Wednesday, December 16, 2009

தமிழ் சினிமா தவறவிட்ட சில முத்துக்கள்

தமிழ்சினிமா அவ்வப்போது சிலரை தூக்கி சிகரத்தில் வைக்கும். சிகரத்தில் இருக்கும் சிலரை படுபாதாளத்தில் தள்ளிவிடும். சிலர் வெற்றிபெருவதை பார்க்கையில் நமக்கே கூட வேடிக்கையாய் இருக்கும். எதனால் இவர் வெற்றிபெற்றார் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. இந்த ரகத்தினராவது பரவாயில்லை. இன்னொரு ரகத்தினரும் இருக்கின்றனர். அதாவது சர்வ நிச்சயமாய் நமக்கு தெரியும் இவர் மிகப்பெரிய திறமைசாலி என்று. ஆனால் அப்படிப்பட்ட திறமைசாலிகளை ஏன் தமிழ்சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று யோசித்தால் நமக்கே கேள்விக்குறிதான் மிஞ்சும். அப்படி தமிழ் சினிமாவால் சரியாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சில திறமைசாலிகளை இங்கே பார்க்கலாம்.

வி.குமார் : நாணல், நீர்க்குமிழி, ஏழைக்கும் காலம் வரும். அரங்கேற்றம், கட்டிலா தொட்டிலா, மேஜர் சந்திரகாந்த் போன்ற பல வெற்றிபடங்களுக்கு இசையமைத்தவர்."காதோடுதான் நான் பாடுவேன்", "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" போன்ற காலத்தால் அழியா அற்புத பாடல்களை உருவாக்கியவர். பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தார். மிகச்சிறந்த திறமைசாலி. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை. இவரை தமிழ்சினிமா தன்னுடைய அரவணைப்பிற்குள் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்சினிமா மட்டும் இவரை சரியாக பயன்படுத்திக்கொண்டு இருக்குமேயானால், நிச்சயம் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இணையான ஒரு இசையமைப்பாளரை இழந்திருக்க மாட்டோம்.

மகேந்திரன் : தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த படங்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் இவரால் இயக்கப்பட்ட “உதிரிப்பூக்கள்” திரைப்படமும் நிச்சயம் இடம்பெறும். தமிழ் சினிமாவின் ரசிப்புத்தன்மையை வேறோரு கட்டத்துக்கு அழைத்துசென்ற இயக்குனர். முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்ற பல அற்புத படங்களை உருவாக்கியவர். தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்டவர். விமர்சகர்களாலும் வெகுவாக புகழ்ப்பட்டவர். ஆனால் இத்தனை திறமைவாய்ந்த ஒரு இயக்குனரை தமிழ்சினிமா ஏன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது இன்றளவும் புரியாத கேள்வி.

கஜோல் : இந்தி சினிமாவின் ராஜகுமாரி. வசீகர புன்னகையாலும், மெஸ்மெரிச கண்களாலும் ரசிகனை மெய்மறக்க செய்யும் ஒரு அற்புத நடிகை. ஃபனா என்றொரு திரைப்படத்திற்காக இந்தி சினிமாவின் மிகப்பெரும் நடிகர் ஆமீர்கானே கஜோலுக்காக மூன்று மாதங்கள் காத்திருந்தார் என்ற ஒருவரி செய்தி போதும் கஜோலின் முக்கியத்துவத்தை உணர்த்த.. அப்படிப்பட்ட மிகத்திறமைவாய்ந்த ஒரு நடிகை, தமிழ்சினிமாவில் “மின்சாரக்கனவு” என்ற என்ற ஒரு திரைப்படத்தில் நடித்தார். மின்சாரக்கனவு திரைப்படத்தை கஜோல், ரஹ்மான் இருவரும் தங்கள் தோளில் தூக்கி சுமந்திருப்பார்கள். கடவுளையே நினைத்துக்கொண்டிருப்பது, பின் மெல்லிதாக காதல் வயப்படுவது. காதல் வந்த பிறகு அதை வெளிப்படுத்த தயக்கம், காதலா, கடவுளா என்று தடுமாறுவது என அத்தனை விஷயங்களையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார். இவர் பேசவே இல்லை என்றால் கூட போதும். அத்தனை விஷயங்களையும் இவரது கண்ணே சொல்லிவிடும். அற்புதமான நடிகை. ஆனால் நம் தமிழ்சினிமா இப்படிப்பட்ட ஒரு திறமையான நடிகையை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது.

