Tuesday, November 10, 2009

ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா


"கொடி இடையாள்" என அழைத்தால்
கோபப்படுவாயே! -இப்படி என் மீது
படர்கையில் என்னவென்று
நான் உன்னை அழைப்பது?


பொம்மையின் காதைத்திருகி
சாவி கொடுப்பது போல்... என் காதைத்திருகி
உன் விளையாட்டை ஆரம்பிக்கிறாய்..
ஆனால் கடைசியில்
"ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா"
என்ற பெயர் மட்டும் எனக்கு....

நீ புன்னகைக்காததால்
என் புகைப்படக்கருவிக்கூட
பணி செய்ய மறுக்கிறது..

இருள் சூழ்ந்துவிட்டது என
நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
சற்று உற்றுப்பார்....
சூரியன் தன் ஓரக்கண்ணால்
நம்மை ரசித்துக்கொண்டிருப்பதை.....


40 comments:

கலையரசன் said...

//உன் விளையாட்டை ஆரம்பிக்கிறாய்..
ஆனால் கடைசியில்
"ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா"
என்ற பெயர் மட்டும் எனக்கு....//

கடைசியில் தலைப்பையும் கவிதையில கொண்டு வந்துட்டீங்க.. அருமை!!

அபுஅஃப்ஸர் said...

சூரியனையே சைட் அடிக்க வைத்த காதல் அருமை

படத்தினால் வந்த கவிதையா? இல்லே கவிதைக்கான படம் தேர்வா?

Anbu said...

அனைத்தும் அருமையாக இருக்கிறது அண்ணா

வானம்பாடிகள் said...

காதல் கவிஞன்:)

D.R.Ashok said...

ஹிஹி போட்டோவும் அழகாயிருக்கு

சத்ரியன் said...

//"கொடி இடையாள்" என அழைத்தால்
கோபப்படுவாயே! -இப்படி என் மீது
படர்கையில் என்னவென்று
நான் உன்னை அழைப்பது?//

க.கா,

ஞாயயமான கேள்விக் கவிதை...!

கவிதை காதலன் said...

/நன்றி கலையரசன்/
படங்களும், கவிதையும் உங்களுக்கு பிடிச்சிருந்தா சந்தோஷம்தான் அபுஅஃப்ஸர்
/நன்றி அன்பு/
உங்க பட்டத்துக்கு நன்றி வானம்பாடிகள்
/அஷோக் சார் ரொம்ப ரசிச்சிருக்கீங்கன்னு தெரியுது/
நன்றி சத்ரியன்

R. Ramya said...

"நீ ரொம்ப கெட்ட பையன்"

Vishnu said...

நீ ரொன்ப நல்ல பையன் .............

R. Ramya said...

விஷ்ணு சார்... பொய்தானே சொல்றீங்க..

nadhiya said...

அழகான இயல்பான வரிகளும், அதற்கேற்ற புகைப்படங்களும் மிக அருமை. நாளுக்கு நாள் உங்க ரசனையோட அளவு அதிகரிச்சுகிட்டே வருதே என்ன காரணம்?

Vishnu said...

super sir , Mr கவிதை காதலன் உங்களுக்கு தெரியுமா ? நீங்க ஒரு ஒரிஜினல் பீஸ். உங்களுக்கு சப் டி யுட் டே கிடையாது...........

Vishnu said...

Miss Ramya,நா என்ன நீங்க அழகா இருகிங்கன்னா சொன்னே ?

R. Ramya said...

விஷ்ணு சார், நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க.

Vishnu said...

ரம்யா, நீங்க ..... காமாடி பீசா

pratap said...

மணி நீ ஒரு நல்ல,கெட்ட பையன். இப்ப என்ன பண்ணுவீங்க?

pratap said...

சரி மணி நதியா கேட்டதற்கு பதில் சொல்லல ஏன்?

R. Ramya said...

விஷ்ணு சார் என்னைப்பார்த்து நீங்க காமெடி பீசுன்னு சொல்றீங்களா? அப்போ உங்களை நீங்க கண்ணாடியில பார்த்தா என்ன சொல்வீங்க?

pratap said...

ரம்யா மேடம் விஷ்னுமேல கோவப்படதிங்க,அப்புறம் அவங்க ரசிகர் மன்றதில்லிருந்து உங்களுக்கு மிரட்டல் வரும்.

pratap said...

