Tuesday, November 17, 2009

என் கேள்விக்கென்ன பொருள்?


“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம். ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க முடியாது”ன்னு சொல்லுவாங்க. அது ஓரளவுக்கு உண்மைதாங்க. அவங்க என்ன நினைக்குறாங்களோ, அதை சூசகமா வார்த்தைகள்'ல வெளிப்படுத்துவாங்க. ஆனா நம்மளாலதான் அதை புரிஞ்சுக்க முடியறது இல்லை. உதாரணத்துக்கு அவங்க சூசகமா சொல்லக்கூடியா வார்த்தைகளையும், அதுக்கு பின்னணியில இருக்கிற “உண்மையான” அர்த்தத்தையும் இப்போ நாம பார்க்கலாம்.

1. உங்களுக்கு என்ன பிடிக்கும்? = இந்தக் கேள்வையை அவங்க கேட்டாங்கன்னா உடனே நாம வரிஞ்சுகட்டிக்கிட்டு நமக்கு பிடிச்சதை எல்லாம் ஒப்பிப்போம். ஆனா இந்தக்கேள்விக்கு பின்னாடி இருக்கிற அர்த்தம் என்ன தெரியுமா? உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது, அப்படிங்கிறதுதான் இந்த கேள்விக்கு விளக்கம்..


2 அந்த பொண்னு எவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கா இல்ல = அப்படின்னு எதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திட்டு சொன்னா, உடனே நாம் அந்த பொண்ணோட அழகைப்பத்திதான் யோசிப்போம். ஆனா, அவங்க நம்மகிட்ட சொல்லவர்றது என்னன்னா, அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்


3. இன்னைக்கு என்ன சமையல் பண்ணட்டும்? = இந்தக்கேள்வியைக் கேட்டுட்டா அடடா நமம பொண்டாட்டி நம்மகிட்ட கேட்டுகிட்டுத்தான் சமையலே செய்யுறாளே அப்படின்னு நீங்க புளங்காகிதம் அடையக்கூடாது. டேய்! இன்னைக்கு உன்னைக்கேட்டுதான் சமைக்குறேன். மிச்சமாச்சுன்னா என்னால நாய்'க்கு எல்லாம் துக்கிப்போட முடியாது. எல்லாத்தையும் நீதான் சாப்பிட்டு தொலைக்கணும். இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்


4. உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? = இந்த கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா? உங்க பிரண்ட்ஸுங்கன்னு சொல்லி ஒருத்தன் கூட வீட்டுக்கு வரக்கூடாது. உனக்கு வடிச்சு கொட்டுறதே தண்டம், இதுல அவனுங்களுக்கு வேற என்னால் வடிச்சு கொட்ட முடியாது. இதுதான் இந்த கேள்விக்கு அர்த்தம்.


5. என்னமோ பண்ணுங்க = பரவாயில்லை நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாளே’ன்னு நீங்க யோசிச்சீங்கன்னா, உங்களை விட இளிச்சவாயன் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது நீயெல்லாம் திருந்தவே மாட்டே. எனக்கு இது பிடிக்கலை. இதுக்கு மீறி எதாவது செஞ்சேன்னா, மவனே தொலைச்சு கட்டிடுவேன். அப்படிங்கிறதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்.


6. எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்குறேன் = இந்த வார்த்தைய சொன்ன உடனே உங்களுக்கு உச்சி குளிர்ந்திடுமே. அப்படியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா யோசிக்கக்கூடாது. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? எப்பபார்த்தாலும் தண்டத்துக்கு ஊர் சுத்திகிட்டு இருக்குறதே உனக்கு பொழப்பா இருக்கு. இதுல குடும்பத்தை எங்கே கவனிச்சுக்க போறே? மொதல்ல சம்பளக்கவரை என் கையில கொடு. இதுதான் இந்த வார்த்தைக்கு அர்த்தம்7. நம்ம பையன் ஸ்கூல்'ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம் = அக்கறையா நம்ம கூப்பிடுறாங்கன்னு நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது. இந்த வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா? உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம் ? ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?. நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு. அப்பத் தெரியும்.

8. இந்த ஃபோன்'ல சரியாவே சிக்னலே கிடைக்கமாட்டேங்குது = இந்த வார்த்தையை சொன்ன உடனே, ஏதாவது நெட் வொர்க் பிராப்ளமா இருக்கும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனா அவங்க என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா? நட்டு கழண்டவனே! நீ மட்டும் ஸ்டைலா ஃபோன் வாங்கி வெச்சிருக்கே. எனக்கு மட்டும் செகண்ட் ஹாண்ட்'ல, அதுவும் இத்துப்போன மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கே. மொதல்ல இதை மாத்திட்டு நோக்கியா N 95 வாங்கிக்கொடு. அப்படிங்கிறதுதான் இதுக்கு அர்த்தம்.