நந்திதாதாஸ் : இயக்குனர், கதாசிரியர், எழுத்தாளர், நடிகை என பன்முகத்திறமை வாய்ந்த ஒரு பெண். ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம்,பெங்காலி, மராட்டி, இந்தி, ஒரியா, என பல்வேறு ,மொழிகளில் பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்தவர். இவர் தமிழில், கன்னத்தில் முத்தமிட்டால், அழகி, விஷ்வதுளசி, போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார்.. ஆனால் இத்தனை திறமைவாய்ந்த ஒரு நடிகையை சரிவர பயன்படுத்திக்கொள்ளாமல், அரைகுறை நாயகிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். பின் எப்படி நம்மில் இருந்து உலகபடைப்புக்கள் வரும்?

ஸ்வர்ணலதா : எஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்றோருக்கு கிடைத்த அங்கீகாரமும், வாய்ப்புக்களும் இவருக்கு கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவர் தேசிய விருது, மாநில விருது உட்பட பல விருதுகளை பெற்றவர்தான். மென்சோக பாடல்களை இவர் பாடுகையில் ஏனோ ஒரு வித சோகம் நம்முள்ளும் தானே வந்து அமர்ந்து கொள்ளும். “எவனோ ஒருவன் வாசிக்கிறான்”, “போறாளே பொன்னுத்தாயி”, ‘மாலையில் யாரோ”, போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசாகர் உட்பட பலமுன்னணி இசையமைப்பாளர்களிடம் இவர் பாடல் பாடியிருக்கிறார். ஆனாலும் சமீப காலமாக இவரை ஏன் எந்த இசையமைப்பாளர்களும் கண்டுகொள்வதில்லை? எதனால் இவர் புறக்கணிக்கப்படுகிறார் என்ற கேள்வி புரியாத மர்மமாகவே இருக்கிறது.

அறிவுமதி: அரைவேக்காட்டுத்தனமாக பாட்டெழுத மாட்டேன் என்ற பிடிவாதத்தில் தமிழ் சினிமாவில் இருந்தே விலகியவர். பாடல் எழுதுவதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக கருதாமல் அதிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்று கருதுபவர். "மாலை என் வேதனை" "பொய் சொல்லக்கூடாது" “எங்கே செல்லும் இந்த பாதை”, “கவிதையே தெரியுமா?” என்று பல வெற்றிப்பாடல்களை எழுதியவர். இவர் எழுதிய சில வேகப்பாடல்களிலும் வார்த்தைகளில் கண்ணியம் ஒளிந்துகொண்டிருக்கும். பல புதிய பாடலாசிரியர்கள் உருவாக இவரே மிக முக்கிய காரணம். ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்தனுப்பிய மெட்டையே தனக்கு இதில் விருப்பமில்லை என திருப்பி அனுப்பியவர். இத்தகைய திறமை வாய்ந்த ஒரு பாடலாசிரியர் திரைத்துறையில் சமீபகாலமாக பாடல் எழுதுவது ஒதுக்கி வைத்திருக்கிறார் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். தமிழ் சினிமா தவற விட்ட முத்துக்களில் மிக முக்கியமானவர்

சந்தியா : மே மாதம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இயல்பான அழகும், வெகுளியான சிரிப்பும், மிக முக்கியமாய் நன்றாகவும் நடிக்கத்தெரிந்த நடிகை. அந்த திரைப்படத்தில் "சந்தியா" என்ற கதாபாத்திரத்தில் விளையாடி இருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஒரு பெரிய பலம் என்றால், இவரது நடிப்பும் மற்றொரு மிகப்பெரிய பலம். இவரது துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. காமெடி, நடனம், நடிப்பு, என எந்த துறையிலும் குறையும் சொல்ல முடியாத ஒரு நடிகை. மிகப்பெரிய அளவில் வருவார் என கணிக்கப்பட்ட நடிகை. தமிழ்சினிமாவில் இவரால் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த ஒரு படத்தைத் தவிர வேறு எந்த திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. எதனால் தமிழ்சினிமா இப்படி ஒரு நடிகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மற்றொரு புதிர்.

