Thursday, October 15, 2009

என் முத்தத்தின் வலி

நம் இடைவெளியை எண்ணி
கட்டிலும் கண்ணீர் விட்டு அழுகிறது.
நம் சண்டையில் கட்டிலை
அழவைக்கலாமா?
சரி.. சரி.. என் கட்டிலுக்காக
என்னை கொஞ்சம் கட்டியணைத்துக்கொள்..நீ சொல்லவில்லை என்றால் என்ன?
உன் தேகம் தொட்ட மழைத்துளி கூட
சூசகமாய் சொல்லிபோகிறது
உன் காதலை....
உன் துணையை நிச்சயமாய்
நான் தேடவில்லை.
என் நிழலுக்குதான்
ஒரு துணை தேவையாம்.
கொஞ்சம் உதவி செய்.

உனக்குப் பிடித்த
ஆடை எது என்று கேட்டேன்.
சட்டென்று என்னை
அணைத்துக் கொண்டாய்.


"காஃபின்" என்ற விஷப்பொருள்
காஃபியில் கலந்திருக்கிறதாமே..
எனக்கு தெரிந்தவரை
நான் பருகும் காஃபியில்
உன் காதல் மட்டும்தான் கலந்திருக்கிறது.


எடை இழப்பு நிலவில் சாத்தியம்
என்பதை உணர்ந்து கொள்கிறேன்.
உன்னை ஏந்திக்கொள்ளும் போது...
அடிக்கடி என்னை தொடாதே..
தொலைந்து போகும் என்னை
கண்டு பிடிக்க முடியாமல்
திணறுகிறது ராணுவமும்...
என் தலை கோதும்
உன் விரல்களின் அழுத்தத்தில்
தெரிகிறது என் முத்தத்தின் வலி...

48 comments:

பிரியமுடன்...வசந்த் said...

//உனக்குப் பிடித்த
ஆடை எது என்று கேட்டேன்.
சட்டென்று என்னை
அணைத்துக் கொண்டாய்.//

ரசித்தேன் பாஸ்

R. Ramya said...

//என் தலை கோதும்
உன் விரல்களின் அழுத்தத்தில்
தெரிகிறது என் முத்தத்தின் வலி...
//

வலிக்கிறது...

மின்சார கண்ணன் said...

//சரி.. சரி.. என் கட்டிலுக்காக
என்னை கொஞ்சம் கட்டியணைத்துக்கொள்..//

அதெப்படி நைசா பழியை தூக்கி கட்டில் மேல போடுறீங்க? இந்த மாதிரி எல்லாம் யாருங்க உங்களுக்கு யோசிக்க சொல்லிகொடுக்குறது? கலக்கல் கவிதைகள்...

ஆளவந்தான் said...

புகைப்படங்களை பாராட்டுறதா, இல்லை கவிதைகளை பாராட்டுறதான்னே தெரியலை. அஜித் ஷாலினி மாதிரி ரெண்டும் அவ்ளோ பொருத்தமா இருக்கு.

//உனக்குப் பிடித்த
ஆடை எது என்று கேட்டேன்.
சட்டென்று என்னை
அணைத்துக் கொண்டாய்.////

அற்புதமான வரிகள்..

aarthi said...

சார் நீங்க மணியை திட்டி குட கமென்ட் போடுங்க. போருத்துக்குவாறு. ஆனா ஷாலினி அஜித் ரெண்டு போரையும் ஜோடியா சேர்த்து பெசுநீங்கன்ன அவருக்கு பொறுத்துக்க மாட்டாரு.

aarthi said...

கவிதைகள் நள்ளா இருக்கு மணி

கவிதை காதலன் said...

பிரியமுடன்...வசந்த், மின்சார கண்ணன், ஆளவந்தான், ரம்யா, ஆர்த்தி அனைவருக்கும் மிக்க நன்றிகள்

மருதமூரான். said...

////உனக்குப் பிடித்த
ஆடை எது என்று கேட்டேன்.
சட்டென்று என்னை
அணைத்துக் கொண்டாய்.////

அணைத்துக் கொண்டதில் நொருங்கியதடி….. ஆனாலும், ஒவ்வொரு அணைப்பும் ஆயிரம் அர்த்தம் சொன்னதடி.

நல்லாயிருக்கு கவிதை. வாழ்த்துக்கள்.

