Thursday, December 3, 2009

பிரதாப்பின் பிறந்தநாள்

சமீபத்தில் (23.11.2009 - திங்கட்கிழமை) எங்கள் பிரியமான நண்பன் பிரதாப்பின் பிறந்தநாள்.


(22.11.2009 - ஞாயிற்றுக்கிழமை) என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். திங்கட்கிழமை பிறந்தநாள் என்பதால் பிரதாப்புக்கு மட்டும்தான் விடுமுறை. எனக்கும் விஷ்ணுவுக்கும் வேலை இருந்தது. சரி லீவ் போட்டுவிடலாம் என்று முடிவு எடுத்தாயிற்று. ஆனால் விஷ்ணு? கமாண்டோ வீரனாச்சே. எப்படி லீவ் கிடைக்கும்?அவனால் எப்படி வர முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. "டேய்! அது என் பிரச்சனைடா. வரேன்னு சொன்னா கண்டிப்பா வருவேன்" என்று ரஜினி ஸ்டைலில் சொல்லி முடித்தான் விஷ்ணு. சரி நாளை பார்க்கலாம் என்று முடிவானது. மகாபலிபுரம் போவதாக முடிவு எடுத்தாயிற்று.


(23.11.2009 - திங்கட்கிழமை) பிரதாப்பிற்கு, நானும் விஷ்ணுவும் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டோம். நானும் பிரதாப்பும் விஷ்ணுவுக்காக விஷ்ணு வீட்டில் காத்துக்கொண்டிருந்தோம். மணி 9ஐ கடந்து, 10ஐ நெருங்கியது. கமாண்டோ வீரன் விஷ்ணு இன்னும் வரவில்லை. பிளான் போட்டது பாழாகிவிடுமோ என்ற பயத்தில் இருந்தோம். அதற்குள் பிரதாப்பின் அண்ணி பிரதாப்பிற்கு ஒரு வாட்ச் வாங்க வேண்டும் என்று சொன்னதால், பல இடங்கள் சுற்றி அண்ணாநகரில் உள்ள கனெக்ஷன்ஸ்'ல் ஒரு விலையுயர்ந்த வாட்ச் வாங்கி பரிசளித்தார். மறுபடியும் விஷ்ணு வீட்டில் விஷ்ணுவிற்காக காத்திருந்தோம். விஷ்ணு வந்தபாடில்லை. அதற்குள் பிரதாப் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று நண்பர்களை சந்தித்துவிட்டு வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டான். மணி 10.30. இப்போது சரியாக விஷ்ணு ஆஜர். எப்படிடா வர முடிஞ்சுது? என்று கேட்டதுக்கு, அதுதான் விஷ்ணு என்று தன்னுடைய ட்ரேட் புன்னகையை உதிர்த்தான்

இப்போது பிரதாப்பிற்காக மறுபடியும் காத்திருந்தோம். அதற்குள் விஷ்ணுவீட்டில் மொசைக்கல் வாங்கிவர வேண்டி இருந்ததால் நானும், விஷ்ணுவும் பைக்கில் கடைக்கு சென்றுவிட்டோம். அந்தக்கடையில் ஒரு அரைமணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதற்குள் பிரதாப் விஷ்ணுவீட்டிற்கு வந்துவிட்டான். ஒருவழியாக மொசைக்கல் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி 11.45ஐ தாண்டி இருந்தது. இதற்கு மேல் மகாபலிபுரம் செல்வது சரியாக இருக்காது என்பதால் பறக்கும் ட்ரெயினில் கேக் வெட்டி கொண்டாடலாம் என்று முடிவெடுத்தோம்.


காலையில் இருந்து சாப்பிடாததால் சரியான பசி. எங்கேயாவது சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடரலாம் என்று முடிவெடுத்தோம். இருவரது பைக்கும் விர்ரென்று புறப்பட்டது. நேரே Kabaabish ரெஸ்ட்டாரண்டில் நுழைந்தோம். நானும், விஷ்ணுவும் சேர்ந்து பிரதாப்பிற்கு ட்ரீட் கொடுப்பதாக முடிவானது. மூவருக்கும் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன், சிக்கன் லாலிபாப், மறுபடியும் சிக்கன்கோம்போ, கூல்டிரிங்க்ஸ் என இஷ்டத்திற்கு ஆர்டர் செய்தாயிற்று. சாப்பிட, சாப்பிட வந்து ஐயிட்டங்கள் கொண்டே இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. பிரதாப்பின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. (சந்தோஷத்தில் அல்ல.. சாப்பிடமுடியாமல்).. ஒருவழியாக அத்தனை கோழிகளிடமும் சண்டையை முடித்துவிட்டு, பில்லை செட்டில் செய்துவிட்டு வெளியே வந்தோம். எங்கேயாவது படுத்தால் போதும் என்று தோன்றியது. எங்கள் வீட்டிற்கு போகலாம் என்றால் அவ்வளவு தூரம் வண்டி ஓட்ட முடியாததால் வள்ளுவர்கோட்டத்திற்கு மெதுவாக வண்டியை உருட்டிக்கொண்டே சென்றோம்.
உள்ளே சென்று தரையிலேயே படுத்துவிட்டோம். எவ்வளவு நேரம் படுத்துகிடந்திருப்போம் என்று தெரியவில்லை. மெதுவாக பல கதைகளை பேசிவிட்டு, போனால் போகிறதென்று வள்ளுவரையும் தரிசித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மிக அழகான தருணங்கள்.
பிரதாப் Wish you many more Happy returns of the Day da ........


