த்தி

pratap said...

இதோ வந்துட்டேன்...............

pratap said...

மணி,குமார் கூட இருக்கும்போது சந்தோசத்துக்கு அளவு இருக்காது.
அல்வா எப்படி இருந்தது?

தென்றல் said...

பிரதாப் சார், மணி எது குடுத்தாலும் நதியாவுக்கு நல்லாத்தான் இருக்கும். அது அல்வாவா இருந்தாலும் சரி.. ஆசிட்டா இருந்தாலும் சரி

pratap said...

மணி,குமார் கூட இருக்கும்போது சந்தோசத்துக்கு அளவு இருக்காது.
அல்வா எப்படி இருந்தது?

pratap said...

மணி நல்லாத்தான் அலசிருக்க.
நல்ல தேடல்.

pratap said...

என்னபன்றது தென்றல்,
நதி மோதினதானே மணி ஒலிக்கும்.

nadhiya said...

பிரதாப்பும் தென்றலும் என்கிட்டே வாங்கி கட்டிக்காம அடங்க மாட்டீங்க போல இருக்கு

pratap said...

அல்வாவா?

வேலன். said...

நல்ல பதிவு நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

சத்ரியன் said...

அதெல்லாம் ஒரு கனாக்காலம்.

இப்பல்லாம் நடிகைகளை எங்க சாமி நடிக்க விட்டிருக்காய்ங்க. ?

கவிதை காதலன் said...

விஷ்ணு, தென்றல், பிரதாப்,திரு வேலன், சத்ரியன், என கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

திவ்யாஹரி said...

நல்ல பதிவு நண்பா..

இதையும் படியுங்கள்