R. Ramya said...

அது ஏன் எப்போ பார்த்தாலும் ரயில்வே டிராக்கும், காஃபியும் மட்டுமே உங்க கண்ணுக்கு தெரியுது? Something wrong..
நதி எங்கே போகிறது கடலைத்தேடி..
மணி எங்கே போகின்றான் ?????

தென்றல் said...

ரம்யா நீ முடிக்காத வரியை நான் முடிக்கிறேன்.
மணி எங்கே போகின்றான் ?????
நதியைத் தேடி...எப்புடி??

" உழவன் " " Uzhavan " said...

நிழலுக்குத் துணைதேடிய கவிதையை மிக ரசித்தேன்.

nadhiya said...

உங்க கவிதைகள்'லையே என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணது "உன் அணைப்பினால் அழகாகிறேன்" கவிதைதான். ஆனா......

//என் தலை கோதும்
உன் விரல்களின் அழுத்தத்தில்
தெரிகிறது என் முத்தத்தின் வலி...//

இந்த வரிகள் மிக அற்புதம். அதாவது ஒரு மனிதனால் தனக்கு கொடுக்கப்படுகிற விஷயத்தைதான் உணர முடியும். தன்னால் கொடுக்கப்படுகிற விஷயத்தை அவனால் உணர முடியாது. அதை அடுத்தவங்களால்தான் உணர முடியும். ஆனா நீங்க சொல்லி இருந்த இந்த கவிதையில அவனால் தரப்படுகிற முத்தத்தோட வலியை அவனே உணர்கிறான், அதுவும் அந்தப் பெண்ணோட விரல்களின் அழுத்தத்தில் அப்படிங்கிறது நினைச்சு பார்க்க முடியாத கற்பனை. Hats off Mani. உங்க கவிதைகள்லையே இதுதான் டாப். Amazing

Thirumathi Jaya Seelan said...

அனுபவ காதல் கவிதை.அற்புதம்

pratap said...

மச்சி சூப்பர் டா. இந்தவாட்டி புகைப்படம் நன்றாக இருந்தது கவிதையை விட.

தென்றல் said...

//அடிக்கடி என்னை தொடாதே..
தொலைந்து போகும் என்னை
கண்டு பிடிக்க முடியாமல்
திணறுகிறது ராணுவமும்...//


இவரு அடிக்கடி தொலைஞ்சிடுவாராம். விஷ்ணு வந்து அடிக்கடி கண்டு பிடிக்கணுமாம். பாவம்யா அந்த புள்ள. ஒழுங்க ராணுவத்துல வேலை செய்ய உடுங்க.

pratap said...

நதியா அதெல்லாம் கற்பனை இல்ல.எல்லாம் அனுபவத்தில் வந்தது.

pratap said...

நதியா அதெல்லாம் கற்பனை இல்ல.எல்லாம் அனுபவத்தில் வந்தது.

Anonymous said...

//உனக்குப் பிடித்த
ஆடை எது என்று கேட்டேன்.
சட்டென்று என்னை
அணைத்துக் கொண்டாய்.//

Superbbbbbbbbbbbbbbb.....

Anonymous said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் மிகவும் ரசிக்க வைத்த வரிகள்.

தென்றல் said...

பிரதாப் சார் நீங்க வேற எதைப்பத்தி வேணுமின்னாலும் சொல்லுங்க். நதி சுனாமியா பொங்கி வரும். ஆனா இப்போ ஒண்ணுமே பேச மாட்டாங்க.

pratap said...

என்ன கொடுமை இது. விட்டுடுங்க பாவம்.

தென்றல் said...

ஹலோ சார். யாரை விட சொல்றீங்க? ஒழுங்கா க்ளியரா சொல்லுங்க்க்

pratap said...

எந்த சுனாமி வந்தாலும் விஷ்ணு தடுப்பா இருப்பான்.மணிக்காக செய்ய மட்டனா என்ன.நாங்க எல்லாம் நாடோடிகள்.

pratap said...

நான் விஷ்ணுவை சொன்னேன்.

தென்றல் said...

பார்த்து பிரதாப் சார்.. காது போயிடப்போகுது, இல்லை காலு போயிடப்போகுது. சம்போ சிவ சம்போ... இனி நீங்க அம்போ, அம்போ.

pratap said...

ஒழுங்காக போற நதி மேல கல்லைவிட்டு எறியதிங்க தென்றல்.

தென்றல் said...

நீங்க ஒருத்தர், விஷ்ணு ஒருத்தர், எங்கே அந்த இன்னொருத்தரு???