33 comments:

Anonymous said...

Hi Pratap, Belated birthday wishes to u.
i have one doubt..
may i know who is pratap in this group?

nadhiya said...

ஹாய் பிரதாப். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறந்த நாளை விட அதை நீங்க விவரிச்சிருந்த விதம் ரொம்ப அழகா இருந்தது. நண்பர்கள்'ன்னா இப்படித்தான் இருக்கணும், எப்பவும் சந்தோஷமா.... Nice Friendship..Keep it up.

nadhiya said...

கெனின் உங்களால முடிஞ்சா கண்டுபிடியுங்க பார்க்கலாம், இவங்க மூணு பேர்ல பிரதாப் யாரு? விஷ்ணு யாரு? மணி யாருன்னு?

தென்றல் said...

நதியா மேடம் உங்களுக்கு என்ன ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா? அதுல இருக்குறதுலையே மணியை எல்லா இருக்கும் தெரியும்.
விஷ்ணு பிரதாப் யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு ஈஸி வழி இருக்கு. யாருமே ஃபோட்டோ எடுக்கு போது பண்ணாத ஒரு சேஷ்ட்டை பண்ணிகிட்டு இருக்கிறதுதான் விஷ்ணு.(கடைசி ஃபோட்டோ பாருங்க) .கரெக்டா?? மணியையும், விஷ்ணுவையும் ஒதுக்கிட்டா மிச்சம் இருக்கிற
அந்த ஒரு நபர்தான் பிரதாப். எப்புடி???

தென்றல் said...

ஐயையோ.. சொல்ல மறந்துட்டேன். பிரதாப்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(இது அடுத்த பிறந்தநாளுக்கு.. அட்வான்ஸா சொல்லிட்டேன்.)

nadhiya said...

தென்றல் நான் புத்திசாலி இல்லைன்னு ஒத்துக்குறேன். ஆனா நீ ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா? ஏன் ஃபோட்டோ எடுக்கும்போது
யாருமே அந்த மாதிரி பிஹேவ் பண்ண மாட்டாங்களா?நீ என்னோட ஆர்குட் ஆல்பம் பார்த்ததில்லையா? அதுல மேக்னா, நீ, ரம்யா,
உங்களோட போஸ் எல்லாம் எப்படி இருக்கும்'ன்னு உனக்கு நியாபகம் இல்லையா? விஷ்ணுதான் அப்படி பண்ணுவார்ன்னு நீ எப்படி சொல்லலாம்? ஏன் அது பிரதாப்பா கூட இருக்கலாம் இல்லையா?

கவிதை காதலன் said...

நீங்க சொல்றது எல்லாமே கரக்ட்தான். ஆனா ரெண்டாவது ஃபோட்டோவை கொஞ்சம் கவனிச்சு பாருங்க நதியா. யானைக்கே ஹெல்மட் போடுற திறமை எங்க ஹீரோவுக்குதான் இருக்கு.

தென்றல் said...

அட ஆமா.. நான் கூட இப்பத்தான் பார்க்குறேன். விஜய்யாம் பெரிய விஜய்..அவர் கூட புறாவுக்குத்தான் பெல் அடிச்சாரு. ஆனா
நம்ம ஹீரோ யானைக்கே ஹெல்மட் மாட்டி இருக்கார்.என்ன ஒரு டெலண்ட்..

R. Ramya said...

என்ன ஒரு கொலை வெறி (தென்றலுக்கு சொன்னேன்)..

sullaan said...

இவர்தான் விஷ்ணுவா? தி கிரேட் அர்மி மேன்?? ம்ம்ம்ம்ம்.. பொண்ணுங்க மட்டுமே இருக்கிற கட்சியோட ஒரே தலைவர்..
விஷ்ணுசார் ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்.. கலக்குங்க.. பிரதாப் சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

kishore said...

மகாபலிபுரம்'ன்னு பிளான் பண்ணி, பறக்கும் ட்ரெயின்னு பிளான் பண்ணி, கடைசியில வள்ளுவர் கோட்டத்துல போய் படுத்துகிடந்திருக்கீங்க.
எதையுமே பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான். ஓகே? Belated birthday wishes to MR.Prathap

kishore said...

விஷ்ணு சார் ஒருவாட்டி என்னை திட்டுவேன்னு சொன்னீங்க. அன்னையிலெ இருந்தே உங்களை பார்க்கணும்ன்னு நினைச்சேன்.
நதியா கூட உங்களைப்பத்தி நிறையா சொல்லி இருக்காங்க. இப்போத்தான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறேன்.அழகா இருக்கீங்க. உங்க திருமணத்துக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பிரதாப் சார், இந்த பிறந்தநாள் உங்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளா இருந்திருக்குமே?

archana said...