9. இந்த நகைபோட்டா கழுத்துல ஒரே அரிப்பா இருக்கு = அப்படின்னா உடனே கழட்டி வெச்சிடுன்னு நீங்க சொல்லக்கூடாது கவரிங்'ல வாங்கிக்கொடுத்தா இப்படித்தான் இருக்கும். நகை வாங்கிக்கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு? மொதல்ல ஒரு நகைக்கடைக்கு கூட்டிட்டு போய், 916 ஹால்மார்க் நகையா வாங்கிக்கொடு. அப்படின்னுதான் அவங்க சொல்ல வர்றாங்க.

10. எவ்ளோ வேலைதாங்க நீங்க செய்யுவீங்க ? = உடனே நம்ம மேல எவ்ளோ பரிதாபப்படுறாங்க'ன்னு நீங்களா ஒரு செண்டிமெண்ட் உருவாக்கிக்காதீங்க. அட அறிவுகெட்டவனே.. உன் வேலையுண்டு, வீடு உண்டுன்னு வந்து சேர வேண்டியதுதானே. கண்டவன் பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிட்டு ஓவரா சீன் போடுறே? அப்படிங்கிறதைத்தான் அவங்க சொல்லாம சொல்றாங்க.

11. ஏங்க! இந்த சத்யம் தியேட்டர் எங்கே இருக்கு? = நீ மட்டும் உன் ஃபிரண்ட்ஸுங்களோட போய் கண்ட படத்தையும் பார்த்திட்டு வந்திடுறே. என்னை என்னைக்காவது அந்த தியேட்டருக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா? - அப்படின்னு உங்களை கேட்கறதுக்கு பதிலாத்தான் இந்தக் கேள்வியை அவங்க கேட்குறாங்க.


நண்பர்களே... இந்த உண்டான அர்த்தத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்குக்குங்க. ஒருவேளை உங்க மனைவியோ, இல்லை காதலியோ இந்த மாதிரி கேள்வியை உங்ககிட்ட கேட்டாங்கன்னா, அதுக்கு என்ன அர்த்தம்'ன்னு தெரியாம நீங்க முழிக்க கூடாது இல்லை. அதுக்குத்தான் சொன்னேன்.

39 comments:

பூங்குன்றன் வேதநாயகம் said...

அட போட வைக்கும் கேள்விகள்.ஆண்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க உதவும் பதில்கள்.ஆனால் இந்த இடுகை ஒரு இரண்டு ஆண்டுக்கு முன்னாள் படித்து
இருந்தால் நானும் தப்பித்து இருப்பேன்.இப்ப டூ லேட் சாமி எனக்கு.
poongundran2010.blogspot.com

வானம்பாடிகள் said...

இவ்வளவு இவ்வளவு இவ்வளவு லொல்லு வேலைக்காவாது=)).

கவிதை காதலன் said...

விதி வலியது பூங்குன்றன் சார். இப்போ ஃபீல் பண்ணி என்ன பிரயோஜனம்? ஆனாலும் அது ஒரு ஆனந்த அவஸ்தை

கவிதை காதலன் said...

என்ன பண்றது வானம்பாடிகள்? எல்லாம் ஒரு கேள்வி ஞானம்தான்

பிரசன்ன குமார் said...

இவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கா :)
எல்லாமே நல்லா இருக்கு (எந்த உள்ளர்த்தமும் இல்லை)

ஆளவந்தான் said...

உண்மை...உண்மை... உண்மை... நீங்கள் சொல்லி இருந்த அத்தனை விஷயமும் நூற்றுக்கு நூறு உண்மை... நம்மகிட்ட கேட்டுகிட்டு சாப்பாடு சமைக்கிறதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? இதுபுரியாமத்தான் இத்தனை நாளா வாங்கிக்கட்டிக்கிட்டு இருந்தேனா?

R. Ramya said...

மணி மாதிரி அனுபவசாலி சொன்னா அது சரியாத்தான் இருக்கும் ஆளவந்தான். என்ன சொல்றின்க மணி?

ஆளவந்தான் said...