தென்றல் said...

எத்தனி கல்லு எரிஞ்சாலும் அமைதியாவே இருக்குதே. இந்த நதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லது.....

pratap said...

அவர் கொஞ்சம் குண்டா குள்ளமா புஞ்சிட்டிருக்குமே?

pratap said...

நதி என்றாலே அமைதிதானே.

தென்றல் said...

அதுகூட புரியாம இருக்கிற அளவுக்கு நான் என்ன நதியாவா? எனக்கு புரிஞ்சிடுச்சி. எங்கே அந்த வெடிகுண்டு?? இப்ப எல்லாம் வெடிக்கவே மாட்டேங்குது

pratap said...

அவங்கள எதுக்கு இழுக்குறிங்க?
சந்தர்ப்பம் பார்த்து வெடிக்கும்.

pratap said...

எங்க டீம்ல அவன்தான் வெயிட்.

தென்றல் said...

ஹெட் வெயிட்டா?

pratap said...

வேண்டாம் அழுத்துவேன்?

தென்றல் said...

சரி போனா போகட்டும். தீபாவளிக்கு ஃ பிரண்ட்ஸ் எல்லாம் என்ன பண்ணீங்க?

pratap said...

மூணுபேரும் மணி வீட்ல கார்ட்ஸ் விளையாடினோம்.
மன்னிச்சிக்குங்க மறந்துட்டேன். எல்லோருக்கும்
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தென்றல் said...

ஓ.. இந்த வாழ்த்துக்கள் அடுத்த தீபாவளிக்கா? பரவாயில்லை.. கார்ட்ஸ்ல ஜெயிச்சது யாரு?

pratap said...

எப்போவுமே நான்தான்.

கவிதை காதலன் said...

தென்றல் உங்க புயல் காற்றை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி வையுங்க.

மிஸ்டர் பிரதாப் உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நீங்களோ ஜெயிச்சீங்க? ஒரு ராணுவ வீரனையே அசால்ட்டா தோற்க அடிச்சிட்டு நான் இவ்ளோ அமைதியா இருக்கேன். மோதல் ரவுண்ட்லையே எஸ்கேப் ஆயிட்டு, எப்படி உங்களால இப்படி பேச முடியுது?

Vishnu said...

என்ன பார்த்த பாவமா தெரியலையா உங்களுக்கு ?

ஸ்வீட் ராஸ்கல் said...

//என் தலை கோதும்
உன் விரல்களின் அழுத்தத்தில்
தெரிகிறது என் முத்தத்தின் வலி...//

மிகவும் ரசித்தேன்டா மணி.
நதியா சொன்னா மாறி அந்த பெண்ணோட விரல்களின் அழுத்தத்தில் அந்த வலியை உணர்வது என்பது நிச்சயமாவே அற்புதமான கற்பனை.உன்னுடைய Top 10 கவிதைகளில் இதுவும் நிச்சயம் இருக்கும்.உன்னுடைய கற்பனைக்கு என் சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்.ஒரு சின்ன சந்தேகம் இது கற்பனையா இல்ல அனுபவமா?...

கவிதை காதலன் said...

பார்த்தி.... தேங்க்ஸ் மச்சி.. இது வெறும் கற்பனை தாண்டா... அதை தாண்டி ஒண்ணுமே இல்லை.

கவிதை காதலன் said...

ஹேய்.. எல்லாரும் கை தட்டுங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் விஷ்ணு சார் வந்திருக்காரு.... மச்சான் தேங்க்ஸ்டா....

nadhiya said...

ஹாய் விஷ்ணு.. எனக்கு கண்டிப்பா தெரியும் நீங்க கமென்ட் போடுவீங்கன்னு... தேங்க்ஸ் விஷ்ணு.. என்னுடைய லேப் டாப் கொஞ்சம் பிராப்ளமா இருக்கு. அதனால்தான் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியலை. சாரி விஷ்ணு..

Vishnu said...

ரொன்ப நல்லதா போச்சி..........

Anonymous said...

"என் தலை கோதும்
உன் விரல்களின் அழுத்தத்தில்
தெரிகிறது என் முத்தத்தின் வலி..."


அற்புதமான வரிகள்..
காதலை இதை விட அழகாக சொல்ல முடியாது.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

மற்ற கவிதைகளை விட
காதல் கவிதைகளில்
பிண்றீங்க காதலரே..

இதையும் படியுங்கள்