//போனால் போகிறதென்று வள்ளுவரையும் தரிசித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.//

//பிரதாப்பின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. (சந்தோஷத்தில் அல்ல.. சாப்பிடமுடியாமல்).. //

//ஒருவழியாக அத்தனை கோழிகளிடமும் சண்டையை முடித்துவிட்டு, //

எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சு இருந்தது

Arvind said...

எல்லாம் சரி.. அவருக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன கிஃப்ட் கொடுத்தீங்கன்னு சொல்லவே இல்லையே ?

கவிதை காதலன் said...

நாங்க கொடுத்ததெல்லாம் என்னங்க கிஃப்ட்? அவருக்கு அன்னைக்கு ஒரு "கிஃப்ட்" கிடைச்சுது பாருங்க... அதுதான் பிரதாப்புக்கு மிகப்பெரிய கிஃப்ட்.
அது என்ன கிஃப்ட்ன்னு யாரும் கேட்கக்கூடாது.

தென்றல் said...

"சத்தம்" இல்லாம "நித்தம்" ஒரு "யுத்தம்" நடத்தி "புத்தம்" புதுசா கிடைச்ச கிஃப்ட் தானே அது. ஆனா அது என்னன்னுதான்
தெரியலை.. பிரதாப் சார் நீங்களே சொல்லிடுங்களேன்.வெட்கப்படாதீங்க..

pratap said...

மிக நன்றி மணி.

pratap said...

விஷ்ணு ,நதியா, தென்றல்,ரம்யா,கிஷோர்,kenin ,சுள்ளான் அனைவருக்கும் என் நன்றி.

pratap said...

தென்றலுக்கு அட்வான்ஸ் நன்றி,

pratap said...

மன்னிச்சுக்குங்க. வேலை அதிகம் அதன் வரமுடியல.

pratap said...

"சத்தம்" இல்லாம "நித்தம்" ஒரு "யுத்தம்" நடத்தி "புத்தம்" புதுசா கிடைச்ச கிஃப்ட் தானே அது.தென்றல்

இதுக்கு நீங்க முத்தம்னு சொல்லிடலாம். பின்ன ஒரு பிறந்தநாளுக்கு ஒரு காதலன் என்ன எதிர்பாற்பனோ அதான்
நடந்தது. போதுமடா மணி.

pratap said...

என்னை நான் அதிக நாளுக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா இருந்தது அன்றைக்குத்தான். thanks for mani and vishnu.

pratap said...

நாங்க எப்போமே இப்படி இருக்கணும் தான் நினைக்கிறோம். சில மாற்றம் வரும் கல்யாணத்துக்கு அப்புறம்.
அது வரைக்கு நாங்க இப்படி தான் இருப்போம்.அப்புறமும் நாங்க நண்பர்களா இருக்க நான் கடவுளை வேண்டுகிறேன்.

pratap said...

கிஷோர் எனக்கு மணி,குமாரை விட கிப்டு ஒன்னும் பெருசு இல்லை.
ரொம்ப ஓவரா இருக்கோ?

nadhiya said...

எப்பவுமே நீங்க இதே நட்போட இருக்கணும் பிரதாப். எந்த சந்தேகம் வந்தாலும் மனசுவிட்டு பேசிடுறது ரொம்ப நல்லது. கோபம் வந்தா திட்டிடுங்க. அடிக்க கூட செய்யலாம். ஆனா எந்த சூழ்நிலையிலும் நண்பர்கள் மேல சந்தேகம் மட்டும் வந்திடக்கூடாது. ஏன்னா Friendship only makes life beautiful..
Have a Nice Friendship.

Vishnu said...

கிசோர் சார் காமடி பண்ணாதிங்க ? நா அழகா இருக்கேன்னா ? hi.....hi......hi,hi

தென்றல் said...

விஷ்ணு சார் உங்களுக்கு என்ன? ஏர் வாய்ஸ் கம்பெனியோட ஓனர் மாதிரியே இருக்கீங்க..

கவிதை காதலன் said...

தென்றல், அப்போ கடைசியில எங்க விஷ்ணுவை, சூர்யா மாதிரி மெமரி லாஸ்ல அலைய சொல்றியா?

R. Ramya said...

பிரதாப் சார்.. உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

Vishnu said...

தென்றல், அப்போ கடைசியில எங்க விஷ்ணுவை, சூர்யா மாதிரி மெமரி லாஸ்ல அலைய சொல்றியா?No DAAAAAAAA Chellam............

pratap said...

வணக்கம் சஞ்சய் விஷ்ணுசாமி ..

pratap said...

நதியா உங்க ஆசிர்வாதம் இருக்கிறவரைக்கும் நாங்க நல்ல இருப்போம்.

pratap said...

மணி அடுத்து என்ன?

இதையும் படியுங்கள்