குட்டி "ஸ்வேதா" : 11 வயதுப்பெண்ணாக நடிக்க அறிமுகம் ஆகி, தன் வயதை விட அதிக விருதுகளை பெற்றவர். குட்டி என்ற தமிழ்திரைப்படத்தில் நம் எல்லோர் மனதிலும் ஈரம் கசிய வைத்த பெண். மல்லி, டெரரிஸ்ட், நவரசா போன்ற சர்வதேச திரைப்படங்களில் தன் முத்திரைய அழுத்தமாக பதித்தவர். அளவுக்கு மீறி நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு மத்தியில் அலட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாய் நடித்து விமர்சகர்களின் பாராட்டை பெற்றவர். புத்தகப் பையை விட அதிக திறமைகளை சுமந்தவர். மணிரத்னம் மட்டும் சமீபத்தில் இவரை தன்னுடைய ஆய்த எழுத்து திரைப்படத்தில் உபயோகப்படுத்தி இருப்பார். எதனால் தமிழ் சினிமாவின் கவனம் இந்த பெண்ணின் மீது விழாமல் போனது என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

இந்த வரிசையில் சில பேரை மட்டுமே இங்கு பட்டியலிட்டுக்காட்டி இருக்கிறோம். இதுபோல் எத்தனையோ திறமைசாலிகளை தமிழ்சினிமா கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. தமிழ் சினிமா என்பது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் என அத்தனை ஜாம்பவான்களும் சேர்ந்ததுதான். இவர்கள் அனைவரும் மனதார நினைக்கும் பட்சத்தில் இதுபோன்ற திறமைசாலிகள் நிச்சயம் அடையாளம் காட்டப்படுவார்கள். எத்தனையோ மிகச்சிறந்த எழுத்தாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் என பல திறமைசாலிகள் இன்னமும் சரியான அங்கீகாரமின்றி அடையாளமற்று கிடக்கின்றனர். ஒரு சிறிய திறமை உடையவனாக இருந்தாலும் அவனை ஊக்குவிக்கும்போதுதான் அவன் சாதனைகள் வெளியே தெரியும். ஒரு தனிமனிதன் படைக்கும் சாதனை என்பது அவனுக்கான அங்கீகாரம் மட்டும் அன்று; அவன் சார்ந்த தொழிலுக்குமானதுதான். தமிழ் சினிமா இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும். இன்னும் பல சிகரங்களை எட்ட வேண்டும். அதற்கு இதுபோல் திறமை வாய்ந்த நபர்களை ஊக்குவிக்கவேண்டும்.

எளிதாக சொன்னால் "ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்" என்ற வாலியின் வரியின் படி, இது போன்ற திறமைசாலிகளை அடையாளம் கண்டுகொண்டால் தமிழ் சினிமா இன்னும் பல சரித்திரங்கள் படைக்கும்.

31 comments:

பாலாஜி said...

நல்ல பதிவு

நல்ல வரிகள்
பகிர்ந்தமைக்கு நன்றி

பாலாஜி said...

பாடலாசிரியர் மு மேத்தா
பாடலாசிரியர் முத்துலிங்கம்

கலையரசன் said...

"ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்"
என்னமா பொளக்குறாங்கப்பா... வாலியா சொன்னாரு????

கட்டுரை அருமையாதான் இருக்கு... படிக்க!
திருந்தனும் இவனுங்க, அதான் முக்கியம்..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் கலை...

nadhiya said...