இல்லைங்க ரம்யா.. கல்யாணம் ஆன எனக்கே பல விசயங்கள் புரிய மாட்டேங்குது..
ஆனா மிஸ்டர் கவிதை காதலனுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது? அதுதான் எனக்கு புரிய மாட்டெங்குது.. ஆனா ஒன்னு மட்டும் புரியுது ச்ம்திங் சம்திங்

R. Ramya said...

இதுல புறியாம இருக்க தேவையே இல்லை. மணி அனுபவசாலி. I Mean,,, எழுதரதுல.. நீங்க ஒன்னும் தப்பா திங்க் பண்னாதீங்க் ஆளவந்தான்

R. Ramya said...

மணி சார்.. விஷ்னு சாருக்கு கல்யானம் ஆகப்போகுதாமெ அவருக்கு இந்த ஐடியாக்களை எல்லாம் சொல்லிக்குடுங்க

nadhiya said...

இந்த மாதிரி ஐடியாக்களை விஷ்ணுவுக்கு மணி சொல்லி கொடுக்குறதா? என்ன ரம்யா காமெடி பண்றியா? இந்த மாதிரி கிண்டலடிக்கிறதுல மணி இப்பத்தான் எல்.கே.ஜி'ல ஜாய்ன் பண்ணியிருக்காரு. ஆனா விஷ்ணு டாக்டரேட்டே வாங்கியாச்சு.

nadhiya said...

வேணுமின்னா ஒண்னு பண்ண சொல்லலாம். காதலிச்சா எப்படி இருக்கணும்ங்கிறதை வேணும்ன்னா விஷ்ணுகிட்ட இருந்து மணிசாரை கத்துக்க சொல்லலாம்.

R. Ramya said...

நதியா, அப்ப என்ன மணிக்கு காதலிக்க தெரியாதுங்கிறையா?

தென்றல் said...

என்னது எங்க ஹீரோவுக்கு கல்யாணம் ஆகப்போகுதா? விடமாட்டேன்.. இந்த தென்றல் சூறாவளியாய் மாறி அவரை இழுத்துகிட்டு வந்தாவது என்கூட நடிக்க வைப்பேன். இது கிருஷ்ணமூர்த்தி மேல சத்தியம்.

R. Ramya said...

ஐஸ்வர்யா, அது யாரு கிருஷ்ணமூர்த்தி?

தென்றல் said...

அவர்தான் எங்க HR.

தென்றல் said...

ரம்யா மணிக்கு காதலிக்க தெரியாதான்னு நதியா கிட்ட கேக்குறியே. உனக்கே இது சின்னப்புள்ளத்தனமா இல்லை?

nadhiya said...

யாராவது என்னை கொஞ்சம் காப்பாத்துங்களேன். தென்றல் உனக்கு தைரியம் இருந்தா நீ விஷ்ணுகிட்ட பேசிப்பாரு. அப்புறம் நீ என்ன கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லுறேன்.

தென்றல் said...

தலை குனிஞ்சு நிக்குறது கதிருக்கு வேணுமின்னா பெருமையா இருக்கலாம். ஆனா ஒரு ஆர்மி மேன் தலை குனிஞ்சா அது இந்த நாடே தலைகுனிஞ்சது மாதிரி.என்கூட ஹீரோவா நடிக்கப்போறவர் என் முன்னாடி பேச முடியாம தலைகுனிஞ்சு நிக்கிற ஒரு நிலைக்கு னான் எப்பவும் ஒரு காரணமா இருக்க மாட்டேன்.

nadhiya said...

நீ அடங்க மாட்டே. விஷ்ணுகிட்ட வாங்கிகட்டினாத்தான் நீ அடங்குவே போல. உன் தலைஎழுத்து அதுதான்னா யார் என்ன பண்ண முடியும்?

தென்றல் said...

வரச்சொல் அந்த சிறுவனை.. கேள்விகளை அவன் ஆரம்பிக்கட்டுமா? இல்லை....... நான் ஆரம்பிக்கட்டுமா?

Vishnu said...

மச்சி சுப்பர் டா..... கவிதை நல்ல இருந்துச்சி அதான் அந்த போட்டோ..........

Vishnu said...

ஹாய் ப்ரண்ட்ஸ்..
மறுபடியும் வந்துட்டோம்ல...
நான் இத்தனை நாளா வராததுக்கு காரணம் ரம்யாதான்.

Vishnu said...

மேட்டர் என்னன்னா..
அவங்க என் முகத்தை கண்ணாடியில பார்க்க சொன்னாங்க.
சரி நானும் போய் பார்த்தேன்.
அப்ப மயங்கி விழுந்தவன்தான்
இப்பத்தான் எந்திரிச்சேன். அதான் லேட்டாயிடுச்சு..

Vishnu said...

நதியா உன்னோட டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

Vishnu said...

மிஸ் தென்றல்... நம்ம டீலிங்குக்கு வருவோம்.. 50 : 50 (பிஸ்கேட்ல இல்லம்மா ) கேள்வி பதில்..

