Thursday, October 8, 2009

காற்றுக்கு ஆக்சிஜன் தேவை

உலகிலேயே மிகப்பெரியது
கடல் என்று நினைத்திருந்தேன்....
உன் காதலை கண்டு கொள்ளும் வரை
எரிந்தாலும், அணைந்தாலும்
உடனிருக்கும் புகையைப்போல
எப்போதும் உன்னில் இருப்பேன்...

என் விரல் வாகனம்
பயணம் செய்ய ஏற்ற
ஒரே சாலை
உன் இடை மட்டும்தான்....


காற்றுக்கு ஆக்சிஜன் தேவையாம்.
கொஞ்சம் மூச்சுவிடுதலைகீழாய் நின்றாலும் என்
உலகம் நேராய்தான் இயங்குகிறது
நீ அருகிலிருக்கையில்.....எத்தனை தடவை உன்னிடம் சொல்வது
வெறும் காலுடன் தரையில் நடக்காதே என்று..
இப்போது பார்....
கற்களிலும் காதல் பூக்கள்
மலர்ந்து கிடப்பதை....


எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது.
ஆனால் என் இதயம் மட்டும்
துடியாய் துடிக்கிறது,
உன்னைப் பார்ப்பதற்கு....

51 comments:

rahul said...

அருமை.. அருமை.. தோழா..

எவனோ ஒருவன் said...

//எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது.
ஆனால் என் இதயம் மட்டும்
துடியாய் துடிக்கிறது,
உன்னைப் பார்ப்பதற்கு....//

வாவ்.. எக்ஸலண்ட்..தொடர்ந்து இது போல் காதல் கவிதைகள் எழுதுங்க சார். எங்களுக்கு யூஸ் ஆகும்.

R. Ramya said...

// என் விரல் வாகனம்
பயணம் செய்ய ஏற்ற
ஒரே சாலை
உன் இடை மட்டும்தான்....//

WoWWWWWWW..
என்ன ஒரு கற்பனை.......

R. Ramya said...

மணி.. எங்கேயோ போயிட்ட...

சுள்ளான் said...

என் விரல் வாகனம்
பயணம் செய்ய ஏற்ற
ஒரே சாலை
உன் இடை மட்டும்தான்....

நீங்க அடிக்கடி அந்த சாலையில பயணம் போவீங்க போல இருக்கே?

Satheesh said...

Photo kage Kavithai eludhareengala..illa..kavithaiku correctana photo pick panreengala!!!
Nalla combination and ellam super a irundhuchu...Vazhthukkal!!!

D.R.Ashok said...

நீங்கள் கவிதை காதலன்னா இல்லை காதல் பித்தனா..

ரொம்ப ப்ரயத்தனப்பட்டிருக்கீங்க

யாழினி said...

அழகான கவிதைகள்! காதல் சொட்டுகிறது.

வெண்ணிற இரவுகள்....! said...

.//காற்றுக்கு ஆக்சிஜன் தேவையாம்.
கொஞ்சம் மூச்சுவிடு/////////

அற்புதமான வரிகள் ........
நல்ல புகைப்படங்கள் நல்ல ரசனை நண்பரே

கவிதை காதலன் said...

ராகுல், எவனோ ஒருவன், ரம்யா, சுள்ளான், அஷோக், யாழினி, வெண்ணிற இரவுகள், சதீஷ்
உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்

ஊடகன் said...

இன்னும் எதனை காலம் தான் இந்த காதலையும், காதலியையும் வைத்து கவிதை கிறுக்க போகிறீர்கள் என்று தெரியவில்லை........ ஒருவேளை இந்த உலகம் அழியும் வரையா ???????

nadhiya said...

மன்னிக்கணும் ஊடகன். கவிதைக்காதலனுடையது ஒரு பொழுது போக்கு தளம். இதுல சினிமா, பாடல், காதல், போன்ற பொழுது போக்கு விஷயங்கள்தான் வரும். உங்களுக்கு காதல் பிடிக்கலைன்னா சமுதாய பதிவுகள் எழுதுற பதிவுகளா பார்த்து படிக்கலாமே? எதுக்காக இங்க வரணும்? தமிழீழ் போன்ற தளங்கள்ல விளம்பரப்படுத்தபடும்போதே இது காதல் கவிதைன்னு சொல்லித்தானே அறிமுகப்படுத்தப்படுது. உங்களுக்கு பிடிக்கலைன்னா எதுக்காக நீங்க படிக்கணும்? 99 பேர் ரசிக்கிற விஷயத்தை ஒருத்தர் குறை சொல்றதுனாலேயே அந்த ஒருத்தர் புத்திசாலி ஆகிட மாட்டார்.

nadhiya said...