கஜோல் மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் தமிழ் சினிமாவுல தொடர்ந்து நடிக்காம போனது நம்மோட துரதிர்ஷ்டம்தான்.என்ன ஒரு ஆர்டிஸ்ட். Fanaa படத்துல அவங்க நடிச்சவிதத்தை பத்தி நாள் ஃபுல்லா பேசிகிட்டே இருக்கலாம்.எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை. அதே மாதிரிதான் நந்திதாதாஸும். What an artist!.. such a wonderful talented women. I Love her very much.நீங்க சொலி இருந்த எல்லாருமே ரொம்பவும் சரியான தேர்வுதான். ஆமா, யோசிச்சு பார்த்தா ஸ்வர்ணலதாவுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளிக்கலைங்கிறது
மில்லியன் டாலர் கேள்விதான். எனிவே ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு அழகான அதே சமயம் அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள் மணி சார்

கவிதை காதலன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாலாஜி

கவிதை காதலன் said...

கலையரசன், ஸ்ரீ.கிருஷ்ணா, நதியா உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்

Sangkavi said...

அருமையான பதிவு.....

மகேந்திரன், கஜோல், நந்திதாதாஸ், ஸ்வர்ணலதா இவர்களை ரொம்ப மிஸ்பன்னிட்டோம்.......

கவிதை காதலன் said...

இவர்கள் எல்லாம் சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் ந்ம்முடைய ரசிப்புத்தனமை இன்னும் எங்கேயோ போயிருக்கும். என்ன பண்றது?


நன்றி Sangkavi

pratap said...

மச்சி நல்ல தேடல் டா.. பாலுமகேந்திரா நல்ல இயக்குனர்.அவர் படம் எல்லாமே எனக்கு புடிக்கும்.கஜோல் எல்லோருக்கும் புடிக்கும்.ஏன் இவர்களை தமிழ் சினிமா use பண்ணமட்டுக்குது.மே மாதம் சந்தியா நீ நியாபகம் படுத்தும் போதுதான் எங்களுக்கு நினைவுக்கு வருது. நல்ல face cut மச்சி அவங்களுக்கு.

pratap said...

மச்சி அதே மாதிரி காதல் மன்னன் படத்துல வர மானு கூட நல்ல இருந்தாங்க.அவங்களை use பண்ண தெரியலையா இல்ல அவங்களுக்கு நடிக்க தெரியலையா?

pratap said...

மணி அது தமிழ் சினிமாவோட சாபம்.நான்தான் பெரிய ஸ்டார்,நாலு பாட்டு,ரெண்டு fight ,மொக்க வசனம் பேசி, ஸ்டைலேன்னு கை,கால அட்டிகினு இருக்க நடிகர்களின் படத்தை பார்க்குற ரசிகர்கள் மாறுகிரவரைக்கும் இது தொடர்துன்னு இருக்கும்.

pratap said...

எப்போ நடிகர்களுக்காக இயக்குனர் இருக்காம,இயக்குநருக்காக நடிகர் இருக்காங்களோ அப்பவேனா மாறலாம்.

Anonymous said...

Really superb.you have posted my thought as a blog.thank you

அமுதா கிருஷ்ணா said...

மின்சார கனவு படத்தின் டைரக்டர் படுத்திய பாடு,,கஜோல் திரும்ப தமிழ் படத்தில் நடிக்கவில்லை..நிறைய டேக் எடுத்து படுத்திவிட்டாராம்

கவிதை காதலன் said...

பிரதாப் தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி, உணர்வுகளைப்பகிர்ந்து கொண்ட அனானி, மற்றும் அமுதா கிருஷ்ணாவுக்கும் மிக்க நன்றி

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை நண்பரே.

அறிவுமதி பாடல் மீண்டும் வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எதிபார்ப்பு.

“நானக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை”

“மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ” என்பன போன்ற இன்னும் எத்தனையோ வரிகளை ரசித்திருக்கலாம்.

குட்டி ஸ்வேதாவும் பெரிய இடத்திற்கு வருவார் என்றுதான் நினைத்தேன்.

சுட்டிக்காட்டியிருக்கும் அத்தனை பேரையும் எனக்கும் பிடிக்கும்.சொல்லாமல் விட்டதில் இஷா கோபிகர்.(சென்ட்டிமெண்ட்டால் காலியானவர்).