அவனோட நடிகைஎல்லாம் வருவாங்க.

pratap said...

மச்சான் ஸாரி.படமும்,எழுத்துக்களும் மிக நன்று.
இருள் சூழ்ந்துவிட்டது என
நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
சற்று உற்றுப்பார்....
சூரியன் தன் ஓரக்கண்ணால்
நம்மை ரசித்துக்கொண்டிருப்பதை.....
எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு.

R. Ramya said...

ஹலோ பிரதாப் சார், நான்தான் அந்த ரசிகர் மன்றத்துக்கு மகளிரணி தலைவர். எனக்கேவா?

சுள்ளான் said...

// பொம்மையின் காதைத்திருகி
சாவி கொடுப்பது போல்... என் காதைத்திருகி
உன் விளையாட்டை ஆரம்பிக்கிறாய்..
ஆனால் கடைசியில்
"ச்சீய்.. நீ ரொம்ப கெட்ட பையன்டா"
என்ற பெயர் மட்டும் எனக்கு....//

சூப்பர் கவிதை.

ம்ம்ம்ம்ம்... எத்தனை பேருகிட்ட நீங்க இந்த அழகான திட்டை வாங்கி இருக்கீங்க?

pratap said...

தலைவர் இல்லமா தலைவி. எங்கயோ போய்ட்ட விஷ்ணு.

சுள்ளான் said...

கவிதை காதலனுக்கு இருக்கிர ரசிகர்களோட என்னிக்கையை விட, விஷ்னுக்கு இருக்க்கிர ரசிகர்கள் அதிகம் போல்ல.. யாருப்பா அது விஷ்னு? கட்சியில எனக்கும் ஒரு சீட்டு கொடுங்க

சுள்ளான் said...

உடுங்க சார். விஷ்ணுவோட மயக்கத்துல தப்பா எழ்திட்டாங்க.

pratap said...

சுள்ளான்.
அதெல்லாம் கணக்கில இல்ல

சுள்ளான் said...

என் நண்பனை வெச்சி நீங்க யாரும் காமெடி கீமடி பண்ணலையே?. எங்க இன்னும் தென்றல் காற்றை காணோம்?

pratap said...

மன்னிக்கவும் அது பெண்களுக்கு மட்டும்தான் சுள்ளான்.

சுள்ளான் said...

ஆகா.. பெண்கள் மட்டுமே இருக்கிற ஒரு கட்சி.. அதுக்கு ஒரெ ஒரு தலைவர்.
விஷுனுவுக்கு ஒடம்புல மச்சம் இல்லை. மச்சத்துலதான் ஒடம்பே இருக்கு போல

கவிதை காதலன் said...

பிரதாப், ரம்யா, சுள்ளான், இப்போ உங்க மூணு பேருக்கும் நிம்மதியா தூக்கம் வருமே..

pratap said...

விஷ்ணு கலர பார்த்து கிண்டல் பண்ணுறியா.மகளிர் அணி தலைவி வருவாங்க.

pratap said...

மச்சான் உன்னை விட்டுட்டு எப்படா துங்கிருக்கேன்?

தென்றல் said...

சாரி கமெண்ட் போட முடியலை. ஒரு டெத் நடந்துடுச்சு. அதனாலதான்.

சுள்ளான் said...

சாரி தென்றல்.. நான் எதோ விளையாட்டுக்கு கேட்டேன். தப்பா நினிச்சுக்காதீங்க.

தென்றல் said...

பரவாயில்லை மனோ.. ரோஸி மிஸ் நாய்க்குட்டி செத்துப்போச்சாம். ஆவ்வ்வ்வ்வ். அந்தக்கவலைதான்
எனக்கு.. ஒருவாரமா ஆபிஸே போகலை. அதனாலதான் கமெண்டே போட முடியலை.

pratap said...

என்ன கொடுமை தென்றல் இதெல்லாம்.

cheena (சீனா) said...

அன்பின் கவிதை காதலன்

தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் - அவற்றிற்காகவே எழுதப்பட்ட கவிதை - படரும் போது கொடி இடை - ஆதவனும் ரசிகனாகிறான் - புகைப்படக் கருவி கூட வேலை நிறுத்தம் செய்கிறது - கெட்ட பய புள்ள நீ

ரசித்தேன் மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள்

cheena (சீனா) said...

இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பிரியமுடன் ரமேஷ் said...

அருமை

இதையும் படியுங்கள்