உலகம் அழியும் வரையில் காதலைப்பத்தி எழுதுவீங்களான்னு கேட்டீங்க. ஏன்? எழுதுனா என்ன தப்பு? காதல் என்ன தேசிய குற்றமா? பசி, பஞ்சம், காமம், துக்கம், அலட்சியம், பொறாமை, துரோகம் மாதிரி காதலும் ஒரு உணர்வு. காதலை ஒதுக்கி வெச்சிட்டு யாராலும் வாழ முடியாது. காதல் இல்லைன்னா நீங்களும் இல்லை, நானும் இல்லை. நம்மோட வாழ்க்கையில நாம யாரையும் காதலிக்காம இருந்திருக்கவே முடியாது. காதலே இல்லாம வாழ நாம ஒண்ணும் ரோபோட் இல்லை. ஒருத்தருக்குள்ள ஒருத்தர் காதலே இல்லாம வாழறதுனால்தான் இன்னைக்கு கோர்ட்ல 37 லட்சத்துக்கும் மேல விவாகரத்து வழக்குகள் தேங்கி கிடக்கு.

nadhiya said...

இதைத்தான் எழுதணும், இதை எழுதக்கூடாது அப்படின்னு வரையறை சொல்ல நீங்க யாரு? கன்னத்தில் முத்தமிட்டால் படத்தோட Press இண்டர்வியுவில ஒருத்தர் மணிரத்னத்துகிட்ட கேள்வி கேட்டார். அந்த குழந்தைகிட்ட நீங்க எதுக்காக தத்து பிள்ளை அப்படிங்கிற உண்மையை சொன்னீங்க? அதை சொல்லாமலே இருந்திருக்கலாமேன்னு கேட்டார். அதுக்கு மணிரத்னம் சொன்னார், நான் செஞ்சதுல இருக்கிற தவறுகளை சுட்டிக்காட்டுங்க. ஆனா இதைத்தான் நீங்க செஞ்சி இருக்கணும்ன்னு சொல்ற உரிமை உங்களுக்கு இல்லைன்னு சொன்னார். அன்னைக்கு பத்திரிக்கையாளர்களே அந்த பதிலுக்கு பாராட்டினாங்க. அதைத்தான் நான் உங்களுக்கும் சொல்றேன். ஒரு படைப்புகளை இருக்கிற தவறுகளை சுட்டி காட்டுங்க. எதுக்காக இதை எழுதறேன்னு கேக்குறதெல்லாம் ரொம்ப தப்பு..

nadhiya said...

இன்னைக்கு வெளிவர்ற 100 படங்கள்ல 99 படங்கள்ல காதல் இருக்கு. அந்த படங்கள் எடுக்கிறவங்ககிட்ட போய் நீங்க இதே கேள்வியை கேட்பீங்களா? இன்னைக்கு கவிதைகள் புத்தகத்துல தபூ சங்கரோட புத்தகம்தான் அதிக அளவுல விற்பனை ஆகி இருக்கு. அவரோட காதல் பத்தின கவிதைகள்தான் இன்னைக்கு அவருக்கு படம் இயக்குற அளவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கு. மொதல்ல அதை புரிஞ்சுக்குங்க.

nadhiya said...

Mr. ஊடகன் "தமிழ் இனி மெல்லச் சாகும்" அப்படின்னு உங்க பதிவுல நீங்க எழுதி இருந்தீங்க. ஐயா புலவரே ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்குங்க. அரை வேக்காடு மாதிரி எழுதாதீங்க. நீங்க பாரதியாரோட கவிதையை முழுசா படிச்சிருக்கீங்களா?....


இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)

'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
***மெல்லத் தமிழினிச் சாகும் **** - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்' (10)

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)

******************************
சற்றே கூர்ந்து கவனியுங்கள். திரும்பத் திரும்ப வாசியுங்கள். தமிழ் அழியும், மற்ற மொழிகளும் கலாசாரங்களும் அதை அழிக்கும் என்றா பாடினான் அவன்? 48 வரிப்பாடலில் இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பாடலின் நோக்கத்தையே கிட்டத்தட்ட 88 வருடங்களாக மானபங்கப்படுத்தி வருகிறோம். அவன் சொன்ன கருத்தைத் திரித்து உண்மையிலேயே தமிழைக் கொன்று வருகிறோம். பாரதியாவது தமிழ் சாகும் என்று புலம்புவதாவது... ஒரு விஷயத்தை முழுசாக தெரிந்து கொண்டு எழுதுங்கள் ஊடகன். நீங்க அடுத்தவங்களை குறை சொல்ல வந்திட்டிங்க...

pr2rpg said...