காணாமல் போன இசையமைப்பாளர்கள், பாடகர்கள்,பாடகிகள் அங்கீகரிக்கப்படாத நல்ல நடிகர்களைப் பற்றி ஒரு தொடர் பதிவு சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.சுவர்ன லதா குறித்தும் தனி பதிவிட்டிருந்தேன்.உங்களின் பதிவை படிச்சதும் அந்த ஞாபகம் வந்தது.

நாடோடி இலக்கியன் said...

//அறிவுமதி மீண்டும் பாடல் எழுத வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எதிபார்ப்பு//


இப்படி இருந்திருக்க வேண்டும்.

Vishnu said...

போங்க....... சார் எல்லாரையும் சொன்னிங்க ஆனா ஒரு முக்கியமான டையரக்டர் ரை
சொல்லவே இல்ல. நா சொல்லட்டுமா ?

Vishnu said...

ஹாய் FRIENDS......
எல்லோருக்கும் என் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
நல் வாழ்துக்கள்............

nadhiya said...

விஷ்ணு சார் நீங்க யாரை சொல்றீங்கன்னு எனக்கு தெரியும். நீங்க சொல்றவர் கண்டிப்பா ஒரு பெரிய
இயக்குநரா வருவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு, பிரதாப்புக்கு, மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

pratap said...

இங்குள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

pratap said...

வாங்க சஞ்சய்விஷ்ணுசாமி.

ஸ்வீட் ராஸ்கல் said...

Hi மணி,
ரொம்ப நாள் கழிச்சி நான் கமென்ட் போடுறேன்னு கோச்சிக்காத சாரி டா.
உன்னுடைய பதிவுகள் நிச்சயமா நியாமானது தான்.ஆனா பிரதாப் சொல்ரமாரி இவங்க யாரும் திருந்த மாட்டாங்க.எனக்கு ரொம்ப பிடிச்ச 2 நடிகைகளையும் தமிழ் சினிமா ஏன் ஒதுக்கிருசின்னு இன்னும் புரியல.ஒரு வேளை எனக்கு பிடிச்சதால கூட இருக்கலாம்.Anyway நீ சொன்னது 100% உண்மை.நல்ல திறமைசாலிகள் என்றுமே ஏற்றுகொள்ளபடுவதில்லை.பூ heroin மாரியை விட்டுட்டியே மச்சி.நல்ல பதிவு.நீ கவலைபடாத மச்சி.நிச்சயம் உன்னை இந்த உலகம் ஏத்துக்கும்.உன்னை போன்ற சில நல்ல திறமைசாலிகளை என்னைக்கும் மறக்காது.உதாரணம் கமலஹாசன்.உன் படைப்புகள் நிச்சயம் வெற்றி பெறும்.நானும் காத்துக்கிட்டு இருக்கேன் உன் வெற்றியை கொண்டாட.ALL THE BEST மச்சி.வாழ்த்துக்கள்...

Cable Sankar said...

நல்ல அவதானிப்பு..

Cable Sankar said...

எனக்கு கூட இஷா கோபிகர் ரொம்ப பிடிக்கும்.. ஏனோ அவர் நடித்த படங்கள் ஓடியதே இல்லை.

Karitha Shalee said...

அருமையான பதிவு
தூள் கிளப்புங்க

பின்னோக்கி said...

வித்தியாசமான, அழகான அலசல்.
மே மாதம் சந்தியா சில ஹிந்தி படங்களிலும், விளம்பரங்களிலும் பார்த்த நியாபகம்.

Joe said...

நல்லதொரு இடுகை.

மே மாதம் படத்தில் நடித்த நடிகையின் பெயர் சோனாலி குல்கர்னி, "சந்தியா" என்பது அவரது கதாபாத்திரத்தின் பெயர்.

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான நல்ல அலசல்.

handy health tips said...

.......all ur articles very interesting.......இதும் நல்லா எழுதி இருக்கீங்க.........ரொம்ப ரசிச்சேன் ............இதுல ஏன் நீங்க நம்ம கார்த்திக் ராஜா பத்தி எழுதல?............any particular reason?

.........kavidai innum kooda neraya eludhalaame.......eager to see more!!!!!

இதையும் படியுங்கள்