தலை குனிஞ்சி நிக்கலைன்னா ஷு போடும் போது என்ன பண்றது?

இதுதான் என்னுடைய முதல் கேள்வின்னு தப்பா நினைக்காத.. இது என்னுடைய அறிமுகம்தான். ஓகே? சும்மா கிடையாது.

Vishnu said...

தென்றல் நான் உங்களை கண்டிப்பா வின் பண்ணுவேன் இது அந்த கிருஷ்ண மூர்த்தி மேல சத்தியம். (அதான் உங்க HR)

Vishnu said...

பிரதாப் மச்சி,,,,,,,,,
ஏன் இந்த கொலை வெறி?

nadhiya said...

ஐயோ நான் எப்படி மிஸ் பண்ணேன். மணி சாரிடா. உண்மையிலேயே அந்த ஃபோட்டோ இந்த கட்டுரைக்கு அருமையான தேர்வு. ஆனா இந்தப்பதிவு என்னை அவ்வளவா இம்ப்ரஸ் பண்ணலை.

தென்றல் said...

ஹீரோ சார், பில்டப் எல்லாம் நல்லாத்தான் குடுக்குறீங்க. சரி கேள்வி எப்போ கேட்பீங்க?

Vishnu said...
This comment has been removed by the author.
Vishnu said...

போங்க.... தென்றல் நா என்னமோ, உங்கள பத்தி பெரிசா நினைச்சேன் ஆனா நீங்க என்னுடைய Entrance டெஸ்ட்லயெ
பெயில் ஆயிட்டிங்க. (ஷூ மேட்டர்)

உங்களுக்கு ரோசி மிஸ் சரியா கத்துகுடுக்கலை. பாவம் அவங்க என்ன பன்னுவாங்க? அவங்கலே நாய்குட்டி செத்துப்பொன கவலையில இருக்காங்க
Its ok?

பட் எனக்கு உங்க மேல கோபமே இல்லை. என்னுடைய கோபம் எல்லாம் நதியா மேலத்தான்

Vishnu said...

என்ன நதியா...
எல்கேஜி லெவல் ஸ்டூடன்ஸ் பிராப்ளம் எல்லாத்தையும் எங்கிட்ட அனுப்பாதே.
ஏன் நீ சாமளிக்க முடியாத? அப்படி உனக்கு டைம் இல்லைன்னா மணிகிட்ட அனுப்பு.
நீ என்கிட்ட அனுப்பிச்சதும் நான் என்னமோ பெரிசா நினைச்சேன். இப்படி ஏமாத்திட்டியே?
பாத்தியா.... நான் வெறும் 2 லைன் தான் எழுதுனேன்.
அதுவே அவங்களுக்கு பில்டப் மாதிரி தெரியுது. சோ நான் இன்னும் ரெண்டு லைன் எக்ஸ்ட்ரா எழுதி இருந்தா அவங்க அட்மிட் ஆயிடுவாங்க போல இருக்கே.

Vishnu said...

கேள்விதானே கேக்கணும்...
"கேள்வி"
(ஒடனே பதில்ன்னு சொல்லி மொக்கை போடாதீங்க)

Sangkavi said...

அனுபவச்சி எழுதி இருப்பீங்க போல!...........

தென்றல் said...

விஷ்ணு சார்... உங்களைப்பத்தி நதியா சொன்னது கரெக்ட்'தான். நான் இப்போ ஒத்துக்குறேன்.

nadhiya said...

ஐயோ! விஷ்ணு.. ஐஸ்வர்யாவை நம்பாதீங்க. நான் அந்த மாதிரி எதுவுமே சொல்லலை. ஐஸ்வர்யா தேவை இல்லாம ஏன் என்னை வம்புல மாட்டிவிடுறே?..

தென்றல் said...

ஹேய் நதியா நீதானே சொன்னே.. விஷ்ணு ரொம்ப நல்லவர். ஆர்மிக்காக ரொம்ப கஷ்டபடுறார். எல்லா விஷயத்திலேயும் ரொம்ப சின்சியரா இருப்பாரு. நாட்டுக்காக தன்னுடைய வாழ்க்கையே அர்ப்பணிச்சிருக்காருன்னு.. இப்போ என்னடான்னா இதையெல்லாத்தையும் நீ சொல்லவே இல்லைங்கிற.. அப்போ விஷ்ணு இந்த மாதிரி எல்லாம் கிடையாதா? ஆனா... விஷ்ணுவை நீ இந்த மாதிரி சொல்வென்னு நான் எதிர்பார்க்கவே இல்லைப்பா..

என்.ஆர்.சிபி said...

நல்ல அனுபவம்தான் போல!

இதையும் படியுங்கள்