விட்டுட்டுங்க நதியா தெரியாம சொல்லிட்டாரு பாவம்.அவருக்கு படிக்க கூட நேரம் இருக்காது.

pr2rpg said...

மணி படத்திர்கேற்ப கவிதைகள்.

'என் விரல் வாகனம்
பயணம் செய்ய ஏற்ற
ஒரே சாலை
உன் இடை மட்டும்தான்....'

இன்னும் அந்த பாட்டை மறக்கலையா?
அடுத்தவாட்டி பாட்டுல இருந்து திருடாத.
நானும் அந்த பாட்டோட ரசிகன்.

pr2rpg said...

நான் பிரதாப்.

கவிதை காதலன் said...

பிரதாப் சார்... அந்த வரிகளை நீங்க கவனிச்சு கேட்கலைன்னு நினைக்குறேன்.

// இருந்தும் எதற்கு இடையில
இரு கை மேயும் இடையில
இடைதான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம் //

இது தான் அந்த பாடலோட வரிகள். இதுக்கும் நான் எழுதினதுக்கும் என்ன சம்மந்தம்? எந்த விஷயத்துலேயும் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது சார்.

கவிதை காதலன் said...

Mr. ஊடகன்... என்னை பற்றி ஒரு சுய அறிமுகம் உங்களுக்கு... எங்க வீட்டுல யாருக்குமே நான் சினிமாவுல இருக்கிறது பிடிக்கலை. இருந்தாலும் எனக்கு பிடிச்சது சினிமா. அதை நான் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். அடுத்தவங்களோட விருப்பத்துக்காக டாக்டராவோ, எஞ்சினியராவோ, நான் விரும்பலை. என்னோட கனவுகளுக்கு நான் சமாதி கட்டிட்டு வாழ்க்கை ஃபுல்லா ஏக்கத்துடனே வாழறதுக்கு நான் தயாரில்லை.எனக்கு என்ன பிடிக்குதோ அதை தான் செய்யுவேன். அதே மாதிரிதான் காதலும், அது சார்ந்த விஷயங்களும். எனக்கு இளமையான விஷயங்கள்தான் பிடிக்கும். அடுத்தவங்களை இம்ப்ரஸ் பண்ணனும் அப்படிங்கிறதுக்காக ஓவரா சீன் போட்டு எனக்கு எழுத தெரியாது. அப்படி பண்ணினா நான் என்னோட வாழ்க்கையில நடிக்கிற மாதிரி ஆயிடும். என்னோட தோழி கொஞ்சம் அதிகமா பேசிட்டாங்க. அவங்க ஏதாவது தப்பா பேசி இருந்தாங்கன்னா அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். என்னை மாதிரி சின்ன பசங்களுக்கு நீங்கதான் சார் ஆதரவு கொடுக்கணும். தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி....

nadhiya said...

பிரதாப் சார்.. உங்களுக்கும் இந்த பாட்டு ஃபேவரைட்டா இருக்கலாம். அந்த ஹீரோ தான் உங்களுக்கு கரெக்ட் சாய்ஸா இருக்கலாம். என்னைப் பொருத்தவரைக்கும் அந்த ஹீரோ ஓகே தான். ஆனா Exacta அவர் பொருத்தமா இல்லை. இந்த பாடல்ல கூட அவர் முகத்துல காதலுக்கான எக்ஸ்பிரஷன்ஸ் இல்லை. ஏதோ ஒரு uneazy feel உடன் இருக்கிற மாதிரிதான் எனக்கு தென்படுது. நீங்க சொன்ன மாதிரி அஜித்தோ, விஜய்யோ சரியான சாய்ஸா இருக்காதுன்னு எனக்கும் தெரியும். ஆனா பூ படத்துல பார்வதியோட கணவனா வர்ற அந்த நபர் ஓரளவுக்கு சரியா இருப்பார்'ங்கிறது என்னோட கணிப்பு. (ஆனா ஸ்கூல் பையன் கேரக்டருக்கு அவர் நிச்சயமா கரெக்ட்டா இருக்க மாட்டார்). இந்த மாதிரி ஒரு கேரக்டருக்கு என்னைப் பொருத்தவரைக்கும் நம்ம விஷ்ணு பக்காவா இருப்பாரு.

ஸ்வீட் ராஸ்கல் said...

மச்சி கலகிட்ட டா.

//என் விரல் வாகனம்
பயணம் செய்ய ஏற்ற
ஒரே சாலை
உன் இடை மட்டும்தான்//

மச்சி உன்னை காதலிக்க போர அல்லது கல்யாணம் பன்னிக்க போர
பொண்ணு உண்மையா கொடுத்து வெச்சவங்க.

கவிதை காதலன் said...

தேங்க்ஸ் மச்சி...

pratap said...

மிஸ் நதியா குமரல்லாம் ஓவர். நீங்க அவனுக்கு ஹீரோ சான்ஸ் வங்கி கொடுப்பிங்க,அப்புறம் ஹீரோ அயிடுவரு,ச ம உ( )ஆயடுவரு,அப்புறம் மந்திரி அவாறு,அப்புறம் பிரதமர் அவாறு,நானும்,மணியும் அவருக்கு போஸ்டர் ஒட்டணுமா?
குறிப்பு-
அவன் நிஜமாகவே இந்த நாட்டுக்கு ஒரு ஹீரோதான். எப்புடி........................

pratap said...

மச்சான் நல்லா இருக்கு கவிதைகளும்,படமும்.தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.

pratap said...

சரி உடு மச்சான் நான் தெரியாம சொல்லிட்டன்.அடுத்த வாட்டி கண்டு புடிக்கிறேன் எங்க உசார் பண்றேன்னு.

nadhiya said...

ஹாய் பிரதாப்..... மிஸ் நதியான்னு எல்லாம் கூப்பிடாதீங்க. நதியான்னே கூப்பிடுங்க. விஷ்ணுவுக்கு என்ன ஓவர்? நடிக்கவே தெரியாத எத்தனையோ பேரு நடிக்கும் போது, விஷ்ணு Good Choice தான். விஷ்ணுவோட டான்ஸ் பார்த்து இருக்கீங்களா நீங்க? விஷ்ணுக்குள்ள ஒரு கலை ராட்சசன் ஒளிஞ்சுகிட்டு இருக்கான்.. அது தெரியுமா உங்களுக்கு?? அப்புறம் இன்னொரு விஷயம். விஷ்ணு ஒரு கிரேட் நடிகராயிட்டா நீங்களும் மணியும் மட்டும் இல்லை.. நான் கூட போஸ்டர் ஓட்ட வருவேன்.

nadhiya said...

விஷ்ணு நினைச்சா உங்க வேலையவோ, மணி வேலையவோ, யார் வேலைய வேணுமின்னாலும் கத்துகிட்டு செய்ய முடியும். ஆனா நாம யார் நினைச்சாலும் ஒரு கமாண்டோ ஆகவே முடியாது. உண்மையிலே விஷ்ணு ஒரு ஹீரோ தான்.

pratap said...

நதியா குமார வைச்சி காமெடி கிமெடி பண்ணலையே?
அதுவும் அவர் தமிழ் படங்களில் நடிக்க மாட்டார். ஒன்லி ஹாலிவுட் படங்களில் மட்டும் நடிப்பார்.குறிப்பா ஆப்ரிக்க படங்களில் மட்டும் தான்.
அதுமட்டும் இல்ல அவன் டான்ஸ் ஆடல,அது கராத்தே ஸ்டேப்.நானும் அவன் செல்லுல பாத்தேன்.அது அவனே சொல்லிஇருக்கான்.நீங்க அவனையே கேளுங்க.

nadhiya said...

பிரதாப்.. எங்க ஹீரோவை பார்த்து இந்த மாதிரி பேசுறதுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்?? நீங்க விஷ்ணு வீட்டுக்கு போகும் போது சுலேகாவை விட்டு காஃபியில உப்பு போட்டு குடுக்க சொல்றேன். அப்பத்தான் நீங்க அடங்குவீங்க.

pratap said...

தேங்க்ஸ் நதியா நாங்க உப்பு காபிதான் குடிப்பேன்.

தென்றல் said...

நதியா மேடம்.. ஆப்பிரிக்க படத்துல விஷ்ணு சார் நடிக்கு போது எனக்கு ஒரு ஹிரோயின் சான்ஸ் வாங்கி தருவீங்கலா??

pratap said...

எப்படி தென்றல் இதெல்லாம்.முடிலய.....

கவிதை காதலன் said...

மன்னிக்கணும் தென்றல்... அந்த ஹீரோயின் கேரக்டருக்கு ஜெனிஃபர் லோபஸும், நம்ம ஐஸ்வர்யாராயும் போட்டி போட்டுகிட்டு இருக்கிறதா தகவல். நீங்க 2015 ல ட்ரை பண்ணுங்க. அதுவும் அபிஷேக்பச்சன், ஹ்ரித்திக் மாதிரி குட்டி குட்டி நடிகர்களோட ட்ரை பண்ணுங்க.

pratap said...

பார்த்து தென்றல் அவேன்கூட டான்ஸ் ஆடும்போது பத்து அடி தள்ளி நின்னு அதுங்க. ஆல் தி பெஸ்ட்

தென்றல் said...

ச்சே..போயும் போயும் அபிஷேக் கூட நடிக்கிற அளவுக்கு நான் இன்னும் கேவலமாயிடலை.. நடித்ததால் விஷ்ணு. இல்லையேல் மண்ணு..

தென்றல் said...

ஏன் சிம்பு மாதிரி ஏதாவது பண்ணிடுவாரா?

தென்றல் said...

பிரதாப்... உங்களுக்கு என்னைப்பார்த்து பொறாமை அப்படித்தானே?

pratap said...

என்ன கொடுமை குமார் இது.
எனக்கு ஒன்னு புரியல இப்ப எல்லாரும் குமார புகழ்ரிங்களா,மொக்க பண்ண்ரிங்களா.
மச்சான் விஷ்ணு இதுக்கலாம் நான் பொறுப்பல்ல.

இறக்குவானை நிர்ஷன் said...

//எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது.
ஆனால் என் இதயம் மட்டும்
துடியாய் துடிக்கிறது,
உன்னைப் பார்ப்பதற்கு....//

nalla irukku

இறக்குவானை நிர்ஷன் said...

//எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது.
ஆனால் என் இதயம் மட்டும்
துடியாய் துடிக்கிறது,
உன்னைப் பார்ப்பதற்கு....//

superb!

pratap said...

தென்றல் உங்கமேல பொறாமை இல்ல,ஒரு கரிசனம் ஏன்னா அவன் டான்ஸ்-னு கராத்தே காட்டும் போது,நீக பத்து அடி போய்டுவிங்க அதான்.

nadhiya said...

ஐஸ்வர்யா, பிரதாப், மணி... மூணு பேரும் என்கிட்டே உதை வாங்கப்போறீங்க.. உங்க மூணு பேரையும் தண்ணி இல்லாத கிணத்துல தள்ளிவிடப்போறேன்.

தென்றல் said...

புருசலீக்கு வெறும் கராத்தே மட்டும்தான் தெரியும். பிரபுதேவாவுக்கு வெறும் டான்ஸ்தான் தெரியும். ஆனா கராத்தேவையும், டான்சையும் மிக்ஸ் பண்ணி ஆடுறதுக்கு ஒரு டேலன்ட் வேணும். அது விஷ்னுகிட்ட இருக்கு. ( நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்ட என் பேச்சை நானே கேட்க மாட்டேன்).

pratap said...

அமாங்க எனக்கு நீச்சல் தெரியாது.ரொம்ப நன்றி.

தென்றல் said...

நதியா நீ என்னை எங்க தள்ளிவிட்டாலும் காப்பாத்தரதுக்குத்தான் ஹீரோ சார் இருக்காரே. சுப்பர் மேன் மாதிரி இந்த மிலிட்டரி மேன் வந்து எங்களை காப்பாத்த மாட்டாரா? என்ன பிரதாப் சொல்றீங்க? விஷ்னுவைத்த்தன் ஹீரோன்னு நதியா அக்க சொல்லிட்டாங்களே..

rahul said...

//காற்றுக்கு ஆக்சிஜன் தேவையாம்.
கொஞ்சம் மூச்சுவிடு//

Lovable Lines.. i love this lines very much. Keep it up. your words extreamly express your deep love. cool

pratap said...

அதானே, கமாண்டோ காப்பாத்த மாட்டாரா என்ன.

Anonymous said...

கவிதை + கமெண்ட் காமெடி சூப்பர்

சத்ரியன் said...

//எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது.
ஆனால் என் இதயம் மட்டும்
துடியாய் துடிக்கிறது,
உன்னைப் பார்ப்பதற்கு....//

க.கா,

உமக்கு மட்டும் எங்கிருந்தைய்யா கிடைக்கிறது படங்களும். சொற்களும்.

காதலாய் இருக்கிறது கவிதை.

இதையும் படியுங்கள்